12/04/2017
40 நாள் சிறைவாசத்திற்கு பிறகு ராமசீதாவிற்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்...
வாட்சப் ஃபேஸ்புக்கில் வந்ததைத் தான் நான் சொன்னேன் புதிதாக ஏதும் நான் சொல்லவில்லை என தனது ஜாமின் மனுவில் ராமசீதா கூறியுள்ளார்.
மேலும் தான் 40 நாட்கள் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
தான் ஒரு அப்பல்லோ மருத்துவர் ஜெயலலிதா வரும் போதே இறந்து தான் வந்தார் என தீபா கூட்டத்தில் இவர் முன்னர் பேசியிருந்தார் அதற்காக இவரை போலிசார் கைது செய்திருந்தனர்...
இலுமினாட்டி ரோத்சைல்ட் (Rothschild)...
ரோத்சைல்ட் (Rothschild) ஒரு யூதன். ஜெர்மனியை சார்ந்தவன். இவனே உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறான்.
இவன் குடும்பம் தொடக்கத்தில் பொற்கொல்லர் வேலை செய்தனர். இவன் தன் வீட்டில் ஓர் தங்க வங்கி (gold bank) ஆரம்பித்தான்.
ஊரில் உள்ள செல்வர்கள் வெளியூர் போகும் போது நகையை இவனிடம் கொடுத்து ரசீது வாங்கி சென்றனர்.
இவ்வாறு சென்று கொண்டிருந்த போது இவன் கொடுக்கும் ரசீது சீட்டை தற்போது உள்ளது போல மதிப்பு உடையதாக மக்கள் எண்ணிணர். இது பின்னாளில் பணமாக மாறியது. இதுவே முதல் வங்கி.
இதை சிறிது சிறிதாக பக்கத்து ஊர்களுக்கும் பரப்பினான். தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இத்தணை முறை ரசீது வழங்களாம் என்ற முறையை கொண்டு வந்தான்.
தங்கம் இல்லாதவனுக்கும் ரசீது வழங்கி வட்டி வாங்கினான். இவ்வாறே தற்போதைய வங்கி முறை உருவானது.
இவன் தன் வீட்டு முன்பு ஒரு மேசை போட்டு இவற்றை செய்து கொண்டிருந்தான். மேசை என்பதன் லத்தீன் மொழி பெயர்ப்பு பாங்கா (Banka) . இதிலிருந்து வந்ததே பாங்கு (Bank).
இவன் அமெரிக்காவில் சார்ச் கார்டு (Charge card) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான். இதுவே தற்போது உள்ள கிரிடிட் கார்ட்களுக்கு (Credit card) முன்னோடி.
நெப்போலியன் போர் செய்த போதும், இரண்டாம் உலகப்போரின் போதும் இரு தரப்பிற்கும் கடன் உதவி செய்தது இவனே.
இருதரப்புக்கும் பண உதவி செய்துட்டு நம்ம அடிச்சிக்கிறத உட்கார்ந்து ரசித்து வட்டியும் வாங்குறான்னா எப்படிபட்ட மொல்லமாரினு பாருங்க.
இவன் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பங்குச்சந்தை பங்குகள்) கட்டுப்படுத்துகிறான்.
அமெரிக்க டாலரினை மட்டும் அல்ல அனைத்து நாடுகளின் பணத்தையும் இவனது குடும்ப வாரிசுகளே அச்சிடுகின்றன. உலகிலேயே அதிக செல்வம் படைத்தவர்கள் இவர்களே.
நாம் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிறுவும் தகவல் என்ன என்றால் இந்திய கிழக்கிந்திய கம்பேனியின் உரிமையாளன் வேறு யாரும் அல்ல இவன் தான்.
தற்போதும் இவனுடைய நிறுவனங்கள் இவன் பெயரிலையே இந்தியாவில் இயங்கி வருகின்றன.
நாம் அடிமையா யார் சொன்னா? அப்படினு பல பேர் சொல்லிட்டு திரிகிறாங்க. இப்போ சொல்லுங்க நாம யாரு?
இன்னும் இருக்கு இவனை பற்றி பிறகு பார்க்கலாம்...
பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம்.. தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்...
திருப்பூரில் பெண்களை தாக்கியது பற்றி விளக்கமளிக்க தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, திருப்பூர் ஏடிஎஸ்பி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்திலும் அறைந்தார். காவல் துறையினரின் இந்த அராஜக போக்கிற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெண்களை தாக்கியது பற்றி விளக்கமளிக்க தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, திருப்பூர் ஏடிஎஸ்பி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 11...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனத் தொடரானது இனி பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்ட உள்ளது. அப்பொழுது தான் மக்கள் இதன் உண்மைத் தன்மைகளை முழுமையாக புரிந்து கொண்டு, இதன் நம்பகத் தன்மையின் மேல் மிகுந்த அக்கறை கொள்வார்கள்.
