28/07/2018

சிலுவை_யுத்தங்கள் -2...


சிலுவை யுத்தங்களின் அறிமுகத்தை முதற் பகுதியில் பார்த்தோம் பிற்பகுதியை இரண்டில் காண்போம்.

உலகின் எப்பிரதேசத்திலிருந்தும் கிறிஸ்துவர்கள் ஜெருஸலம் வந்து பைதுல் முகத்தஸைத் தரிசிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்களின் முதலாவது கிப்லா அமைந்துள்ள ஜெருஸலத்தை அண்டிய பகுதிகளில் கிறிஸ்துவப் பாதிரிகளுக்கும் மதகுருக்களுக்கும் முஸ்லிம் கலீபாக்களினால் சிறப்பு விடுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

கி.பி− 969 இல் பாதிமிய்யரின் ஆதிக்கத்துக்குக் கீழ் இப்பிரதேசம் வந்ததன் பின்னால் மேலும் பல வசதி வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டன.

கிறிஸ்தவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு வழங்கிய பாதிமிய்ய ஆட்சியாளர்கள் அவர்களின் வர்த்தகத் துறைக்கும் பெரும் ஊக்கமளித்தனர்.

இவ்வளவு உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தும் ஜெருஸலம் தொடர்ந்து முஸ்லிம்களின்

அதிகாரத்தின் கீழ் இருப்பது இவர்களின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

எப்படியாவது இதனைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற உள்நோக்குடனேயே அவர்கள் செயல்பட்டு வந்தனர்.இதன் வளர்ச்சிக்கட்டம் தான் அவர்களை முஸ்லிம்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடவைத்தது.

இவ்வாறு இவர்கள் இப்போரில் ஈடுபட பல காரணங்கள் உள்ளன.

மேலும் இப்போருக்கான காரணங்களை அடுத்த அத்யாயத்தில் காண்போம்.

- தொடரும்...

புத்தருக்கு முன்பு தமிழகத்தில் எந்த இனம் வாழ்ந்தது...


வியக்க வைக்கும் வரலாற்று குறிப்பு...

இந்திய வரலாறு திரித்து எழுதினாலும் அல்லது வேதங்களின் அடிப்படையில் தான் உருவாக்க வேண்டும் என்று முழங்கினாலும்.

இந்தியா புத்தருக்கு முன்பு எப்படியாக இருந்தது என்ற கேள்விக்கு பலர் பலவாறாக பதில் தந்துள்ளனர்.

வால்காவில் இருந்து கங்கை வரை புத்தகம் இந்திய வரலாற்றை பேசும் புத்தகம் தான் ஆனால் இதில் முற்றிலுமாக தமிழ் இனத்தை புறக்கணித்தும் தமிழர்களை காட்டுமிராண்டி இனமாகவும் தான் சித்தரித்துள்ளார்.

காரணம் வேதங்களின் சரித்திர அடிப்படையில் உருவான இந்திய வரலாற்று நூல் இது. .

பெரும்பாலான இந்துமத வேதங்களே புத்தர் காலத்திற்கு பின்னாடி உருவானது தான் என்ற உண்மையை மறந்து எழுதியுள்ளது கொஞ்சம் ஜீரணிக்க முடியாத விஷயம் தான்.

அப்போ புத்தருக்கு முன் யாராக இருந்தது இந்தியா..

(இந்தியா அப்போது முழு இந்தியாவாக இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்)..

முகலாயர் ஆட்சியில் ஷார்ஷாவால் பல சமஸ்தானங்களை ஒன்று திரட்டி கொடுப்பதை கொடுத்து சாலைகளை முதன் முதலாக முழு இந்தியா முழுவதும் அமைத்து ஒன்று திரண்ட இந்திய மக்கள் இவர்கள் என்று அறிவித்தான்.

அப்படி பார்த்தால் புத்தர் காலத்திற்கு முன்பு இந்த இந்தியா பல குழுக்கள் வாழும் பிரதேசம்.

ஒரே தலைமை இல்லை.

இந்த காலகட்டத்தில் சாதி உருவாக்கபடவில்லை.

அப்படி சாதிகள் இல்லா தமிழகத்தில் யார் வாழ்ந்து வந்தார்கள் தெரியுமா?

நிச்சயமாக உறுதியுடன் நான் கூறும்  வார்த்தையை பதிவிட்டுக் கொள்ளுங்கள்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஒரே இனம்.

நாகர்கள்.. (நம் முன்னோர்கள்)..

இந்த நாகர் இனம் தான் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வரும் இனம்,

நாகர்கள் வாழ்ந்த பட்டிணம் (இடம்)
நாகப்பட்டினம் ஆனது..

நாகர்கோவில் வரலாறும் இவர்களே..

வேதங்களை வைத்து இவர்களை பழிக்க தொடங்கியது பிற்காலத்தில் வந்த ஆரிய இனம்,

இவர்களை ஏற்றுக்கொண்டவர்வகளை சமாதானமும்..

ஏற்காதவர்களை சம மக்களை வைத்து பிற்காலத்தில் இவர்கள்
அழிக்கப்பட்டார்கள்.

அப்படி தப்பியோடி உயிரை காப்பாற்றிக்கொள்ள பல நாட்கள் பயணப்பட்டு ஒரு மலையின் உச்சியில் தங்கள் வாழ்க்கையை துவங்கினர்
அந்த இடம் தான் நாகாலாந்து.

இவர்கள் அரச பரம்பரையாகவும் வாழ்ந்து வந்தனர்.

மருதன் இளநாகனார்
முரஞ்சியூர் முடிநாகனார்
என்று பல புலவர்களும் இருந்துள்ளனர்.

இலங்கை வரலாற்று நூல்  மகாவம்சத்திலும் இவர்கள் பற்றிய குறிப்பு உண்டு.

இவர்கள் பழங்குடியினர் என்று மட்டுமே பலர் குறிப்பிடுகிறார்.

அது தவறு பழங்குடி தமிழர்கள் என்று குறிப்பிட வேண்டும்.

