11/02/2019

கைக்குத்தல் அரிசியின் பயன்...


அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.

இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.
இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பளபளப்பாக்குதல் (Polishing) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல் மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி. கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்

எளிதில் சீரணமடையும்
மலச்சிக்கலைப் போக்கும்
சிறுநீரை நன்கு பிரிக்கும்
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்
பித்த அதிகரிப்பை குறைக்கும்
நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது

உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பளபளப்பாக்குதல் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பளபளப்பாக்குதல் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது...

இந்திய அளவில் கோபேக்மோடி என் வாசகம் டிவிட்டரில் முதல் இடத்தில் டிரண்டாகி வருகின்றது...


தமிழன் எம்மதத்தையும் சாராதவன் விழித்துக்கொள்...


இந்து மதம் தோன்றுவதற்கு முன்னால்..

கிருஸ்து மதம் தோன்றுவதற்கு முன்னால்...

இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னால்...

எம் மொழி தோன்றியது..

மனிதன் தோன்றிய பின் தான் கடவுள் கற்பிக்கப்பட்டான்..

நான் நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன்..
தமிழ் மொழி சிறப்பனது தான் என்று...

அரசாங்கம் எதற்கு சிந்தியுங்கள்.?


மூலிகையின் பெயர் - எலுமிச்சை...


1. மூலிகையின் பெயர் - எலுமிச்சை.

2. தாவரப்பெயர் - CITRUS MEDICA.

3. தாவரக்குடும்பம் - RUTACEAE.

4. பயன்தரும் பாகங்கள் - இலை மற்றும் பழம்.

5. வளரியல்பு - எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் - பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்...

தமிழ் தேர்வுகளில் தமிழே தெரியாத வட மாநிலத்தவர்கள் தேர்வானது எப்படி..? விழித்துக்கொள் தமிழினமே/சீமான்...


https://youtu.be/7zA0VYmHq04

Subscribe the channel for more news...

கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே வயிறு எரிகிறது...


வந்தவரெல்லாம் வாழ வேண்டும், தமிழன் ஓட்டை சட்டியை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க வேண்டும்.. என்ற நிலையில் தான் தமிழினம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது..

எதிரிகளை ஏளனம் செய்ய கோடி கோடியாக கொள்ளையடிப்பார்கள், இருப்பதை எல்லாம் சுரண்டுவார்கள், நாம் ஏன் என்று கேட்க கூடாது.

தமிழனுக்கு ஏன் எந்த அதிகாரம் கூடாது என்று மற்ற மாநிலத்தார் நினைக்கிறார்கள்...

தன்னை தமிழன் என்று நினைத்துவிட கூடாது. தான் வாழ தமிழனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தினால் “வந்தாரை வாழ வைக்கும்” தமிழகம் என்று மேலே தூக்கி வைத்து காலில் போட்டு நசுக்குகிறான்.

தமிழன் ரத்தத்தை 3-மாநில திராவிட அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக்குடிப்பதற்கு வசதியாக தங்கள் கொடியில் ரத்தம் எனும் குருதியை (சிகப்பு) அடையாளமாக வைத்தார்கள்..

நம்பினவர்கள் முகத்தில் கரியைபூசும் கேலமானமானவர்கள் என்பதால் (கருப்பு) நிறத்தை தங்கள் கொடியில் பூசினார்கள்.

இந்த கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே தமிழனுக்கு வயிறு எரிகிறது.

சண்டாளர்களே சுரண்டிய தெல்லாம் போதாதா, ரத்தம் குடிக்கும் நரிகளே இனியாவது தமிழர்களை வாழ விடுங்கள்...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


தற்பெருமை...


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குணநலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான். ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது. உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை..

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார். பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

கிரிக்கெட்டை பற்றி பேசினால் அதிகம் விரும்பமாட்டார்கள் என்று தெரியும், அதுவும் உங்கள் "விசில் போடு தலைவா".. ஆனாலும் இதுவே நிதர்சனம்...


தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில் ஒன்று சுருள் பட்டை...


சுருள் பட்டை என்பது ஒரு வளையக்கூடிய மெல்லிய உலோகத்தால் ஆன வளையக்கூடிய, நீண்ட வாள் ஆகும். இது ஒருவரின் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து வெட்டக் கூடிய அளவுக்குக் கூர்மையானது.

அதே வேளை ஒரு வளையமாகச் சுருட்டி விடக் கூடியது. சுமார் முக்கால் அங்குலம் அகலமும் நான்கு அல்லது ஐந்தரை அடி நீளமும் கொண்ட இந்த வாளை இரும்பினாலான சவுக்காகவும் கருதலாம்

இது தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில் ஒன்றாகும்.

