17/12/2018

அதிர்ச்சியளிக்கும் செய்தி...


வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்.

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்.

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்.

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளை அடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.

அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?

பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம் தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.

இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.

அல்லது திருத்தப்படவேண்டும்.

விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்… அதுவும் உங்களால் தான் முடியும்…

இந்த செய்தியை அவரவர்கள் அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து
அனுப்புங்கள், தயவுசெய்து...

நேற்று காலையில் கூட எச்சரித்திருந்தோம் என்பது கூறிப்பிடத்தக்கது...


பாம்பு கடித்து விட்டால்...


ஒரு மனிதனை பாம்பு கடித்து
விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?

பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?

சித்த வைத்தியத்தால் முடியும்...

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை..

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும்.. இதயம் துடிப்பு நின்று விடும்..

ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்..

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்..

எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்..

மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர்
உள்ளது என்று அர்த்தம்..

அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3&5 சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்...

இலிமினாட்டி யும் உலக அரசியல்...


முதலில் இலுமினாட்டி என்ற சொல்லுக்கான தமிழ் வார்த்தையை காண்போம்.

இலுமினன்ட் - ஒளிக்கும் பொருள்.

இதலிருந்து உருவானது தான் இலுமினாட்டி.

தங்களை தாங்களே ஒளி பொருந்தியவர்கள் என்று கூறுவோரே இலுமினாட்டிகள்.

ஆனால் இவர்களுக்கு சரியான தமிழ் பெயர் பெரு முதலாளிகள். அதென்ன பெரு முதலாளிகள்.

நம்ம சன், விஜய், ஜெயா, ஸ்டார், ஜி போன்ற தொலைக்காட்சி குழுமங்களுக்கும் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற இந்திய முதலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் தான் இந்த பெரு முதலாளிகள்.

உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இது போன்ற முதலாளிகளுக்கு சம்பளம் தருகின்றனர்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தவர்களே இவர்கள் தான்...

இதென்ன புதுகதையா இருக்கு என்று பலரும் நினைக்கலாம்.... பின்வருவதை படித்தால் புரியும்...

வணிகம் என்ற பெயரில் ஐரோப்பியர் இங்கு வந்த பின் இங்கிருந்த ஒற்றுமையின்மையை கவனித்து நம்மை ஆளவும் செய்தனர் ஆங்கிலேயர்..

அவ்வாறு அடிமைப்பட்ட இந்தியாவை மட்டுமல்ல உலகின் பல பகுதிகளையும் ஆளுமை செய்ய இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டது..

அந்த சண்டையின் போது பண உதவிகள் செய்ததும் இந்த பெரு முதலாளிகளே.

ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமைக்கு வந்து சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டனர். (உண்மையில் அதை விட்டால் வேறு வழியில்லை).

அந்த இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் கிழக்கிழிருந்து போரிட்டு வந்த சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான போர்குழுவும் இங்கிலாந்து படை வீரர்களை தோல்வியன் விழிம்பிற்கே தள்ளியது.

மேலும் இந்திய மக்கள் பலரும் அகிம்சை வழியில் போராடி வந்தனர்.

இதனால் அந்நிய பொருட்களை இந்தியாவில் விற்பதற்கு பல சிக்கல்கள் உருவானது.

இதனால் இங்கிலாந்து (ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்) அரசு இனி உலக மக்களை மிரட்டி ஆண்டு வருவது இயலாத காரியம் அவர்களை அவர் போக்கிலேயே வாழ வி ட்டு பின் நாம் பலன் காண வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திரம் தருவதாக நல்லவன் வேசம் போட்டனர்.

இந்த வேசத்தை உண்மையென நம்பி நம் முன்னோர்களும் சந்தோசம் கொண்டனர்.

ஆனால் ஆங்கிலேயன் இந்தியா வருவதற்கு முன் இருந்த ஒற்றுமையின்மை சுதந்திர போராட்டத்தின் காரணமாக காணமல் சென்று அனைவரும் நாட்டு நன்மைக்காக ஒன்றினைந்து இருந்தனர்.

இந்த ஒற்றுமை ஒருநாள் ஆங்கிலேயனுக்கே ஆபத்தாக திரும்பி விடும் என்று பயந்த ஆங்கிலேயன் பிரிவினையை வளர்க்க நேரு மற்றும் ஜின்னா மூலமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு தூண்டிவிட்டனர்.

இதனால் எண்ணற்ற உயிர் சேதமும் பொருள் இழப்பும் ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு நிரந்தரமான இடையூறும் உருவானது.

என்னங்க இலுமினாட்டின்னு தலைப்ப போட்டுட்டு சுதந்திர போராட்ட வரலாறா இருக்கேனும் தோணுதா? விசயத்துக்கு வருவோம்....

இரண்டாம் உலகப்போருக்கு முன்னாடி ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவன முதலாளிகள் அடுத்து என்ன செய்வது என்று யோசிச்சு ஒரு முடிவை எடுத்தாங்க, அந்த முடிவெடுத்தவங்க தான் பெரு முதலாளிகள். அந்த திட்டம் தான் இன்று நம்மை இந்நிலையில் வைத்துள்ளது.

வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்க கூடாது என்று சுதந்திரத்திற்கு முன் போராடிய காங்கிரஸ் இயக்கம் ஆட்சி பொருப்பில் வந்தது.

காந்தியுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்த பல சுதந்திர போராளிகள் அரச பொருப்பில் அமர்ந்தனர்.

கிபி 1960ம் ஆண்டு பசுமை புரட்சி என்றொரு திட்டத்தை கொண்டு வந்தனர். அந்த திட்டத்திற்கு வறட்சியை காரணம் காட்டியுள்னர் அப்போதய அமைச்சர்கள்.

அப்போதைய மக்கள் தொகை 40 கோடி மற்றும் மழையின் அளவு இன்றுள்ளதை விட அதிகம், அன்றிருந்த விளைச்சல் நிலம் இன்று இருப்பதை விட பல மடங்கு அதிகம். மேலும் இன்றுள்ள விவசாயிகளை விட அன்றய விவசாயிகளும் அதிகம்.

அப்படி இருக்க இன்று 120 கோடி மக்களுக்கு உணவளித்தது போக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்கின்றோம்.

ஆனால் அன்று 40 கோடி மக்களுக்கும் அப்போதைய அரசாங்கம் உணவாக வழங்கியது மைதாமாவையும் உளுத்து போன அரிசியையும் தான்.

இது எவ்வாறு நடந்தது என்று அன்று ஆண்டவர்களுக்கே வெளிச்சம் (ஆண்டவனல்ல, ஆண்டவர்).

சரி இந்த பசுமை புரட்சியின் விளைவாக என்ன செய்தனர் என்று பார்ப்போம்.

வெளிநாட்டு உரங்களையும் விதைகளையும் இந்தியாவில் விற்பதற்கு அனுமதித்தனர்.