உலகத்தில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்ற கேள்வி மக்களின் மனதில் எழலாம். இது இயற்கையானதே. வரும் துன்பங்களை கண்டு, கண்டு சளித்துப்போன மக்களுக்கு இதுவரை காணாத பல சம்பவங்களின் நிகழ்வுகளைப்பற்றி இந்த தீர்க்க தரிசனத்தின் வாயிலாக அதனை அறியும்பொழுது அவர்களால் இதனை ஏற்றுக்கொள்வது என்பது அசாதாரன விஷயமாகும்.
ஆனால் இந்த பதினொன்றாம் தீர்க்க தரிசனம் இது போன்ற நிகழ்வுகள் விரைந்து நடக்கப்போவதாக கூறுகின்றன.
11-ம் தீர்க்க தரிசனம் இங்கு எதைப்பற்றி கூறுகிறது என்று சற்று ஆழ்ந்து கவனிப்போம். அதாவது கலியுகக்கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானின் அற்புதங்கள் தமிழ்நாட்டில் துவங்கிட உள்ளதாகவும், அது சமயம் ஸ்ரீ போகர் என்ற சித்தரின் வருகையும் அவரின் அற்புதங்களும் தென்தமிழகத்தில் நிகழ உள்ளதாக 11-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகின்றது.
ஸ்ரீ போகர் என்ற மகா சித்தர் தனது தவ வலிமையால் உருவக்கப்பட்ட ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சவடிவமான ஸ்ரீ தண்டாயுதபாணி எனும் நவபாஷான சிலைகள் மொத்தம் இரண்டு என்றும்,
தற்பொழுது ஒரு சிலை மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்றும்,
மற்றொரு நவபாஷான சிலை கேரளத்தில் மிக, மிக பாதுகாப்பான முறையில் ஒரு குகையில் வைக்கப்பட்டு பராமரித்து வரப்படுகின்றது என்றும்,
இந்த சிலையின் இரகசியம் தற்சமயத்தில் கேரளத்தில் இருந்தே ஒரு நம்பூதிரியால் வெளிப்படுத்தப்படும் என்றும் 11-ம் தீர்க்க தரிசனம் ஒரு அற்புதமான தீர்க்க தரிசனத்தை எடுத்துக்கூறுகிறது.
இந்த 11-ம் தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்பட்ட அதாவது ஸ்ரீ போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷான சிலை மீண்டும் தமிழகத்திற்கு முறையாக கொண்டு வரும் சமயத்தில் தமிழ்நாட்டில் அறிய பல சம்பவங்கள் நடைபெறும் என்றும்,
அது மட்டுமின்றி ஸ்ரீ முருகப்பெருமானின் அற்புதங்களை மக்கள் காணும்படி அமைய உள்ளதாக தீர்க்க தரிசனங்கள் ஒரு உண்மையை எடுத்துக்கூறுகின்றன.
திருச்செந்தூரில் உள்ள கடலானது உள்வாங்கி மூன்று நாட்களுக்கு பிறகே பழைய நிலைக்கு திரும்பும் என்றும்,
அச்சமயத்தில் இருந்தே 11-ம் தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் நிகழ்த்துவங்கும் என்றும், இந்த கடல் உள்வாங்கும் சம்பவம் ஒரு பெளர்னமி அன்று நடபெறும் என்று 11-ம் தீர்க்க தரிசனம் சில உண்மைகளை இங்கு எடுத்துக் கூறுகிறது.
மேலும் 11-ம் தீர்க்க தரிசனம் நடந்து முடியும் சமயத்தில் இந்திய அரசலமைப்பில் ஒரு மாற்றம் நிகழும் என்றும் அந்த தீர்க்க தரிசனம் மேலும் எடுத்துக்கூறுகிறது.
கலியுகக் கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானின் சந்நதி ஒன்றில் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், அது தைத்திங்கள் அன்று நடைபெறக்கூடிய நிகழ்வு என்றும் 11-ம் தீர்க்க தரிசனம் மேலும் எடுத்துக் கூறுகிறது.
மேலும் இச்சமயத்தில் தமிழக அரசியலில் பல திருப்பங்களும், மாற்றங்களும் ஏற்படும் என்றும், இது மக்களிடையே சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு நிகழ்வாக அமையும் என்று 11-ம் தீர்க்க தரிசனம் இங்கு மேலும் ஒரு நிகழ்வுப்பற்றி எடுத்துக்கூறுகிறது.
