05/12/2018

இறுதி யாத்திரை பாடல்...


ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க...

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை...

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே...

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை  கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க...

பிறப்பு இல்லாமலே
நாளொன்றும் இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்றும் இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை...

கடல் தொடும் ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன...

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடி வந்து சேரும்...

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்...

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்...

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க.

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க.

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க.

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க...

எனக்கு பிடித்த பாடல்...


ஜெயலலிதா வின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி...


கடுக்காய்...


இளமை தரும், தாம்பத்தியக் குறைபாடு நீக்கும், எடை குறைக்கும்... கடுக்காய்..

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே', `- இது சித்தர்கள் வாக்கு. `கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்' போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது' என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ என திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ - கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து'
என்ற இன்னொரு மருத்துவப் பாடலும் கடுக்காயின் பெருமையைப் பறைசாற்றுகிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன பழமொழியின்படி காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.

சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் உள்ளதாகவும், அவற்றைச் சாப்பிடுவதால் நோய் விலகும், பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள். மேலும், உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்-பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள்.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 48 நாள்களில் கருமுட்டை உடையும் நாள்களில் மட்டும் தம்பதிகள் சேரலாம். மற்றபடி ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

இஞ்சி கல்பம்...

இஞ்சி கல்பம் செய்ய அரை கிலோ இஞ்சியும் கால் லிட்டர் சுத்தமான தேனும் தேவை. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மையாக அரைக்கவும். அப்படி அரைத்த விழுதைப் பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் படியவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும்.

தெளிந்த இஞ்சிச் சாற்றில் நன்றாகப் பழுத்த இரும்புக்கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுக்க வேண்டும். மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இதுதான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம்.

இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து அதிகாலையில் குடிக்க வேண்டும். (ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்துவைத்து பயன்படுத்தவும்.)

இஞ்சி கல்பம், பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானக் கோளாறுகள், வயிற்றுக்கோளாறுகள், தலை கிறுகிறுப்பு போன்றவற்றைப் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இதயநோய்களைக் கட்டுப்படுத்தும்.

சுக்கு கல்பம்...

சுக்கு கல்பம் செய்ய கால் கிலோ சுக்கு, 25 கிராம் சுண்ணாம்பு, ஒரு லிட்டர் தண்ணீர் தேவை. தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை ஒரு மணி நேரம் ஊறவைக்க
பிறகு வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும்.

சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இதுதான் சுக்கு கல்பம். மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

இது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும்; வாய்வுத் தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களையும் போக்கும்.

கடுக்காய் கல்பம்...

கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும்.

மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.

இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம்.

கடுக்காய் லேகியம்...

கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச் சிலர் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. உண்மையில் கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும்.

முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க ,கடுக்காய் சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும். செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.

கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்.

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும்.

இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.

இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.

பொதுவாக, மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இருக்கும். தாம்பத்யக் குறைபாடுஇல்லாமல் இருந்தாலே போதும். தம்பதியரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த அற்புதமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கடுக்காய்...

ஓசி டீ திமுக ஒழிக...


டீ கடையில் டீ குடித்ததற்கு காசு கேட்டதால் கடையை சேதம் ஏற்படுத்திய திமுகவின் சுரேஷ் பாபு...

இதை படம் பிடித்த ஊடகவியாளர் பிரமோத் என்பவரை அவர் தாக்கி உள்ளார், ஊடகவியலாருக்கு காயம், மருத்துவமனையில் அனுமதி...

ஆம்பூர் அருகே மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்...


நேற்று ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் நடந்த கார் விபத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர் சரவணனுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் வாழ்த்து தெரிவித்தார்...

தெலுங்கர் வைகோ நாயூடு அவர்களே...


இதுவும் தங்கள் திருவாயில் மலர்ந்ததே, உங்களை போன்றவொரு சந்தர்ப்பவாதியை இவ்வுலகமே கண்டிருக்காது...

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ், நோயாளி பலி...


