25/12/2017

கீழ்வெண்மணிப் படுகொலை குறித்து கன்னட பெரியார் விடுத்த அறிக்கை - முழுவிவரம்...


கீழ வெண்மணிப் படுகொலை குறித்து 28.12.1968இல் பெரியார் ஒரே நாளில்  இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். "இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம் தான் கோலோச்சும்" என்ற தலைப்பில்  வெளியிட்ட அவ்வறிக்கையின் முக்கிய சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான். அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டிவிட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலமும் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலமும் காரியத்தை சாதித்துக்கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்படுவிட்டது. சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலைமையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு 'சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வeர்ந்தன என்றால்,

 1. காந்தியார் கொல்லப்பட்டார்.

 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள் , ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப் பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டி விட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாச வேலைகளாக காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப்பயன் படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழி வாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் - அமைச்சர்கள் நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் எங்களுக்கு மேலாக இருப்பதால் - எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

 மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றதன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கட்டு பிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக- எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி - அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத் தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது.

1.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில் , நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையயன்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும்.சமுதாய- பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும்அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையயன்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக்கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

"Patriotism is the last refuge of a scoundrel" தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -ஜான்சன்.

(விடுதலை 28.12.1968).

நன்றி: சுகுணா திவாகர், "மிதக்கும் வெளி" இணையப் பக்கத்திலிருந்து இவ்வறிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்ப: கீழ வெண்மணிப் படுகொலை முதன்மை குற்றவாளி கோபால கிருஷ்ண நாயுடு பெயரை எங்கும் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது...

யார் தியாகி... பாஜக வாஜ்பாய் யா.?


வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு தினம்...


இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல்..

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார்.

வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லதத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி.

ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார்.

சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்.

இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான்.

பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.

இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746 ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் .

சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரம் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.

முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார்.

நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள்.

ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.

நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார் நாடினார்..

வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.

தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார்.

அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார்.

அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார்.

முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும்.

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது...

வேண்டாம் பிராய்லர் கோழி...


40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர்.

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்.

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.

இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது.

பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்.

ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது..

அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்...

டொக் என்ற ஒற்றைத்துளி ஒன்று குழாயிலிருந்து கீழே விழும். உடனே Background -ல் ஒரு குரல் இவ்வாறு பேசும். தண்ணீரின் ஒவ்வொரு துளியும் விலைமதிப்பற்றது என்று...


இந்த எண்ணம் உங்களது ஆழ்மனதில் பதிந்தால்தானே இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் தண்ணீரை எவ்வளவு விலைக்கு விற்றாலும் மறுக்காமல் அதைக் காசுகொடுத்து வாங்குவீர்கள்.

தங்கத்தையும் இப்படித்தானே உங்களை நம்பவைத்து வாங்கவைத்தோம் எனில் இது ஒன்றும் எங்களுக்கு பெரிய காரியமில்லை.

உலகத்தில் 3-ல் 2-பங்கு நிலப்பரப்பு உப்பு நீரால் (கடலால்) சூழப்பட்டுள்ளது என்று உங்களுக்கு சொன்னோம்.

அந்த கடலின் பாதிக்கும் அதிகமான நீர் ஆவியாக காற்றில் கலந்திருப்பதை உங்களுக்கு சொல்ல மறுத்தோம்.

கடல்நீருக்கு சமமான நன்னீர் உலகத்தில் உள்ளதெனும் உண்மையை உம்மிடம் மறைத்தோம்.

மக்கள் தொகைப் பெருக்கமே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்று கதை விட்டோம். இவ்வளவும் எதற்காக செய்தோம்?

ஏனென்றால் நாங்கள் வணிகர்கள்...

இஞ்சி... ஒரு அற்புதமான மருந்து...


இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.

இஞ்சி மருத்துவம்...

இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?

காலை நோய் மற்றும் எரிச்சல்...

இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.

மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்...

மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்...

குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா...

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்...

Biological weapon பதிவு - 5...


சுட சுட ஒரு குக்கர் கார்ட்டூன்...