தமிழகத்தின் மிக தொன்மையான கல்வெட்டு ஒன்று தஞ்சை மண்ணிலிருந்து கிடைக்கப்பெறும் என்றும்,
அந்த கல்வெட்டில் உள்ள குறிப்பை தமிழ் வல்லுநர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் கண்டறிந்து வியந்து நிற்பார்கள் என்றும்,
அந்த நாளிலிருந்து மூன்றாம் தினத்தன்று 11-ம் தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் துவங்குவதற்கான பொற்காலம் என்றும்,
இதுவே 11-ம் தீர்க்க தரிசனம் மெய்பட நிகழ உள்ளதற்கான ஆதாரமாக மக்கள் கொள்ள வேண்டும் என்று தீர்க்கதரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.
காலத்தால் அழியாத காவியம் ஒன்று தமிழகத்தில் கூடிய விரைவில் உருவாகிட உள்ளதாக மேலும் சில தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன.
இந்த காவியத்திற்கு ஆதிசக்தியின் பிரபஞ்சம் வியக்கும் அதிசயம் என்று பெயரிடப்படும் என்று தீர்க்க தரிசனம் மேலும் சில உண்மைகளை கூறுகிறது.
பன்னாட்டு அறிஞர்கள் ஒன்றுகூடி தமிழகத்திற்கு வருகை தந்து உலக அளவில் ஒரு புதுமையை படைத்திட கைகோர்ப்பார்கள் என்றும்,
அது தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் நடைபெறும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் சில உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.
நவகோள்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும் சம்பவம் ஒன்று வானத்தில் அதிசயமாக நிகழ உள்ளது என்றும், அச்சமயத்தில் பூமியில் பல மாற்றங்களும், அழிவுகளும் ஏற்படும் என்றும்,
இதனை விஞ்ஞானிகளே முன்னறிவிப்பு செய்வார்கள் என்றும் மேலும் ஒரு தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.
எகிப்திய பிரமீடு உள்ள பகுதியில் ஒரு பேரழிவு நடைபெறும் என்றும், அச்சமயத்தில் பூமியில் ஏற்கனவே புதையுண்டுள்ள ஒரு அதிசய மிக்க பிரமீடு வெளிவரும் என்றும்,
அந்த பிரமீட்டில் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும், கடவுள் உருவங்களும் காணப்படும் என்றும்,
இதனை தேடித்தான் நமது முன்னோர்கள் அங்கு சென்றார்கள் என்ற உண்மையை உலகமே அறிந்து வியக்கும் என்றும்,
அங்குள்ள பொக்கிஷங்கள் சில காலத்திற்கு பின் இந்தியாவிற்கு வந்து சேரும் என்றும் மற்றொரு தீர்க்கதரிசனம் சில உண்மைகளை எடுத்துக்கூறுகிறது.
ஸ்ரீ கண்ணன் வாழ்ந்த துவாரகை மிகப்பெரிய வரவேற்பை பெற உள்ளது என்றும், அங்கு மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணனின் அற்புதங்கள் துவங்கிட உள்ளது என்றும்,
அது நிகழ்வதற்கு முன்பாக ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் இந்திய மாநிலங்கள் முழுவதும் வெளிப்படும்படியான பல அதிசய நிகழ்வுகள் நடக்க இருப்பதாக 11-ம் தீர்க்க தரிசனத்தின் கோட்பாடுகள் மேலும் சில நிகழ்வுகளை எடுத்துக்கூறுகிறது.
மேலும் தமிழகத்தில் இனி பல அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பல அதிசயங்களை தமிழகம் சந்திக்க உள்ளதாகவும் அது எடுத்தக்கூறுகிறது.
பூலோக அமைப்பில் வட, தென் துருவங்களில் மாபெரும் மாற்றங்கள் நிகழ உள்ளதாகவும், அதன் காந்தப் புலத்தன்மையில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும்,
இது உலக விஞ்ஞானிகளுக்கு கவலை அளிக்கும் என்றும், அச்சமயத்தில் உலகில் மிகப்பெரிய அதிசயமொன்று நடைபெறும் என்று 11-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ள உப தீர்க்க தரிசனங்கள் மேலும் சில உண்மைகளை எடுத்துக் கூறுகின்றன.
