08/08/2017

தூத்துக்குடியில் வெடித்த தாமிரபரணி புரட்சி.. தனி நபர்களால் தடுக்கப்பட்ட தண்ணீர் திறப்பு...


திருட்டு திராவிடர்ஸ்...


நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்..

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? , ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூற வேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம் தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளுக்கு விடையளித்து புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல், உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

அந்நிய ஆதிக்கம் வேண்டாம் என்று எதிர்த்ததால் தான் சுதந்திரம் பெற்றோம் என்று சொல்கிறார்கள்...


அதனால் தான் நானும் சொல்கிறேன்..

வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல சுதந்திரம்
வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம்..

தொழில்வளம் பெருக வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல சுதந்திரம்..
அந்நிய முதலீடு வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம்..

மின்சாரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல சுதந்திரம்..
அணு உலை வேண்டாம் என்பதற்கும்
தான் சுதந்திரம்..

மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து இறையாண்மை கொண்ட ஒரு தேசம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல  சுதந்திரம்..

எந்த மொழியையும் எவர்மீதும் திணிக்க வேண்டாம்.. எந்த இனமும், இன்னொரு இனத்தை அடக்க வேண்டாம்.. எந்த பண்பாடு- கலாச்சாரத்தை கொண்டும் மற்றையவர் பண்பாடு - கலாச்சாரத்தை அழிக்க வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம்..

சரி அதுக்கு என்ன  இப்போது ?

செங்கோட்டையை வண்ண விளக்குகளால் அலங்கரிச்சாச்சு - வந்தே மாதரம் ஒலிநாடாவை தூசுதட்டி எடுத்து வைத்தாச்சு..

விழா கொண்டாட்டத்திற்கு நடன ஒத்திகைகள் பார்த்தாச்சு - மக்கள்  கூடுமிடமெல்லாம் காவல்துறையினர் கூடி நிற்கிறார்கள்..

மூவர்ண கொடியும்  தயார் நிலையில்,
பிள்ளைகளுக்கு கொடுக்க இனிப்புகளும் தயார் நிலையில்...

பிரதம மந்திரியும், முதல் மந்திரிகளும்
வாழ்த்துரை வாசிக்க ஒத்திகை பார்த்து
விட்டார்கள் - விழா நடக்குமிடம் ராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு..

என்ன விசேஷம் என்று கேட்டால்..

வருகிற 15 நாள்  இந்திய சுதந்திர தினமென்று சொன்னார்கள்...

எல்லாம் சரிதான்...

கோவில் வாசலில் கால்வயிறு கஞ்சிக்காக கைகளை நீட்டி ஏங்கி நிற்பவரக்ளிடம் சொல்லி விட்டீர்களா வருகிற 15 நாள்  இந்திய சுதந்திர தினமென்று?

போங்கடா நீங்களும் உங்களின் மானம் கேட்ட இந்திய சுதந்திர தினமும்...

தனித் தமிழ்நாடு என்று தமிழனுக்கு கிடைக்கிறதோ.. அன்று தான் தமிழனுக்கு சுதந்திர தினம்...

இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் இந்திய சுதந்திர தினத்தை உண்மையில் தாங்கள் சுதந்திரம் பெற்றதாக நினைத்து கொண்டாடினாலும், ஒடுக்கப்பட்ட பல தேசிய இன மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை...


அதில் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் 2009 பிறகு இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாகவே அனுசரிக்கின்றனர்.

அதற்கான பல காரணங்களை இணையத்தில் தமிழர்கள் எழுதி உள்ளனர்.

இந்திய அரசால் கடந்த 60 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் எழுதி வருகின்றனர்.

சிலர் ஒருபடி மேலே சென்று இந்திய தேசிய கொடியை எரிக்கும் படத்தையும் இணைக்கின்றனர். சிலர் தமிழ்த் தேசிய கொடியை முகநூலில் ஏந்துகின்றனர்.

இந்தியத்தின் மீது தமிழர்களுக்கு பெரும் அவமதிப்பும், வெறுப்பும் ஏற்பட காரணமாக இருந்தது ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதன் பின்பு தான் தமிழகத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி ஏற்பட்டது. தமிழர்கள் பலரும் விழிப்புணர்வு பெற தொடங்கினர்.

அதை தொடர்ந்து இந்திய அரசு தமிழர்களை பல வழிகளில் வஞ்சித்தது தமிழ்ர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.

இதன் உச்சகட்டம் தான் தமிழர்கள் இப்போது இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாகும். தனித் தமிழ்நாடு என்னும் கோரிக்கையும் இப்போது வலுத்து வருகிறது.

இதை பற்றியெல்லாம் பெரிய ஊடகங்கள் எழுதுவதில்லை. உண்மையை பெரிய ஊடகங்கள் துணிவாக எழுத முடியாதே. எனினும் உண்மையை யாரும் மறைக்க முடியாது.

சமூக வலைத் தளங்கள் மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும். அந்த வகையில் முகநூல் முழுவதும் இந்திய சுதந்திர தினத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

ஏன் ஆகத்து 15 கருப்பு தினம். கீழ்க்கண்ட சில கருத்துகளை முன்வைத்து உள்ளனர் தமிழர்கள்..