கரூர் அருகே நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வந்த நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவ நுட்பனர் படுகாயம் அடைந்தனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ், அருகில் உள்ள மயிலம் பட்டியில் ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் வழியில் வெங்ககல் பட்டி என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 108 ஆம்புலன்சில் ஏற்றி வந்த நோயாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் ஆம்புலன்சை ஓட்டிவந்த தங்கராஜ் என்பவரும், அவருடன் வந்த அவசரகால மருத்துவ நுட்பநர் ஆண்டி வேல் என்பவரும் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்புலன்சில் இறந்த நோயாளி ஜெயராமன் (67), கூலி தொழிலாளி ஆவார். கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் விநோபாச்சிபுரம் தரகம்பட்டியை சேர்ந்தவர். அவரது மனைவி வேலம்மாள். இந்த விபத்துக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ள விளக்குகள் முழுமையாக வெளிச்சம் தராததே காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

திமுக டி.ஆர். பாலு வின் மது ஆலை கொலைகள்...


கம்யூனிசம் என்றால் என்ன?


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி
மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டுபோய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.


அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான், தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

இந்தியா அனுமதித்தால் தமிழ்நாட்டை , ஒரு சுருட்டு பத்தி முடிவதற்கு முன் கைப்பற்றுவோம் - இலங்கை ராணுவ தளபதி திடீர் ஆவேசம்...


டேய் நாயே... தமிழர்கள் உச்சா போனாலே இலங்கை மூழ்கி விடும் பரதேசி...

துரோக இந்தியத்தை நம்பி தமிழர்களை இல்லை...

இலுமினாட்டி யும் 666 இரகசியமும்...


கிறிஸ்த்துவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை முதலிலே பார்த்தோம்..

கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்..

ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப் பட்டுவிட்டது..

கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே..

யார் இந்தப் பவுல்?

வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர்..

இவரின் உண்மையான பெயர் Saul of tasus..

இது கிரேக்க மொழிப் பெயராகும்.

கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார்.

இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்பட்டது.

திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்.

ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.

தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார்.

கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார்.

இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.

இதுதான் அவரது வாக்குமூலம்..

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.

யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன்.

அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன்.

பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன்.

எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.

சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். (முதலாம் கொரிந்தியர் 9:19-23).

கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.

நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது. (யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே.

இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும்.

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும்.

புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.

லூசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது..

1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்தத்தை (நவீனம்) தோற்றுவித்தல்.

2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்.

3. அப்படியே குப்ருக்கள் (இறை மறுப்பு) கொண்டு செல்லல். அத்தோடு அவ்வேதம் அழிந்து விடும்.

இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான்.

இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள்.

வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.

தூய கொள்கைக்குள் பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?

மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும்.

அப்பற்றின் காரணமாக அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும்.

ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல்.

ஈசாவோடு எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார்.

இதன் காரணம் பின்னர் விளங்கும்.

ஈசா நபியினதும் அவர் தாயினதும் கலங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கியவர் இவரே.

ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.

இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?

வரலாற்றில் சைத்தானியர்கள் (லூசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழித்து இணைவைப்பை உருவாக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம் தான்.

ஈசா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் கடவுளை ஈசா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார்.

ஈசா நபியின் கலங்கத்தைத் துடைக்க இதுவே நல்லது என்ற போர்வையில் நுழைகிறது.

தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது.

அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள்தானே என்ற லாஜிக்கின் அடிப்படையில் மரியமும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்.

கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது.

முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும். மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.

பிதா, சுதன், ஆவி என்ற தற்போதைய திரித்துவம் Tertullian (155-230) என்பவரால் தோற்று விக்கப்பட்டது..

திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.

உதாரணமாக..

1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய (புத்தரின் 3 உடம்பு).

3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.

5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி.

6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்.

7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்.

8. டாவோசியத்தில் Fu, Lu, Shou.

இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு.

இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாடிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும்.

ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான்.

ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்..

இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே.

இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருத வேண்டும்...

ஸ்டெர்லைட் வழக்கு விவகாரம்: வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட்...