உரங்கள் என்றால் வெடி குண்டு தயாரிக்க பயன்பட்ட அம்மோனியாவையும் சேர்த்து. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.

இந்த விதைகள் திரும்பவும் வேண்டுமானால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே வாங்க வேண்டும்.

இதனால் சுதந்திரத்திற்கு முன் வெளிநாட்டு பொருட்களை எதிர்த்த காங்கிரஸே வழிய வந்து வெளிநாட்டு பொருட்களுக்கு ஆதரவளிப்பது பலவிதமான விமர்சனங்களை உருவாக்கியது. இருப்பினும் பசுமை புரட்சி அமலாக்கம் செய்யப்பட்டது.

அடுத்து செய்த புரட்சி வெண்மை புரட்சி..

அரசாங்கம் வெளிநாட்டு உரங்களை விற்பதற்கு கூவிக் கொண்டே இருந்தாலும் நம் மக்கள் நாட்டு மாடுகளை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் கழிவுகளையே விலை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் ராசாயன உரத்தை வாங்க வில்லை.

இதனால் நாட்டு மாடுகளின் பயன்பாட்டை குறைக்க உருவானது தான் இந்த வெண்மை புரட்சி ( தற்போது பீட்டா).

அதாவது நம்ம ஊர் மாடுகள் 1-2 லிட்டர் பால் தான் தரும் வெளிநாட்டு மாடுகள் 10-15 பால் தரும் என்று வெளிநாட்டு மாடுகளின் விந்தை இறக்குமதி செய்து நாட்டு மாடுகளையும் கலந்து விட்டனர்.

இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இயந்திர வருகையின் காரணமாக இந்திய காளையினங்களும் காணமல் போனது. வேறு வழியின்றி விச உரங்களை வாங்கி மண்ணில் போட்டனர் நம்ம ஊர் விவசாயிகள்.

இவ்வாறு நாம் உண்ணும் உணவுக்கான விதைகளையும் உரத்தையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதனால் தான் இன்று உணவு பற்றாக்குறை இல்லாமல் இருப்தாக கருத்து தெரிவிக்கும் சிலர் அந்நிறுவனங்களின் கை கூலிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த உரங்களையும் விதைகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்களையே நாம் பெரு முதலாளிகள் என்று கூறுகிறோம்.

அதெல்லாம் சரிங்க தொலைக் காட்சிகளுக்கும் இந்திய பணக்காரர்களுக்கும் இவர்கள் சம்பளம் கொடுப்பதாக சொன்னது எதற்கு என நீங்க நினைப்பது புரியுது...

கிபி 1990 வரை விதைகள், உரங்கள் மற்றும் இயந்திர வாகனங்களை விற்று பெற்ற லாபம் பற்றாததால் அத்தியாவசிய பொருட்களின் மேல் கவனத்தை திருப்பினர் இந்த பண முதலைகள்.

அத்தியாவசிய பொருட்கள் என்றால் சோப்பு, பேஸ்ட், பவுடர் போன்ற பொருட்கள்.

இதற்கு முன்பே சந்தையில் இருந்த (சைசூர் சேன்டல், கோபால் பல்பொடி போன்றவை) இந்திய பொருட்களை ஓரம் கட்டிவிட்டு அவர்களுடைய பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக நல்ல விளம்பர தூதுவர்களை நியமிக்க தொடர்ந்து இந்திய பெண்களுக்கு உலக அழகி பட்டத்தையும் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் மாறி மாறி வழங்கினர் 1994 முதல் 2000 வரை.

ஆனால் 2000 திற்கு பிறகு இந்தியாவில் அழகிகளே இல்லையாம்.. (அவர்கள் கொடுக்கும் கிரீமை போட்டால் எங்கிருந்து அழகு வரும்).

அந்த உலக அழகிகளும் தான் அழகாக காரணம் இந்த சோப்பு அந்த கிரீம் என்று நடித்துக்காட்ட, நாமும் அவர்கள் காட்டியதை பார்த்து மயங்கி அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினோம் பயன்படுத்துறோம்.

இப்படி தான் அனைத்து அழகு சாதன பொருட்களும் இந்தியா வந்தது.

இதற்கும் மத்திய அரசு உலக மயமாக்கல் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது தான் காரணம்.

இப்படித்தான் கிருக்கு விளையாட்டு வீரர்களால் சத்து பவுடர்கள் என்று குப்பைகளையும், கூல்டிரிங்குஸ் என்று அக்காமாலா கப்சிகளையும் விற்பனை செய்தனர் இதே பெரு முதலாளிகள்.

இதே காலகட்டத்தில் இந்தியாவில் உருவான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொன்டனர். இதை விளம்பரப் படுத்தினால் இவ்வளவு பணம் தருவோம் என்று.

சற்று சிந்தித்து பாருங்கள் இந்தியா (உலகம்) முழுவதும் உள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு தேவையான பண உதவி எங்கிருந்து கிடைக்கிறது. விளம்பரதாரர்கள் மூலமாக தானே கிடைக்கிறது.

விளம்பரங்களில் வரும் தகவல் உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் அப்படியே திரையிடுவதை சட்டமும் தடுக்க வில்லை, தொலைகாட்சி நிறுவனங்களும் கவனிப்பதில்லை. பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் திரையிடுவர் .

ஆக இந்த பண முதலைகள் என்ன சொல்கின்றனரோ அது மட்டுமே தனியார் ஊடகங்களில் வெளிவரும். (பொது ஊடகம் என்பது நம்மை ஏமாற்ற கூறும் கதை).

இப்போது சொல்லுங்கள் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு முதலாளி யார்?

நிச்சயமாக விளம்பரதாரர்களே...

சரி அடுத்து உள்ளூர் முதலாளிகளுக்கு எப்படி இவர்கள் முதலாளி ஆனார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாட்டு மக்கள் புத்திசாலிகள் அதனால் மாசு ஏற்படுத்தக்கூடிய தோல், துணி, சிமென்ட் மற்றும் இதுபோன்ற சில தொழிற்சாலைகளை எதிர்த்து போராடினர்.

ஆனால் அந்த சொகுசு வாழ்கையை கைவிட முடியவில்லை. அதே நேரம் அந்த பெரும் பண முதலைகளும் வியாபாரம் தடைபடக்கூடாது என்பற்காக ஏமாளி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள எலும்பு பொருக்கி நாய்கள் சிலவற்றிடம் அந்த தொழிலை இங்கு தொடங்க அறிவுறுத்தினர். அதற்கு பொருளுதவியும் செய்தனர்.

அதாவது இங்குள்ள எலும்பு பொருக்கி நாய்கள் இங்குள்ள ஏமாளிகளை வைத்து தயாரித்து கொடுத்து விடுவர், அதை வாங்கி சென்று பல மடங்கு லாபம் வைத்து அவர்கள் நாட்டில் விற்று விடுவர் இந்த பண முதலைகள்.

