25/01/2021
உளுந்து - மருத்துவப் பயன்கள்:..
நோயின் பாதிப்பு நீங்க...
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
உடல் சூடு தணிய:
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்து வடை:
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுப்பெற:
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்:
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்...
ஆன்மா, ஆன்மீகம், மன அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் பற்றி அறிவோம்...
நம் ஆன்மா என்பது என்ன என்று கேள்வி கேட்பவர்கள் உள்ளனர்.
பலருக்கு இது குறும்புக் கேள்வி.
சிலருக்கு இது புரியாத புதிர்.
மிகக் சிலர் கொஞ்சம் புரிந்தவர்.
வெகு சிலர் அதிகம் புரிந்தவர்.
நன்கு புரிந்தவர்கள் சொற்பம்.
அவர்களிடமிருந்து கேள்விகள் வராது.
ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில்...
இறந்த மனிதனிடம் எது இல்லையோ, அதுவே வாழும் மனிதனுக்கும், இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா..
அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.
அது இல்லை எனில் உயிர் இல்லை.
சக்தி இல்லை எனில் சவம்.
இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம்.
ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது.
கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல...
வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாகும்...
வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது..
இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.
நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது...
இந்திக்கு கொடி பிடிக்கும் பலர், மொழி உரிமைக்காக போராடுபவர்கள் மீது அடிக்கடி தொடுக்கும் கேள்வி இதுதான்...
Isn't it mentioned in the constitution of India that "It shall be the duty of the Union to promote the spread of the Hindi language"? So what is wrong in promoting Hindi?
ஆம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியை மேன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடபட்டிருக்கிறது, ஆனால் அதே அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்காவது தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை மேன்படுத்துங்கள் என்று குறிப்பிட பட்டிருக்கிறதா? இந்தியை இந்தியாவின் தனி அதிகார மொழியாக்குவது தான் இந்தியாவின் மொழி கொள்கை,
"The Constitution adopted in 1950 stipulated that English and Hindi would be used for the Union's official business for a period of fifteen years (s. 343(2) and 343(3)). After that time, Hindi was supposed to become the sole official language of the Union."
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை முன்னிறுத்துவது தான் இந்திய அரசின் அடிப்படை மொழி கொள்கை.
அதன் அடிப்படையில், எங்கே இந்தி பேசும் மாநிலங்களை ஆங்கிலத்தை புறக்கணிக்க சொல்லுங்கள் பார்ப்போம்?. ஏன் இந்தி மாநிலங்களில் இன்னும் ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது?
ஆங்கிலத்தை இனி இந்தியாவில் ஓரம் கட்ட முடியாது என்று தெரிந்து தான் இப்போது பிற தேசிய மொழிகளை ஓரம் கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல் தான் பல இந்தி ஆதரவாளர்கள் பிதற்றி கொண்டு திரிகிறார்கள்.
இந்தி மாநிலங்களுக்கு திராணி இருந்தால் முதல் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை நிறுத்த சொல்லுங்கள்.
இந்தியால் ஆங்கிலத்தை வீழ்த்த முடியவில்லை, அதனால் தான் எம் மொழியின் இடத்தை ஆக்கிரமிக்க மத்திய அரசு முற்படுகிறது.
நாம் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அதுவும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான் எங்கள் எதிர்ப்பு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்.
"Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same"(Article 29 Protection of interests of minorities,).என்று குறிப்பிட பட்டிருக்கிறது.
நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பது எமது மொழியை பாதுகாக்க தான். நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு காரணம் இந்தி தமிழின் இடத்தை ஆக்கிரமிக்க துடிப்பதினால் தான்.
இந்தி திணிப்பை நாம் எதிர்காததினால் தற்போது தமிழகத்தில், வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனங்கள் தமது விளம்பர பதாகைகளில் இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
வெளிநாட்டு நிறுவனங்களும் இதையே முன்மாதிரியாக கொண்டு தமது விளம்பரங்களையும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள வங்கிகளின் படிவங்களிலும் இப்போது இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் ..
படிவங்களில் மட்டும் இல்லை, சில வங்கிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகளுக்கும் தமிழ் தெரிவதில்லை. வங்கி இயந்திரங்களிலும் தமிழ் இல்லை.
தமிழக விமான நிலையங்களில் வேலை செய்யும் மேல் அதிகாரிகள் பலருக்கு தமிழ் தெரிவதில்லை. அதை தவிர விமானத்தில் பயணம் செய்யும் போது அறிவிப்புகளும், அபாய குறிப்புகளும் தமிழில் இல்லை.
வானொலியிலும் இந்தி மெல்ல மெல்ல நுழைந்துவிட்டது. இந்திக்கென்று தமிழகத்தில் தனி அலைவரிசை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது.
தொலைகாட்சியிலும் இப்போது இந்தி ஆளுமை செலுத்த தொடங்கிவிட்டது. விஜய் தொலைகாட்சியில் சமீபகாலமாக இந்தி திரைப்படங்களை எந்த ஒரு மொழி பெயர்ப்பும் இல்லாமல் திரையிட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சில மாத காலத்தில் இந்தி நாடகங்களையும் நேரடியாக இந்தியிலேயே திரையிட்டாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை.
நாட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், வீட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், இப்போது கட்டைவிரலிலும் இந்தியின் ஆட்சி தான்.