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த தமிழர்களை, 300 பேருக்கும் மேலானோரை தமிழக மண்ணிலேயே சுட்டுக் கொன்றது இந்தியா.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆற்றுநீர் உரிமைகளை இழந்து வறட்சியில் நாம் தவிப்பதற்கு, முதற்காரணம் இந்தியா.

தமிழர்களுக்கேச் சொந்தமான கச்சத்தீவு நிலப்பரப்பை, இன எதிரி சிங்களனுக்கு தானம் அளித்து மகிழ்ந்தது இந்தியா.

இந்திய அமைதிப் படை அனுப்பி, தமிழீழ மக்களை துடிக்கத் துடிக்க வேட்டையாடிக் கொன்ற இரத்தவெறி பிடித்த மிருகம், இந்தியா.

1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை படை கொண்டு தடுக்காமல், வேடிக்கை பார்த்து இரசித்தது இந்தியா.

காவிரிப்படுகை – பெட்ரோல்,
குத்தாலம் – எரிவளி,
சேலம் – இரும்பு,
நெய்வேலி – நிலக்கரி

என தமிழக வளங்களை கொள்ளையடிப்பது
இந்தியா.

வருமானவரி, நிறுவன வரி, சுங்க வரிகளில் மட்டும் 1 இலட்சம் கோடி தமிழ்நாட்டு மக்கள் பணத்தை வாரிச்சுருட்டிச் செல்லும் இந்தியா.

உலகமயப் பொருளியல் கொள்கையின் மூலம், தமிழகத்தை பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது இந்தியா..

சாதி இழிவு ஒடுக்குமுறையின் வேராய் நிற்கும் ஆரியப் பார்ப்பனியத்தின் அரச வடிவமாய் இன்றும் ஆணவத்துடன் நிற்பது
இந்தியா.

தமிழை நடுவண் ஆட்சி மொழியாக்க, கல்வி மொழியாக்க, வழக்கு மொழியாக்க முடியதென்று இறுமாப்போடு அறிவிக்கிறது, இந்தியா.

மூவாயிரம் ஆண்டுத் தமிழர் அடையாளத்தை, சட்டப்படி அங்கீகரிக்க மறுத்து, இல்லாத இந்திய அடையாளத்தை நம் மேல் திணிக்கும் இந்தியா.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைத் துடிக்கத் துடிக்க கொன்றொழித்த கொலைகாரர்களுக்கு ஆயுதம் அளித்து, நட்பாய் நிற்பது இந்தியா.

கூடங்குளம் – கல்பாக்கம் அணுஉலைகளை வன்மையாகத் திணித்து நின்று, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் சவக்குழி செய்தது இந்தியா.

தமிழகத்தில் சமூகநீதி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழித்துக் கட்ட சதி செய்து
காத்திருப்பது இந்தியா.

பேரறிவாளன், சாந்தன், முருகன் – அப்பாவி மூன்றுத் தமிழரை தூக்கிலிட்டுக் கொல்லத்துடிக்கும் அகிம்சாமூர்த்தி தான் இந்தியா.

காஷ்மீர், அசாம், மணிப்பூர் என தேசிய இனத் தாயகங்களை, ஆயுதங்கொண்டு, ஆக்கிரமித்து வைத்துள்ள ‘சனநாயக’வாதி தான் இந்தியா.

இன்னும் சிலர் கீழ்க்கண்ட கருத்தை முன்வைத்து உள்ளனர்..

இந்திய சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்திய தமிழக அரசின் அடக்குமுறைக்கு உட்படுத்தப் படும் கூடங்குளம் அணு உலை போராளிகளுக்கு துணை நிற்போம்.

ஈழத்தில் போரை நடத்தி பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் நாம் புறக்கணிப்போம்.

போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க தெரிந்த இந்தியாவால் ஒரு தீர்வை பெற்றுத் தர முடியவில்லை. விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக காட்டி , தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை முகாமில் அடைத்து கொடுமைப் படுத்தும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம்.

சிங்கள கடற்படைக்கு பயிற்சி கொடுத்தும் தமிழர்களை நடுகடலில் சுட்டு வீழ்ந்தும் சிங்கள கடற்படையை இதுவரை கண்டிக்காத காரணத்தால் தமிழ் மீனவர்கள் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் இருந்து ஆட்சியை பெற்றுக் கொண்டு பல் வேறு தேசிய இனங்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு ஹிந்தி அல்லாதவர்களின் மொழியை அழித்து தேசிய இனங்களில் மொழி உரிமையை பறிக்கும் ஹிந்திய நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணிப்போம்.

எல்லா தேசிய இனங்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்ககளும், பண்பாடுகளையும் அழித்து வரும் இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம்.

ஹிந்தியை தவிர வேறு எந்த மொழிக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்காமல், மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரமும் வழங்காமல் எல்லா இனங்களுக்கும் அநீதி இழைக்கும் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து , அவர்கள் நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இந்திய நாட்டின் சுதந்திரதினத்தை ஒவ்வொரு குடிமகனும் புறக்கணிப்போம்.

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல கோடி மக்களின் சார்பாக ஆதிக்க சாதி வெறி பிடித்த இந்திய அலட்சிய அரசின் சுதந்திர தினத்தை மனித இனத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் புறக்கணிப்போம்.

விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம்.

இன்னும் ஏராளமான விடயங்களில் தமிழினத்திற்கும் மற்ற தேசிய இனங்களுக்கும் எதிராகவே செயல்படும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம் .

