13/09/2017

முருகு என்னும் நுட்பத்தை குறிக்ககூடியது...




மனித நினைவுகளை (சிந்தனைகளை) கட்டுபடுத்தகூடியதும் நினைவுகளாகவே மாறுதலும் இதுவே இந்த நுட்பத்தின் மறைப்பொருள்.

சிந்தனை அல்லது நினைவுகளின் பிறப்பிடமான 6 புலன்களையும் கட்டுபடுத்துவது.

உங்கள் சிந்தனை இப்போது எதை நோக்கியுள்ளது?

நீங்கள் எதற்காக எதை நோக்கி பயணித்து கொண்டுள்ளீர்கள்?

உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவிட தயாராக இருக்கிறீர்கள்?

பணமா?அறிவியலா? வளர்ச்சியா?மதமா?அரசியலா?

இவற்றையெல்லாம் உங்களுக்கு அறிமுகபடுத்தியது யார் ?

இயற்க்கையா?

நீங்கள் எதற்காக பிறந்தீர்கள் எதற்காக இருக்கீறீர்கள் என்பதை நினைக்க வைக்காமல் உங்கள் சிந்தனையை உங்கள் இயக்கத்தை கடிவாளம் கட்டிய குதிரையாய் ஓடவைப்பதே இந்த முருகு வின் நுட்பம்.

அது எப்படி எதையுமே சிந்திகாமல் நம்புகிறோம் ? நன்கு சிந்தித்தே செயல்படுகிறோம் என்கி்ற்களா ?

உங்கள் சிந்தனையை நினைவை கட்டுபடுத்தும் யாவும் எதிர்ச்சியாக உருவாக்கப்பட்டது அல்ல அனைத்தும் கணித முறை இப்படியும் சொல்லலாம் கணித வலை.

பணம், அறிவியல், கட்டிடகலை, அரசியல், மதம், etc..

இப்படி எந்த துறையில் கவனம் செலுத்திகீற்களோ அனைத்துமே கணிதமுறை (கணிதவலை) தான்.

உங்கள் வாழ்நாள் முழுவதையும் கரைக்கும் கணிதமுறை.

அந்த கணிதமுறையின் (கணிதவலையின்) உச்சம்  9 (ஒன்பது).....

சிந்தனை தூண்டல் தொடரும்.....

கதிராமங்கலத்தில் 116 நாள் நெடுவாசலில் 154 நாள் நீடிக்கும் போராட்டம். கண்டு கொள்ளாத அரசுகள், ஆதரவுதராத இளைஞர்கள்...



கருப்பு - சிகப்பு நிறங்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை...


கோடி கோடியாக்க் கொள்ளையடிப்பார்கள், இருப்பதை எல்லாம் சுரண்டுவார்கள், நாம் ஏன் என்று கேட்க கூடாது..

தமிழனுக்கு ஏன் எந்த அதிகாரம் கூடாது என்று மற்ற மாநிலத்தார் நினைக்கிறார்கள்.


தன்னை தமிழன் என்று நினைத்துவிட கூடாது. தான் வாழ தமிழனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தினால் “வந்தாரை வாழவைக்கும்” தமிழகம் என்று மேலே தூக்கி வைத்து காலில் போட்டு நசுக்குகிறான்.

தமிழன் ரத்தத்தை 3-மாநில திராவிட அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக்குடிப்பதற்கு வசதியாக தங்கள் கொடியில் ரத்தம் எனும் குருதியை (சிகப்பு) அடையாளமாக வைத்தார்கள்.


நம்பினவர்கள் முகத்தில் கரியைபூசும் கேலமானமானவர்கள் என்பதால் (கருப்பு) நிறத்தை தங்கள் கொடியில் பூசினார்கள்.

இந்த கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே  தமிழனுக்கு வயிறு எரிகிறது.


சண்டாளர்களே சுரண்டிய தெல்லாம் போதாதா, ரத்தம் குடிக்கும் நரிகளே இனியாவது தமிழர்களை வாழ விடுங்கள்....

அண்மையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல்தான் தேவ பேரின்பன் எழுதியுள்ள.. தமிழர் வளர்த்த தத்துவங்கள்...


எங்கள் தத்துவமே ஆதியில் பிறந்தது ; நாங்களே மூத்த குடி” என்பன போன்ற வறட்டுப் பெருமை பேசாமல்

உலகம் முழுவதுமான தத்துவங்களின் பொதுபோக்கோடும் ; இந்திய தத்துவங்களின் போக்கோடும் இணைத்து தமிழர் தத்துவ வளர்ச்சியை நூலாசிரியர் அலசியுள்ளது குறிப்பிடத்தக்கது......

இது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வமான பத்திரிக்கையான தீக்கதிரில் வந்துள்ள நூல் விமர்சனம்

வள்ளத்தோலை வாரி மலையாளிகள் தோளில் போட்டுக் கொண்டாடும் போது உங்களுக்கு வெற்றுப் பெரிமிதமாகத் தெரியவில்லை,

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரை தலையில் வைத்து வங்காளிகள் கொண்டாடும் போது உங்களுக்கு வெற்றுப் பெருமை என்று உங்களுக்குத் தெரியவில்லை,

யக்ஞவல்லரை கன்னடன் வானளாவப் புகழும்போது உங்களக்கு வெற்றுப் பெருமிதமாகத் தெரியவில்லை.

ஆனால் உலகப் பொதுமறை தந்த வள்ளுவனையும், தமிழுக்கு இலக்கணம் மட்டும் அல்லாமல் ஒரு அறிவியல் கலைக் களஞ்சியமாகவே வடித்துத் தந்த தொல்காப்பியரையும் ,எண்ணற்ற பொதுமைத் தமிழ் இலக்கியங்களையும் படைத்த எம் தமிழ் முன்னோர்களை கொண்டாடினால் உங்களுக்கு வெற்றுப் பெருமிதமாகத் தெரிகிறது.

அப்படியானால் தீக்கதிர் பத்திரிக்கையே நீ யார்?

மகா துவார வாசலில் மயன் குறியீடு: கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் கண்டு பிடிப்பு...


கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை சுட்டிக்காட்டுகிறார் பொறியாளர் கோமகன். (உள்படம்) மயன் குறியீடு.

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான மயன் குறியீடு அதன் மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிய ராஜேந்திர சோழன், தஞ்சையைப் போலவே அதேசமயம் தமிழ் கட்டிடக்கலை மரபுப்படி கங்கை கொண்ட சோழபுரத்திலும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். வழக்கமாக கோயில்களில் நான்கு பக்க விமானம்தான் இருக்கும் ஆனால், இந்தக் கோயிலில் தமிழ் மரபுப்படி எட்டு பக்கங்களைக் கொண்ட விமானத்தை அமைத்தான் ராஜேந்திரன்.

கோயிலின் கிழக்கு பக்கம் உள்ள மகா துவாரத்தில் (பெரிய நுழைவு வாயில்) இரண்டு பக்கமும் இரண்டு தூண்கள் மட்டுமே நிற்கின்றன. முன்பு இதன் வழியாகத்தான் கோயிலின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும். தற்போது வழி அடைக்கப்பட்டுள்ள இந்த வாயிலின் படியில்தான் மயன் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆர்வலரும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான பொறியாளர் கோமகன், “துவாரகாபுரியை வடிவமைத்துக் கொடுத்த மயன்தான் நமக்கு ஆதி தச்சர். மயன் சாஸ்திரம்தான் நாம் பயன்படுத்தும் கட்டுமான சாஸ்திரம்.

பொதுவாக நாங்கள் ஒரு கட்டுமானத்தை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பு ஆதாரக் குறியீடு ஒன்றை ஏற்படுத்துவோம். ‘பெஞ்ச் மார்க்’ என்று சொல்லப்படும் அதுதான் மயன் குறியீடு. அந்த குறியீடுதான் ஒட்டுமொத்தக் கட்டுமானத்துக்கும் ஆதார அளவீடாக இருக்கும்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை ஆதாரமாகக் கொண்டுதான் ஒட்டு மொத்த கோயிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மகா துவார படியானது இரண்டு கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு முனைகளிலும் மயன் குறியீடு உள்ளது. இந்தக் குறியீடுகள் இரண்டுக்கும் மையத்தை குறித்தால், கோயில் வாசலிலிருந்து உள்ளே உள்ள கர்ப்பகிரகம் வரை ஒரே நேர்கோட்டில் வருகிறது.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மயன் குறியீட்டின் மையத்தில் திசைமானியை வைத்தால், கோயில் மிகச் சரியாக கிழக்கு மேற்கில் அமைந்திருப்பதை துல்லியமாக காட்டுகிறது. கர்ப்பகிரகத்தில் மின்காந்த அலைகள் சமமாக இருக்க வேண்டும்.

