13/06/2018
சென்னையில் ஒரே நாளில் 600 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்...
சென்னையில் ஒரே நாளில் 600 கிலோ எடையுள்ள குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். மேட்டுக்குப்பத்தில் நேற்று மாலை வாகனச் சோதனை நடத்திய துரைப்பாக்கம் போலீசார், சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த கண்ணகி நகர் சரவணன், நித்தியானந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
குட்கா பொருள்களை பாரிமுனையிலிருந்து மொத்தமாக வாங்கி, கண்ணகி நகர், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம் பகுதிகளில் விற்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பொருட்கள், ஒரு இருச்சக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன......
மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன்: 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்...
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்த நிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். அதனால், அவர் அப்பகுதி மக்களின் பாராட்டுக்குரியவரானார்.
ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கபீல்கான் கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தத. 7 மாதங்கள் சிறையில் இருந்த அவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில், மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காஷிப் ஜமீல் நேற்று இரவு கோரக்பூரில் ஹுமாயூன் பூர் பகுதிக்கு வந்தபோது, இரு சக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார்கள்.
இதையடுத்து, ஜமீல் அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளார்.இது குறித்து மருத்துவர் கபீல்கான் ட்விட்டரில் இன்று கூறுகையில், ''முதலில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் சகோதரர் ஜமீல் உடலில் இருந்து 3 துப்பாக்கிக் குண்டுகளை வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்துவிட்டோம். தற்போது அபாயக் கட்டத்தை தாண்டி, ஐசியுவில் இருக்கிறார். அவரைக் கொல்வதற்காக 3 முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள்.
ஆனால், காப்பாற்றப்பட்டுவிட்டார். யார் சுட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், முதல்வர் ஆதித்யநாத் தங்கிஇருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில், கோரக்நாத் கோயில் அருகேதான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. என் சகோதரருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க போலீஸார் காலதாமதம் செய்து இருக்கிறார்கள். 3 மணிநேரம் கழித்தே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை இதுதான்.எங்களுக்குப் பக்கபலமாக அல்லாஹ் இருக்கிறார்.
நான் எந்தவிதமான மிரட்டலுக்கும் நான் பணிந்து செல்லவோ, வளைந்து கொடுக்கவோ மாட்டேன்'' என கபீல்கான் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே கோரக்பூர் போலீஸ் எஸ்பி. சலாப் மாத்தூர் கூறுகையில், ''அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்'' எனத் தெரிவித்தார்...
அற்புதமான பிரபஞ்ச சக்தி...
பிரபஞ்சம் என்றால் என்ன?
இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.
கற்பனைக் கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?
அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம்.
ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்?
மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?
கழுகுகள் நமக்கு கற்று தரும் பாடம்...
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம்.
ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.
எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.
முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது.
பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.
தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது.
அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.
அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.
அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம்.
ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.
அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக் குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது.
முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது..
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.
குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.
அந்த நிம்மதி சொற்ப நேரம் தான்.
தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக் குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது.
மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன.
காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது.
அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும்.
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக் குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.
பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.
கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.
கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்..
தாய்க் கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.
ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை..
அந்த தாய்க்கழுகின் அறிவு முதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.
ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.
ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.
அதற்காக நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே.
தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே...
அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்...
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.
சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்..
ஆனால் ... கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல..
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.
அது சாத்தியமும் அல்ல..
கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.
கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிற்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.
நம் பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?
நீந்த கற்று கொடுப்போம்...
நீந்துவது அவர்கள் கடமை...
நம் சூரிய குடும்பத்தின் கதை...
சூரியன் (sun) : நம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார்.
வயது 500 கோடி ஆண்டுகள் இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.
நம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கிறார் .
நம் தலைவரின் மேற் புற வெப்பம் 6000 டிகிரி கெல்வின். தினமும் நம் சூரியன் சாப்பிடும் உணவு 39,744 தன் ஹைட்ரோஜென் அணுக்கள். அவை இணைந்து ஹீலேயும் ஆகிறது.