மேற்கண்ட தீர்க்க தரிசனங்கள் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும், அது நிகழும் காலம் மிக, மிக சமீபமாக உள்ளது என்றும்,
அச்சமயத்தில் உலக மக்கள் தீர்க்க தரிசனத்தின் மீது கொள்ளும் நம்பிக்கை அகாயத்தில் ஒரு ஒளி போன்று பிராகசிக்கும் என்று தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தை இழிவுபடுத்திய பாஜக கே.டி ராகவன்... வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்...
பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 29 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள்.
இதனை கிண்டலடிக்கும் வகையில் எங்கே போகிறோம்...? தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க வந்தால் ஆடையை அவிழ்த்து காட்டி சவால்.... கடனை திருப்பி கேட்டால், அதற்க்கும் சாலையில் ஆடையை அவிழ்த்து சவால்.. 50ஆண்டு கழக ஆட்சிகளின் சாதனைகள் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. அது தொடர்பான சில பேஸ்புக் பதிவுகள்...
நேற்று வந்த ADSP பாண்டியராஜனை இன்று சாமளாபுரம் பக்கம் காணவில்லை...
திருப்பூர் சாமளாபுரத்தில் நேற்று போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த தலைமை தாங்கி பொதுமக்களை தாக்கிய ADSP பாண்டியராஜன் இன்று அந்த இடத்திற்கு வரவில்லை அவருக்கு பதிலாக வேறு போலிஸ் அதிகாரிகள் அங்கே வந்துள்ளனர்.
தனது அவலுகத்திலேயே அவர் இருப்பதாகவும், பத்திரிக்கையாளர்கள் இவர் மீது கொடுத்த புகாரில் விசாரனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 11...
ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது, ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார்.
இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.
ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர்.
ஒரு ஆராய்ச்சியாளர் இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம் என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.
சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார்.
சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.
இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் ரகசிய இந்தியாவில் ஒரு தேடல் என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார்.
என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.
அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர்.
அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.
தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர். எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்? என்று நரசிங்க ஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்..
(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.
பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.).
மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?
சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...
இலுமினாட்டி ஊடகங்களை சாடும் கவண்...
சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'கவண்' கமர்ஷியல் படம் என்பதையெல்லாம் தாண்டி இந்த படத்தைப் பற்றி எழுதத் தூண்டியது இப்படத்தில் துணிச்சலாக பேசிய சில விடயங்கள்..
பணத்திற்காக ஊடகங்கள் செய்யும் தில்லு முல்லுகளை நச்சென சுட்டிக்காட்டியுள்ளது பாராட்ட வேண்டியது.
இதுவரை எவரும் சொல்ல மறுத்த சதாம் உசேன் கொலையின் உண்மைத் தன்மையையும் அதன் உலக அரசியலையும் விளக்கியது.
சிறுபான்மையினரும், இஸ்லாமிய சகோதரர்களும் எப்படி சமூக விரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டியது.
குறிப்பாக இன்றைய ஊடகங்கள் கடை பிடிக்கும் மேல்தட்டுவர்க்க மனநிலையை சுட்டிக் காட்டியது.
இது வெறும் தமிழ் ஊடகங்களை சாடும் படம் என நீங்கள் நினைத்தால் அது அறியாமை. ஒட்டுமொத்த உலக ஊடகங்களும் இவ்வாறு தான் செயல்படுகின்றன.
காற்றுவெளியிடை போன்ற மேல்தட்டு மனநிலையை ஊக்குவிக்கும் ஹைடெக் குப்பைகளை பாராட்டும் அதிமேதாவிகள் இதுபோன்ற படங்களை குறைசொல்வது ஒன்றும் பெரிதல்ல.
சில குறைகள் இருப்பினும் இதுபோன்ற துணிச்சலான படங்கள் பேசும் அரசியலை கவனிக்க வேண்டும்....
சித்தர் ஆவது எப்படி - 11...
பிறவி தாண்டிய அனுபவத்தில் கனல் பெருக்கம் பெறல்...
எதுவாக இருந்தாலும் எந்த உடைமைகளை கொண்டு இருந்தாலும், எந்த எந்த பொருள்களை சொந்தமாக கொண்டு இருந்தாலும், ஏன் இந்த அண்டத்தையே தனக்கு சொந்தமாக கொண்டு இருந்தாலும், அதை இயக்குவதற்கும் பயன் படுத்துவதற்கும், வேண்டிய ஆற்றல் அறிவு நம்மிடம் இல்லையென்றால் அவைகளால் என்ன பலன் என்ன பயன் ?
