13/02/2019

திருப்பதி லட்டுவில் இனி ஆவின் நெய்...


மக்கள் மத்தியில் பிரசித்து பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம். இந்நிலையில் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க 7 லட்சத்து 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. நெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் லட்டுக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 2003-2004ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது...

பாஜக மோடி நண்பன் அம்பாணி மற்றும் திமுக ஸ்டாலின் ஒப்பந்தம்...


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசை தமிழர் இசையே...


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்.

இசையியல் : ச. மெய்யப்பன் எம்.ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மணிவாசகர் பதிப்பகம்...

Control Ur Diabetes / சக்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?


https://youtu.be/POmErx8fwas

Subscribe the channel for more tips...

இந்தி எதிர்ப்பு போராட்டம் - பொள்ளாச்சி படுகொலை...


1965 பிப்ரவரி 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்தது என்ன?

அதை ஏன் பொள்ளாச்சிப் படுகொலை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்?

நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு மாநாடு நடைபெறவுள்ளது.

உள்ளூர் கட்சிகள், அமைப்புகள் பலவற்றோடு இணைந்து தன்னாட்சித் தமிழகம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?

இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என இந்திய அரசு அறிவிக்க முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக மாபெரும் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள் தமிழ் மக்கள்.

1965 இல் நடந்த அந்த மொழிப்போரில் தமிழகம் முழுக்க தீப்பற்றியது.
மத்திய துணைராணுவப்படைகளும் தமிழ்நாட்டு காவல்படைகளும் நடத்திய நரவேட்டையில் ஐந்நாறு பேருக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பல தமிழ் இளைஞர்கள் தாங்களாகவே தீக்குளித்தும் நஞ்சு அருந்தியும் தமிழுக்காக உயிர்துறந்தார்கள்.

1965 பிப்ரவரி மாதம் தமிழகமெங்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிக மக்கள் பலியானது பொள்ளாச்சியில்தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிப்ரவரி 12, 1965 இல் பொள்ளாச்சியில் என்னதான் நடந்தது?

முழு விவரத்தையும் பேராசிரியர் அ.ராமசாமி தன்னுடைய மொழிப்போர் வரலாறு தொடர்பான நூலில் ரத்தம் சொட்டச்சொட்ட விவரித்திருக்கிறார்.

இதோ அது...

தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

அனைத்துக்கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் முதலியன மூடப்பட்டிருந்தன.

தொடர்வண்டிகள் ஓடவில்லை.
அனைத்துப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

தனியார் வண்டிகளும் ஓடவில்லை.
முக்கியமான வணிகப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடைப்பகுதிகள் ஆகிய அனைத்தும் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன.

எப்போதாவது இராணுவ வண்டிகளும் காவல் வண்டிகளும் மட்டுமே சாலைகளில் ஓடுவதைக் காணமுடிந்தது.
இயல்பு வாழ்க்கை முற்றிலும் நின்றுபோய்விட்டது.

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரசு குறிப்பிட்டதுபோன்று, சில இடங்களில் வெடித்த கலவரங்களும், துப்பாக்கிச்சூடுகளும் முழுக்கடையடைப்பின் அமைதியைத் தகர்த்தெறிந்தன.

முதல் முறையாக இராணுவம், பொள்ளாச்சியில் துப்பாக்கியால், அதுவும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது.

காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு சில மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் திரண்டு விட்டனர்.

அந்த வேளையில் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் அஞ்சலகத்தின் மேல் ஏறி, அஞ்சலகப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயற்சித்தான்.

அவன் அஞ்சலகத்தின் மேல் ஏறிச்சென்றதைத் தடுக்காமல், அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள், திடீரென்று அவனை இந்தி எழுத்தை அழிக்காமல் கீழே இறங்குமாறு கூறினர்.

ஆனால், அதற்கு அந்த மாணவன் மறுத்துவிடவே, அவனைத் துப்பாக்கியால் சுடப்போவதாகக் காவலர்கள் மிரட்டினர்.

அதற்கு அஞ்சாமல், அந்த மாணவன் இந்தி எழுத்தை அழித்தான்.

உடனே, ஒரு காவலர் அவனைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டார்.

