15/07/2017

இலுமினாட்டி பாஜக மோடியும் இரகசியமும்...


நம் மொழிப்பற்றுக்கு என்ன குறைச்சல்?


தமிழருக்கு மொழிப்பற்று இல்லை என்போருக்கு இந்த பதிவு...

1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது.

1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது.

1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்).

1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது.

1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டு வந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா.ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார்.

1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன்.

1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.

1990களில் மின்னஞ்சல் காலம் தொடங்கியது.

1995ல் ஆஸ்திரேலியாவில் பாலா பிள்ளை என்பவர் முதல் தமிழ் இணையதள (மின்மடல்) குழுவை உருவாக்கினார்.

இன்று இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து மொழிகளில் தமிழும் ஒன்று.

இது சில தனிப்பட்ட தமிழரின் முயற்சி.

இனி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் செயல்பாட்டைப் பார்ப்போம்...

2000களில் கைபேசிகளின் காலம் தொடங்குகிறது.கைபேசிகளில் தமிழ் எழுத்துரு காட்டும் தொழில்நுட்பம் வரவில்லை.

இந்த நிலையில் தமிழ்மக்களின் செயல்பாட்டை, முதன்முதலில் கைபேசிகளில் தமிழைக் கொண்டு வந்த ஓபரா நிறுவனத் தலைவர் அளித்த பேட்டியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இணைய வசதி கொண்ட ‘ஓபரா மினி’யை அறிமுகப்படுத்திய போது.. தமிழர்கள் பல முனைகளில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டார்கள்.

இந்தியா, இலங்கை மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

தமிழ் மொழியை தங்கள் அலைபேசிகளில் சரியாக பார்க்க முடியவில்லை, ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கை..

OBML என்ற வசதியை கொடுத்தோம்.

நன்றி சொல்லி வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு பதில் கடிதம் அனுப்ப ஒருவரை தனியாக நியமித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்ற எல்லா மொழிகளை விட யுனிகோடு வசதியை முதன் முதலில் பெற்றது தமிழ் மொழிதான்.

தமிழர்கள் தங்களுடைய மொழி மீதும்,
அந்த மொழியை நவீன ஊடகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மெனக்கெடுவதையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக அரசு தரப்பில் இருந்து எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
அழைத்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்..

அதாவது தமிழ்மொழி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.தமிழனம் தான் வாழ வழியில்லாமல் போய்விட்டது.

மொழியை வாழவைக்க இனம் வலிமையாக இருக்க வேண்டும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

1991ல் பிப்ரவரி 21ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஐ.நா அறிவித்தது.

இது எதனால் என்றால் 1952ல் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) உருது மொழித் திணிப்பை எதிர்த்து நடத்திய பெரிய போராட்டத்தில் பிப்ரவரி 21 அன்று 11 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆனால் தமிழினம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 1939லேயே இரு மரணங்களையும்.. 1965ல் கிட்டத்தட்ட 300 மரணங்களையும் சந்தித்துள்ளது.

1982ல் கூட கர்நாடக மாநிலம் ஆக்கிரமித்துள்ள தமிழர் பகுதிகளில் தமிழ் கல்விக்காகப் போராடிய 19 தமிழர்கள் கர்நாடகா அரசால்  கொல்லப்பட்டனர்.

உலகிலேயே மொழிக்காக போராட்டம் நடத்திய முதல் இனம் தாய்மொழிக்காக இத்தனை உயிர் இழப்புகளை சந்தித்த முதல் இனம் நாம் தான்.

அதற்கான அங்கீகாரம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்றால் வங்காளியிடம் ஒரு நாடு இருந்தது.அதனால் ஐ.நா வரை குரல் எழுப்ப முடிகிறது.

ஹிந்தியாவில் ஒட்டுக்குடித்தனம் போடும் நம்மால் என்ன செய்ய முடியும்?

சேலம் ஆத்தூரில் நடந்த விபத்தில் ஆத்தூர் சார்பு நீதிபதி நாகலட்சுமி மரணம்...


சூட்சும உலகங்கள்...


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?

பாஜக தமிழக சாதனைகள்...


1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது.

2.காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது.

3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது.

4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது.

5.ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது.

6.மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது.

7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது.

8. கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது.

9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது.

10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது.

11. தமிழர்களை பொறுக்கி என்று சொல்லும் சு.சாயியை கன்டிக்காமல் இருப்பது.

12. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது.

13.நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது.

14. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது.

15. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழபபத்தை ஏற்படுத்துவது.

16. கட்டாய ஹிந்தி திணிப்பு.

17.நீட் தேர்வை மாணவர்களுக்கு கட்டாயமாக்கி அவர்களை அசிங்கப்படுத்தியது.

18.OPSயும் EPSயும் பாஜகவின் அடிமையாக ஆக்கியது.