அலெக்ஸாண்டர் பரந்த சாம்ராஜ்ஜியத்தை வென்றான்.. ஆனால் அதை அனுபவிக்க ஆற்றல் இழந்து உயிர் பிரிந்து தன் சொந்த ஊர் திரும்புவதற்கு முன்பே, மரணம் ஒன்றை அடைந்து விட்டான்.. அவனுடைய முயற்சியால் பலத்த உயிர் சேதங்கள்...
அத்தனையும் விரையமானதற்கும், விரையமாக போவதையும் அறியக்கூடிய அறிவும், அந்த அறிவை அடையும் ஆற்றல் இல்லாமல் போனது ஒரு காரணம் என்பது ஒரு தெளிவான விசயம்.. சரி மீண்டும் அலெக்ஸாண்டர் பிறந்து விட்டான் என்று வைத்து கொள்வோம்..
அவன் முன்பு வென்ற அந்த பரந்த சாம் ராஜ்ஜியத்தை மீண்டும் எனக்கே என உரிமை கொண்டாட முடியுமா ? நிச்சயமாக முடியாது. காரணம் அவன் இறந்து பிறந்த இடைப் பட்ட காலத்தில் அந்த பரந்த சாம்ராஜ்ஜியம் வேறு பலரின் ஆக்கிரமிப்புக்கு சொந்தமாகி விடும்..
அலெக்ஸாண்டர் மீண்டும் அதே போர் அதே உயிர் சேதம், அதே வீர செயல் செய்தால் தான் மீண்டும் பெற முடியும்.. அப்படி பெற்ற பின் மீண்டும் அதே கதைதான்..
தன் உயிரை காத்துக் கொள்ளாத அவன், மீண்டும் அவற்றை இழந்து, விரையமாக்க வேண்டியது தான்... அவன் ஒரு முட்டாள் என்று சொன்னால் தவறு ஒன்றும் இல்லையே..
அலெக்ஸாண்டர் ஒரு முட்டாள் என்ற முத்திரை குத்த வேண்டியவனை மாவீரன் என்று அல்லவா போற்றி புகழுகின்றது..?
இதிலிருந்து ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்ளப் படவேண்டியது என்ன வென்றால் உலக புகழ் பெற்ற அனைவரும் முட்டாள்கள்..
இந்த உண்மை மனிதனுக்கு எப்பொழுது தெரியவரும் என்றால் அவன் பிறவி தாண்டிய ஒரு அனுபவத்தை பெற்றால் ஒழிய அறிந்து கொள்ள முடியாது..
எல்லாம் தோன்றும், பொறி புலன்கள் வழியாக வெளிப்படும், இந்த தோற்ற உலகமாகிய இந்த பிறவி, இந்த வாழ்வுக்கு அப்பால், இருக்கும் தோன்றா நிலையாகிய பிறவிக்கு அப்பால் ஆன ஒரு அனுபவத்தை அறியும் போது மட்டுமே. எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ, அந்த ஒன்றை அறிய முடியும்...
அந்த ஒன்றை அறிந்து விட்டால் அவன் எல்லாம் அறிந்தவன் ஆகிவிடுவதால் அவன் ஒரு போதும் முட்டாள் ஆக முடியாது...
அந்த நிலையில் எது நிரந்திரம் என்பதை அறிகின்ற அறிவும், அதை பெறுகின்ற திறனும் உடையவனாக தகுதி பெறுவதால், நிரந்திரத்தை பெற்று விட்ட காரணத்தினால், அவன் ஒரு போதும் ஒரு நாளும் முட்டாள் ஆக முடியாது..
சரி, இந்த பிறவி தாண்டிய அனுபவத்தை, இந்த பிறவியிலேயே பெற முடியுமா ? என்ற கேள்வி இயல்பாகவே எழலாம்..
இந்த பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவத்தை பெற முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது..
காரணம் மனம் பிறவியில் மட்டுமே உள்ளது.. மனம் மரணத்தில் இல்லை... மனம் மூலமாக அறியும் அறிவும் மரணத்தில் இல்லை..
ஆனால் உயிரோடு இருக்கின்ற பொழுது மரணத்தின் தன்மை அறிகின்ற அந்த நிலையில், மனம் இருக்கும். அதனால் அறிவும் இருக்கும்..
இந்த நிலையில் தான் அந்த ஒன்றை அதாவது எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ, அந்த ஒன்றை மனதால் அறியவும், அறிவால் அனுபவப் படவும் முடியும்... இந்த நிலை தான் தெளிவு நிலை அல்லது ஞான நிலை என்பர்..
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. ஞானம் அடைந்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் அல்ல.. அவர்கள் அறிவு களஞ்சியங்கள் அல்ல.. எதையுமே அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் அவர்களிடம் துளியும் இருக்காது.. அவர்களுடைய சித்தம் எந்த எண்ணப் பதிவுகளையும் தாங்கி நிற்காது..
