திமுக ரவுடிகளின் அட்டகாசம் இப்பவே எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது...
மக்களே சிந்தியுங்கள் திமுக தமிழ்நாட்டுக்கு தேவையா? 😡
திமுக ரவுடிகளின் அட்டகாசம் இப்பவே எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது...
மக்களே சிந்தியுங்கள் திமுக தமிழ்நாட்டுக்கு தேவையா? 😡
அலாவுதீனின் பூதத்தை போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்..
நீங்கள் விரும்பியவற்றை பெற மூன்று எளிய படிகள் உருவாக்க , படைப்பியக்கச் செயல்முறை உங்களுக்கு உதவும், அவை கேளுங்கள், நம்புங்கள், மற்றும் பெறுங்கள் ஆகியவை.
உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும் போது , உங்கள் விருப்பம் குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.
நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்து விட்டது போல நடந்து கொள்வது, பேசுவது மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிபரப்பும் போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை , நிகழ்வுகளை , மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.
உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மனவுனர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மன நிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்து விடும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் , கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுப் பூர்வமாக உணருங்கள், அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.
நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்குப் போடும் நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ அதே அளவு எளிதானது தான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதாகும்.
ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விசயங்களில் துவங்குவது , ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி , ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்கக் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விசயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.
நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ , அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்...
படத்தில் இருப்பது மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை. இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அவருடைய மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் வியந்து போய் பேசுகிறார்கள்.
இத்தனைக்கும் அவரது மூளையில் 3 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாம், அது பத்து சதவிகிதமாக இருந்திருந்தால் என்னென்ன கண்டு பிடிப்புகள் வந்திருக்குமோ...
இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித கண்டு பிடிப்புகளில் உங்கள் மனதை வெகுவாக கவர்ந்தது எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.
அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில் இருக்கிறதா?
பல் துறை நிபுணர்கள் எழுதிய நூல்கள், பல விலை உயர்ந்த புத்தகங்கள் குவிந்திருக்கும் இடம் நூலகம். இத்தகு நூல்களை நூலகங்களில் மட்டுமே ஒருங்கே நாம் கண்டு, பயன்படுத்திட முடியும்.
நம்மில் எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம் செல்லும் வழக்கம் இருக்கிறது?
இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில் 20 நூலகங்களாவது இருக்க வேண்டும். ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில் கூட்டத்தை காணோம்.
ஆனால் இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20 இருக்கின்றன, அத்தனையிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதுதான் இன்றைய தமிழ்க்குடிகளின் நிலைமை.
சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.7 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாம். அதில் 50 லட்சம் பேர் தினமும் குடிப்பவர்களாம். 30 சதவிகிதம் பேர் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாம். கொடுமை.
இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப் பெருக்கினால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம் போல், கடற்கோளினால் அழிந்த குமரிக்கண்டம் போல், கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற நிலை இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது...
குறிப்பு : உலக மக்கள் தொகை அதிகமாக உள்ளது அதை குறைக்க வேண்டும் என்று சில வருடம் முன்பே சொன்னார்கள்...
அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் கனவுதேசம், வல்லரசு நாடு என்ற மாயை உள்ளது.
ஆனால் உண்மையில் அமெரிக்கா என்பது பல கொடூரங்களை உள்ளடக்கிய நாடு.
உண்மையில் இன்று அந்நாட்டில் நன்றாக வாழ்பவரும் ஆள்பவரும் அமெரிக்கர் அல்ல.
கொலம்பஸ் எனும் கொடூரன் அமெரிக்காவை கண்டு பிடிக்கும் வரையே உண்மையான அமெரிக்க மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்ந்தனர்.
இந்தியாவை கண்டு பிடிக்க எண்ணி திசைமாறி அமெரிக்காவை கண்டு பிடித்தான் கொலம்பஸ்.