அவன் அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்துச் செத்தான்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டம் காவலர்களை நோக்கிச் சரமாரியாகக் கற்களை வீசியது.

காவலர்கள் தடியடியில் இறங்கவுமே கூட்டம் கலைந்தோடியது.

ஆத்திரம் அடைந்த கூட்டம் மீண்டும் காவலர்களைக் கற்கள் வீசித்தாக்கியது.
அங்கிருந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

கலைந்து ஓடிய கூட்டம் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களுக்குத் தீவைக்க முயற்சித்தது.

இதற்கிடையே காவலர்கள் கோயம்புத்தூரில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இராணுவ உதவியைக் கேட்டனர்.

அதன்படி, ஆறு வண்டிகளில் இராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு ஏறத்தாழ நடுப்பகலின் போது வந்து சேர்ந்தனர்.

பொள்ளாச்சி வந்து சேர்ந்ததுமே, இராணுவத்தினர் கோயம்புத்தூர் சாலையில் இருந்த அஞ்சலகம், முன்பு உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

அஞ்சலகம் முன்பு கூடியிருந்த கூட்டம் அஞ்சலகத்தைத் தாக்க முயற்சித்தது.
இராணுவத்தினர் இயந்திரத்துப்பாகியை எடுத்து வைத்துக் கொண்டு கலைந்து செல்லவில்லையென்றால் சுட்டு விடுவதாக எச்சரித்தனர்.

அப்போது குழந்தைகள் எல்லாம் கூட்டத்தில் இருப்பதாகக் கூறி சிலர் குழந்தைகளைத் தூக்கிக்காண்பித்துச் சுட்டு விட வேண்டாம் என்றும் கலைந்து சென்று விடுவதாகவும் கூறினர்.

ஆனால், கூட்டம் கலைந்து செல்வதற்காகச் சில வினாடிகள் கூடப் பொறுத்துப்பார்க்காமல் இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

உடனே, கூட்டம் கலைந்து பல திசைகளில் ஓடியது.

இராணுவத்தினர் இங்கே சுட்ட போது தான் நான்கு வயதே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்து போனது.

கூட்டம் எல்லாம் சென்றபின், அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார்.

கலைந்தோடிய , ஆத்திரங்கொண்ட கூட்டம் பல இடங்களில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களைத் தாக்கித் தீ வைக்கத் தொடங்கியது.

இராணுவத்தினர் நடமாட்டத்தைத் தடுக்க, சாலையின் நடுவே பாறாங்கற்கள் வைக்கப்பட்டன.

எல்லா வகையான பொருட்களையும் கொண்டு வந்து சாலையின் நடுவே குவித்துவைத்துத் தீ வைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தைக் கூட்டம் சூறையாட முயற்சித்தபோது, இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில், வேலுச்சாமி என்ற அரசு அலுவலர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மற்றொரு கூட்டம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், சமுத்திரம் இராம அய்யங்கார் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கும் தீ வைத்தது.

தீயணைப்பு நிலைய அலுவலகம், நீதிமன்றம் ஆகியவை சூறையாடப்பட்டது.

அங்கிருந்த நாற்காலிகள், மேசைகள் கோப்புகள் முதலியன எடுத்துக்கொண்டு வரப்பட்டு, சாலையின் நடுவே போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இராணுவத்தினர் இங்கும் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை விரட்டியடித்தனர்.

கூட்டத்தில் ஒரு பகுதியினர் காங்கிரசுக் கட்சியைச்சேர்ந்த சிலரைத் தாக்கினர்.
காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் மகாலிங்கம் வீடும் தாக்கப்பட்டது.

இராணுவத்தின் நடமாட்டத்தைத் தடுக்க மயிலஞ்சந்தை அருகே கூடிய பெருங்கூட்டம் சாலையில் கற்களையும் பிற பொருட்களையும் கொண்டு வந்து போட்டது.

இந்தக் கூட்டத்தின் மீதும் இராணுவம் துப்பாக்கியால் சுட்டது.

அங்கிருந்து ஓடிய கூட்டம் தேர்முட்டிக்கு அருகிலிருந்த குதிரை வண்டிகளை இழுத்துவந்து நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தியது.