ஆனால் தேவையான ஒன்றை, நொடியில், அறிவு களஞ்சியமாகிய பேரறிவிலிருந்து, பேரறிவாகிய மிக பெரிய கணணியில் ( computer server ) பெறும் ஆற்றலை உடையவர்கள்..
ஆனால் சாதாரண மனிதனோ தானே அறிவு களஞ்சியமாகி தன் சித்தத்தில் அதி மிஞ்சிய பளுவினை ஏற்றி ஏற்றி, நிலை தடுமாறி போகின்றான்.. அறிவு குவியலிலே விழுந்து, தேவையான அறிவை தேவையான நேரத்தில் பெற முடியாமல் அல்லல் படுகின்றான்..
அறிவு குவியலிலே விழுந்தவனுக்கு தேவையான அறிவினை உடனே எடுத்துக் கொள்ள முடியாமையால், அதற்கு ஒத்தது போல் தோன்றும் தவறான அறிவினை தேர்ந்தெடுத்து முட்டாள் ஆகிறான்..
ஒரு ஞானி அறிவிலே குழந்தை போல் தோன்றுவான்.. அவன் சித்தத்தில் பாரம் எதுவும் இல்லையாதலால் என்றும் மகிழ்வுடன் இருப்பான்..
ஆனால் ஆபத்து காலங்களில் தன்னை முறையாக காத்துக் கொள்ளும் புத்திசாலியாக இருப்பான்.. ஆனால் அனைத்தையும் கற்ற பண்டிதனோ, சித்தத்தின் சுமையால் சிரிக்கவே மறந்து போய் இருப்பான்...
இப்படியான சூழ்நிலையில் பிறவி தாண்டிய அனுபவத்தை பெற நமக்கு உதவுவது கனல் ஒன்றே.. அதன் மூலம் மட்டுமே நாம் பேரறிவோடு தொடர்பு கொள்ள முடியும்..
பேரண்ட கணணியோடு தொடர்பு கொண்டு, சித்தத்தை வெறுமை அதாவது வெற்றிடமாக்கி, பளு இன்றி வேண்டிய அறிவினை வேண்டிய நேரத்தில் பெற முடியும்.. வேண்டிய நேரம் என்பது மிக முக்கியம்.. அதுவே புத்தியாகும்..
காலம் கடந்து வருகின்ற அறிவால் ஒரு பயனும் இல்லை.. காலம் கடந்த அறிவினை பெறுகின்றவனும் ஒரு முட்டாளே..
அலெக்சாண்டர் தான் உயிர் போகும் தருவாயில் தன் தவறை உணர்ந்து காலம் கடந்து பெற்ற அறிவால் தான் வென்ற பரந்த சாம்ராஜ்ஜியங்களால் ஒரு பலனும் இல்லை என்பதை குறிக்கவே தன் சவப்பெட்டியில் தன் இரு கைகளை வெளியே நீட்டி வைத்து சவஊர்வலம் செல்ல விரும்பினான்..
அவன் மட்டும் அல்ல இன்றும் அவ்வாறே எல்லோரும் இருக்கிறோம்.. காலம் கடந்து வரும் அறிவு புத்திக் கூர்மை இன்மையாலே என்பதை நாம் மறக்கக் கூடாது..
கனலை மட்டும் பெற்றால் போதாது.. தேவையான அறிவினை தேவையான நேரத்தில் பெற உதவும் புத்தியை பெற, போதுமான கனல் பெருக்கத்தையும் பெற அவசியம் ஆகிறது.. அந்த கனல் பெருக்கம் பிறவி தாண்டிய அனுபவத்தில் உறுதியாக பெற முடியும்..
மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் கனல் என்பது பிறவியில் உயிரோடு இருக்கும் போதும் இருக்கும்.. பிறவி தாண்டிய அனுபவமான மரணத்திலும் இருக்கும்.. தேக மரணத்தில் பெறுகின்ற கனல் நம் கைவசம் இல்லை..
ஆனால் உயிரோடு உள்ள போதே, யோகத்தின் மூலம் பிறவி தாண்டிய அனுபவ நிலையில் கனலை வேண்டிய அளவு பெற முடியும்..
எட்டு ஆகிய எண் குணம் பிறவியில் உள்ளது. ஆனால் அருளும் ஆற்றலும் ஆகிய இரண்டு பிறவி தாண்டிய நிலையில் உள்ளது.. இந்த எட்டும் ( அ என்பது ) இரண்டும் ( உ என்பது ) கூடிய அனுபவமே பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவமாகிய பத்தும் ( ய என்பது ) சேர்ந்த கனல் அனுபவம் என்பது...