அம்பேத்கர் கருத்து ஒன்று உள்ளது...

அதாவது இந்த நாகர் இனம் மக்கள் பண்பாட்டு ரீதியாக அழிக்கப்பட்டு திசை தெரியாமல் தப்பித்து ஓடினர் பலர்..

அதில் சிலர் இன்றைய மங்கோலியாவில் தஞ்சம் புகுந்தனர் என்றும் மங்கோலியாவின் மூதாதையர்கள் நம் தமிழர்கள் தான் என்றும் ஆய்வு ரீதியாக குறிப்பிடுகிறார்.

அதே மங்கோளிய இனத்தில் இருந்து வந்த தி ஜி மூ இனத்தை சேர்ந்தவர் தான் முகலாய மன்னர் பாபர்.

எப்படி சுற்றியுள்ளது தமிழ் இனம் பாருங்கள்.

இதே நேரத்தில் இங்கு மிச்சம் இருந்த நாகர்களையும் கடவுளாக உயர்தியது ஆரியர்கள்.

காரணம் அந்த இனத்தை அழிக்க..

புரிய முடிகிறதா ?

நாகம்மா என்று கூறும் கடவுளின் ஆரம்ப வரலாறு கூறுகிறது.

நாகப்பாம்பு வழிபாடு எல்லாம் இதான்.

நாகர்கள் இனத்தில்  உள்ள இருவரை தேர்தெடுத்து அவர்கள் கடவுள்கள் என்று கட்டவிழ்த்து பிண்டம் வழியாக சென்று வந்தவர் என்றாகி அந்த இனமே கடவுளின் இனம் என்றாக்கி ஒரு கற்பனை கதாபாத்திரம் உருவாக்கி பாதி உடல் மனிதம் பாதி உடல் பாம்பு வடிவமாக உருவாக்கி.

அந்த இனப்பெண்களை யாரும் திருமணம் செய்ய வேண்டாம் கடவுளின் பிள்ளையை திருமணம் செய்ய நமக்கு திராணி இல்லை என்று கட்டவிழ்த்து மீதமுள்ள இனத்தையும் அழித்தது ஆரியம்,

ஏற்கனவே இவர்கள் எப்படி கடவுளாக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை தொடராக பதிவிட்டுள்ளேன் பழைய பதிவை பாருங்கள்.

இதற்கு ஆதாரமாக விளங்கும் இன்றும் நாகப்பட்டினத்தில் நாகப்பாம்பை வணங்கி அதற்கு பிரமாண்ட கோவில் உள்ளது.

அதை காணும் போது ஒரு இனத்தின் அழிப்பு தான் கண்களில் மிளிர்கிறது.

நீங்கள் கூறும் எந்த சாதியானாலும் தலித்தாக இருந்தாலும் வன்னியர் முதலியார் செட்டியார் பறையர் கள்ளர்கள் இப்படி எதுவானாலும் இத்த இனத்தின் சொச்சத்தில் இருந்து உருவானவை தான்..

ஜீரணிக்க கடினமாக இருந்தாலும் இதுவே உண்மை..

நம் எல்லா சாதியினரின் மூதாதையர்கள் நாகர்கள் தான்...

சிலுவை யுத்தங்கள் - 1...


அறிமுகம்...

எனதருமை சகோதரர்களே நமது இஸ்லாமிய சமூகம் எத்தனையோ இன்னல்களை கடந்து வந்துள்ளது. அதில் கோரமானதும் மனிதாபிமானமற்ற ஒரு வரலாற்று நிகழ்வு என்றால் அது சிலுவைப் போர்கள் தான்.

மேலும் இப்பதிவின் மூலம் சிலுவை வீரர்களின் உண்மை முகத்தையும், யூதர்களின் செயல்பாட்டையும், அரசியல் ரீதியாகவும் பார்க்கவுள்ளோம்.

சிலுவை யுத்தங்களின் தொகுப்புகளை பற்பல் புத்தகங்களின் துணைக் கொண்டு பதிவிடப் போகிறேன். இதனால் இப்பதிவில் வரும் வரலாறுகள் அனைத்தும் அதன் மூல ஆசிரியர்களுக்கே சொந்தமானது என்பதனை கவனத்தில் கொண்டு நாம் பாதையைத் தேடி பயணத்தைத் தொடரலாம்.

சிலுவை யுத்தங்கள் என்பது கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பைத்துல்அக்ஸாவை கைப்பற்றி, முஸ்லிம்களை அவர்களின் மதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தோற்கடித்து இஸ்லாமிய கிலாஃபத்தை அடித்து நொருக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

இந்தப் போர்களில் ஈடுப்பட்ட ஐரோப்பிய வீரர்கள் இது கிறிஸ்துவர்களின் புனிதப்போர் என அடையாளம் காட்டுவதற்காக சிலுவை அடையாளங்களைத் தமது ஆடைகளில் எழுதிக்கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டதனால் சிலுவை யுத்தம்  எனப் பெயரிடப்பட்டது.

இஸ்லாமிய அரசின் இரண்டாம் கலீபா உமர்(ரழி) அவர்களின் காலத்தில் தான் ஹி−15 ஆம் ஆண்டு ஜெருஸலம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.ஆயினும்,
அக்காலந்தொட்டே கிறிஸ்தவர்களுக்குரிய சகல உரிமைகளும் சுதந்திரங்களும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் வழுங்கப்பட்டு வந்தன.

இஸ்லாமிய ஆட்சி முழுவதிலும் சுதந்திரமான முறையில் யூத, கிறிஸ்தவர்கள்  தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பூரண அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.மேலும்,
முஸ்லிம் அரசாங்கத்தில் உயர் பதவிகளும் அவர்களில் தகுதியானோருக்கு வழங்கப்பட்டிருந்தன.

