03/07/2018
விசாரணை அதிகாரி மாற்றம்: முருகன் சிலை மோசடி குற்றவாளிகளை காப்பாற்ற சதியா?
பழனி முருகன் கோவிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது குறித்த வழக்கின் விசாரணை அதிகாரி கருணாகரன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முருகன் சிலை மோசடி வழக்கின் விசாரணை 20 நாட்களில் முடிவடையவிருந்த நிலையில், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டிருப்பது இவ்விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த ஐயத்தை அதிகரித்துள்ளது.
காவல்துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகள் குறித்த உண்மைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. பழனிமலை முருகனுக்கு ஐம்பொன்னில் சிலை செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்ததை இந்தப் பிரிவு தான் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கருணாகரன், இவ்வழக்கு குறித்த முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியிருப்பதாக கூறப்படும் நிலையில் தான் கடந்த 29.06.2018 அன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் கோவை மாவட்ட மின்திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பழனி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் முருகன் சிலை மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது இயல்பாக நடந்த மாற்றமாக தெரியவில்லை.
பழனி மலை முருகன் சிலை மோசடி தனித்த நிகழ்வாகத் தோன்றவில்லை. மாறாக அதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. பழனி முருகன் கோவிலில் ஒன்பது மூலிகைகளால் உருவாக்கப்பட்ட நவபாஷான முருகன் மூலவர் சிலை இருக்கும் நிலையில் புதிதாக ஐம்பொன் சிலை செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால், மூலவர் சிலையை மறைக்கும் வகையில் ஐம்பொன் சிலையை அமைத்தால், மறைவாக உள்ள நவபாஷான சிலையை பயன்பாட்டிலிருந்து அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடத்தி விடலாம் என்ற சதித்திட்டத்தின் அங்கமாகத் தான் புதிய சிலை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐம்பொன் சிலை செய்வதிலேயே மோசடி நடந்து, அந்த சிலை கறுத்து விட்டதால் ஒரு கட்டத்தில் அதை அகற்\ற வேண்டியதாகிவிட்டது. அதனால் தான் நவபாஷான சிலை கடத்தலிலிருந்து தப்பியது.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கருணாகரன், அவர்களை கைது செய்ய ஆயத்தமான நிலையில் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, முருகன் கோவிலின் முன்னாள் இணை ஆணையரும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினருமான கே.கே. ராஜா, முன்னாள் அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோர் ஏற்கனவே கைதாகியுள்ள நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தான், அதைத் தடுக்கும் வகையில் விசாரணை அதிகாரி கருணாகரண் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக கடந்த 27.06.2018 அன்று உயர்நீதிமன்றத்தில் நேர் நின்ற பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணையில் தமக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தமக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் தெரியாமலேயே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாற்றியிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி,‘‘ உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டால் காவல்துறை தலைமை இயக்குனரை நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதை சிறிதும் மதிக்காமல், அடுத்த இரண்டாவது நாளே, முக்கிய விசாரணை அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ முக்கியத் தலைவரை காப்பாற்ற சதி நடப்பதாகத் தான் பொருள் ஆகும். இதை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகத் தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்டு வரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் அதன் தலைவருக்கே தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் அரசின் செயல்பாடுகள் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆலயங்களும், அவற்றில் உள்ள கடவுள் சிலைகளும் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். அதற்கு எதிரான வகையில் செயல்பட்டு சிலைக் கடத்தல் மற்றும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் ஆகும். அதற்கு மாறாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் மக்கள் கடுமையாக தண்டிப்பார்கள்...
என் ஆறுகள் தொழிற்சாலை கழிவுகள் நிறைந்த கூவம் ஆனதால், அது சேரும் கடல் நீர் மீன் செத்து மிதக்கும் சுடுகாடாகிவிட்டது....
ஒரு காலத்தில் ஆற்று நீர் அமிர்தம், தோல் நோய் தீர்க்கும் கனிம வளம் நிறைந்த கடல் நீர்.
