மாந்திரீகத்திற்கு என்று அடிப்படை கோட்பாடுகள் உள்ளது. மாந்திரீகத்தில் மந்திரம், தந்திரம், எந்திரம் என்ற மூன்று அடிப்படையைச் சார்ந்ததாக உள்ளது. மந்திரம் என்பதை மந்திரம் என்ற பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளோம். இந்திய மாந்திரீகத்தில் பில்லி, சூனியம், ஏவல், மறைப்பு, வைப்பு மற்றும் அஸ்டகர்மங்கள் கூடிய அங்கமாக உள்ளது. தற்கால அறிவியல் இவற்றை மூடத்தனம் என்று கூறினாலும் உலகால் அறியப்படாத பல விசயங்களை அறிவியல் கண்பிடிக்க முடியாமல் இருக்கிறது.
இன்று அறிவியலாக இருப்பது நாளை அறிவியலாக இருப்பதில்லை. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை. உண்மையில் ஆன்மீகமும், அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது. இத்தகைய மாந்திரீகத்திற்கு என்று தனிக் கோட்பாடுகள் உள்ளது. இத்தகைய கோட்பாடுகளை இங்கு பார்ப்போம்.
மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும். இந்த அறிய சக்தியை அவர் பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது. உடலில் இயங்குதசை, இயக்குதசை, இயங்காதசை, இயங்கிஇயக்குதசை என்று நான்கு வகையுண்டு. இந்த நான்கையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடியும்.
இயங்குதசை:- இருதயம் ஒரு இயங்குதசையாகும். அது எப்பொழுதும் துடித்துக் கொண்டே இருக்கும். அதன் வேகத்தை இயற்கைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது தியானமாகும்.
இயக்குதசை:- கை, கால், கண், வாய் ஆகியவைகள் இயக்குதசையாகும். இவைகள் நமது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுபவை. கால்களை ஆசனங்கள் மூலம் ஒருமைப்படுத்துவதும், கைகளை முத்திரைகள் மூலம் ஒருமைப்படுத்துவதும் வேண்டும்.
இயங்கி இயக்கு தசை:- நம் உடம்பில் உள்ள சில தசைகள் இயங்கவும் செய்யும், நம் இயக்கத்திற்கும் கட்டுப்படும். உதாரணமாக நம் மூளையை சொல்லலாம்.
பொதுவாக ஒரு மனிதன் தன் முயற்சியால் ஒரு நிலத்தை தோண்டி அதில் விதையை விதைக்கிறான். அந்த விதை முளைப்பதற்கு அவனுடைய சக்தியோ, அல்லது அறிவியல் சக்தியோ உபயோகப்படாது. அதற்கு ஒரு மறைமுக பிரபஞ்ச சக்தி தேவை. அந்த மறைமுக உயர் பிரபஞ்ச சக்தியை தான் கடவுள் என்கிறோம். கடவுளின் தன்மையை முப்பரிமாணத்தில் காணப்படுகிறது. கடவுள் உருவாக்குகிறார், நடத்துகிறார். முடிவிற்கு கொண்டு வருகிறார். இம்மூன்றும் கடவுளின் வேலையாக கூறப்படுகிறது. இம்மூன்று தொழிலைச் சார்ந்து மனிதனின் வேண்டுதல் அமைகிறது. அந்த வேண்டுதல் நன்மையைக் கொடுப்பதாகவும், தீமையை உருவாக்குவதாகவும் அமையலாம்.
மாந்திரீக தாந்திரியங்கள்...
தாந்திரியங்கள் என்ற உடன் இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்று கைபிரட்டு வேலை அடுத்தது தாந்திரிக வழிபாட்டு மூலம் தெய்வங்களை தன் வழிக்கு கொண்டு வந்து செயல்படுத்த வைக்கும் விதமாகும்.
தந்திர கைபிரட்டு வேலை...
ஒரு மந்திரவாதி தன்னை நம்புவதற்காக அவர்கள் செய்யும் தந்திர ஜாலங்கள் ஆகும். இவை தனது கூறிய அறிவின் மூலமாக அடுத்தவர்களை ஏமாற்றும் ஜாலமாகும். வாயில் லிங்கம் வரவழைப்பதில் இருந்து ரோட்டில் வித்தை காட்டும் தந்திரவாதி செய்யும் பல காரியங்கள் இந்த கைபிரட்டைச் சார்ந்ததாக அமைகிறது. சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் இத்தகைய கைபிரட்டுகள் ஒரு பயத்துடன் கூடிய நம்பிக்கையை உருவாக்குகிறது. உதாரணமாக ஒருவர் மந்திரவாதி கொடுத்த பழத்தை உரித்த பொழுது அந்த பழம் துண்டுதுண்டாக பிரிந்து விழுந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். அதை உருவாக்க அந்த மந்திரவாதி அந்த முழு பழத்தை முன்னாலே ஒரு ஊசியைப் பழத்தில் குத்தி அந்த பழத்தை முழுசாக வைத்தே அறுத்துவிட்டார். இதேபோன்று பல வித்தைகள் உண்டு. திருநீர் வரவழைப்பது, வாயிலிருந்து இரத்தம் கக்க வைப்பது, கையில் பூ வரவழைப்பது போன்றவையாகும்.
தந்திரயோகம்...
தந்திர யோகத்தின் மூலம் தெய்வீக சக்தியை எளிதில் அடைவதற்கு உரிய தந்திரமுறைகள் ஆகும். சிவ அம்சத்தில் திரு மந்திரம் என்ற தமிழ் நூலில் பஞ்ச அச்சரங்களைக் கொண்டு எவ்வாறு ஆன்மீக சக்தியைப் பெறலாம் என்று 24வகை தந்திர முறைகள் உள்ளன. மகாமேரு உபாசனையும் ஒரு தந்திர முறையாகும். குலத்தந்திரம், ஊதாபுத்தர் தந்திரம் போன்ற பல தந்திர முறைகள் உள்ளன. இவைகளில் சிறந்தது சிவ அச்சர தந்திரமும், மகாமேரு தந்திரமும் ஆகும். சிவ அச்சர தந்திரமாகிய சிவாயநம என்ற ஐந்து அச்சரங்களும் நமது உடலில் உள்ள ஐந்து விதமான சக்தியின் கேந்திரமாகும்.
கடவுள் உருவாக்குகிறார்...
மனிதன் தனக்கு வாரிசாக ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்று எண்ணுகின்றான். அதே நேரத்தில் அதிகம் குழந்தை உள்ளவனோ தனக்கு குழந்தை தேவை இல்லை என்று எண்ணுகின்றான்.
கடவுள் வழி நடத்துகிறார்...
கடவுள் வழி நடத்துவது தனக்கு பொருளாதாரத்தில் சிறப்பான வழி நடத்தல் தேவை என்று நினைக்கின்றான். வேறு சிலரோ அமைதியான மன நிறைவான வாழ்க்கை தேவை என்று நினைக்கின்றான்.
முடிவிற்கு கொண்டு வருகிறவர்...
பல நல்ல காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. அதே நேரத்தில் தீய காரியங்கள் தீமையாக முடிவிற்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களும் உண்டு.
அறியாமை,இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள் மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது.
இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம்.
இத்தகைய மாந்திரீகத்தில் இரண்டு வகையான வேண்டுதல்கள் உள்ளன.
ஒன்று ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும்.
ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச் செய்வது ஒரு வகையாகும்.
தான் விரும்பியப் பெண்ணை அடைய வேண்டும் போன்ற காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது வகையாகும்.
பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே இருக்கும்...