அவர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளிலெல்லாம் முஸ்லிம் கலீபாக்களினாலேயே  தேவாலயங்களும் கிறிஸ்துவ மடங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

சிலவேளைகளில் கலீபாக்களின் சொந்தச் செலவிலேயே அவர்களது வணக்கஸ்தளங்களின் திருத்த வேலைகளும்,நிர்மாண வேலைகளும் நடந்தேரின.

தொடரும்....

தா. பாண்டியன் உடல்நிலை சரியில்லை மருத்துவமனையில் அனுமதி - செய்தி...


கயிறு வீசும் போது குறுக்க மறுக்க ஓடாதடா - எமதர்மராஜா...

திமுக-வ கலாய்க்கனுமுனு ஆசையில்ல ..


ஒரு சாவ ட்ரோல் பண்ற அளவுக்கு நான் கல்நெஞ்ச காரனும் இல்லை..

எல்லாமே இவனுங்க விதைத்த வினை தான்.. இப்போ அறுவடையாகிட்டு இருக்கு..

வரலாறு முக்கியம் அமைச்சரே...

ஊரில் ஒரு பக்கம் சாவு பறை கேட்கும் போது மறுபக்கம் மங்கள இசை ஒலித்து கொண்டு இருக்கும்..

பிரபாகரன் இறப்பு குறித்த கேள்விக்கு கலைஞர் பதில்...


திமுக கலாட்டா...


மக்களிடம் எந்த சலனமும் இல்லை. அவர்கள் வழக்கமான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்குக்  கிடைத்த அனுதாபத்தின் அளவில் ஒரு  விழுக்காடு  கூட கருணாநிதிக்குக் கிடைக்கவில்லை.

வழக்கமாக செய்திகளை பார்க்கக்கூடிய மக்கள் கூட இப்போது செய்திகளைத் தவிர்த்து விட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா பாட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது பக்கத்து வீட்டின் பக்கத்த்து  திமுக- காரன்  வீட்டில்  பெட்ரோமாக்ஸ் லைட் தேவையில்லை வெறும் தீப்பந்தம் போதும் என்று நினைக்கிறார்கள் போலும்...

முடியட்டும் விடியட்டும் துரோகி திமுக கருணாநிதி...


பட்டேலும் சொகைன் லாலாக்களும் கோவை பிஜேபி பரிதாபங்கள்...


தமிழகத்தில் கட்சியில் ஆள் இல்லை என்பதற்காக குஜராத்திலிருந்து கொண்டு வந்தார்களா, இல்லை திட்டமிட்டு வட ஹிந்தியர்களை  கட்சியில் ஊடுருவ வைக்கிறார்களா?


ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகம் ஞாபகம் வருதே...


திமுக கருணாநிதிக்காக அரசு மருத்துவ உதவி வழங்க தயார்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

           
கருணாநிதிக்காக அரசு மருத்துவ உதவி வழங்க தயார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி அளித்தார்.

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  5 முறை முதல்வராக இருந்தவர் , தற்போது  எம்.எல்.ஏவாக இருக்கிறார். அரசின் சார்பாக மருத்துவ உதவிகள் கேட்டால் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். 

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம், சிகிச்சை விவரம் குறித்து காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன். என கூறினார்.

சொத்து பிரிப்பதில் இருந்து தன்னை விலக்கிவிட்டதால் கதறி அழும் பிரசன்னா... ..



ஆடி மாதம் - அம்மன் கூழ் மகிமை தெரியுமா?


கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள்.

பஞ்சத்தைப் போக்குவதோடு... வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள்.

கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயம் மிகப்பெரிய மருத்துவ பலன்களைக் கொண்டது.

அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான்.

இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும்... கஞ்சியும்.

எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...

குடிநீரை சுத்தம் செய்ய வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்...


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..

ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சி விடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்...

பிளாஸ்ட்க் மூலம் சாலை உருவாக்கி உலகையே அதிர செய்த வாசுதேவன்....


1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு...


தமிழ் மன்னர்களாம் எல்லாளன் முதல் சங்கிலியன் வரை செங்கோலோச்சிய தமிழ் ஈழம் என்னும் திருநாடு கொடுங்கோலர்களாம் அன்னியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையினைத் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழராட்சி நிறுவிட இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு க் குழுவினர் 31-08-80 அன்று இலண்டன் மாநகரில் கூடி 1982ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளன்று தமிழ்ஈழ அரசு நிறுவுவதென்றும் விடுதலைப் பிரகடனம் செய்வதென்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த இலண்டன் தீர்மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்று இம்மக்கள் மாமன்றம் முடிவெடுக்கிறது.

1982ல் அமையவிருக்கும் தமிழ் ஈழ அரசிற்கு இந்திய பேரரசு முதல் முதலில் அங்கீகாரம் வழங்கிட வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை இம்மாமன்றம் வேண்டிக் கொள்கிறது.

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்
இந்தியக் கிளை
12-10-80
இடம்:மதுரை...

சாகர்மாலா திட்டம்...


கோழையே சுடு என்று சொன்ன சேகுவேரா...


1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றி வளைக்கப்படுகிறார்.

சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.

துப்பாக்கியை எடுக்கமுயன்ற சேவின் கை சுடப்பட்டது. குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது (இப்போது அது நினைவிடம்).

கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுகிறார் சே.

ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.

சே வை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.
பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.

1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.

அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.

கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலக வல்லரசுகள் நடுங்கும் சே?

இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச் சீமான்?

இவரா வெறும் 300 போராளிகளை வைத்துக் கொண்டு விமானம் மற்றும் தாங்கி (tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?

இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?

இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?

இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?

நம்ப முடியவில்லை..

சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.

டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.

பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார். துப்பாக்கியை நீட்டினார்.

கோழையே சுடு, நீ சுடுவது தனி மனிதனைத்தான்..

சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.

ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.

மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்...

ஸ்டெர்லைட் சதி திட்டம்...


சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்...


1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்...

சூட்சமம் அறிந்தவனே உலகை ஆள்கிறான்...


நினைவலைகள்...