அதில் உறுவாகும் கழிவுகளை நம்ம ஊர் அரசியல் வியாதிகள் ஆற்றிலும் கடலிலும் கலந்து விட ஏற்றவாறு உதவியும் செய்வர்.

இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் முதலாளி யார்?

வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து பொருள் வாங்கும் பண முதலைகளே...

இதில் நம்ம ஊர் முதலாளிகள் இலாபம் பார்ப்பது பிடிக்காமல் அவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளை நிர்வகிக்க ஏதுவாக உதவுவதே இப்போது கொண்டு வரப்படும் நில உரிமை சட்டம் மற்றும் அந்நிய முதலீடு போன்றவை.

இப்போது சொல்லுங்கள் நாம் சுதந்திர நாட்டில் சுதந்திரமாக உள்ளோமா?

பின் வரும் பொருட்கள் சந்தைக்கு வருமுன் மனித வாழ்க்கை எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது?

Soap - Lux, Hamam, Rexona, Lifebouy etc.

Tooth Paste and Brush- Colgate, Pepsodent, closeup etc.

Shampoo - Clinic plus, Allclear, H&S, Meera sikkai, Karthika Sikkai, Pantene Dove etc.

Powder - Ponds, Spice, Z, Dermi cool etc.

Washing Soap and Powder - Rin, Surf Exel, Tide, Ujala Etc.

Cool Drings - Pepsi, cock tropicona etc.

Energy Drings - Horlics, Boost, Bournvita etc.

கோதுமை மாவு
பாசுமதி அரிசி
ஓட்ஸ்
நூடுல்ஸ்
சேமியா
மசாலா பொருட்கள்
அனைத்து சமயல் எண்ணெய்கள்
கழிவரை கழுவும் மருந்து
பேனா
பென்சில்
கார்
பைக்
செல்போன்
தொலை தொடர்பை வழங்கும் சிம் கார்டு நிறுவனங்கள்
ஆயத்த ஆடைகள்
பெட்ரோல்
டீசல்
சிமென்ட்

இப்படி இன்னும் பல பொருட்கள் ஒரு ரூபாய் மிட்டாயிலிருந்து கோடி ரூபாய் இயந்திரங்கள் வரை இவர்களுடைய நிறுவனங்களால் தான் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இவர்களது பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் உருவாகும் நோய்களுக்காக நாம் உண்ணும் மருந்துகளும் மாத்திரைகளும் தயாரிக்கும் நிறுவனமும் இவர்களுடையது தான்.

என்ன தலை சுற்றுகிறதா?

முதன் முதலில் தெரிந்த போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.

தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக இணைக்ப்பட்டுள்ள படத்திலுள்ள நிறுவனங்களாகத் தான் இருக்கும்....

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாமிநாதன் கைது...


கோவை சரவணம்பட்டியில் நிதிநிறுவனம் நடத்தி காேடிக்கணக்கில் தமிழ்மக்களிடம் காெள்ளை அடித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாமிநாதன் என்பவர் கைது...

நாடாளும் மக்கள் கட்சி என்கிற கட்சியை நடத்தி வந்த நடிகர் கார்த்திக்...


அதனை பெயர் மாற்றம் செய்து, மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை இன்று நெல்லையில் தொடங்கியுள்ளார். புதிய கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

போராட வேண்டிய நேரத்தில் போராடித்தான் ஆகவேண்டும்  இனி அரசியலை விட்டு போக மாட்டேன் என சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்...

கலப்பு திருமணம் முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?


தமிழ் சமூகத்தில் சாதி...

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள்.

உதாரணம்...

கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில் இல்லை - பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி, கோவை.

கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு.

இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை, பின்னணி, நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல், கொலை) இல்லை.

ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது.

அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல.

உதாரணம்..

வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன.

வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது.

இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்?

இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே?

ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.?

மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக, மதிமுக, தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி கட்சிகளுக்கு அங்கு என்ன வேலை?

மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன.

பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர்.

இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே?

வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை.

கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்..

திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம்.. அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது.

கள்ளர்களின் விழாவான 'பெருங்காம நல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம்.

இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும்.

பொன், மண், பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள்.

இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். 

'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' யுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. 

இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம்.

ஆனால் உடும்பு பிடிக்க இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

கீழ் சாதி ஆண் என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன் என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்...

நபர் - சாதி - இனம் :

பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்

ராஜாஜி - தெலுங்கு பிராமணர்

மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்

ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்

வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்

விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால், மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியல் தூண்கள்.

மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும், தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.

காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர, தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள்.

அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான்.

இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும்.

யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான்..

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர், தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான்.

எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்).

இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்...

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர், கவுண்டர், நாயகர், பறையர், கோனார், முக்குலத்தோர் etc ...).

2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர், நாயுடு, கன்னட பிராமின், சக்கிலியர், சின்ன மேளம் (இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை, கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்.

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும்.

பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும்.

திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.

சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது..

ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்.

எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்.

அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்.

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக, பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்).

செய்து கொண்டு இருப்பது:

பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம்.

இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.

கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:

தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

'இல்லை இல்லை. கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும், வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர், பறையர், வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம்.

பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம்.

இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி, கலப்பு திருமண பிரச்சாரத்தை  செய்து, செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு..

காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு :

காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்...

பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம்...


பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

குடல் பூச்சி நீங்க...

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற...

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

மயக்கம் தீர...

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்க...

பித்தம் பிசகினால் பிராணம் போகும்.

என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்க...

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

தடிமன் காய்ச்சல் குறைய...

நிலவேம்பு 15 கிராம்
கிச்சிலித் தோல் 5 கிராம்
கொத்துமல்லி 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தடிமன் காய்ச்சல் நீங்கும்.

குழந்தைகளுக்கு...

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம்
வசம்புத் தூள் 4 கிராம்
சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம்
கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். செரிப்பின்மை கோளாறுகள் நீங்கும்

நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை

6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்...

தமிழக அரசியல் உண்மைகள்...


தமிழர் வரலாறு பகுதி - 3...


(நாகரிக மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்..

6. நாகரிக மாந்தன் பிறந்தகம்...

மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலைசார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடுசார்ந்த இடமும் முல்லை; நாடும் நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர் பெற்றன.

இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்த படியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்துவதற்கு ஏற்ற இடம் நெய்தல்.

இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றவாறு அடுத்தடுத் திருந்தது அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே.

இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத்தொடரிருந்தது.

அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமைபற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன.

ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத்திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிற நாடுகளிற் காண்டல் அரிது.

வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ்வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந்திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான்.

முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக்கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

7. தமிழன் பிறந்தகம்...

தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்..

1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிடமொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச் செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும்.

2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும்.

3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும்,   அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும்.

4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும்.

5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும்.

6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும்.

7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல்.

9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற்றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை.

11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்பல்லிவடபல்லி (தலையணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல்.

12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர்  பெற்றிருத்தலும்.

13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல்.

14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப் பொருள்கள் பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக் கருத் தின்மையும்.

15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை.
குறிப்பு: தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக.

16. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை.
குறிப்பு: தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரிமலைக்கும் நடுவிடையே அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று.

இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க..

தில்லைக்கு வடக்கிற் பனிமலையளவு தொலைவிலேயே தெற்கிற் குமரிமலையும் இருந்தது...

தமிழ் சோறு போடுமா?


இல்லை.. உட்கார வைத்து வடைப் பாயாசம் பீட்சா, கேஎப்சியுடன் விருந்தே வைக்கும்...

தமிழை நன்கு படித்து அறிந்தவன் இந்த கேள்வியைக் கேட்பதில்லை....

தமிழைப் படிக்காமலேயே இந்த முட்டாள் தனமான கேள்வியை எதுக்குங்க கேட்கிறிங்க,....

தமிழைப் படித்து பாருங்கள்...

தமிழ்ச்சாற்றை அருந்தி பாருங்கள்....

இதுப்போன்ற கேள்வி தோன்றாது...

மீறி தோன்றினால் குறை தமிழ் மீது அல்ல... உங்கள் மீதுதான்..

சில தமிழர்களைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தங்கள் தாய்மொழியைப் பார்த்து இப்படி கேட்பதில்லை....

ஆறு அறிவு இருக்கிறது என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டால் மட்டும் போதாது.... அதற்கேற்றாப் போல் நடந்து கொள்ளல் அவசியம்...

இயற்கை...


இங்கே அனைத்து இயற்கைக்குமே ஒருவித காந்த தன்மை அதில்  நிறைந்துள்ளது...

அதிர்வுகள் நிறைந்த காந்த தன்மை...

இசையும் தமிழில் இசைந்தது...


சங்கீதம், கர்நாடக சங்கீதம் இப்படி எதை நாம் பயில முற்பட்டாலும் அதன் பயணம் தியாகராயர், முத்துசாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரிகள் போன்றோரின் தெலுங்கு கீர்த்தனைகளில் தான் இருக்கும்...

ஆனால் 19ஆம் நூற்றாண்டில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி கெ சி, ராஜாஜி ராஜா சார் முத்தையா செட்டியார் போன்றோர் கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதை காட்டும் வகையில் மரபு இசை மேடைகள் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை..

ஆனால் இன்றைய தலைமுறைகள் இந்த நிலையை மாற்றி அமைக்கிறது..

தமிழ் பாடல்கள் ராகங்களின் அடிப்படையில் மரபு மேடை ஏறுகிறது.

மிகவும் குறைவான முந்தைய தலைமுறையினர் மட்டுமே இந்த கோட்பாடு கொண்டு இன்றும் உள்ளனர்.

இசை என்பது மொழி மரபு போன்றவற்றை கடந்தது. நாம் உணர்ந்து ரசிக்கவல்ல தாய்மொழியில் பாடல்கள் தோன்றினால் தத்தம் மொழியினருக்கு ஒரு இன்பம் தோன்றும்.

இசையில் பாகுபாடு ராகங்களால் இருக்கலாம் மொழியால் கூடாது என்பதை தற்போதைய தலைமுறை விதைத்து வருகிறது..

இசையில் இசைவோம் உணர்ந்து இசைவோம்...

செந்தில் பாலாஜி கலாட்டா...


தமிழர் வரலாறு பகுதி - 2 ...


(மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

5. மாந்தன் பிறந்தகம்...

தென்னிலம்..

மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றியகருதுகோள்: "மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையைநெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக் கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல்உண்மைகள்) உள்ளன.

விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாகவுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா(Lemuria) எனப் பெயர் பெற்றது.

அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக்கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறி யிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்."

"மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும்நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக்காட்டும்.

இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக் கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப் படாததாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்.

இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய "நிமிர்ந்த குரக்கு மாந்தன்" (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (Prof. Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய 'நெற்றுடைப்பான்' (Nut cracker Man or sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர்.

உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப் பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்ச மின்றிக் கூறலாம்.

'உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும்' பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், "இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது.

கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத்திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்"9 என்று கூறுகின்றார்.

தொன்னிலம்...

நிலவியல் வரலாற்றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், "கோடி யாண்டுகட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது" என்பர்.

இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

நண்ணிலம்..

முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே.

நண்ணிலக்கோடு (Equator) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க..

முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும்.

ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக.

வண்ணிலம்..

முதற்கால மாந்தன் காட்டு விலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக்கண்டமே.

ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும்.

ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல்.

பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது.

நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப்படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும்.

அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்டமிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது.

அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம் மணற் பாலைகளும் பல வுள.

பனிமலை (இமயம்) போலும் குமரிமலைத் தொடரும் கங்கை போலும் பஃறுளியாறுங் கொண்டு, பசியுந் தகையுந் தணிக்க, இனியனவும் வாழ்நாள் நீட்டிப்பனவுமான கனிகளுங் காய்களும், மாரியுங் கோடையும் விளையும் பல்வகைத் தவசங்களும், சுவைமிக்க பயறுகளும், எளிதாகக் கில்லியெடுக்குங் கிழங்குகளும், தேனும் தெங்கிளநீரும் கடுங்கோடையிலும் வற்றாச் சுனைபொய்கைத் தெண்ணீரும், உணவும் மருந்துமான பல்வேறு விலங்கு பறவை யூனும், ஆடுமாடுகளின் பாலும், இராத்தங்கி யுறங்க மலைக்குகை களும் புடைகளும்; அற்றம் மறைக்க இலையுந்தோலும் மட்டையும் மரவுரியும் ஏராளமாகக் கிடைத்த குமரிநாடு போலும் இயற்கை வளநாடு இஞ்ஞாலத்தில் வேறேதேனு முண்டோ?

முகவை மாவட்டத்திலுள்ள பாரி பறம்புமலையும், ஆயிரத் தெண்ணூறாண்டுகட்கு முன் மூவேந்தராலும் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அதன்மேற் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காலமெல்லாந் தாங்குமளவு எத்துணை இயற்கைவள முற்றிருந்த தென்பது,

"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்"
(புறம். 109)

என்று கபிலர் பாடியதனின்று அறியக்கிடக்கின்றது. மூவாயிரம் அடி உயரமுள்ள ஒரு சிறு மலை இத்தகைய வளத்ததெனின், பனிமலை போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமாமலைத் தொடர் எத்துணை வளத்ததா யிருந்திருத்தல் வேண்டும்..