இப்படியாக தமிழர்கள் பலரும் இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிகின்றனர்.

இதை பார்த்தாவது இந்திய அரசு தனது தவறை திருத்திக் கொள்ளுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

புலிகள் சிறைமீட்ட பெண்...


1983 யூலை 25ல் கறுப்பு யூலையின் உச்சக்கட்டகொலை நடந்த நாள்...

வெளியே குடும்ப அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு சிங்களவர்தமிழரை வேட்டையாடிக் கொண்டிருக்க.. அன்று வெலிக்கடை சிறையில் இருந்த சிங்களக் கைதிகள் மதிய உணவுக்குப் பிறகு திடலில் (சிங்கள) சிறையதிகாரிகளால் ஒன்று கூட்டப்பட்டனர்..

அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு தமிழ்க்கைதிகள்இருந்த கூடம் நோக்கி சென்றனர்..

சிங்கள மக்கள்வாழ்க, புலிகளைக் கொல்லுங்கள், என்று சிங்களத்தில்
முழக்கமிட்டபடி சிறைக் காவலர்களால்
வழிநடத்தப்பட்டு கதவுகள் திறந்துவிடப்பட்டு அந்தகொலைக்கூட்டம், ஏற்கனவே (மாலை மது அருந்திவிட்டு வரும்) சிறையதிகாரிகளால் நாள்தோறும் கொடுமைப்படுத்தப்பட்டு உடல்நலம் சிதைந்து போயிருந்த ஆயுதமில்லாத
தமிழ்க் கைதிகளைக் வெட்டியும் குத்தியும் அறுத்தும்கொன்றனர்..

இதில் குட்டிமணி இறந்தபிறகு தமிழீழத்தைப் பார்ப்பேன்என்று கண்தானம் செய்திருந்தார், உயிருடனே அவர்கண்களை நோண்டி பிறகு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

மொத்தம் 34பேர் கொல்லப்பட்டு உடல்களும்
துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அங்கிருந்த புத்தர்சிலைமுன்பு படையல் போடப்பட்டது.

ஒரு சாண்அளவு அங்கே குருதி தேங்கியிருந்தது, நள்ளிரவு வரை இக்கோரதாண்டவம் நடந்தது.

பிறகு சிங்கள அதிகாரி அக்கைதிகளைப்
பாராட்டி உரையாற்றினார்..

பி3, டி3 கூடங்களில்இருந்த  தமிழ்க் கைதிகளும் கொல்லப்பட்டுவிட, சி3ஐ நாளை பார்த்துக்கொள்ளலாம்அதுவரை ஓய்வெடுக்குமாறு கூறினார்.

வெளியிலிருந்து சரக்குந்து (லாரி)வந்து அத்தனை உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

துப்புரவுப்பணி முடிந்ததும்அதிகாலை ஒரு (சிங்கள) நீதிபதி வந்து சி3தமிழ்க் கைதிகளை விசாரித்தார்..

தமிழ்க்கைதிகள்துணிந்து நடந்ததைக் கூறினர். பிறகு,இவ்வாறு இனி நடக்காது என்று கூறிவிட்டுச்சென்றார்..

27-7-89 அன்று மீண்டும் இதேபோல்
கொலைத்திட்டம் நிறைவேறியது, ஆனால், தமிழ்க்கைதிகள்எச்சரிக்கையாக இருந்தனர்.

தமது போர்வைகளை சுருட்டி கதவில் கட்டி இறுக்கிப்பிடித்து திறக்க முடியாது செய்து கொண்டு,தீட்டி வைத்திருந்த தட்டு கரண்டி, கழிவறை வாளி,மேசை போன்றவற்றை பயன்படுத்தி தாக்கினர்.

சிறுநீரையும் குழம்பையும் வைத்திருந்தனர்
அதை சிங்களவர்கள் கண்களில் ஊற்றினர்;
மூன்று மூன்று பேராக அடைக்கப்பட்டிருந்த
37கைதிகள் ஆயிரம் சிங்களவரை சமாளித்தனர்.

சிலசிங்களக்கைதிகள் தப்பியோட முயற்சிக்கசிறையதிகாரிகள் கலவரத்தை நிறுத்த முயன்றனர்;அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது; காயம்பட்ட தமிழர்கள் மருத்துவமனையில் சிங்கள
மருத்துவராலும், தாதியராலும் பரிகசிக்கப்பட்டனர்.

இரண்டாம் தாக்குதலில் மொத்தம் 18பேர் இறந்தனர் 19பேர் பிழைத்தனர்.

புலிகளுக்கு அடைக்கலம்கொடுத்ததற்காக சிறையிடப்பட்ட 'நிர்மலா'பெண் கைதிகளுடன் இருந்ததால் அவரை கவனிக்கவில்லை.

நிர்மலா என்பவர் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்பட்ட மனிதவுரிமை செயல்பாட்டாளர்'ராஜினி' என்பவரின் உடன்பிறந்தவர்.

தமிழ்கைதிகள்மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர்;

23-9-83அன்று பல்வேறு இயக்கங்கள்
சேர்த்து முயற்சித்து நிர்மலா தவிர 60 தமிழர்கள்தப்பினர்.

பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டநிர்மலாவை புலிகள் கேணல்.பிரான்சிசு என்பவர்
தலைமையில் பஷிர், சிவம், டேவிட் மற்றும் சிலர்அடங்கிய அதிரடிக் குழு 15-6-84 அன்று மீட்டனர்.

