14/08/2018

1978 இல் தனிநாடு கோரிக்கை...


1978 இல் வெளிவந்தது ருத்ரதாண்டவம் திரைப்படம்.

அப்போதே தமிழர்கள் தனிநாடு கோரி வந்தனர்.

அதற்கு பதிலடி கூறும் விதமாக இப்படத்தில் ஒரு காட்சி உள்ளது.

அது வருமாறு...

நாகேஸ்வர ராவ்: ஆண்டவனே! இந்தியா பெரிய நாடு.

இத ஒருத்தர் ஆள்றத விட மாகாணங்கள தனித்தனியா பிரிச்சுகுடுத்திட்டா வம்பில்லாம போய்டும்ல?

வி.கே.ராமசாமி (சிவன்): பூசாரி நீ மசால்வட சாப்டிருக்கியா?

நாகேஷ்: மசால்வடன்னா எனக்கு உயிராச்சே.

வி.கே.ராமசாமி: ஆல் இண்டியா பேசிஸ் ல அந்த மசால்வட தயாராகுது.

இந்தியாவில உள்ள 62கோடி கரங்கள் அந்த மசால்வடைல பட்ருக்கு.

மசால்வட செய்றதுக்கு முக்கியமா என்னென்ன தேவனு சொல்லுபாப்போம்.

நாகேஷ்: மசால்வட செய்றதுக்கு முக்கியமா கடலபருப்பு.

வி.கே.ராமசாமி: அது எந்த மாகாணத்துல வெளையுது?
நாகேஷ்: மஹாராஷ்ட்ரா.

வி.கே.ராமசாமி: துவரம்பருப்பு?
நா: மத்திய மாகாணம்.

வி.கே.ரா: கடுகு?
நா: கல்கட்டா.

வி.கே.ரா: வெங்காயம் பச்சமொளா?
நா: ஆந்திர பிரதேசம்

வி.கே.ரா: எண்ணெய்?
நா: குஜராத்.

வி.கே.ரா: எரிகட்ட?
நா: அதுவொரு மாகாணம்.

வி.கே.ரா: இருப்புச்சட்டி?
நா: ரூர்கிலா (Rourkela, ஒரிசா).

வி.கே.ரா: அரிகரண்டி
நா: பிலாய் (bhilai, சத்தீஸ்கர்).

வி.கே.ரா: அரவ மாஸ்டர்
நா: ராமநாதபுரம்.

வி.கே.ரா: சரக்கு மாஸ்டர்
நா: திருவனந்தபுரம்.

வி.கே.ரா: ஓட்டல் மாஸ்டர்
நா: உடுப்பி.

வி.கே.ரா: ஒரு மசால்வடைக்கே இத்தன மாகாணங்கள் ஒண்ணு சேர வேண்டி இருக்கே.

மாகாணங்கள பிரிச்சு குடுத்துட்டா மசால்வட எப்பிடி சாப்பிடுவ?
இந்த வாதம் நகைச்சுவையாக இருந்தாலும் கருத்துடன் உள்ளது.
இதுபற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

தமிழகத்தில் மேற்கண்ட பொருட்கள் எதுவுமே கிடைக்காதா?

எல்லாமே கிடைக்கிறது.
பருப்பைத் தவிர.

குளித்தலை பக்கம் மட்டும் துவரம்பருப்பு விவசாயம் நடக்கிறது.

குறிப்பாக தோகைமலை ஒன்றியத்தில் இனுங்கூர், நல்லூர், பணிக்கம்பட்டி, நச்சலூர், சேப்பளாப்பட்டி, நெய்தலூர், முதலைபட்டி, தோகைமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிபட்டி, பில்லூர், வடசேரி, புழுதேரி, ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, கள்ளை, புத்தூர், கூடலூர், கல்லடை, சின்னையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் துவரை விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  
இது தமிழகத்தின் 10% பருப்பு தேவையைக் கூட பூர்த்தி செய்வதில்லைதான். 

இதேபோல இந்தியா முழுவதும் பருப்பு தட்டுப்பாடு உள்ளது.

அதாவது பருப்பு தேவையில் 30% மட்டுமே பூர்த்தியாகிறது.

