17/08/2018

இந்திய சதி கோட்பாடு -2...


இந்திய ராணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையான அக்னி 5-ன் தாக்குதல் எல்லை பற்றியது...

அதாவது, அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் தூரம் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது பின் அது 5500 - 5800 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்று இந்திய அரசாங்கம் கூறியது.

ஆனால், 17000 கிலோ எடை கொண்ட அக்னி 4 ஏவுகணையானதே சுமார் 4000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் போது, அக்னி 5 அதைவிட அதிகமான தூரத்தை கடக்கும் என்கிறார்கள் சில சதி கோட்பாட்டாளர்கள்.

சதி கோட்பாட்டாளர்களின் கணிப்பு படி, அக்னி 5 ஏவுகணையானது சுமார் 50000 கிலோ எடையும், 8000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், எதிரிகளை கலங்கடிக்கவே (முக்கியமாக சீனாவை) அக்னி 5-ன் தாக்குதல் எல்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் சதி கோட்பாட்டாளர்கள் கருத்து கூறுகிறார்கள்...

யார் இந்த லூசிபர்.?


பாகிஸ்தானை ஒரு நொடியில் அழித்து விடுவோம்.. கார்கில் போரின் போது அமெரிக்க அதிபரை எச்சரித்த வாஜ்பாய்...


1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. நாடு நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை அதுவாகும். அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பஸ் மூலம் பயணித்து பாகிஸ்தானுடன் உறவை விரும்பியவர் வாஜ்பாய்.

ஆனால் இதன் பிறகு மூன்று மாதத்திலேயே அதாவது, மே மாதம் பாகிஸ்தான் ராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுத்து, இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது.

கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர், பாகிஸ்தானிடம் சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளது. அதில் ஒன்றை பயன்படுத்தினால் போதும், உங்கள் பாதி இந்தியா காலியாகிவிடும். எனவே போரை நிறுத்துங்கள் என்று மிரட்டினார்.

ஆனால் இதற்கு அடிபணியாத வாஜ்பாய், எங்களுக்கு வேண்டுமானால் பாதி காலியாகி விடும். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் இருந்த தடமே தெரியாமல் அழித்து விடுவோம். அந்த நாடு வரைபடத்திலேயே இருக்காது என்று பதிலடி கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அமெரிக்க அதிபர் ஆடிப்போனார். அதன்பிறகு தொடர்ந்து போரிட்டு இந்தியா கார்கிலை வென்றது குறிப்பிடத்கத்கது...

வாஜ்பாய் மறைவுக்கு தமிழகத்தில் இன்று அரசு பொது விடுமுறை...


அரிசியின் பூர்விகம்.. நம் தமிழகம் தான்...


அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம்.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள்... கருதிவந்தார்கள்.

சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை..

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... நம் தமிழகம் தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்..

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது.

இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும்.

அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது பாருங்கள்... அரிசி - ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்.. ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?

- டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

(அவள் விகடன் 01-ஜனவரி-2013)...

வைகோ நாயுடு எனும் கமிஷன் புரோக்கர்...


கோலார் தங்கவயலும் தமிழர்களும்...


கோலார் என்கிற பெயர்ச்சொல் ஒரு காலத்தில் அதாவது கொங்கு மண்டலத்தின் பகுதியாக இருந்த காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்கபட்டது என்றும், அதே போல் இன்று மைசூர் என்று விளிக்கப்படுகின்ற ஊர் பெயர் கொங்கு மண்டல ஆட்சியில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாக மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுகின்றார்.

ஆக எருமையூர் (மைசூர்), வெங்காலூரின் (பெங்களூர்) பெரும்பகுதி, குவாலப்புரம் (கோலார்) மற்றும் காவிரியின் பிறப்பிடமான குடகுமலை வரையும் மேலும் வடவேங்கடம் (திருப்பதி) தென்குமரி என்பது தொன்றுத்தொட்டு தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தது.

இந்த பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தாலும், வடுகத் திராவிடத் தலைவர்களின் (ஈ.வே.இரா., சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இன்னப்பிற திராவிடர்களால்) மாற்று அரசியல் போக்கு, பச்சைத்தமிழரான காமராஜரின் தேசியக் கொள்கையினால் தமிழக நிலப்பரப்பினை மீட்டெடுக்காமல் முடியாமல் போய் விட்டது.

மா.பொ.சியார் முயற்சித்திருக்காவிட்டால் சென்னை, திருத்தனி, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளும் தவறவிட்டிருப்போம்.

