05/01/2018

மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்...


சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...

தமிழ் மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

மழை என்றால் என்ன?

செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் .. இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு.. 

இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல் ஒரு கண்ணு..

நம்மளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்..

எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...

அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..

ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா.. (குமரிகண்டம்).

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office)

Who had written the post "Alexander, The Ordinary"

போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..

ஆனால் மக்களே..

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா,
நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..

விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..

சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை, அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும், அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.

இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல, இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டு தான் இருக்கு..

அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..

நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா?

எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..

என் கருத்து...

தமிழ் மற்றும் குமரிகண்டம்  சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.

பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.