பெரியார் என்ற பொய்யரை, அவர் விதைத்த திராவிட கொள்கையை வீழ்த்துவோம். கன்னட ஈவே ரா நாயக்கரின் திராவிட சாதனையே தமிழரின் வேதனை...
இந்தியாவிலேயே சாதி ஒழிப்பு, பார்பன எதிர்ப்பு கடவுள் மறுப்பு என்று முற்போக்கு சிந்தனைகளுக்கு முன்னோடியாக உள்ள தமிழர்கள் கண்ணெதிரே தான் பல இலக்கத்தில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழீழத்தில் நடந்தேறியது.
போரில் மக்கள் கொல்லப்படும் முன்பும், கொல்லப்படும் போதும்,கொல்லப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்பும் மயிரிழை அளவிற்கு கூட இன்றளவும் தமிழர்களிடத்தில் எழுச்சி இல்லை..
இதற்கு காரணம் தமிழினத்திற்கு எதிராக ஈ வே ராமசாமி நாயக்கர் விதைத்த திராவிட கருத்துக்களும் அவர் வழி வந்த திராவிடர்களும், திராவிட அரசியல் செயல்பாடு களேயாகும்.
தனது தொடர் உழைப்பின் மூலம் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, பார்பனர்களை ஒழிப்பதாக கூறிய ஈ.வே.ரா இறுதியில் இவைகளை ஒழிக்க முடியாமல், தமிழர்களின் மொழி இனப்பற்றை முழுமையாக துடைதொழித்து விட்டார். அதனால் தமிழர்களின் உயிராக இருந்த தமிழினப் பற்று அழிந்து கடை கோடியில் இருந்த சாதிப் பற்று இன்று முதன்மையாகி தமிழினத்தை அழித்து வருகிறது..
தமிழ் மொழியை கற்காதே, தமிழனாய் எண்ணாதே, பழம் பெருமையை பேசாதே., தமிழனாய் வாழாதே என்ற ஈ வே ராமசாமி நாயக்கரின் பரப்புரைக்கு அடிமையான தமிழர்கள்.. அவரின் கொள்கையான ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, தமிழ் மொழியினப் பற்றை துறந்து மனிதனாக வாழ துவங்கியதன் விளைவு இன்று தாய்த் தமிழில் உரையாடுவவதையும், தமிழின சிக்கலுக்காக உரிமை குரல் எழுப்புவதையும் அதற்காக போராடுவதையும் மறந்து சாதித் தமிழனாக தன்னலம் மிகுந்த தமிழினமாக மாறியுள்ளனர்..
உடலை கொடுத்து உயிரை பறித்த கதையாக திராவிடக்கொள்கை என்ற நஞ்சுக் கருத்துக்களை விதைத்து, தமிழினப் பற்று என்ற உயிரை பறிப்பதற்காக தன் இறுதி காலம் வரை போராடிய ஈ வே ராமசாமி நாயக்கரை பெரியார் என்று கூறுவது தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இழுக்கல்லவா?
இந்தியாவில் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பார்ப்பனப் பற்று என அனைத்தும் கூடுதலாக ஏன் வெறியாக உள்ள மாநிலங்களில் எல்லாம் அந்த இனத்தை சார்ந்தவரே ஆள முடிகிறது.. அம் மக்களின் உரிமைக்காக ஒற்றுமையாக போராட முடிகிறதே எப்படி?
காரணம் அங்கு சாதி,மதத்தை விட இனப் பற்று மேலோங்கி இருப்பது தான்.
உலகில் எங்குமே இல்லாத வியக்கத்தக்க செயலாக இங்கு மட்டுமே 2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட திராவிட இனம் 98 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அடிமையாக இறுத்தி ஆண்டு வருகிறது .
தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக ஈ வே ராமசாமி நாயக்கரையும் அவரின் திராவிட கொள்கைகளையும் முன்னிறுத்தி. அதன் மூலமாக தமிழர்களின் ஒரே தலைவராக பெரியாரை நிலை நிறுத்தி வருகிறார்கள். தமிழ் மொழியினப் பற்றை அழித்து தமிழிய சிந்தனைகளை வளர விடாமல் தடுத்து பாதுகாத்து வருகிறார்கள்.
“தமிழ்நாடு தமிழருக்கே” என்று சோமசுந்தர பாரதி முழங்கிய முழக்கத்தை, அடுத்த ஒரு திங்களில் தனதாக்கி கொண்ட ஈ வே ராமசாமி நாயக்கர், அந்த கருத்தை அதன் தாக்கத்தை மழுங்கடித்து, வெறும் பேச்சளவில் கொண்டு மீண்டும் தனது இறுதி மூச்சு உள்ளவரை திராவிட கொள்கைகளை பரப்புரை செய்து தனது திராவிட பற்றை காட்டுகிறார்.