நல்லப்பா திரையரங்கம், செல்லம் திரையங்கம் ஆகியவற்றின் முன் நின்றிருந்த கூட்டத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

கச்சேரிச் சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இராசேந்திரன் என்ற மாணவனின் கால்களில் குண்டு பாய்ந்த்து.

ஓர் இளைஞரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினார்.

இளைஞரும் துணிவிருந்தால் சுடுங்கள் என்று கூறி முன்னே வந்து நின்றார்.
அங்கு விரைந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் அவர் காலைச்சுட்டார்.

உடனே கூட்டத்தினர் அவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

அந்த இளைஞர் அருகிலிருந்த மருத்துவமனையில் காலுக்குக் கட்டுப்போட்டுக்கொண்டு வந்து, மீண்டும் கூட்டத்தில் சேர்ந்து தீவைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இம்முறை இராணுவத்தினர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுச்சாகடித்தனர்.

ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சுட்டபோது, நடுத்தர வயதுள்ள ஒருவரின் பின்னால் பத்து வயதுச் சிறுவன் ஒளிந்திருந்தான்.

அப்போது அந்த மனிதரின் வயிற்றில் துளைத்தத் துப்பாக்கிக் குண்டு, பின்பக்கமாக வெளியே வந்து, அந்தச்சிறுவனின் நெற்றியைத் துளைத்ததில், இருவருமே அந்த இடத்தில் இறந்து விட்டனர்.

இதைப்போன்ற எத்தனையோ நெஞ்சை உலுக்கும் செய்திகளை இந்நூலாசிரியர் பொள்ளாச்சிக்கு ஆய்விற்காக சென்ற போது கேட்க நேரிட்டது.

கூட்டத்தை இராணுவம் கலைத்த பின்பு, பல இடங்களில் நகர் முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.

பெரிய கடைத்தெரு உட்பட முக்கியத்தெருக்கள் எல்லாம் கற்களும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும், எரிந்தும் எரியாமலும் கிடக்கின்ற கட்டைகளாக நிறைந்து ஒரு போர்க்களம் போல் காட்சி தந்தன.

மறுநாள் இந்தியன் எக்சுபிரசில் வெளியான செய்தியைப்போல்,
மாநில வரலாற்றில், நேற்றைய தினம் (பிப்ரவரி 12) முதல்முறையாக இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய பொள்ளாச்சி ஒரு பெரிய சுடுகாட்டைப் போல காட்சியளித்தது. சாலைகளில் போடப்பட்டிருந்த தடைகளை அப்புறப்படுத்த இராணுவத்திற்கு நான்கு மணிநேரத்திற்கும் மேலானது.

அதன்பின் எம்.சி. பனிக்கர், சத்யபால் ஆகிய தளபதிகளின் தலைமையில் இராணுவ வீரர்கள் பொள்ளாச்சி முழுவதும், அணிவகுத்து வந்தனர்.
பொள்ளாச்சியின் நகரமைப்புப் படம் இராணுவத்தின் கையில் கொடுக்கப்பட்டது.

முக்கியமான இடங்களில் எல்லாம் இராணுவ வீரர்கள் காவல் இருந்தனர். அன்று இரவும் அதைத்தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இரவில் அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.

இரவு வெளியே வந்த இளைஞர்கள் எல்லாம், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் இராணுவத்தினரிடம் இருந்தது.

1938 லிருந்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் போராட்டத்தை அடக்க இராணுவம் தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக வந்தது 1965 இல் தான்.

வந்த மூன்றாவது நாளே இராணுவத்தினர் துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை; அதுவும் இயந்திரத்துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை ஏற்பட்டது பொள்ளாச்சியில்..

ஆனால், மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்த அறிக்கையில் இயந்திரத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை மறுத்தார்.

முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே பொய்யைக் கூறினார்.

அவர், 1965 மார்ச்சு 27 ஆம்நாள் சென்னை சட்டப்பேரவையில் பேசியபோது, மாநிலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க இயந்திரத்துப்பாக்கியை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

இராணுவம் யாரிடமிருந்து ஆணைகள் பெறுகிறது?

காவல்துறையிடமிருந்தா அல்லது அரசிடமிருந்தா? என்று ஏ.குஞ்சன் நாடார் என்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு
நான் வருத்தப்படுகிறேன். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் என்னால் கூறமுடியாது என்று முதலமைச்சர் பதிலளித்தார்.

மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே அந்த மாநிலத்தில் இராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒரு நிலைமை தான்.

எப்படியாயினும் பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு இராணுவம் இயந்திரத்துப்பாக்கியால் சுட்டது என்பதுதான் உண்மை.

பொள்ளாச்சியில் பல கட்டங்களில் இராணுவ வீரர்கள் சுட்டதில் எத்தனை பேர் இறந்திருப்பர்?

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் என்றுமே கிடைக்காமலே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

எல்லாமே மூடி மறைக்கப்பட்டுள்ளன.
உண்மையை மறைப்பதற்காக இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டன.

தெருவிலே கிடந்த பிணங்களை எவரும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தொடக்கத்தில் ஓரிரு பிணங்களை மட்டுமே கூட்டத்தினர் எடுத்துச் சென்றனர்.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு வெளியில் வந்தால், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அஞ்சியே பலர் வீட்டில் இருந்தனர்.

தங்கள் வீட்டுப்பிள்ளை இறந்துவிட்டது என்று தெரிந்தும் அழுதால் எங்கே இராணுவத்தினர் வீட்டிற்குள் வந்துவிடுவரோ என்று அஞ்சிப்பேசாமல் இருந்தனர்.

பிணங்களை எல்லாம் சேகரித்த இராணுவத்தினர் சிலவற்றைப் பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் போட்டுத்தீ வைத்துக் கொளுத்தினர்.

சுடுகாட்டைச் சுற்றிலும் இராணுவத்தினரும் துப்பாக்கி பிடித்த காவலரும் நின்று காவல் காத்தனர்.

பிணங்கள் எரிக்கப்பட்ட அன்று, அந்தப்பக்கத்தில் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

அதன்பின் அந்தப்பக்கம் நடந்து செல்கின்றவர்களோ அல்லது பேருந்து மற்ற வண்டிகளில் செல்கின்றவர்களோ சுடுகாட்டைத் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சிச் சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்பட்டதுபோக, மற்றவை இராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டு, மதுக்கரை இராணுவ நிலையம் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன.

இப்படி நடைபெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையக் கணிப்பது எளிதான செயலன்று.

ஆனால், நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் கூறிய செய்திகளிலிருந்து குறைந்தது 80 பேர் அல்லது அதிகமாக 120 பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அரசு கொடுத்த எண்ணிக்கை வழக்கம் போல் குறைவுதான் என்றாலும் , இந்தத் தடவை அறிவித்த எண்ணிக்கை சற்று நகைப்புக்கிடமாகவே இருந்தது.

பத்தே பேர் தான் கொல்லப்பட்டார்கள் என்பது தான் அரசின் எண்ணிக்கை..

1965 இல் தமிழ்நாட்டில் 50 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் , அமைதியை நாடும் பண்பாடு மிக்கப் பொள்ளாச்சி மக்கள் தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது கொடுமையாகும்.

பேராசிரியர் அ.இராமசாமி அவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு  நூலின் இரண்டாம் பாகத்தில் 'பொள்ளாச்சிப் படுகொலை' எனும் அத்தியாயத்திலிருந்து...

நமது தொன்மையான பயிர் வகைகளைப் பயிரிடுவோம்...


தியானம்...


தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை..

தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று..

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா?

தியானத்திற்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள்.

கண்களை மூடுங்கள். பிறகு தெரியும்..

உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்..

எவ்வளவு உங்களை பிடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை..

தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் தியானம் என்றால் என்னவென்று புரிய வேண்டும்.

பிறகு தியானம் பழக வேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது..

ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல்
ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று மிகவும் தவறாக புரிந்துள்ளனர்.

அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது மன ஒருமைப்பாடு (concentration) ஆகும்.

அது தியானம் அல்ல.

நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும்.. உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக, சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியானநிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சி தான் உள்ளது.

அது, நீங்கள் எந்த செயல் செய்யும் போதும் அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல் பழகுவதே ஆகும்.

உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி, தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள் மதிய உணவை உண்ணும்போது,
தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல், தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு அளிக்கப்பட
உணவை ரசித்து, ருசித்து முழுமையாக உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு மூச்சிவிடவும், பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா..

