கேள்வி: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் 'ஈழத்தை' வைத்து அரசியல் நாடகம் ஆடினாலும், வைகோ, பெரியார் போன்றோர் ஈழத்துக்காக குரல் கொடுத்து வந்து தானே இருக்கிறார்கள். 'வைகோ' ஒரு தெலுங்கர் என்று கூறி அவர் மீது சேற்றை வாரி இறைத்தால், ஈழத்துக்காக குரல் கொடுத்த ஒரு தமிழர் தலைவரை இங்கே காட்ட முடியுமா...?
இந்த கேள்விக்கு பதிலை நேரடியாக பார்க்கும் முன்பு வரலாற்றை சற்று நேர் செய்வோம்...
வருடம் 1965 :
தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம்.
தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர்.
மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை. ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.
பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை :
இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே இந்தியை கொண்டு வந்தவர் என்பதும், அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?
இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436
பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ, தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2
என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.
இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர். கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.
என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார்.
இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக தமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது. விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.
ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்.
திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை :
திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது. அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.
அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளி வந்து விட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.
இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது:
இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர். இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.
வருடம் 2013 :
சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது.
இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார்.
அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.
தமிழருக்கான நாடு கேட்டு மாணவர்கள் போராட்டம் (2013) :
ஆனால் எதிர் கட்சியை இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது.
மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர்.
ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர். இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர்.
இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
Source:http://tamil.oneindia.in/news/2013/03/24/tamilnadu-arts-colleges-re-open-tomorrow-172079.html
வைகோ நல்லவர்தானே...?
சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?
ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?
விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?
எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா?
முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா? ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?
விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா:
"இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனால், தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க?
கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க. ஆனால், தமிழ்நாட்டில்? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே...
கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க.
தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!'
Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html
தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும்,கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர். எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ , திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது. மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.
எனவே தமிழனுக்கேன்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான்.
இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே.....
இனிமேலாவது திருந்துங்கள்....