இன்று அமெரிக்க கடற்கரை நாகரீகங்களை பாரத்து கடலில் குளிக்கும் என் வளர்ந்த நாகரீக இனமோ குளித்தவன் நோயில், மற்றவன் மூக்கை பொத்திகொள்கிறான், இளசுகள் லட்ச ருபாய் காமிராவை எடுத்துகொண்டு படமெடுத்து மகிழ்கிறார்கள்...
இடம்: பெசன்நகர் பீச்...
அரசுப் பள்ளியில் நாப்கின் எரியூட்டி மெஷின்' - மாணவிகளுக்கு உதவிய ஆசிரியர்...
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பயிலும் மாணவிகளின் சங்கடம் தீர்க்கப் பள்ளியில் நாப்கின் எரியூட்டி மெஷின் வைத்து பாராட்டை பெற்றிருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. திருச்சி மாவட்ட எல்லையில் கடைக்கோடி கிராமம் தான் இந்த பொய்யாமணி. இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார் பூபதி. பள்ளியில் வைஃபை வசதி தொடங்கி மாடியில் இயற்கை தோட்டம் வரை சகல வசதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறார். அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பற்றி லோக்கல் சேனலில் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்து, இந்த அரசுப் பள்ளியில் கூடுதலாக நாற்பது மாணவர்களைத் தன்னிச்சையாக சேர வைத்து அசத்தி இருக்கிறார். இதனால், இந்தப் பள்ளிக்கு சமீபத்தில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்தது. இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் சங்கடம் தீர்க்கப் பள்ளி வளாகத்தில் நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்து பாராட்டை பெற்றிருக்கிறார் பூபதி.
இதுபற்றி பூபதியிடம் பேசும்போது, ``இங்குள்ள மக்கள் அனைவரும் ஏழ்மையானவர்கள். படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். அதனால்தான், 'தங்கள் கஷ்டம் தங்களோடு போகட்டும். பிள்ளைகளாவது நல்லா படிக்கட்டும்' என்றபடி தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், ஏதோ தீட்டாக கருதி அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தார்கள். தேர்வு காலங்களில்கூட மாணவிகளை இப்படி வீட்டில் இருக்க வைக்கும் போக்கு இருந்தது.
இதனால், பல மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியானது. அதனால், இங்குள்ள ஆசிரியர்களின் உதவியோடு பெற்றோர்களிடம் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவது பற்றி வகுப்பெடுத்தோம். அதன் விளைவாக மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். பெண்கள் எவ்வளவோ உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இந்த விசயத்திற்காக வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது என்பதற்காகப் பள்ளி வளாகத்தில் நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்திருக்கிறோம்.
பள்ளியில் மாணவிகள் தாங்கள் பயன்படுத்திய நாப்கினை அழிப்பதற்காக இந்த இயந்திரத்தை வைத்துள்ளோம். கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியோடு ஒரு நாப்கின் எரியூட்டி இயந்திரம் மற்றும் எட்டு கணினிகளை வாங்கி அமைத்துள்ளோம். அதாவது, நாங்கள் எண்பதாயிரத்து முந்நூறு ரூபாயைக் கட்டினோம். அரசு இரு மடங்கு பணம் தரும். கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் இந்த எரியூட்டி இயந்திரத்தை வாங்கி அமைத்துள்ளோம். பள்ளி சார்பாக அரசுக்குச் செலுத்திய நிதியைச் சென்னை இராதாகிருஷ்ணன் சுவாமிஜி அறக்கட்டளை கொடுத்து உதவியது. கிராமத்துப் பெண் பிள்ளைகளுக்கு எல்லா நேரமும் வானில் பறக்க இறக்கைக் கொடுக்கவே எங்களின் இந்தச் சின்ன முயற்சி. இதற்கு, ஊரக வளர்ச்சி முகமையின் கரூர் மாவட்ட திட்ட இயக்குநர் கவிதா பெரிதும் உதவினார். மாவட்ட கலெக்டர் அன்பழகனை வைத்து இந்தத் திட்டத்தை திறக்க இருக்கிறோம்" என்றார் உற்சாகமாக...
அன்பு தான் வாழ்க்கை...
நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
மதத்தின் ரகசியம்...
நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத் தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.
உன்னைப் பற்றியே சிந்திக்காதே!
சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய. முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
தீமையைச் செய்வதால், நமக்கு நாமே
தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.
சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது. நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ் என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி அவனிடமிருந்து வெளிப்படும்.
நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.
விருப்பங்கள் நிறைவேறும்...
அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும் வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது. அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்...
வெற்றிலைத் தட்டம்...
வெற்றிலைத் தட்டம் பித்தளை உலோகத்தினாலான பாதமும் ஒரு சாண் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும்.
இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெற்றிலைத் தட்டமும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழர் விருந்தோம்பலிலும், வாழ்வோட்ட சடங்குகளிலும் இவை சிறப்பான ஒர் இடத்தைப் பெறுகின்றன.
தென்னிந்தியாவில் வெற்றிலைக் காளாஞ்சி எனவும் இலங்கையின் வடபுறத்தில் கால் தட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது...
ஜூலை 28 முதல் தூத்துக்குடி- சென்னை கூடுதல் விமான சேவை...
பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை தொடங்கியது. பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வாரந்தோறும் செவ்வாய் தவிர்த்து பிற நாட்களில் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளது. பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களுருவில் புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் 3.30க்கு தூத்துக்குடி வந்தடையும்.
ஜூலை 28 முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படும். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் அமைக்கப்படவுள்ளது...
மரணத்தை தள்ளிப்போடும் மருந்து… மரண விளிம்பில் உள்ளவரை மீண்டும் உயிர்பிக்கும்...
மனித வாழ்வில் ஜனனம், மரணம் என்பது நியதி அது நிலைப்பு அடைந்தால் தான் உயிர்சமநிலை பெறும். மரணத்தை தாண்டிய வாழ்வு என்பது மனித சக்திக்கும் அப்பாற்பட்ட விடயம் என்று கூறப்பட்டது.
அதையும் இன்றைய மருத்துவ முறைகள் முறியடித்து வருகின்றன. இருதய மாற்று அறுவை சிகிச்சையில் தொடங்கி, தலை மாற்று அறுவை சிகிச்சை வரை பட்டியல் நீள்கிறது.
மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?
மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது?
என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது.
மரணம் விளிம்பில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது.
சோல்பிடிம்( Zolpidem) என்ற ஒருவகை மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
இது குறித்த சிக்கலான ஆய்வு தொடர்ந்து வருகின்றது. இப்போதைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்க கூடிய மருந்தை கண்டுபிடித்து உள்ளனர்.
இன்னும் பல கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றால் பல சிக்கலான ஆய்வை மேற்கொண்ட பிறகு தான் கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்...
பர்மா தமிழர்களின் பரிதாப நிலை...
2008 ல் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.
1,00,000 தமிழர்கள் வீடிழந்தனர்.
நர்கீஸ் புயலில். மியான்மர் (பர்மா) அரசாங்கம் மருந்துக்கு கூட தமிழர்களுக்கு உதவவில்லை.
இந்த கொடுமை தாய்நிலத் தமிழர்களுக்கு கூட தெரியாது.
தமிழருக்கான அரசு இல்லாது போனாலும்
தமிழர்மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாததே இதற்குக் காரணம்.
2012 க்குப் பிறகு இணையப் புரட்சியால் முகநூல் ஓரளவு தமிழின ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.
இது எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை.
நாடில்லாத இனம் நாதியற்று சாகும்.
தகவல்:
து.ரவிக்குமார்,
சட்டமன்ற உறுப்பினர்,
காட்டுமன்னார்கோயில்,
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(27-05-08 அன்று முதலமைச்சருக்கு எழுதிய மடல்)...
இலுமினாட்டி சம்பந்தமாக நாம் சொல்ல வரும் அனைத்து விடயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது...
ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம்..
இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாடிகளாக இருக்கின்றனர்.
இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டு பிடிக்காது எம்மைத் திசை திருப்பவே இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம்..
இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள்.
90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள். இவர்களில் இலுமினாட்டிகளின் ஆதரவாளர்களும், எதிரிகளும் அடங்குவர்.