இந்தக் கோயிலில் அதை மிகச் சரியாக அமைத்துள்ளனர். நாம் இப்போது பயன்படுத்தும் அளவீடுகள் மற்றும் காந்தப்புல கருவிகளைப் போல ஏதோ ஒரு கருவியையோ தொழில்நுட்பத்தையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளனர்’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்...

கம்பனும் மதுவிலக்கும்...


ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மது விலக்குக்காக 1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும்.

இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும்.

ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.

1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது.
இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக் கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன.


கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போலவும், கோயிற்பசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயிற் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும், நம் நாட்டின் மதுவிலக்குக் கொள்கை அமைந்துவிட்டது.

கம்பன் கண்ட கோசல நாடு, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை கூட, இந்தக் குழப்பத்துக்கு விதிவிலக்குகளாக அமையவில்லை போலும். எனவே, கம்பன் பல இடங்களில் கோசல நாட்டு மக்கள், கிஷ்கிந்தை மற்றும் இலங்கை மக்கள் கொண்டிருந்த குடிப் பழக்கத்தை ஆங்காங்கே காட்டிவிட்டு, அதேசமயம், பல இடங்களில் இப்பழக்கத்தைக் கண்டிக்கவும் செய்கிறான்.

யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலத்தில், இந்திரஜித்தனின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் கீழே விழுந்து கிடக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட ராவணன், ஒரு வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இந்தக் கொண்டாட்டங்களைக் களியாட்டுப் படலத்தில், கம்பன் கற்பனை வளத்தோடு விவரிக்கிறான். அந்தக் கொண்டாட்டத்தில், அரம்பையர்கள், அரக்கியர்கள், அசுரப் பெண்கள், நாக கன்னியர்கள் ஆகியோரை ராவணன் ஆடவைக்கிறான். அப்போது, கள்ளுண்டு ஆடியவர்களுடைய நிலை எப்படி இருந்தது என்பதைக் கம்பன் சொல்கிறான் :

நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம்.


அதாவது, நல்ல கல்விச் செல்வத்தால் பெரியோர் களது உபதேச மொழிகளை அறிந்து அவற்றால் வரும் பயனைத் துய்க்க வேண்டிய தருணத்தில், ஒரு மூடன் மனதில் ஒரு வஞ்சகன் வைத்த கற்பனை எப்படிப் பரவி நிற்குமோ அப்படிக் கள்ளின் வேகம், மகளிர் கூட்டத்தில் பரவியது என்பது இப்பாடலின் பொருள். கல்வியால் பெறும் தெளிவைக் கள்ளினால் வரும் மயக்கம் அழித்துவிடும் என்னும் உறுதியை இப்பாடலில் கம்பன் காட்டுகிறான்.

 இதில் பின்னால் வரும் இன்னொரு பாடலில் கள்ளுண்டு ஆடிய காரணத்தால் தாளமும், காலமும் தவறி ஆடிய பெண்களைக் கம்பன்,
‘பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர்’
என்று விவரித்தான். கள்ளுண்ணுதல் பெரும் பாவம் என்னும் கருத்தையும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறான்.

யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலத்தில், தன்னை இகழ்ந்து பேசும் இந்திரஜித்தனுக்கு மறுமொழி உரைக்கும் வீடணன், தான் குற்றமற்றவன் என்பதற்கு அத்தாட்சியாக

‘உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென், யாரும் குற்றம் கண்டிலர் என்பால்;

என்று உரைக்கிறான். எனவே, மது அருந்துவது என்பது, பொய் சொல்வதற்கும், பிறர் பொருளைக் கவர்வதற்கும், வஞ்சம் செய்வதற்கும் இணையான குற்றம் என்பதையும் கம்பன் பதிவு செய்கிறான்.

‘ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள், மனைவி” என்னும் தெளிவின்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்!

‘கள்ளுண்ணல் ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று. தாயையும் மனைவியையும் வேறுபடுத்தி அறியும் அறிவைக் கள் அழிக்கும். மற்ற எல்லா அறங்களைப் பின்பற்றி வாழ்ந்தாலும், கள் அருந்துபவனுக்குப் பிற அறங்களால் என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தவன் ஏற்கெனவே மாயையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது, அந்த மயக்கத்தின் மேல் இன்னொரு மயக்கத்தை ஊட்டுவது எவ்வளவு விந்தை’ என்று ஒரு மாயையின் தத்துவத்தை இப்பாடலில் சுக்ரீவன் பேசுகிறான்.


‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே?

விஷம்கூட அருந்தியவரைக் கொல்லுமே தவிர, நரகத்தில் தள்ளி விடாது. ஆனால், மது அருந்துவதால் வஞ்சனை, திருட்டு, பொய், அறியாமை, தொன்று தொட்டு வந்த மரபுக்கு மாறான கொள்கை, அடைக் கலமாக வந்தவரைக் காப்பாற்றாத தன்மை, ஆணவம் ஆகியவை வந்து சேர்ந்து நரகத்தில் கொண்டு விட்டுவிடும் என்கிறான் சுக்ரீவன்.

இப்படி சுக்ரீவன் மூலமாக மது ஒழிப்புக்கு ஒரு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த கம்பன், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 47-ல் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மது விலக்கு, நடைமுறையில் காற்றில் பறக்க விடப்பட்டதை நமக்கு நினைவுபடுத்திக் காட்டுகிறான்.

- உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் எழுதிய ‘கம்பனில் சட்டமும் நீதியும்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.. (வெளியீடு: வானதி பதிப்பகம்)...

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள்.. அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் : ச.மா.இளவரசன்...


உலக வரலாற்றில் ஓர் ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான்.

இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை! முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்!

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் எ மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.ஏ-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு.
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்!

காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள். நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர். முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்).

தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம். 2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.
வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்! ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன.

ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.
நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர்.

5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான்.

நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி.

இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.  இது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார்.

ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது.

கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல். ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.ஏ-வை ஒத்த டி.என்.ஏ-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும். ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது...

வடுகர்களின் (திராவிடர்) காலன் எனப்பட்ட சோழன் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை மீட்டதோடு, புவிசார் அரசியலை கையில் எடுத்தான்...


தமிழர்களான நாமும் புவிசார் அரசியலை கையில் எடுக்காமல் இழந்த கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை கைப்பற்றாமல் தமிழர் பகுதிகளை மீட்காமல் தமிழ்நாட்டிற்கு பயனில்லை.

சோழர் பேரரசை நிறுவுவதற்கு
முதலில் தமிழ்நாட்டில் தமிழர் அரசு நிறுவ வேண்டும்...

காவிரி தமிழர்களின் தாய்மடி..


நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டு விட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க..

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள் தான் ஆனது போல இருக்கு..

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டு தான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்து கொண்டே தான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு தான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்த்துக் கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக் கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்ட போதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக் கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா?

கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்..

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.

நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது.

ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம்..

கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.

ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக் கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

பொது அறிவுக்காக.... ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... கன்னட நிறுவனங்கள்...


மின்சாரமும் நம் முன்னோரும்...


நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அறிவியலில் ஒன்று. இதைப் போல பல உண்டு...

தெஸ்லாவின் ஆய்வு நமது பூமியே ஓர் மிகப்பெரிய மின்காந்த மின்சாரம் வலையாக ஒரு காலத்தில் அமைந்திருந்தது.

பூமியின் மின்காந்த கோடுகள் இணையும் இடங்களில் பெரிய பிரமீடுகளும் வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டிருந்தன அக்காலத்தில்..

அவற்றின் மிச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன்..

அக்கட்டிடங்களில் உச்சியில் சக்தியை கடத்தக்கூடிய கலசங்கள் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன..

இத்தகைய கட்டிடங்கள் சக்தியை உருவாக்கி அடுத்ததிற்கு கடத்தின.

இவற்றை பற்றிய விரிவான பதிவிடுகிறேன் பின்பு.

இதன் மூலம் உலகமே ஓரே மூளையாக செயல்பட்டது.

நம் மூளையில் இதை தத்துவத்தின் படி தான் செயல்படுகிறது..

தற்பொழுது இந்த பழங்கால அறிவியலை மீள் கட்டமைப்பு செய்த தெஸ்லாவை பற்றி பார்ப்போர்.

ஜெபி மோர்கன் என்ற பிரிமேசன் உறுப்பினரே இதன் முழு பொறுப்பு.

மேலும் மோர்கன் தான் டைட்டானிக் மூழ்கடிக்க பட்டதற்கும் காரணம்.

தெஸ்லாவின் கம்பியில்லா மின்சாரம்...