ஆனாலும் அதனை இந்தியா என்றே நம்பிய அவன் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்ககளை இந்தியர்கள் என்றே அழைத்தான் (தமிழில் செவ்விந்தியர்கள்).
பின்னர் அவன் மூலமாக உள்நுழைந்த பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் (யூத இனத்தவரும்) நாட்டை ஆக்கிரமிக்க துவங்கினர்.
பூர்வீக அமெரிக்க மக்களை அடிமைகளாக நடத்தினர்.
பழங்குடியினரான பூர்வீக மக்களும் அவர்களை எதிர்க்கவில்லை.
வெள்ளைக்காரன் எங்கு சென்றாலும் வினையுடன்தான் செல்வான் என்பதற்கேற்ப பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடனே பல புது நோய்களையும் கொண்டு வந்தனர்.
இதனால் ஆரோக்கியமாக இருந்த பல பூர்வீக அமெரிக்க மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.
ஒருகட்டத்திற்கு மேல் இவர்களின் அடக்கு முறையை தாங்க முடியாத அம்மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
இது American revolution War என அழைக்கப்படுகிறது.
இதன் பின் பலமுறை பூர்வீக மக்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக போராடினர்.
இதில் பல்லாயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
1776ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்காவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஆட்சி செய்தவனும் பிரிட்டிஷ் யூதன் வாழ்பவனும் ஆங்கிலேயன், இதில் என்ன சுதந்திரம் என்பது வினோதமே.
ஆனாலும் பூர்வீக அமெரிக்கர்கள் அடிமைகளாகவே இருந்தனர்.
பல புரட்சிகளுக்கு பிறகு 1838ல் பூர்வீக மக்களை வந்தேறி வெள்ளையர்கள் மிஸ்ஸிசிப்பி நதியின் மேற்கு கரையோரம் நோக்கி விரட்டியடித்தனர்.
உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட அம்மக்கள் குடிபெயர்ந்தனர்.
அதில் பல்லாயிரம் மக்கள் குளிரிலும் நோய்வாய்ப்பட்டும் இறந்தனர்.
இச்சம்பவம் Trails of Tears என அழைக்கப்படுகிறது.
இப்போதும் அந்நாட்டில் வாழும் பூர்வீக மக்களின் வம்சாவளியினர் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்றே பட்டியல் வகுப்பினராக உள்ளளனர்.
பலர் இன்னும் அரசால் அங்கீகரிக்கப்படாமல் உள்ளனர்.
பூர்வீக மக்களை அழித்துவிட்டு வந்தேறிகளால் ஆளப்படும் நாட்டை எப்படி வல்லரசு என ஏற்றுக் கொள்ள முடியும்...
குறிப்பு : ஆரியம் - திராவிடம் நவீன முறையில் இதை தான் தற்போது இந்தியாவில் செய்துக் கொண்டிருக்கின்றனர்...
அடிப்படையில் ஒருவனை உணர்ந்த கொள்ள எண்ணங்கள் தான் மூலம் அதை கவனித்தால் போதுமானது..
எப்படி கவனிப்பது ஒவ்வொரு எண்ணங்களையும் சாதாரணமாக கவனித்து கொண்டு அதன் இயல்பு நமக்கு உள்ளே பொருந்துகின்றதா- இல்லையா, (உடல் ரசாயன மாற்றம் இல்லாத நிலை உள்ளதா) என்பதை பார்த்ததால் போதுமானது..
எண்ணத்தை நல்ல எண்ணம் தீய எண்ணம் என்று பார்க்கும் வரை குற்ற உணர்வும் - அடக்கு முறைகளும் தான் வளரும் அங்கு தெளிவு பிறக்காது..
அந்த தெளிவில் எண்ணத்தின் மூலம் இருக்கும் பற்றுகள் கொண்ட அடர்த்தி குறைந்து எண்ணங்கள் லேசாக மாறுவதும் அதன் பின் எண்ணங்கள் கரைந்த நிலைக்கு செல்ல முடியும்..
இந்த எண்ணங்கள் கரைந்த நிலையில் வெற்றிடம் இயல்பாக உணர முடியும்..
இந்த தன்மை வரும் பொழுது அங்கு எண்ணம் எழும் அலைத்தன்மை வெகு அழகாக கவனிக்க முடியும். அது இயல்பாக மலரும் பூவை போல நமக்கு உள்ளே இருந்து உணர்வின் வெளிப்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் வளம் வருகிறது..
இந்த அடிப்படை தான் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆழ்ந்த கவனிப்பில் நிகழும் ஒன்று..
கவனித்தல் என்பது உணராதவர். உணர்ந்து கொண்டிருப்பவர். உணர்ந்தவர் என எல்லோருக்கும் பொதுவான நிகழ்வு- ஏன் ஞானியே ஆயினும் இதே நிலை தான் என்ற அடிப்படை தெளிவுக்கு வரும் வரை எண்ணம் என்பதில் குழப்பமே தீராது..
தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டே இருக்க வேண்டியது தான்..
ஒவ்வொரு குணத்திற்கு மூலம் எண்ணமே - அதற்கு மேலே உள்ளவாறு கவனித்தால் இயல்பாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் உணர்வின் அடிப்படையில்..
ஆன்மீகம் ஆன்மீக விவாதங்கள் இயல்பாக மலர வைக்கும் தன்மையாக இருக்க வேண்டும் - மாறாக குற்ற உணர்வையும் - நல்லவன்- கெட்டவன் - நல்லது - கெட்டது - அவனை அடிமை படுத்தி மேலே எழுந்து கொள்ள முடியாத சுமைகளை திணிக்க கூடாது..
உணர்வின் ஆழத்தில் பயணிக்கும் போதே இந்த தன்மை கூட புரிந்து கொள்ள முடியும்..
விழிப்புணர்வுக்கும் ஆரம்ப நிலைக்கும் பெரிய இடைவெளி உருவாக்கும் நிலை மனம் தான் - எண்ணத்தை சீரமைப்பது விழிப்புநிலையில் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..
மனதின் அடிப்படையில் இயங்கும் எண்ணத்தை கரைத்து மனம் என்ற அடிப்படையை கடந்து வெற்றிடத்தை பார்ப்பதே ஆன்மீகம்..
பெரிய மலையை தூக்கும் வேலை இல்லை.. ஒரு இயல்பான கொண்டாட்டத்தில் தன்னை உணர்ந்து கொள்வது அவ்வளவே..
தியானம் அதற்கு மூலம்...
டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)...
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்..
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்…
கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தான்.
ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் எனது நண்பன் எட்வின் இறந்து விட்டான் என தோன்றுகிறது எனக் கூறினான்…
இதை அத்தை நம்பவில்லை. அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரிய வந்தது..
அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
ஒரு முறை பல ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக் கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்…
இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட.. கடுப்பாகிப்போன ஹியூம்… ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு… தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சரியாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.
பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக் கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்..
பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்..
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக் கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.
இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே...
பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்..
மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகளும் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில (9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார்..
அதே வேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது..
எனவே ஹனுமார் ஒரு ESP மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகழ் எய்தி இருக்க கூடும்...
1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.
ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?
சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.
Population density map of sri lanka என்று தேடுங்கள்..
இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும்
தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.
இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண்மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.
ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை முறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.
திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதிஅளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.
தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட் தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடி வந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.
நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்கமாட்டான்.
முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.
திண்ணை வரை கொடுத்துவிட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...
லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.
பொச்சில் எச்சில் துப்பி உதைத்து அனுப்பாத குறையாக, இத்தோட ஓடிப்போயிடு... இல்லேன்னா பைன் போட்டுடுவேன் என்று நீதிமன்றம் விரட்டி விட்டது. இது எல்லாருக்கும் தெரிந்த கதை.
அவர் கேட்டதில் என்ன தவறு? ஆம்னி பஸ்காரர்களும்கூட வரி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? ரஜனிக்கு சொத்துவரி தள்ளுபடி அல்லது சலுகை கொடுத்தால், அது மற்ற எல்லாருக்கும்கூட தள்ளுபடி கிடைக்க பயன் தருமே?
இப்படியெல்லாம் சில கேள்விகள்.
கேள்வி கேட்பவர்களில் பலர் அப்பாவிகள். சிலர் குழப்பவாதிகள்.
அது இருக்கட்டும்.
இந்த வாதம் ஏன் செல்லாது என்பதை எளிமையான மொழியில் பார்ப்போம்.
சொத்துவரி என்பது வேறு, வருமான வரி அல்லது சேவை வரி என்பது வேறு.
கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது. அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்துக்கு வரி செலுத்தப்பட வேண்டும். லாக்டவுன் காரணமாக வருமானமே இல்லை என்றால், வருமான வரி கிடையாது.
கல்யாண மண்டபம் ஒரு சேவை வழங்குகிறது. அந்த சேவைக்கு கட்டணம் கிடைக்கிறது. அதற்கு சேவை வரி செலுத்தலாம். லாக் டவுன் காரணமாக சேவையே வழங்கப்படவில்லை, எனவே வருவாய் இல்லை, எனவே சேவை வரி செலுத்தத் தேவையில்லை.
ஆனால் சொத்து வரி என்பது அப்படியல்ல. சொத்தின் வருவாய் எவ்வளவு கிடைக்கக்கூடும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்தான் சொத்துவரி போடப்படுகிறது என்றாலும், சொத்து என்பது நிலையானது. வருவாயே இல்லாவிட்டாலும் சொத்துவரி உண்டு. அதேபோல, சொத்துக்கு தேய்மானத்துக்கான தள்ளுபடியும் உண்டு.
உதாரணமாக, எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதில் நான் குடியிருக்கிறேன், அல்லது வாடகைக்கு விட்டிருக்கிறேன், அல்லது பூட்டியே வைத்திருக்கிறேன். எப்படி வைத்திருந்தாலும் அதற்கு சொத்து வரி உண்டு.
ஏனென்றால், சொத்துவரியைக் கொண்டுதான், அந்தப் பகுதிக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சாக்கடைவசதி உள்ளிட்ட குடிமை வசதிகள் தரப்படுகின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் குடியிருந்தாலும் சரி, வாடகைக்கு விட்டிருந்தாலும் சரி, சும்மா பூட்டி வைத்திருந்தாலும் சரி, அந்தப் பகுதிக்கு இந்தச் சேவைகள் எல்லாம் கிடைத்தாக வேண்டும். எந்தெந்த வீட்டில் ஆள் இல்லை, எந்தெந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்து, பயன்படுத்தப்படும் காலத்துக்கு மட்டும் சொத்து வரி விதிக்க முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால், நம் மக்கள் அதிலும் வேலையைக் காட்டி விடுவார்கள். வரிக்கணக்கு எடுக்க வரும்போது வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, இங்கே யாரும் இல்லை, அதனால் சொத்துவரி கூடாது என்று சொல்லி விடுவார்கள். சரிதானே?
வருவாய் இருந்தால்தான் சொத்துவரி கட்டுவேன் என்றால், சில மாதங்களில் ஏகத்துக்கு புக்கிங் ஆகி, செம்மையாக கல்லா கட்டும்போது கூடுதலாக சொத்துவரி கட்டுகிறாரா? இல்லைதானே?
அதனால்தான் சொத்துவரி என்பது, அந்தந்தப் பகுதியின் மனை விலை மதிப்பு, கட்டுமானம், அதன் வருவாய் ஆகிய பல விஷயங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. அதற்கென்று ஒரு சூத்திரம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம். கல்யாண மண்டபங்களுக்கு தனி சூத்திரம் உண்டு. பஸ் ஸ்டாண்ட் / ரயில் நிலையம் / மார்க்கெட் பக்கமா, ஆண்டுக்கு எத்தனை திருமணங்கள் அதில் புக் செய்யப்படுகின்றன என்பதெல்லாம் வைத்து கணக்கிடப்படுகிறது.
இப்போது அடுத்த விஷயத்துக்கு வருவோம்...
ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கான சொத்து வரி பாக்கி எவ்வளவு என்று ஒரு படத்தைப் பார்த்தேன். உடனே மேலும் தோண்டிப் பார்த்தேன். நிறைய கேள்விகள் எழுகின்றன.
1. நான் அறிந்தவரையில், ரஜனியின் கல்யாண மண்டபம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எப்போதிருந்து என்று தெரியாது. ஆனால், சொத்துவரி நோட்டீசின் அடிப்படையில் பார்த்தால், 2018இல்தான் கட்டப்பட்டது என்று காட்டுகிறது. இது மிகப்பெரிய வியப்பளிக்கும் செய்தி.
2. சொத்துவரி நோட்டீசின் கணக்குப்படி, அதன் பில்ட்-அப் ஏரியா என்பது கிரவுண்ட் ஃப்ளோர் 250 சதுர அடி. அதாவது, சுமாராக வெறும் 15 அடி x 17 அடி அகலக் கட்டிடம்தான்! இது வியப்பளிப்பது மட்டுமல்ல, அதிர்ச்சி தருவதும்கூட.
3. இதுவரை ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கு செலுத்திய சொத்துவரி எவ்வளவு, எப்போது எவ்வளவு வரியாக செலுத்தப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தேன். 2020 வரை கச்சிதமாக, ஒருமுறைகூட தவறாமல், ஃபைன் ஏதும் இல்லாமல் செலுத்தி வந்திருக்கிறார்கள். சுமார் 25 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வரி 1 கோடி ரூபாய்.
1993-94 முதல் 98 வரை - 6 மாதங்களுக்கு 66,422 ரூபாய்
1998-99இல் 2006 வரை - 6 மாதங்களுக்கு 97,871 ரூபாய்
2006-07 முதல் 2018 வரை - 6 மாதங்களுக்கு 2,31,397
2018-19 முதல் 2021 வரை - 6 மாதங்களுக்கு 6,49850.
மேற்கண்ட விவரங்களைப் படிக்கும்போது, சொத்துவரி விகிதம் உயர்ந்து விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம்.
இதைத் தோண்டப்போகத் தெரிய வந்த இன்னொரு விஷயம் - சென்னையின் சொத்துவரி விகிதம் கடைசியாக முடிவு செய்யப்பட்டது 1998இல். கடந்த இருபது ஆண்டுகளில் சொத்துவரி அதிகரிக்கப்படவே இல்லை! சொத்துவரியை அதிகரிப்பது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017இலேயே கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் இதுவரை ஏதும் நடைபெறவில்லை.
1993இல் பயன்பாடு குறைவாக இருந்ததால் 66 ஆயிரமாக வரி இருந்திருக்கலாம். பயன்பாடு அதிகமானதால் 2018இல் 6 லட்சமாக உயர்ந்திருக்கலாம்.
சொத்துவரி இரண்டு தவணைகளுக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போதைய சொத்துவரி பாக்கி 6,49,000 அல்ல. 12,95,000.
(இதில், கடைசியாகச் சொன்ன 649850 ரூபாய் என்பதில் எதற்கோ 5000 ரூபாய் தள்ளுபடியும் கிடைத்திருக்கிறது. )
மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் வைத்துப் பார்த்தால், கல்யாண மண்டபத்துக்கு சொத்துவரியைக் குறைப்பதற்காகவே கட்டிடப் பரப்பைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. கல்யாண மண்டபத்தின் ஒரு படம் மட்டும் கீழே தந்திருக்கிறேன்.
ஒன்று, இவ்வளவு பெரிய கட்டிடத்தை வெறும் 250 சதுர அடியில் கட்டும் தொழில்நுட்பத்தை செயலாக்கிய ரஜனிக்கும் சென்னை மாநகராட்சியில் சிலருக்கும் சேர்த்து விருதளித்துப் பெருமைப்படுத்த வேண்டும்.
அல்லது, இதில் இன்னும் எவ்வளவு ஊழல் என்று ஆராய வேண்டும்.
அல்லது, நோட்டீசில் தவறு நேர்ந்து விட்டது என்று மாநகராட்சி நிரூபிக்க வேண்டும்.
இப்போது சொல்லுங்கள், சிஸ்டம் சரியில்லைதானே?!
பி.கு. - இதுதவிர, கல்யாண மண்டபத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடகை வசூலிக்கப்படுகிறது. அதுவும் சட்டத்துக்குப் புறம்பாக ரொக்கமாகவே பணம் வாங்கப்படுகிறது. செக்யூரிடி டெபாசிட் வாங்கிவிட்டு, கடைசியில் திருப்பித் தரும்போது அதிலும் பிடித்தம் செய்து விடுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. இப்படி பல கோடி வருவாய் பெறும் கல்யாண மண்டபத்தை இது தர்மப் பணி - சாரிடபிள் என்று காட்டி, சொத்துவரி குறைக்கப்பட்டதாக ஒரு தகவல் உலவுகிறது. இதுவும் உண்மையா என்று தீர விசாரிக்க வேண்டும். இந்தக் கல்யாண மண்டபம் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பல மண்டபங்களிலும் மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு சொத்துவரி குறைக்கப்பட்டிருக்கும் சாத்தியங்கள் நிறைய உண்டு. முழுமையாக தோண்டித்துருவி ஆராய்ந்தால்தான் உண்மை வெளிவரும்...
ஆஸ்துமா இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.
இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.
ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
அறிகுறிகள்: மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.
காரணங்கள்: தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி - கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.
மூலிகைகள்...
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.
இவை அனைத்தையும் பறித்து வந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும்.
இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்...
அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணா்வினை வீட்டிற்குள் கொண்டு வர முடியாது.
உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணா்வீா்கள்.
ஒவவொரு நாளும் கடவுள் நமக்கு அளித்த பாிசே,நமது வயது ஒரு விஷயமே அல்ல.
செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை. சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே. குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.
மரணத்தை விட்டு யாரும் ஒடிவிட முடியாது. இறுதியில் அனைவரையும் அது கைபற்றியே தீரும்.
மன்னிப்பு மற்றும் நோ்மை ஆகியவையே மனிதனின் இரண்டு உயாிய ஆன்மீக தேவைகளாகும்.
கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது ஒன்று பெற்றுக் கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்தகுமே.
உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.
பெற்றோ்களிடம் மாியாதை குறைவாக நடந்துகொள்ள அனுமதிக்கப்படும் ஒரு குழந்தை,வேறு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.
தைாியம் ஒரு தொற்று. தைாியமானவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது மற்றவா்களின் முதுகுத்தண்டும் விறைக்கின்றது.
நோ்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது...
மதுரை: அரசு ஊழியர்கள், சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டை ஒன்றுக்கு, ரூ.40 லஞ்சம் வாங்குவதாக கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கூறியதாவது: அரசு ஊழியர்கள், சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான நெல் கொள்முதல் அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும். ஒரு நெல்மணி முளைத்து வீணானாலும், அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போது தான் நெல்மணிகள் வீணாவது தடுக்கப்படும்.
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் போராடுவதை பார்க்க முடிகிறது. நெல் கொள்முதல் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து முடிவெடுப்பது அவசியம்.
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து உரிய விளக்கமளிக்கும்படி, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநருக்கு உத்தரவிட்டனர்...