அடுத்த தரப்பினர் நடுநிலையோடு தகவலைத் தருபவர்கள். இவர்களின் தகவல்களும் 100% உண்மை அல்ல. ஆனால் தவறுதலாக ஆய்வின் அடிப்படையில் பிழை விடுபவர்கள்.
இந்த மூன்றையும் வைத்து ஓரளவு உண்மையைக் கண்டு பிடிப்பதே நாம் செய்த வேலை ஆகும். இதனால்தான் நான் சொல்லும் சில விடயங்கள் தேடியும் கிடைக்கப் பெறாது.
அதாவது 3 தரப்பாரும் ஒரே விடயத்தைச் சொன்னால் ஓரளவு அது உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
இத்தகவல்கள் அனைத்தையும் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களோடு உரசி உரசி பெறப்படும் முடிவுகள் தான் எம்மால் இங்கு சொல்லப்பட இருக்கிறது.
நீங்களும் தேடித் பார்ப்பதன் மூலம் நாம் பிழையான முடிவுகளை சொல்லும்போது அதை திருத்த உதவியாக இருக்கும். இப்போது விடயத்துக்கு வருவோம்.
இவர்களின் கொள்கை - (Luciferianism) கடவுள் மனிதனின் எதிரி. சைத்தான் (லூசிபர்) தான் மனிதனின் நண்பன்.
அதாவது மனிதனைப் படைத்து விட்டுக் கடவுள் அந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று சொன்னது மனிதனோடு உள்ள பொறாமையினால் ஆகும்.
சாகா வரம் அல்லது கடவுள் தன்மை அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று அக்கனியைச் சாப்பிட்டால் மனிதனுக்குக் கிடைத்துவிடும் என்ற பொறாமைதான் கடவுளுக்கு இருந்துள்ளது.
ஆனால் சைத்தான் எப்படியாவது மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் அவ் உண்மையை ஆதாமுக்குச் சொன்னான்.
எனவே மனிதனுக்கு நலம் நாடுபவன் சைத்தானே.
நோக்கம், இலக்கு - உலகத்தின் ஆட்சியை தஜ்ஜாலின் கையில் கொடுத்தல்.
அதாவது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட லுசிபெரியனிசத்தை மீண்டும் வெற்றி கொள்ளச் செய்தல்.
செயல் திட்டம்- மறைக்கப்பட்டுள்ள இதைத்தான் விரிவாகப் பேச உள்ளோம்...
கழிவாயினும் கலங்காமல் கால் வைத்து தூர்வாரிய தன்னம்பிக்கை தன்னார்வலர்கள்...
மலக்கழிவு, பிளாஸ்டிக் குப்பைகளால் அடைபட்டிருந்த பாலத்தை.. உதவ யாருமின்றி கைவிடப்பட்ட நீர்வழிப்பாதையை.. கடந்து செல்லும் போது நாம் மூச்சை அடக்கி கடந்து செல்லும் இடத்தை தன்னார்வலர்கள் தங்கள் கரம் கொண்டு முடிந்தவரை சுத்தம் செய்தனர்..
ஆத்துப்பாலம் அருகில் உள்ள வெள்ளலூர் குளத்திற்கு நீர் செல்லும் ராஜவாய்க்கால் பாலம்..முன்- பின் புகைப்படம்..
மரமும் மனிதனும்...
பாலை என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும்.
சிறப்பு - தமிழர் நிலத்திணைகளில் ஐந்தில் ஒன்றான குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை பாலை என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.
வளரும் நாடுகள் - இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர இந்தியா, வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.
பயன்பாடு - இலங்கையில் தொடர்வண்டி சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளைப் பயன்படுத்தியே தொடர்வண்டி செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.
இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.
கடத்தல் - இலங்கை வடக்கு கிழக்கு காடுகளில் வளரும் பாலைமரங்களை தறிப்பதற்கு அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். ஆனால் அனுமதிப் பத்திரம் பெறாமல் பாலைமரங்களை தறித்து கடத்தலில் ஈடுபடுவோர் உள்ளனர். இதனை கட்டுபடுத்துவதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்த முனைந்தாலும், இந்த கடத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னிப் பகுதி இருந்தவேளை இவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் இந்த மரக்கடத்தல்கள் தொடர்வதை செய்திகள் தருகின்றன.