சுருங்கச் சொன்னால் நம்மால் தமிழகத்திலேயே மசால்வடை தயாரிக்க முடியாது என்றில்லை.

ஆனால் இன்றைய நிலையில் விலை இருமடங்கு அதிகமாக இருக்கும்.

விவசாயம் என்றாலே நாம் அரிசி பற்றி நினைக்கிறோம்.

ஆனால் குழம்புக்கு தேவையான பருப்பு பற்றி நாம் யோசிப்பதில்லை.

அரிசிச் சோறும் குழம்பும் நமது உணவுக் கலாச்சாரத்தில் 50 ஆண்டுகள் முன்புவரை கிடையாது.

கூழாக குடிக்கும் தானிய உணவுமுறையே நமது பண்பாடு.
அரிசி உணவை முக்கியமான சில நாட்களில் மட்டுமே உண்டுள்ளோம்.

ஏனென்றால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் வளமான வண்டல் மண் நமக்கு தாராளமான அரிசி தரும் அளவு இருந்தாலும் தமிழகத்தின் முக்கிய மண்வகை செம்மண் ஆகும்.
இது தமிழக மண்பரப்பில் ஏறத்தாழ 60% ஆகும்.

இதில் தற்போது பெரும்பாலும் பருத்தி விளைவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் சோளம், கம்பு ஆகியவையும் நன்கு விளையும்.

பருப்பு கூட விளையும்.

தண்ணீரும் அதிகம் தேவைப்படாது.

நான் வேளாண் அறிஞன் இல்லை.
தெரிந்தவரை கூறியுள்ளேன்.

என் நோக்கம் நாம் தனிநாடாகும் போது எதற்கும் கையேந்தாமல் இருக்க வேண்டும்.

அதற்கு நாம் நமது மண்சார்ந்த உணவுமுறைக்குத் திரும்ப வேண்டும்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


ஊடகங்கள் அரச குடும்ப அடிமைகளே...


உலகில் 90.99% ஊடகங்கள் இலுமினாடி எனப்படும் அரசகுடும்பத்தின்
கட்டுப்பாடில் உள்ளது...

1.இணையம் + மென்பொருள்கள்
2.வானொலி
3.தொலைக்காட்சி
4.செய்திதால்கள்/நாளிதழ்

இன்னும் பல புதிய தொழில்
நுட்பங்களும் அடங்கும்.

சரி விடயத்திற்கு வருவோம்.

இணையம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு ஊடகம் குறிப்பாக சமூக வலைதளங்களே இலக்கு வைக்கபட்டுள்ளது.

முகநூல் இலுமினாடிகளால் மூளைச்சளவை செய்வதற்காக உருக்கப்பட்ட ஒரு ஊடகம்.

இதன் logo மூளைச்சளவை செய்வதை மையமாக அதி சிறந்த படவரைஞர்களால் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதன் நிர்வாகிகள் மொத்தம் 5 பேர் இருவர் இலுமினாடிகளுக்காக
செயல்படும் இனமான யூத
இனத்தை சேர்ந்தவர்கள். காவர்ட், ஏஎல், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்
படிக்கிறவர்கள்தான்
இலுமினாடிகளால் இடைத்தரகர்களாக
நிறுவாகிக்கப்படுகிறார்கள்.

முக நூலின் முகப்பில் உலக வரைபடம் அதில் 13 நபர்கள்? சிந்த்தீர்களா?

அவை அனைத்தும் இலுமினாட்டி எனப்படும் 13 அரச குடும்பத்தினை குறிக்கும்.

இது மாத்திரமல்ல மார்க் சக்கர்பெர்க் தான் ஒரு இலுமினாட்டி என்று data privacy policy பயனாளர் தரவு பாதுகாப்பு பற்றி நேர்காணல் ஒன்றில் ஒத்துக் கொண்டார்.

அதற்கான video காண YouTube ல்
mark zurkerberg gets hot under the collar over your privacy என்று தேடிப்பருங்கள் உண்மை புரியும்.

https://www.youtube.com/watch?
v=WbOwdjSodeU

இதை விட மிக அதிர்ச்சை தரும் அடுத்துவரும் ஆதாரம்.