ஒரு செல் உயிர் முதல் மனிதன் வரை இங்கு இனப்பெருக்கம் செய்கிறது தனது சந்ததிகளை உருவாக்கிக் கொண்டே உள்ளது,

இந்த நிலை தொடர்ந்து எதற்க்காக நடைபெற்று கொண்டே உள்ளது ?

மனிதனின் விந்தனுவானாலும் சரி, ஒரு மரத்தின் விதை ஆனாலும் சரி இங்கு தொடர்ந்து ஒரு செயலைத்தான் செய்கின்றன அது தான் நினைவுகளை கடத்துதல்.

நினைவுகள் (Memory) என்பது நம் மனதில் நினைப்பது மட்டும் அல்ல நாமே நினைவுகளாக மட்டுமே உருவெடுத்துள்ளோம். ஏனென்றால் இங்கு அனைத்துமே நினைவுகளின் கட்டமைப்புகளாக மட்டுமே உள்ளது,

உதாரணமாக மகன் தந்தை போல் இருக்கிறான், நடக்கிறான், தாத்தாவை போல் சிரிக்கிறான் மற்றும் ஒரு நாய் குட்டி அதன் தாயை போல் உள்ளது இவையெல்லாம் வெறும் உடலும், உருவமும் மட்டும் அல்ல அனைத்துமே நினைவுகள்(Memory).

நாம் இங்கு செய்யும் ஒவ்வொரு செயலும் நினைவுகளாக உள்ளது.

உதாரணமாக கடைகளில் நாம் வாங்கும் ஒரு குறிப்பிட்ட Brand பொருள் ஏற்கனவே பலமுறை விளம்பரங்கள் மூலம் நம் நினைவில் பதிய வைக்கபட்டத்தின் விளைவே ஆகும்.

நினைவுகளின் கட்டமைப்பு என்பது இல்லாததையும் உருவாக்கும் ஆற்றல் கொண்ட திறவுகோல்.

நம் அன்றாட வாழ்வில் தினமும் பொருள் சேர்ப்பதிலும், சம்பாதிப்பதிலுமே அனைத்து நினைவுகளையும் செலவிடுகிறோம், நாம் இதனை தொடர்ந்து செய்வது மூலம் தொடர்ந்து நம் சந்ததிகளும் இதன் உருவகமாகவே ஓட ஆரமிக்கின்றன, இந்த முடிவற்ற சுழற்சியை தடுத்து நம் மன நிறைவுடன் வாழ நம் நினைவுகளை இயற்கை பக்கம் திருப்ப வேண்டும்.

இயற்கையான காடுகளை காப்பதன் மூலமும் புதிய காடுகளை உருவாக்குவதன் மூலம் நமது வணிக ஓட்டம் நிறுத்தப்பட்டு இயற்கையுடன் இயைந்து வாழ முடியும்.

உயிர்களுக்கு ஆற்றல் தரும் சந்திரன்,சந்திரகிரகமான இன்று நமக்கும் அணைத்து உயிர்களுக்கும் அதிகளவு ஆற்றல் கிடைக்கும் இந்நேரத்தில் நம் அனைவரும் ஒரு சேர ஒரு நினைவுகடமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அதனை எளிதில் அடையாளம்.

எனவே அனைவரும் இன்று இரவு இயற்கையான காடுகள் காப்பதற்கும் மேலும்  காடுகள் வளரவேண்டும் என ஒரு சேர நினைப்போம்.

தங்களால் முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்.

Save and Regenerate Forest...

விவசாயம் காப்போம்...


ஸ்டாலின் அவசரமாக கோபாலபுரம் இல்லம் வருகை பரபரப்பு...


மரமும் மனிதனும்...


வன்னி மரம், தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் ஒரு சிறப்புவாய்ந்த மரமாகும். மிகச்சிறிய இலைகளைக் கொண்ட முள் மரமான வன்னி மரம், நல்ல செழுமையான காய்களைக் கொண்டு வளரும், இலையுதிர் காலங்களில் இலைகள் உதிர்ந்து, வறண்ட கிளைகளோடு காணப்பட்டாலும், வசந்த காலத்தில் மீண்டும் செழுமையான இலைகள் துளிர்க்கும், அதிசய மரம். வறண்ட நிலத்திலும் பசுமையாக வளரும் இயல்புடைய வன்னி மரம், தமிழகத்தின் கரிசல் நிலப்பகுதி, வயல் தோட்டங்களில் தானே வளரும்.

தார் பாலைவன மாநிலம் என அழைக்கப்படும் இராஜஸ்தானிலும், சகாரா பாலைவன தேசங்கள் எனும் ஆப்பிரிக்க அரபு நாட்டு பாலைவனங்களிலும், பெரு மரங்களாக பசுமையாக வளர்வதால், வன்னி மரத்தை பாலைவனத் தங்கம் எனப் போற்றுகின்றனர்.

வன்னி மரத்தின் மலர்கள், காய், மரப்பட்டை அனைத்தும் மனிதருக்கு பெரும் பயன்கள் தரும் கற்பக மரம் போல விளங்கி, மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக விளங்குகிறது.

அதிசயம் செய்யும் வன்னி மரக்காற்று...

முன்னோர் திருக்கோவில்களில் வைத்த மரங்கள் யாவும் தனிச்சிறப்பு மிக்கவையே, அந்த வகையில், அற்புத வளங்கள் நிறைந்த வன்னி மரத்தை சுற்றி வர, அதன் காற்று பட்டு, உடல் மனக் கோளாறுகள் யாவும் நீங்கும், வன்னி மரக்காற்றில் தொடர்ந்து இருக்கும் தன்மைகளால், சுவாசக் கோளாறுகள் சீராகி, இரத்தம் தூய்மையாகி உடல் ஆற்றல் மிக்கதாகும்.

குழந்தைப் பேறு உண்டாக...