தன் தமிழக நிலப்பரப்பு மீட்புக்கு திராவிடக்கழகத்தார், திமுக , காமராஜர், இராஜாஜி போன்ற தேசியத்தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் தமிழகத்து பல முகாமையானப் பகுதிகளை மீட்டிருப்பேன் என்று மா.பொ.சி. அவர்கள் கூறியுள்ளமை நினைவுக் கூறத்தகுந்தது.

திருப்பதி, சித்தூர், குப்பம் (இவை ஆந்திரர் கவர்ந்துக் கொண்டனர்), குமரி மாவட்டத்தில் பல பகுதிகள் எடுத்துக்காட்டிற்கு கண்ணகிக்கோயில் (இன்றுவரை இது தமிழக எல்லைக்குள் இருக்கின்றதாக சொல்லப்படுகின்றது.), பீர்மேடு இன்னப்பிற பகுதிகள் ஆகியவை கேரளர்கள் கவர்ந்துக் கொண்டனர்.

கோலார் தங்கவயல், குடகு, பெங்களூர் தண்டுப்பகுதிகள் இன்னப்பிற பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் கருநாடக மாநிலத்திற்கு போய் விட்டதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தொடர்ந்து தமிழகத்தின் எல்லைக்குள் இல்லாமல் போய்விட்டது.

அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை இடையூறுகள்.அதை இன்று கண்க்கூடாக பார்க்கிறோம்.

ஆனால் தமிழர்கள் ஏனைய மொழியினத்தவர் விழிப்புடன் இருப்பது போல், விழிப்பில்லாமலும் அறியாமை என்னும் மடமையில் மூழ்கி சூடு சுரணையற்றப் பிண்டங்களாக நமக்கென்ன வந்தது என்று எருமை மீது மழைப் பொழிந்தது போல் வந்தாரை வாழவிட்டு தன் தொடையில் கயிறுத்திரித்துக் கொள்ளவும் விட்டிருக்கின்றான்.

மத மூடநம்பிக்கை, திரைப்படத் துறையினைரை தலையில் தூக்கி வைத்து ஆடுவத, திராவிட மாயையில் இருந்து விடுபடுவது ஆகிய அறியாமையிலிருந்து விடுப்பட்டால் தான் தமிழர்கள் வாழ்வு மேம்படும்..

இருப்பதைக் காப்போம்...
இழந்ததை மீட்போம்...

கேரள சேட்டனின் சேட்டைகள்...


பிளாஸ்டிக் (Plastic) உருவான கதை...


இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்..

மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட.., அது என்ன 'இயற்கை பிளாஸ்டிக்' இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா.? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை ...

இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.

சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்டுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு 'Parkesine Company' என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.

பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து 'Parkesine Company' மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான 'பெர்கின் மெடலை' (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.

அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100%  செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 'பேக்லைட்’' வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது. 

இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம். இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக் கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது...

நீங்கள் வாழும் சமுதாயம் இப்படித் தான்...


உடல் எடையை குறைக்க உதவும் 10 பழங்கள்...


பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடலநலன்களை கெடுத்துக் கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.

அவகேடா..

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ள அவகேடாவில், உயர் அளவில் மோனோசாட்சுரேட் ஒலிக் ஆசிட்(Monounsaturated oleic acid) மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.

மேலும் டெஸ்ட்ரோஸ்டிரான்(Testosterone) ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இந்த ஹார்மோன் கொழுப்பினை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி..

தர்பூசணியில், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது, ஏனெனில் இதில் தண்ணீர் மற்றும் இயற்கை முறையிலேயே குறைவான கலோரி உள்ளது.

தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தசைகளில் ஏற்படும வேதனைகளை குறைக்கிறது.

பேரிக்காய்..

பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும், மேலும் எவ்வித உணவுகள் எடுத்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.

பீச் பழம்..

குடலினை சுத்தப்படும் பணியினை செய்யும் பீச் பழத்தில் உள்ள phenolic வயிற்றில் சதைபோடுவதை தடுக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெரி..

ஸ்ட்ராபெரி பழம் லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது.

மேலும், இதில் உள்ள anti-inflammatory என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அதனை குணப்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை..

எலுமிச்சை பழத்தில் விட்டமின சி மற்றும் சிட்ரிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது, இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

ஆப்ரிகாட்..

ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மாதுளம்பழம்..

மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

ப்ளாக்பெரிஸ்..

இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உள்ளது, இந்த பழத்தினை சாப்பிடுவதால், ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

ஆரஞ்சு..

