மொசாட்.. கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்..
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு..
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்..
அத்தனை பெரும் உளவாளிகள்..
ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்..
நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.. உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் மிக மிக அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது மொசாத் மட்டுமே.
இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது என்றால் மிகையகாது.
இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம்.
யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.
மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை. மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் (அறிவிக்கப்பட்டது) எதுவும் கிடையாது.
அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும். அதற்கு செல்லும் நபருக்கு, தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என்று கூடத் தெரியாது. இது எல்லா நாடுகளிலும் கிளை விரித்துப் பரவியுள்ளது.
இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலே அந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட். அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும் சிஷ்யனாக வளர்ந்தது.
ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு உண்டு.
மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட சோதனைகள் இருக்கும். பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும். உலகின் பல மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். எந்த கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள். இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது..
மொசாட் ஒரு வழிப்பாதை...
பாகம் 1...
மறுபடியும் வேறு விதமாக கேள்விகள்....
மொசாட் அவ்வளவு பயங்கரமானதா...?
இல்லவே இல்லை...
அதிஅதி பயங்கரமானது....
உலகத்தில் வீசப்படும் ஒவ்வொரு குப்பைப் பேப்பரும், பழைய கம்ப்யூட்டர்களும் ஆராயப்படும்....
எனது இந்தப் பதிவு, முந்தைய பதிவிலிருந்து, அதன் லைக், கமெண்ட் வரை தோண்டிவிடுவானுக....
24 மணி நேரமும் காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் வேட்டை நாய்...
இன்னும் ஒரு அழகான விடயம்...
மொசாட்டை வடிவமைப்பு செய்தது ஒரு பெண்....
பல்லாண்டுகள் அந்த தேசத்தின் பிரதமர்...
நம்ம அம்மா போல, அன்னை இந்திரா போல... சுப்பீரியர் பர்சனாலிட்டி....
இது இப்படித் தான்.... கேள்வி கேட்கும், சந்தேகப்படும் நபர்கள் வரலாற்றில் தேவை இல்லை.... ஆமென்...
ஜெகோவா... உங்களுக்கு ஒரு விருந்தாளி...
தனது மொசாட்டுக்கு உலகத்தில் யார் வேண்டுமானாலும் உளவாளியாக வரலாம் என வெப்சைட் வைத்து உள்ள ஒரே ஒரு உளவு அமைப்பு அதுதான்...
டபிள் செக், ட்ரிபிள் செக், க்வாட்ரோ செக், பென்டா செக், க்யுனோ செக், நேனோ செக் என பலகட்டப் பரிசோதனை நிகழும்...
நிழல் தவறாக அசைந்தாலும், உங்கள் பரம்பரை அத்திப் பட்டியில் புதைக்கப்பட்ட அஜீத் குடும்பம் தான்...
அப்ப, மத்த தேச உளவு அமைப்புகள்...???
சிம்பிள்.... அமெரிக்கா... 9|11..
பிரான்ஸ், பெல்ஜியம், இந்தியா...
உலகம் முழுவதும் குண்டு வெடிப்பு....
ISIS... உலகம் முழுவதும் வெறியாட்டம்....
இதுவரை,
இஸ்ரேலில்,
குண்டு எல்லாம் இல்லை..... பட்டாசு வெடித்தது என்று செய்தி பார்த்து இருக்கிறீர்களா....?
அதுதான் மொசாட்...
அதனால் தான் அது மொசாட்....
பாகம் 2...
சரி.. இதுவரை நீங்கள் சொன்ன மொசாட்டை எவனுமே ஜெயித்ததில்லையா...?
ஓ... ஒரே ஒருவன் உண்டே...?
அவன் இன்று உயிரோடு இல்லை என்கின்றனர்... ஆனால் பிணத்தைக் காட்டவில்லை.
தப்பித்தவறி மீண்டும் உயிரோடு வந்தால்
அவர்களிடமும், மற்றும் அவர்களது பரம எதிரிகளிடமும், அதாவது பாலஸ்தீன போராளிகளிடமும் ஒரே நேரத்தில் தன் வீரர்களைப் போர் பயிற்சி பெற வைத்தவன்...
கொரில்லா என்ற திடீர்த் தாக்குதல் என்ற உத்தியில்,
தற்கொலைப்படை என்ற ஒன்றை உருவாக்கி, உலகத்தை அதிரச் செய்தவன்....
மனித வெடிகுண்டு என்ற ஒரு போர் உத்தியைக் கையாண்ட முதல் போராளி இயக்கம்...
செக்கோஸ்லோவேக்கியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு,
செக் ரிபப்ளிக் மற்றும் ஸ்லோவேக்கியா எனப் பிரிந்த போது,
அதில் ஒரு நாட்டிலிருந்து ஒரு இஸ்ரேலியத் தயாரிப்பு விமானத்தைக் கொண்டு வந்து, அதை வைத்து ஒரு விமானப் படை உருவாக்கியவன்...
அதை வைத்தே அந்த நாட்டுத் தயாரிப்பு விமானங்களைச் சுக்கு நூறாக்கியவன்...
பெயர் கரிகாலன்....
அவனுக்கு மற்றொரு பெயர் உண்டு....
வேலுப்பிள்ளை பிரபாகரன்...
இஸ்ரேலிய ஆயுதங்களும், இந்திய ரேடார்களும் பயனின்றிப் போன இடம்..
கட்டுநாயக விமான தளம்..
மொசாட்கள் மோப்பம் பிடிக்காமல் கோட்டை விட்ட இடம்..
உலகத்தில் மொசாட் தோற்ற இடம் அது.... அதன் பெயர் ஈழம்....