21/12/2018

தமிழ்ப் புத்தாண்டு குழப்பத்திற்குத் தீர்வு...


தமிழர்களிடம் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை. இருந்தாலும் புத்தாண்டு என்பது இருந்திருக்க வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்த இனமல்லவா?

அதனால் பல நாட்காட்டிகள் நடைமுறையில் இருந்தன.

கதிரவனின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி..

நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி..

விண்மீன்களைப் பின்பற்றி ஒரு நாட்காட்டி..

தற்போது தமிழ் மாதங்களும் பஞ்சாங்க ஆண்டுகளும் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது தெலுங்கர் ஆட்சியில் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹேவிளம்பி என்பது தமிழில் பொற்றடை என்று வழங்கப்பட்டது.

இதற்கு சான்று 'விவேக சிந்தாமணி' என்ற நூல் 1400 களில் எழுதப்பட்டது,
அதில் 60 ஆண்டுகளும் (தமிழில்) வருமாறு ஒரு பாட்டு உள்ளது.

ஆக நாரதர் - கிருஷ்ணர் ஆபாசக்கதையை (அதை எழுதியதும் வந்தேறிகளே) திராவிடம் மூலம் பரப்பி அதை ஆரியப் புத்தாண்டு ஆக்கி, தமிழர்கள் தற்போதும் பின்பற்றும் (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட) தமிழ் (கதிரவன்) நாட்காட்டியை நாமே எதிர்க்குமாறு செய்து நம்மை முட்டாளாக்கி வருகின்றனர்.

நாம் எந்த நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும்?எது நமது புத்தாண்டு?

இதையெல்லாம் தமிழர்நாடு அமைந்ததும் வானியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவை அமைத்து முடிவு செய்ய வேண்டும்.

அதுவரை குழம்பாமல் அடித்துக் கொள்ளாமல்  கதிரவன் புத்தாண்டையே பின்பற்றுங்கள்.

தற்போதைய பஞ்சாங்க ஆண்டுகளின் உண்மையான (தமிழ்ப்) பெயர்களை அண்ணன் மேகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார்...

அது பின்வருமாறு,

01. பிரபவ -நற்றோன்றல்
02. விபவ - உயர்தோன்றல்
03. சுக்ல - வெள்ளொளி
04. பிரமோதூத - பேருவகை
05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்
06. ஆங்கீரச - அயல்முனி
07. ஸ்ரீமுக - திருமுகம்
08. பவ - தோற்றம்
09. யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈஸ்வர - ஈச்சுரம்
12. வெகுதானிய - கூலவளம்
13. பிரமாதி - முன்மை
14. விக்கிரம - நேர்நிரல்
15. விஷு - விளைபயன்
16. சித்திரபானு - ஓவியக்கதிர்
17. சுபானு - நற்கதிர்
18. தாரண - தாங்கெழில்
19. பார்த்திப - நிலவரையன்
20. விய - விரிமாண்பு
21. சர்வசித்து - முற்றறிவு முழுவெற்றி
22. சர்வதாரி - முழுநிறைவு
23. விரோதி - தீர்பகை
24. விக்ருதி - வளமாற்றம்
25. கர - செய்நேர்த்தி
26. நந்தன - நற்குழவி
27. விஜய - உயர்வாகை
28. ஜய - வாகை
29. மன்மத - காதன்மை
30. துன்முகி - வெம்முகம்
31. ஹேவிளம்பி - பொற்றடை
32. விளம்பி - அட்டி
33. விகாரி - எழில்மாறல்
34. சார்வரி - வீறியெழல்
35. பிலவ - கீழறை
36. சுபகிருது - நற்செய்கை
37. சோபகிருது - மங்கலம்
38. குரோதி - பகைக்கேடு
39. விசுவாசுவ - உலகநிறைவு
40. பரபாவ - அருட்டோற்றம்
41. பிலவங்க - நச்சுப்புழை
42. கீலக - பிணைவிரகு
43. சௌமிய - அழகு
44. சாதாரண - பொதுநிலை
45. விரோதகிருது - இகல்வீறு
46. பரிதாபி கழிவிரக்கம்
47. பிரமாதீச - நற்றலைமை
48. ஆனந்த - பெருமகிழ்ச்சி
49. ராட்சச - பெருமறம்
50. நள - தாமரை
51. பிங்கள - பொன்மை
52. காளயுக்தி - கருமைவீச்சு
53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்
54. ரௌத்திரி - அழலி
55. துன்மதி - கொடுமதி
56. துந்துபி - பேரிகை
57. ருத்ரோத்காரி - ஒடுங்கி
58. ரக்தாட்சி - செம்மை
59. குரோதன - எதிரேற்றம்
60. அட்சய - வளங்கலன்.

மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு...

சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்...

திருந்தி விடு மனிதா...


அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு...


கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை, என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள், வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும். சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு, நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.

இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.

உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.

இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுசய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் பார்வை, தோசங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள்...

இதன் முக்கிய குணம் விசத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.

சிறப்பாக பாம்பு விசங்கள், தேள், பூரான் விசங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும், மலம் கழியும் உடனே விசமும் முறிந்து விடும்...

இயற்கையை காப்போம்...


முள்ளங்கியின் நன்மைகள்....


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும் (vitamin) தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்...

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், எரியம் (phosphorus) அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் தடிமன் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் தடிமன், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் சிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது...

மனிதநேயம்...


பொன். மாணிக்கவேல் மீது 15 போலீசார் புகார்...


சென்னை: 'மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், 15 போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர்.

பொன் மாணிக்கவேல் மீது 15 போலீசார் புகார்...

தமிழக ரயில்வே, ஐ.ஜி., யாக பணியாற்றி வந்த, பொன் மாணிக்கவேல், நவ., 30ல் ஓய்வு பெற்றார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவையும், அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, சென்னை உயர் நீதிமன்றம், ஓராண்டுக்கு நியமித்து உள்ளது.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும், கூடுதல், எஸ்.பி., இளங்கோ உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட போலீசார், டி.ஜி.பி., அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:

அயல் பணி யாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகிறோம். எங்கள் பிரிவின் சிறப்புஅதிகாரியான, பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்குகளில், உரிய ஆவணங்கள், சாட்சி கள் இல்லாமல், சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என, கூறுகிறார்.

மறுத்தால், 'உங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்' என, மிரட்டுகிறார். எங்களுக்கு பணி மாறுதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை, டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பொன் மாணிக்கவேல் மீது, கூடுதல், எஸ்.பி., - டி.எஸ்.பி., - போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர்,டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, புகார் அளித்துஉள்ளனர். அதன் மீது, உரிய நடவடிக்கை எடுக்க, பரிசீலிக்கப்படும் என,கூறப்பட்டுள்ளது.

டி.ஜி.பி.,க்கு கடிதம்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு  இளமை துடிப்புடன் உள்ள போலீசாரை பணி அமர்த்துவற்கான வேலையை, பொன் மாணிக்கவேல் துவக்கி உள்ளார். 'இ - மெயில்' வாயிலாக, டி.ஜி.பி., மற்றும் மாவட்ட, எஸ்.பி., உள்ளிட்ட, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், '30 முதல், 50 வயதுக்கு உட்பட்ட, சிறப்பு எஸ்.ஐ., - தலைமை காவலர், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள், 46 பேரை, அயல் பணியாக, ஆறு மாதங்களுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணி அமர்த்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்...

தமிழ் ராக்கர்ஸ் பார்ட்னர் விஷால் - வெளியானது தகவல்...


நாளை முதல் தமிழகத்தில் பலத்த மழை.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை....


வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர வடகிழக்கு பருவமழை காலத்தில் பருவக்காற்று வீசும். மேலும் தொடர்ந்து 21-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும், 22-ம் தேதி அநேக இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள் ஆரம்பம்...


விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?


அக்காலத்தில் மின்சாரம் இல்லை..

சிறு அகல்விளக்கு, வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது..

அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறு பொருட்கள்  (விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும் பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம்..

இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒரு வேளை நம் கண்களுக்குப் புலப்படலாம்..

எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்...

ஆனால் இங்கு நாகரீக மனிதக்கு...


முதலில் யார் வருவார் என பிரிவினையும் சுயநலத்தையும் சிறுவயதிலே கற்பித்தல் மூலம் ஊட்டப்படுகிறது...

நாயர்களின் பூர்வீகம் கேரளம் அல்ல... மாறாக நேபாளம் ஆகும்...


உஸ்பெக், கசக் மற்றும் ஆப்கான் பகுதிகளைக் கொண்டு அமைந்திருந்த பகுதியே சித்தியா..

இந்த சித்தியாவில் இருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலவித நகர்வுகள் இந்திய தீபகற்ப பகுதிகளை குறிவைத்து நேர்ந்தன..