தியானமும் நீங்கள் முச்சு விடுவதைப் போன்றதே..

யாரும் உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத் தான் அதை அடைய வேண்டும்.

அதாவது உங்கள் தீவிர முயற்சியால் தியானம் என்பது "விழிப்பாக இருப்பது" அவ்வளவே.

வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம்.

வேலை செய்யும் போது அந்த வேலையிலேயே கவனமாக இருப்பதால் வீண் சிந்தனையை தவிர்கலாம்.

சும்மா இருக்கும் போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள்.

ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள்.

சிந்தனைகளை கவனியுங்கள்.

இயல்பாகவே வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிடும்...

ஓடும் ரயிலில் மோடியை விமர்சிக்க கூடாது என்று சொன்ன பாஜக கார்கள்.. மக்கள் கொடுத்த செருப்படி...


https://youtu.be/REqx5HFuO7g

Subscribe the channel for more news...

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பவர்கள்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள். அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

தமிழினத் துரோகி விசிக திருமா வின் அரசியல் வியாபாரம்...


ஆவாரம் பூ பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?


ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு அருமருந்து...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.. என்ற மருத்துவப் பழமொழி உண்டு..

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்...

லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை...


தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களுக்கான பட்டியலை 8 வாரத்திற்குள் இறுதி செய்யவேண்டும்

தேடுதல் குழு பட்டியல் அளித்த பிறகு, லோக் ஆயுக்தா அமைப்பை 4 வாரங்களுக்குள் அமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான லோக் ஆயுக்தா தேடுதல் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு...

தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டு அரசியல் வியாபாரம் செய்யும் விசிக திருமா...


https://youtu.be/sPhxE2dI98Q

Subscribe the channel for more news...

4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் – ஏலியன்ஸ் 1...


அன்றும் இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஏலியன்ஸ் எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும்.

அவ் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு.

ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப் பார்த்தாக வேண்டும்.

பரிமாணம் (dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும் மாமேதையையின் தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity)  தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானதாகும்.

எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம் என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்…

தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக கொள்ளப்படுகிறது.

அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள பரிமாணங்கள் இவையே.

(இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம் தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)

சினிமா துறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது.

இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்…. என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை.

சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. தியரி
ரீதியிலாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை ( ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்….

காலம் தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது.  இயன்றவரை விளக்குகிறேன்.

ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது.

நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது.

நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது.

எனவே, இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம் வித்தியாசப்படிகிறது.

இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்…

அதாவது…

ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது.

அதே, காதலி வந்ததும்… அந்த 1 நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது.

சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய வகையில் சொல்ல ரைபண்ணுறன்.

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி...

அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் ) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல முடியும்.

அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில் பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம்.

இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.

ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது.

ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும்.

அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.

2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள்.

ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… (3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்…

2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்…

அது நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை பொறுத்தது.

10 வருடகாலப் பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.

நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம் இதுவும் இறுதிவேகம் தான்…

சராசரி வேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல…

சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.).

ஆகவே… எமது வாழ்நாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை….

சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை….

அதனால்… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் …

இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது….
என நாம் நினைப்பது சின்னப்பிள்ளை தனமானது..

இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள நமக்காக (பூமிக்காக) மட்டும்தான் படைக்க பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது.

ஆகவே… நம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எள‌லாம்…

எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்) அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி எலலாம்.

ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது…

வேற்று கிரக வாசிகளும் நம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே… அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே..

எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்…

ஆனால்…

நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா?

அப்போ பபதவியை ராஜினாமா பண்ண வேண்டியது தானே...?


ஜி.எஸ்.டி. வரி வசூலில் தங்களது பங்கை பெற மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது  - தம்பிதுரை...


தமிழர்களும் செவ்விந்தியர்களும்...


தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே மாயன் (Mayan) என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. மாயன்(Mayan) Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது.

2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

Omlec, Aztec, மாயன் (Mayan), Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கொலம்பஸ் (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம்.

இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டு பிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கொலம்பஸ்(Columbus)-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டு பிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே.

வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டு பிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்பு தானே..

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப் போகின்றன.

செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள்.

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள்.

தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு.

தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது.

Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை.

மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள்.

தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன.. இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன் (Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பது போல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான். உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது...

பாஜக மோடி நண்பன் அம்பாணியின் ஏமாற்று வேலைகள்...


விரைவில் தேர்தல் வருது டூம் டூம் டூம்...


தமிழகம் முழுவதும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு ரூபாய் 2000 சிறப்பு உதவி வழங்கப்படும் -  சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சிறப்புதவி  வழங்குவதற்காக 1200 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் பழனிசாமி.

புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 2000 வழங்கப்படும்...

மதிமுக வைகோ நாயூடு கலாட்டா...


தமிழினமே உலகின் மூத்தகுடி...


முதன்முதலில் இங்கு 1863-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கற்கால மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கிடைத்தன. அதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் கற்கால மனிதன் இருந்ததையே உலகம் நம்பியது...

Proof: https://goo.gl/ov2o84
https://goo.gl/3yHcuj

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு; புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை...


சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுகள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பைத் உடனடியாக தடுக்காவிட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.

புழல் ஏரியின் அடிப்பகுதியில்  படிந்திருக்கும் படிமங்களில் இருந்து 32 மாதிரிகளையும், 6 தண்ணீர் மாதிரிகளையும் எடுத்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் புழல் ஏரி நீரில் நுண்பிளாஸ்டிக் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 27 துகள்கள் நுண்பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலந்த குடிநீரை அப்படியே குடிப்பதால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது.  தண்ணீருடன் கலந்து அந்நியப் பொருளாக உடலுக்குள் நுழையும் நுண்பிளாஸ்டிக் துகள்கள் இயல்பாக வெளியேறி விடும். ஆனால், நீர் மூலம் பரவும் நோயைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் 90 விழுக்காட்டினர் குடிநீரைக் காய்ச்சி தான் குடிக்கின்றனர். புழல் ஏரியிலிருந்து எடுத்து விநியோகிக்கப் படும் சென்னைக் குடிநீரை காய்ச்சும் போது, 100 டிகிரி வெப்பநிலையில் நுண்பிளாஸ்டிக் துகள்கள்  உருகி டையாக்சின் என்ற நச்சுப் பொருட்கள் உருவாகி தண்ணீரில் கலந்து விடுகிறது. காய்ச்சப்பட்ட தண்ணீரைக் குடிக்கும் போது, அதனுடன் கலந்து டையாக்சின் நச்சுவும் நமது உடலுக்குள் செல்கிறது.

டையாக்சின் மிகவும் மோசமான வேதிப்பொருளாகும். அதை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மிகவும் எளிதாக தொற்று நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படும். அதுமட்டுமின்றி, வளர்ச்சிக் குறைபாடுகள், மலட்டுத் தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்தையும் கடந்து புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான குடிநீரே, நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலப்பு காரணமான உயிரைக் குடிக்கும் நோய்களை ஏற்படுத்துவது மிகவும் கொடூரமானதாகும். இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக மனிதகுலம் இழைக்கும் குற்றங்களின் காரணமாகவே இந்நிலை ஏற்படுகிறது.

புழல் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள தெர்மோக்கூல் தான் புழல் ஏரி நீரில் நுண்பிளாஸ்டிக் கலக்க முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மீன்பிடி வலைகள் மூலமாகவும் நுண்பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  புழல் ஏரியில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசியர்கள் ஆய்வு நடத்தியதன் மூலம் இந்த ஆபத்து நமக்கு தெரியவந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற 3 ஏரிகளான பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இன்னும் ஆய்வுகள் நடத்தப்படாததால் அவற்றில் இத்தகைய நுண்பிளாஸ்டிக் கலந்திருக்கிறதா? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. நுண்பிளாஸ்டிக் கலப்பதற்கான காரணங்களை வைத்துப் பார்க்கும் போது, அந்த ஏரிகளிலும் நச்சுப்பொருட்கள் கலந்திருக்கக்கூடும்.