குக்கர் விசில் பறக்கிறது...

மன்னார்குடி ஆட்களே பரவாயில்லை எனும் அளவுக்கு அடிமைகளும்.. அவர்களை இயக்கும் டவுசர்களும் மக்களை கொடுமை செய்திருக்கிறார்கள்..

தமிழகத்தில் பாஜக திருட்டுத்தனமாக புறவாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றலாமே தவிர.. மக்கள் முன் நின்றால் டவுசர் கிழியும் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஓடுவதைவிட.. டவுசர்களை எதிர்த்து நிற்பதுதான் வளர்ச்சிக்கான அரசியல் என்பது இனி தினகரனுக்கு முழுமையாக புரியும்...

Tunguska event எனும் மர்ம சம்பவம்...


1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி அது. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி.  அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள்  கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது.

அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி
கொண்டதாக இருந்தது.

அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோமீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து . மேலும் அத்துடன் அந்த காட்டின் 8 கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே... அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.

20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள்.

சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள்.

(இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது)

கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது...

கர்மா...


கர்மா என்றால் செயல் என்று பொருள்.

நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும். நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, ஆதாவது கர்மாவின் கணக்கு. இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும்.

நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு.

ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது.

நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது.

நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…

எதிர்பார்ப்புகள் அற்ற உதவி: கர்மாவை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதில் முக்கியமானது தர்மம் (அ) கடமை. யார் ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும், பின் விளைவின் எதிர் நோக்கமின்றி தங்களது கடமை (அ) தர்மம் செய்கிறார்களோ அதேவே உத்தமம் என்று கூறப்படுகிறது.

கர்மா வகைகள்: கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை.,

சஞ்சித கர்மா.
ஆகாம்ய கர்மா.
பிராரப்த கர்மா.

சஞ்சித கர்மா: சஞ்சித கர்மா என்பது, முற்பிறவியில் நாம் செய்த பலன்களை பொருத்து, நமக்கு வாய்க்கப்பட்ட இந்த பிறவியாகும். சஞ்சித கர்மாவின் பலன் தான் நமது இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவியிலும் தாக்கமாக இருக்கும்.

ஆகாம்ய கர்மா: இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் கணக்கு தான் ஆகாம்ய கர்மா ஆகும். இது, உங்களது அடுத்த பிறவிகளில் தாக்கம் செய்யும்.

பிராரப்த கர்மா: ஏற்கனவே கணிக்கப்பட்ட கர்மாவின் செயல்பாடு தான் பிராரப்த கர்மா. உங்கள் தற்போதைய பிறவியில் நடந்துக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் விதி அனைத்தும் பிராரப்த கர்மாவின் தாக்கமாக தான் இருக்கும்.

பாவப்பதை ஒழிப்பது: நீங்கள் பாவத்தை ஒழிப்பதால், தீமையை கைவிடுவதால், உங்களது ஆகாம்ய கர்மா இரட்சிக்கப்படும். பாவ, புண்ணியத்தின் கணக்கின் படி தான் சஞ்சித கர்மா உங்களை பின் தொடர்ந்து வருகிறது. பாவங்களை நீங்கள் முற்றிலுமாக நீக்கும் போது, உங்களது சஞ்சித கர்மாவானது முடிவு பெரும்.

கர்ம யோகா: எப்படியானாலும் உங்களது தற்போதைய பிறவியில் பிராரப்த கர்மாவின் தாக்கம் இருக்க தான் செய்யும். ஏனெனில் இது நீங்கள் சென்ற பிறவியில் செய்த செயல்களின் தாக்கம். அகங்காரம் தவிர்த்து நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், சமன்திறன் மனநிலையில் பயணம் செய்யுங்கள். யார், எவரென்று பாராமல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தல் முக்கியம்.

