05/01/2018

அறிவோம் குமரி கண்டம் - 5...


அறிவோம் குமரி கண்டம் - 4...


நம்ப முடியாத தடுப்பூசி உண்மைகள்...


அறிவோம் குமரி கண்டம் - 3...


தேன் இரகசியம்...


அறிவோம் குமரி கண்டம் - 2...


அறிவோம் குமரி கண்டம் - 1...


ஊடகங்களால் அதிகமாக பாதிக்கப்பட்டது பொறியாளர்கள் தான்...


நீ...உன் வேலையை பாத்துட்டு போ.. பாஜக பினாமி கன்னடன் கமல்ஹாசனுக்கு ஆர்கே நகர் மக்களின் பதிலடி...


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்...


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம், கடலூரில் அரசு பேருந்துகள் இயங்க வில்லை, பொதுமக்கள் அவதி...

அரசுகள் அம்பலம் - isis அமெரிக்காவால் வளர்க்கப்பட்டதின் நோக்கம்...


மூளையும் – பிரபஞ்ச சக்தியும்...


நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய் விடுகின்றது – ஏன் ?

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை. நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை – இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்.

நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது – அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது – அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் – சுறுசுறுப்பும், தெம்பும், உற்சாகமும் கிடைத்து விடுகின்றது.

இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும், தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து – அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து, உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம், ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்.

ஞானிகள் தங்கள் சாதனையில், மனதை – மூளையை அமைதி – ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி.

அதனால் நாமும், அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம், தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.

இது எப்படி இருக்கிறது என்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தியை குறைப்பது போல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

புறத்திலுள்ள சூரியன் – ஆன்ம சூரியன் ஆகும்...

2. கோவில் கருவறை அமைப்பு..

தமிழ் நாட்டில், அனேகமாக எல்லா கோவில்களிலும், மூலஸ்தானம் – மூலவர் – ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார்.

அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில்..

ஆயிரங்கால் மண்டபம் – மூளை
மூலவர் – ஆன்மா..

மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது.

3. நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய, இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம், ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து, மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் – இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்...

பாஜக பினாமி கன்னட கமல் கலாட்டா...


தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி...


சென்னையில் ஆங்காங்கே போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்தை இயக்காமல் போராட்டம்.

இன்னும் பல மாவட்டங்களில் இந்த போராட்டம் எதிரொளிக்க வாய்ப்பு...

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது...


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன.
கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவனும், ஆய்வுக்குழுத் தலைவருமான, எம்.சின்னக்கண்ணன் இந்த மாநாட்டில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, இளம் விஞ்ஞானி பட்டத்தையும், பரிசையும் வென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ஐஸ்வர்யா ராய்க்கு செயற்கை கருத்தரிப்பின் மூலம் லண்டனில் பிறந்த மகன் நான் என்று உரிமை கோரும் இளைஞர்...


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாய் என்று ஆந்திராவைச் சேர்ந்த 29-வயது இளைஞர் ஒருவர் கூறி தன்னை தன் தாயுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் 1988-ம் ஆண்டு லண்டனில் செயற்கை கருத்தரிப்பின் முறையில் ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தவர் என்று கூறியுள்ளார். தன்னை 3-வயது வரை ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களான கிருஷ்ணராஜ் ராய் மற்றும் பிரிந்தியா ராய் அவர்கள் வளர்த்ததாகவும் பின்னர் மும்பையில் இருந்து ஆந்திராவிற்குத் தனது வளர்ப்புத் தந்தை ஆதித்தியா ராய் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் ஏப்ரல் 2017-ல் இறந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார் (உண்மையில் அவர் இறந்தது மார்ச் மாதத்தில்).

நான் என் அம்மாவைச் சந்திக்க கூடது என்று 27 வருடங்களாக என் உறவினர்கள் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர், மேலும் நான் ஐஸ்வர்யாவின் மகன் என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் அழித்து விட்டார்கள், இப்போது என் தாய் தனது கணவன் அபிஷேக் பச்சனை பிரிந்து தனியாக வாழ்கிறார், தனிமையில் வாடும் என் அம்மாவிற்கு ஆதரவாக இருக்கவே நான் விரும்புகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டால், 1988-ம் ஆண்டில் ஐஸ்வர்யாவின் வயது 15 மட்டுமே, அப்படிப் பார்த்தால் 14-வயதிலேயே அவர் கர்ப்பம் அடைந்திருக்க வேண்டும். மேலும் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இந்த இளைஞர் ஒருவேளை அவரது தீவிர ரசிகராக இருக்கலாம் இப்படி ஏதாவது செய்தால் ஐஸ்வர்யா ராயை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் இந்தச் செய்தியை பரவ விட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ராகேஷ் ஓம்பிரகாஷ் அவரின் 'ஃபன்னே கான்' என்னும் நகைச்சுவை படத்திற்கான ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா...

சிஸ்டம் சரியில்லை - மராட்டிய ரஜினி...




