16/07/2021

பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவது எப்படி?

 


ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பெண்கள் எலி வால் போன்ற கூந்தலையும், ஆண்கள் வழுக்கைத் தலையையும் பரிசாகப் பெறுகின்றனர்.

மேலும் தங்களது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பலர் கடைகளில் விற்கப்படும் பல மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம் என்பது தெரியுமா?

 இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

வழி 1 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வழி 2 - பூண்டு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி 3 - பூண்டுகளை சூரியக்கதிர்கள் படும்படி வைத்து நன்கு உலர்த்தி, பின் அதை அரைத்து பொடி செய்து, கண்டிஷனருடன் சேர்த்து கலந்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பூண்டு சாற்றினை கண்டிஷனருடன் கலந்து பயன்படுத்தலாம். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வழி 4 -  ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

வழி 5 - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

வழி 6 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தண்ணீர் மற்றும் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை இந்த கலவையை தலைக்கு பயன்படுத்தும் முன்னும் நன்கு குலுக்கி பின் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்...

சதிகாரியே...

 




வேண்டாம்
என்றுச் சொல்லி
சென்றிந்தால்
கூட
தாங்கியிருப்பேன்...

என்னை இப்படி
வேடிக்கையாக்கி
சென்றுவிட்டதால்
தாங்க முடியவில்லை...

தவிக்கிறேன்
நீ தந்த
காதல் வலியாலே
தினமும்.....

திமுக மணல் மாஃபியாவும்.. டிஜிபி சைலேந்திரபாபு வும்...

 


ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை...

 


ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம்.

முட்டையை அவித்தோ, பொரித்தோ சாப்பிடுங்கள்.

மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை.

இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது.

சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.

உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது.

ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை.

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது...

பாஜக எனும் தேச துரோகிகள் கூடாரம்...

 


பாஜக மோடி அரசை செருப்பால் அடித்த அலுவல் மொழித்துறை...

 


ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்...

 


1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கிக் கொள்ளப்பட்டது.

வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது.

அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.

எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.

வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.

ம.பொ.சி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை, திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது.

இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்.

( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.

தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)

அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்.

ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக் கொணரப்பட்டவை) எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை.

தடயங்களின் அடிப்படையில் நாம் முழு இந்தியாவையும் கோரலாம்தான்.

ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்.

அதைப் போல் ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது...

உன் நினைவுகள்...

 



நிலவின் விழிகளில்
நான் தினம் படித்த
உந்தன் கையொப்பங்கள்தான்
என் கனவுகளில்
நான் தினம் வரையும்
உந்தன் ஓவியங்கள்...

ஆதவனின் அகராதிக்குள்
நான் தேடி அலைந்த
உந்தன் வார்த்தைகள்தான்
என் இருதயத்துக்குள்
நான் கிறுக்கிக் கொண்ட
உனக்கான கவிதைகள்...

வானத்தின் பக்கங்களில்
நான் பூசிக் கொண்ட
உந்தன் வண்ணங்கள்தான்
என் உதடுகளில்
நான் தீட்டிக் கொண்ட
வெட்கத்தின் சுவடுகள்...

வீண்மீன்களின் அரிச்சுவடியில்
நான் எழுதிக் கொண்ட
உந்தன் தீண்டல்கள்தான்
என் கைரேகைகளில்
நான் பதித்துக் கொண்ட
மருதாணியின் முத்தங்கள்...

தென்றலின் மௌனத்தில்
நான் சேர்த்துக் கொண்ட
உந்தன் நினைவுகள்தான்
என் வாழ்க்கை முழுதிற்கும்
நான் கோர்த்துக் கொண்ட
உன் காதலின் சந்தங்கள்..

ஏய் பெண்ணே...

 




இவ்வுலகிலே
மிகவும் கொடுத்து வைத்தது 
நீ உபயோகிக்கும் துண்டு தான்...

சில நேரம்
உன் முகத்தில் முத்தமிடுகிறது..

சில நேரம்
உன் தலையில் உறங்குகிறது...

சில நேரம்
உன் தோள்களில் ஊஞ்சலாடுகிறது...

சில நேரம்
உன்னை முழுவதுமாய் அனைத்து கொண்டு.. 
துளி துளியாய் 
உன் அழகை இரசிக்கிறது... 

ஒரு அடி துண்டு என்றாலும்...
கொடுத்து வைத்த துண்டு...

மோட்சம் பெரும் யோகம் பெற்றது 
உன் துண்டு தான்...

பாஜக மோடியின் நமக்கு நாமே பாராட்டு விழா...

 


மக்கள் விரோத அரசுகள்...

 


பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


மெய்யியல் உணர்வோம் - தேங்காய்...

 


தமிழர் வாழ்வியலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது.

அடிப்படையில் நன்னெறியை உணர்த்துவதற்கான உயரிய விளக்க குறியீடாகவே தேங்காய் பயன் படுத்தப்பட்டுள்ளது.

காலப்போக்கில் மெய்யியல்கள் புறந்தள்ளப்பட்டு தமிழர் வாழ்வில் சடங்கு முறையாக மாற்றம் கண்டுவிட்டது.