தமிழில் இந்த ஆயுதத்தின் மற்றொரு பெயர் சுருள் வாள். இன்றும் தென் தமிழகத்தில் இவ்வாள் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். தற்காப்புக் கலைகளான வர்மக் கலை மற்றும் குத்து வரிசை ஆகியவற்றில் இவ்வாள் பயன்படுத்தப்படுகிறது.

கேரள தற்காப்புக் கலையான களரிப்பயிற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மலையாளத்தில் இந்த வாளானது, வட கேரள களரிப்பயிற்று முறைப்படி உருமி எனவும் தென் கேரள களரிப்பயிற்று முறைப்படி சுட்டுவாள் எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வாள் மலையாளச் சொற்களான திரும்பு அல்லது சுழல் என்ற பொருள் கொண்ட சுட்டு மற்றும் வாள் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துசுழலும் வாள் என்ற பொருளில் சுட்ட வாள் என்ற பெயர் பெற்றுள்ளது.

சண்டையின் போது இதனை ஒருவர் சுழற்றிப் பயன்படுத்தும் முறையால் இப்பெயர் இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

சுருள் பட்டையைப் பயன்படுத்துவதில் சிறந்த பயிற்சியுடையவராக ஆவதற்கு வலிமையையும் வேகத்தையும் விட வளையக்கூடிய தன்மையும் சாமர்த்தியமான திறமையுமே தேவை.

இதனைச் சுழற்றுவதும் எதிராளியின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான கலையாகும். சரியான முறையில் கையாளப்படாவிட்டால் பயன்படுத்துபவருக்கு நிரந்தரமான காயங்கள் ஏற்பட்ட வாய்ப்புண்டு.

இக்கலையில் வல்லுநர்களுக்கும் கூட இதனைப் பயன்படுத்தும்போது சிதறாத ஒருமுகக் கவனம் தேவை. பல எதிரிகளுக்கு இடையில் தனியாக மாட்டிக் கொள்வது போன்ற சூழ்நிலையில் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ளச் சுருள் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இடுப்புப் பட்டையாக இதனை அணிந்து கொள்ளலாம் என்பதால் ஒருவர் இதை வைத்திருப்பது மற்றவர்களுக்கு எளிதாகத் தெரியாது, எடுத்துச் செல்வதும் எளிது...

சிறுநீரக கல்லை கரைக்கும் இரணக்கள்ளி மூலிகை...


https://youtu.be/AT_Pg-FrqjE

Subscribe the channel for more tips...

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்.....?


கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை நிலைப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நடப்ப வழக்கு (fashion) உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாத்(ஸ்)திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப் படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

யார் இந்த பத்மஸ்ரீ பட்டம் வென்ற அம்மா என்ற பங்காரு அடிகளார்?


https://youtu.be/i8p0wm5XszY

Subscribe the channel for more news...

கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...

மருத்துவ மாப்பியா.. சில நோய்கள் குணமாகி பல நோய்கள் வருகின்றதே சிந்தியுங்கள் மக்களே...


பிரமிட்டில் உள்ள மர்மங்கள்....


உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு.

இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான்.

ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது.

நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது.

அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.

பிரான்சு(ஸ்) நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார்.

மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார்.

ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரசி(ஷ்)ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர்.

அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்...

மதம் என்பது தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையை சார்ந்தது, குறிப்பிட்ட மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை சார்ந்தது அல்ல...


குழந்தை கெஞ்சியும் கேட்கவில்லை.. செல்போன் டவரில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை...


திருவண்ணாமலை மாவட்டம் நெல்வாய்பாளையம் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35). சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா(32), மகள் கிரிஜா(7), மகன் ஆர்யா(5).

கடந்த 3ம் தேதி குடும்பத்தினரை பார்க்க ரமேஷ் சொந்த கிராமத்திற்கு வந்தார். மனை கீதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அவர், மீண்டும் சென்னைக்கு செல்லாமல் கிராமத்திலேயே இருந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மனைவி கீதாவிடம்  ரமேஷ் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறினார்.

இதில் ரமேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை ஆரணி அருகே உள்ள நெல்வாய்பாளையம் கிராமத்தில் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிற உயர் மின்கோபுரத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் சுமார் 300 அடி உயரமுள்ள அந்த மின்கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தான் வைத்திருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு மின்கோபுரத்தின் மேல் ஏறினார்.