காலமழையும் பொய்க்குமாறு முல்லையிலும் குறிஞ்சியிலு முள்ள சோலைக்காடுகளெல்லாம் பெரும்பாலும் அழிக்கப்பட்டும்,

நிலந் தாங்கக்கூடிய அளவுபோல் இருமடங்கு மக்கள்தொகை பெருகியும் உள்ள இக்காலத்தும், ஐம்பதிற்கு மேற்பட்ட வாழைக்கனி வகைகளும், ஒட்டுமாவல்லாத இருபான் மாங்கனி வகைகளும், நால்வகைப் பலாக்கனிகளும், கொழிஞ்சி, குடகு, நாரந்தம், வெள்ளரி, விளா, பனை முதலிய பிற கனிவகைகளும்; நெல்,கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்னும் தொண்வகைத் தவசங்களும், அவரை, துவரை, உழுந்து, மொச்சை, பாசி (பச்சை), தட்டான் (தட்டை), கல், கரம்பை (வயல்), கொள் (காணம்) என்னும் தொண்வகைப் பயறுகளும் ஆகிய பதினெண் கூலமும்; கறிசமைக்கப் பத்துவகைக் காய்களும், முப்பான் வகைக்கு மேற்பட்ட கீரைகளும் கறிசமைக்கவோ அவித் துண்ணவோ பயன்படும் பத்துவகைக் கிழங்குகளும் கிடைக்கின்றன.

நெல்லில் மட்டும், அறுபான்வகைச் சம்பாவும் நாற்பான்வகை மட்டையுமாக நூறுவகையுள்ளன. பொன்தினை, செந்தினை, கருந்தினை எனத் தினை முத்திறத்தது. சோளம் ஐவகையது.

காராமணி, வரிக்கொற்றான் என்பன தட்டானுக்கு நெருங்கிய வகைகள்.

இற்றைத் தமிழகத்திலேயே இத்தனை இயற்கையுணவு வகைகளெனின், கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன் தெற்கில் 2500 கல் தொலைவு நீண்டு பரந்திருந்த குமரிக்கண்டப் பழம் பாண்டி நாட்டில், எத்தனை வகையிருந்தனவோ இறைவனுக்குத்தான் தெரியும்..

பிற நாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை.

இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலை வற்றி நிலைத்திணை (தாவரம்) பட்டு நிலங் காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடை மாறி மாரி பெய்தபின், அப் பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடி கொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர்.

கோவலனுங் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று மதுரைக்குச் சென்ற கடுங்கோடைக் காலத்தை,

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்
காலை"

(சிலப்.11: 60-7)

என்று ஒரு மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இந் நிலைமையை இன்றும் தமிழ்நாட்டில் முதுவேனிற் காலத்தில் குறிஞ்சி முல்லைநிலங்களிற் காண்க.

இதனால், பண்டைத் தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடாயிருந்த தென்பதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க..

நிலவு அல்ல சுடர்...



வானத்தில் ஓர் அற்புத சுடர் 
இதயத்தில் ஓர் அற்புத சுடர் 
இரண்டும் கலந்த நேரத்தில் 
என்றும் அனையா சுடர்

சதாசிவ பிரமேந்திரர்...


சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது.

நெரூர்.. கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.

சதாசிவ பிரமேந்திரர் வரலாறு..

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.

ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.

பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

நூல்கள்..

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

ஜீவ சமாதி..

பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.

தல சிறப்பு..

நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) லிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு.

இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது...

தமிழர் வரலாறு பகுதி - 1...


(ஞாலமுந்திய நிலை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

முன்னுரை...

1. ஞாலமுந்திய நிலை
ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம் மாநிலம். 'பூமி' என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று.

தென்சொல்லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும்.

ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்றுதொட்டு இருந்ததில்லை.

ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒருசில தீவுகளாகவும் பகுந்திருந்தது.

காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலியாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதியையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும் தம்முட் கொண்டிருந்தன.

அரபிக் கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை.

இந்துமாவாரியின் பெரும் பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன.

நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியொடு சேர்ந்திருந்தது.

அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது..

2. எழுதீவுகள்...

ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமை யால் தீவுகள் எனப்பட்டன (தீர்வு-தீவு).

அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு-தீவம்).

வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் 'த்வீப' என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.

ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால் (தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.

நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.

"நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்"

என்பது திவாகரம்.

கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழிபெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழிபெயர்த்தனர் வடவர்.

அன்றில் என்பது ஒரு பறவை வகை.
தெங்கந்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கலமென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந்தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் 'சாகத்வீப' என வடமொழியில் தவறாக மொழி பெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ் வழியை மேற்கொண்டது போலும்..

ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்டவராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத்தினின்றே கொண்டிருத்தல் வேண்டும்.

தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்து போன நிலையைக் காட்டும்.

3. நாவலந்தீவின் முந்நிலைகள்...

1. பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தொடு அல்லது பழம் பாண்டிநாட்டொடு கூடியது.

2. பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம் பாண்டிநாடும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."
(சிலப்.11:19.22)

என்று சிலப்பதிகாரம் கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும்.

3. பழம் பாண்டிநாடு இல்லாத இந்தியா.
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார்"
(மணிமே. 25:12).

4. குமரிக்கண்டம் (Lemuria)...

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாசுக்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது.

அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை.

இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது" (சிலப் : 8:1) என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும்.

"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி"
(புறம். 9)

என்று நெட்டிமையாரும்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்"
(சிலப்.11:19-20)

என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம்.

"தொடியோள் பௌவமும்" ( தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், சை.சி. நூ.ப.க. பதிப்பு) என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும்" என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது.

"காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது.

பொருநையோ (Borneo), சாலி (Java), சுமதுரா(Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.

ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (Lemuria) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது."

"செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார்."

"இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (Peninsula) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள

கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப்படுகின்றன.

குமரிக்கண்ட நால்நிலைகள்...

1. ஆப்பிரிக்காவொடும், ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு.

2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம்பாண்டிநாடு.

3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம்பாண்டிநாடு.

4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்தபழம் பாண்டிநாடு...

தற்சார்பு வாழ்க்கை முறை...


உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அடிமை ஓட்டத்தில் இருந்து விடுபட....

முதலில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி செல்லுங்கள் அல்லது உங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லுங்கள்.

வாழ்வதற்கும் தன்னிறைவு விவசாயம் செய்வதற்கும் போதுமான அளவு நிலங்களை வாங்குங்கள்.

சொந்தநிலத்தில் குறைந்தது 10 மரங்களையாவது நடுங்கள்..

இந்த விதைகளை எங்கும் வாங்காதிர்கள் நன்கு வளர்ந்த மரங்களின் விதைகளை சேகரித்து விதைத்து வளருங்கள்.