வன்னி மரப்பட்டையை தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்துவர, மழலைச் செல்வம் உண்டாக வாய்ப்பாகும், வன்னி இலை, காயங்களை உடனே ஆற்றும், வன்னி காய்களை தூளாக்கி சாப்பிட்டுவர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும், ஆண்களின் உயிரணுக்கள் வளமாகி, குழந்தைப்பேறு ஏற்படும்.

வன்னி மர இலைகளின் மருத்துவ பயன்கள்..

காரிய வெற்றியடைய...

வன்னி மர இலைகளை, வீடுகளில் பூஜையறையில், சட்டை பாக்கெட்களில் வைத்திருப்பது, காரிய வெற்றியடைய உதவும் என நம்பி வைத்திருப்பர், போரில் ஈடுபட செல்லும் வட நாட்டு வீரர்கள், போர்க்களம் புகுமுன், வன்னி மர இலைகளை பிரசாதமாக பெற்று செல்வர் என்பதை, சரித்திர நூல்களில் இருந்து அறிய முடிகிறது.

நரம்புத் தளர்ச்சி, பல்பாதிப்புகள்..

வன்னி இலைகளை அரைத்து, காயங்களில் கட்டிவர, உடனே காயங்கள் ஆறிவிடும். இலைகளை சூடாக்கி, வாயை கொப்பளிக்க, பல் வலி பாதிப்புகள் நீங்கும், பருகி வர, நரம்பு தளர்ச்சி வியாதிகள் அகலும்.

கருச் சிதைவை தடுக்க...

வன்னி மரத்தின் மலர்களைப் பறித்து, நிழலில் உலர வைத்து, பின்னர் தூளாக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, அபார்சன் எனும் கருச்சிதைவு பாதிப்புகளை தடுத்து, கருவை பாதுகாக்கும் ஆற்றல் மிக்கது.

மார்புச் சளி கரைய...

வன்னி மரக்காய்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் விலகும், அதிக மார்பு சளியால் அவதிப்படுவோர் வன்னிக்காய் பொடியை சாப்பிட்டுவர, சளி கரையும். ஆண்மைக்குறைவு பாதிப்பு உள்ளோர் வன்னிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டுவர, பாதிப்புகள் அகலும்.

வன்னி மரப்பட்டைகளின் மருத்துவ பயன்கள்...

வன்னி மரப்பட்டைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிநீராக பருகிவர, மகப்பேறின்மை பாதிப்புகள் விலகி, கருவுறும் வாய்ப்புகள் அமையும், திருக்கோவில்களில் உள்ள வன்னி மரங்களை, குழந்தை வரம் வேண்டி சுற்றிவந்து, அதன் பட்டைகளை சிறிது எடுத்து, வீடுகளில் குடிநீராக காய்ச்சி பருகுவர்.

செரிமானக் கோளாறு...

வன்னி மரப்பட்டை உடல் செரிமான கோளாறுகளை சரிசெய்யும், அல்சர் பாதிப்புகளை சரியாக்கும், விஷக்கடிகளின் மேல், பட்டையை அரைத்து தடவிவர, வலி நீங்கும், உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் கட்டிகளை கரைக்க, பட்டை பயன் தரும். லெப்ரசி எனும் தொழு வியாதி பாதிப்புகள் போக்கும் அருமருந்தாகிறது.

சுகப்பிரசவம் தரும் வன்னி மரம்..

இன்றைய காலகட்டத்தில், சிசேரியன் எனும் ஆயுதப் பிரயோகம் இல்லாமல், மகப்பேறு காண்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. சில குடும்பத்தாரின் ஜோதிட மத ரீதியான நம்பிக்கையால், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் பெறவைக்க, அவர்களே சிசேரியன் சிகிச்சையை ஊக்குவித்தாலும், அதனால் உடல் மன நல பாதிப்புகளை அடைவது கர்ப்பிணிப் பெண்கள் தான்.

மேலும், ஆயுதப் பிரயோகத்தில், குழந்தைகளின் உடல் நலம் பாதிப்படையவும், பெண்களின் கருப்பை வளம் குன்றவும் வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற செயற்கை பாதிப்புகளை தவிர்த்து, பெண்கள் அதிக சிரமம் இன்றி, இயற்கையான முறையில் மகவைப் பெற, அரிய மருந்தாக வன்னி மரப்பிசின் விளங்குகிறது.

வன்னி மரப்பட்டைகளில் உண்டாகும் பிசினை சேகரித்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பின்னர் அதில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

உடலை வளமாக்கும் வன்னி மரக்காற்று!
இயற்கையின் கருணை, உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாக, மூலிகைகளையும் அவற்றை பக்குவப்படுத்தி மருந்தாகக் கொள்வதன் மூலம், மனித வியாதிகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சில மூலிகைகள் இருக்குமிடம் சென்றாலே, அவற்றின் மூலம் நம்மிடம் உள்ள உடல் நலப் பாதிப்புகளுக்கு தீர்வாகிறது.

இதனாலேயே, அடர்ந்த காடுகளில் செழித்து வளரும் பல்வேறு மூலிகைகளின், மூலிகைக் காற்று வீசும் மலைப்பிரதேசங்களின் வழியே, ஆன்மீகரீதியாகவோ, மன அமைதிக்காகவோ பாதயாத்திரை சென்றுவரும்போது, அந்த மூலிகைக் காற்று உடலில் பட, வியாதிகள் அகல வாய்ப்பாகிறது.

சுவாச பாதிப்புகள்...

இதுபோல, வன்னி மர இலைகளையோ, பட்டையையோ எடுத்து மருந்தாக உபயோகிக்க வாய்ப்புகள் இல்லாமல் இருப்போர், தினமும், வன்னி மரத்தின் அருகே சற்று நேரம் அமர்ந்து வந்தால் போதும்.

அதிசயத் தன்மைகள் மிக்க வன்னிமரக்காற்று, சுவாச பாதிப்புகளை போக்கி, உடல் இன்னல்களை சரிசெய்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும்....

இயற்கையுடன் இனைந்து செல்...


ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகைளை பின்பற்றுங்கள்...


1. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால், உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

2. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும், விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

3. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.

4. பூண்டு சாப்பிட்டீர்களென்றால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

5. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

7. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

8.வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள் ஆகும்.

9. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் நெருங்காது.

10. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

இராசராசச் சோழன் குறித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு மறுப்பே இந்நூல்...


இராராசச் சோழர் குறித்த தமிழிய ஆய்வை முன் வைக்கிறது இச்சிறு வெளியீடு..

திராவிட அரசர்களான களப்பிரர், பல்லவர் ஆகியோரின் பிராமணியச் சார்பு பல்வேறு சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது.

இராசராசச் சோழர் பறையர்களுக்கு இறையிலி நிலங்கள் வழங்கியமை , பிரமதேயங்களில் பிராமணர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட வரலாற்று உண்மைகள், இக்கட்டுரைகளில் கல்வெட்டுச் சான்றுகளுடன் இந்நூலாசிரியர் ம.செந்தமிழன் தொகுத்துள்ளார்...

ஆடி மாதம்....


மூலாதாரம்...


மூலாதாரம் என்பது முதுகெலும்பு முடியும் இடத்தில் உள்ளது.

இந்த சக்கரம் எருவாய்க்கு (குதம்) இரண்டு விரல் கட்டை மேலும் கருவாய்க்கு (குறி) இரண்டு விரல் கட்டைக்கு கீழேயும் உள்ளது.

இதுவே முதல் ஆதாரமாகவும் எல்லா ஆதாரங்களுக்கு அடிப்படை முதல் ஆதாரமாக இருப்பதோடு குண்டலினி என்ற பிரம்ம சக்தி கேந்திரமாகவும், (பிராணன் , நாதம் , ஹம்சம் ) என்ற பிராண மந்திரமும் தோன்றும் இடம் என்றும் முடுகுதண்டின் (எலும்பின் ) கீழும் அமைந்த விடமாகும்.

பஞ்ச ( ஐம் பூதங்களில்) ஒன்றான மண் , (லம்) பிரித்வி , இதன் நிறம் மஞ்சள் . இதன் அதி தேவதை மஹா கணபதியாக இருப்பதால் பிரணவ சப்தமாகவும் ஓங்கார வடிவமாகவும் , ஓங்கார உற்பத்தி தலமாகவும் விளங்குகிறது.

இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக
மனம் ,
புத்தி,
சித்தம் ,
அஹங்காரம் ,
வ , ச ,ஷ, ஸ ,
என்ற நான்கு அக்ஷரங்களும் , நான்கு தத்துவங்களாக இடம் பெற்று உள்ளன.

இங்கிருந்து சுழுமுனை என்ற " ஒலி" மற்றும் "ஒளி" வடிவமான நாடி புறப்பட்டு முதுகுத்தண்டின் வழியே முகுளம் என்ற உறுப்பு வழியே கபாலம் அடைகிறது
என சித்தர்கள் கூறுகின்றனர்...

நீருக்கு பணமா ..? பின்பு பணத்தை உபயோகிக்காத காக்கை குறுவிகள் எங்கே செல்லும்...?


செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி - 4...


தமிழ் தனது முதல் எழுத்தான 'அ'கரத்தை எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதினை நாம் கண்டாயிற்று. அதேப் போல் தமிழ் தனது எழுத்துப் பிரிவுகளின் மூலம் உயிரும் உடலும் இயங்கும் விதத்தை எவ்வாறு விளக்குகின்றது என்பதனையும் நாம் கண்டாயிற்று.
 
இனி அந்த இரண்டு விடயங்களைக் கொண்டு தமிழ் எவ்வாறு உலகின் மிகச் சிறந்த உறவினை சிறப்பிக்கின்றது என்பதனைப் பார்க்கலாம்.

உலகின் மிகச் சிறந்த உறவா... சிறிதும் சந்தேகம் இன்றி எவரும் சொல்லி விடுவார்கள் 'அம்மா' என்று. அப்பேர்ப்பட்ட உறவிற்கு தமிழ் தனது முதல் எழுத்தினைக் கொடுத்து சிறப்பித்து இருக்கின்றது என்றுக் கண்டோம். ஆனால் தமிழ் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

அந்த உயர்ந்த உறவினைக் குறிக்கும் சொல்லுக்குள் உயிரையும் உடலையும் விளக்கிக் கொண்டு இருக்கும் தனது தத்துவத்தையும் அது மறைத்து வைத்து இருக்கின்றது. அதைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாகப் பார்ப்போம்...

'அம்மா' என்றச் சொல்லை சற்று கவனித்துப் பார்த்தால் அச்சொல்லினுள் தமிழ் மொழியின் மூன்று எழுத்துப் பிரிவுகளும் அடங்கி இருப்பது தெரிய வரும். அதே போல், உயிர் இருந்தால் தான் உடல் இயங்கும் என்றக் கருத்தை விளக்கும்படி உயிரைத் தொடர்ந்து மெய்யும், இவை இரண்டும் இருந்தால் தான் உணர்ச்சி இருக்கும் என்பதனை விளக்கும்படி உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் தொடர்ந்து உயிர் மெய் எழுத்து வந்து இருப்பதையும் நாம் காணலாம்.

அ --> உயிர் எழுத்து.
ம் --> மெய் எழுத்து. (உயிரைத் தொடர்ந்து மெய் வருகின்றது)
மா--> உயிர் மெய் எழுத்து. (உயிரையும் மெய்யையும் தொடர்ந்து உணர்ச்சி வருகின்றது).