ஆசை துறக்க வேண்டும்: கர்மா என்பது ஆசையுடன் பிரயாணம் செய்யும் ஒன்றாகும். இந்த ஆசைதான் உங்கள் கர்மாவை ஆட்டிப்படைக்கிறது. ஆசையை துறந்து நன்மை காரியங்களில் ஈடுபடும் போது அதில் பாவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மகிழ்ச்சி அகங்காரம்: நீங்கள் பூரணமாய் ஓர் செயலில் ஈடுபடும் போது உங்களுக்கு புண்ணியம் சேர்கிறது. இதுவே உங்களுக்கு நித்திய ஆனந்தத்தையும், செம்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மற்றும் இதுவே, உங்களது வாழ்க்கை சக்கரமான பிறப்பு, இறப்பிற்கு முற்று புள்ளியாய் அமைகிறது...

இடைத்தேர்தலை நினைத்து சிரித்து மகிழ்வதை தவிர வேறு ஒன்றும் மக்களிற்கு நன்மை இல்லை...


எல்லா வேட்பாளர்களையும் பைத்தியக்காரர்கள் என்று  நினைத்து சிரித்து கொள்ள வேண்டியது தான்...

பெரியார் எனும் கன்னட ராமசாமி நாயக்கர் செய்த தமிழின அழிப்பு... கீழவெண்மணி நினைவுகள்...


முன்னாள் கீழத் தஞ்சை, இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி கிராமம்.

1968 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந்தேதி இரவு.

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட தமிழ் விவசாயிகள், கூலித் தொளிலாளர்கள் தங்களின் உழைப்பில் அதிகமாக அந்தாண்டு மகசூல் கிடைத்ததால், கூலியாக வழக்கமான நெல்லைவிட வெறும் 4 கை நெல் அதிகமாக கேட்டார்கள். நியாயமானதே.

ஆனால் கூலி அதிகம் கேட்பதா என்ற ஒரே காரணத்திற்காக  நிலப்பண்ணையாளர்கள் அன்றைய நெல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் தலைவனாய் இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு வின் தலைமையில் விரட்டி சென்றனர்..

பயந்துபோய் இராமையா என்பவரின் குடிசையில் தங்கள் உயிரைப் பாதுகாக்க வேறு வழியில்லாமல் ஒண்டிய அவர்களை 44 பேரை (5 ஆண்கள், 16 பெண்கள், 23 குழந்தைகள்) குடிசையோடு வைத்து உயிரோடு எரித்தனர்..

இதைவிடக் கொடூரம் நீதிமன்றத்தீர்ப்பு.

1. காவல் துறை 23 நிலப்பண்ணையாளர்களை கைது செய்தது.

2. மாவட்ட நீதிமன்றம் அதில் 15 பேரை விடுவித்தது. மற்ற 8 பேருக்கும் 1 முதல் 10 ஆண்டு வரை சிறை விதித்தது.

3. ஆனால் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடிவித்தது. தீர்ப்பில் சொன்ன காரணம்..

இவ்வளவு பெரிய பணக்கார நிலப்பண்ணையாளர்கள் இத்தகைய கொடூர வன்முறை செய்பவர்களாக நினைக்க முடியாது.

The High Court (at the State Level) released all the accused and in its Judgment it says:

"the rich landlords could not be expected to commit such violent crimes themselves and would normally hire others to do while keeping themselves in the background." காண்க:

என்னவொரு கொடூர சட்டம் உள்ள நாட்டில் குடி இருக்கிறோம்..

வாய்மையே வெல்லும்...

மக்களுக்காக, மக்களால், மக்களே... வேடிக்கையாக இல்லை?

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது..

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது..

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்..

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்..

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று..

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை..

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது..

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது..

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது..

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது..

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது...

கன்னட தெலுங்கர் பெரியார் என்னும் ராமசாமி நாயக்கரின் தமிழின அழிப்பு...


இந்த புகைப்படத்தை பதிவிட்டபோது இது போலி விசமிகளால் போலியாக உருவாக்கப்பட்டது என்று மறுப்பு கொடுத்தனர் திராவிடர்கள்..

1904ல் காசிக்கு பிராமணர்களோடு போய்ட்டு சோறு கிடைக்காத கோவத்தில் பிராமணியத்தை வெறுத்து..

ஊர் திரும்பிய ராமசாமியாரை வரவேற்ற தந்தை வெங்கட்ட நாயக்கர் மகனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்று..

தன் பெயரில் இருந்த மண்டியை மகன் பெயரில் மாற்றியுள்ளார்..