முகநூல் அமெரிக்கா தனியார் நிறுவனமான CIA ஆல் 2004 ஆண்டு உலவு பார்க்க உருவாக்கப்பட்டது என்று CIA தலைமை அதிகாரி ௯றும் காணொலி காட்சி கீழே உள்ள link ல் காணலாம்.

https://www.youtube.com/watch?
v=ka_1WU6EHWs

இதனால் இலுமினாடிகளுக்கு என்ன
இலாபம் என்று அனேகமாக
கேட்பீர்கள் ?

எதிரியை பற்றி ஒருவனுக்கு தெரிந்தால். அவனை இலகுவாக வீழ்த்தி விடமுடியும் அவனது பலம் பலவீனம் பற்றி மழுமையாக அறிய முடியும்.

நீங்களாகவே உங்களது தகவல்களை கொடுக்கிறீர்கள்.

(நம்மால் நம் தகவலை கொடுக்காமலும் இருக்கமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளனர்) அதன் மூலம் உங்களை இலுமினாடிகள்
கண்காணிப்புக்களை இலகு
படுத்தி விடுகிறீர்கள்.

புகைப்படம், தொலைபேசி இலக்கம்,
மின்அஞ்சல் நீங்கள் விரும்பும்
பாடல்கள், சினிமா, விளையாட்டு ஏன்
நீங்கள் நினைக்கும் எண்ணங்கள்,
உணர்வுகள்(feeling), இருக்கும் இடம்
(location) இப்படி உங்களை பற்றிய முழு தகவல்களையும் வைத்து அதற்கான தரவுத்தளம் ஒன்றையே உருக்கி வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் உலகில் நீங்கள்
எந்தவொரு மூலையில் இருந்தாலும் உங்களை இலகுவாக கண்காணிக்க முடியும்.

இலுமினாடிகள் எல்லாரையும் உலவு பார்க்கிறார்கள் இதனை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடன்னை தீவிரவாதி என்றார் பராக் ஒபாமா.

மேலும் நாங்கள் metadata வை மாத்திரம் தான் உளவு பார்க்கிறோம் என்று ஒரு
செய்தியில் வெளியிட்டார்.

இது பற்றி அறிய ௯குளில் Edward Snowden என்று தேடி பாருங்கள்
உண்மை புரியும்.

http://www.bbc.com/news/world-us-
canada-23123964

நீங்கள் பயன்படுத்தும் எல்லாம்
தொலை தொடர்பு சாதனங்களும் இவர்களது database ல் தானாக upload ஆகிவிடும். எந்தவொரு நாடு அரசிடமும்
இல்லாத தொழில் நுட்பம் இவர்களிடம் உள்ளது.

இது வெறும் கற்பனையாக என்னி விடாதீர்கள். அப்படி நினைப்பவர்களாக இருந்தால் நிக்கோலா தெஸ்லா
(Nicola Tesla) பற்றி அறிந்து விட்டு இந்த பதிவை படியுங்கள் புரியும்.

நீங்கள் முக நூலில் ஒரு நாட்டையோ அல்லது ஒருவரையோ எவ்வளவுதான் பக்கம் பக்கமாக பதிவுகள் போட்டாலும் யாரும் அதை பெரிய அளவில் சிந்திக்க மாட்டார்கள் அதை சாதாரணமாகவே நினைப்பார்கள் வெறும் ஒரு லைக்குடன் முடிந்துவிடும். இதைத்தான் இன்று அனைவரும் செய்கின்றோம்.

முக நூல் உங்களது தனிநபர் தரவுகளை ஏனைய நிறுவனங்களுக்கு வியாபாரம்
செய்கிறது உங்களுக்கு தெரியுமா?

அப்படி செய்யாதுனு மார்க்கை விட முக நூலுக்கு மார்புதட்டும் நமது நட்புகள் தான் அதிகம்.

அப்படியாயின் கீழே உள்ள லிங்கில் மார்க்கிடம் தனி நபர்களின் தரவு பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு ஏன் வியர்வை கொட்ட முளிக்கிறார் ? பதிலை குழப்பிவிடுகிறார்?

https://www.youtube.com/watch?
v=WbOwdjSodeU

சிந்தியுங்கள் மக்களே...