இந்த எழுத்து அமைப்பு முறையின் மூலம், உயிரும் உடலும் ஒன்றி இருக்கும் இடத்தில தான்  எவ்வாறு உணர்ச்சிகள் இருக்க முடியுமோ அதேப் போல உயிரும் உடலும் ஒருசேர இணைந்து இருக்கும் அன்னையிடம் அன்பின் உணர்ச்சிகள் இயல்பிலேயே அமைந்து இருக்கும் என்பதனை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த விதி 'அப்பா', 'அண்ணா', 'அக்கா' போன்ற வாழ்வின் ஒரு சில முக்கியமான உறவுகளுக்கும் பொருந்துவதை நாம் சற்று உணர்ந்துப் பார்த்தாலே புரியும். இப்படி நமது நெருங்கிய உறவுகளைச் சிறப்பிக்கும் விதியினை வேறு எந்த மொழியிலாவது காணக் கூடுமா?....

சரி... நமது இன்றியமையாத உறவுகளை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்த்தோம். இப்பொழுது தமிழ் என்னும் சொல்லையே நமது மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்ப்போம்.

நம் மொழியில், மெய் எழுத்துக்களை மூன்று இனமாக பிரிப்பார்கள்.

க் ச் ட் த் ப் ற் -  என்ற எழுத்துக்கள் வல்லினம் எனவும்

ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற எழுத்துக்கள் மெல்லினம் எனவும்

ய் ர் ல் வ் ழ் ள் - என்ற எழுத்துக்கள் இடையினம் எனவும் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.

இந்த மூன்று இனங்களும் நம் மொழிக்கு மிகவும் முக்கியமானவை. எனவே இந்த மூன்று இனங்களும் சேர்ந்து அமைந்து இனிதாய்... அழகாய்.. பொருள் தருமாறு, தமிழ் என்று நமது மொழி வழங்கப் பெறுகின்றது.

த --> வல்லின எழுத்து
மி --> மெல்லின எழுத்து
ழ் --> இடையின எழுத்து.

தமிழ் --->; அழகு (பொருள்)

இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், 'இடையினம் என்று சொல்லுகின்றோம், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் ஒரு சொல்லின் இடையில் அல்லவா வர வேண்டும்... ஆனால் தமிழ் என்னும் சொல்லில், இடையினம் இறுதியில் அல்லவா வருகின்றது... இது சரியா...?'

இந்தக் கேள்விக்கு பதிலினை அறிய நாம் நம் மொழியின் இலக்கணத்தினை அறிய வேண்டும்.

நமது தமிழ் எழுத்துக்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் எழுத்துக்கள், வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற வரிசைப் படியே அமைந்து இருக்கின்றன.

இதே வரிசை தான் நன்னூலிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே வல்லினத்தையும் மெல்லினத்தையும் தொடர்ந்தே இடையினம் வரும் என்பது  நம் மொழியின் இலக்கணம் என்பது நமக்கு புலனாகின்றது.

எனவே தமிழ் என்ற சொல்லின் அமைப்பும் சரி தான்... அதுவும் நம் மொழியின்  சிறப்புத் தான்!!!

தமிழின் சிறப்புகளைத் தொடர்ந்து அறிவோம்....

தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை...


என்னை முட்டாள் என்கிறீர்களா.. பரவாயில்லை, நான் முட்டாள் தான்...


ஆனால் என்னைப்போல் பல முட்டாள்களை உருவாக்கிய இந்த சமூகம் எத்தகைய பெரிய அடிமுட்டாளாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்..

நீங்கள் இந்த கட்டமைப்பில் எப்படியாவது வாழ்ந்து விட்டு செல்லலாம் என ஓடுகிறீர்கள்..

நான் எப்படியாவது என் தலைமுறையோடு இந்த அடிமை கட்டமைப்பு ஒழிந்துவிட வேண்டும் என நினைக்கிறன்..

நான் தோல்வி அடைந்தாலும், அதற்கான காரணத்தை விட்டுச்செல்வேன்,

அடுத்த தலைமுறை அதற்காக காரணத்தை தேடி, இந்த கட்டமைப்பில் இருந்து விடுபட்டு விடும் என்ற நம்பிக்கையோடு உவன்....

உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...


உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.

நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மனஉளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறீர்கள்.

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.

உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....

மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...

நன்றி ஆரோக்கியமே
நன்றி உடலே
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி
என்னை குணமாக்கியதற்கு நன்றி
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.

இதன்மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு.. உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.

1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது " என்பதை மனதிற்குள் சொல்லிகொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...

2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்..

4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்.. எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...

5. காலை வேலையில் நியூஸ்பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....

6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்

7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன்மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்

தினமும் இதை செய்து பாருங்கள்... தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

சாகர்மாலா திட்டம்...


ஈழம் - தமிழகம் தொடர்பு...


நம்முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட திருவாதிரைக் கடன்...

காலங்காலமாக ஈழத் தமிழர்கள், சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத்துறைகளில் படகேறுவார்கள்.

தமிழகத்தின் கிழக்குத்துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில் வந்து இறங்குவார்கள்.

சிதம்பரம் செல்வார்கள்.

வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.

எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத்துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில்ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில் இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச்செல்வார்கள்.

1948க்கு முன்பு இருந்தநிலை இதுதான்.

1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத்தனுஷ்கோடி வந்து, போட்மெயில் தொடர் வண்டி ஏறி,நேரே சிதம்பரம் வந்து, வழிபட்டு, மீண்டும்அதே வழியாகத் திரும்புவார்கள்.

1948க்குப்பின்னர் ஈழத்தின் வட பகுதியில்இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச்சட்டத்துக்கு அமைய வர முடியாது.

1992க்குப்பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல்சேவை நிறுத்தப்பட்டது.

முசுலிம் மக்களுக்கு மெக்கா.
கிறித்தவர்களுக்கு ஜெருசலம்.
கத்தோலிக்கருக்கு வத்திக்கான்.
புத்தர்களுக்கு புத்தகயா.
இந்துக்களுக்குத்திருக்கயிலாயம்.

இவை போன்று ஈழத்துச்சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லக் கூடியநம்பிக்கைக்கு உரிய கோயில்...

http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=a6a09b2c-92fa-46c6-882c-eaa2e6418f16&CATEGORYNAME=Sachi

விழித்துக்கொள் தமிழா...