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தை கேட்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராடத்தில் சுமார் 13பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையால் ஆலை மாவட்ட ஆட்சியாளரால் சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது.  இதில் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் 28ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில்,”ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் சிறப்பு குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையை தீர்ப்பாயம் பரிசீலனை செய்துள்ளது. அதில் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அடுத்த ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான பதிலை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யலாம் எனக்கூறிய தீர்ப்பாயம் வழக்கை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேதிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசோ அல்லது பொதுநல மனுவோ தாக்கல் செய்தால் உச்ச நீதிமன்றம் எங்களது தரப்பு பதிலை கேட்காமல் எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்துள்ளது...

திராவிடத்தின் சாதனை...


இலுமினாட்டி யும் கிருஸ்துவ அரசியல் இரகசியமும்...


இந்த லூசிபெரியனிசக் கொள்கையானது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது..

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது.

ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது.

freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். ( Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன் (Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டு வந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்)..

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்..

இன்றைய காலத்தில் பெயர் பெற்று விளங்கும் இயக்கம் தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும்.

வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே..

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை.

அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது.

ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கைதான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது..

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர்..

குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர்.

ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது.

சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது..

எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது.

பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை.

இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306)..

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார்..

இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார்.

கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை ( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்..

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்..

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்தத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது.

இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.

இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும்.

இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது.

ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தர வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது.

தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன.

சிலை வழிபாடு புகுத்தப்பட்டது.

உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான்.

இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.

இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். (இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )..

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிறிஸ்த்துவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்..

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம் அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டு வந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

சென்னை ஆதம்பாக்கம் பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து அவர்களின் அந்தரங்கங்களை பதிவு செய்த விடுதி உரிமையாளர் சஞ்சீவ் என்பவனை போலீசார் கைது செய்தனர்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர்  ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான்.

ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும்.

சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்துக்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி 'உன்
காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன' என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார்.

பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.

இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன் படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.

துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள்.

முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே
நன்றாகத் தானே இருக்கிறேன்," என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான்.

இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.

நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். "நான் பலவீனமானவன்", "என்னால் இது முடியாது", "எனக்கு ஆரோக்கியம் சரியில்லை" என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும்.

இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.

தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும்.

அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம்.

ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.

கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.

நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியே
உங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள்.

வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்...

பணம் மட்டுமே உயர்ந்தது என்ற உளவியலை உடைக்க இயற்கை பல பாடங்களை கற்று கொடுத்தாலும் நாம் தான் இது வரை எந்த மாற்றத்தையும் பெறவில்லை...


நம்மை நாகரீக நகர வாழ்க்கையில் இருந்து விடுவிக்க இன்னும் ஆயிரம் இடர்கள் இயற்கை கொடுத்தாலும் நாம் மட்டும் அதனை சிறிதளவும் ஏற்றுகொள்ளாமல் கடந்து செல்கிறோம்...

பணம் சேர்த்து உணவை மட்டுமே நுகர்கிறோம்...என்பதை ஏன் இங்கு யாரும் புரிந்துகொள்வதில்லை?...

நமது உழைப்பை கொடுத்து பணத்தை பெறாமல்... நமது உழைப்பின் மூலம் நமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து நாமே நுகர்வது மிக சிறப்பாக இருக்கும்...

பணம் என்ற வெற்று தாளை சேர்த்து வைக்காமல் விதைகளை சேர்த்து வைப்போம்...

பணம் என்று வேண்டுமானாலும் தனது இயல்பை இழந்துவிடும் ஆனால் விதை என்றுமே தன் இயல்பை இழந்துவிடாது...

எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு தேவையானவை காகிதம் அல்ல விதைகளும் அதனை பயிர் செய்து உண்ணும் முறையும் தான்...

ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?


ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம்.

ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்...

தமிழகத்தை விற்றுக் கொண்டிருக்கும் பாஜக - அதிமுக...


உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?


உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும்.

ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.

இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்...

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்...

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை...

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்...

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு...

சுவாசக் கோளாறான சுவாசகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே சுவாசகாசம் உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி...

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு...

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விசயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விசயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்...

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயத்தை நன்கு புரிந்து உங்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன், உங்களைச்சூழ உள்ளவர்களின் நலத்திலும் ஒரு சிறுதளவுதானும் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்...