பாலை வகைகள் - பாலப்பழம் பழுக்கும் பாலமரம் வேறு. இதனை வீடுகளில் வளர்ப்பதில்லை. அது காட்டில் தானாக வளரும் மரங்களாகும். அவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை பழம் காய்க்கும். அப்பழங்கள் மிகவும் இனிப்பானது.
கருமையான நிறத்தில் சுண்டுவிரல் அளவில் சற்றே குறைந்த பருமனுள்ளதாக, 50 சென்டிமீட்டர் நீளத்தில் நுனியில் மட்டும் இணைந்திருக்கும் இரட்டைக்காய்கள் காய்க்கும் பாலமரம் வேறு. இதற்கும் பாலை நிலத்துக்கும் தொடர்பு உண்டு. கீழே உள்ள படங்களில் உள்ள மரம் இது.
மற்றொன்று பாலக்கொடி.
பாலைப்பழம் - பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.[4] பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தை பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.
பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்புச் சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின் போன்ற பால் பசைப் போல் வாயில் ஒட்டிக்கொள்ளும். பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவைகளாகவே விற்பனை செய்வர்...
சத்தமில்லாமல் இன்னொரு பக்கம் அரசு கார்பரேட் அதிபயங்கரம்...
இராமநாதபுரத்தில் புதிதாக அமைய உள்ள அனல்மின் நிலையத்தை எதிர்த்து நேற்று 4 பெண்கள் தீக்குளித்து சாக முயற்ச்சி...
உங்களுக்கு இந்த சந்தேகம் எழுந்தால் நீங்களும் அறிவானவர்கள்தான், உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை பற்றி உண்மையான அக்கரை கொண்டவர்கள் தான்...
அனல்மின் என்பது பெட்ரோல் டீசல் தட்டுபாடால் அடுத்து ஸ்கூட்டர், கார், பஸ்களை மின்சாரம் மூலம் இயக்க உள்ளது கார்பரேட் அம்பானி அரசு! ஏற்கனவே சுகவாசிகள் ஏசி, பிரட்ஜ் என இயற்கையை கற்பழித்தவர்களால் அதன் தொழிற்சாலை வளர்ச்சிகளால் மின் தேவை ஏற்கனவே அதிகமாகி உள்ளதை இயற்கையை பத்திரமாக அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நினைப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பணமதிப்பீட்டு மூலமாக திரட்டிய ஏழை எளிய மக்களின் பணத்தை அதானி குழுமம் அஸ்திரேலியாவில் நிலக்கரி தோண்ட மோடி அரசு 6000 கோடி பணத்தை கொடுத்ததை, அங்குள்ள தமிழ் பழங்குடிக்கு ஆதரவாக Sydney கடற்கரையில் போராட்டம் நடந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அங்கு தற்போது நிலக்கரி சுரங்கம் நஸ்டத்தில் ஓடுகிறது.
உலகமுழுக்க தற்போது நிலக்கரி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது, இந்திய அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு 4 மாதங்களுக்கு மட்டுமே உள்ளதாக கடந்த மாதம் செய்தி வந்ததை ஒரு சிலரே நினைவில் வைத்திருப்பர்.
இந்த நிலையில் இராமநாதபுரத்தில் பல புதிய அனல் நிலையம் அமைய காரணம் என்ன?
இதோ பதில்: அருகில் உள்ள டெல்டாவில் மீத்தேனுக்கு பிறகு, நிலக்கரி எடுக்கும் எதிர்கால திட்டம் என்பதை அம்பலபடுத்தியுள்ளது. அப்படி பூமி பளிக்கபட்டால் உணவு பஞ்சம், அதை தொடர்ந்து இயற்கை பேரழிவு வரும் நம் பிள்ளைகள் கொடுமையாக சாகும் என்பதை எச்சரிக்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்..
அனல்மின் நிலையம் வானிலையிலும், அணுமின் நிலையம் மண்ணையும் உயிரிகளையும் அபாயகரமாக தாக்குவதால் மேலை நாடுகளில் இதன் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி வருகின்றனர்...
Subscribe to:
Posts (Atom)