எளிய வாழ்கைக்கு போதுமான அளவு வீடுகளை கட்டி கொள்ளுங்கள்.

கிணறுகளை வெட்டுங்கள், (முடிந்தவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்காதீர்கள்) இல்லையென்றல் ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு சுழற்ச்சி முறையுடன் அமையுங்கள்.

வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையான மின்சாரத்தை பெற சூரியஒளி அமைப்பை பயன்படுத்துங்கள். 

நிலத்தில் அன்றாட வாழ்கைக்கு தேவையான  காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை, கறிவேப்பிலை வளருங்கள்.

விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துங்கள்.

பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்.

உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்.

இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களை உங்கள் ஊரிலே  தேடி தர்சார்புமுறை அமைப்புகளையும், குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்.

அந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பரிமாரி கொள்ளுங்கள்.

மற்றும் கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்..

போதும் என்ற மனம் கொள்ளுங்கள், இயற்கையோடு இன்புற்று வாழுங்கள்.

மேற்கொள்காட்டியவைகளை முதலில் நிச்சயம் செய்ய முயற்சிப்பேன் என தினமும் எண்ணம் கொள்ளுங்கள் உங்கள் எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்...

இன்று பதவி விலகும் ராஜபக்சே - இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவடையுமா?


இலங்கை பிரதமராக ரணில் விக்ரம சிங்கே இருந்து வந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. ஆனால் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுத்த ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இப்படியான பல்வேறு நிகழ்வுகளுடன் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த  வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக தொடர தடைவிதித்தது. இதை எதிர்த்து ராஜபக்சே தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்தது.

இதனால் வேறுவழியின்றி இன்று பிரதமர் பதவியை ராஐபக்சே ராஜினாமா செய்யவுள்ளார். இதன் பிறகு இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் குழப்பம் விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...

ஆதித்தியா பிர்லா குழு ரவுடிகளின் அட்டகாசம்...


அதிர்வுகள்...


அதிர்வுகளால் அகிலத்தையும் அதிர செய்பவள்...
அண்டசராசரங்களின் உயிராய் அதிர்திர்ந்து கொண்டிருப்பவன்...

பிரபஞ்த்தை பற்றிய புரிதலுக்கு ஆற்றல், அலைவரிசைகள் மற்றும் அதிர்வுகளை பற்றி யோசிக்க வேண்டும் என்று nicolas tesla சொல்லிருக்காரு.

energy, frequency, vibration nu பலமுறை பார்த்தாச்சு மீண்டும் நினைவூட்டல்...

சிவனோட கல்யாணத்துல பார்வதியோட தந்தை சிவனின் தந்தை தாய் என கேட்டதாகவும் அதற்கு நாரதர் தன்னோட சப்பாளா கட்டையை அடித்து ஒலியெழுப்பி இதுவே இவரின் தாயும் தந்தையும் என்ன சொல்லிருக்கிறார்...

இசையில் உதித்தவன் சிவன்..

இந்த பிரபஞ்சம் நடராஜாரின் உடல் போன்று உள்ளதுனு அந்த தத்துவம் சொல்லுதுனு சொல்லுறாங்க..

அப்படினா இந்த பிரபஞ்சம் உருவானதுக்கு ஒலிக்கும் பெரிய பங்கிருக்கிறது..

இந்த பிரபஞ்சமே அதிர்வுகளால் சூழ்ந்திருகிறதேன்று நாம் அறிந்ததே..

அப்படி என்றால் அந்த அதிர்வுகளை எதோ ஒன்னு அதிர செய்கிறது  அகாரம் உகாரம் மகாரமாக (அ+உ+ம்) எனும் பிரணவ மந்திரமாக இசைகிறது...

ஒலி கோர்வைகளின் நடனங்களே இசை...

கருகூடந்தை கொண்டவள் காலனனுடன் இணைந்து பிரபஞ்சத்தை உருவாக்கினால் என்று பல முறை பாத்தோம்.

இன்று இவர்களின் புதழ்வன் ஒலியை பற்றி...

ஒலிக்கு உடல் கொடுத்து உயிர்கொடுத்து தனக்குள்ளே ஒருவத்தி வளர்த்துக் கொண்டிருக்கிறாள்..

இன்னும் எளிமையாக சொல்லனும் என்றால் water vibration பத்தி யோசிங்க..

எப்படி நீரில் அதிர்வலைகள் அதிர்ந்து கொண்டிருக்கோ ஒலி எழுப்பினால் அதே போல இந்த கருகுடத்திலும் ஒலி அதிர்ந்து கொண்டிருக்கு சூழன்று கொண்டே தன்னோட பிள்ளைகளை உட்கொண்டே இவனும்...

(ஆனால் ஓம் னு வாரது அது முடிவில்லாமல் ஒலித்துக்கொட்டிருக்கும் ஒலி ம் வச்சு முடியாது நாம தான் முடிக்கிறோம் பிரபஞ்சம் இல்லை)...

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்...


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி...

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது...

எந்த செயலிகளிலும் உங்களது புகைப்படங்களை பதிவிடாதீர்கள்...


ஏனெனில் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பெண்களின் புகைப்படத்தையும் அங்குள்ளவர்களின் புகைப்படத்தை இங்கேயும் பதிவிடுகிறார்கள்.

விழிப்புணர்வு கருதியே இப்பதிவை பதிவிடுகிறோம்...

கர்நாடகா: மைசூருவில் கோயில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழப்பு...


பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்தன...

பாஜக மோடி கலாட்டா...


பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை - கன்னட ஈ.வே.ரா பக்தர்...


அப்டியாப்பா?அதிகாரிச்சி அப்டினா என்னவென்று தெரியுமா?

1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள் தான் அதிகாரிச்சி.

அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி உலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து  கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.

உங்கள்  பெண்ணுரிமை கருத்துகளான...

கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல்

போன்றவற்றை உங்கள் திராவிடர்களான தெலுங்கர்.. கன்னடர்.. மலையாளி களிடம் போய் பரப்பவும்...

படம்: ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவி (அகமதாபாத் அருங்காட்சியகம்)...

தூக்கி எறியுங்கள் அவன் நோய் பரப்பும் சோப்புகளை...


குறிப்பு: ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


சென்ற பதிவில் பார்த்த பலூசிஸ்தான் ஸ்பின்ஸ் கட்டமைப்புக்கு அருகில் சற்று தொலைவில் மற்றொரு முக்கிய அமைப்பு உள்ளது.

தூரத்தில் இருந்து இதை பார்க்கும் போது, இது ஒரு இந்து கோயில் (தென்இந்தியா போன்று), ஒரு மண்டபம் (நுழைவு மண்டபம்) மற்றும் ஒரு விமானம் (கோவில் கோபுரம்) ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. விமானத்தின் மேல் பகுதி சிதைந்து உள்ளது. மேலும் கோவிலின் முன்பகுதியில் இந்த ஸ்பின்ஸ் சிலை , புனிதமான தளத்தின் பாதுகாவலராக #யாளி சிலை போல செயல்படுகிறது.