19. தமிழக நலன்களுக்கு எதிரான திட்டங்களை தீட்டுவது.

20. தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க செய்யாமல் இருப்பது.

இன்னும் ஏராளம்.....

கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி: என் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு...


நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்......

ஹிந்திக்காரங்களுக்கும் செருப்படி கொடுத்த A.R. ரஹ்மான்...


சசிகலா சிறை குறித்து குற்றச்சாட்டு எழுப்பிய டிஐஜி ரூபாவிற்கு ஷோகாஸ் நோட்டிஸ் அனுப்பிய கர்நாடக அரசு...


தவறு நடந்தால் அதை அரசிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ தான் தெரிவிக்க வேண்டும். மீடியா முன்பு கூற அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது...


2 கோடி பணம் வாங்கிக் கொண்டு சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதி செய்யப்படுகின்றது என DIG ரூபா குற்றச்சாட்டு வைத்திருந்தார்...

இரட்டை இலை சின்னம் லஞ்சம் வழக்கு , டெல்லி போலிஸ் பல்டி , குற்றப் பத்திரிக்கையில் தினகரன் பெயரை நீக்கியது. ஜனாதிபதி தேர்தல் ஆதரவே காரணம் எதிர்கட்சிகள் விமர்சனம்...


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் டெல்லி போலிசார் தாக்கல் செய்த குற்றபத்திரிக்கையில் தினகரன பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி போலிஸ் குற்றபத்திரிக்கையில் கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக அரசிற்கு ஆதரவு அளிப்பதாக தினகரன் கூறியதன் பின்னணியே வழக்கில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதாகவும் , வழுக்கட்டாயமாக தங்களுக்கு ஆதரவு அளிக்க வைக்கவே தினகரன் மீது ஆரம்பத்தில் வழக்கு போடப்பட்டதாகவும் எதிர் கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

தினகரன் பெயர் நீக்கப்பட்டதால் விரைவில் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகின்றது இதனால் அதிமகவில் தினகரன் கை ஓங்கி வருகின்றது...

இந்திக்காரனுக்கு இருக்கும் மொழிவெறி தமிழனுக்கு இருந்திருந்தால் தமிழ் எப்போதோ ஆட்சிமொழி ஆகியிருக்கும்...


ஏ.ஆர்.ரகுமான் இலண்டனில் நடத்திய இசைவிழாவில் தமிழ்ப்பாடல்கள் ஒலித்ததால் அரங்கத்தை விட்டு வெளியேறினர் இந்தி பேசுபவர்கள்..

இது போன்று  தமிழர்கள் இந்திப்பாடலுக்கு வெளியேறி உள்ளார்களா ? நாமும் மானம்கெட்டு இந்தி தான் வேண்டும் என்கிறோம். இந்தி பேசுபவனோ  தமிழ்ப்பாடலுக்கு கூட இடமளிப்பது இல்லை. யார் மொழி வெறியர்கள் என்பதை அம்பலப்படுத்திய ரகுமானுக்கு பாராட்டுகள்...

பாஜகவுக்கு அடிமையானது மட்டும் அல்லாமல் எதிர்கால கல்வி உரிமையையும் சீரழிக்கின்றனர்... அடிமை அதிமுக அரசே பதவி விலகு...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...







யோக சாமியார் ராம்தேவ்வின் அசுரவளர்ச்சியும் பாஜக மோடி அரசின் அத்துமீறல்களும்...


மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்  மார்ச் 23’ 2014 அன்று டெல்லியில் நடந்த ’யோக மோட்சம்’ என்ற  நிகழ்வில் பாபா ராம்தேவ்வும்  மோடியும் கலந்துகொள்கிறார்கள். அப்போது திடிரென்று ஒலிபெருக்கியின் முன் தோன்றிய ராம்தேவ் தனது தொண்டர்களிடம் நம் நாடு முன்னேற்றமடைய வேண்டாமா? ஊழலில்லாத இந்தியா நமக்கு வேண்டாமா? இதை உருவாக்காமல் நாம் வீட்டிலேயே முடங்க போகிறமோ இல்லை நாம் விரும்பிய இந்தியாவை உருவாக்கப்போகிறமோ என்று மிகவும் ஆக்ரோஷமாக கேட்டு இதெல்லாம் நீங்க வேண்டுமென்றால் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று முதன்முதலில் மோடிக்கு ஆதரவாக வெளிப்படையான ஆதரவை தந்தவர் தான் பாபா ராம்தேவ்.