இன்றைய வடுகர்கள் இப்பகுதிகளைச் சேர்ந்தோர் ஆவர்..

இப்படியான வடுகர்களின் ஒரு பிரிவினர் நேபாளத்தில் குடியேறினர், இவர்களே நேவர் என்ற நாயர்கள் ஆவர்..

நேபாளத்தில் மங்கோலியர்களின் கை ஓங்கியதின் விளைவாக அங்கிருந்து தப்பிய நாயர்கள் சாதவாகனர்களின் படைகளில் இடம்பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொண்டை மண்டலம் அடைந்தனர்..

அங்கு பல்லவர்களின் படையணியில் வலிமையாக இருந்த படையாட்சி.. நாயர்களை எதிர்த்து விரட்டியதால் அவர்கள் மேலை சாளுக்கியத்தின் தென் பகுதியில் குடியேறினர்..

கேரளத்தில் (சேர நாட்டில்) வில்லவர் வலிமை குன்றிய நேரத்தில் இந்த நாயர்கள் பெரும்தாக்குதலில் இறங்கி சேர நாட்டினைக் கைப்பற்றினர்.

இவர்கள் பல்வேறு பகுதிகளில் மாறி மாறி வாழ்ந்தமையால் இவர்களுக்கென்று பொது மொழி இல்லாமற்போனது.

பாகதம், தெலுங்கு, துளு, கன்னடம் எனத் துவங்கி இறுதியில் சேரநாட்டின் தமிழ் மொழியைக் கைப்பற்றி அதனை மணிபிரவாளம் ஆக்கி இன்று சேர நாட்டினை ஆண்டும் வருகின்றனர்.

இவர்கள் அடுத்துக் கெடுக்கும் நச்சினத்தார் ஆவர்...

என்னமோ பன்னுங்கபா நான் முடிவில்லா பாதையை நோக்கி போரேன்...


பாதை தெரியும் போது சொல்கிறேன்...

உடனடியாக பதவி விலக வலியுறுத்தல், விஷாலுக்கு எதிர்ப்பு சங்க அலுவலகத்தை பூட்டி பட அதிபர்கள் போராட்டம்...


தமிழ்ப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலை கண்டித்து இன்று காலை தயாரிப்பாளர்கள் சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

படஅதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்வி.சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பூட்டு போட்டனர்.

இவர்களை சமாதானம் செய்ய செயலாளர் கதிரேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் யாரும் சமாதானம் ஆகவில்லை.

நடிகர் விஷால், நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கிறார். சமீபகாலமாக இவருக்கு எதிராக மற்ற தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக, மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் தொகையை முழுமையாக கொடுக்காதது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது. செயற்குழு ஒப்புதல் இல்லாமல் விஷால் தனிச்சையாக முடிவெடுப்பது, இளையராஜா பாராட்டு விழாவை ஒப்புதல் இல்லாமல் நடத்துவது, கியூப், யு.எப்.ஓ., நிறுவனங்கள் பிரச்னை, பைரசியை ஒழிக்காதது, பிலிம் சேம்பரில் உள்ள அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் செயல்படாமல், தனியாக மாதம் ரூ.3 லட்சம் வாடகை கொடுத்து செலவு செய்வது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் அழகப்பன் கூறுகையில்...

தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு தொகையாக ரூ.7.80 கோடி இருந்தது. அந்தப்பணம் பற்றி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். இதிலிருந்தே அந்த பணம் இல்லையென்று தெரிகிறது. எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்வதற்கு எதற்கு தலைவர் பதவி. சின்ன தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பினர். தமிழ் ராக்கர்ஸ் உடன் விஷாலுக்கு கூட்டு இருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரித்தீஷ் பேசுகையில், விஷால் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமையாகிவிட்டார். ஓராண்டுக்குள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் பூட்டு போடுங்கள் என விஷால் சொன்னார். அவர் சொன்னபடி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டோம் என்றார்...

குழந்தைகளின் கல்வியை மதிப்பெண்களால் ஒப்பிட்டால் உங்களை விட ஒரு முட்டாள் எவருமில்லை...


மண்பாண்டத்தின் மகிமை...


மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.

உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.

நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.

உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.

தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும் போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...

பாஜக டூபாக்கூர் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறது....


மன ஒருமைப்பாடு வேண்டுமா..?


நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டு விரலை நேராகப் பிடித்தால் மனதில் ஒரு வகை உணர்வு தோன்றும்.

அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும்.

அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா?

இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

குங்குமம் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும்.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.

நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது.

மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும்.

ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு.

எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.

இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறை வழிபாடுகள் மூலம் அடைகிறோம்...

பாஜக எச். ராஜா சர்மா கலாட்டா...


இந்த பூமி முழுவமே மனிதர்கள் அன்பாலும் மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் இருந்தால் எப்படி இருக்கும்?


இந்த பிரபஞ்சமே தன்னை மெய் மறந்து விடும்,

ஓவ்வொரு இயற்கையும் மனிதர்களுக்கு கைகோர்த்து  நிற்க்கும்.

ஓவ்வொரு மேகங்களும்  ஆனந்த கண்ணீரை  மழையாக கொட்டும்.

ஓவ்வொரு மரங்களும் ஆடிபாடி மகிழும்.

ஓவ்வொரு பறவைகளும் சந்தோசத்தில் குதுகலிக்கும்.

நீரும் கூட மனிதர்களிடம் அன்பை பரிமாறி அமைதியாக வழிகொடுக்கும்.

புயலும் கூட ஆனந்த காற்றாக கரைந்து விடும்.

ஓவ்வொரு இயற்கையும் மெய்மறந்து போகும் மனிதனின் அன்புக்கு..

நடக்குமோ?
நடக்கும்.
காலத்தின் கட்டாயம்..
இயற்கையின் விதி...

தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள்...


பண்டைத் தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள் பல கூறப்படுகின்றன.

அவை: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண் விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலியன.

இவற்றின் பெயர்கள் யாவும் உருவத்தாலும், ஒலியாலும் அமைந்தவையாகும்.

இவற்றுள் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா என்பவை இசைப்பாடலுக்குக் பக்க வாத்தியங்களாக உள்ளவை. இவை அகமுழவு எனப்படும்.

தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பவை மத்திமமான கருவிகளாகும். இவை அகப்புற முழவு எனப்படும்.

சல்லிகை, கரடிகை என்பவை ஓசையினால் பெயர் பெற்றவை. மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்ற பெயர் உண்டாயிற்று. சல் என்னும் ஓசையையுடையதால் சல்லிகை என்று பெயர். கரடி கத்தினாற்போல் ஓசையுடமையால் கரடிகை என்ற பெயர்.

இடக்கை, ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இடக்கையால் வாசிக்கபடுவதால் இடக்கை என்றபெயர் பெற்றது. ஆவின் தோலால் போர்த்தப்பட்டதால் ஆவஞ்சி என்ற பெயரையும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் பெயர் உண்டாயின.

உறுமல் ஒலியை எழுப்புவது உறுமி. பம்பம் என்று ஒலிப்பது பம்பை. முர் முர் என்று ஒலிப்பது முருடு. மொகு மொகு என்று ஒலிப்பது தமருகம்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசு ஆகும். இது வீரமுரசு, கொடை முரசு, மண முரசு, என்று மூவகைப்படும். போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீர முரசாகும். புலியோடு போராடி, அதனை தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்திச் செய்யப்படுவது மயிர்கண் முரசம் என்று நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்களத்தில் வீரவெறியூட்டும் தோற்கருவிகள் பல இருந்தன. அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். இவ்விசைக்கருவிகள் யாவும் சேர்ந்து முழங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர் வெறிக்கொண்டு செருக்களம் நோக்குவர்.
சிலப்பதிகாரத்தில் 30 வகையான தோற்கருவிகள் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் வல்லோசையுள்ள வன்மைக் கருவிகள் 14; வன்மையுமின்றி மென்மையுமின்றிச் சமமான ஓசையுள்ளவை நான்கு, மெல்லோசையுள்ளவை 12 என வகுத்து, அவற்றையே உத்தம கருவிகள், அதமக் கருவிகள் என்று வகுத்துக் கூறப் பெற்றுள்ளன.

இவ்வாறு வகுக்கப் பெற்றுள்ள பிரிவுகளில் மிக்க வன்மையும், மிக்க மென்மையுமின்றி, சமமான ஓசையுடைய நான்கில் ஒன்றாகவும்,உத்தமமான கருவியாகவும் கொள்ளப் பெற்றுள்ளது 'மத்தளம்' என்ற தோற்கருவியாகும்.

