இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் அறிவியல், மதம், மொழி மூன்றின் வேர்களைத் தேடிச் சென்றால் அவை மூன்றும் ஒரு புள்ளியில் நிற்கும்.
அந்தப்புள்ளி தமிழ் தான். இதை ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும்.
இன்னும் தமிழை உலகம் சரியாகக் கண்டு கொள்ளவில்லை. தமிழனே கண்டு கொள்ளவில்லை எனும்போது யார் கண்டு கொள்வார்.
ஆனால் தமிழரின் எதிரிகள் கண்டு கொண்டு விட்டார்கள். அதனால் தான் தமிழனை எழ விடாமல் அடிக்கிறார்கள். விழித்துக் கொள்ளாமலிருக்க தூங்க வைக்கிறார்கள். தூக்கம் வரலைன்னா ஊற்றிக் கொடுக்கிறார்கள்.
உலகின் அனைத்து மதங்களின் ஊற்றுக்கண் தமிழர்களின் அறிவியல்.
தமிழன் மத நம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை உருவாக்காதவன். அவனின் அளவுகடந்த அறிவியல், விண்ணியல் ஞானம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டது. பறிக்கப்பட்ட அறிவு அவன் மீதே மதக்கோட்பாடாய் திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உலகின் எந்த மதமும் விதிவிலக்கல்ல.
விரைவில் ஒவ்வொன்றாய் பகிர்ந்து விவாதிப்போம். எல்லா மதங்களும் அவைகளின் கோட்பாடுகளும் விவாதத்திற்கு உட்பட்டவையே.
காரணம் மனிதனே முதன்மையானவன்.
மனிதனே இல்லையென்றால் மதங்கள் எங்கே நிற்கும்.
திருவிளையாடல்:
திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி நாகேசுக்கு அடுத்து நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஞானப்பழம்.
புராணக்கதை நம் எல்லோருக்கும் தெரியும். மூத்தவர் விநாயகர் இளையவர் முருகர் யார் முதலில் உலகம் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே ஞானப்பழம். விநாயகர் தாய், தந்தையை சுற்றிவந்து இவர்களே உலகம் என்று பேசி ஞானப்பழம் பெற்றுவிடுவார். கோபித்துக்கொண்டு முருகன் பழனிக்கு.
இது புராணக்கதை. இதில் எங்கே தமிழர்களின் அறிவியல்.
திரிசூல மூன்று சக்திகள் பிரம்ம, விஷ்ணு, சிவனில் இந்த சிவன் யார் ?
உலக உயிர் உருவாகக் காரணமாயிருக்கும் சூரியனே சிவன்.
சிவன் - சிவந்தோன். ஆங்கிலத்தில் Red Sun or Red Giant. சூரியனின் முதிர் நிலை சிவந்த நிலை. (தி.மு.க. உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே அதுதான் Red Giant.).
நாம் காணும் சூரியனின் தற்போதைய நிலை இளம்பிராயம். அதாவது நமது சூரியனின் வயது நாலரை கோடி.
இன்னும் 5 கோடி வருடங்களுக்கு பிரச்சினை இல்லை. அதன்பின் அது பெரிதாக ஆரம்பிக்கும்.
எந்தளவிற்கு என்றால் படிப்படியாக வளர்ந்து முதல் கிரகம் புதனை விழுங்கும். அதாவது பெரிதாகும் சூரியனின் வெப்பத்தில் புதன் சாம்பலாகிவிடும். பின்னர், வெள்ளி கிரகம், பூமி (நம்ம பூமிதான்), செவ்வாய், வியாழன் வரை விழுங்கப்படும், அந்த அளவிற்கு சூரியன் மிகப்பெரிய சூரியனாக, சிவப்புச்சூரியனாக (Red sun ) விரிவடையும்.
நம் சூரியன் இனிமேல்தான் Red giant ஆகணும். ஆனா ஏற்கனவே Red giant ஆன சூரியன்கள் நிறைய சுத்திக்கிட்டு இருக்குது.
அது விரைவில் வெடிக்கும் என்கிறார்கள். அவ்வாறு வெடிக்கும் போது அதன் வெளிச்சம் நன்றாக நமக்குத்தெரியும் என்கிறார்கள்.
அந்த Red Giant டின் பெயர் Betelgeuse என்பதாகும்.