இன்று தொழில்நுட்பம் அபார வளர்சி கண்டுள்ளது என மார் தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உன்மையை அறியாமலேயே இருக்கின்றோம்..

எனினும் 1899 களில் வாழ்தவர்களில் பலர் இவ்வுன்மையை அறிந்திருந்தனர்..

ஆம், வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தையும் எந்தவித இணைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூரையில் ஒரு அன்டெனாவை பொருத்திக் கொள்வதனூடக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உன்மையாகும்..

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டு பிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தை கம்பியில்லாமல் 26 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு வங்கிக்கு கடத்திக் காட்டினார்..

இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விளக்குகளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது.

இதனால் வெறுமனே 5% மின்சக்தியே செலவானது.

நிகோலாவின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பனம் சம்பாதித்துக் கொண்டிருந்த "பன முதலைகளுக்கு" சவாலாக அமைந்தது.

அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்.

ஜெ. பி. மோர்கன் எனும் முதலாளியை வைத்து நிகோலாவின் கண்டுபிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டுபிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினர்.

நியுயோர்க்கில் "வார்டன் கிலீப்" எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.

ஆனால், திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது.

திட்டத்தில் இருந்து மோர்கன் விலகிக் கொண்டார்.

உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலும் அதை தொடர முடியாமல் போய் கடைசியில் 1917ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது..

இவ்வளவு பயன் மிக்க திட்டம் ஏன் கைவிடப்படது? எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது?

பதில் மிக எளிமையானது..

மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெறுவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடும் இன்றி மின்சாரத்தையும் பெற ஆரம்பித்தால் லட்சக்கனக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் "பன முதலைகள்" நஷ்டமடைவார்கள் அல்லவா?

இன்னும் மக்களின் பனத்தை சுரண்ட முடியாதல்லவா?
அதனால் தான்..

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்களின் ஆய்வு..

http://www.teslasociety.com/tesla_tower.htm

உலக அரசியலும் நாட்டு கோழியும் : நாட்டுக் கோழி இனம் காக்க 15நிமிடம் நேரம் ஒதுக்குங்கள்...


சேவல் சண்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்..

பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு விவசாயத்துறையில் கால் பதித்ததோ அன்றே நமது பாரம்பரிய விளை பொருட்களின் விதைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதிக உற்பத்தி என்ற சூழ்ச்சியான கோசத்துடன் நமது விவசாயிகளை ஏமாற்றினார்கள்.

அதன் விளைவாக இன்று நமது பாரம்பரிய சிறுதானியங்கள் நெல்வகைகள் காணாமல் போயின..

அதே வழியில் விவசாயிகளுக்கு துணையாக வருவாயுடன் விவசாயத்திற்கு துணையாக இருக்கும் கோழிகளை அழிப்பது .

மற்றும் கறிக்கோழி இனம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோழிகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தோடு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டுக் கோழிகளை அழிக்க கையாண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் கோழி சண்டைக்கு தடை..

நேருக்கு நேராக மூஞ்சியில் குத்தி கொலை செய்வது விளையாட்டு, கண்மூடித்தனமாக பந்தை எரிந்து கொலை செய்வதும் விளையாட்டு ஆனால் கோழிகளை வைத்து விளையாண்டால் குற்றமாம்..

இதைக் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கேட்கும் அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலை போயின விவயாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராய் செயல்பட்டு இருக்கின்றன.

நாட்டுக் கோழிகளை அழித்தால் தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகும் அதற்கு தீவனமாக மருந்தாக பன்னாட்டு நிறுவனங்களின் இரசாயன வியாபாரம் பெருகும்.

இந்த வியாபார நோக்கம் தான் நாட்டுக் கோழி அழிப்புக்கு காரணமானது..

நாட்டுக் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை, வளர்ப்பது எளிது.

இக் கோழிகளை நமது விவசாயிகள் வளர்ப்பதால் பன்னாட்டு இரசாயன வியாபாரம் நடப்பது தடைபடும் .

மேலும் கோழியின் கழிவுகள் சிறந்த எருவாகவும் விவசாயிக்கு உதவியதால் இரசாயன உரங்களின் தேவையும் பூச்சிகொல்லிகளின் தேவையும் குறைவாக இருந்தது.

இந்த வியாபாரங்களைப் பெருக்க நாட்டுக் கோழிகளை அழிப்பதே அந்நிறுவனங்களின் இரசாயனம் மற்றும் மருந்துகள் விற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

இப்படி நிறுவனங்கள் செயல்படும் பொழுது விவரமானவர்கள் எதிர்க் கேள்வி கேட்டு விட்டால் அவர்களின் வாயை அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே சி எஸ் ஆர் திட்டம் அதாவது வரிவிலக்கு பெற்று லஞ்சம் கொடுத்து மக்களுக்கு பொய்யான பிரச்சாரம் செய்ய தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எதிர்ப்பாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கிட சமூக சேவை என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகாரம் பெற்றுள்ளன.

ஆனால் இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கின்றது என்று பொய்க்காரணம் கூறுவர். ஆகவே இந்த தொகைக்கு வரி விலக்கு வேறு..

தரமான சேவல்களை அழிக்காமல் நாட்டு கோழிகள் இனத்தை அழிக்க இயலாது.

ஆகவே கிராமங்கள் தோறும் கறிக்கோழி குஞ்சுகள் இரசாயனக் கலவை பூசி கலர் கலராக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களை மயக்கி வளர்க்க தூண்டியது. இதன் மூலம் தரமான நாட்டுக் கோழிகள் வளர்ப்பை குறைத்தது.

அடுத்ததாக நாட்டுக் கோழி முட்டைகளை விட பிராய்லர் முட்டைகளை குறைந்த விலையில் விற்றது மட்டுமல்லாமல் பிராயிலர் கோழி முட்டைகள் கொழுப்பு அற்றது புரதம் நிறைந்தது என்றும் விளம்பரம் செய்து சக்கையை சாப்பிடுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் என்றது .

மருந்துகளால் சேவலின் துணையின்றி முட்டைகளை இட வைத்து விற்பனை செய்து லாபம் பார்ப்பது.

அம்முட்டைகளே நல்லது என்று விளம்பரம் செய்து மக்களை வாங்கத் தூண்டியது.

எனினும் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிகரித்து விட்டதே இப்பொழுது எதற்காக இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது சரி தான்.?

பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி முதலில் சந்தையில் போட்டியை உருவாக்கும் .

அங்கு நாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் பொய் பிரச்சாரங்களை அரங்கேற்றி, அதன்பிறகு போட்டியான தயாரிப்புகளை முடக்கும். இதுவே அந்நிறுவனங்களின் தொடர் வெற்றிக்கு காரணம்.

மனித உடல் நலனுக்கு கேடு விளைகின்றது என்பதால் கறிக்கோழிகள் எதிர்காலத்தில் மக்களால் ஒதுக்கப் படலாம். ஆகவே தான் தான் நாட்டுக் கோழிகள் உண்பதை வைரஸ் பரவுகின்றது என்ற புரளியும் தற்பொழுது பரப்புரை செய்யப்படுகின்றது..

மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு மீண்டும் வந்துவிடக் கூடும்.

இந்த பயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்தால் வியாபாரம் நிம்மதியாக செய்ய இயலாமல் போகின்றது.

பயத்துடன் தொழில் செய்வதை பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள்.

ஆகவே நாட்டுக் கோழி உற்பத்திக்கு உதவும் சேவல்களை அழிக்க வழிதேடி வெற்றியும் பெற்றார்கள்.

சேவல் சண்டைக்கு தரமான சேவல்கள் வளர்க்கப்படுவது மட்டுமல்ல அவை இனப் பெருக்கத்திற்கு உதவி நல்க தரமான நாட்டுக் கோழிகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றன..

பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டுவிட்டு அவர்கள் ஏற்றுமதி செய்யும் பதப்படுத்தப்பட்ட ஆடு மாடு கோழிக் கறிகள் நமக்கு கிடைக்கலாம்..

நாட்டு கோழிகள் அழிப்புடன் கலப்பினக் கோழிகள் உருவாக்கம் பிராய்லர் கோழி வளர்ப்பில் புகுத்தப்படுகின்றது. இவைகள் நாட்டுக் கோழிகள் என்று சொல்லி விற்பனையும் செய்யப்படுகின்றது..

பிரபல கம்பெனிகள் இதில் கால் பதிக்க தொடங்கி விட்டர்கள்
வெள்ள முட்டை 4₹ விற்கும் போது அதே உற்பத்தி செலவில் Brown கலர் முட்டையை நாட்டு முட்டை என்று கூறி 10₹ விற்பனை செய்கிறார்கள்..

இதை சென்னையில் உள்ள பல Organic store விற்பனை செய்கிறார்கள்..

மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்..

வண்ண பிராய்லர் கோழிகளை நாம் யாரும் வளர்க்க கூடாது, அதற்கு கம்பெனி தீவனம் போட்டு அது விடும் முட்டை நாட்டு முட்டை என்று கூறி விற்பனை செய்ய கூடாது..

அது மாகபாவம் காரியம். அப்படி செய்தால் அதற்கு தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்..

இந்நிலையில் தரமான நாட்டு சேவல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் போட்டிக்கு காரணமாக அமையும்..

சேவல் சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் தரமான நாட்டு சேவல் ஆகும்..

இந்த சேவல்கள் இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ஆகவே நமது முன்னோர்கள் வீர விளையாட்டு என்ற பெயரில் தரமான மாடுகள் கோழிகள் உற்பத்தி குறையாமல் இருக்கவும் அவர்களது விளையாட்டுக்கள் பயன் அளித்தது.

ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் பிராய்லர் கோழி விற்ப்பனைக்கு எதிர்காலத்தில் நாட்டுக் கோழிகள் போட்டியாகி விடவே கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே சேவல் சண்டை தடை..

இதற்கு துணையாக சமூக சேவை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பிச்சை வாங்கிப் பிழைக்கும் தேச துரோகிகளும் எதிர்கால சமூகத்தை அழிக்கும் இந்த இழிவான செயலை நியாயப்படுத்தி நமது விவசாயிகளுக்கும் நமது மக்களுக்கும் எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் செயலுக்கு துணையாய் இருந்து நமது பாரம்பரிய கோழி வளர்ப்புக்கு துரோகம் செய்துள்ளார்கள்.

இவர்கள் செய்த துரோகம் அறியாத பாமர மக்கள் இவர்களின் அமைப்புகளுக்கு நன்கொடையும் கொடுத்து அவர்கள் அழைக்கும் போதெல்லாம் சென்று அவர்களுக்கே சலாம் போடும் கேவலமும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றான.

தமிழக விவசாயிகளின் நண்பனான நாட்டுக் கோழிகளை ஒழிப்பது, நாட்டு மாடுகளை ஒழிப்பது, தமிழக விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டுவது .

பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியாவில் விவசாயம் செய்யும் அதற்க்கு துணையாக உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தம் 1995 இன் திருத்தம் 2013 இன் படி இந்தியா கையெழுத்து இட்டு விட்டது.

அந்த ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வரி நீக்கம்.

பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக்கொள்ள வசதியாக புதிய நிலங்கள் கையகப் படுத்தும் சட்டம் திருத்தம்.

அதாவது அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பகுதியில் உள்ள 80 சதவீத விவசாயிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அந்நிலங்களை வாங்கலாம் என்ற விதிமுறையை மாற்றிவிட்டார்கள்.

ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாய நிலம் நிறுவனங்களுக்கு தேவை என்றால் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் தேச விரோதிகளாக்கப் படுவார்கள்.

நாட்டுக்கோழி இனம் தமிழ்நாட்டில் இரண்டு வகைமுக்கிய இனம் உள்ளது.

1)சிறுவிடை நாட்டுக்கோழி இனம்
2)பெருவிடை நாட்டுக்கோழி இனம்

பிராய்லர் முட்டை தவிர்போம், போலி நாட்டுக்கோழி முட்டை தவிர்போம்..

இயற்கை திறந்த வேளி மேயும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவோம்..

வருகால நம்  குழந்தையின் ஆரோக்கியத்தை காப்போம்..

இங்கு பன்நாட்டு நிறுவனம் என்பது இலுமினாட்டிகளே..

உலக அரசியலும் தமிழனின் முட்டாள் தனமும்..


இது ஜல்லிக்கட்டை பற்றிய பதிவு அல்ல..

பன்னாட்டு மாட்டுத் தீவன நிறுவனங்களும், ரசாயன உரத் தயாரிப்பு நிறுவனங்களும், பன்னாட்டு பால் உற்பத்தி நிறுவனங்களும் இன்னும் பீட்டா போன்ற தன்னார்வ நிறுவனங்கள் என்ற போர்வையில் திரியும் நிறுவனங்களும் இப்போது தமிழகத்தை குறிவைத்துள்ளது..

ஜல்லிக்கட்டிற்கான தடை நான் மேற்சொன்ன பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுச் சதி என்பது நம்மில் பலருக்கு தெரியும்..

இந்தியாவில் இருந்த நாட்டு மாடுகளில் 70% மாடுகள் அழிக்கப்பட்டாகி விட்டது..

மீதம் இருக்கும் 30% மாடுகள் தமிழகத்தில் தான் உள்ளது..

அவை ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படும் நாட்டு மாடுகள்..

இந்த நாட்டு மாடுகளை பராமரிப்பது அதிக சிரமம் இல்லாத வேலை..


இவற்றுடன் இனவிருத்தியில் சேரும் பசுவின் பால் அளவில் குறைவாக இருந்தாலும் மனிதனுக்கு பயனளிக்கும் A2 வகையை சேர்ந்த பால்..

அவற்றின் சாணம் இயற்கை விவசாயத்திற்கு உகந்த அதிக மகசூல் தரக்கூடிய இயற்கை உரம்..

இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல வகையிலும் எதிரியாக இருக்கும் நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை அடைந்து விட்டன பன்னாட்டு நிறுவனங்கள்..

ஜல்லிக்கட்டை தடை செய்து விட்டால் நாட்டு மாடுகள் அழிந்து விடும் என்று பலர் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்..

ஆனாலும் நம் எல்லோருக்கும் தெரியும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணபலத்தால் ஜல்லிக்கட்டை முழுவதும் தடை செய்து விடுவார்கள்..

எனில் நாட்டு மாடுகளின் நிலை என்னவாகும்.?

ஜல்லிக்கட்டு என்பது காரியம்.. நாட்டு மாடுகள் என்பது அதற்கான காரணம்..

நாம் காரணத்தை விடுத்து காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது முறையா சகோதரர்களே..

ஒரு வேளை ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டாலும், நாட்டு மாடுகளும் அது சார்ந்த விவசாயம், பால் உற்பத்தியும் தடைபடாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வோம்..

ஜல்லிக்கட்டை பற்றிய பதிவுகளை விடுத்து நாட்டு மாடுகளை வாங்குவது, வளர்ப்பது பற்றி அதிகம் பகிர்வோம்., நாட்டின் பொருளாதார நலன் காப்போம்..

பி.கு.: பொங்கலுக்கு பிறகு நம்மில் யாரும் ஜல்லிக்கட்டைப் பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டோம் என்று நமக்கே தெரியும்.. முடிந்த வரை நாட்டு மாடுகளை பற்றியாவது நினைப்போம்...

ராமர் - லட்சுமணர் போல இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...


இனி இவர்கள் வாயில் ராமர் லட்சுமணர் கோமாதா கோமியம்னுதான் வரும்..

ஏன்னா இவர்கள் மாட்டிய இடம் அப்படி...

இத்தாலிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானமும், அதற்கு பழி வாங்கும் படலமும்...


1896 காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி தம் அண்டை நாடுகள் மீது படையெடுத்தது அன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களை வைத்து தம் அண்டை நாடுகளை அடக்கியது.

ஏறக்குறைய அனைவருமே அடங்கியும் சென்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த ஒரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரே நாடு எத்தியோப்பியா தான்.

இந்த பேரை உடைக்க வேண்டும் என இத்தாலி நினைத்தது.

மட்டுமின்றி எத்தியோப்பிய மக்கள் நாகரிகமற்றவர்கள்.

[பொதுவாக அன்றைய காலகட்டத்தில் கறுப்பர்கள் வாழும் நாட்டை அப்படிதான் நினைத்தது உலகம்].

அவர்களுக்கு இந்த நவீன பீரங்கிகள் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்த தெரியாது எத்தியோப்பாவை இலகுவாகவே கைப்பற்றி விடலாம் என்று இத்தாலி நினைத்து இருந்தது..

இந்நிலையில் தான் 1896 இல் மார்ச் 1 தேதி இத்தாலி முதல் அறிவிப்பை பிரகணப்படுத்தியது.

எத்தியோப்பாவை நாங்கள்  தாக்க போகிறோம் என்று..

எத்தியோப்பியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்ற கணிப்பு இத்தாலியர்களுக்கு பொய்யானது..

காரணம்.. எத்தியோப்பியா தொடுத்த பதில் அறிவிப்பு..

ஆம் வில், அம்பு, குதிரை படையுடன், நாங்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்று அறிவித்தார் தெகுவாவி மேனாலிக்..

இவர் தான் அன்றைய எத்தியோப்பியாவில் அரசர்..