இதனையடுத்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரமேஷின் பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகள் என அனைவரும் அங்கு விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது.

பின்னர் ரமேஷை செல்போனில் தொடர்பு கொண்டு கீழே இறங்கி வரும் படி குழந்தைகள் கதறினர். ஆனால் இவர் இறங்க மறுத்துவிட்டார். பல்வேறு தரப்பில் இருந்து பேச்சுவாரத்தை நடத்தியும் அவர் உடன்படவில்லை.

சுமார் 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மேலே இருந்து ரமேஷ் திடீரென கீழே குதித்தார். அப்போது அவரை மீட்பதற்காக கீழே வலை விரித்திருந்தனர். ஆனால் அவர் கீழே விழும்போது இடையில் அவருடைய சட்டை மின்கோபுரத்தின் ஒரு கம்பியில் சிக்கிக் கொண்டது. சிறிது நேரம் அந்தரத்தில் தவித்தார்.

 பிறகு பாரம் தாங்காமல் சட்டை கிழிந்து தலைகீழாக அவர் விழுந்ததில், தலை மின்கோபுர கம்பியில் அடிபட்டு மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்...

ஆன்மீக போதை வியாபாரம்...


ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு...


100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்....

அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்...

யார் தமிழர் என்று கேட்டவர்களுக்கு...


உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை...


உலக அதிசயப்படியலில் இடம் பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்...

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான ச,ரி,க,ம,ப,த,நி என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

சரி இது எதற்காக பயன்பட்டது ?

அந்தக்காலத்தில் இருந்த இசைக் கலைஞர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக் கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது.

இந்த இசைத்தூண்களை "மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான அலைகற்றையை உருவாக்குகின்றது.

எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார்" என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள" இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography" (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது" தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள்" என தெரிய வந்தது.

" spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது" தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால்" சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது.

சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப் போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த" இசைத்தூண்கள்" ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது.

நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசை தூண் போன்ற இசை தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை.. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது.

ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


போலியோ சொட்டு மருந்தின் விலை ரூபாய் 95.30-லிருந்து ரூபாய் 172.59 ஆக உயர்வு -  நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள் - பாம்பு...


பாம்பு கடிப்பதும் பாம்பைப் பிடிப்பதும் பாம்பை உண்பதும், பாம்பை வளர்ப்பதும் பாம்புவித்தை காட்டுவதும் எனப் பாம்புகளோடு மனிதனுக்கு உள்ள தொடர்பு விரிவானது. உண்பதைத் தவிர (அதுவும் உண்டு இன்றைய காலங்களில்) மேற்குறிப்பிட்ட எல்லா வகைகளிலும் பாம்போடு நெருங்கிய உறவு மனிதனுக்கு உள்ளது.

சிங்கம், புலி, கரடி போன்ற உருவில் பெரிய காட்டு உயிரிகளைக் காட்டிலும் உலகினர் அதிகம் அஞ்சும் விலங்கு உருச்சிறிய பாம்பாகவே இருக்கிறது. அஞ்சுவதை வணங்கிச் சமாளிப்பது மனித சாமர்த்தியம்.
காட்டைக் கொன்று நாடாக்கிய வீரர்கள் அதிகம் கொன்றது பாம்பாகவே இருந்திருக்கலாம்.
காண்டவ வனம் நமது இதிகாச சாட்சி. ஆக, பயத்தின் அடிப்படையில் கிராமங்களில் தெய்வமானது பாம்பு. 

தங்கள் வீரத்தைப் பறைசாற்ற விரும்பிய அரசர்களுக்குக் கொடியானது பாம்பு. வணங்கும் தெய்வமானாலும் ஊரும் வாகனமானாலும் பறக்கும் கொடியானாலும் அடிப்படையில் உறைந்திருப்பது பாம்பு பற்றிய பயம், மனிதனின் அச்சம் மற்றும் அவன் தான் வணங்கிய கடவுளர்களிடமும் அதை கண்டான்.

சிவபெருமான்: வாசுகியை கழுத்தில் ஆபரணமாக அணிந்துக் கொண்டு, தன்னை முழுவதுமாக வளைக்க அனுமதிக்கிறார். மற்றும் தன்னை ஒரு அச்சமற்ற நித்தியமானவராகக் வெளிப்படுத்துகிறார்.

விஷ்ணு: ஆதிசேசன் படுக்கையில் இருந்துகொண்டு, மூன்று உலகங்களை ஆதரித்து, தன்னை காலமற்ற மற்றும் முடிவிலா மற்றும் அண்டத்தில் முழு அண்ட சக்தியாகவும் சித்தரிக்கிறார்.