பாஜக மோடி ஒரு 420 என்று FIFA வரைக்கும் தெரிஞ்சு இருக்கு...


சங்கம் அமைத்துக் குடியேறும் ஒரியர்...


தரப்பட்டுள்ள புகைப்படம் திருப்பூரில் எடுக்கப்பட்டது.

இதில் கீழே உள்ள பலகையைப் பாருங்கள் 'ஒரிசா குடியேற்ற உதவி மையம்' என்று ஆங்கிலத்திலும் ஒடியா மொழியிலும் எழுதியிருப்பதைக் காணலாம்.

சென்னையில் ஒரிசா மாநிலத்திற்கான சிறப்பு தூதரகமும் விருந்தினர் மாளிகையும் ஒரு பிரமாண்ட கட்டிடத்தில் இயங்கி வருவதை ஏற்கனவே முகநூலில் பதிந்தனர்.

தற்போது தொழில் நகரங்கள் அனைத்திலும் இப்படி உதவி மையங்கள் அமைத்து தனது மக்களைக் குடியேற்றி வருகிறது ஒரிசா.

ஏற்கனவே (தமிழக வளங்களைப் பொறுத்து) தமிழக மக்கட்தொகை இருக்கவேண்டியதை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒருகோடி வடவர் குடியேறியுள்ளனர்.

தன் மாநிலத்தை நாசமாக்கிவிட்ட ஒரியர் (பிற வடவர் போல இல்லாமல்) திட்டமிட்டு முறைப்படி குடியுரிமை பெற்று குடியேறிவருகின்றனர்.

இவர்களுக்கு ரேசன், கல்வி, அரசு வேலை, சுகாதாரம், வாக்குரிமை என அனைத்தும் நாம் நமது வரிப்பணத்தில் வழங்கவேண்டும்.

இவர்கள் சம்பாதிப்பதை தமது மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பிவிடுவர்.

ஐயோ பாவம்.. கூலிதானே. போனால் போகிறது என்று நினைப்போர் வரலாற்றைத் திருப்பிப் பாருங்கள்.

நம்மை ஆளும் சிங்களவரும் தெலுங்கரும் ஒரு காலத்தில் அகதிகளாக பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்தான்...

நாகரிகம்...


காரணம் தேவையில்லை...


மனம் என்பது மனிதனுக்கு சொந்தமானதன்று.

மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ள ஒன்று.

வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் செயல்பட எந்த காரணமும் தேவை இல்லை.

பிரபஞ்சத்திற்கு வெளியே காலமோ இடமோ கடவுளோ காரணமோ இல்லை.

அனைத்தும் பிரபஞ்சத்திற்கு உள்ளேதான்.

பாழ்வெளி - பிரம்மம் - மனம் - ஆகாயம் - நெருப்பு - நீர்- நிலம் - காற்று - உயிர்கள் - மனிதன்...

பாஜக மோடி கலாட்டா...


2017-18 நிதி ஆண்டு நிலவரப்படி ரூ.1000 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ள கார்பரேட் கை கூலி பாஜக...


நாட்டின் பணக்கார கட்சியான பாஜக, கடந்த 2017-18 நிதி ஆண்டு நிலவரப்படி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியுள்ளது.

கட்சி நிதி குறித்த விவரங்களை, பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளன. பாஜக அளித்துள்ள தகவலின்படி, 2017-18 நிதி ஆண்டு நிலவரப்படி அக்கட்சி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி, 717 கோடி ரூபாய் அளவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 104 கோடி ரூபாய் அளவுக்கும் நிதி திரட்டியுள்ளன. காங்கிரஸ் கட்சி இவ்விவரங்களை இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கவில்லை.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் திரட்டியுள்ள நிதி விவரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது...

மராட்டிய ரஜினிக்கு மாமா வேலை செய்யும் தமிழக விரோத தந்திடிவி...


நோய்களில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்...


ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில் தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்
மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது.

உங்கள் மனம்தான் உங்கள் உலகம்
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

உங்கள் மனம் தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல..

உடலின் உள்பகுதி தான் மனம்..

உடல் மனத்தின் வெளிப்பகுதி
உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்.