இந்த அ, உ, ய என்பது தமிழ் எண்கள் எட்டு, இரண்டு, பத்தை குறிக்கும்... எட்டு இரண்டை கூட்டி எண்ணவும் அறியீர் என்ற வள்ளலார், அந்த கனல் அனுபவத்தை பெற முடியாத அவல நிலையையே குறிப்பால் சுட்டி காட்டுகிறார்...
கனல் பயிற்சியை சித்தர்கள் உயிராக கொண்டனர்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 10...
ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர் பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார்.
1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.
முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள்.
அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.
ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன.
பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார்.
ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார்.
இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.
அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை.
ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.
பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார்.
(அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்).
உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார்.
ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.
சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?
அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.
இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை...
மேலும் பயணிப்போம்...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 10...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனத் தொடரில் இன்று நாம் காணும் விஷயம் சாதாரணமானதன்று. உலக மக்கள் யாவரும் எதிர்பார்க்கும் யுகமாற்றம் ஏற்படும் இக்காலக்கட்டத்தில் இந்தியாவின் எல்லைகளை நாம் பாதுகாக்கும் அவசியத்தில் தற்போது உள்ளோம்.
இது சாதாரணச் செய்திகளாகவோ (அ) ஒரு தெளிவில்லாத தீர்க்க தரிசனமாகவோ நாம் எண்ணிவிடக் கூடாது, கடல் எல்லையில் பல பயங்கர ஊடுருவல் நடக்கும் காலம் இதுவென்று இன்றைய தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் எச்சரிக்கை செய்கின்றன.
உலக மக்களை காத்திடும் அவதாரம் இப்பூமியினில் கால் ஊன்றும் நேரம் தற்பொழுது வந்துவிட்டது என மேலும் ஒரு கூடுதல் செய்தியினை தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் எடுத்துக் கூறுகிறது.
மேலும் ஐரோப்பிய நாடுகளையே கதி கலங்க வைக்கும் ஒரு மாபெரும் புயல் உருவாகி வருகின்றது என்றும், அந்த புயலின் தாக்கம், நாடுகளுக்கு இடையே மும்முனை தாக்குதலாக ஏற்படக் கூடும் என்று இன்றைய தீர்க்க தரிசனம் கூறுகிறது. இதுவே இன்றைய பத்தாவது தீர்க்க தரிசனம் ஆகும்.
ஐரோப்பிய நாடுகளை தாக்க வரும் இப்புயலின் வேகம் 350KM அளவிற்கு வேகம் கொண்டது என இத்தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது. மாயப்புயல் என்றே இதனை நாம் பெயரிட்டு அழைக்கலாம் என்று தீர்க்க தரிசனம் கூறுகிறது.
மேலும் இந்த மாயப்புயலால் ஏற்படும் சேதங்கள் கணக்குள் அடங்காத அளவிற்கு இருக்கும் என்றும், மக்களின் வாழ்வாதாரச் சூழ்நிலை மீண்டும் சீரடைய சுமார் 5 மாதங்கள் ஆகும் என்றும் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.
இந்த மாயப்புயலின் வருகையை சரியாக விஞ்ஞானம் கணிக்க முடியாது என்றும், அது தாக்கும் சமயத்திற்கு முன்பாக மட்டுமே இதனை அறிய முடியும் என தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
மேலும் இந்த மாயப்புயல் உருவாகுவதற்கு மிக சமீபமாக செயற்கைகோள் ஒன்று செயலிழக்கும் என்றும், இதுவே இப்புயல் வருவதற்கான முக்கிய அறிகுறியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தீர்க்க தரிசனங்கள் உண்மையை இங்கு தெளிவுபட கூறுகின்றன.
மக்களின் மனநிலையில் தற்பொழுது அலட்சியமும், அவல போக்கும் காணப்படுகின்றன என்றும், இது அவர்களின் வாழ்க்கை சூழலுக்கே சரிவை ஏற்படுத்தும் என்றும் மேலும் ஒரு தீர்க்க தரிசனம் நம்மை எச்சரிக்கை செய்கிறது.
பல பங்கு முதலீடுகள் மிகப்பெரிய சரிவை சந்திக்க உள்ளதாக காலக்கேடு என்ற ஒரு விஷயம் தற்போது அது உடனே நிகழும் என்று தீர்க்க தரிசனம் மேலும் விளக்கம் தருகிறது.