புத்தர்: இவருக்கு ஞானம் கிடைத்ததும் ஒரு பாம்பின் அரவணைப்பில் தான் என்கிறார்கள்.
மேலும் விநாயகரின் இடுப்பை சுற்றி ஒரு பெல்ட் போல அணைத்துள்ளது.
இதுபோன்ற பல மேற்கோள் உள்ளது. ஆனால் இந்த நடைமுறைக்கு முற்றிலும் விதிவிலக்காக இன்றிருக்கும் ஒரே கடவுள் கந்தசாமி மட்டுமே. இந்த பாம்பை (Reptilians) தனது காலடியில் குறிப்பாக தனது வாகனத்தின் காலடியில் இந்த பாம்புகளை வைத்துள்ளார். தனக்குக் கீழ்தான் தீமைகள் என்று உணர்த்த விரும்பிய கந்தன் தனது காலடியில் சர்ப்பத்தை (Reptilians) அடக்கியுள்ளார்.

பாம்பு பற்றிய ஆதிப்பதிவுகள் பாம்பு - மனிதப் பகை உறவையே காட்டுகிறது.

விரியன் பாம்புப் பரம்பரைகளே, நீங்கள் தீயவர்களாயிருக்க, நல்லவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும். -(மத்தேயு 12:34)

இவ்வசனத்தில் ஒரு தீய சமூகத்தவரைப் பார்த்து “விரியன் பாம்புப் பரம்பரைகளே” (விரியன் பாம்புக் குட்டிகளே) என்று கூறப் படுகிறது. இங்கு “விரியன் பாம்புகள்” என்பதன் மூலம் அர்த்தம் கொள்ளப் படுவது வேறு யாருமல்ல; விரியன் பாம்பு போன்ற ஏதோ ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள் (Reptilians) என்பதே இங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

இன்னொரு வசனத்தில்:

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல வன ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை (ஏவாளை) நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” என்றது.
(ஆதியாகமம் 3:1)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் சம்பவம், ஆதம் மற்றும் ஏவா சுவர்க்கச் சோலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தடுக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்களைப் புசிக்கச் செய்வதற்குத் திருட்டுத்தனமாக அங்கு வந்த சர்ப்பமானது, அவர்களை நம்ப வைத்து ஏமாற்றும் காட்சியையே வர்ணிக்கிறது.

நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.
(அல்குர்ஆன் 2:208)

“பாம்புகளோடு நாம் எதிரியானது முதல், என்றுமே அவர்களோடு நாம் சமாதானமானதில்லை” எனும் வாசகத்தையும் பொருத்திப் பார்த்தாலே Reptiliens இனம் என்றுமே மனிதர்களுக்கு ஏதிரானது என்ற உண்மை வெளிப்படுகிறது.

பொதுவாக உலகில் தோன்றிய பழமையான வேதங்களில் பாம்புகள்
தீமையின் உருவமாக கருதப்படுகிறது. ஆனால் இந்து மதத்தில் தெய்வீகமாக  கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்து தெய்வங்களுடனும் இணைந்த சிலைகளில் தொடர்புடையதாக இருக்கின்றது. தெய்வங்களாகவும் வாகனாதிகளாகவும் கோயில் கலாச்சாரத்தில் பாம்புகளின் ஆதிக்கம் அதிகம். காலசர்ப்ப தோஷத்திற்கும் பஞ்சாங்கத்திற்கும் சோதிட உலகில் இன்றும் மதிப்பு குறையவில்லை.

அவை நமக்கு அறிவுறுத்துவது, இந்த கடவுளர்களின் ஞானம், சக்தி போன்றவை இந்த பாம்புகளின் அரவணைப்பு அல்லது கட்டுப்படுத்தலின் மூலமே கிடைத்தது என்பதாகும்.

அடக்கப்பட்டதன் அடையாளமாக அரனார் கழுத்தில் இருந்தாலும். அவர் மகனாரின் மயிலின் காலில் மிதிபட்டுச் சிதைந்து காட்சி தருகிறது Retiliens. எனவே இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்காக உள்ள நம் முப்பாட்டன் வேலனை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும்.  காவடி, பால்குடம், அலகு குத்துதல், தேர் இழுத்தல், தீ மிதித்தல் என நேர்த்திகடன் செலுத்துவதை  பார்க்கும் பொழுதெல்லாம்  உணர்ந்து கொள்ளமுடிகிறது, உண்மையான இறைசக்தி எதுவென்று...

நாஸ்ராடாமஸ் தீர்க்கதரிசனம் ஹிட்லர்...