வாடகை கொடுக்காமல் ஏமாற்றினால்.. பூட்டு போடுவீர்களா.. இது நியாமா... சிஸ்டம் சரியில்லை...

தமிழ் தேசியம் என்றால் என்ன?


அதாவதுப்பா...

சாமிக்கு பதிலா (குலதெய்வம்) இயற்கை..
மதத்திற்கு பதிலா இனம்..

இங்கிலீசுக்கு பதிலா தமிழ்..
இந்தியாவுக்கு பதிலா தமிழ்நாடு..

இவ்வளவு தான் தமிழ் தேசியம்...

ரஜனி அரசியலுக்கு வரவேண்டும் - விசிக திருமா...


ரஜனிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-விசிக திருமா...

இது தான் காட்டியும், கூட்டியும் கொடுப்பதா.. கர்..த்தூ...

இசைக்கருவி புல்லாங்குழல்...


புல்லாங்குழல் மிகவும் இனிமையான இசைக்கருவி. இது இயற்கைக் கருவி என்றும் கூறலாம்.

இதில் சுரத்தான பேதங்களைக் காட்டுவதற்கு ஆறு துளைகள் உள்ளன. எல்லாத் துவாரங்களையும் திறந்தும் பிறகு அவை ஒவ்வொன்றையும் முறையே விரலினால் மூடியும் வாசித்து வரும் போது ஏழு- இசைகளும் (ஸ, ரி, க, ம, ப, த, நி) முறையே ஆரோசையாக ஒலிக்கின்றன.

இவை ஒரு தானத்தை (ஸ்தாயியை) மட்டும் குறிப்பனவல்ல, மெலிவு, சமன், வலிவு, ஆகிய மூன்று தானத்தின் நிலைகளையும் குறிக்கின்றன.

அதாவது மூன்று தானங்களிலுள்ள அந்தந்தச் சுர ஒலிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துவாரமும் கொடுக்கின்றது.

மாயவனாகிய கிருட்டிண பரமாத்மா இந்த புல்லாங்குழல் கருவியை இசைத்து சகல சீவன்களையும் பரவசமடையச் செய்தார் என்று நூல்கள் கூறினும், அதை வாசிப்பது எளிதன்று. அதில் சுருதி தவறுதல் இன்றி இனிமையான சுரம் பொருந்தி வருவது கடினமாகும். புல்லாங்குழலை இலக்கியமாக எடுத்துக்கொண்டு, சிலப்பதிகாரத்துள் பொதிந்துள்ள இசை முழுவதையும் நாம் நன்கு அறியலாம். புல்லாங்குழலில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் அதிகமாகப் போட்டுக் கொள்வதுண்டு. அவை சுரங்கள் சுத்தமாய் ஒலிப்பதற்கு உதவுகின்றன என்பர்.

வீணை, பிடில் முதலிய கருவிகளில் அந்தந்த தானங்கள் வெவ்வேறு இடங்களில் பொருந்தி இருத்தல் இங்குக் குறிக்கத்தக்கது. ஒரே துவாரத்தில் ஒரே தான நிலை உள்ள இடத்தில் மூன்று தான நிலைகளும், ஒரே இடத்தில் ரி-யின் ஈரினங்களும் அதுபோல க-ஈரினங்களும், ம-ஈரினங்களும், த-ஈரினங்களும், நி-ஈரினங்களும் ஒலித்து வெளிப்படுவதே புல்லாங்குழலின் சிறப்பான இனிமைக்கு மூலகாரணம்.

மேலும் தானம் (ஸ்தாயி) என்பது வட்ட வடிவமானது என்பதைப் புல்லாங்குழல் விளக்கும். வீணை, பிடில் முதலிய கருவிகள் முதல் தானத்தின் பாதி அளவில் மூன்றாம் தானம் வருவது போலவும் காண்பிக்கும் போது, அந்த எல்லா தானங்களும் ஒரே அளவில் வட்ட வடிவமான உருவில் வருகின்றன என்பதைப் புல்லாங்குழல் எடுத்துக் கூறுகிறது...

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு நடப்பதில்லை - தமிழிசை...


அதிமுக வளர்மதி மற்றும் கோகுல இந்திரா, உள்ளிட்டோர் அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக நியமனம்...


நெட்டிசன்கள் ஒரே மகிழ்ச்சி...

குறிப்பா தினகரன் ஆட்கள், எப்போது வளர்மதி விவாதத்திற்கு வந்தாலும் எப்போது மொட்டை போடுவீங்கன்னு கேட்க காத்திருக்கானுங்க...

நல்ல சாலை வேண்டும் என்றால் டோல்கேட் கட்டணம் செலுத்தி தான் ஆக வேண்டும் - பாஜக மந்திரி நிதின் கட்கரி...


திமுகவினர் நாம் தமிழர் மோதலில், நாம் தமிழர் கட்சி தொண்டர் மண்டை உடைந்தது...