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி உள்ளது, மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் உள்ள புரதம் இளமை தோற்றத்தை தடுக்கிறது.

மேலும், நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளதால், சருமத்தைன மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்...

கார்பரேட் கைகூலி... மக்கள் விரோத பாஜக - அதிமுகவின் சதி வேலைகள்....


நீங்கள் திசைதிரும்பும் ஒவ்வொரு பாதையின் முடிவிலும் தேவையில்லாத ஒன்றே கிடைக்கும்...


அதை தூக்கிப்போட்டு மறுபடியும் நீங்கள் நெடுந்தூர பயணத்தில் பயணிக்க விரும்பும் போது, அடுத்த ஒரு திசைதிரும்பல் பாதை வரும்..

அத்தியாவசியமானவற்றை மட்டுமே தேர்ந்தெடுங்கள்..

அது அடுத்த தலைமுறைக்கு உபயோகமாக இருக்க வேண்டும்..

அதுவே பிறவி பலன்...

பிட்காயின் என்பது ஏமாற்று வேலை...


இந்திய சுதந்திரத்தையே, சுவாசக் காற்றாக சுவாசித்தவன் தான் தமிழன்...


தமிழர்களை தேசவிரோதி என்று சொல்லும் எச்சைக்கு செருப்படி விழும்...

அப்படிப்பட்ட தமிழினத்திற்கே துரோகத்தை மட்டுமே செய்து.. இந்தியத்திற்கு எதிராக திருப்பியது மட்டும் தான் இந்தியர்களின் சாதனை...

இருப்பவன் ஏமாளியாக இல்லாதவன் உன்னை அடிமைபடுத்தவே களமிறங்குவான்...


பிரணாயாமம் உண்மைகள்...


1) ஓரங்குலம் உள்ளே அடக்கினால் உலகப்பற்று நீங்கும்.

2) இரண்டங்குலம் உள்ளே அடக்கினால் ஆனந்தம் உண்டாகும்.

3) மூன்றங்குலம் உள்ளே அடக்கினால் கவிபாடும் வல்லமை உண்டாகும்.

4) நான்கு அங்குலம் உள்ளே அடக்கினால் வாக்கு சித்தி உண்டாகும்.

5) ஐந்து அங்குலம் உள்ளே அடக்கினால் முக்கால ஞானம் உண்டாகும்.

6) ஆறு அங்குலம் உள்ளே அடக்கினால் கணம் குறைந்து மேலெழும் சக்தி ஏற்படும்.

7) ஏழு அங்குலம் உள்ளே அடக்கினால் வாயுவேக சக்தி உண்டாகும்.

8) எட்டு அங்குலம் உள்ளே அடக்கினால் அஷ்டமா சித்திகளை பெறலாம்.

9) ஒன்பதன்குலம் உள்ளே அடக்கினால் நவ நிதிகளை பெறலாம்.

10) பத்தங்குலம் உள்ளே அடக்கினால் பத்து உருவங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

11) பதினோரு அங்குலம் உள்ளே அடக்கினால் நிழல் இன்றி உலகில் உலாவலாம்.

12) பனிரெண்டு அங்குலம் உள்ளே அடக்கினால் பிரமரந்திரத்தில் அடங்கும் போது அமுதம் கிடைகிறது...

கிராம சபா பற்றி விழிப்புணர்வு பதிவு போட்ட அத்துனை மீம் கிரியேட்டருக்கும் அதை பகிர்ந்த அத்துனை உள்ளங்களுக்கும் நன்றி...


மனம்...


பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.

அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம்.

ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.

புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது.

ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள்.

குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர்.

காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர்.

நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.

ஒருவன் திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.

நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம்.

எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும்.

நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.

ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.

மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது.

அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.

மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும் போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.

முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும்.வேறு வழியே இல்லை...

சென்னையில் கழிவு நீர் குழாயில் இருந்து மீட்ட குழந்தையை குளிப்பாட்டி சுதந்திரம் என பெயர் சூட்டிய பெண்...


ஓர் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அப்பெண்மணிக்கு நன்றி...

அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்...


நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா.. தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில்
அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள்
தாய்.

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

எந்த மொழியிலும் அப்பா, அம்மாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது தமிழ்மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன .....

கிராம சபை கூட்டத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு...


போங்கடா நீங்களும் உங்களின் துரோக இந்திய சுதந்திர தினமும்...