ஆரம்பித்தது Battle of Adwa என்று சொல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க போர்.

இந்த போரில் எத்தியோப்பியாவை சார்ந்த படையினர் 3867 பேர் இத்தாலி படையினரால் கொல்லப்பட்டனர்.

8000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இப்போருக்கு பிறகு உலக நாடுகள்  இத்தாலியர்களை மிகவும் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம்.. இப்போரில் வென்றது எத்தியோப்பியா தான்..

ஆம்  3867 பேர் எத்தியோப்பியார் இப்போரில் இறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா..

அதே போன்று எத்தியோப்பியர்கள் இத்தாலியர்களையும் கொன்றார்கள்..

இவர்கள் கொன்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

6394 பேர்...

எத்தியோப்பாவுடன் தோல்வி பெற்ற இத்தாலியை ஏன் உலக நாடுகள் கேவலமாக பார்த்தது என்றால்..

எத்தியோப்பிய படையினர் இத்தாலியர்களை எதிர்கொன்றது துப்பாக்கி பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை..

இவர்கள் வசம் வெறும் அம்பு ,வில் ,வால் போன்றவைகள் தான்..

இதை வைத்தே இத்தாலியை ஓட வைத்தது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உண்டானது..

இதற்கு பிறகு தான் எத்தியோப்பாவை உலக நாடுகள் அங்கீகரித்தது..

எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசி தலைவனால் ஆளப்படுகிறது என்ற மாயையை உடைத்து..

போருக்கு பிறகு எத்தியோப்பிய அரசர் மேனிலிக் ஐரோப்பிய அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டார்..

இத்தாலியும் தோல்விக்கு பிறகு எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு கொண்டது ...

கடற்கரை ஓரம் உள்ள சில பகுதிகளை மட்டுமே இப்போரில் கைப்பற்றிக் கொண்டது இத்தாலி..

பின்னாளில் இத்தாலியிடமிருந்து விலகி தனி நாடானது...

அந்த பகுதிதான் இன்றைய இரண்டு திருமணம் கட்டாயம் என்ற அறிவித்துள்ள எரித்திரியா நாடு....

இருப்பினும் ஐரோப்பிய வரலாற்றில் அவமானப்பட்ட இத்தாலி பழிவாங்க காத்திருந்தது எத்தியோப்பாவை..

இதற்கு இத்தாலி எடுத்த நடவடிக்க்கை மிகவுமே கொடூரமானது..

ஆம் முசோலினி காலத்தில் எத்தியோப்பியா ?
 
பேசுவோம்...

பாஜக மோடியின் அடுத்த ஏமாற்று வேலை...


இந்தியாவில் வந்தேரிகளால் உச்சரிக்கப்படும் வார்த்தை தான்.. நான் இந்தியன், நீ ஆன்டி இந்தியன் என..


இப்போது புரிந்து இருக்கும் யார்
antiIndian என்று....?

பாஜக வும்.. பாஜக ஸ்லீப்பர் செல் நீதிபதியும்...


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த நீதிபதியின் பாஜக தொடர்பு அம்பலம்.

மத்திய அரசு நடத்தும் உண்டு உறைவிட  ஜவஹர் நவோதயா பள்ளிகள் மும்மொழி திட்டத்தை கடைப்பிடிப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழக அரசுகள் இவற்றை கொள்கை முடிவாக அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்வழியிலும் படிக்கலாம் என்ற நிபந்தனை தளர்வுடன் மத்திய அரசு நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

பொதுநல வழக்காக குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கோரும் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவு போட்டிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்து தமிழக அரசு எட்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டவர்கள் நீதிபதி கே.கே. சசிதரன் மற்றும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்.

நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் மறைமுக ஹிந்தி திணிப்பையும் மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய அஜெண்டாவை அமல்படுத்துவதற்கு அதிமுக அரசு வழிசெய்து கொடுக்கிறது.

இந்நிலையில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு தமிழக பாஜகவுக்கும் உள்ள நெருக்கம்...

தமிழக பாஜகவின் வழக்கறிஞர்கள் பிரிவு கடந்த நவம்பர் 2016-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த பொதுசிவில் சட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். அவர் கலந்து கொண்டு பேசியதன் விவரங்களை பாஜக இளைஞரணி துணை தலைவர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இப்போது தெரிகிறதா நவோதயா பள்ளி தமிழகத்தில் கொண்டு வருவதற்கான தீர்ப்பு  பின்னனி...

பாஜக மோடியின் சதி வேலை வெற்றி...


நம்ப முடியாத உண்மைகள்...


குஜராத் முதல்வராக இருக்கும் பொழுது நீட் தேர்வை எதிர்த்த பாஜக மோடி...


எப்படி முதல்வராக இருக்கும் பொழுது GSTயை எதிர்த்தாரோ அப்படி நீட்டையும் எதிர்த்திருக்கிறார் மோடி.

நீட் தேர்வில் இணைய மறுத்து மூன்று நிபந்தனைகளை முன்வைத்து அதை நிறைவேற்றினால் மட்டுமே நீட் தேர்வில் இணைவோம் என்று அம்மாநில அரசாங்கம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுந்திருக்கிறது.

1. குஜராத்தி மொழில் தேர்வு இருக்க வேண்டும்.

2. 85% இடங்கள் உள்ளூர் மாணவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

3. குஜராத் மாநில பாடத்திட்டத்தை (GSHSEB) இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வுக்கு கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நீட்டை அனுமதிப்போம் என்றும், நீட் தேர்வில் வென்றால் கூட மற்ற மாநில மாணவர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு மேல் அனுமதிக்கமாட்டோம் என்றும் கறாராக கூறியிருக்கிறார்கள்.

இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டதா?

இல்லை மோடி எப்பொழுதும் போல் பல்டி அடித்துவிட்டாரா என்றும் தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் முதலிலிருந்து இன்றுவரை இந்த கோரிக்கைகள் தான் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால்..

காவிப்படைகளுக்கு.. இதே கோரிக்கைகளை நாம் வைக்கும் பொழுது தேசவிரோதி ஆகின்றோம்..

மோடி ஹிந்து தேசியவாதியாகி பிரதமரும் ஆகிவிடுகிறார்...

தமிழினத்தின் முதன்மை துரோகிகள்...


இனம் இனத்தோடு தான் இனையும்...


தமிழன் விஜய் தமிழனுக்காக வருகிறார்...

மராட்டிய கன்னடன் ரஜினி கன்னட ஜக்கிக்காக வருகிறான்...

இதில் என்ன இருக்கிறது..?

தமிழா.. நீ தான் முட்டாள்..

வேற்றினத்தாரை ஆதரித்து.. அவனை வாழ வைத்து விட்டு.. நீ ஏமாந்து நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கிறாய்...

திசை திருப்பப்படும் நீட் போராட்டம்...


மாணவர்களால் மட்டுமே இனி வெற்றி சாத்தியப்படும்...

முதலில் அதை செய்...


திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...


ஆர்கிமிடீஸ் தத்துவம் - பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...


கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.

சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானூறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.

குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.

ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.

முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?

ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை.

முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான்.

அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்து யானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.

யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.

பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.

யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.

கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சில குறிப்புகள்...


வேம்பு கவனம்...

எந்த பயிர்களாக இருந்தாலும் நடவு செய்த 15 நாட்கள் வரை பூச்சி நோய்த் தாக்குதல் பெரிதாக இருக்காது. அதற்குப் பிறகுதான் ஆரம்பமாகும்.

ஆனால் இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பதுதான் சிறந்தது.

தொடர்ச்சியாக மூலிகைப் பூச்சி விரட்டியை பயன்படுத்திச் செடிகளைக் காப்பாற்றலாம்.

ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கொடுப்பது உகந்தது.

வேப்பிலைச்சாறு அதன் எண்ணெய் எல்லாம் அமிர்தம் போன்றது.

ஆனால் அளவுக்கு மிஞ்சக் கூடாது.

வேம்பு சார்ந்த பொருட்களில் இரண்டாம் நிலை வேதியியல் கூறுகள் உள்ளதால் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் செடிகள் கருகிவிடும்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை உள்ள நேரம் மகரந்த சேர்க்கை நடக்கும் நேரம் என்பதால் அந்த நேரத்தில் செடிகள் மீது பூச்சி விரட்டி போன்றவற்றைத் தெளிக்கக் கூடாது.

அதிகாலை மற்றும் மாலை நேரங்கள் பூச்சி விரட்டி தெளிக்க உகந்த நேரம்.

அதேபோல பூக்கள் இருக்கும் பருவத்தில் பஞ்சகவ்யா தெளிக்க கூடாது.

செடிகளின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியின் போதுதான் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.