இந்தியில் கையொப்பம் இட்டால் சன்மானம் வழங்கப்படுமாம். கையொப்பம் என்பது எமது தனிப்பட்ட அடையாளம், எம் கையொப்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை கூட இப்போது தமிழர்களுக்கு இல்லையா? இந்திக்கு இன்று சன்மானம் கொடுப்பவர்கள், தமிழுக்கு நாளை அபராதம் விதிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
கடவுளின் பெயர் ஏக்-[ சுவா] / சிவா...
மாயன் இன மக்கள் வழிபட்ட தெய்வம் முதல் தமிழ் சங்கத் தலைவன் சிவன் முப்பாட்டன் ஆவான்.
இங்கே அதற்கான ஒற்றுமைகள்..
கடவுளின் பெயர் ஏக்-[சுவா] / சிவா.
மாயன் நிறம் செவ் நிறம் ஆனால் வழிபட்ட கடவுளின் நிறம் கருப்பு.
சிவனை கருமை நிறம் கொண்டே குறிப்பார்கள்.
மாயன் இனத்தவர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் இருந்தது புலிகள் இல்லை.
நம் தமிழர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் அதிகம் இல்லை, புலிகள் அதிகம் இருந்தன.
புலித்தோல் இடுப்பில் / ஜாகுவார்தோல் தோளில். சூலம் /வேல், கழுத்தில் பாம்பு /கயிறு..
குறிப்பு : மெல்கிப்சன் இயக்கிய அபோகாலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தவர்கள் உரையாடலில் பல இடங்களில் தெளிவான தமிழ் சொல் எச்சங்கள் இருந்தது என்பது சொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று. விரைவில் அதனின் விளக்க ஆவணங்கள் வெளிவர இருக்கிறது..
கொய்யால எவனை போய் நோண்டி நொங்கு எடுத்தாலும் ஆதி தமிழாகத் தான் இருக்கிறது...
இருந்தும் என்ன பயன்..?
மாதுளையின் மகத்துவம்...
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...
யேசு அழைக்கிறார்... இப்போ சிபிஐ அழைக்கிறது...
ரூ.120 கோடி வரி ஏய்ப்பு விவகாரத்தில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்...
மிளகாயில் இலைசுருட்டு பூச்சி தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறை...
மிளகாய் சாகுபடி செய்த 20 நாட்களுக்கு மேல் இலைகள் துளிர் விட ஆரம்பித்தவுடன் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி முதலியவை தாக்க ஆரம்பிக்கும்.
முதலில் மிளகாய் நடவு செய்வதற்கு முன்பு மண்பரிசோதனை செய்து தேவையான அளவு உரத்தைமட்டு கொடுக்க வேண்டும்.
தழைச்சத்து உரம் அதிகமாக கொடுக்காமல் 10 கிலோ உரம் போட வேண்டும் என்றால் 2 கிலோவை குறைத்து 8 கிலோதான் கொடுக்கனும் (தழைச்சத்து உரத்தை கொஞ்சம் குறைத்து தரவேண்டும்).
பூச்சிதாக்குதலை குறைக்க ஊடுபயிராக மிளகாய் நாற்று 10 வரிசையும் ஒரு வரிசை மக்காச்சோளமும் நடவு செய்ய வேண்டும்.
வரப்பு ஓரங்களிலும் மக்காச்சோளம் நடவு செய்தால் பக்கத்து வயலில் உள்ள பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராமல் தடுக்கலாம்.
மிளகாய் சாகுபடியில் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மஞ்சள் நிறப்பொறி 10 முதல் 15 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10-15 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் இல்லை என்றாலும் தொடர்ந்து தெளித்து பூச்சி வருமுன் பயிரை காக்கலாம் இலைப்பேனின் தாக்குதல் மினகாயில் அதிகமாக இருக்கும்.
இவற்றை இரசாயன முறையில் கட்டுப்படுத்த புரப்பனாபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அசிபேட் 2 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அல்லது அபாமேக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி தெளிக்க வேண்டும் சாறுறிஞ்சும் பூச்சி தாக்குதல் அதிகமாக தென்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்...
வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம்...
பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி (BOOMERANG) வீச கற்றுக்
கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் வெல்ஷ்.
1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.
அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர்.
பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.
வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது.
இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,
தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூஜைக்குரிய ஆயுதமாக இருப்பதாக சொல்கிறார்கள்...
எதிர்காலத் தமிழகமும்.. எனது கனவும்... வேளாண்மைத்துறை...
1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம் - காரையாறு - மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட வேண்டும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.
2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்பட வேண்டும்.
3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.
4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.
5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வர வேண்டும்.
6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.
7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்பட வேண்டும்.
உதாரணமாக,
தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர்,
நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள்,
கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.
8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.
9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்பட வேண்டும்.
10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்க வேண்டும்.
அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட இருக்க வேண்டும்...
சாராயக் கடவுள்...
சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம்
அதென்ன சாராயக் கடவுள்..
கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..
ஏறக்குறைய 30,000 க்கும் மேற்பட்ட கடவுள்கள் உள்ளனராம்..
சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..
தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..
இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..
ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..
இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..
ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..
ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..
அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..
என்ற பெயரும் உண்டு...
புல்ரோரர் - Bullroarer...
இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.
இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.
அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாய தலைவர்கள் நான்கு பேரை சுட்டுக்கொல்ல முயற்சி - செய்தி...
விவசாயிகள் போராட்டத்தை கலைக்க பாஜக வின் சதி அம்பலம்..
ஒக்காலி எதாச்சும் தப்பா நடந்துச்சுனு வச்சுக்க... தெருச்சுரும்...😡😡😡