மத்தளம் என்னும் தோற்கருவியைச் செய்வதற்கு வேங்கை, கருங்காலி, பலா, சிலை, மலையாத்தி, வேம்பு, செம்மரம் என்ற 7 வகை மரங்களும் ஏற்றவை. இவற்றுள் ஒரே வகை மரத்தில் 48 விரல் நீளம், இடப்புறத்தில் 14 விரல் அகலம், வலப்புறத்தில் 13 விரல் அகலம், வட்டம் 1/2 விரல் கனமும் உடையதாக அமைத்து மத்தளம் செய்யப் பெற வேண்டும் என்றும், மரத்தினால் செய்யப்பெற்ற அதன் இருப்புறங்களும் தோலால் மூடப் பெறுதல் வேண்டும் இழுத்துக் கட்டுதல் வேண்டும் என்றும் கூறப்படும் செய்திகளைப் பின்வரும் பாடல்கள் விளக்கும்

"வேங்கை கருங்கா வீறாம் பலாவுசிலை
தாங்கும் மலையாத்தி தானாகும்- பாங்கு நிம்பம்
செம்மரமும் ஆமே சிறப்புடைய மத்தளத்துக்கு
இம்மரம் என்று இயல்பு"

"உண்மை திகழும் விதிவத்துற்ற மரத்தால் நாற்பத்
தெண்விரலின் நீளம் இடப்புறத்தில்- நண்ணும்
பதினால் விரல் வலம்பாற் பண்பு பதின்மூன்றாய்
மதியாரை விரற் பிண்டமாம்"

இம்மத்தளமும் இக்காலத்துள்ள மிருதங்கமும் பெரும்பாலும் ஒன்றே என்று கூறலாம். இரண்டும் உருவ அமைப்பில், கையாளும் முறையில் ஒத்துள்ளன. ஆனால் ஒலிப்பதில் மட்டும் வேறுபாடு உண்டு. மத்தளம் மிருதங்கத்தை விட ஓசை மிக்கது. மத்தளம் வெளியிடங்களில் வாசிக்க ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு அதில் இடமில்லை. மிருதங்கத்தின் ஓசை மென்பையானது. அடக்கமான இடங்களில் வாசிப்பதற்கு ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு இடமுண்டு. எனினும், வடிவத்திலும், உருவாக்கும் வகையிலும், கையாளும் முறையிலும் இரண்டும் ஒத்துள்ளன...

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் மக்கள் விரோததுறை எனும் காவல்துறை...


தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்...


பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்...

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் : சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் : நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி : கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம்: சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு: நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்...

என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாமக போராட்டம் அறிவிப்பு...


பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது...


பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்..

சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லி வைத்தாலும்..

அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை..

நாளிடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர்..

ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது..

நீண்ட நேரம் கால் மீது கால் வைத்து உட்காரும் பெண்கள் இனிமேலாவது கவனமாக இருங்கள்....

தமிழர்களுக்கு மட்டும் ஆட்சிக் கட்டிலில் இருப்பவனிலிருந்து மீடியா வரை அத்தனைபேரும் துரோகியா இருக்கான்....


கலையனும் எல்லாரையும் கலையனும்...

திராவிடத்தின் ஆணிவேர்...


பார்ப்பனர்களை தமிழர் என்று நிறுவுவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்?

பார்ப்பன வெறுப்புதான் திராவிடத்தின் ஆணிவேர்.

முன்னேறிய தமிழ்ச் சமூகமான பார்ப்பனர் மீதான பிறரது பொறாமையை மூலதனமாக வைத்து தான் திராவிடம் இங்கே நுழைந்து வந்தேறிகள் அந்த இடத்தைப் பிடிக்க உதவியது.

பார்ப்பனர் தமிழர் என்பதே உண்மை.
அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

திராவிடம் எதிர்ப்பது பார்ப்பனரையே...
பிராமணரை அல்ல...

சிரியா போர் காரணம்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பெரு நாட்டில் நாஸ்கா நகரின் அருகே மர்மமான மம்மிக்கள் மூலம் வேற்றுகிரக உயிர் பற்றிய ஆதாரத்தை கண்டுபிடித்திருப்பதாக ஒரு சுயாதீனமான அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகின்றனர். இந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மனித தோற்றத்தின் கதைகளை மாற்றியமைக்கலாம்.