அது மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்...

கனவு மனிதன்...


இருக்கும் சொர்க்கத்தை விட்டு இல்லாத நரகத்தை தேடுவது தான் எல்லா ஆசைகளும்...


மனிதனின் மனது ஆசை மட்டுமே கொள்கிறது.. ஆனால் வாழ விடுவதில்லை..

இருக்கும் வாழ்க்கையை மகிழ்ந்து வாழுங்கள்.. கருனையால், அன்பால்..

இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும்  உன்மையான  அன்பும், கருனையும், இருந்தால் எந்த  தீமைகளும் நடக்காது.
எதிரிகளும் இருக்க மாட்டார்கள், வீரனும் இருக்க மாட்டார்கள்.

மனிதனின் மனது மாறாத வரை இங்கே ஏதும் மாறாது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


தேசத்துரோக சட்டத்துக்கு அஞ்சாமல் அரசியல் சட்டத்தை எரித்தவர் பெரியார் - கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பக்தர்கள்...


அரசியல் சட்டத்தில்  சாதி இல்லாமல் போக அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டும்.

முதலில் காந்தி படத்தை எரிக்க வேண்டும், பின் நேரு படத்தை எரிக்க வேண்டும். அப்போதும் சாதி ஒழியவில்லையென்றால் பார்ப்பனன் ஆயிரம் பேரை கொல்ல வேண்டும், அவன் வீடுகளை கொளுத்த வேண்டும். என்று பேசி அரசியல் சட்ட எரிப்புக்கு அச்சாரம் போட்டார் பகுத்தறிவு ஆசான்..

அக்டோபர் 5,13,20 மூன்று தினங்களின் பேச்சுக்கு ராமசாமி மீது இ.பி.கோ 117,323,326,436,302 வழக்குகள் விழுந்தன.

நவம்பர் 4 ல் 'தமிழர்களே, நவம்பர் 26ல் அரசியல் சட்டத்தை நான் எப்படி எரிப்பேன் தெரியுமா..

ராட்டினத்தில் பெட்ரோல், மண்ணெண்னையை ஊற்றி எரிப்பேன்.

நீங்கள் ரத்தம் சிந்த தயாராகுங்கள்.

தூக்குமேடைக்கு தயாராகுங்கள். சட்டத்தை எரிப்பேன் என கைதாகுங்கள்.

அதற்கு தண்டனை நம் சட்டத்திலேயே இல்லை என்றார் ராமசாமி.

சென்னை அரசு இதன்பின் சட்ட எரிப்பை தடுக்க 3வருட தண்டனையுடன் தேச அவமதிப்பு தடுப்பு சட்டம் உருவாக்கியது.

நவம்பர் 26க்கு முதல் நாளே, ராமசாமி கைதாகி இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டார்.

நவம்பர் 26ல் அரசியல் சட்ட எரிப்பில் கலந்து கொண்டு 3000 பேர் தேச அவமதிப்பு சட்டம்கீழ் 3வருடம் வரையிலான தண்டனை பெற்றார்கள்.

பின் டிசம்பர் 15ல் ஈ.வே.ராமசாமி பிராமணர்களை கொல்லுவேன், கொளுத்துவேன் என பேசியதால் ஆறுமாதம் தண்டனை பெற்றார்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவயது பையன், பெண்கள், முதியோர் களி தின்றனர்.

ஜெயிலில் மலம் அள்ளினர், கொடும் வேலை செய்தனர். 20பேர் செத்தனர்.

ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்ட ஈ.வே. ராமசாமிக்கோ 20நாளிலேயே செரிமானக் கோளாறு ஏற்பட்டது. சிறையிலிருந்து சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எஞ்சிய ஐந்தரை மாதங்களும் சென்னை மருத்துவ மனையிலேயே ஓட்டினார்.

கன்னட ஈ.வே. ராமசாமி மருத்துவ மனையிலிருந்து விடுதலை ஆகும் போது இன்னும் 1500 பேர் சிறையில் கடுங்காவல் தண்டனையில் கிடந்தார்கள்.

