28/07/2018

ஆடி மாதம் - அம்மன் கூழ் மகிமை தெரியுமா?


கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள்.

பஞ்சத்தைப் போக்குவதோடு... வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள்.

கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயம் மிகப்பெரிய மருத்துவ பலன்களைக் கொண்டது.

அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான்.

இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும்... கஞ்சியும்.

எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.