நிதர்சணம் தெரியா அடிமைகள் கோமாளி பட்டம் கட்டும்...

நிதர்சணம் தெரியா பேடிகள் எள்ளி நகையாடும்...

நிதர்சணம் தெரியா ஜந்துக்கள் பேசுவது தெரியாமல் வீண் வம்பு வளர்க்கும்... வரவேற்கப்படுகிறார்கள்...

நல்லுறவைப் பேண சில நினைவூட்டல்கள்...


பிறரது முயற்சிகளால் விளைந்த மிகச்சிறிய வெற்றிகளையும் கொண்டாட மறவாதீர்கள், அதுதான்  உறவுகளை மேலும் வலுப்படுத்தும் மந்திரம்.

எப்போதும் அர்ப்பணிப்பும், ஆர்ப்பரிப்பும் நிறைந்த கொண்டாட்ட மனநிலையில் பிறர் செயல்படக்  காரணராக இருங்கள்.

பிறரது தவறுகளுக்கு கடுஞ்சொற்களைப் பிரயோகிக்காதீர்கள், மேலும் தவறுகள் நேராதபடி, இயற்கையின் வினைகளை தெளிவாக எடுத்துரைத்து, மன்னித்து, கனிவாக கண்டியுங்கள்.

பிறரது உதவிகள் சிறிதானாலும், பெரிதானாலும் உங்களது நன்றிகளைச் சிறப்பான வழிகளில் மிக தாராளமாக மனமார்ந்து வெளிப்படுத்துங்கள்...

இதுவா சுதந்திரம்..?


வணிக குழுக்களின் பலம் எத்தனை வலிமையானது என்றால்.?


சுப்பிரமணி சுவாமி போன்ற பலர் இங்கு இருக்கிறார்கள்..

அவர்கள் எங்கு வேண்டுமானாலும், எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கலாம்..

ஆனால் அவர்களை கைது செய்ய முடியாது, மீறி வழக்குகள் போட்டாலும் அது நீர்த்துப்போ கும்..

இந்த பதிவு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பது போல் இருக்கும், ஆம் உண்மை தான்..

அது தவறில்லை, ஏனெனில் அந்த குறிப்பிட்ட சமூகங்கள் தான் நம்மை இத்தனை ஆண்டுகளாக வணிகத்தின் பிடியில் அடிமையாக வைத்திருக்கிறது...

நம்ம ஊர்ல சுத்தும் பினராயி விஜயன் ஃபேன்ஸ்சுகளுக்கு இதெல்லாம் தெரியுமா?


திமுக கருணாநிதியின் ரகசியத்தை சாகும்வரை காத்த தெலுங்கர்கள்...


ஆனாலும் இந்த தெலுங்கனுங்கள பாராட்டணும்ப்பா...

1960 வாக்கில கருணாநிதி ஆந்திராவுக்கு போயிருக்கான். அங்க ஓங்கோல் ஜில்லாக்காரன் கொம்பள்ளி பாலகிருஷ்ணாவ பாத்திருக்கான்.

மண்பாசம் நெஞ்செல்லாம் பொங்கி வர அவன் கையப் புடிச்சி கண்ணீர் விட்டு நாக்கு தழுதழுக்க தெலுங்குல "நானும் ஓங்கோல்க்காரன் தான். செர்வுகொம்முபாளெம் கிராமம்தான் எங்க பூர்வீகம்" அப்டினு சொல்லிருக்கான்.

(கருணாநிதிக்கு தெலுங்கு தெரியுமானு கூமுட்டத்தனமா கேக்கப்படாது. 1967 ல ஸ்ரீ ஜன்மா அப்டினு ஒரு தெலுங்கு படத்துக்கு வசனம் எழுதுனதே இந்த கருணா தான்)

ஆனா பாருங்க. இந்த உண்மைய அந்த பாலகிருஷ்ணா வெளிய சொல்லல.

ஒரே ஒரு காலேஜ் பங்சன்ல மட்டும் இத ஆனந்தக் கண்ணீரோட சொல்லி பெருமபட்ருக்கான்.

அத கேட்டவங்களும் இத வெளிய சொல்லல.

இப்போ அவன் செத்தபெறகு வெளிய சொல்றானுக.

ஆந்திரா முழுக்க ரெண்டு நாளா டிவி பேப்பர்ல இதான் முக்கிய செய்தி.

தன் இனத்தான காட்டிக்கொடுக்காத தெலுங்கின மக்களைப் பாராட்டணுமா இல்லையா?

என்னது எம்.ஜி.ஆர் இத கண்டுபிடிச்சு 1974 லேயே இவன் தெலுங்கன்னு சொல்லிட்டாப்லயா?