சிறையின் வெளிக்கதவைத் தட்டி காவல் சீருடையில்ஒருவர் புதியகைதிகளைக் கொண்டு வந்திருப்பதாகசிங்களத்தில் கூற கதவு திறக்கப்பட்டது.

அதிரடியாக உள்ளே நுழைந்த புலிகள்
துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டால் காவலர்கள்சூழ்ந்து விடுவார்கள் என்று அடிதடியின்மூலமே காவலர்களைத்தாக்கி கதவுகளை உடைத்து நிர்மலாவை அழைத்துக் கொண்டுவெளியேறினர்.

பிறகு நிர்மலா தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுதிரு.புலமைப்பித்தன் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

இன்று நிர்மலா மனிதவுரிமை மற்றும்
பெண்ணுரிமை செயல்பாட்டாளராகவும் புலிகளையும்சிறிலங்காவையும் ஒருசேர விமர்சிப்பவராகவும்ஆகிவிட்ட போதிலும், அன்றைய காலத்தில்ஒரு தோட்டாவைக்கூட தீர்க்காமல் புலிகள் செய்த இந்தசாதனை சிங்கள மக்களுக்கு அதிர்ச்சியாகவும்
பதிலடியாகவும் தோன்றியது...

பேச்சிலர்ஸ் கல்லறைத்தோட்டம் – 1991...


இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது.

(பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது).

அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது.

மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலை பாய்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு...

இயேசு தோமா என்ற தனது சீடரை தனக்கு தெரிந்த வணிகக்கப்பலின் உரிமையாளரான அப்பன் என்ற பெயருடைய தொலைதூர தேசத்தார் ஒருவருடன் அவரது கப்பலில் அனுப்பி வைத்தார் - கோகர் கிரிஸ்டன் (ஜெர்மானிய வேத ஆராய்ச்சியாளர்)...


சாத்து அப்பன் - சாத்தப்பன்
ஆவுடை அப்பன் - ஆவுடையப்பன்
மெய் அப்பன் - மெய்யப்பன்

போன்ற வாரிசுப்பெயர்கள் தமிழ்நாட்டு கடல் வணிகர்களான நகரத்தார்களை (காரைக்குடி செட்டி) தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை நோக்க வேண்டும்....

அந்த தோமா என்ற சீடர் தமிழ்நாட்டு பகுதியில் தான் கிருத்தவத்தை பரப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே..

அப்படியெனில் சூரிய வழிபாட்டின் மறு உருவமான கிருத்தவத்தை உலகம் எங்கிலும் பரப்ப சொல்லியது யாராக இருக்கும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...


குறிப்பு : அடிமைகளை ஏற்றி செல்லும் கப்பலின் கொடி இது.. நகரத்தார்கள் தான் கப்பலில் சிங்க கொடியை உபயோகித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே...

பிப் சாப்லோ தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் சோரோனிக்ளிங் (chronicling) முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்...


ஓரினச் சேர்க்கையாளர்களான ரீஸ், சாப்லோ தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது...

பாஜக கலாட்டா...


தமிழ் மருத்துவம் - சித்த மருத்துவம்...



சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள்.

சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர்.

சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஓர் மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்கள் சான்றுள்ளது.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பனிரெண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன.

நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

வாத சம்பந்த பிணிகள்...

வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்த சம்பந்த பிணிகள்...

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்தும சம்பந்த பிணிகள்...

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றிய திருக்குறளைப் பார்ப்போம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.- திருவள்ளுவர்.

நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.

பரிசோதனை...

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு.

காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது.

மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது...

கேரளாவில் பாஜகவும் முக்கிமுனகி பார்க்குறாங்க சேட்டன்கள் அசரவே இல்லை.. ஆனால் நமக்கும் வாய்ச்சிருக்கே தலைமை..?


பாஜக இளைஞரணி பேரணிக்கு 'அழைத்து' வரப்பட்ட 'இளைஞர்' 'இளம்பெண்கள்' பட்டாளம்...


டிடிசி தினகரன், நிர்வாகிகளை நியமித்தது செல்லாது எனில், அமைச்சர் செங்கோட்டையனை அவை தலைவராக சிசிகலா நியமனம் செய்தது செல்லுமா ? தினரகன் ஆதரவு எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் கேள்வி...


கோட்டை கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலத்தில் 9 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை, சேலம் கலெக்டர் அறிவிப்பு...


11 லட்சம் பான் கார்டுகளை டிஆக்டிவேட் செய்த மத்திய அரசு , பான் கார்டுடன் அதார் கார்டை இணைக்க ஆகஸ்ட் 31 னே கடைசி நாள்! - மத்திய அரசு அறிவிப்பு...


பின் வரும் மத்திய அரசின் இணையதளத்திற்கு சென்று உங்களின் பான் கார்டு deactivate செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்...

www. incometaxindiaefiling.gov.in

உலக வர்த்தகக் கழகத்திற்காக (WTO), உழவர்கள் உயிர்களைப் பறிக்கும் இந்திய அரசு...


உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை 2015 டிசம்பர் 19 அன்று முடிந்தது. கடைசியில் அதன் ஒட்டுமொத்த பலன் – “இந்தியாவின் உணவு இறையாண்மை பலியிடப்பட்டது - இந்தியாவை நம்பிய வளர்முக நாடுகளும், வளர்ச்சி குன்றிய நாடுகளும் நட்டாற்றில் விடப்பட்டன” என்றானது.

ஒருநாடு விடாமல் ஒத்த கருத்து இருந்தால் தவிர, ஒப்பந்தம் கிடையாது என்ற உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை விதி நைரோபியில் தகர்க்கப்பட்டுவிட்டது.
“காட்” ஒப்பந்தத்தின் விளைவாக 1995-ல் உலக வர்த்தகக் கழகம் (WTO) 162 உறுப்பு நாடுகளுடன் உருவானது. இதன் முதல்கட்ட அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் நடைபெற்றபோது அமெரிக்க செவ்விந்தியர் களும், உலகெங்கும் இருந்து திரண்ட செயல் பாட்டாளர்களும் நடத்திய கிளர்ச்சியின் விளைவாக அம்மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

“எங்கள் உலகம் விற்பனைக்கு அல்ல” என்ற முழக்கத்தின் கீழ் சியாட்டில் நகரெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தபோது இந்தியாவின் அன்றைய வணிகத்துறை அமைச்சர் முரசொலிமாறன் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளின் கொல்லைப்புற கதவைத் திறந்துகொண்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் 2001-இல் கத்தார் நாட்டுத் தலைநகர் தோகாவில் அடுத்த அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சியாட்டில் கிளர்ச்சி நினைவிலேயே நின்றதால் தோகா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தது.

இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் வேளாண்மையும், உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப் படாமல் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்ற அடிப்படையில் சில வரம்புகள் உருவாக்கப்பட்டன. “தோகாவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்” (Doha Development Agenda) என இது அழைக்கப்பட்டது. இதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்ட செய்திகளில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை அடுத்தடுத்து தொடரும் பேச்சுவார்த்தைகள் “தோகா சுற்று பேச்சுவார்த்தை” என்றே அழைக்கப்படும் என்பதும் முடிவானது. இந்த ஒழுங்குக்கு உட்பட்டே அடுத்தடுத்து அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

தோகா சுற்றின் அமைச்சர் நிலைப்பேச்சு வார்த்தைகளில், 2006லிருந்து இந்திய வேளாண்மைக்கு எதிரான நெருக்குதல்களை அமெரிக்க வல்லரசும், ஐரோப்பிய ஒன்றியமும் தீவிரப்படுத்தின. வேளாண்மை இடுபொருட்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மானியங்கள் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை நிறுத்தப்படவேண்டும் என்றும் அழுத்தம் தரப்பட்டது.

அதே நேரம் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தங்கள் நாட்டு வேளாண்மைக்கு அளித்துவரும் மானியங்கள் அனைத்தையும் 2013ம் ஆண்டுக்குள் கைவிடுவதாக இந்நாட்டு அரசுகள் ஏற்றுக்கொண்டன.

இது குறித்து விவாதிக்கும்போது மேற்குலக நாடுகளில் இருக்கும் நில உடைமைக்கும், இந்தியாவில் உள்ள நில உடைமைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் சிறிய நிலவுடைமை என்பதே சில நூறு ஏக்கர்கள் ஆகும். அங்கு வேளாண்மை என்பது பெரிய நிறுவனங்களால் நடத்தப்படும் குழும உற்பத்தியாகும். அந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்கள் தொகை அந்நாட்டு மக்கள் தொகையில் அதிகம் போனால் 3 விழுக்காடுதான்.
மாறாக இந்தியாவிலோ, சராசரி நிலவுடைமை என்பது இரண்டரை ஏக்கர் ஆகும். இங்குச் சிறு, குறு உழவர்களே அதிகமானவர்கள் ஆகும். ஒரு துண்டு நிலமும் இல்லா உழவுத் தொழிலாளர்களும் ஏராளம்.

இச்சூழலில் உலக வர்த்தகக் கழகம் வலியுறுத்துவது போல் “தடையற்ற வணிகம்” என்ற பெயரால் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும் உணவு தானியங்கள் தாராளமாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டால், கோடிக்கணக்கான உழவர்கள் தங்கள் உழவுத்தொழிலை விட்டுவிட வேண்டியது தான். அது மட்டுமின்றி இந்தியாவின் உணவு இறையாண்மை தகர்க்கப்பட்டு கைத்தி நாட்டைப்போல, ஆப்ரிக்கா வறிய நாடுகள் சிலவற்றைப் போல இந்தியாவும் உணவுக்காக வெளிநாட்டுக் கப்பல்களை எதிர்நோக்கி இருக்கும். தற்சார்பற்ற நாடாக மாறும்.

இதனால்தான் உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தை நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் உழவர் அமைப்புகளும், தற்சார்பின் மீது அக்கறை உள்ள செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தில் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசின் அமைச்சர்கள் செயல்படவேண்டிய நிலைமை ஏற்பட்டு வந்தது.