இந்த பதிவில் என்ன பிரச்சினை என்றால் என்னால் இந்த ஊடகங்களுக்கு ஏதிராக நீங்கள் எதிர்பார்க்கும் ஒற்றை வரியாலான தெளிவான பதிலைச் சொல்ல முடியவில்லை என்பதுதான்.

சிக்கல் வருவதே அங்கே தான். ஒற்றை வரியாக மட்டுமே ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும் என்பவர்களே நம்மில் அதிகம். ஆகவே என்னதான் தத்துவ விளக்கம் சொன்னாலும் அவற்றையெல்லாம் ஒற்றைவரியாக ஆக்கிக்கொண்டே இருப்பார்கள்.

இலுமினாடிகள் பற்றி மட்டும் அல்ல, நீங்கள் அரசியல், மதம் குறித்து கேட்டிருந்தாலும் என் பதில் கிட்டத்தட்ட இப்படித் தான்.

உங்கள் கேள்விக்கு நான் என்னை இடதுசாரி என்று சொன்னேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே நீங்கள் பதிவை எதிர்த்து வாதிடுவீர்கள். ‘நீ தானே இப்படிச் சொன்னாய்’ என்பீர்கள்.

சரி என்று நான் என்னை வலதுசாரி என்று சொன்னால் அதையும் நீங்கள் என் கூற்றுக்களை வைத்து மறுக்க முடியும். நீங்கள் போடும்  எந்த முத்திரையையும் நான் ஏற்க முடியாது என்பதே உண்மை. வேண்டுமென்றால் குழப்பவாதி என்று சொல்லலாம். ஆனால் நான் எவரையும் குழப்புவதில்லை. என்னளவில் தெளிவாகவே இருக்கிறேன். ஒன்றை தான் கூறமுடியும் நம்மை வேவுபார்க்கும் அவர்களின் ஊடகங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக பொதுவாக இன்றைய உலகில் நடக்கும் இலுமினாட்டி சதித்திட்டங்கள் குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதுண்டு. ஆனால், அவர்கள் அனைவரையுமே இலுமினாட்டிகள் குறிவைப்பதில்லை; ஒருசிலரை மட்டுமே குறிவைப்பதுண்டு.…

மராட்டிய ரஜினி டூபாக்கூர் கலாட்டா...


திக கீ. வீரமணி கலாட்டா...


ஏன்டா எச்ச சோறு அது அவங்க குடும்ப கட்சி அவங்க பேசி அவங்களே உடைச்சிக்குவாங்க...

நீ போனியா வாசல்ல நின்னு போட்டத தின்னுட்டு வந்தியான்னு இல்லாம சவுண்டா குடுத்திருக்க ராஸ்க்கல்....

ஓசி சோறு வீரமணி...

மதிவழி உயர்ந்த தமிழர் விதிவழி வீழ்ந்ததின் விளைவு.....


கடையேழு வள்ளல்களால் வாரி இறைக்கும் வளம் பெற்ற தமிழகம், இன்று வரி கொடுத்து கையேந்தி மாற்றானிடம் இறைஞ்சுகின்ற நிலை....

தேவை இறையாண்மையா? இரவாமையா?

சிந்திக்க வேண்டிய தருணம்..

மதி விழித்து நீதிக்காக இன்று வீதியிலே பாதி தமிழர்....

மீதிபேரும் ஒன்று சேர்ந்தால் நம்மை மோதிப்பார்க்க எவர் வருவர்?

விதி வீழ்த்தும் மதி ஓங்கட்டும். தமிழின விடுதலைத் தாகம் பொங்கட்டும்..

இந்தியத்தின் சுதந்திரத் தினத்தைப் பற்றி நமக்கென்ன கவலை தமிழா...

நமக்கு இந்தியத்திடம் இருந்து சுதந்திரம் எப்போது அதைச் சிந்தி தமிழா..

இந்திய அடிமை திராவிடத்தை ஒழிக்காமல்
இந்தியத்திடம் இருந்து தமிழனுக்கு கிடைக்காது சுதந்திரம்...

விழித்தெழு தமிழா...

இந்திய சுதந்திரத் தினத்தை புறக்கணிப்போம்...

தேசியமாக இல்லாத டிஜிட்டல் இந்தியா வின்...


தேசிய விலங்கு - குள்ள நரி..

தேசிய மலர் - அரலிப் பூ..