புராதனமான, புனிதமான கட்டிடத்தில், இந்த சிம்ம சிலைகள் பாதுகாப்புக்கான செயல்பாட்டையே குறிக்கும், பொதுவாக கோவில்கள், கல்லறைகள் மற்றும் புனித நினைவுச்சின்னங்களுக்கு நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ஒரு ஜோடி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். பண்டைய நாகரிகம் அனைத்திலும் இந்த பாதுகாவலர்களை பார்க்க முடியும்.

எகிப்தில், சிம்ம உடலில் மனித தலையுடன். கிரேக்கத்தில், சிம்ம உடலில் ஒரு பெண்ணின் தலையையும், கழுகின் இறக்கை, மற்றும் பாம்பின் வாலுடனும்.
இந்திய கலை மற்றும் சிற்பத்தில் பல வகை யாளிகளாகவும்,
தென்கிழக்கு ஆசியாவின் குறிப்பாக சீனா, ஜப்பானிய புத்த கட்டிடக்கலையில் இவைகள் மானுஷியா என்று அழைக்கப்படுகிறார்கள்.

எனவே, பண்டைய உலகெங்கிலும், சிங்கங்கள் புனிதமான இடங்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டன. ஒருவேளை தற்செயலாக, பலூசிஸ்தானின் ஸ்பின்சும் அதற்கு அருகிலுள்ள கோவில்-போன்ற அமைப்புக்கு காவலாக இருப்பதாக தோன்றுகிறது. இந்த தளம் புனித கட்டிடக்கலை கொள்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

பலூசிஸ்தான் உள்ள மர்மமான பாறைகளில் மீது  செதுக்கப்பட்டிருக்கும் தூண்களின் தெளிவான ஆதாரங்களை படத்தில் பார்க்கலாம்.. ஆலய நுழைவு வாயில் போன்ற அமைப்பை, அந்த பாறைகளின் மய்யத்தின் கீழ் காணப்படுகிறது. நுழைவாயிலின் இடதுபுறத்தில் உயரத்தில், செதுக்கப்பட்டுள்ள கட்டமைப்பு, சன்னதிகள் போன்று காட்சியளிக்கிறது.

கோவிலின் நுழைவுக் கோபுரங்கள் மேல் அலங்கார கலசங்கள் வரிசையாக உள்ளது போன்று அமைக்கப்பட்டிருக்கின்றன.
உண்மையிலேயே இந்த சிதைந்த அல்லது தொடக்கத்திலேயே கைவிட்ட கோவில் எந்த நாகரீகம் கட்டியெழுப்ப முயன்றது!?.

இந்த பள்ளத்தாக்கு நாகரிகம் மாகான் கடற்கரையுடன் நீட்டிக்கப்பட்டது, அதன் மேற்குப்பகுதி தொல்பொருள் தளம் ஈரானிய எல்லைக்கு அருகே சட்சேன் டோர் என்று அறியப்படுகிறது. ஸ்பின்ஸ் கோவில் வளாகம் உள்ளிட்ட சில கோவில்களும், கல்வெட்டு சிற்பங்களும் சிந்து சமவெளி காலத்தில் (கி.மு. 3000 ) அல்லது அதற்கு முன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தோன்றுகிறது.
இந்திய நாகரிகத்தின் தொடர்ச்சியான மர்மங்களில் ஒன்று சிந்துவெளி நாகரீகம்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இந்த புனிதமான வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு, திறமைகள் மற்றும் நுட்பங்கள் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையவை அல்லவா? அது சிந்து சமவெளி நாகரீகத்திற்கே பொறுந்தும்.  மக்ரான் கரையோரத்தின் மீது சிந்து கைவினைஞர்கள் தங்கள் திறமைகளை மென்மையாக்கிக் கொண்டது, அவை பின்னர் இந்திய நாகரிகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை நாம் அறிவோம். சிந்து காலத்தில் கட்டடக்கலை வடிவங்கள் மற்றும் நுட்பங்கள் மற்றும் பிற இந்திய நாகரிகம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள கட்டிடகலைகளுக்கு தொடர்புடையதே. குறிப்பாக தென்னிந்திய கலைபடைப்புகளுக்கு.

'மக்ரான்' என்ற வார்த்தை பாரசீக மாக்கி-கோரான் 'ஊழியர்' என்று பொருள்படும் சில சமயங்களில் ஊழல் ஆகும். ஆனால், இந்த பெயர் திராவிட மொழி 'மாகாரா'வில் இருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. சீன யாத்ரீகர் ஹூயன் சாங் 7 ஆம் நூற்றாண்டில் மக்ரனைப் பார்வையிட்டபோது இது நூற்றுக்கணக்கான பௌத்த மடாலயங்கள் மற்றும் குகைகள் மற்றும் பல நூறு இந்து கோவில்கள், சிவனின் சிற்பமான செதுக்கப்பட்ட கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக கூறுகிறார்.

இந்த குகைகள், கோயில்கள் மற்றும் மக்ரன் கடற்கரையின் மடாலயங்கள் என்ன நடந்தது? ஏன் அவர்கள் இதை மறுபடியும் புதுபிக்கவில்லை? ஒருவேளை இயற்கையின் கட்டுப்படுத்தப்பட்டு, உஷ்ணத்தினால் மூடப்பட்டிருக்கும் இந்த பண்டைய நினைவுச்சின்னங்கள் முற்றிலும் இயற்கை அமைப்புகளாகவே கடந்து வந்தனரா?

இந்த சிதலங்களுக்கு பெரும்பாலும் சுனாமியே காரணம். 1945, நவம்பர் 28 ல் ஒரு பயங்கர நிலநடுக்கம் மக்ரான் கரையோரத்தின் மையப்பகுதியில் ஒரு சுனாமியுடன் ஏற்பட்டது, அலைகள் சில இடங்களில் 13 மீட்டர் உயரமாக இருந்தனவாம். இது அன்றைய இயற்கை பேரழிவுக்கு ஒரு சான்று. கூடுதலாக, மக்ரான் கடற்கரையோரத்தில் ஏராளமான மண் எரிமலைகள் உள்ளன, அவற்றில் சில ஹிங்கோல் நதி டெல்டா அருகே அமைந்துள்ளது.

பல பூகம்பம் நிகழ்ந்ததால் எரிமலைகள் வெடிப்புகளை தூண்டிவிட்டு, கொந்தளிப்பான அளவு மண் அனைத்தையும் கவந்து, சுற்றியுள்ள அனைத்தும் அவற்றில் அழிக்கப்பட்டது. சில நேரங்களில், மக்ரான் கரையோரப் பகுதிகள் அரபி கடலில் எரிமலை தோன்றும். அவை ஆண்டு ஒன்றிற்குள் அலைகளைத் தூண்டிவிடும். சுனாமிகள், மண் எரிமலைகள்  ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் தளம் சிதலமானது.நாம் காண்பதும் அழிந்த எஞ்சியவற்றை தான்.