ஆயினும், பொருளாதார அடியாள்களால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசு அமைச்சர் நிலைப் பேச்சுவார்தைகயில் தாங்கள் எதிர்த்த நிபந்தனை களையே தங்களது சொந்த முடிவு போல செயல்படுத்தி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் உரமானியம், மின்சார மானியம் ஆகியவை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. குறைந்த வட்டிக்கடன்கள் உண்மையான உழவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் வங்கிக் கொள்கைகள் மாற்றப்பட்டன. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி ஆகியவற்றிற்கு வழங்கப் படும் அரசின் ஆதார விலைகள் மிகப்பெரும் அளவிற்கு மட்டுப்படுத்தப்படுகின்றன. வேளாண்மை இலாபகரமான தொழிலாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக உழவர்கள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டுத் தார்களே வெளியேறும் வண்ணம் பிதுக்கப்படு கிறார்கள்.

இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் வேளாண் மானியத்தை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தும் மேற்குலக நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் மைக்குத் தாராளமாக மானியம் வழங்கி வருகின்றன. உலக வர்த்தகக் கழக சட்ட திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் புதிய, புதிய பெயர்களை தங்களது வேளாண் மானியங்களுக்குச் சூட்டிவிடுகிறார்கள்.

“பச்சைப்பெட்டி”, “பழுப்புப்பெட்டி” என்ற பெயர்களில் விளங்கும் இந்த மானியங்கள் உலக வர்த்தகக் கழக நிபந்தனைகளுக்கு உட்படாதவையாகும். வேளாண் நிறுவனங்களுக்கு, வேளாண் விளை பொருட்களின் விற்பனை விலையை ஏற்றாமல், நேரடியாக அரசு மானியம் வழங்கினால் அதற்குப் பெயர் பச்சைப்பெட்டி. (Green Box). அதேபோல், சந்தைச் சமநிலையை பாதுகாக்கும் நோக்கில் ஒருபோகத் திற்கோ, இருபோகத்திற்கோ தரிசுபோட்டால் அவ்வாறு தரிசு போடும் வேளாண் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தரிசு மானியத்திற்குப் பெயர் பழுப்புப் பெட்டி (Amber Box).

இயற்கையோடு சூதாட்டம் நடத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு, பருத்தி, கோதுமை போன்றவற்றுக்கு அரசு மானியம் தரக்கூடாது என இந்தியாவை வலியுறுத்தும் இந்த மேற்குலக நாடுகள், விளை விக்காமல் இருப்பதற்காகத் தரிசு மானியம் அளிக்கும் கொடுமை இன்றும் தொடர்கிறது. மிகை உற்பத்தி நடந்து அதனால் ஏற்றுமதிச் சந்தையில் தங்கள் நாட்டு வேளாண் விளைபொருட்களுக்கு விலை குறைந்து விடக் கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு!
உலக வர்த்தகக் கழக அமைச்சர் நிலை மாநாட்டில் 2013க்குள் கைவிடுவதாக ஒத்துக்கொண்ட மானியங் களில் மேற்கண்ட மானியங்கள் வராது.

ஆனால், கைவிடுவதாக ஒத்துக்கொண்ட பிற மானியங்களையும் இந்நாடுகள் கைவிடுவதில்லை. மாறாக அதிகரித்தன. எடுத்துக்காட்டாக அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் வேளாண் சட்டம் 2014 (U.S farm Bill - 2014) வேளாண் நிறுவனங்களுக்கு அளித்துவந்த பலவகையான நேரடி மானியங்களைப் பலமடங்கு அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதுபோலவே நிகழ்ந்தன. பிரிட்டனின் எலிசபெத் மகாராணி குடும்பம்கூட வேளாண்மைக்குப் பல்லாயிரம் கோடி பவுன்ட் மானியம் பெறுகின்றது.

இந்த நிலையின்தான் இதற்கு முன் இந்தோ னேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற அமைச்சர் நிலைப்பேச்சுவார்தையில் தொடங்கி மிகக்கடுமையான அழுத்தங்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டன.

இடுபொருள் மானியம், மின்சார மானியம் ஆகியவை 2017க்குள் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு அரசின் ஆதார விலை வழங்க அறிவிக்கப்படக்கூடாது என்றும் அழுத்தம் தரப்பட்டது. மக்களுக்கு விலையின்றியே, மலிவு விலையிலோ உணவுப் பொருள்கள் வழங்கும் உணவு பாதுகாப்பு திட்டங்கள் அறவே கைவிடப்பட வேண்டும் என்றும், அரசு உணவு தானியங்களை சேமிப்பில் வைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள இந்திய உணவுக்கழகம் (FCI) கலைக்கப்படவேண்டும் என்றும் கடுமையான அழுத்தங்கள் தரப்படுகின்றன.

பேச்சுவார்த்தையில் இந்திய அரசுப் பேராளர்கள் இதனை எதிர்த்தாலும், நடைமுறையில் இந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே வேளாண்மைக்கு விலையில்லா மின்சாரம் வழங்குவது அந்தந்த மாநில அரசின் பொறுப்பு என கைகழுவி விடப்பட்டுள்ளது. உரமானியம், பூச்சிக்கொல்லி மானியம் ஆகியவை பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. நெல், கோதுமை தவிர பிற விளைபொருட்களுக்கு அரசு ஆதாரவிளை தரக் கூடாது என்பதைக் கொள்கை அளவில் மோடி அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

செயல்படுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக இந்திய உணவுக் கழகத்தை கலைத்து கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உணவு தானிய கிடங்குகள் வைத்துக் கொள்வதற்கு இசைவு வழங்கப்பட்டுவிட்டது.