தேசிய விளையாட்டு - இனப்படுகொலைப் போர்..

தேசிய உணவு - மனித மாமிசம்..

தேசிய வியாதி - ஆட்கொள்ளி....

இன்னும் அறிவிப்புகள் தொடரும்..

இப்படிக்கு - ஆள் இந்தி(ய) கேடியோ..

போங்கடா நீங்களும் உங்களின் மானங்கெட்ட இந்திய சுதந்திரத் தினமும்...

நோய்களை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்...

                                                   
மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.

ஒட்டவே ஒட்டாது...

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கொழுப்பு சத்து அதிகரிக்கும்...

உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள்...

மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலரும் சற்று சிந்தித்து உணவு தயாரிக்கும் முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதர்க்காகவே இந்த பதிவு.

உங்களை திரும்பவும் மண்சட்டியில் சமைக்க சொல்லவில்லை ஆனால் மண்சட்டியில் தயார் செய்யும் உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பது மட்டும் முற்றிலும் உண்மை...

இயற்கை...


தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...


அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......

திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.

இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....

தமிழர் பகையை அடையாளம் காண்போம்..

தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...

கேரளா வெள்ளம் ஒரு பார்வை...


வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை...


தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம்.

மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும்.

வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.

மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம்.

இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.

மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

நாக்குப்புண், குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.

நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.

எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்...

கட்டப்பட்ட மாளிகையெல்லாம் காணாமல் போனது உண்மை தான்...


ஆனால் நட்டப்பட்ட  மரங்கள் அவர்களை கைவிடவில்லை...

ராஜராஜ சோழன்...


1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வட இந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.

பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.

அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.

இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.

சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).

1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்க வேண்டும், அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்). விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும் போது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில்.

விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும், மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு, மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும், இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.

கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர், கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.

கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம், சற்று யோசித்து பாருங்கள், இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்க வேண்டும்.

ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம், தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.

7 வருடம் கைதிகளை அடக்கி ஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை, அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம் கோணாமல் வேலை செய்ய வேண்டும், மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.

சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள், ஆயிரம் ஆயிரம் யானைகள், குதிரைகள் 1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள், சமையல் வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழ தேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்...

சினிமா, கார்பரேட், ஊடகங்கள் இனைந்து ஏமாற்றும் தந்திரம்...


சளி பிடிச்சிருக்கா? வீட்ல மருந்திருக்கு...


மழை ம‌ற்று‌ம் கு‌ளி‌ர்கால‌ங்க‌ளி‌ல் குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி தொந்தரவு அதிகம் இருக்கும்.

அ‌திலு‌ம் ஆ‌ஸ்துமா உ‌ள்ள குழ‌ந்தைகளு‌க்கு ‌மூச்சுவிடுவதில் மிகவு‌ம் ‌சிரமமாக இரு‌க்கு‌ம்.

இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சளித் தொந்தரவு அதிகம் இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சளி நீங்கும்.

அதேபோல் மிளகு சேர்த்த சிக்கன் சூப் சளித் தொந்தரவை கட்டுப்படுத்தும்.

சிக்கனுடன் பூண்டு, மிளகு சேர்த்து வறுவல் செய்து கொடுக்கலாம். சளித் தொந்தரவு நீங்குவதோடு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சளித்தொந்தரவினை நீக்குவதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது.

வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பா‌லி‌ல் மஞ்சள் தூ‌ள் சே‌ர்‌த்து குழந்தைக்கு கொடுக்க வே‌ண்டும். இரண்டு மூன்று நா‌‌ட்களு‌க்கு இ‌து போ‌ன்று கொடுத்துவர சளித்தொந்தரவு நீங்கிவிடும்.

இதேபோல் பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் சளித்தொந்தரவு நீங்கிவிடும்.

சளி பிடித்த குழ‌ந்தைகளு‌க்கு இ‌ஞ்‌சி ரச‌ம் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். ரச‌ப் பொடி‌யி‌ல் ‌மிளகு, ‌சீரக‌ம், துவர‌ம் பரு‌ப்பு, பூ‌ண்டு, ‌கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், பெரு‌ங்காய‌த்துட‌ன் ஒரு து‌ண்டு இ‌ஞ்‌சியையு‌ம் வை‌த்து அரை‌த்துப்போட்டு ரசம் வைத்து‌க் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ச‌ளி அகலு‌ம்.