சென்னை குடிநீர் வாரியம் மூலமாக ஒரு கோடிக்கும் கூடுதலானவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் அடித்தட்டு மக்கள் தான் இந்த தண்ணீரை காய்ச்சிக் குடிக்கின்றனர். நுண்பிளாஸ்டிக் கலந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் அடித்தட்டு மக்களாகத் தான் இருப்பார்கள். ஏரி நீரைச் சுத்திகரிப்பது என்பதை, குளோரின் கலப்பதுடன்  சென்னை குடிநீர் வாரியம் நிறுத்திக் கொள்கிறது. இதனால் நுண்பிளாஸ்டிக் எந்தத் தடையுமின்றி ஏழைகளின் சமையலறைகளில் நுழைந்து விடுகிறது. தண்ணீரில் நுண்பிளாஸ்டிக்குகள் கலப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளிவராததால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மூலம் இப்போது நுண்பிளாஸ்டிக் கலப்பு குறித்த உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற ஏரிகளிலும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னர், ஏரிகளின் நீரில் நுண்பிளாஸ்டிக் கலப்பதைத் தடுக்கும் வகையில், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெர்மோக்கூல் போன்ற நுண்பிளாஸ்டிக் துகள்களை  வெளியிடும் பொருட்களை இருப்பு வைக்கவும், ஏரிகளில் மீன்பிடி வலைகளை பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அத்துடன்,  குடிநீர் விநியோக வழிகளில் வடிப்பான்களை பொருத்துவது, நீரிலிருந்து நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து  அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்...

பாஜக மோடி & SBI வங்கி மோசடிகள்...


திருட்டு திராவிடத்தின் இருட்டு வேலைகள்...


அந்தெந்த மொழிவாரி மாநிலத்தை அந்த மொழிக்கு சொந்தகாரனே ஆள வேண்டும் என்ற தேவை ஏன் வருகிறது என்பதை இந்த படத்தை பார்த்துப் புரிந்துக் கொள்ளலாம்...

தாலியும் தமிழரும்...


ஆரியத்துக்கும் பெரியாரியத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது..

தமிழ்நாட்டில் ஆரியமும் பெரியாரியமும் போடும் பங்காளிச் சண்டையில் தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் பணயம்  வைக்கப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் எதிர்க்கவும், கண்டிக்கவும் வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்.

ஆரியம் ஒருபோதும்  தமிழினத்தின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டதில்லை. அதன் வாதமெல்லாம் தமிழர்களுக்கென்று தனித்துவமான பாரம்பரியமோ, பண்பாடோ எதுவும் கிடையாது. எல்லாமே இந்திய உபகண்டத்தில், இந்துக் கலாச்சாரத்திலிருந்து இரவல் வாங்கியவை தான் என்பது தான். 

தமிழ் மொழியின் தொன்மையையும், தனித்துவத்தையும் கூட அவர்களில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை, தமிழை விட உயர்வாக  சமக்கிருதத்தை தூக்குவது தான் ஆரியத்தின் வழக்கம்.

தமிழர்கள் தாலி அணிவதும், இந்துக் கலாச்சாரத்தின்  ஒரு அங்கம் தான், அதுவும் ஆரியத்தின் தொடர்ச்சி என்கிறார்கள். இந்துத்துவா பார்ப்பனீயவாதிகள் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் பெரியாரியவாதிகள்.

திருமணத்தில் தாலியணியும் வழக்கம் இன்று இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழ்ப்பெண்கள்  சங்க காலத்திலேயே  ‘ஈகை அரிய இழையணி’ அணிந்திருந்தனர் என்பதற்கு புறநானூற்றிலேயே ஆதாரமுண்டு.

ஆரியப் பார்ப்பனீயம் தமிழர்களிடமிருந்து தாலி அணியும் பாரம்பரியத்தை இரவல் வாங்கியிருக்கலாமே தவிர, அது தமிழர்களின் பாரம்பரியம், அது பெண்ணடிமைச் சின்னம் அல்ல என வாதாடுவதற்குப் பதிலாக..