வியாழன் (jupiter) : நம் சூரிய குடும்பத்திலேயே பெரியவர் ஒரு தராசில் ஒரு பக்கம் வியாழனையும் மறு பக்கம் மற்ற 8 கோள்களையும் வைத்தல் கூட அவை வியாழனின் எடைக்கு நிகர் ஆக முடியாது.
நம் பூமியை விட 318 மடங்கு பெரியவர்.
ஆனாலும் தன்னை தானே சுற்றி கொள்ள 9.9 மணி நேரமும் , சூரியனை சுற்றி வர 11.86 வருடமும் எடுத்து கொள்கிறார்.
வியாழனுக்கு 16 துணை கோள்கள் உள்ளன . அவற்றில் 4 மிக பெரியது.
புதன் (mercury) : சூரியனுக்கு மிக அருகில் உள்ளவர் சூரியனை 87 .97 நாட்களில் சுற்றி வந்து விடுகிறார்.
ஆனால் தன்னை தானே சுற்றி கொள்ள 5 நாட்கள் எடுத்துகொள்கிறார் பூமியை ய விட 3 மடங்கு சிறியவர்.
வெள்ளி (venus) : அடுத்து நாம் பார்க்க இருப்பது நம் அண்டை வீட்டார் வெள்ளி அவர்கள்.
இவர் தன்னை தானே 243 நாட்களில் சுற்றி கொள்கிறார் அனால் சூரியனை 227 .4 நாட்களில் சுற்றி விடுகிறார்.
அதாவது அவருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட அதிகம்.
செவ்வாய்(mars) : அடுத்து நாம் காண இருப்பவர் செவ்வாய் அவர்கள் இவர் மிகவும் அழகானவர்.
சிவப்பாக தோன்றுகிறார் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் போய் குடியேற வாய்ப்புகள் அதிகம்
இவர் தன்னை தானே சுற்றி கொள்ள 10 மணி நேரமும் சூரியனை சுற்றி வர 29 .5 ஆண்டுகளும் ஆகின்றன.
சனி (saturn): வியாழனுக்கு அடுத்து நம் குடும்பத்தில் பெரியவர் இவர் .
வெப்ப நிலை -285 டிகிரி சனி கிரகத்தில் பருவ நிலை 7 .5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது.
தற்போது அறிந்த வரை இவருக்கு 23 துணை கோள்கள் உள்ளன.
இவருடைய ஒரு துணை கோளான தைடனில் (titan) சில நுண் உயிரிகள் வாழ கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
uranus: அடுத்த நம் சூரிய குடும்ப உறுப்பினர் நம் uranus அவர்கள்.
பூமியை விட 15 மடங்கு பெரியவர்.
இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 84 ஆண்டுகள். 6.81 கி.மீ./விநாடி வேகம்.
இவருக்கு 20 துணை கோள்கள் உள்ளன
இவருக்கு எடை இல்லை..
நெப்டியூன் : இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 160 ஆண்டுகள் 5 .43 கி.மீ./விநாடி வேகம்.
இவருக்கு 13 துணை கோள்கள் உள்ளன.
நேப்டியுனை உங்களிடம் தரமான பயினகுளர் இருந்து மெகா மூடம் இல்லாதிருந்து, உங்களுக்கு பொறுமையும் இருந்தால் உங்கள் வீடு மாடியில் இருந்தே பார்க்கலாம்.
ப்ளுட்டோ : இவர் தன நம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் தூரத்தில் உள்ளவர் மற்றும் மிகவும் சிறியவர்
இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 250 ஆண்டுகள் 4 .7கி.மீ./விநாடி வேகம்
1930 இல் கண்டறிய பட்டது.
நேப்டியுனும், யுரனுசும் ஒழுங்கான நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதே அடுத்து ஒரு கிரகமும் அதற்கு ஈர்ப்பு விசையும் உள்ளது என்பதற்கு சாட்சி.
அதே போல் இதுவும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால், அடுத்தும் ஒரு x கிரகம் இருக்கலாம் அனால் இன்னும் கண்டறிய படவில்லை.