வறுமையின் உச்சம்: மூன்று வேளையும் உணவாக எலிக்கறி...


எலிக்கறியை சுத்தம் செய்யும் இளைஞர்...

அலைந்து திரிந்து ஒரு எலியை கண்டுபிடித்ததும் 7 வயது புத்யாவின் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்புகின்றன. அவளுக்குள் அப்போது ஒரே ஒரு எண்ணம் தான் உதித்திருக்கும், ‘இன்றிரவு நான் பசியுடன் தூங்க செல்ல மாட்டேன்...’

ஜார்க்கண்ட், ராஞ்சியிலிருந்து 200 கிமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கர்வ்ஹா கிராமம். அங்குள்ள அரசுப்பள்ளியின் அருகே பிளாஸ்டிக்கால் டெண்ட் அமைத்து 16 வருடங்களாக தங்கியிருக்கிறார்கள் முஷாஹர் இனத்தை சேர்ந்தவர்கள். முழுவதும் கிழிந்து துளைகளால் ஆன டெண்டுகளுக்குள் 10 குடும்பத்தை சேர்ந்த சுமார் 100 பேர் தங்கியிருக்கிறார்கள்.  இந்தியாவின் குடிமக்கள் என சொல்ல அவர்களிடம் ஆதார் அட்டையோ, ரேஷன் கார்டோ அல்லது எந்தவொரு அடையாளமும்  இல்லை. வறுமையின் காரணமாக அரிசி என எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஆனால் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதால் ஒரு கட்டத்திற்குமேல் உணவு கொடுக்கவும் அங்கு யாரும் தயாராக இல்லை.

மூன்று வேளை உணவுக்கே வழி இல்லாத நிலையில் ஜார்க்கண்டின் குளிரில் தூங்குவதற்கு அவர்களிடம் ஒரு கம்பளி கூட  இல்லை.  மண்ணில் குழி தோண்டி எலியை பிடிக்கிற 7 வயது புத்யாவின் மெலிந்த  தோற்றத்தைப்  பார்க்கிற யாரும் அவளுக்கு 3 வயதுகூட தாண்டியிருக்கும் என நம்பமாட்டார்கள்.  “எலியை ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும்  மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அதுதான் எங்களுக்கு விதிக்கப்பட்டது என உணர்ந்த பிறகு எங்களுக்கு வேறு வழியில்லை...” ஆதங்கப்படுகிறார் முஷாஹர் இனத்தை சேர்ந்த ஹரி.

“ ஊரில் கோவிலுனுள் அளிக்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட சென்றால் கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறோம்... அருகில் அரசுப்பள்ளி இருப்பதால் அங்கு படிக்கும் குழந்தைகள் உண்ணும்போது  ஒவ்வொரு முறையும் ஏக்கத்துடன் அவர்களை பார்த்து கொண்டு நின்றிருப்பார்கள் புத்யா உட்பட மற்ற குழந்தைகள்...” சொல்லும்போதே கண்கலங்குகிறார் தேவி. இப்படி ஜார்கண்ட் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் வறுமையில்  பாதிக்கபட்டுள்ளதாக ஒரு தரவு கூறுகிறது...

இயற்கைக்கு திரும்புங்கள்...


சேர்த்து வைத்த உண்டியல் பணத்தில் காங்கேயம் காளை வாங்கிய சிறுவன்.. குவியும் பாராட்டு...


ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த செட்டித்தோட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - திலகவதி தம்பதியரின் ஒரே மகன் பொன் சிவவேல். சிவகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, விவசாயத்தின் மீதும், கால்நடைகளின் மீதும் இந்தச் சிறுவனுக்கு அலாதியான ஆர்வம் இருந்திருக்கிறது.

 சிறு வயது முதல் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலர் கொடுத்த பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்திருக்கிறான். ஒருநாள் உண்டியலை உடைக்க அதில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கிறது. அந்தப் பணத்தில் தனக்கு நாட்டு மாடு ஒன்றை வாங்கித் தர வேண்டுமென வீட்டில் அடம் பிடித்திருக்கிறான். `இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு மாடு வாங்க முடியாது’ எனப் பெற்றோர் சொல்ல, `கன்றுக்குட்டியாவது வாங்கிக் கொடுங்கள்’ என மறுபடியும் பிடிவாதம் பிடித்திருக்கிறான்.

பையனுடைய ஆர்வத்தைப் பார்த்து அவனுடைய பெற்றோர்கள் பழையகோட்டை மாட்டுச் சந்தைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். கன்றுக்குட்டியின் ஆரம்ப விலையே 37 ஆயிரம் எனச் சொல்ல, ஏமாற்றத்தோடு சிறுவன் வீடு திரும்பியிருக்கிறான். பையனுடைய சோக முகத்தைப் பார்த்த பெற்றோர்கள், மாட்டுச்சந்தை நடத்தும் உரிமையாளரிடம் பையனுடைய ஆசைகளைச் சொல்லி,`குறைந்த விலையில் ஏதாவது காங்கேயம் காளைக் கன்று கிடைத்தால் தெரியப்படுத்துங்கள்’ என்றிருக்கின்றனர்.

பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவனுக்கு நாட்டு மாடு மேல் உள்ள காதலையறிந்து வியப்படைந்த மாட்டுச்சந்தை உரிமையாளர், இந்தச் செய்தியை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்குக் காங்கேயம் இனக் காளைக் கன்றினை வாங்குவதற்கு மீதமுள்ள பணத்தைக் கொடுத்து உதவ, சிறுவன் உற்சாகத்துடன் காளைக் கன்றினை வீட்டுக்கு ஓட்டி வந்திருக்கிறான் சிறுவன்.

சிறுவனின் நாட்டு மாடு மீதான ஆர்வத்தை பார்த்து பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்...

ஸ்மார்ட் சிட்டியும்.. தண்ணீர் வணிகமும்...


ஆயுர்வேத மருத்துவம்...


ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா...

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்...