விசைத் தெளிப்பான் மூலம் தெளிப்பவர்கள் செடிகளுக்கு 7 அடி தூரத்துக்குப் பின்னால் இருந்துதான் தெளிக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தின் அறிவியலை ஆழமாக புரிந்து கொண்டால் ரசாயன விவசாயத்தின் ஆபத்தில் இருந்து மாற வழி கிடைக்கும்.

முன்பு பல ஆண்டுகள் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால்தான் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் தற்போது விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல்லாண்டுகள் வாழும் மரப்பயிர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும்.

நெல், காய்கறிகள் போன்ற குறுகியகாலப் பயிர்களுக்கு 2 ஆண்டுகளும்.

இயற்கை விவசாயம் செய்து வந்தால்
அபிடா நிறுவனம் தமிழ்நாடு அங்கச் சான்றளிப்புத் துறை மூலம் இயற்கை விவசாயச் சான்று கொடுக்கிறது...

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ரேசன் பொருட்கள் வழங்க கெடுபிடி விதிகள்?


தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்..?

இந்திய ஒன்றியத்துலயே தமிழ்நாட்டில் தான் 99% ரேசன் பொருட்கள் உரியவருக்கு போய் சேர்கிறது வறுமை ஒழிப்பு தொடர்பாக நடந்த ஒரு ஆய்வு சொல்கிறது.

மற்ற மாநிலத்தில் எத்தனை சதவீதம் என்று கேக்குறீங்களா?

மற்ற எந்த மாநிலத்தில் இப்படி ஒரு திட்டமே இல்லை.

பல மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் (B.P.L) இருக்குறவங்களுக்கு மட்டும்தான் ரேசன் கொடுக்கிறாகள்.

ஆனால் அந்த பிபிஎல் கார்டு வச்சிருக்குற அத்தன பேரும் பணக்காரனாத்தான் இருப்பான்.

அவன் பிபிஎல் கார்டு வச்சிருக்குற பெரிய ஆளு'னு மக்கள் நெனைக்குற அளவுக்கு வடயிந்தியாவுல ஆளும் வர்க்கத்தோட அடையாளமாக அது ஆகிப்போச்சு.

ஆளும் வர்க்கமே அது மூலமாக வருவதை பங்கு போட்டுக்குவாங்க.

பொருள் வந்து அப்பறம் அதை பதுக்கி அடுத்து கொஞ்ச கொஞ்சமா திருட்டுத்தனமா பிளாக்ல விக்கிறதெல்லாம் கிடையாது.

அரசாங்க குடோன்ல இருந்து நேரா தனியார் குடோனுக்கு போயிரும்.

சில நேரம் தனியார்களுக்கு சப்ளை லைனுக்கே போய்ச்சேரும்.வெளிப்படயா நடக்கிறது.

தமிழ்நாட்டிலௌ எதோ புண்ணியவான்கள் கொஞ்சம் மிச்சமிருக்கறதால பீத்த அரிசியா இருந்தாலும் மக்களுக்கு போய்ச்சேருது.

ஓரளவு ஒழுங்கா போய்க்கிட்டிருக்க திட்டத்த கெடுத்து கொழப்பி அதை வடயிந்தியப் பாணில அப்பிடியே லம்ப்பா ஆட்டய போட வழி பாக்குறானுக.

எந்த ஏழையாவது தங்களோட ரேசன் நடுத்தர வர்க்கத்துக்கு போகுறதால பற்றாக்குறைனு போராட்டம் பண்ணாங்களா?

இல்லையே..

ஒரு நாட்டை எப்படி ஆளக்கூடாது ஒரு புத்தகம் எழுதறவன் இங்க வந்து நடக்குறத அப்படியே எழுதினா போதும்.

எதையும் கொடுக்கத்தான் துப்பில்ல.
கிடைக்கிற கொஞ்ச நஞ்சத்தயாவது விடுங்கடா..

கொள்ளைக்கார பாவிகளா...

இயற்கை உரம் நிலத்திற்கு அளிக்கப்படும் பொழுது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆராய்வோம்...


இரசாயன உரம் மற்றும் இயற்கை உரத்தின் செயல்பாடுகள்...

இயற்கை உரம் நிலத்திற்கு அளிக்கப்படும் பொழுது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆராய்வோம்..

விலங்கினங்கள், தாவரங்களை உணவாக உட்கொண்டு கழிவாக வெளியேற்றுகிறது.

இந்த விலங்கின கழிவுகள் மற்றும் இறந்த தாவரங்களின் பகுதிகளை சேர்த்து மட்க செய்து இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

இந்த கழிவு பொருட்களை மட்க வைக்கும் பொழுது அதிலுள்ள சத்துக்கள் மீண்டும் தாவரங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் சத்துக்களாக மாற்றப்படுகிறது.

இதனால் இந்த உரங்களை பயன்படுத்தும் தாவரங்கள் நேரடியாக இந்த சத்துக்களை கிரகித்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு நேரடியாக கிடைக்கக் கூடிய சத்துக்களை காட்டிலும் மறைமுகமாக கிடைக்க கூடிய சத்துக்களின் அளவுதான் அதிகம்.

மறைமுகமாக சத்துக்கள் எங்கிருந்து கிடைக்கிறது, மண்ணிலுள்ள உயிரனங்கள் இச்சத்துக்களை அளிக்கிறது.

தழைச்சத்தை நிலைநிறுத்தக் கூடிய நுண்ணுயிரிகள் ஆகாயத்தில் இருக்கும் நைட்ரஜனை பயிர்கள் எடுக்கக்கூடிய தழைச்சத்தாக மாற்றி பயிருக்கு அளிக்கிறது.

இது போல் பாஸ்போபாக்டீரியா என்ற நுண்ணுயிர் நிலத்திலுள்ள பயிரிகள் எடுத்து கொள்ள முடியாத நிலையிலுள்ள பாஸ்பேட்டாக மாற்றி மணி சத்தாக பயிர்களுக்கு அளிக்கிறது.

இயற்கை உரங்களை நிலத்திற்கு அளிக்கப்படும் போது இந்த நுண்ணுயிரிகள் பெருக தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறது.

அதனால் நுண்ணுயிரிகள் பெருகி இந்த சத்துக்களை எல்லாம் பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.

இயற்கை உரத்தில் பொதுவாக 2-2.5 மூ தழைச்சத்து இருக்கும். அதாவது 1 ஏக்கருக்கு ஒரு டன் இயற்கை உரத்தை அளித்தால் 20-25 கிலோ தழைச்சத்து பயிர்களுக்கு கிடைக்கும்.

100 கிலோ இரசாயன உரம் யூரியாவில் 46 கிலோ தழைச்சத்து உள்ளது.

யூரியாவை பயிருக்கு பயன்படுத்தும் போது 16 கிலோ தழைச்சத்து வேதியியல் மாற்றத்தால் சிதைவடைந்தாலும் மீதம் 30 கிலோ தழைச்சத்து பயிருக்கு கிடைக்கும்.

அதனால் 1 டன் இயற்கை உரம் பயன்படுத்துவதை காட்டிலும் 100 கிலோ யூரியா பயன்படுத்துவது சிறந்தது என்று கணக்கு போட வேண்டாம்.

இயற்கை உரம் அளிக்கப்படும் பொழுது நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் 100-125 கிலோ தழைச்சத்தை பயிருக்கு கொடுக்க வல்லது.

அவை மட்டுமில்லாமல் இயற்கை உரம் இடுவதினால் அதன் நேரடி பயன்களை விட அதனால் பெருகி வளரும் நுண்ணுயிர்களினால் ஏற்படும் பலன்கள் பல மடங்கு அதிகமாகும்.

இரசாயன உரங்கள் குறிப்பாக யூரியா பயன்படுத்தும் போது செடிகள் விரைவில் பச்சையாக மாறுகிறது.

குறைவான வளர்ச்சி இருக்கிறது.

என்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தும் போது பயிரின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது. என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

அதில் எது சிறந்தது என்று ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

யூரியா பயன்படுத்தும் போது பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பது உண்மை ஆனால் செடி ஆரோக்கியமாக இருக்க முடியாது.

நோய் தாக்குதலை தாங்கி வளர கூடியதாக இருக்காது.

இந்த செடிகளை தான் பூச்சிகள் அதிக அளவில் தாக்கும்.

இரசாயன உரம் இட்ட பயிர்களுக்கு தான் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன்படுத்துவதை காண்கிறோம்.

இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது சிரமம்.

மற்றும் அதற்காக அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

இயற்கை உரம் இட்ட நிலங்களில் இதன் பாதிப்பு குறைவு. இதை தாங்களே ஆராய்ந்து பார்த்தால் எது சிறப்பு என்று தெளிவாக விளங்கும்...

பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் - குழாய்கள் வழியே நகரங்களில் நீர் தருதல் திட்டம் (DAM AND PIPELINE)...


தமிழன் கண்ட தொழில்நுட்பம் தான் வேறொரு பெயர் மூலம் இன்று நம்மில் உலா வருகிறது.

நீர்தேக்கத்தை எங்கு கட்ட வேண்டும் என புலவர் ஒருவர் தம் மன்னனுக்கு கூறுகிறார் கீழே கவனிக்க.

மதுரையில் தண்ணீர் பஞ்சம் வரபோகிறது என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்துகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

அவன் அவையில் உள்ள புலவர் குடபுலவியனார் தன் மன்னனுக்கு, நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்றும் அதை எங்கு கட்ட வேண்டும் என ஆலோசனை பின்வருமாறு கூறுகிறார்.

நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருக
- (புறநானூறு 18:28)

அதாவது நிலத்தை தோண்டாது (நிலன்நெளி) நிலம் குழிந்த பள்ளத்தாக்கில் நீர்தேக்கம் அமைத்தால் மழைநீர் எளிதில் ஓடிவந்து தேங்கும்.

அங்கு அதை சுற்றி கட்டுமானம் எழுப்பினால் நீர்நிலை பெருகும் என்று கூறுகிறார்.


அவ்வாறு தேக்கிய நீரை நகர மக்களுக்கு கொண்டு செல்வது குறித்து மற்றொரு புலவர் கூறுகிறார்.

மன்னா! அவ்வாறு தேக்கிய நீரை நம்மவர்கள் இதற்கு முன் சுருங்கை (PIPELINE) மூலம் கொண்டு சென்றனர்.

இதோ பாருங்கள் ஆதாரம் என காட்டுகிறார் புலவர்..

நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து
கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும் பொழுது

- (பரிபாடல், 20: 104-107)

அதாவது பெரிய மாளிகைகள் உடையது கூடல் மாநகர் (மதுரை) நகரின் தெருவில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுருங்கை (UNDERGROUND PIPELINE) வழி நீர் ஓடியது. மதில்களின் கீழ் அமைந்த சுருங்கையிலிருந்து (PIPELINE) இந்நீர் விழும்பொழுது அது யானை தன் துதிக்கையை தூக்கி நீரை சொரிவது போல் இருக்கும் என சங்க புலவர் கூறுகிறார்.


ஆகையால் நாமும் அவ்வாறு தேக்கிய நீரை மக்களுக்கு கொடுப்போம் என்றார் மற்றொரு புலவர்.

நல்ல அறிவுரை நல்ல பாடல் அவ்வாறே செய்வோம் என்றான் மன்னன்.

இப்போது அணை அமைப்பதும் நிலத்தடியில் குழாய்கள் (UNDERGROUND PIPELINE) மூலம் நீர் கொண்டு செல்வதும் பண்டைய தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பமே தவிர ஆங்கிலேயர் கண்டு பிடித்தது அல்ல...

நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்?



தமிழகத்தில் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று (11.9.2017) பிறப்பித்துள்ள‌ உத்தரவு வரவேற்கக் கூடிய ஒன்றல்ல.

1986 -ல் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக‌ தமிழகத்தில் இருக்கிற SC/ST மாணவர்களுக்கு இதனால் பெரிதும் பயன் இல்லை.

காரணம் . . .

6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இதில் ஹிந்தி முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும் மாநில மொழி கடைசியாகவும் கற்பிக்கப்படுகிறது. இப்போதுள்ள மொழியறிவுக் கல்வித்தரத்தின் அடிப்படையில் SC/ST மாணவர்கள் உடனே இதில் நுழைய முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.

உதாரணத்துக்கு : புதுச்சேரியில் உள்ள நவோதயாவில் 6 – 12 வரை சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. எளிதில் இடமும் கிடைக்காது.

நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் “பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்” வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கூட இப்போதுள்ள நுழைவுத் தேர்வு முறையில் ஹிந்தி வினாத்தாள் – விடைத் திருத்தம் அந்தந்த பள்ளியில் நடை பெறாது.

இந்த சிக்கலை எதிர் கொள்வதற்காக தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, 25 சதவிகித தமிழ் பயின்ற‌ மாணவர்களை ஹிந்தி நுழைவுத் தேர்வு வைக்காமல் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி அரசு 2006 -ல் இருந்து கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து விட்டது.

இதனால் புதுச்சேரி நவோதயாவில் மத்திய அரசின் நோக்கமான கிராமப்புற SC/ST மாணவர்களின் சேர்க்கை மிக மிக பின் தங்கியிருக்கிறது. படிப்பவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

உண்டு, உறைவிடம் என்கிற தரம் முதன்மையாக இருந்தாலும் இப்பள்ளிகளில் SC/ST -க்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்களை உள்ளே புகுத்த தனி துரிதப்பயிற்சிகள் (Crash Course Programme) கிடையாது.

நவோதயா பள்ளிகளில் படித்து விட்டால் NEET போன்ற தேர்வை எதிர் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் இதில் இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த‌ உத்தரவாதமும் கிடையாது. ஏற்கனவே IIT போன்றவைகளை இதன் மூலம் எதிர் கொள்ள முடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு என இதே போலத்தான் கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டது. அதில் பொதுவாக சேர்க்கப்படும் 10 சதவிகித சேர்க்கையில் கிராமப்புற SC/ST மாணவர்கள் எத்தனை சதவிகிதம் வருகிறார்கள் என கணக்கிட்டால் ஒரு சதவிகிதப் பயன்பாடு கூட‌ மிக மிகக் குறைவு.

பெரும்பான்மையான இடங்கள் MP கோட்டாவுக்கு போய் விடுகிறது. ஒரு MP -க்கு 6 சீட் என கணக்கிட்டாலும் தற்போதைய நிலையில் ஒரு MP – கோட்டா சீட் 3 லட்சத்துக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நோக்கம் அரசு ஊழியர்களுக்கானது போல் தெரிந்தாலும் வருசத்துக்கு 3000 MP சீட் வசதி படைத்தவர்களுக்குத் தான் போய்ச்சேருகிறது. அப்படி இருக்கும்போது எதிர் காலத்தில் இப்பள்ளிகளும் கேந்திரிய வித்யாலயா போல் ஆகாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.

தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் 49 உயர்நிலைப் பள்ளிகளும், 56 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான SC/ST மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் படித்து வருகிறார்கள்.

 ஹிந்தியைத் தவிரவும், தரம் உதர்த்தலைத் தவிரவும் நவோதயா வழியாக‌ வேறென்ன கிடைத்து விடப்போகிறது?

எனவே தற்போதைய அறிவிப்பின் மூலம், நவோதயா பெயரில் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதை நிறுத்தி விட்டு அவற்றுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 20 கோடி ரூபாயை கிராமப்புற ஏழை மற்றும் SC/ST மாணவர்களுக்கு அப்படியே வழங்கி மாநிலப் பட்டியலுக்குள் நுழையாமல் இருப்பதே மத்திய அரசாங்கம் கிராமப்புற வளர்ச்சிக்கு செய்கிற நல்ல விசயம்...

தமிழகத்தில் எந்த கருத்தியல் உருவானாலும் அது உடனடியாக மண்ணைக் கவ்வுவது ஏன்?


அந்த கருத்தியல் பொருளாதாரம் சார்ந்ததோ,
சாதி சார்ந்ததோ,
மதம் சார்ந்ததோ,
மொழி சார்ந்ததோ,
இனம் சார்ந்ததோ,
மாந்தநேயம் சார்ந்ததோ,
வணிகம் சார்ந்ததோ,
இறையியல் சார்ந்ததோ

எந்தவித கருத்தியலாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தோல்வியைத் தழுவுவதற்கு காரணம்..

நாம் இனத்திற்கு வெளியே ஹிந்தியாவில் ஆதரவு தேடுவது தான்.

நாம் தற்போது கையிலெடுத்துள்ள தமிழ்தேசியம் பிற இனங்களின் தேசியவாத சக்திகளை சேர்த்துக் கொள்ளும் என்றால் நாம் மீண்டும் மண்ணைக் கவ்வுவது உறுதி.

நாம் ஹிந்தியாவில் வேறு எந்த இனத்திலும் ஆதரவு தேட வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை வாழும் தமிழர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்.

அதுவும் தாய்நிலத் தமிழர்கள் ஓரணியில் திரண்ட பிறகே செய்யப்பட வேண்டும்.

தமிழினத்தைக் காப்பாற்றும் முதல் பொறுப்பு தாய்நிலத் தமிழர்களுக்கே உண்டு.

அதை ஓரளவு அவர்கள் நிறைவேற்றியும் வருகிறார்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


ஆழ்மன அற்புத சக்திகள்-16...