இதற்கான பிரதிபலனை  தான் மோடி அவர்கள் பிரதமர் ஆனவுடன் சாமியாருக்கு  வட்டியும் முதலுமாக கிட்டதட்ட 46 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிலங்களை  சட்டத்தினை மீறி  அவரின் பதஞ்சலி நிறுவனத்திற்கு கொடுத்தார்.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய மார்ச் 2013 வரை  156 மில்லியன் டாலராக இருந்த பதஞ்சலி நிறுவனத்தின் வியாபாரம் மோடி ஆட்சிக்கு வந்த 2015க்கு பின் அதாவது மார்ச் 2015ல் 322மில்லியன் டாலராக உயர்ந்தது.

அது 2016ல் 1.6பில்லியன் டாலராக அசுர வளர்ச்சியை எட்டி நிற்கிறது. இந்த அசுர வளர்ச்சிக்கு பின் மோடி அரசு பல சலுகைகளை சட்டவிதிகளை மீறி ராம்தேவ் நிறுவனத்திற்கு செய்துகொடுத்திருக்கிறது. அதாவது

பிஜேபி அரசு ஆளும் மாநிலங்கள் மற்றும் தனது கூட்டணியில் இருக்கும் மாநிலங்களில் கணக்கற்ற முறையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு நிலங்களை வாரி வழங்கியிருக்கிறது பிஜேபி அரசு. உதாரணத்திற்கு

அசாமில் அக்டோபர் 2014  மற்றும் நவம்பர் 2016 முறையே 1200ஏக்கர் நிலம் 100% சலுகையுடனும்   மற்றும் 148 ஏக்கர் நிலம்  38% சலுகையுடனும்  பதஞ்சலி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாக்பூர் மகாராஷ்டிரா போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களில் 234 ஏக்கர் நிலம் 78% சலுகையுடன் கடந்த செப்’2016அன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உத்திரபிரதேசத்தில் நவ.2016ல் 300ஏக்கர் நிலம் 25% சலுகையுடனும், மத்திய பிரேதேசத்தில் பிப்2017ல் 40ஏக்கர் நிலத்தை 88% சலுகையுடனும் மற்றும் ஹரியானாவில் ஜன.2017ல் 52,000 ஏக்கர் சாதாரண விலையிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி மொத்தமாக பார்த்தால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் 77% சலுகை விலையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு மோடி அரசு சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது.

இதுபோக பதஞ்சலி  நிறுவனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றையும்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோடி அரசு செய்துகொடுத்திருக்கிறது.

உதாரணமாக நாக்பூரில் பதஞ்சலி நிறுவன தொடக்க விழாவில் பிஜேபியில் தற்போதைய  சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பதஞ்சலி நிறுவனத்தின் 90க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பவரும் பாபா ராம்தேவ் வின் நண்பருமான பாலகிருஷண பேசும் போது

இந்த இடத்திற்கு சரியான சாலை வசதி இல்லை ஆகவே அமைச்சர் அதை அமைத்து தருவதற்கு உதவிடவேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் நிதின்கட்காரி அதற்கென்ன இந்த நிறுவனத்திற்கு செல்ல புதிய சாலையை உடனே போடுவதோடு மட்டுமில்லாமல் இதனை தேசிய நெடுஞ்சாலையோடும் இணைத்து விடுகிறேன் என்று மேடையிலேயே அறிவித்தார்..

இப்படி பல்வேறு வகைகளில் பாபா ராம்தேவ்க்கு மோடி அரசு விதியை மீறி பல சலுகைகளை கொடுத்து வளர்த்து விட்டிருக்கிறது. இத்தனையும் எதற்காக என்றால் தனது இந்துத்துவ கொள்கையை வளர்ப்பதற்கும், அதற்கான நிதி ஆதாரத்தை தான் ஆட்சியில் இருக்கும்போதே வளப்படுத்தவுமே இந்த சலுகைகள் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது.

இதை மறைக்கவே யோக செய்கிறோம் அமைதியை நிலைநாட்டுகிறோமென்று சாமியார் பாபா ராம்தேவ்வும் பிரதமர் மோடியும்  நாடகத்தை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தகவல்கள்:

1.https://www.reuters.com/investigates/special-report/india-modi-ramdev/

2.https://communalism.blogspot.in/2014/03/india-modi-and-baba-ramdev-tied-in.html

3.http://www.mid-day.com/articles/elections-2014-baba-ramdev-supporters-root-for-modi-at-yoga-gurus-show/15178075

4.http://www.narendramodi.in/yoga-can-be-our-cultural-ambassador-we-can-reach-out-to-the-world-through-this-medium-6067

கமலா ? அவன் ஒரு ஆளே கிடையாது அவன் சொல்றதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டி...


நேற்றைய தினம் எல்லா துறைகளிலும் ஊழல் லஞ்சம் தலைவிரித்தாடுகின்றது என கமல் பேட்டி அளித்திருந்தார், அது குறித்து கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு ஒருமையில் பதில் அளித்துள்ளார்...