பிரசவித்த தாய்மார்களுக்கும் இ‌ஞ்‌சி ரச‌ம் வை‌த்து சா‌ப்‌பிடக் கொடுக்கலாம் ‌மிகவு‌ம் ந‌ல்லது...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


இறந்த குட்டியின் உடலை அங்கும் இங்கும் சுமந்தபடி அலைந்த குரங்கு.. நெகிழ்ச்சி சம்பவம்...


குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையானது மிக முக்கியமான சாலையாகும். எப்போதுமே வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். அதனால் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்வதால் போக்குவரத்து நிறைந்து காணப்படும். அப்படி சுற்றுலா பயணிகள் செல்லும் போது குறுக்கும் நெடுக்குமாக ஓடியும், ஒளிந்தும், விளையாடியும் வரும் குரங்குகளை கவனிக்க தவறுவதே இல்லை.

இந்நிலையில், இன்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குரங்கு ஒன்று இங்கும் அங்கும் ஓடி கொண்டே இருந்தது. அதன் கையில் மற்றொரு குட்டிக்குரங்கு. அந்த குரங்கினை மார்போடு அணைத்துக் கொண்டு வேகவேகமாக ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது. சுற்றுலா பயணிகள் இதனை உற்று கவனித்த போது தான் தெரிந்தது குட்டி குரங்கு, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்தது என்று.

தரதரவென இழுத்து சென்றது தன் குட்டி இறந்ததுகூட தெரியாமல் அந்த தாய் குரங்கு அதனை தூக்கி வைத்து மார்போடு அணைத்து கொண்டே இருந்தது. இந்த பாசப்போட்டத்தினை கண்டு ஏராளமானோர் பிரதான சாலையிலேயே கூடிவிட்டனர். ஆட்கள் நம்மை கவனிக்கிறார்கள், அதிகரித்து விட்டார்கள் என்று தெரிந்து கொண்ட குரங்கு, குட்டியின் உடலை தர, தரவென இழுத்துக் கொண்டு சென்றது.

பின்னர் அங்குள்ள ஒரு புதருக்குள் குட்டியின் உடலை மறைத்து வைத்தது. மீண்டும் சாலைக்கு வந்து இங்கும் அங்குமாய் ஓடியது. தாய் குரங்கின் இந்த செயலை கண்ட வாகன ஓட்டிகள் கண் கலங்கி கிளம்பி சென்றனர். ஆனாலும் அந்த தாய் குரங்கின் அழுகை சத்தம் மட்டும் நீண்ட நேரத்திற்கு நிற்கவே இல்லை...

பாஜக மோடி எனும் மோசடி மன்னன்...


ஆவிகள் ஒரு அனுபவம்...


ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன.

உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்...

ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன.

ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்க முடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.

பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும்.

இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர்.

எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது.

சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு.

ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு.

கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன.

ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு.

பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

மேலும், அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர்,

ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம்.

பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.

அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்  என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாகக் கொண்டு பேசுவதும் உண்டு.

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு.

Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.

அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார்.

திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன் என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரண மடைந்தார்.

அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது...

நீயாக அடிமையாய் போய் சேர்வது வேறு...


ஒருங்கிணைத்து அடிமையாக்குவது வேறு...

தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அடிமைகள்...

நிலச்சரிவிலிருந்து தனது முதலாளியை காப்பாற்றிய நாய்...


இடுக்கி மாவட்டம் கஞ்சிகுழி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் நேரத்தில், அதிகாலை 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது முதலாளியை அவ்வீட்டு நாய் மிகவும் பலமாக குரைத்து எழுப்பியது. நாயின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அவ்வீடு தரைமட்டமானது.

இதனால் அதிர்ஷ்டவசமாக நாயின் உரிமையாளர் மோகனன் மற்றும் அவரது மனைவி உயிர் தப்பினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது தாத்தா மற்றும் பாட்டி உயிரிழந்தனர்.