இருபினும் நிறைய பெரியதும் சிறியதுமான பொருட்கள் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன புளுடோ வுக்கு அப்பால்...
திராவிடலு பகுதி - 2...
தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறன்.
இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னனியில் உள்ள திராவிடக் கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.
உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்க வேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்.
இப்போது விடயத்திற்கு வருவோம்.
அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.
ஆனால் மாநில மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.
இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.
ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளி மாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.
ஆம், வெளிமாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக் கற்கலாயினர்.
அத்தோடு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழிசெய்திருந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக் கற்கலாயினர்.
இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர், ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.
தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.
ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வந்தேறுகுடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.
மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.
இன்று ஈழப்பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.
தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.
தமிழரின் தனித்தன்மை என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும்.
அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.
அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதேநிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.
காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப்பிடிக்குள் சிக்கியுள்ளனர்.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?
இதற்குக் காரணம் யார்?
இதில் திராவிடத்தின் பங்கு என்ன?
- தொடரும்...
பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக வாழ்ந்தான்....
சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.
சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.
இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.
நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.
அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...
இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.
அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப...
இதன் பொருளைப் பாருங்கள்..
விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.
இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.
இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியதொன்றாகும்.
விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.
எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்ப ராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி.. இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?
தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தான்...
இப்போது திடீரென்று சில தேசப்பற்று உள்ளவர்கள் வந்து விடுவார்கள்...
“வரி இல்லாமல் எப்படி ஒரு அரசாங்கம் செயல்பட முடியும்..?
இது முட்டாள்தனமான பதிவு என்று..”
ஆம், வரி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான ஒன்று, அதை மறுக்கவில்லை..
ஆனால் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்..
நாம் நம்முடைய அடிப்படை தேவைகளான உணவு, நீர், இருப்பிடம், கல்வி, மருந்துவம் போன்ற பல அடிப்படை வசதிகளுக்கு தான்
அதிகமாக வரி செலுத்துகின்றோம்..
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், அதற்கு பன்மடங்கு வரி விதிக்கும் சனநாயக அரசாங்கம் எதற்காக..? யாருக்காக இருக்கின்றது..?
மக்களுக்காகவா.? இல்லை வணிகர்களுக்காகவா..?
கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன கிழித்தார்?
ஆந்திரன், கன்னடன், மலையாளி பிரிந்த பின்னும், எஞ்சிய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க பார்ப்பானும், வட இந்தியனும் தடுக்கிறான். இதனை தமிழன் எப்படி சகிப்பான்.
அவன் சகித்தாலும் நான் எப்படி சகிப்பேன். தமிழ்நாடு பெயர் வைக்க முடியவில்லையென்றால், நானும் என் கழகமும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்?
இந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் வைக்க இந்திய அரசு மறுத்தபோது ராமசாமி ஆற்றிய உரை..
ஆனால் ஒரு தமிழன் களத்திலே இறங்கினான். அவன் சங்கரலிங்க நாடார்.
விருதுநகரில், 1956 ஜூலை 27..
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வை என சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினான்.
எத்தனையோ அறிஞர் சொல்லியும் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. எழுபத்தாறாம் நாள் உடல்நிலை மோசமாகி உயிரையும் இழந்தான்..
கேள்வி..
இனத்தின் மானம் பெரிது என சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்த சங்கரலிங்க நாடாரின் எழுபத்தாறு நாள் போராட்டத்தில்,
ராமசாமி அவனை சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தாரா?
தன் பத்திரிக்கையில் உண்ணாவிரதம் பற்றி தினமும் உணர்ச்சி பொங்க தலையங்கம் எழுதினாரா?
அல்லது இறுதிச்சடங்கில் தான் கலந்து கொண்டாரா?
தமிழ்நாடு என பெயர் வைக்க உயிரையே இழந்த சங்கரலிங்க நாடாரின் போராட்டத்தில்,...
தமிழ்நாடு பெயரிடாவிட்டால் உயிரோடு வாழ்ந்து என்ன பயன் என சொன்ன போலி புரட்சியாளர் ராமசாமி என்ன கிழித்தார்?
மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்...
அத்திப் பூத்தாப்போல இருக்கே? என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.
மூலிகையின் பெயர்- அத்தி
தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS AURICULATE
தாவரக்குடும்பம் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன..
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்.
அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது.
அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.
உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம். மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.
2 தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
அத்திப் பழத்தின் சத்துகள் : அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (1 பழம் = 50gm) (% சராசரி தினப்படி சத்து)
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
புரதம்-2 கிராம்,
கால்ஷியம்-100 மி.கி,
இரும்பு-2 மி.கி.
அத்தியின் மருத்துவப் பயன்கள் : அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
நீரழிவு குணமாகும்: அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.
அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப் போக்கு தீரும்.
அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்றுவேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.
காண அரிதாகிவிட்ட இம்மரத்தை அதிகளவில் விவசாய நிலங்களில் நட்டு வளர்த்து வருவது நலம்.
வீட்டுத்தோட்டத்தில் இடம் இருந்தால் அங்கேயும் வளர்க்கலாம்...
ஏலியன்களிடமிருந்து பூமியை பாதுகாக்க ஆளெடுக்கிறது நாசா.... சம்பளம் 1.87 லட்சம் டாலர்...
பூமியை ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரியை நாசா நியமிக்க உள்ளது. அவருக்கு 187000 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்க உள்ளது.
வேற்றுகிரகவாசிகளின் பாதிப்புகளிலிருந்து பூமியை பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க உள்ளது நாசா. கிரக பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளவர், வேற்றுகிரகவாசிகளால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கவும், அதேபோல மனிதர்களால் வேறு கிரகங்கள் மற்றும் நிலவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அவருக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது என நாசா கூறியுள்ளது.
கிரக பாதுகாப்பு அதிகாரியின் வேலைகள்..
விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியிலிருந்து அனுப்பப்படும் மனிதர்கள் மற்றும் ரோபோ எந்திரங்கள் மூலம் பூமியைச் சேர்ந்த உயிரினங்கள் வேறு கிரகங்களுக்கோ அல்லது நிலவுக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல வேறு கிரகங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் மீண்டும் பூமிக்கே திரும்பும் விண்கலன்கள், ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் மூலமாக, வேற்று கிரக உயிரினங்கள் பூமிக்கு வந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் நாம் மும்மரமாக ஆய்வு மேற்கொண்டு வரும் செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனால் அங்கு உயிரினங்கள் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகையால் செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்பும் விண்கலன்களில் வேற்றுகிரக உயிரினங்கள் இருக்கிறதா என்று பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல பூமியில் இருந்து செல்லும் மற்றும் பூமிக்கு திரும்பி வரும் அனைத்து விண்கலன்களையும் பாதுகாப்பு அதிகாரி சோதனையிட வேண்டும்.
இந்த வேலைக்கான தகுதிகள்..
கிரக பாதுகாப்பு அதிகாரி வேலைக்கு தேர்தெடுக்கப்படும் நபர், ஒரு அரசாங்கத்தின் ராணுவம் அல்லாத உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். கணிதம், பொறியியல் அல்லது உயிரினங்கள் குறித்த அறிவியல் தொடர்பான பாடத்தில் உயர்கல்வி முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டும், அதிகமாக படிக்க, எழுத வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மேம்பட்ட அறிவுடன் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் நாசா கூறியுள்ளது...
தமிழரின் கால அளவுகள்...
தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர். அதன் விபரம்...
60 தற்பரை=ஒரு வினாடி.
60 வினாடி=ஒரு நாழிகை
60 நாழிகை=ஒரு நாள்
3.75 நாழிகை=ஒரு முழுத்தம்.
2 முழுத்தம்=ஒரு யாமம்.
8 யாமம்=ஒரு நாள்.
7 நாள்=ஒரு கிழமை.
15 நாள்=ஒரு பக்கம்.
2 பக்கம்=ஒரு மாதம்.
2 மாதம்=ஒரு பருவம்.
