13/08/2021

அதிசய கிளிப் பூ...

 


இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது..

ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை.

அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ..

வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் 'பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா.?

 




சிறகுகள் மட்டும் இருந்திருந்தால்
உன்னையும் சேர்த்து இருப்பார்கள்
தேவதையாக விண்ணுலகத்தில்...

பரவாயில்லை..

இப்போதும் நீ தேவதை தான்
இந்த மண்ணுலகத்தில்...

4 ஆண்டுகளாக தினமும் பஸ்சில் சவாரி செய்த பூனை...


இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சூசன் பின்டேன்.

இவர் கேஸ்பர் என்ற 12 வயது பூனையை வளர்த்து வந்தார்.

இந்த பூனை அந்த நகர மக்கள் அனைவருக்கும் செல்ல பிராணியாக இருந்தது.

இது தினமும் காலை 10 மணிக்கு வீட்டு அருகே வரும் பஸ்சில் ஏறி, இலவச பயணம் செய்யும்.

அந்த பஸ் நகரின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டு அருகே திரும்ப வரும்.

அப்போது அது இறங்கிக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 15 கி.மீ. தூரத்துக்கு அது தினமும் இலவச பஸ் பயணம் செய்யும்.

பஸ் ஏறும்போது பஸ் நிறுத்தத்தில் கூட்டம் இருந்தால் அது வரிசையில் நின்று தான் பஸ்சில் ஏறும்.

வழக்கமாக கடைசி இருக்கையில் தான் அது உட்காரும்.

நாள் தவறாமல் கடந்த 4 ஆண்டுகளாக அது பஸ் பயணம் செய்து வந்தது.

சரியான பஸ் நிறுத்தத்தில் அது இறங்கி சென்று விடும்.

சம்பவத்தன்று அது பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதியது.

இதில் அடிபட்டு காயம் அடைந்த அந்த பூனை இறந்து போனது...

20.01.2010 அன்று இவ்வுலகை விட்டு சென்றது...

ஃப்ளிப்கார்ட் எனும் பிராடு நிறுவனம் தொடர்ந்து மோசடி...

 


தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்...

 




கலாநிதி பாலசிவகடாட்சம் இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில் விவசாயத் துறை உயிரியல் (Agricultural Biology) பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர்.

தமிழ் மருத்துவர் அல்லாத இவர் தமிழ் மருத்துவத்தைப் பற்றி எழுதியுள்ளதிலிருந்து இவரின் திறமையைப் பற்றி அறியலாம்.

பல்கலைக் கழகத்தின் புலமையாளர்களிடம் அவற்றைப் பற்றிய நன்மதிப்பு நிறைந்திருந்தது.

தமிழர் மருத்துவத்தில் தனிச் சிறப்புகளைப் பழம் பாடல் விளக்கத்துடன் கூறுவதோடு சித்த மருத்துவத்தின் மேன்மைகளை சுவைபடக் கூறியுள்ளார்.

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் எளிய மருத்துவ முறைகளையும் இந்நூலின் விளக்கியுள்ளார்.

சமுதாயத்திற்கே பயன்தரும் நூல் இது. ஒவ்வொரு தமிழர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அற்புத நூல் இது.

இந்நூலில் நான்கு பகுதிகள் உள்ளன.

(1) தமிழ் மருத்துவத்தின் வரலாறு

(2) உணவே மருந்து

(3) வீட்டு வைத்தியம்

(4) மூலிகை ஆய்வு

ஒவ்வொரு பகுதியும் தமிழரின் அறிவுத்துறை வளர்ச்சி பற்றியும் சிந்தனை வளர்ச்சி பற்றியும் மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

இந்நூல் தமிழ் வாசகர்களின் உடல்களிற்கு மாத்திரமல்லாமல் உள்ளங்களுக்கும் நன்மருந்தாக அமையும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி
அவர்களின் முன்னுரையிலிருந்து...

நூலாசிரியர் : கலாநிதி பால சிவகடாட்சம்
B.Sc. Hons.Srilanka, B.Ed. (Toronto),
Ph.D.(London), D.I.C
வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
விலை : ரூ. 130/-

தமிழக ஊடகங்கள் திருந்துமா..? 🙄

 


கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...

 


தலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா?

இது உண்மைதான் நம்புங்கள்..

ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.

உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டு பிடித்து விட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள்.

தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை.

இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.

அதுமட்டுமா?

ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை. பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும்.

எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை...

நீதித்துறை கலாட்டா...

 


திருட்டு திமுக கலாட்டா...

 


ஆயுத எழுத்தின் சிறப்பு....

 



கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் முதற்பாடலிலேயே ஆயுத எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் நூன்மரபு சூத்திரம் -1

எழுத்துக்களின் வகை..

1. எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன
குமரிக்கண்டத்தில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் பெயர் பஃறுளியாறு..
என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது.
ஒரு போர் வீரனின் கேடயம் எஃகினால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில்  இருக்கும்.
அதன் பின் பக்கத்தில், பிடிப்பதற்கென ஒரு கைப்பிடி இருக்கும். முன்பக்கத்தில் மூன்று குமிழிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இருக்கும்.
போர் நடக்கும் சமயங்களில் இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கும் போது, அந்த மூன்று குமிழிகள் போன்ற கடும் பகுதிகள், பகைவனது மார்பின் மீது திரைப்படங்களில் வருவதைப் போல இடித்துத் தாக்கும்.
(அந்த நொடியில் அவன் தொண்டைக் குழியிலிருந்து "ஃ" என்ற முக்கல் ஒலி தானாக எழும் )
அந்த கேடயம் என்ற ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும்  ஆய்தம் எனப் பெயர் பெற்றது.
அந்தக் கேடயத்தால் எதிரியின் மார்பை இடித்து தாக்கும் போது, அவன் வாயிலிருந்து என்ன ஒலி எழுமோ, அதுவே அந்த எழுத்திற்கான உச்சரிப்பாகவும் இருப்பது வியப்பை அளிக்கிறது...
பிற எந்த மொழியிலும் இதற்க்கு இணையான உச்சரிப்பை கொண்ட எழுத்து கிடையாது என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்றாகும்...
ஆனாலும் சிலர், இந்த ஆயுத எழுத்தானது மிகவும் பிற்காலத்தில்தான் வழக்கிற்கு வந்தது ஆய்வு செய்து எழுதியும் இருக்கிறார்கள்...
அவர்கள் எதை ஆய்வு செய்தார்கள், எப்படி ஆய்வு செய்தார்கள்  என்பது புரியாத புதிராகவே இருக்கிறது...
(அப்படியே இருந்துவிட்டு போகட்டும்)
ஆயினும், தொல்காப்பியம் எழுதப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது என்பதை நாம் அறிவோம்.
குமரிக்கண்டத்தை கடல்கொண்டு மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிறது.
அங்கே ஆயுத எழுத்தை தனது பெயரில் கொண்டிருந்த பஃறுளி ஆறு அமைந்திருந்தது.
அப்படியானால், எந்தக் காலத்திளிருந்து வாளின் பயன்பாடும் கேடயத்தின் பயன்பாடும் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்திருக்க கூடும் என்பதை எடுத்துக் கூறும் ஆயுதமாக இருப்பதே இந்த ஆயுத எழுத்தின் வியப்பிற்குரிய சிறப்பாகும்...

121கிலோ வெண்டைக்காயை 14 ரூபாயக்கு விற்று விவசாயி சாதனை...

 


கேட்க நாதியற்றவன் விவசாயி.

வல்லரசை நோக்கி..