27/05/2021

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...

 


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியைசெய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடை விடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

அரசு பணி ஆசிரியர்கள் கலாட்டா...

 


திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

 


வயிற்று வலியை குணப்படுத்தும் மாதுளை...

 


கோடைகாலத்தில் உடல் உஷ்ணம், சோர்வு, மயக்கம், நீர்வற்றிபோதல், சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளை தீர்க்க மாதுளையை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை போக்கும் சர்பத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு, எலுமிச்சை. பனங்கற்கண்டை சாறாக எடுத்து பாகுபதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் மாதுளை சாறு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது, இதில் நீர்விட்டு குடித்துவர கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் தணியும். பித்தம் சமன்படும். குழந்தை இன்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

மாதுளை உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. நோய்களை தடுக்கவல்லது. குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளையின் தோலை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். மாதுளையின் மெல்லிய தோலை எடுக்கவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று வலி, சீதபேதி குணமாகும்.

தாமரை பூவை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தாமரை பூ இதழை பசையாக அரைத்து, அதை பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப் பொடி, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். வயிற்று புண் ஆறும். வயிற்று வலி குணமாகும். செரிமானத்தை தூண்டும். உடல் உஷ்ணம், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், காய்ச்சல், வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கு தாமரை இதழ் மருந்தாகிறது.

ஜவ்வரிசியை பயன்படுத்தி உடல் உஷ்ணம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, வரமிளகாய், உப்பு, தயிர், நல்லெண்ணெய். ஜவ்வரிசியை லேசாக வறுத்து வெந்நீர் விட்டு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியுடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதை ஜவரிசி, தயிர் கலவையில் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும். வயிற்று வலி குணமாகும். மரவள்ளி கிழங்கு வகையை சேர்ந்தது ஜவ்வரிசி. இது, குடலுக்கு நல்ல இயக்கத்தை கொடுக்கிறது. குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று கடுப்பை தணிப்பதுடன், வயிற்றுப்போக்கை சரி செய்கிறது...

சாமானிய மக்களின் எதிரி பாஜக மோடி...

 


கொரோனா வியாபாரம்...

 


தமிழ்த் தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...

 


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே...

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்...

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்...

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..

ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே...

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்.

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்).

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாட வைத்து விட்டனர்.. இந்த திராவிட வந்தேறி..

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவி வருகிறோம்.

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...

திமுக ஸ்டாலின் நாடகம் ஆரம்பம்...

 


பிராடு ஊடகங்களுக்கு ஐஸ் வைக்கும் திமுக ஸ்டாலின்...

 


நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்...

 


சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு உண்டு. காசநோய் புண்களை குணப்படுத்தும் இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது.

நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. மூட்டுவலிக்கு மருந்து முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.

வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது. கல்லீரல் நோய்களுக்கு மருந்து மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது...

சாமானிய மக்களின் எதிரி.. சுயநலவாதி பாஜக மோடி யின் நாடகம்...

 


பாஜக மோடியை காரி துப்பிய பாஜக சுப்பிரமணி சுவாமி...

 


துளசி...

 


துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.

துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு  பெண் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது...

இவர்கள் கிழிக்கும் கிழிக்கு எம்பூட்டு சம்பளம் பார்த்தீர்களா...

 


தொழிலாளர்களே உபயோகித்து கொள்ளுங்கள்...

 


சீதாப்பழம்... சின்ன பழம்... பெரிய சத்துக்கள்...

 


சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது...

ரேஷன் கடை கொள்ளைகள்...


 

தமிழின எதிரி.. ஊழல் மன்னன்.. கார்த்திக் ப. சிதம்பரம் கலாட்டா...