இப்பெயர் பலகை நாளடைவில் வண்ணம் மங்கவும் உடனே பா.வெ.மாணிக்க நாயக்கர் என்பவரால்,

ஆயில் பெயிண்ட் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது..

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அடையாளத்தை இழக்க விரும்ப மாட்டார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு..

இன்றும் ஈரோட்டில் துறவிக் கோல புகைப்படமும் இப்பெயர் பலகையும் இருப்பதாக செய்தி..

இனி மறைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல..

திருவனந்தபுரம் தமிழர் நகரம்...


1750 வரை திருவனந்தபுரம் மலையாளிகள் கைக்குப் போகவில்லை..

இதைக் கைப்பற்றிய மார்த்தாண்ட வர்மா தமிழ் அரச பரம்பரையான வேணாடு அரசர் குலத்தவன். அதாவது முழுத் தமிழன் இல்லையென்றாலும் அவனை மலையாளி என்று கூறமுடியாது.

இந்த வேணாட்டு அரசர்கள் காலங்காலமாக பாண்டிய நாட்டின் கீழ் ஆண்டு வந்தனர்.

சேரநாட்டின் பகுதியாகக் கூட என்றுமே இருந்ததில்லை.

1950 களில் மார்சல் நேசமணி திருவனந்தபுரம் இருக்கும் நெய்யாற்றின்கரை தாலுகாவில் தமிழர் பெரும்பான்மையை சான்றுகளோடு நிறுவி அப்பகுதியை தமிழகத்துடன் இணைக்க எவ்வளவோ போராடினார்.

30 தமிழர்கள் சுடப்பட்டு இறந்தனர்.
400 பேர் வரை கைதானார்கள்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

நேசமணி திருவனந்தபுரம் கிடைக்க தமிழர்கள் 60% வரை வாழ்ந்த நெடுமங்காடு தாலுகாவை விட்டுக் கொடுக்கவும் செய்தார்.

ஆனால் அவரால் கன்னியாகுமரியை மட்டுமே மீட்க முடிந்தது. (கேட்டதில் பாதிக்கும் குறைவு).

மலையாள மொழியானது 500 ஆண்டுகளுக்கு முன்னே உருவாகிய மொழி ஆகும்.

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல்..

அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார். இது செந்தமிழே.

1860 முதல் மலையாள இலக்கண நூல் எழுதப்பட்டது.

1900 வரை மலையாளிகள் தமிழும் படித்தனர்.

(பாவாணர், திராவிடத்தாய் நூலில்).

எடக்கல் எனுமிடத்தில் பழைய தமிழ் (பிராமி) எழுத்தில் 'ஓ பழமி' என்று எழுதியிருந்ததை மலையாளிகள் 'இ பழம' என்று மலையாளத்தில் எழுதியிருப்பதாக எவ்வளவோ திரிக்க முயன்றனர்.

இதற்கு ஐராவதம் மகாதேவன் உடந்தையாக இருந்தார்.

நல்லவேளையாக நடன காசிநாதன் அது தமிழே என்றும் அது தமிழ் தெய்வம் பழையோள் என்றும் நிறுவினார்.

ஆக மலையாளிகள் எந்த வகையிலும் தமிழரிடமுள்ள சான்றுகளுடன் போட்டி போட முடியாது...

அமோசானில் ஆட்டு சாணம் 2 கிலோ ரூ 499 அதிரடி தள்ளுபடியாம்...


கார்டோன்களில் வாழும் யாழ்...


பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி
தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்
அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே

- திருஞான சம்பந்தர்..

விளக்கம்:

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!
யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...

தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது...

மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது...

தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு...

இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்..

அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர்.

சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...

யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...

பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது... 

நான் சிறுவனாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு.

வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு...

பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்து கொண்டேன்...

இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.

யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.

மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே...

வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்...


இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு : ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும்.

வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து 1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்...

மறக்க முடியுமா...


தனுஷ்கோடி  1964 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை புயல் தாக்கியது. 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது...

காவல்துறைக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்- அதிர்ச்சி தகவல்...