நாயின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் தப்பிய அவர்கள் நாயின் செயலால் மனம் நெகிழ்ந்தனர்...

டி.என்.ஏ தடுப்பூசி - ஜீனோம் எடிட்...


மழை வெள்ளத்தில் மூழ்கிய கேரளாவை காப்பாற்றும் காமராஜர் கட்டிய அணை.. நெகிழும் மக்கள்...


கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கேரளா முழுவதும் வெள்ளக்காடாக மாறி விட்டது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் வரை பலியாகி விட்டனர்.

இந்த மழை வெள்ளத்திற்கு கேரளாவே அலறி கொண்டு உள்ளது. ஆனால் இந்த வெள்ளத்தில் இருந்து கேரளாவின் பாலக்காடு மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பி உள்ளது.

இவர்களை காப்பாற்றியது மழப்புலா அணைதான். இந்த அணையை தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் கேரளா தமிழகத்தோடு இருந்த போது 1955ம் ஆண்டு கட்டியதாகும்.

இந்த மலப்புழா அணைதான் பாலக்காட்டை காப்பாற்றி உள்ளது. இதனை பாலக்காடு மக்கள் இப்போது நினைத்து பெருமிதம் கொண்டு வருகின்றனர்...

சினிமா, தொலைக்காட்சி உருவாகக் காரணம் எதுக்கு?


பெண்களின் மாதவிடாய் பற்றி சித்தர் சிவவாக்கியர்...


சிவவாக்கியர் சித்தர் பாடல்...

மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

பெண்களுக்கான மாதவிலக்கு தூய்மையானது தான். பருவ காலத்தில் கரு உண்டாகும் காலத்தில் இது நடக்காது. இப்படி பட்ட விஷயம் பின் எப்படி தூய்மை அற்றதாகும்? வேதம் ஓதும் வேதியரே.. எல்லாம் தூய்மையில் இருந்து வந்தது தானே...

தடுப்பூசி மர்மங்கள்...


பழங்களால் பொலிவாகும் சருமம்...


பழங்கள், காய்கறிகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தினசரி பழங்கள், காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளபளப்பாகும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பழங்கள் உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

ஆரோக்கியத்தோடு சருமத்தை அழகாக்கும் பழங்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

வாழைப்பழம் - நம் நாட்டில் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வாழைப்பழம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின்களான ஏ, பி, மற்றும் இ காணப்படுகின்றன. இது முகச் சுருக்கத்தைப் போக்கி இளமையை தக்கவைக்கும். வாழைப்பழத்தை நன்கு மசித்து பேஷியல் போடலாம் சருமம் பொலிவாகும்.

எலுமிச்சை - இந்திய சமையலில் எலுமிச்சைக்கு முக்கிய பங்குண்டு. இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி சத்து சருமத்தை அழகாக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகிவர சருமம் ஆரோக்கியமடையும். தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் பூசி உலரவைத்து குளிக்கலாம். சருமம் பளபளப்பாகும். இயற்கை பிளீச் ஆக செயல்படும்.

ஆப்பிள் - தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை என்பார்கள். ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ஸ் சருமத்தை பொலிவாக்குகிறது. இறந்த செல்களை நீக்குவதோடு புதிய செல்களை உருவாக்கும்.

ஆரஞ்சு பழம் - ஆரஞ்சு பழத்தில் உள்ள உயர்தர வைட்டமின் சி சருமத்தை பாதுகாக்கிறது. ஆரஞ்சு தோலினால் சருமத்தை தேய்த்து உலரவைத்து பின்னர் குளிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சு தோலினை உலரவைத்து பொடி செய்து ஸ்கிரப்பராக உபயோகிக்கலாம்.

பப்பாளி - பப்பாளிப் பழம் உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற என்சைம் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

மாம்பழம் - மாம்பழத்தில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் ஏ சத்து முதுமைக்கு எதிராக போராடுகிறது. செல்களை புதுப்பிக்க உதவுகிறது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


இவை அனைத்திற்கும் தனித்தனியே ஆராய்ந்தால் பல காரணங்கள் தெரியவரும்...


ஆனால் அனைத்தும் சேரும் ஒற்றைப்புள்ளி உலகமயமாக்கல் என்பது மட்டுமே..