3பருவம்=ஒரு செலவு.
2 செலவு=ஒரு ஆண்டு.
365நாள், 15நாளிகை, 31வினாடி, 15 தற்பரைகள் = ஒரு ஆண்டு...
வெப்பத்தை பூட்டி வைக்க இயலுமா....?
மின்னாற்றலை சேமிக்கக்கூடிய சேம மின்கலங்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். இவைகளைப் போன்று வெப்ப ஆற்றலை சேமித்து வைத்து மீளவும் பயன்பாட்டிற்கு அளிக்கவல்ல சேம வெப்ப கலங்கள் சாத்தியமா?
இதுவரையில் வெறும் வினாவாக இருந்துவந்த இந்த வாக்கியத்திற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
மசாசூச(ஸ)ட்சு(ஸ்) தொழில் நுட்பக்கழக அறிவியலாளர்கள் சூரியனிடமிருந்தோ, வேறு வெப்ப மூலங்களில் இருந்தோ வெப்ப ஆற்றலை பெற்று சேமிக்க முடியும் என்றும், நமக்குத் தேவையான போது மீளவும் பெறமுடியும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
ருத்தேனியம் (Ruthenium) என்னும் தனிமத்திற்கு ஒளி ஆற்றலை சேமிக்கும் திறன் உண்டு. மிக அரிதாக இந்த தனிமம் கிடைப்பதால் இதன் விலையும் அதிகம். ருத்தேனியத்தின் கூட்டுப் பொருளான fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் வெப்ப ஆற்றலை சேமித்து வைக்கவும், நாம் வேண்டும் போது வெப்ப ஆற்றலை மீள அளிக்கவும் வல்லது என இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
1996ல் கண்டுபிடிக்கப்பட்ட fulvalene diruthenium எனும் கூட்டுப்பொருள் ருத்தேனியம் ஐக்காட்டிலும் விலை குறைவானது. அக்டோபர் 20ல் வெளியாகி உள்ள Angewandte Chemie என்னும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
சூரிய ஒளியை fulvalene dirutheniumத்தின் மூலக்கூறு ஈர்த்துக்கொள்ளும்போது அணுக்களின் ஆற்றல் மட்டங்கள் உயர்வடைகின்றன. இவ்வாறு உயர்வடைந்த ஆற்றல் மட்டங்கள் நிலையாக இருப்பதால் வெப்ப ஆற்றலை சேமித்தல் சாத்தியமாகிறது.
ஒரு சிறு அளவிலான வெப்பத்தையோ, வினை ஊக்கியையோ அளிப்பதன் மூலம் மூலக்கூறு தன்னுடைய பழைய வடிவத்தை அடையும். இந்த நிகழ்வின் போது வெப்ப ஆற்றல் மீள வெளிப்படும். இத்தகைய வெப்ப சேமிப்புக்கலங்களின் மூலம் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையில் மீளப் பெற முடியுமாம்.
இந்த வெப்ப நிலையைக்கொண்டு வீட்டின் உட்புறத்தை வெப்பமாக்கலாம். அல்லது ஒரு வெப்ப மின் உற்பத்தி சாதனத்தை இயக்கலாம். வெப்ப ஆற்றலை ஒரு எரிபொருளாக சேமிக்க இயலும்; அதுவும் நீண்ட காலம் சேமிக்க முடியும் என்பதும் கூடுதல் சிறப்புகள். இவை எங்கும் எடுத்துச் செல்லக் கூடியவை.
ருத்தேனியம் அரிதாக கிடைக்கக்கூடிய தனிமம் என்பதால் விலையும் அதிகம். ஆனால் ருத்தேனியம் ஐக்கொண்டு மூலக்கூறின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளை அறிவியலாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர். இனிமேல் ருத்தேனியம் ஐப்போன்று செயல்படக் கூடிய விலை குறைவான எளிதில் கிடைக்கக்கூடிய தனிமங்களையோ, கூட்டுப் பொருட்களளயோ உருவாக்குவது இந்த ஆய்வின் அடுத்த இலக்கு...
Subscribe to:
Posts (Atom)