காவல்துறைக்கே இவ்வலவுனா....
அப்ப பத்திரபதிவு ஆபீசர்ஸ்க்கு எவ்வளவு வருமானம் இருக்கும்...

இந்தியா வல்லரசு நாடுதான்பா சொன்னா நம்புங்கப்பா...

லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து காவலர்கள் உடையில் கேமராவை பொருத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலர்களுக்கும் சோதனைகளில் ஈடுபடும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் உடலில் அணியக் கூடிய கேமராவை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த யோசனையை எம்பி வினய் சஹஸ்ரபுத்தே தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் 10000 கோடி ரூபாயை லஞ்சமாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அளிப்பதாக வெளியான புள்ளிவிவரத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்...

உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்...


பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.

இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும்.

அதற்கு முதலில் ஒருவர் தங்களில் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஒருவரது உடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அடிவயிற்று வலி அதிகமானால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இது அனைவருக்கும் தெரிந்த ஓர் அறிகுறி தான். அது மலப்புழையில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுவது. குறிப்பாக இம்மாதிரியான அரிப்பு இரவில் ஏற்படும் போது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மறுநாள் மிகுந்த களைப்பை அடையக்கூடும்.

வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும். உடல் பலவீனமானால், சோர்வு அதிகரித்து, நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை வயிற்றுப் புழுக்களை கொல்லும் முறையை மேற்கொள்ளுங்கள்.

பசியின்மை அதிகரிப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால், வயிற்றில் புழுக்கள் உள்ளது என்று அர்த்தம். அதிலும் அதிகமான அளவில் புழுக்கள் உடலில் பெருகியுள்ளது என்று அர்த்தம். எனவே இங்மமாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்படும். அதோடு செரிமான பிரச்சனையும் இருந்தால், இருமடங்கு மன வேதனையை சந்திக்கக்கூடும். ஆகவே திடீரென்று எக்காரணமும் இல்லாமல் மன இறுக்கமாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கு காரணம் வயிற்றுப் புழுக்கள் தான்.

புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை கொறிப்போம். ஏனெனில் உடலில் அதிகரித்த புழுக்களின் பெருக்கத்தால் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் அதிகரிக்கும். அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களைக் கொறிக்கின்றனர்.

உருளைப்புழுக்கள், பென்சில்வேனியா போன்றவை உடலில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றை உறிஞ்சி, இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை வந்தால், முதலில் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் மருந்துகளை உட்கொண்டு, உடலை சுத்தப்படுத்துங்கள்.

உடலினுள் ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பின், சரும பிரச்சனைகளான அரிப்புகள், எரிச்சல், பல வகையான அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த புழுக்கள் வெளியேற்றும் கழிவுகளால், இரத்தத்தில் ஈயோசினோபில்கள் அதிகரித்து, இதனால் புண்கள், உறுப்புக் கோளாறு, மூட்டு வீக்கம் மற்றும் அல்சர் போன்றவை ஏற்படும். ஆகவே உங்களுக்கு எவ்வித காரணமும் தெரியாமல் திடீரென்று சரும பிரச்சனைகளை சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.

ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணிகள், மூட்டு மற்றும் தசைகளின் மென்மையான திசுக்களை சிதைவுறச் செய்து, எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும். பலரும் மூட்டுக்களில் வலி ஏற்படும் போது ஆர்த்ரிடிஸ் ஆக இருக்கக்கூடும் என தவறாக நினைக்கின்றனர். உடலில் புழுக்கள் அதிகம் இருந்தாலும், இம்மாதிரியான வலியை மூட்டுக்களில் சந்திக்க நேரிடும்...

நாம் தமிழர் கட்சி முன்னேற்றம் - வாழ்த்துக்கள்...


சென்ற தேர்தலில் 2500.. இந்த தேர்தலில் 3500.. வாக்குகள் பெற்று முன்னேற்றம்...

இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...


சட்டமன்ற உறுப்பினர் என பெயரிட்டு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து...


தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் டிடிவி.தினகரன்...


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெற்ற வாக்குகளை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி..

முந்தைய தேர்தலில்  மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்ற வாக்குகளை  விட 1,162 வாக்குகள் அதிகம் பெற்று டிடிவி தினகரன் வெற்றி...