முதல் பார்வையில், அது ஒரு சாதாரண மனித உடல் போல தோற்றமளித்தது, ஆனால் ஒவ்வொரு உடல் பகுதியிலும் நெருக்கமாகப் பார்த்தபோது, பல ஆச்சரியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. "உதாரணமாக, "நீண்டு மண்டை ஓடுகள், பரந்த கண்கள், சிறிய மூக்கு, காதுகள் அற்ற, மூன்று விரல்கள் கொண்ட கை கால்கள், மற்றும் அசாதாரணமான இடுப்பு எலும்பு அமைப்பு கொண்ட  மர்மமான மனித உருமாற்றம் மம்மிக்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், எக்ஸ்ரே கதிர்கள் மூலம் எலும்புகள் கூம்பு வடிவத்தில் மேல் பகுதியிலும், இடுப்பு கூண்டில் அரைகுறையான விலா எலும்புகள் மனிதர்களின் விந்தணு கட்டமைப்பிலிருந்து இந்த உடல் வேறுபடுவதாக கூறுகின்றனர்.
அவற்றின் உடல்கள் வெண்மையான பொருளால் மூடப்பட்டிருந்தாகவும், இது மம்மியின் பாதுகாப்புக்கு அணியப்பட்டதாக கூறப்படுகிறது.
உடலின் கார்பன் டேட்டிங் மாதிரிகள் கி.மு. 245 - 410 இடையே இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த மனித உருமாதிரியானது 23 குரோமோசோம்களைக் கொண்டுள்ளது, இப்போது அனைத்து குரோமோசோம்களும், அனைத்து அமினோ அமிலங்களும் அமைந்துள்ளதைப் போலவே, தற்போது தென் அமெரிக்காவில் வாழும் சிலருக்கு ஒத்துப் போகிறதா,  அல்லது ஆப்பிரிக்கா மற்றும் வேறு இடங்களில் வேறுபாடுகளும் உள்ளதா?  என ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த மம்மி உடலைப் பற்றி பல கேள்விகள் உள்ளன: இது உண்மையாக இருந்தால் மறந்துபோன ஒரு மனித இனத்தின் உதாரணம் இதுதானா? தனிப்பட்ட அம்சங்கள் குறைபாடுகள் - வளர்ச்சி இது மனித இனம் அல்லாத மனிதர்களின் ஆதாரமாக இருக்கலாம்? உண்மையாக நிரூபிக்கப்பட்டால், மனித கண்டுபிடிப்புகள் மற்றும் பழங்கால கடந்தகால ஆய்வு பற்றிய இந்த கண்டுபிடிப்பு என்ன? இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க, கண்டுபிடிப்பை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த மம்மிகள் உடலுக்கு அருகில் இருக்கும் பெட்ரோகிளிஃப்ஸ் பாறை சித்திரங்கள் மற்றும் மண்பண்டங்களில் மூன்று விரல்களைக் கொண்ட மனித உருமாற்றங்களைக் காட்டுகிறது. தென் அமெரிக்க பண்டைய நாகரிகங்களில் மூன்று-விரல்களின் புள்ளிவிவரங்கள் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இந்த சித்திரங்கள் உண்மையை கண்டதன் அடிப்படையாக இருந்திருக்க முடியுமா?

நியூசிலாந்தில் இருக்கும் நேகா தாகு கலாச்சாரத்திலும் இந்த மூன்று விரல் கலைப்படைப்புகள் காணப்படுகின்றன. அவர்கள் தங்கள் அஞ்சல் தலைகளிலும் இதனை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் மூன்று விரல்களிலும் கால்விரல்களிலும் கடவுளை எவ்வாறு வழிபட்டு வந்தார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

இப்போது, ஒரு ரஷ்ய 'நிபுணர்' அவர் டி.என்.ஏ. சோதனைகளை செய்ததாக கூறுகிறார், அவர்கள் மனிதர்களல்ல என்பதை நிரூபிக்கின்றனர்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பெடரல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பயோபிசிக்ஸ் இன் 
பேராசிரியர் டாக்டர் கோன்ஸ்டன்டின் கொரோட்கோவ், மம்மிகள் 'வேற்றுகிரகவாசிகள்' என்று கூறுகிறார்.

சில சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள், இந்த குழு கண்டுபிடித்த மூன்று விரல் மம்மிகள், பூமியின் வேற்றுகிரக பார்வையாளர்களின் எஞ்சியுள்ளவர்களாக இருக்கலாம்! அல்லது மனித வேற்றுகிரக கலப்பினத்தின் சாட்சியாக இருக்கலாம்.  (Reptilians) என நினைக்கிறார்கள்...

கோவில் பிரசாதத்தில் விஷம்...


ஆக்ஞா தியானம்...


ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச் செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்.

ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத் தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள்.

சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம் மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்.

அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப் பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே
வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம்..

இதை யோகா இடங்களில் சொல்லித் தருவார்கள்.

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்ய வேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்ய வேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத்
தலை வேதனையில் கொண்டு வந்து
விட்டுவிடும்.

இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்...