புறநானூற்றுக் காலம் தொட்டு, தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக, ஒருவனுக்கொருத்தி என்ற தமிழர்களின் கொள்கைக்கு அடையாளமாக  இருந்த  தாலியணியும் வழக்கத்தை, ஆரியப் பார்ப்பனீயத்திடமிருந்து  தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறி தாலி அறுக்கும் போராட்டமும் நடத்தும் பெரியாரியத்துக்கும், பார்ப்பனீயத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, என்று தான் எண்ணத் தோன்றுகிறது..

ஏனென்றால் இரண்டு குழுவினரது நோக்கமுமே தமிழர்களைத் தனித்துவமான கலை, கலாச்சாரம் அற்றவர்களாக்குவதும். அவர்களைத் தமிழர்களாக, தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபடாமல் தடுப்பதும் தான். 

இந்த விடயத்தில் பார்ப்பனீயத்துக்கும், பெரியாரியத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ் இந்துப் பெண்கள்  மட்டும் தாலியணிவதில்லை. மாறாக சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது வாழ்க்கைத் துணைவிக்கு தமிழ்க் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக, தமது அன்பைக் காட்டும், தமது  மணவாழ்க்கையின் அடையாளமாகத் தான்  தாலியை அணிவிக்கிறார்களே தவிர, எந்த தமிழனும் மணவறையில்  தனது எதிர்கால வாழ்க்கைத் துணைவிக்கு, தனது வருங்கால வாரிசுகளின் தாய்க்கு, தாலியைக் கட்டும்போது, இந்தப் பெண் எனது அடிமை அந்த அடிமைத்தனத்தின் சின்னமாக இந்த தாலியைக் கட்டி, இவளை இன்று முதல் நான் அடிமையாக்கிக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டு தாலி கட்டுவதில்லை.

தாலியை அணிந்து கொள்ளும் எந்த தமிழ்பெண்ணும் இன்றைக்கு முதல் நான் இவனுக்கு அடிமை, இது அடிமைத்தனத்தின் சின்னம் என்று நினைத்துக் கொண்டும் தாலியை அணிவதுமில்லை.

தாலி அணிவது தமிழர்களின் மரபே தவிர இந்துக்களுக்கு மட்டும் உரிய வழக்கமல்ல.

இன்றும் ஈழத்தமிழர்களில் இந்துக்களும், கிறித்தவர்களும் தாலியணிகின்றனர்..

அது மட்டுமன்றி, தீவிரவாத இஸ்லாமிய வஹாபிசம் வேரூன்றும் வரை தமிழ் முஸ்லீம்கள் கூட திருமணத்தில் பிறை வடிவிலான பதக்கத்தை சங்கிலியில் கோர்த்து பெண்ணுக்கு தாலியாக அணிந்தனர். அவ்வாறு சாதி, மத வேறுபாடின்றி, தமிழர்கள் அனைவரினதும் பாரம்பரியங்களில் ஒன்றாகிய தாலியணியும் வழக்கத்தை, பெண்ணுரிமை என்ற போர்வையில்,  இந்துக்களின் சடங்காக, பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்கள் இரவல் வாங்கிய வழக்கமென எண்ணி, அது விட்டொழிக்கப்பட வேண்டுமென்று போராடும் பெரியாரியமும், பார்ப்பனீயமும்  ஒன்றிணைந்து தமிழர்களுக்கெதிராக சதி செய்கின்றனவோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக, இக்காலத்தில் சாதாரண தொழில் செய்கிற தமிழ் ஆண்கள் கூட, தமது திருமணத்துக்கு கஷ்டப்பட்டு வேலை செய்து காசைச் சேர்த்து அதிகளவு தங்கத்தில்  தனது எதிர்கால மனைவிக்குத் தனது அன்பின் அடையாளமாக அணிவிக்கும் பொற்தாலிக் கொடியை, அடிமைச் சின்னமாக்கி, அவன் தனது மனைவியை  அடிமையாக்கத் தான் ஓடியோடி உழைத்தான் என்று கருத்துப்படும் படி  கூறுவது எவ்வளவு இரக்கமற்ற செயல் என்பதை பெரியாரிஸ்டுகள் நினைத்துப் பார்ப்பதில்லை போல் தெரிகிறது..

அவர்களின் நோக்கமெல்லாம் தமிழர்களின், பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் அழித்து.. திராவிடனின் தாசி கலாச்சாரத்தை தமிழனிடம் திணிப்பது மட்டும் தான்...