மனிதர்களின் அறியாமை நீங்கி தூய அறிவு வெளிப்பட வேண்டும் என்பதைனை உணர்த்தும் வகையில் தேங்காய் ஓடு நம்மை சூழ்ந்துள்ள அறியாமையாகவும் உள்ளிருக்கும் வெள்ளை நிற பருப்பு தெளிந்த அறிவாகவும் குறிக்கப்படுகிறது.

அறியாமையின் தன்மைகளான ஆணவம், கன்மம், மாயை குடுமியால் மறைக்கப்பட்டிருக்கும் மூன்று கண்களை போன்ற திட்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நம்மை சூழ்ந்துக் கிடக்கும் அறியாமைகளை களைந்து தூய அறிவோடு வாழ வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்தவே தேங்காயை உடைத்து குடுமியை நீக்கும் வழக்கத்தை உருவாக்கினர்...

நான் படித்த உளவியலில் இருந்து... ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்?

 


குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன்.

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

வாகனம் ஓட்டுதல்:

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.

இதற்கு காரணம் பண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும்.

ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள்.

பேச்சு:

ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும், 20 சதவீத உடல் மொழியையும், 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். ஆண்கள் மூளையால் அவ்வாறு உணர முடியாது.

தீர்வுகள்:

பல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டு கொள்வார்கள்.

ஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது... யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கி விடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்பு, வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம், உறவுகள், நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.

மனம்:

வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது.

பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

ஞாபக சக்தி:

ஆண்களால் எதையும் அதிகம், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள், திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை.

ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால், ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்.

ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்...

டாக்டர் Vs நோயாளி கலாட்டா...

 


நோயாளி :  டாக்டர், நீங்க சொன்ன மாதிரி அல்வா தினமும் சாப்படுறேன் ஆனால் தொப்பை குறைய வில்லையே..

டாக்டர் :அட மூதேவி!! நான் சொன்னது அளவா சாப்பிட சொன்னேன், முதல்ல போய் காத செக் பண்ணு.😄

பாஜக மோடியின் கார்ப்பரேட் கொள்ளை...

 


தமிழகத்தை சீரழிக்க திமுக தெலுங்கர் ஸ்டாலின் திட்டம்...

 


என் வாழ்க்கையே புலம்பலானது...

 




என்னை மயானத்தில்
மாடு மேய்க்க விட்டுவிட்டு..

குடமுழுக்கு தீர்த்தத்தில்
குளிக்கிறது உன் கூந்தல்..

என் நிழலும் போதையில் தள்ளாட
உன் உலகம் புது உறவில் கொண்டாடுது..

தென்றல் ரசித்த என் ஜன்னல்
புயலில் சிக்கி புலம்புகிறது..

பூமியின் சுழற்சியே அறியாமல்
உன் பூவிழியில் தொலைந்த என் நாட்கள்
என் இதயக் குடுவையின் முழுப்பரப்பிலும்
உன் நினைவுக்கு கூடுகள் மூச்சடைக்குது...

கட்டுப்பாடின்றி உன்மேல் வைத்த அன்பு
இன்று என் கட்டளைகளை காலால் உதைக்கிறது..

நடைப்பிணமாக நான் நடக்க
அலங்காரங்களுடன் அங்கு ஆரவாரம் ஆர்ப்பறிக்குது..

பிணமாகும் வரை
இனி புலம்பல் தான் 
என் தாய் மொழியோ ?

தமிழா சிந்தித்து பார்...

 


ஆந்திராவில் ரெட்டியார் இருக்கிறார்கள், நாயுடுகள் இருக்கிறார்கள், பிராமணர்களும், ஹரிஜன மக்களும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களை மொத்தமாக அழைக்கும் போது ஆந்திரர்கள் என்றோ தெலுங்கர்கள் என்றோ அழைக்கிறோம்...

அதைப் போலவே கேரளாவில் இருப்பவர்களை ஈழவர், நம்பூதிரி, நாயர் என்று பிரித்து பிரித்து அழைக்காமல் மலையாளி என்ற ஒரே பதத்தில் அழைக்கிறோம்...

அதே போலதான் திராவிடம் என்ற வார்த்தையும் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பெயராகவும் நிலம் சார்ந்த மக்களின் பெயராகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..

எனவே திராவிடன் என்பது நிலத்தின் பெயரே தவிர இனத்தின் பெயரே இல்லை..

வேறொரு விஷயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடம் என்பதை தமிழகத்தில் மட்டும் தான் இனம் சார்ந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிற பகுதிகளில் அப்படி யாரும் பார்க்க வில்லை.

அவரவர் அவரவரின் மாநிலம் மற்றும் மொழி அடையாளத்தையே தங்களது பண்பாட்டின் அடையாளமாக பெருமையோடு காட்டுகிறார்கள்.

ஆரியர்கள், திராவிடர்கள் என்ற பாகுபாடும் பகுத்தறிவு வாதங்களும் சென்னையை தாண்டி பெங்களூரை கூட தொட்டது இல்லை பக்கத்தில் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு கூட அடியெடுத்து வைத்ததில்லை.

தமிழர்களாகிய நாம் மட்டுமே இன்னும் கால்டுவெல்லின் கற்பனை குதிரையில் பயணப்பட்டு கொண்டே வந்தேறிகளை வாழ வைத்து நாம் அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

அமெரிக்காவின் இயந்திர கொசு...

 


கார்ப்பரேட் நிறுவனத்தின் இரகசியம்...