இலுமினாட்டி - கிறிஸ்த்துவ மத அரசியல்...


கிறித்தவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப்பட்டு விட்டது.

கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே.

யார் இந்தப் பவுல்? வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர். இவரின் உண்மையான பெயர் Saul of tasus. இது கிரேக்க மொழிப் பெயராகும். கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார். இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்பட்டது. திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார். ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.
தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும்போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார். கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார். இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.

இதுதான் அவரது வாக்குமூலம்
நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். (முதலாம் கொரிந்தியர்9:19-23)

கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.

நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது. (யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே. இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும். புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.
லுசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது.

1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்அத்தை (நவீனம்) தோற்றுவித்தல்.

2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்.

3. அப்படியே குப்ருக்கள்(இறை மறுப்பு) கொண்டுசெல்லல். அத்தோடு அவ்வேதம் அழிந்துவிடும்.

இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான். இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள். வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.

தூய கொள்கைக்குள் பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?
மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும். அப்பற்றின் காரணமாக அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும். ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல். ஈசாவோடு எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார். இதன் காரணம் பின்னர் விளங்கும். ஈசா நபியினதும் அவர் தாயினதும் கலங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கியவர் இவரே. ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.
இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?
வரலாற்றில் சைத்தானியர்கள்(லுசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழித்து இணைவைப்பை உருவாக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம்தான். ஈசா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் கடவுளை ஈசா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார். ஈசா நபியின் கலங்கத்தைத் துடைக்க இதுவே நல்லது என்ற போர்வையில் நுழைகிறது. தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது.

அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள்தானே என்ற லொஜிக்கின் அடிப்படையில் மரியமும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது. முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும். மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம். பிதா, சுதன், ஆவி என்ற தற்போதைய திரித்துவம் Tertullian (155-230) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.

உதாரணமாக..

1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய(புத்தரின் 3 உடம்பு).

3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.

5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி.

6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்.

7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்.

8. டாவோசியத்தில் Fu, Lu, Shou.

இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு. இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாட்டிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும்.

ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான். ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்.

இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே. இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருத வேண்டும்.

பவுல் இலுமினாட்டி என்பதற்கு இது தவிர வேறு ஆதாரங்களைத் தேடுமாறு வாசகர்களைப் பணிக்கிறேன். நீங்கள் தேடும் போதுதான் இன்னும் படிப்பீர்கள்...

தமிழர்கள் தான் உலகின் தொல்குடி நண்பர்களே...


தமிழர்கள்தான் இந்தியாவில் அல்ல, ஆசியாவில் அல்ல, உலகின் தொல்குடி என்பதற்க்கான ஆதாரம் கீழே....

நேஷ்னல் ஜியோகிரபிக் மற்றும் மரபனு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் திரு.பிச்சப்பன் என்பவரும் இனைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபனுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதில் நம் மதுரை அருகிலுள்ள ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான M130 என்னும் மரபனுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபனு 70,000 வருடங்கள் பழமையானது இதன் தொடர்ச்சிகள் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆஸ்த்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
             
தமிழன் தன் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித நாகரீகம் தோன்றுவதற்க்கு முன்னமே தோன்றியவன் தமிழன் ஆனால் இன்று நம் நிலை ......

உலகமே நம்மில் ஆரம்பித்தது இன்று நாம் அடி வாங்காத இடமே இல்லை எனும்நிலை , இலங்கையிலிருந்து, மலேசியா, மும்பை, கர்நடகா, ஆந்திரா, கேரளா, இந்தியா, ஏன் தமிழகத்திலேயே தமிழக அரசு நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது. காரணம் நம் வரலாறு நம்மிடம் மறைக்கப்பட்டது தான்.....

தமிழனுக்கு தான் யார் என்பதை உனர்த்த வேண்டிய தருனம் இது...

ஒன்றினைவோம் வரலாற்றை மீட்போம்....

Source : http://zeitlerweb.com/about-2/dna-shows-70000-year-link/

http://www.livemint.com/2010/01/01150352/Who-went-where-when-On-the-t.html

http://www.indianexpress.com/news/journeyofaman/6685/0

http://www.youtube.com/watch?v=lAOBorWQct8

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்...


கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50
“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:
விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r
(விட்டம் = 2r ); மட்டு நாண் மாதவனில்
மாறியே = 4 ஆல் பெருக்கு; எட்டதனில்
ஏற்றியே = 8 ஆல் பெருக்கு; செப்பியடி =
20 ஆல் வகு.

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r
இங்கு π = 16 / 5 = 3.2
( இது ஓரளவுக்குத் துல்லியமான
தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும்
வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற
சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல
நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...