உலகமயமாக்கலின் முதல் எதிரியே தற்சார்பை வாழ்வியலாக கொண்ட இனம்தான்..

அதனால் தான் நம்மைச்சுற்றி உலகமயமாக்கலின் வலைகள் அதிகம் பின்னப்பட்டன...

பதில் சொல்லுங்கடா கார்பரேட்க்கு பிறந்தவனுங்களா...


வாழ்க்கை இரகசியம்...


பழையவற்றை நினைத்து வேதனைபடுவதும் , எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதும் வாழ்க்கை அல்ல...

இந்த நொடியை சந்தோசத்துடன் உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை...

இந்த நொடியை சந்தோசத்துடன் உணர்ந்து வாழ தெரிந்தவரே எதிர்காலத்தை படைக்கும் தகுதியானவர்..

உங்களை சுற்றி அளவற்ற அன்பு மற்றும் சந்தோசம் இருப்பதாக உணருங்கள்..

அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதார நம்பி உணருங்கள்.....

அவ்வாறு செய்தால் உங்களுக்கான வாழ்க்கையும், உங்கள் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் வந்து நீங்கள் நினைப்பது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அடைய முடியும்...

சந்தோசம் என்பது உங்கள் மனதில் இருந்து உருவாகிறது...

அன்பானவர்களுக்கு மனது கூட ஒரு புனிதமான தாயின் கருவறை தான்..

உங்களுக்கான சந்தோசத்தையும் படைக்கும், மற்றவர்களுக்கு அளவற்ற அன்பை அள்ளி தரும் மாபெரும் படைப்பாளி நீங்கள்.

நீங்கள் மாதம்தோறும் வெறும் டெலிபோன் பில், கிரெடிட் கார்ட் பில், பால் பில், மின்சார பில் கட்ட மட்டுமே இந்த பூமியில் பிறக்கவில்லை..

நீங்கள் சம்பாதிப்பதற்கு அல்லது சாதிப்பதற்கு மட்டுமே இந்த பூமியில் பிறக்கவில்லை..

மாறாக இந்த பூமியின் மதிப்பை கூட்டவே நீங்கள் பிறந்து இருக்கிறேர்கள் என்பதை உணருங்கள்....

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாமா வேலை பார்க்கும் அதிமுக எடப்பாடி...


சாலையில் விரிசல்... திடீர் நிலச்சரிவு... கேரளா- செங்கோட்டை போக்குவரத்து துண்டிப்பு...


மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையின் காரணமாக, தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இடமன் அருகே சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில், வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அதனால், அனைத்து அணைகளும் திறக்கப்பட்டதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கேரளா முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக எல்லைப் பகுதியான செங்கோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தென்மலைப் பகுதியில் கனமழை பெய்கிறது. அதனால், கொல்லத்தில் இருந்து வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கல்லாடா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாடா அணை திறக்கப்பட்டதால், அந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

அதனால், கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இடமன் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவு உருவானது. எனவே, அந்தப் பகுதியில் கனரக வாகன போக்குவரத்து முதலில் நிறுத்தப்பட்டது. நிலைமை மோசம் அடைந்ததால், அந்தச் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லாடா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொல்லம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கேரளாவில் இருந்து செங்கோட்டைக்கு வரக்கூடிய சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டன.

அதேபோல, கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய வாகனங்களும் தென்மலை அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரடைந்ததும் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் கேரள காவல்துறையினர் தெரிவித்தனர்...

எவ்வளவு பணம் கட்டி என்ன பிரயோஜனம்... தாய் மொழியில் உன்னை அப்பா என குறிப்பிட தெரியவில்லை...


நடிகர் விக்ரம் மகன் விடுதலை...


குடிபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி சாலையோர ஆட்டோக்களில் மோதி 3 பேரை படுகாயமாக்கிய நடிகர்  விக்ரம் மகன் துருவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்...

என்ன சட்டமோ.. கை கால் ஒடிஞ்சவன் இன்னும் மருத்துவமனையில்...

திமுக எனும் திருடர்கள் கூட்டம்...


பற்பசையில் விஷம்...


பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும் போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.

ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.

பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...