இந்த புவியில் மிகப் பெரிய பூமிசார்ந்த அதிர்வு ஒன்று தற்பொழுது வர உள்ளதாகவும் இதனை உணர்ந்து மக்கள் தங்களை தயார்படுத்தி, தற்காத்துக் கொள்ள முயற்சிகளை துவங்கினால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்படும் என்று மேலும் ஒரு தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.
மேலும் இந்த பூமி அதிர்வைப்பற்றி பலநாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும் முன்னதாகவே எச்சரிக்கை செய்வார்கள் என்று அந்த தீர்க்க தரிசனம் மேலும் சில விளக்கங்களை தருகிறது.
சுமேரியா நாட்டில் உருவாகும் ஒரு கொடிய நோய் அந்த நாட்டையே பரிதாபத்திற்கு ஆளாக்கும் என்று மேலும் ஒரு தீர்க்க தரிசனம் கூறுகிறது.
ரஷ்ய நாட்டில் உருவாகும் மாபெரும் புயல் ஒன்று அந்நாட்டில் பலத்த சேதங்களை உருவாக்கும் என்று மேலும் சில தீர்க்க தரிசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.
உலகவரலாற்றில் கணினி சார்ந்த விஞ்ஞானம் சில நாட்களுக்கு செயல்படாமல் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உருவாக உள்ளது என்றும், இதற்கு விஞ்ஞானிகளும், கணினி அறிஞர்களும் விடைகாண முடியாது என்றும் மேலும் ஒரு தீர்க்க தரிசனம் இங்கு எடுத்துக்கூறுகிறது.
இந்திய திருநாட்டில் உருவாகும் ஒரு ஆன்மீக அமைப்பு மக்களுக்கு பல உண்மைகளை கூற உள்ளது என்றும், அந்த ஆன்மீக அமைப்போடு உலக ஆன்மீக அமைப்புகள் சாதி, மத பேதமின்றி இணைவார்கள் என்றும், இதுவே தீர்க்க தரிசனத்தில் சிறப்பான செய்தி என்று தீர்க்கதரிசனத்தின் 10-வது கோட்பாடு எடுத்துக் கூறுகிறது.
உலக மக்கள் யாவரும் ஒன்று கூடும் ஒரு தினம் விரைவில் ஆசியாவில் உருவாகும் என்றும், அதற்கு உலக சமூக அமைப்பு ஒன்று ஏற்பாடுகளை செய்யும் என்றும், இதுவே இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கும் படி செய்யும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.
விரைவில் ஆன்மீகவாதி ஒருவர் இயற்கை எய்துவார் என்றும், இது நடைபெற்றவுடன் அந்த அமைப்பில் பல சம்பவங்கள் நடக்கும் என்றும், அங்குள்ள மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைவார்கள் என்றும், அச்சமயத்தில் இறைவனின் அற்புதம் ஒன்று அங்கு நடைபெற்று அந்த மக்களை வழிநடத்திச் செல்லும் ஒரு அற்புதம் நடைபெறும் என்று ஒரு தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது.
தீர்க்க தரிசனத்தின் மேல் இனி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இந்த பூமியில் நடந்தேறும் என்று தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
உலக கத்தோலிக்க கிருஸ்துவ சபை ஒரு அறிவிக்கையை வெளியிடும் என்றும் அது கிருஸ்துவர்களுக்கு புதிய நம்பிக்கையை தரும் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் இங்கு எடுத்துக் கூறுகிறது.
உலக வரலாற்றில் கருப்பு தினம் என்று ஒரு நாள் வரும் என்றும், அது அந்நாட்டிற்கு போதாத தினம் என்றும் தீர்க்க தரிசனம் மற்றொரு செய்தியை வெளியிடுகிறது.
மேலும் உலகத்தில் புனிதர் ஒருவரின் வருகை நிச்சயம் உண்டு என்றும் அதைச்சார்ந்த இறை திருவிளையாடல்கள் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முதல் உலகம் முழுவதும் வெளிப்படும் என்றும், அன்று முதல் மக்கள் நம்முடைய வெளிப்பாட்டில் இடம் பெறும் தீர்க்க தரிசனங்களின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வார்கள் என்றும், இந்த நம்பிக்கையே ஒரு நாள் வெளிச்சமாக ஆகாயத்தில் ஒளி வீசும் என்றும், அது இறைவனின் தூய ஆத்மாவின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் உண்மைத் தன்மையாக விளங்கிடும் என்று இங்கு எடுத்துக் கூறுகிறது..
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்க்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
Subscribe to:
Posts (Atom)