அப்ப நாம தான் இவ்வளவு நாளா கேணப்பயலா இருந்தோமா?

இணைக்கப்பட்டவை
tv9 screenshot
N tv screenshot
hmtv screenshot
தெலுங்கு பத்திரிக்கை செய்தி...

முட்டாள் தமிழர்களே இந்தியம் எப்போதும் உன்னை இந்தியனாக மதித்தது கிடையாது...


மலையமான் காசுகள்...


திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர்.

இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது.

இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்.. இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நன்றி: விக்கிபீடியா...

இதுவா சுதந்திரம்..?


தோழா் முகிலன் பட்டினிப்போராட்டத்தை துவங்கினாா்...


70வது சுதந்திர தினத்தில் விடுதலை மறுக்கப்பட்ட தோழர் முகிலன் சிறையில் உண்ணாவிரதம்...

ஆகஸ்ட் 15 முதல்... கோரிக்கைகள்...

1) மே 17, திருமுருகனை உடனே விடுதலை செய்.

2) இந்திய, தமிழக அரசுகள் நாடகமாடி, கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை திறக்க துணை போகாதே.

3) எட்டுவழிச் சாலை என்ற பெயரில், கவுந்தி மலை – வேடியப்பன் மலையை ஜிண்டால் நிறுவனத்திற்கு தாரை வார்க்காதே.

4) கர்நாடகாவில் மேகதாது அணையை காவிரியின் குறுக்கே கட்டி, காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்திய அரசின் சதியை தடுத்து நிறுத்து.

5) தேனி பொட்டிபுரத்தில் அமெரிக்காவின் செயற்கை நியூட்ரினோ கற்றையை வைத்து ஆய்வு, மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம், கூடங்குளம் – கல்பாக்கத்தில் அணுஉலை பூங்கா அமைத்து, தமிழகத்தை அணுக்கழிவு தேசமாக மாற்றாதே.

6) கோவையின் குடிநீர் விநியோகத்தை பிரெஞ்சு சூயல் நிறுவனத்திற்கு வழங்காதே. பெப்சி, கோக் நிறுவனத்திற்கு தமிழக ஆறுகளை, நீர்வளங்களை தாரை வார்க்காதே. தமிழகத்தில் ஆற்றுமணல் – கிரானைட் – தாதுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்து.

7) கிரானைட் கொள்ளை பற்றிய சகாயம் அறிக்கையை, தாதுமணல் கொள்ளை பற்றிய ககன்தீப்சிங் பேடி அறிக்கையை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்.

8) மதுரை – போடி அகல ரயில் பாதையை விரைந்து அமைத்திட நடவடிக்கை எடு.

9) 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழகளை உடனே விடுதலை செய்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி விடுதலை செய்வதாக அறிவித்த 10 ஆண்டுகள் தண்டனை கழித்த, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் காலதாமதம் செய்யாமல் இன்றி விடுதலை செய்.. சிறைவாசிகளை மனநோயாளிகள் ஆக்காதே.

10) மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் – ஓ.என்.ஜி.சி – அணுஉலை – நியூட்ரினோ – ஆற்றுமணல் குவாரி மற்றும் அபாயகரமான சிகப்பு வகை ஆலைகளுக்கு கருத்துகேட்பு கூட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்தும், மருத்துவம்(நீட்), பொறியியல், சட்டம், வரிவிதிப்பு(GST), மின்சாரம்(உதய்), என எண்ணற்ற தமிழக அரசின் உரிமைகளை பறித்து, இந்தியாவிற்கு அடிமை தேசமாக உள்ள தமிழ்நாட்டை கொத்தடிமை தேசமாக மாற்றாதே...

சனநாயக தேசமென்கிறாா்கள் ஆனால் சனநாயகத்தையே போராடித்தான் காக்க வேண்டியிருக்கிறது....

சுதந்திரம் யாருக்கு..?


போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது “சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.

"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"

- சந்திர ரேகை.

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.

கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார். இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் ”எதிர் கூறல்களை” கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன..

டிஜிட்டல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாஜக வாஜ்பாய் மரணம்...


பாஜக - அதிமுக வின் தமிழின அழிப்பு...


கடைமடைக்கு தண்ணீர் பெருமளவு போய் சேராததும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஆகஸ்ட் 2ந்தேதி அனுமதி கொடுத்ததற்க்கும் தொடர்பு இல்லை. சொன்னா நம்புங்கள்...