கிருட்டிணகிரி தொகுதியில் கொடிக்கம்பம் கட்டும் பணியின் போது திமுகவினருடன் ஏற்பட்ட மோதலில் நாம்தமிழர் கட்சி இளைஞர் பாசறை கருணாகரனின் மண்டையை உடைத்த திமுகவினர்...

பாஜக கலாட்டா...


மலேசியாவின் பினாங்கு து. முதல்வர் ரஜினிக்கு அட்வைஸ்...


நடிகர் ரஜினி ஆன்மீக அரசியல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் பேராசியர் ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது. மேலும், எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என ரஜினி நினைத்தால் அது மிகவும் தப்பு எனவும் அவர் கூறியுள்ளார்...

பெண்களுக்கான அழகு குறிப்புகள்...


தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் நியமனம்...


ஜன.,8-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்..

ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சித் தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் போர்க் கொடி தூக்கிய போது அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டிருந்தார்...

உண்மையான தியானம்.. ஷென் கல்வி முறை..


ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்? என வினவினார்.

என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர் என்று சீடன் பதிலுரைத் தான்.

நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன் என்ற ஜிஸோ, ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய்.

உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய்.

உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய் என்றார்.

கண் காது  மூக்குகளை மூடுவதால் ஒருவரது எண்ணம் தூய்மையாகாது. எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான தியானம் என்றார்...

பிரித்தானியாவில் வீசிய எலினோர் (Storm Eleanor) புயலினால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு...


பிரித்தானியாவை தாக்கிய எலினோர் சூறாவளியினால், சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை அச்சுறுத்தி வந்த எலினோர் புயல் பல பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வட அயர்லாந்தில் குறித்த புயலின் தாக்கத்தினால் சுமார் 12 ஆயிரம் வீடுகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் வட அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் தென்மேற்கு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காற்று 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசத் தொடங்கியுள்ள நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலின் சீற்றத்தினால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்...

இந்த புத்தாண்டு முதல் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வழி நடத்த புதுவை காவல் துறையினர்க்கு நீல நிறம் கொண்ட புது தலைப்பாகையை வழங்கியுள்ளது புதுவை அரசு...


மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்...


சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...

தமிழ் மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

மழை என்றால் என்ன?

செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் .. இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு.. 

இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல் ஒரு கண்ணு..

நம்மளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்..

எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...

அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..

ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா.. (குமரிகண்டம்).

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office)

Who had written the post "Alexander, The Ordinary"

போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..

ஆனால் மக்களே..

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா,
நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..

விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..

சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை, அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும், அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.

இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல, இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டு தான் இருக்கு..

அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..

நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா?

எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..

என் கருத்து...

தமிழ் மற்றும் குமரிகண்டம்  சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.

பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது...

தூத்துக்குடி - இந்திய தமிழக கலாச்சாரத்தினை தெரிந்து கொள்ள சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பல்வேறு 8 நாடுகளை சேர்ந்த 34 வெளிநாட்டினர் தூத்துக்குடியில் வேஷ்டி, சேலை ஆடையணிந்து பொங்கலிட்டு கொண்டாட்டம்...


சங்க காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த மன்னர்கள் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள்...


‘வேந்தரும் வேளிரும்’ என்று சங்க இலக்கியத்தில்  மூவேந்தர்களுக்கு இணையாக பல முறை இம் மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

சங்க காலப் போர்கள் பலவற்றில் வேளிர் இடம்பெற்றிருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் சொல்லுகின்றன.

வேளிர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்களா அல்லது வேறெங்கிலும் இருந்து குடியேறியவர்களா என்பது ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே நமக்கு கிடைக்கின்றன.

அகத்திய முனிவர் தமிழகம் வந்தபோது துவரையிலிருந்து பதினெண்குடி வேளிரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

இங்கு துவரை என்று குறிப்பிடப்படுவது துவாரகை நகராகும்.

மேலும் “நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் ” என்று துவாரகையை ஆண்ட  கண்ணனின் (திருமால்)  வழிவந்த அரசர்கள் இவர்கள் என்றும் தொல்காப்பியம் உரைக்கிறது.

கண்ணன் யாதவ குலத்தில் தோன்றியவன் எனவே  வேளிரும் யாதவ குலத்தவர் என்பது பல வரலாற்றாசிரியர்களின் கருத்து.

கரிகால் வளவன் வென்ற இருங்கோவேளைப் பற்றி கபிலர் என்ற புலவர்

“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” (புறநானுறு  201)

‘வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை‘ என்பது இதன் பொருள்.

வடநாட்டுப் புராணங்களும் யாதவர்கள் மகாபாரதப் போர் முடிந்ததும் கடல் வழியாக தென்னாட்டில் குடியேறினர் என்று கூறுகின்றன.

ஆக வேளிர் கண்ணபிரான் வழிவந்த யாதவர்கள் என்பது தெளிவு. 

கடையேழு வள்ளல்களான பாரியும் ஆய்வேளும் வேளிர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது   ஒரு உபரிச்  செய்தி...