இவ்வளவு களேபரத்திலும் கன்னட தெலுங்கர் ஈ.வே.ராமசாமி போலவே, வெட்டு குத்து வழக்கிலோ, 3000 பேர் போல தேச அவமதிப்பு வழக்கிலோ சிக்காமல் தப்பினார் மானமிகு நரி தி.க. வீரமணி..

விழித்துக்கொள் தமிழினமே...


சிவன் குகை...


புராண சம்பவங்களோடு தொடர்புடைய பழமையான தலங்கள் நமது நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை.

அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ரேசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பௌனி பிளாக் எனப்படும் குன்றுள்ளது. இந்தக் குன்றில் ஒரு குகை அமைந்துள்ளது.

ஷிவ்கோரி (சிவன் குகை) எனப்படும் இந்தக் குகைக்குள்ளே சுயம்புவாகத் தோன்றிய சிவபெருமானின் திருவுருவம் காணப்படுகிறது.

பொதுவாக லிங்க வடிவங்கள் சுயம்புவாய் முகிழ்த்ததைத் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு சிவபெருமானின் தியானக்கோல முழு வடிவமே சுயம்புவாகக் காணப்படுவது அதிசயம். சுமார் நான்கு மீட்டர் உயரம் கொண்டது!

அருகே லிங்கம், பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி ஆகியோரின் வடிவங்களும் காணப் படுகின்றன. எல்லாமே தான்தோன்றி வடிவங்கள்தான்; சிற்பியால் செதுக்கப்படாதவை.

இந்தக் குகையே அற்புதம் நிறைந்ததாக உள்ளது. அதாவது, சிவன் கையிலிருக்கும் உடுக்கை போன்ற வடிவில் உள்ளது. ஒரே நேரத்தில் 300 பேர் நுழையுமளவுக்கு குகையின் முன்புற வாயில் அமைந்துள்ளது.

போகப்போக அகலம் குறைந்து சிறிதாகி, பிறகு மீண்டும் அகன்று சென்று குன்றின் அடுத்த பகுதியில் முடிவடைகிறது.

குகைக்குள் நுழைந்து சிவனை வணங்கிவிட்டு பின்புற வாயிலில் வெளியேறிவிடலாம். இந்தக் குகையின் நீளம் சுமார் 150 மீட்டர்.

இந்தக் குகைக்குள் 33 கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். குகையின் மேற்பகுதி பாம்புத்தோல் போன்று தோற்றம் தருகிறது. சுதர்சன சக்கர வடிவம், காமதேனு வடிவம் போன்றவை இந்தக் குகைக்குள் காணப்படுகின்றன.

"நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டு'மென்று சிவபெருமானிடம் வரம்பெற்றான் பஸ்மாசுரன். தான் பெற்ற வரத்தை சோதிக்க எண்ணி சிவன் தலைமீதே கைவைக்க முயன்றான். சிவபெருமான் அங்கிருந்து தப்பியோட, பஸ்மாசுரன் விடாமல் துரத்தினான்.

இதைக்கண்ட மகாவிஷ்ணுவானவர்     மோகினி வடிவம் கொண்டு அசுரனின் எதிரில் வர, மோகினியின் அழகில் மயங்கினான் அசுரன். தந்திரமாக அவனிடம் பேசி, அவன் தலைமேலேயே கைவக்கச் செய்தார் மகாவிஷ்ணு. பஸ்மாசுரன் எரிந்து சாம்பலானான். இந்தப் புராண நிகழ்வு நடந்த இடம் இதுதான் என்கிறார்கள்.

இந்தக் குகைக்குள் வேறொரு வழியும் உள்ளது. அது அமர்நாத் குகையில் சென்று முடிவ தாகக் கூறுகிறார்கள். இதன் வழியேதான் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்களாம். தற்போது இந்தக் குகைவழியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

மகாசிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் இங்கு திரளுவார்கள். சிவன் சிலை யின்மீது, குகையின் மேற்புறத்திலிருந்து எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று யாருக்கும் தெரியாது.

சிவராத்திரியன்று இது பால்போன்ற வெள்ளை நிறத்தில் விழுந்து சிவனை அபிஷேகிப்பதும் அதிசயமே.

சித்தர்களும் ரிஷிகளும் தவமிருந்த மிகப்பழமையான இந்தக் குகைக் கோவிலை, 2003-ஆம் ஆண்டு முதல் ஒரு திருப்பணிக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார்கள்.