1990ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் 'நாற்பது நிமிடங்கள்' என்ற நிகழ்ச்சியில் காட்டிய ஆக்ராவைச் சேர்ந்த டிட்டு சிங் என்ற சிறுவன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். தன்னை முன் பிறவியில் கொன்றவர்களைப் பெயருடன் அடையாளம் சொன்னான். பிபிசி செய்திக்குழு அவன் சொன்னதைத் தங்கள் பங்குக்கு ஆராய்ச்சி செய்து விவரங்களைக் கண்டறிந்தது....

வட இந்தியாவைச் சேர்ந்த டிட்டு சிங் இரண்டரை வயதுள்ள போதே தன் முற்பிறவி நினைவுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவனுடைய பெயர் சுரேஷ் வர்மா என்றும், மனைவி பெயர் உமா என்றும், இரண்டு பிள்ளைகள் அவனுக்கு இருப்பதாகவும் சொன்ன அவன் அவர்களுடைய பெயரையும் சொன்னான். ஆக்ராவில் அவன் வசித்ததாகவும் அவன் ரேடியோ, டிவி விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்திருந்ததாகவும் சொன்ன அவன் அதன் விலாசத்தையும் கூட சொன்னான். ஆரம்பித்தில் அவனை அவ்வளவாகப் பொருட்படுத்தாத பெற்றோர் நாளாவட்டத்தில் தங்கள் மூத்த மகனை எதற்கும் ஆக்ராவிற்குப் போய் விசாரிக்கும்படி சொன்னார்கள்.

டிட்டு சிங்கின் மூத்த சகோதரன் தன் தம்பி சொன்ன விலாசத்தைத் தேடிக் கண்டு பிடித்தான். நிஜமாகவே அங்கு அப்படி ஒரு டிவி, ரேடியோ கடை இருந்தது. உள்ளே சென்ற போது கல்லாவில் ஒரு விதவைப் பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் பெயர் உமா என்றறிந்த போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களா, அவருடைய கணவர் பெயர் சுரேஷ் வர்மாவா என்று கேட்க அந்தப் பெண்மணி ஆம் என்று சொன்னார். கடைசியில் தன் தம்பி சொன்னதையெல்லாம் சொல்ல அந்தப் பெண்மணியும் அதிர்ச்சி அடைந்தார். டிட்டு சிங் சொன்னது போல தன் கணவர் துப்பாக்கியால் தான் சுடப்பட்டு இறந்தார் என்பதையும் தெரிவித்தார்.

மறுநாளே உமா டிட்டுசிங்கைப் பார்க்க தானே பயணம் செய்தார். டிட்டு சிங் உமாவை சரியாக அடையாளம் கண்டு பிடித்ததோடு வேறு சில தகவல்களும் சொன்னான். அவையும் சரியாக இருந்தன. இரண்டு நாட்கள் கழித்து டிட்டுசிங் ஆக்ராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். பல பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த முற்பிறவியின் குழந்தைகளை அடையாளம் சொன்னான். கடைக்குச் சென்று தன் மரணத்திற்குப் பின் செய்த மாறுதல்களை சரியாகச் சொன்னான். தன்னைக் கொன்றவர்கள் பெயர் எப்படி சுட்டார்கள் எங்கு சுட்டார்கள் என்பதையெல்லாம் சொன்னான்.

பிபிசி குழு ஆக்ரா காவல் நிலையத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைப் பார்த்த போது அதெல்லாம் டிட்டுசிங் சொன்னதற்கிணங்கவே இருந்தன. பிபிசி குழுவின் காமிரா அந்த ரிபோர்ட்டுகளைப் படம்பிடித்துக் காட்டியதோடு டிட்டு சிங்கின் மழித்த தலையையும் காட்டியது. சுரேஷ் வர்மாவின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அதே இடத்தில் டிட்டு சிங்கின் தலையில் ஒரு மச்சம் இருந்ததைக் காட்டினார்கள்.

ஆச்சரியமாக உள்ளதள்ளவா? பூர்வ ஜென்மம் பற்றிய நம்பிக்கை இந்து மதம், புத்த மதம் போன்ற மதங்களில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவ மதத்திலும் பண்டைய காலத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதை ஆதார பூர்வமாக டாக்டர் ப்ரையன் வெய்ஸ் என்ற அமெரிக்க மனோதத்துவ நிபுணர் சுட்டிக் காட்டுகிறார். ரோமானியப் பேரரசர் கான்ஸ்டண்டைனும் அவர் தாய் ஹெலெனாவும் தங்கள் காலத்தில் மறுபிறவிகள் குறித்து பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் அழிக்கச் செய்தார்கள் என்று கூறுகிறார். பல பிறவிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை மோட்சம் பெற பல காலம் இருக்கிறது என்ற அசட்டையை மக்களிடையே ஏற்படுத்தும், அது சர்ச்சை பலவீனப்படுத்தும் என்ற எண்ணமே அதற்குக் காரனம் என்கிறார் அவர்.

டாக்டர் ப்ரையன் வெய்ஸ் ஆழ்மன சக்திகளை நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். அவருடைய ஆராய்ச்சிகளில் மனிதர்களின் முந்தைய பிறவிகள் பிரதான இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் இது போன்ற விஷயங்களில் சிறிதும் நம்பிக்கையில்லாத ஒரு மனோதத்துவ மருத்துவராக இருந்தார். ஆன்மீகம், அபூர்வ சக்திகள் ஆகியவற்றிலோ, மறுபிறப்பிலோ நம்பிக்கை இல்லாத அவரை அடியோடு மாற்றியது அவரிடம் 1980ஆம் ஆண்டு சிகிச்சை பெற வந்த காதரின் என்ற பெண்மணி தான்.

அவரிடம் 18 மாதங்கள் வந்து சிகிச்சை பெற்றும் காதரீன் குணமடையாமல் போனது ப்ரையன் வெய்ஸை குழப்பியது. வழக்கமான எல்லா உளவியல் மருத்துவ முறைகளையும் பயன்படுத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போகவே ஒரு நாள் காதரினை ஹிப்னாடிசம் செய்து "உனக்கு இந்த உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் ஆரம்பமான அந்தக் காலத்திற்கு செல்" என்று கட்டளையிட்டார்.

காதரின் தன் குழந்தைப்பருவத்திற்குச் சென்று அந்த நிகழ்ச்சிகளை வர்ணிப்பாள் என்று நம்பிய வெய்ஸ் ஏமாந்து போனார். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்னால் சென்று தன் முந்தைய பிறவிகளைப் பற்றி அவள் சொல்ல ஆரம்பித்த போது அவர் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார். அவள் நடிகை அல்ல, பலவித ஆளுமைகளை உடைய பெண்மணியுமல்ல என்று ஆராய்ந்தறிந்த வெய்ஸ் அவளுடைய முந்தைய பிறவித் தகவல்களை ஆராய முனைந்தார். சரிபார்க்க முடிந்த ஒரு சில விவரங்கள் உண்மையென்று தெரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த தகவல்களை வைத்துக் கொண்டு காதரினை அவரால் குணப்படுத்தவும் முடிந்தது.

அந்தப் பெண்மணி காதரினை மையமாக வைத்து 1988ல் "பல வாழ்க்கைகள், பல ஆசான்கள்" (Many Lives, Many Masters) புத்தகத்தை ப்ரையன் வெய்ஸ் எழுதி அது மிகவும் பிரபலமடைந்தது. அவர் அதே போல் வேறு பல புத்தகங்களும் எழுதியுள்ளார். அவர் 1980ல் இருந்து சிகிச்சை செய்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் உளவியல் பிரச்னைகளுக்கான காரணங்கள் முற்பிறவிகளில் இருந்ததாகக் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்திலேயே சில துறைகளில் அபார ஞானம் படைத்த சில அதிசயக் குழந்தைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படிப்பட்ட ஞானமெல்லம் அவர்கள் முற்பிறவியில் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பதே ப்ரையன் வெய்ஸ் போன்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இது வரை அபூர்வமான சக்திகள் படைத்த தனி மனிதர்களைப் பற்றி கண்டோம். இது போல் இன்னும் ஏராளமான உதாரணங்களை ஆதாரங்களுடன் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த மனிதர்களின் வெளிப்படுத்தும் சக்தி வகைகள் நாம் இது வரை கண்ட சக்திகளின் தனி அல்லது கூட்டு வகைகளாகவே இருக்கக் கூடியவை என்பதால் அந்த செய்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி மனோசக்தி பற்றிய பொதுவான சுவாரசியமான ஆராய்ச்சிகளைப் பற்றியும், அந்த சக்திகளை நமக்குள் அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் காண்போமா?

மேலும் பயணிப்போம்...