இங்குள்ள திராவிட தலைமைகள் யாரை முதன்மை யான தலைவராக போற்றி கொண்டாடுகிறார்களோ , நிலை நிறுத்துகிறார்களோ அவர்களே தமிழர்களின் எதிரிகள் என்ற எளிமையான புரிந்துணர்வு இருந்தாலே நாம் வென்று விட முடியும். ஈ வே ரா இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரை போற்ற வேண்டும்..
தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஈ வே ரா சிலைகளை அகற்றி அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் தமிழர்களுக்கான தலைவராக தேசியத் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்த வேண்டும்..
ஈ.வே.ரா விதைத்ததே திராவிடம். ஈ.வே.ரா வை அடித் தளமாக கொண்டே திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது..
திராவிடத்தின் உயிர் நாடியாக ஈ.வே.ரா வின் தமிழின எதிர்ப்பு கருத்துக்களையும், கொள்கைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு அதனைப் புகழ் பாடி, தமிழர்களை முட்டாள்களாக திராவிட அரசியல் தலைமைகள் உருவகப் படுத்துகின்றனர்.
எனவே ஈ வே ரா என்ற அடித்தளத்தை வீழ்த்தாமல் திராவிட அரசியலை வீழ்த்த முடியாது. தமிழன் ஆட்சிக் கட்டிலில் ஏறவும் முடியாது..
தமிழின ஒற்றுமையை பற்றி பேசினால் சாதியை ஒழித்து விட்டு பிறகு பேசலாம் என்று ஈ வே ரா வின் கொள்கையை முன்னிருத்துகிறார்கள். இல்லாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள்.
சாதியை ஒழிப்பதற்கு 50 அல்லது 100 அல்லது 500 அல்லது 5௦௦௦ ஆண்டுகள் போதுமா என்றால் அதற்கு யாரிடமும் விடை இல்லை.
சாதி ஒழிப்பு என்ற முக மூடியுடன் தமிழர்களை பிரித்து திராவிடம் நம்மை ஆண்டு நம்மினத்தை அழித்து வருகிறது.
சாதிய மேலாண்மை, சாதிய ஏற்றத் தாழ்வு, சாதிய அடிமைத் தனத்தை ஒழித்தாலே நாளடைவில் சாதி தானாக மறைந்து விடும். படிப்படியாக செல்ல வேண்டிய இடத்தில் எடுத்தவுடன் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழர் ஒற்றுமையை பற்றி பேச வேண்டும். சாதியால் தான் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
அதுவே உண்மை என்றால் .சாதிய ஏற்றத தாழ்வு அதிகமாக உள்ள அண்டைய மாநிலங்கள், மற்றும் சாதி வெறி உள்ள வட இந்திய மாநிலங்கள் எல்லாம் இனப் அடிப்படையில் ஒன்று கூடி உரிமைகளுக்காக போராட முடிகிறதே எப்படி? .ஆக நமக்கு உடனடி இலக்கு இனப்பற்றே அன்றி சாதி ஒழிப்பு அல்ல..
ஈ வே ராமசாமி நாயக்கரின் (கொள்கை) தலை மீது அமர்ந்து கொண்டு தான் திராவிடம் நம்மை ஆளுமை செய்கிறது. ஈ வே ராமசாமி நாயக்கரின் கருத்துக்களை உயர்த்தி பிடித்தே தமிழர்களை திராவிடம் அடிமை படுத்தி வருகிறது..
திராவிடத்தை வீழ்த்த வேண்டுமானால் நாம் முதலில் பெரியாரை வீழ்த்த வேண்டும். தமிழினத்தின் தலைவராக தேசியத் தலைவரை முன்னிருத்த வேண்டும். அப்பொழுதே தமிழர் நாட்டை தமிழன் ஆட்சி செய்ய முடியும்.
இந்த தலைமுறைக்குள் மீட்டெடுக்க தவறினால் வரும் தலைமுறைகள், திராவிடர்களின் வட இந்தியர்களின் அடிமையாக வாழ நேரிடும்..
பெரியார் என்ற பொய்யரை வீழ்த்துவோம். திராவிடம் என்ற பொய்மையை விரட்டி அடிப்போம். தமிழினம் என்ற உண்மையை அரியணை ஏற்றுவோம்...