குன்றின்மீது ரன்சோகௌன் என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமம் வரை வாகனப் போக்குவரத்து உண்டு. அங்கி ருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துசென்றுதான் குகையை அடையவேண்டும். பேட்டரி கார் இயக்குவதற் கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

சென்னை- டெல்லி- ஜம்மு- கட்ரா வழியாக சிவன் குகை செல்லலாம். வைஷ்ணவா தேவி கோவில் வழியாகவும் செல்லலாம்...

நாட்டை சுடுகாடாக்க லைகா வின் 5ஜி திட்டம்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


கிரேக்க கணிதவியலாளரும் தத்துவவாதியுமான "ஆர்க்கிய்தாஸ்" கி.மு.405ல் தெற்கு இத்தாலியில்  நீராவி மூலம் இயங்கும் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். அதன் வடிவம் மற்றும் பண்புகளின் காரணமாக சாதனம் பறக்கும் புறாவாக அறியப்பட்டது. 'நீராவில் இயங்கும் பறக்கும் புறா, அவரது காலத்தில் மிகவும் மேம்பட்ட கண்டுபிடிப்பாக இருந்தது. ஒரு காற்றியக்கவியல் கண்ணோட்டத்தில் பறக்கும் புறா இன்றைய நவீன விமானங்களுடன் ஒத்திருந்தது.

மரத்தில் செய்யப்பட்ட வெற்று உருளை வடிவ இலகுரக உடலில்  சிறியதாக பறக்கும் புறாவை வடிவமைத்தார். இரு பக்கங்களிலும், மற்றும் அதன் பின்புறம் ஒரு சிறிய இறக்கைகளையும் அது கொண்டிருந்தது. பொருளின் முன் ஒரு பறவையின் முதுகைப் போல் கட்டப்பட்டது. அதிகபட்ச பறக்கும் தூரத்திற்கும் வேகத்திற்கும் இந்த அமைப்பு மற்றும் வடிவம் மிகவும் நேர்த்தியான ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்டது ஆகும்.

பறக்கும் புறாவின் பின்புறம் திறந்த வெளியாக இருந்தது, அதில் ஒரு பெரிய மிருகத்தின் சிறுநீர்ப்பையால் செய்யப்பட்ட பலூன் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அது ஒரு திறப்புகளைக் கொண்டு சூடான, காற்றுப்புயல் கொதிகலனுக்கு செல்லுமாறு இணைக்கப்பட்டுள்ளது. கொதிகலானது மேலும் மேலும் நீராவி உருவாக்கியபோது, ​​நீராவின் அழுத்தம் காரணமாக இறுதியில் இயந்திர எதிர்ப்பை மீறியது, வானில் பறக்க தொடங்கியது.

பறக்கும் புறாவை ஆர்க்கிய்தாஸ், ஏரோடைனமிக்ஸ் மற்றும் உந்துசக்தியில் இயக்கும் முறையை பற்றிய அறிவைப் பெற்றிருப்பது முன்கூட்டியே பெற்றிருப்பது ஆச்சரியம் தான்.

ஒரு கட்டத்தில் அந்த விமானம் 200 மீட்டர் (656.1 அடி) உயரம் பறக்க முடிந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு (1903) ரைட் சகோதரர்களின் முதல் விமானம் 37 மீட்டர் தூரத்தில் இருந்தது என்பதை நாம் கருத்தில் கொண்டால், அது மிகவும் அசாதாரணம் மற்றும் ஆச்சரியம் என்பது விளங்கும்.

இது ஆதிகாலத்தில் அறியப்பட்ட முதல் ரோபோவாகும்.
அதுமட்டுமல்ல, பறவைகள் எவ்வாறு பறக்கிறது என்பதை ஆராயும் விஞ்ஞானியின் முதல் ஆய்வுகளில் ஒன்றாகும் இது..

எல்லா பிறப்பும் உருவாவதற்க்கு ஒருவகை அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த பிறப்பாக இருக்கிறது...


ஆனால் கடைசி வரை மனிதனால் மட்டும் இந்த மூன்றையும் செயல் படுத்த முடிவதில்லை...