நம்ம சூரியன் 5 கோடி வருடங்களுக்குப் பின்னாடி Red Giant ஆவதற்கு முன்னாடியே இப்ப Red Giant ஆக இருக்கக்கூடிய இந்த திருவாதிரை நட்சத்திரத்தை நமது சூரியனுக்கு பதிலாக வைத்தால் அது எவ்வளவு பெரிசாக இருக்கும்?
இந்த Betelgeuse நட்சத்திரத்துக்கு தமிழர் வைத்த பெயர் திருவாதிரை. அந்த Red giant டயும் தான் பார்ப்போமே.
குறித்துக்காட்டப்பட்டுள்ளது தான் அது.
இந்த திருவாதிரைக்குக் கீழே இருக்கும் 3 நட்சத்திரங்களை வானில் பார்த்திருப்போம் கிராமங்களில் ஒலக்கைத் தடிமீன் என்பார்கள் (உலக்கை போல இதன் வரிசை இருப்பதால்). திருவாதிரை நம்ம பூமியிலிருந்து இருக்கும் தூரம் 640 ஒளி ஆண்டுகள் தூரம்.
ஒரு சிறிய விளக்கம் ஒளி ஆண்டு பற்றி.
நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம்.
(நமக்குத் தெரியும் 1 கி. மீ. - 1,000 மீட்டர்)
கடல் தூரங்களை நாட்டிகல் மைல் என்பார்கள்.
பன்னாட்டுத் தர அடிப்படையில்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.
விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி ன்னு சொல்லவேண்டி இருக்கும் என்பதால் 'ஒளி ஆண்டு' என்ற பதம் பயன்படுத்துகிறார்கள்.
ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர்.
(அதாவது அரை கிலோமீட்டர் கூட இல்லை)
ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம்).
அப்படின்னா..
1 நிமிடத்துக்கு (3,00,000 X 60)
1 மணி நேரத்தில (3,00,000 X 60 X 60)
1 நாளைக்கு (3,00,000 X 60 X 60 X 24)
1 மாதத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30)
1 வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12)
இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒரு ஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்).
திருவாதிரை நட்சத்திரம் இருக்கும் தூரம் 640 ஒளி ஆண்டுகள். (பெருக்கிகொள்ளுங்கள்)
நம்ம பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ப்ரோக்சிமா செந்தௌரி (Proxima Centauri) இதன் தொலைவு 4.24 ஒளி ஆண்டுகள்தான்.
1. பூமியிலிருந்து நிலவின் தூரம் 4 லட்சம் (3,86,640) கி. மீ. என்பதால் அதன் பிரதிபலிக்கும் ஒளி நம்மை 1 வினாடியில் அடைந்துவிடுகிறது.
2. சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் அதன் ஒளி வந்து சேர 8 நிமிடம் ஆகிறது. நாம் பார்க்கும் சூரியன் 8 நிமிடத்திற்கு முன்னாள் இருந்த சூரியன் தான்.
3. ஆனால் மிக அருகில் உள்ள நட்சத்திரமான ப்ரோக்சிமா செந்தௌரி யின் ஒளி நமக்கு வந்து சேர ஆகும் வருடங்கள் 4 வருடம், 2 மாதங்கள், 4 நாள்.
ஆக நாம் பார்ப்பது நட்சத்திரத்தை அல்ல அதிலிருந்து பல வருடங்களுக்கு முன் புறப்பட்ட ஒளியைத்தான்.
அப்ப திருவாதிரை நட்சத்திரம். ஆமாம் 640 வருடங்களுக்கு முன்னாள் புறப்பட்ட ஒளியைத்தான் பார்க்கிறோம்.
இதவிடக்கொடுமை என்னன்னா பல நட்சத்திரங்கள் செத்துப்போயாச்சு கருந்துளையாகி. ஆனா அதிலிருந்து வரும் ஒளியை இன்னும் பல நூறு, ஆயிரம் வருடங்களுக்கு பார்த்துக்கொண்டிருப்போம்.
இதையெல்லாம் நம்ம தமிழ் மூதாதையர்கள் எப்பவோ கண்டிபிடிச்சு சொன்ன விசயங்கள். ஒவ்வொரு நட்ச்சத்திரக்கூட்டத்திற்கும் பெயரே வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொன்னா அவற்றை எல்லாம் சேர்ந்து தேடுவோம்.
பின்னால் வரும் சில செய்திகளுக்கு தேவை என்பதால் சூழ்நிலை விளக்கம் கொஞ்சம் நீண்டுவிட்டது.
சிவந்த சிவன் என்பது நம்ம சூரியன் தான்.
அடுத்த பெயர் பார்வதி. தொடர்ந்து தேடுவோம்...