இது போதாதென்றும் இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டம் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், பாசனத் தண்ணீருக்கு விலை வைக்க வேண்டும் என்றும் அதையும் உடனே செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அழுத்தம் தருகின்றன.

உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஓர் கூட்டணியாக நின்றுகொண்டு தங்கள் தலைமையில் பெரும்பாலான வளர்முக நாடுகளையும், வளர்ச்சி குன்றிய நாடுகளையும் அணி சேர்த்துக்கொண்டு அமெரிக்க வல்லரசுக்கு
எதிராக முணுமுணுப்பதைக் கூட வல்லரசுகள் விரும்பவில்லை.

உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தைகளை சுற்றி வளைக்கும் வகையில் பல்வேறு துறைசார்ந்த மண்டல ஒப்பந்தங்களை உருவாக்கி வருகின்றன. அண்மையில் அமெரிக்கா ஏற்படுத்திய “பசிபிக்
தழுவிய கூட்டாண்மை” (Trans Pacific Partnership- TPP) என்ற ஒப்பந்தம் உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அமைந்தது.

இந்தப் பின்னணியில் தான் ஆப்பிரிக்க நாடான கென்யா தலைநகர் நைரோபியில் 2015 டிசம்பர் - 15 தொடங்கி 18 முடிய உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர் நிலைப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிவரை முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்ததால் ஒருநாள் கூடுதலாக அமர்ந்து டிசம்பர் 19 அன்று கூட்டறிக்கையோடு முடிக்கப்பட்டது.

உலக வர்த்தகக் கழக சட்ட திட்டங்களின்படி எல்லா உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டாலே தவிர ஒப்பந்தம் கூட்டறிக்கையாக வெளியிட முடியாது. ஆனால், நெய்ரோபி பேச்சுவார்த்தையில் இந்த அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுவிட்டது.

இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட வணிக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியில் வந்து தாங்கள் கருத்து மாறுபடுவதாகச் செய்தியாளர்களிடம் சொன்னாலும் இந்தியாவின் பெயரையும் உள்ளடக்கி டிசம்பர் 19 அன்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு உண்மையில் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் அந்நாட்டின் பெயரையும் சேர்த்து ஓர் கூட்டறிக்கை வெளிவரு வாய்ப்பே இல்லை. உள்ளே ஒத்துக்கொண்டுவிட்டு வெளியில் தாங்கள் ஏற்கவில்லை என மோடி அமைச்சரவையின் நிர்மலா சீத்தாராமன் நாடகம் ஆடுகிறார்.

உலக வர்த்தகக் கழக சட்டதிட்டங்களுக்கு உட்படாத நேரடி மானியங்களை 2020க்குள் கை விடுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட பச்சைபெட்டி, பழுப்பு பெட்டி மானியங்களை இந்த நிபந்தனை தொடவே தொடாது. அதே நேரம் உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் ஏற்றுமதி மானி யத்தைத்தான் கைவிடுவதாக இந்நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களுக்கு (Processed Products) ஏற்றுமதி மானியம் உள்ளிட்டு எல்லா மானியங்களையும் தொடரலாம் எனக் கூறப்பட்டுவிட்டது.

அரிசியாக விற்றால் சிலவகை மானியங்கள் அளிக்கக்கூடாது அதற்குப் பதிலாக மாவாக விற்றால் எல்லா மானியங்களும் அளிக்கலாம். கொட்டை நீக்காமல் பஞ்சுக்கு சிலவகை மானியங்கள் நிறுத்தப் படலாம். அதே நேரம் கொட்டை நீக்கி பஞ்சுக்கோ, நூலுக்கோ எல்லாவகை மானியமும் தொடரலாம். இதேபோல் சக்கரைக்கும் பிறவகை பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் எல்லா மானியங்களும் தொடரும்.

பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்கள் சந்தையில் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கோலோச்சுகின்னறன. நைரோபி ஒப்பந்தம் அதில் ஒரு சிறு துளியைக்கூடக் கட்டுப்படுத்தாது.
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் 2023க்குள் அனைத்து வகை வேளாண் மானியங்களையும் நிறுத்திவிடவேண்டும் என நைரோபி ஒப்பந்தம் கூறுகிறது.
உணவு பாதுகாப்புச் சட்டத்தை அறவே கைவிடுவது, உணவு தானியங்களுக்கு ஆதார விலை அளிப்பது, இந்திய உணவுக் கழகத்தை கலைத்துவிடுவது போன்றவற்றிற்கு நிர்மலா சீத்தாராமன் அடுத்த பேச்சுவார்த்தைவரை வாய்தா வாங்கி வந்திருக்கிறார்.

தன்னுடைய தலைமையில் ஒருமுனை உலகத்தைக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தபோது அமெரிக்க வல்லரசு உலக வர்த்தகக் கழற்றிற்கு வெளியில் உறுப்பு நாடுகள் எந்தவகை மண்டல ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி வந்தது.
ஆனால் சில ஆண்டுகளிலேயே பலமுனை உலகம் உருவாகி வருவதை உணர்ந்து கொண்ட அமெரிக்க வல்லரசு உலக வர்த்தகக் கழகத்தை சுற்றி வளைக்கும் வகையில் மண்டல ஒப்பந்தங்களில் இறங்கியது.

இவ்வாறான மண்டல ஒப்பந்தங்கள் உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தின் கூறாக இனி மாற்றப்படும் என நைரோபிய ஒப்பந்தம் கூறுகிறது. வளர்முக நாடுகள் ஓர் அணியாகத் திரண்டுநின்று முணுமுணுப்பதைக் கூட தகர்க்கும் சூழ்ச்சி இதில் உள்ளது.

இதற்கு முன் நடைபெற்ற பாலி பேச்சுவார்த்தையில் தோக்கா நிகழ்ச்சி நிரல் முடியும் வரையில் புதிய பிரச்சனைகள் பற்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படாது என ஏற்கப்பட்டது. ஆனால், நெய்ரோபிய ஒப்பந்தத்தில் அடுத்துவரும் பேச்சு வார்த்தைகளில் புதிய சிக்கல்கள் குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க லாம் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தோக்கா சுற்று என்ற வகையில் வளர்முக நாடுகளுக்குப் பாதுகாப்பாக இருந்த மெல்லிய அரணும் கிழித் தெரியப்பட்டு விட்டது.

வெள்ளம்போல் இந்தியாவிற்குள் இறக்குமதியாகும் உணவு தானியங்களை தடுத்து நிறுத்தி உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பதற்காக 2001-ல் சிறப்புப் பாதுகாப்பு பொறியமைவு (Special Safeguard Mechanism - SSM) ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி அமெரிக்கா உள்ளிட்டு பிறநாடுகளிடமிருந்தோ நெல்லோ, கோதுமையோ, சக்கரையோ வேறு பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துவிடாத அளவிற்கு சுங்கவரியை அல்லது இறக்குமதி வரியைத் தற்காலிகமாக உயர்த்திக் கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை அடுத்த பேச்சுவார்த்தைக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடிப்படைகள் நெய்ரோபி ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப் பட்டுவிட்டன.

உழவர்களிடமிருந்து நெல், கோதுமையை அரசு கொள்முதல் செய்வதும், இத்தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுவதும் விரைவில் கைவிடப்பட இருக்கின்றன. வேளாண் மையை வாழ்வாதாரமாகக்கொண்ட பலகோடி கிராம மக்களுக்குப் பெரும் துயரை ஏற்படுத்துவதற்கு மோடி அரசு நேரம் குறித்துவிட்டது.

அதன் மறுபக்கமாக உணவு மானியம் அளித்து நியாயவிலையில் மக்களுக்கு அடிப்படை உணவு தானியங்கள் அளிக்கும் பொது வழங்கல் முறையும் (ரேசன் கடைகள்) கைவிடப்படுவதற்கும் நைரோபியில் நிகழ்ச்சி நிரல் தயாராகிவிட்டது. இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தக் கொடுஞ்செயலுக்கு விரைவில் நேரம் குறிப்பதாக ஏற்றுக்கொண்டுதான் தில்லி திரும்பியிருக்கிறார்.

நன்றி : தோழர்.வீரமணி ஊமதுரை

மேலும், இதன் தொடர்ச்சியாகவே உழவை மேம்படுத்த, உழவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின்ராசம் நிறுத்தம் செய்யும் நடவடிகைகில் இரங்கியுள்ளது முதலாளித்துவ கார்ப்ரேட்ட அரசு இந்த கட்டுரையின் தொடர்சியாக அடுத்த கட்டுரையில் இலவச மின்சார நிறுத்தபற்றி விளக்குகிறோம்...

தி.நகரில் இருக்கும் ஒரு செருப்புக்கடையின் லோகோ...


என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...

பார்ப்பனத் தமிழ்த் தாத்தா...


இன்று நாம் கொண்டாடும் புறநானூறு,
சிலப்பதிகாரம். மணிமேகலை போன்ற
காப்பியங்களை மக்கிந ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டுத் தந்தவர்.

தமிழ் இன்று செம்மொழி என்றால் அது இந்தத்தனிமனிதரின் கடுமையான உழைப்பே காரணம்.

அம்மாமனிதர் அழியவிருந்தஓலைச் சுவடிகளை அலைந்து திரிந்து தொகுத்து அச்சிட்டு வெளியிட்டபுத்தகங்கள்...

1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக்
கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர்
இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச்
சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய
மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம்,
பெளத்த
சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்
கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878

கேட்டால் அய்யர் என்பான் பார்ப்பான்
என்பான் ஆரியன் என்பான் உருப்படியாக
ஒரு சிலை வைக்காத இன்றைய தமிழன்...

தமிழர் நாட்டுக்கொடியை ஏற்றும் வீரப்பனார்...


தமிழ் நாட்டுக்கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது...

வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..

தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA)..
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT)..

ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

படத்தில் வீரப்பனாருடன் சேத்துக்குளி கோவிந்தன்...

அணையைத் தகர்த்து காவிரியை மீட்டவன்...


மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது..

இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163)
அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கியிருந்தோமானால்..

காவிரியை கன்னடவன் விதிமீறி அணை கட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கை விடுவானா?

மொரீசியஸ் தமிழ் மாநாடு...


1980ல் மொரீசியஸ் நாட்டில் பெரிய அளவில் நடந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு...

கும்பகோணம்: மானம்பாடியில், மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் இடிக்கப்பட்டுள்ளதாக- யுனெஸ்கோ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது...


புராதன சிலைகள், கோயில்களை பராமரிக்கும் கட்டமைப்பு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கிறதா? - யுனெஸ்கோ கேள்வி...