13/04/2019

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?


நாம் கற்பனை செய்யும் அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும்.

பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...

தேர்தலுக்கு முன்பே மத்திய சென்னை மக்கள் மனதை வென்ற பாமக வேட்பாளர் சாம் பால்...


https://youtu.be/r6HE-Zxw4Mo

Subscribe The Channel For More News...

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப் பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

பாஜக வுக்கு ஓட்டு போடாதீங்க.. கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி தற்கொலை...


தனது மகள்களை கேலி செய்தவரை தட்டிக் கேட்ட தாய்க்கு கத்திக்குத்து, வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டு சிறை...


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா(வயது 36). இவர்களுக்கு வினிதா, சிவரஞ்சனி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வினிதா, சிவரஞ்சனி இருவரையும் அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் மகன் மினிலாரி டிரைவர் பிரகாஷ்(27) கேலி, கிண்டல் செய்வது, வயல் வெளிக்கு செல்லும்போது மறைந்து இருந்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த சித்ரா, பிரகாசை கண்டித்தார். இதனால் அவர் மீது பிரகாஷ் முன்விரோதத்துடன் இருந்து வந்தார்.

கடந்த 16-1-2017 அன்று இரவு 7.30 மணியளவில் வீட்டில் இருந்து சித்ரா வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த பிரகாஷ், கத்தியால் சித்ராவை சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தத்தை கேட்டு ஓடோடி வந்த அவரது மகள் வினிதா, இவரது கணவர் பாண்டித்துரை(25) ஆகியோரையும் பிரகாஷ் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சித்ரா உள்ளிட்ட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்த போது சித்ரா போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த 20-1-2017 அன்று சிகிச்சை பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். வினிதாவும், பாண்டித்துரையும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றவாளி பிரகாசுக்கு சித்ராவை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாண்டித்துரையை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ஆயுள்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், வினிதாவை கொலை செய்ய முயன்றதற்காக 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரகாசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜர் ஆனார்...

டிடிவி தினகரனுக்கு புதிய கட்டி திடீர் ஆதரவு... அடிச்சுத் தூக்கும் அமமுக...


https://youtu.be/fqGC1d9LBew

Subscribe The Channel For More News...

சிறுவன் மர்ம கொலை, போலீசார் விசாரணை...


திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் இன்று காலை கரும்புகை வந்தது. இதையறிந்த அப்பகுதியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜன், மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

சிறுவனுக்கு 12 வயது இருக்கும். அவனின் தலை, முகம், உடல், கால்கள் கருகிய நிலையில் கிடந்தது. சிறுவன் மீதும் அவனை சுற்றியும் கோழிகளின் இறகு கழிவுகள் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. பிணம் எரித்திருந்த சிறிது தூரத்தில் மண்ணெண்ணை கேன் வீசப்பட்டு கிடந்தது. எனவே சிறுவனை யாரோ எரித்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, கலால் டி.எஸ்.பி. பழனி, திருவண்ணாமலை டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவன் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலை செய்து மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்டாரா? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி வந்து ரேகைகளை பதிவு செய்தார்.

திருவண்ணாமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் பெசி, பிணத்தை சுற்றி சுற்றி வந்தது. பின்னர் நடுப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையையொட்டி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கல்வி பிடிக்கவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ராகுல் - மோடி ஏன் இப்போது மட்டும் வருகிறார்கள்..?


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை.

நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

பாஜக விற்காக தூது வந்த முக்கிய தொழிலதிபர்.. தேர்தலுக்கு பின் கூட்டணி.. திமுக என்ன சொன்னது தெரியுமா.?


https://youtu.be/qEJdmAehD0c

Subscribe The Channel For More News...

ஆந்திராவில் மினி பஸ், லாரி விபத்து, 7 பேர் பலி...


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. மினி பஸ்சின் முன்பகுதி நொறுங்கி, இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டதும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்...

தமிழகத்தின் பிரச்சனை என்னானது என்று யோசித்தீர்களா...?


1. ஹைட்ரோகார்பன் பிரச்சனை என்னானது என்று யோசித்தீர்களா...?