சந்தேகத்திற்கு இடமின்றி, பலூசிஸ்தானின் மக்ரான் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் அதிசயங்கள் ஒரு மெய்நிகர் புதையல். துரதிருஷ்டவசமாக, இந்த அற்புதமான நினைவுச்சின்னங்கள், அதன் தோற்றங்கள் அறியப்படாத பழங்காலத்திற்கு செல்கின்றன, தனிமைப்படுத்துவதில் தொடர்கின்றன. அவற்றை அங்கீகரிக்க அல்லது மீட்டெடுக்க சிறிய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பத்திரிகையாளர்கள் வழக்கமாக 'இயற்கையான அமைப்புகளாக' ஆகிவிடுகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்துக் கொண்டால் நிலைமை மீட்கப்படலாம், மேலும் உலகம் முழுவதும் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (மற்றும் சுயாதீன ஆர்வலர்கள்) குழுக்கள் ஆராய்ச்சி, மீட்பு மற்றும் ஊக்குவிக்க இந்த புதிரான நினைவுச்சின்னங்களைப் பார்க்கின்றன.

மக்ரான் கடற்கரையின் இந்த பண்டைய நினைவுச்சின்னங்களின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்டவை கிடையாது. காரணம் அவர்கள் பழங்காலத்தில் இருந்தவர்கள், பாறைகளில் காணப்படும் வடிவங்கள் கொண்டே இந்த ஆய்வுகள். இதை தவிர மனிதகுலத்தின் மர்மமான கடந்த காலத்தை கால இயந்திரத்தில் பயணிப்பதன் மூலமே கண்டுபிடிக்க முடியும் போல...

வாழ்க்கை வாழ்வதற்கே


சுடரை உணர்வதும் ஒரு உணர்வில் கலந்த ஒன்று தான்...

உணருங்கள் தினமும் ஒவ்வொரு இடத்திலும்...

வாழ்க்கை வாழ்வதற்கே...

தமிழ்நாட்டு மலையை வெட்டி 380 டன் மகாவிஷ்ணு சிலையை கர்நாடகாவுக்கு லாரியில் எடுத்து செல்லும் வழியில் வீடுகள், சாலைகள் சேதம்...


காவி எதிர்ப்பு பெரியார் தொண்டர்கள் இதையல்லவா அடித்து நொறுக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் மதவாதத்தை எதிர்க்க கிளம்பிய திமுக இதையல்லவா தடுத்து நிறுத்த வேண்டும்?

ஈழ விடுதலை வாங்கி தர போகும் புலிகள் இந்த கல்லை தொடக்கூட குலை நடுங்கும் புளிகளா?

ஆண்ட பரம்பரை தன் மலை வெட்டி எடுக்கப்படுவது, சாலைகள், வீடுகள் உடைக்கப்படுவது கண்டு கொதிக்க வேண்டாமா?

இது போல் ஒரு செங்கல்லையாவது கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலிருந்து எடுத்து வர முடியுமா?

இயக்கங்கள் கட்சிகள் செல்லாக்காசான தமிழ்நாடு...

பாஜக வின் போலி புகைப்படங்களுக்கு முடிவே இல்லையா?


பா.ஜ.கவின் தேசியச் செயலர் திரு. எச். ராஜா அவர்கள் ராம்பிரசாத் சுப்பிரமணியன் என்பவருடைய பதிவை தன்னுடைய டைம்லைனில் பகிர்ந்திருக்கிறார். அதில் காங்கிரசில் முதல்வரைத் தேர்வுசெய்வதற்காக நடந்த கலவரம் என்று கூறி ஒரு படம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உண்மையில் அந்தப் படம் 2017 செப்டம்பரில் ஹரியானாவில் நடந்த ஒரு கலவரத்தின்போது எடுக்கப்பட்ட படம். தேசா சச்சா சவுதாவின் தலைவர் ராம் ரஹீம் சிங் ஒரு பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டபோது கலவரம் வெடித்தது.

கலவரம் செய்தவர்கள் குறித்த புகைப்படத்தை ஹரியானா காவல்துறை வெளியிட்டது. அதில் ஒரு படம்தான் இது. அப்போது ஹரியானாவில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.கவின் மனோகர்லால் கட்டர்.

பா.ஜ.க. ஆண்ட மாநிலத்தில், ஒரு பலாத்கார சாமியாருக்காக நடந்த ஒரு கலவரத்தில் எடுக்கப்பட்ட படத்தை, காங்கிரஸ் முதல்வர்களைத் தேர்வுசெய்யும்போது இத்தாலிய அடிமைகள் நடத்திய கலவரம் என்று கூறி  ஒரு தேசியத் தலைவர் பகிர்கிறார்...

நாளை மலரப்போகும் தமிழர் ஆட்சியில்...


ஒரு விசியத்தை நமக்கு பிடிக்காதவன் செஞ்சா அதை ஏசுரறுதும், பிடிச்சவன் தவறே செஞ்சாலும் அதை கண்மூடித்தனமா கொண்டாடுறதுமே ஊடகங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பெரிய பார்வைக்கோணம்

கடந்த காலத்தில் எவனை தலைவனா காட்டி, அவன் பேச்சுக்கு கைத்தட்ட வைத்து, நமக்கெதிரானதை அரங்கேற்றிட்டு அவனை கெட்டவனாக்குனானோ, அதே நுட்பத்தை இந்த தவைமுறையிடமும் பயன்படுத்துறான்..

தற்போதைய தலைமுறையில் தமிழன் என்ற பெருமையும் தூண்டிவிடப்பட்டு ஆள்வோனே வேறு பரிமாணத்தில் அரியணை ஏறுவான், அன்று உனக்கெதிரானதும் நன்மையாகவே புலப்படும்..

ஏன், இன்னைக்கு ஸ்டெர்லைட்டை எதிர்க்குறவன் கூட நாளை, ஊழியால் அழிந்து போன கொடுமணல் நகரில் பண்டைய காலத்தில் இரும்பு எடுத்ததை எண்ணி பெருமையால் பெருமைக்காக அந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்வான்..

அன்றும் வணிகன்..
இன்றும் வணிகன்..

இவை நடத்தப்படும் ஏனெனில் இதுவே ஆள்வோனின் அடுத்த அற்புத ஆயுதம்..

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது..

சூழ்நிலை மாறினும் சூழ்ச்சிகள் மாறப்போவதில்லை...

தமிழன்டா எந்நாளும் (பாடலை கேளுங்க)...

புற்று நோய்க்கு வித்தாகும் தேயிலை பேக்...


தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.

இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம்...

டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது.

இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது.

மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது.

இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது...