13/08/2021

தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்...

 




கலாநிதி பாலசிவகடாட்சம் இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில் விவசாயத் துறை உயிரியல் (Agricultural Biology) பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர்.

தமிழ் மருத்துவர் அல்லாத இவர் தமிழ் மருத்துவத்தைப் பற்றி எழுதியுள்ளதிலிருந்து இவரின் திறமையைப் பற்றி அறியலாம்.

பல்கலைக் கழகத்தின் புலமையாளர்களிடம் அவற்றைப் பற்றிய நன்மதிப்பு நிறைந்திருந்தது.

தமிழர் மருத்துவத்தில் தனிச் சிறப்புகளைப் பழம் பாடல் விளக்கத்துடன் கூறுவதோடு சித்த மருத்துவத்தின் மேன்மைகளை சுவைபடக் கூறியுள்ளார்.

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் எளிய மருத்துவ முறைகளையும் இந்நூலின் விளக்கியுள்ளார்.

சமுதாயத்திற்கே பயன்தரும் நூல் இது. ஒவ்வொரு தமிழர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அற்புத நூல் இது.

இந்நூலில் நான்கு பகுதிகள் உள்ளன.

(1) தமிழ் மருத்துவத்தின் வரலாறு

(2) உணவே மருந்து

(3) வீட்டு வைத்தியம்

(4) மூலிகை ஆய்வு

ஒவ்வொரு பகுதியும் தமிழரின் அறிவுத்துறை வளர்ச்சி பற்றியும் சிந்தனை வளர்ச்சி பற்றியும் மிக ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

இந்நூல் தமிழ் வாசகர்களின் உடல்களிற்கு மாத்திரமல்லாமல் உள்ளங்களுக்கும் நன்மருந்தாக அமையும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி
அவர்களின் முன்னுரையிலிருந்து...

நூலாசிரியர் : கலாநிதி பால சிவகடாட்சம்
B.Sc. Hons.Srilanka, B.Ed. (Toronto),
Ph.D.(London), D.I.C
வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
விலை : ரூ. 130/-

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.