காவிரி டெல்டா பகுதிகளில் 345 எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓன்ஜீசி விண்ணப்பித்துள்ளது...

2. முகிலன் எங்கே என்று யோசித்தீர்களா...?

காணாமல் சென்று இரண்டு மாதங்களாகிறது...

3. பொள்ளாச்சி பிரச்சனை என்னானது என்று யோசித்தீர்களா...?

பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதி எங்கே...?

காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை, வாலிபர் கைது...


தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகள் அகிலா (வயது 20). இவர், சென்னை தாம்பரம் இரும்புலியூரில் தோழியுடன் அறை எடுத்து தங்கி, பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார்.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் வசிக்கும் இவரது அக்காள் அருள்மொழி, தனது கணவர் சதீசுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சதீஷின் தம்பி சந்தோஷ் (28), தனியாக பேச வரும்படி அழைத்ததால் 9-ந்தேதி இரவு அவரது வீட்டுக்கு அகிலா சென்றார்.

மறுநாள் காலை அகிலா, அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந் தார். இதுபற்றி சந்தோஷ், தனது உறவினர்கள் மற்றும் போலீசாரிடம், “நான் அகிலாவிடம் பேசுவதற்காக வீட்டுக்கு அழைத்துவந்தேன். இருவரும் மாடியில் ஏறும்போது கிரில் கேட்டில் அகிலா தலை மோதியதில் இடது புருவத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டோம். மறுநாள் அசைவற்று கிடந்த அகிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்ததாக” கூறினார்.

ஆனால் அகிலா சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை சந்தோஷ்தான் கொலை செய்து இருப்பார் எனவும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்தநிலையில் அகிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அகிலா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், “நான், அகிலாவை காதலித்து வந்தேன். ஆனால் அவர், வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி என்னை காதலிக்க மறுத்தார். சம்பவத்தன்று அவரை வீட்டுக்கு வரவழைத்து இது தொடர்பாக பேசினேன். அப்போதும் அவர் என்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது தலையில் கிரில்கேட் இடித்ததில் காயம் அடைந்து இறந்ததாக நாடகமாடியதாக” ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சந்தோசை போலீசார் கைது செய்தனர்...

கொரியா நாட்டின் கடவுள் கன்னியாகுமரியில் பிறந்த தமிழ் பெண்ணா.? வரலாறும், மர்மங்களும்...


https://youtu.be/LlMuXM5FDOU

Subscribe The Channel For More News...

சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்...


சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது.

இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு பெயர்களும் உண்டு.

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்கும்...

அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்..

சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

நெறிகட்டிகள் குணமாகும்...

சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.

நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்...

போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

நீண்ட நாள் கப நோய்களுக்கு சங்குப்பூ  பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வந்தால் எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

சங்குப்பூ வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீரக நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.

மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை வளர்க்கும் சக்தி கொண்டது. நரம்பு சம்பந்தமான குறைகளையும் போக்கும்...

இதன் இலைச்சாறு வயிறு உப்புசத்தை போக்கும்.. தொண்டை புண்ணை ஆற்றும்...

வேலூர் தேர்தல் ரத்தாகுமா.? கட்டு கட்டாய் சிக்கிய பணம்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.?


https://youtu.be/STp07CgrzEg

Subscribe The Channel For more News...

மண்ணுக்கும் உழவருக்கும் நண்பன் மண்ணுளிப் புழு - ஒரு அதிர்ச்சித் தகவல்...


பாம்பென்றால் படையே நடுங்கும் என்பர். பாம்பை மனிதர்கள் இன்றுவரை ஒரு காலனாய் தான் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழர்களாகிய நமது முன்னோர்கள் நாகர்கள் என்றும் அரவர்கள் என்றும் அழைக்கப்பட்டது நாகங்களை கையாளும் வித்தையை நன்கு உணர்ந்ததால் என்பதே வரலாறு நமக்கு உரைக்கும் செய்தி. சரி ஏன் இந்த விளக்கங்கள். நேரடியாக செய்திக்கு செல்வோம்.

பாம்புகள் என்றால் ஏன் படையே நடுங்கும் என்றால் பாம்பு கடித்து நஞ்சு பரவத்துவங்கிவிட்டால் அதன் பிறகு அதில் இருந்து உயிரை மீட்பது என்பது சிரமமான காரியமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பல வகையான பாம்புகள் பூமியில் உள்ளன. அவற்றில் பல கொடிய நஞ்சுடையது. பல நஞ்சற்றது. இப்போது நாம் பார்க்க இருப்பது மண்ணுளி பாம்பு, இல்லை இல்லை மண்ணுளி புழு.

ஆம். மண்ணுளி என்பது பாம்பின் இனமே கிடையாது. அது புழுவின் இனம். சற்று பெரிய அளவில் வளரக்கூடிய புழு இனம். பிறகு ஏன் துவக்கத்தில் பாம்பை பற்றி இவ்ளோ பெரிய கதை அளந்தீர்கள் என்று நீங்க கேட்பது தெரிகிறது.

இதோ விடை... சில வருடங்களுக்கு முன்னர் மண்ணுளி பாம்பை கடத்துகிறார்கள். மண்ணுளி பாம்பு ஏதோ கேன்சர் நோய்க்கு மருந்தாக பயன்படுகிரதாம் என்றவாறு பல செய்திகளை நாம் பதித்தும் கேட்டும் இருப்போம். அதுவும் உண்மை இல்லை. அது நம்மை ஏமாற்ற செய்த சூழ்ச்சியே.

என்ன சூழ்ச்சி?

மண்ணுளி புழு என்பது வேளாண்மையின் நண்பன். மண் புழு எப்படி மண்ணில் புரத சத்து உற்பத்தியாக வழி செய்கிறதோ அதை விட பல மடங்கு வீரியமான இயற்கையான உரத்தை மண்ணிற்கும் வழங்கும். இந்த புழு அதிக கூச்ச சுபாவம் கொண்டது.

மேலும் இந்த புழுக்கள் மணற்பரப்பு உள்ள இதங்களில் தான் அதிகம் வசிக்கும். இவைகள் மூச்சு விடுவதன் மூலம் மண்ணில் காற்று கடத்தப்படும் திறனும், ஆக்சிஜனும், நைட்ராஜெனும் அதிகமாகிறது. ஆகவே வேளாண்மையில் அதிகமான விளைச்சலை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்படியான நன்மைகளைக் கொண்டிருக்கும் காரணிகளாலே தான் இந்த புழுவை உலக சந்தை குறிவைத்தது. இப்படியான உயிரனங்கள் இருப்பதால் தான் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்யமுடிகிறது. அதனால் அவர்கள் நமது செயற்கை உரத்தையும், பூச்சிமருந்தையும் வாங்காமால் இருகிறார்கள் என்று உணர்ந்த நிறுவனங்கள் தான் இந்த புழுவை பாம்பென்றார்கள், இந்த பாம்பை மருந்தேன்றார்கள், அதற்கு லட்சக்கணக்கில் விலை வைத்தார்கள், நம்மையே அதை கடத்தவும் வைத்தார்கள், இன்று அப்படியான ஒரு புழு இனத்தையே இல்லாமல் செய்து விட்டார்கள்.

சிந்தித்து பாருங்கள் ஒரு புழுவிற்கு லட்சக்கணக்கில் விலை வைக்கிறார்கள் என்றால் அதன் திறன் என்னவாக இருக்கும். அவைகளின் நமது வேளாண்மைக்கு எந்த அளவில் பயன்பட்டிருக்கும் என்று. தொடர்ந்து இந்த வியாபார அரசியலால் நாம் முட்டாளாக்கப்பட்டு வருகிறோம்...

கோடி கோடியாய் கட்டு கட்டாய் சிக்கிய பணம்... வசமாக சிக்கிய திமுக துரைமுருகன் மகன்...


https://youtu.be/Edj6kseodeA

Subscribe The Channel For More News...

காண கிடைக்காத அபூர்வ புகைப்படம்...


இன்னைக்கு பல ஷோக்களில் வாவ், ஓ, சூப்பர்னு பாராட்டுற தீர செயல்களை எல்லாம்  தமிழன்  அப்பவே செய்து காட்டி விட்டான்  என்பதற்கு சான்று...

உருவாக்குங்கள்...


நீங்கள் ஒரு உலகம் புகழும் கலைஞரா ஆகிறீர்களா? என்பது முக்கியமான விடயமல்ல. ஆனால் எதையாவது உருவாக்குங்கள் – ஒரு அழகிய பாடல், சிறிதளவு இசை, ஒரு நடனம், ஒரு சித்திரம், ஒரு தோட்டம்.

ரோஜாக்கள் பூக்கும் பொழுது, அத்தனை மலர்களுக்கிடையில் வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

ஒரு அழகான ஓவியம் – வாழ்க்கை சலிப்பூட்டுகிறது என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஓவியம் முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இதற்கு முன் யாருமே செய்ததில்லை, யாருமே இதை மீண்டும் செய்யப் போவதில்லை. அதை செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

நீங்கள் என்ன செய்தாலும் அதில் உங்கள் தனித்தன்மை வெளிப்படுத்துங்கள்.

உங்களை பற்றி உயிர் வாழ்தல் பெருமை அடையட்டும். வாழ்க்கை சலிப்புட்டுவதாக உணராது; அது ஒரு நறுமணம் ஆகும்.
உங்கள் வாழ்க்கையை வெறுமனே சாதாரணமாக வாழுங்கள். ஒவ்வொரு அனுபவத்திற்குப் பின்னாலும் ஒரு கேள்விக்குறியைப் போடாதீர்கள். மனிதர்கள் உங்களைப் பைத்தியம் என்று நினைக்கலாம். ஆனால் நீங்கள் பைத்தியம் என்றால் இந்த உயிர் வாழ்தல் மொத்தமுமே பைத்தியமாக இருக்கவேண்டும். என்ன செய்வது? இது நமது சக்திக்கு அப்பாற்பட்டது.

தினமும் காலையில் ஏன் சூரியன் உதிக்கிறது? ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. ஒரே ஒரு நாள் கூட அது மேற்கிலிருந்து உதிப்பது இல்லை -- ஒரு மாற்றத்திற்காகவேனும் " நான் கிழக்கிலிருந்து உதிப்பதில் சலிப்படைந்து விட்டேன்" என்பதுமில்லை. விஷயங்கள் வெகு சாதாரணமாக எளிதாகச் சென்றுகொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தொந்தரவில் இருக்கிறான்.

நீங்கள்கூட ஒரு ரோஜாப் புதரைப் போல வாழத் தொடங்கும்போது, சூரியனைப் போல உதித்துக் கொண்டு, ஒரு வெண் மேகத்தைப் போல மிதந்து கொண்டு வாழும் போது, அந்த மர்மமான, அற்புதமான, உயிர்வாழ்தலின் உண்மையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி வதனமும் மட்டுமல்ல, ஒரு உருவாக்கும் நபருக்கு, ஒரு தியானம் செய்யும் நபருக்கு, மரணம் கூட உயர்வானதாக மாற்றமடையும்...

அமமுக டிடிவி தினகரனின் சூப்பர் மாஸ்டர் பிளான்.. அலரும் திமுக - அதிமுக...


https://youtu.be/kW-SHb3ckEA

Subscribe The Channel For More News...

ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?


ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா...

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே...

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே...

பொறுப்பு என்பதே இருக்காதாம்... இந்த 6 ராசிகாரர்களிடம் பார்த்து பழகுங்கள்...


https://youtu.be/AvM2iRTvNC4

Subscribe The Channel For More News...

ராசியில்லை எனக் கூறி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்...


சென்னை, கொருக்குப்பேட்டை, எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 28). இவருக்கும், தண்டையார்பேட்டையை சேர்ந்த பவித்ரா (23) என்பவருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், இவர்களுக்கு திருமணம் ஆன சில மாதங்களில், ரமேஷ்குமாரின் தந்தை இறந்து விட்டார். மனைவி வந்த நேரம் சரியில்லை என்று பவித்ராவை, ரமேஷ்குமார் வீட்டில் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையில், பவித்ராவை, அவரின் தாய் வீட்டிற்கு ரமேஷ்குமார் அனுப்பி வைத்து, பின்னர் அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

மேலும், பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்து, 2 மாதம் ஆகியும் ரமேஷ்குமார், பவித்ராவை, தனது வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பவித்ராவுடன் குடும்பம் நடத்த ரமேஷ்குமார் மறுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ரமேஷ்குமார் வீட்டு முன்பு பவித்ரா, தனது குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக, தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

பாஜக வின் இந்த வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தமிழினமே...


வாய்புண் மருத்துவம்...


கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது...

பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான்.

வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது.

இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது.

வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை உபயோகித்துக் கொள்ளுங்கள்...

மஞ்சள்...

எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.

நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

புதினா இலை...

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.

வெந்தைய இலை...

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை...

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ...

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்...

மரு வை போக்கும் மருத்துவம்...


மரு (Skin Tag) உதிர...

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது மரு [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்...

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்...

சூடானில் இராணுவ சதிப்புரட்சி...


விசிக சாதி வெறியன் திருமா திட்டவட்டம்...


வன்னியர்கள் ஓட்டு எனக்கு தேவையில்லை திருமாவளவன்...

பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம்...

எப்போது வரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?


தமிழர்களுக்கு என்று முறையான நாடோ அரசோ இல்லை.

இருந்திருந்தால் ஆவணங்களில் 'இனம்' என்பது சேர்க்கப்பட்டு யார் எந்த இனம் என்பதற்கான சான்று இருந்திருந்திருக்கும்.

ஆனால் இன்று நம்மிடம் இனத்தின் உட்பிரிவுக்கான சான்று ஆவணம் மட்டுமே உள்ளது.

ஆக இன்று யாரெல்லாம் தமிழர் என்று அடையாளம் காண சாதி சான்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழர் தாய்நிலம் தமிழரின் (இராணுவக்) கட்டுப்பாட்டில் வந்தபிறகு
இனம் எது என்பதற்கான சான்று வழங்கப்படும் வரை தமிழர் சாதி அடையாளத்தை மறைக்காமல் இருப்பது அவசியமாகிறது.

நமக்கான அரசு அமைந்ததும் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு இனத்தை மட்டும் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.

மற்ற இனங்களுக்கு இனத்தின் மொத்த வரலாறே நீளமாக இல்லாத போது
தமிழரின் சாதி வரலாறு பிற இனங்களின் வரலாறை விட நீளமாயிருக்கிறது.

இது தமிழர்களின் சாதியப்பெருமைக்கு வழிவகுத்து பிரிவினை உண்டாக்கி
வந்தேறிகள் அரசியல் செய்ய வழி ஏற்பட்டுவிட்டது.

அதாவது நமது சாதி பிரச்சனைக்கு காரணம் நமது பழமையே ஆகும்.

அதனால் சாதி அடையாளத்தை விட பழமையான இன அடையாளம் புறக்கணிக்கப்பட்டு போதிய ஆய்வுகள் இல்லாமல் இன அடையாளம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

50,000 ஆண்டுகள் பழமையான நமது இனம் அதன் பழமையை நிறுவ முடியாமல்...

சில நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான சாதி வரலாற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக முதலில் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டு..  சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும்.

பிறகு சாதிகள் அனைத்தும் இணைந்து தமிழர்நாடு அமைக்க போராட வேண்டும்.

பிறகு இன அடையாளத்தை உறுதி செய்து சான்றளித்து விட்டு சாதிய அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.
இதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.

வருங்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிடும்.தமிழினம் மொத்ததமும் ஒரு தமிழ்ச் சாதியாக மாறித்தான் தீர வேண்டும்..

முப்படை கொண்ட தமிழர் அரசு அமைந்த பிறகு...

இன்று சாதிய வரலாற்றை எவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோமோ
அதே அளவு தீவிரத்துடன் இன வரலாறை ஆய்வு செய்ய வேண்டும்.

சுருக்கமாக...

தமிழர் நாடு தமிழரின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வரும் வரை சாதி அடையாளமே தமிழ் அடையாளம்...