இந்த அவசர உலகில் பெரும் பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை ரொம்ப டையர்டா இருக்கு என்பது தான்..
இந்த சோர்விற்கு காரணம் எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது தான்.
நாம் எடுத்துக் கொண்ட உணவுகளை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாதபாடு படுகின்றன.
அதனால் நச்சு உடலிலேயே தங்கி உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.
மேலும், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாது.
உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகுவதால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது.
இதனால் அதிக உயிர் சக்தியை பணியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தினால் மனசோர்வு ஏற்பட்டு பின் உடல் சோர்வு ஏற்படுகிறது.
சோர்வை தவிர்க்க...
ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள் என ஏதாவது இயற்கை உணவுப் பொருளை உண்ன வேண்டும்.
மதியம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, 11 மணிக்கு, மற்றும் 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும்.
இதனால் வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது. இதன் மூலம் பசியால் ஏற்படும் சோர்வு இருக்காது.
மேலும், மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடந்தால் மிகவும் நல்லது. இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு அடையும்.
சோர்வு நீங்க...
பணி முடித்து வீட்டு வரும் பொழுது வேளைப் பளுவினால் ஏற்படும் சோர்விற்கு ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடனே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.
ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால் கொடிய காய்ச்சல் கூட குணமடைந்து விடும்.
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.
வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைக்கும் பொழுது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும்.
உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும்.
அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு உடனடியாக நீங்கும்...