28/09/2020
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 9 போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ...
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசார் 9 பேருக்கு எதிராக கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கடந்த ஜூன் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பற்பசையில் விஷம்...
பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.
ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.
ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும் போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.
பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.
இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.
உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும்.
ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...
சிலர் தொடர்ந்து.. கூடு விட்டு கூடு பாய்தல் பற்றி கேட்டுக் கொண்டே இருப்பதால்.. அவர்களுக்காக சில தகவலை பதிவிடுகிறேன்...
முதலாவது, தன் உடலிலிருந்து தன் ஆத்மாவை பிரித்தல்...
இவ்வாறு தன் உடலிருந்து தன் ஆத்மாவை தானே பிரித்துக் கொண்டு எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு மீண்டும் உடலில் வந்து புகுந்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு பிரச்சினை. அத்தகையவர் தன் உடலிலிருந்து ஆத்மாவை பிரித்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் அவரது உடலை அவரது நிலையிலில்லாத மற்ற யாரும் தொடக்கூடாது.
அப்படித் தொட்டு விட்டால் அந்த ஆத்மா அந்த உடலுக்குள் மறுபடியும் நுழையாது.
அதனால் அத்தகைய வல்லமை உள்ளவர்கள் தனி அறையில் யாருடைய குறுக்கீடும் இல்லாத நிலையில் உள்தாழிட்டுக் கொண்டு இதை செய்வார்கள். அல்லது நம்பிக்கைக்குரிய சீடனை வைத்துக் கொள்வார்கள்.
அடுத்த படியாக ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குள் ஆத்மா புகுதல்...
மற்றொரு உடல் ஏற்கனவே உயிரற்ற நிலையில் இருந்தால், அந்த கூடுபுகும் கலையை கற்றவர் அந்த இறந்த கூடுக்குள் புகமுடியும். அதுவரையிலும் அவரது உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.
அடுத்தபடியாக, ஆத்மாவை பிரித்து கூடுவிட்டு கூடுபுகும் கலை கற்றறிந்த இரண்டு பேரும் மாறி மாறி அவர்கள் உடலில் கூடுமாற வேண்டும் என்றால், மூன்றாவது ஒரு குரு உதவியுடன் தான் அதை செய்ய முடியும்.
மூன்றாவது குரு ஒருவருடைய ஆத்மாவை பிரித்து தன் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டு, மற்றொருவருடைய ஆத்மாவையும் பிரித்து எடுத்து உடலை மாற்றி ஆத்மாவை கூடு செலுத்த வேண்டும்.
இரண்டுபேர் தன்னந்தனியாக ஆத்மாவை பிரிக்கும் இடங்களில் இறந்து போன சூனியக்காரர்கள் ஆத்மா போன்ற தீய சக்திகள் இருந்தால் கூடுபிரிந்த ஆத்மாக்களை தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்று விடும்.
(எல்லா ஆலயங்களிலும் மனிதர்கள் மட்டுமல்லாது, பேய் என்று சொல்லப்படுகின்ற இறந்தவர்கள் ஆவி, பூதங்களும் வந்து தெய்வங்ளை வழிபடும்).
தன் உடலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வெளியிடங்களில் தன்னந்தனியாக ஆத்மா பிரிக்கப்பட்ட உடல் கிடந்தால், யாராவது பார்த்து என்ன இப்படி கிடக்கின்றாரே என்று கையை வைத்து புரட்டினாலே போச்சு... அவ்வளவுதான்.
அந்த உடலுக்குள் அவர்கள் ஆத்மா திரும்ப நுழையாது.
இப்போது இவர்கள் இருவருடைய ஆத்மாவும் திரிந்து கொண்டிருக்கும். தனக்கு பிடித்தவர்கள் மீது ஏறிக்கொள்ளும்...
நாம் கொடுப்பதையே திரும்பப் பெறுவோம்...
விவசாயி ஒருவர் தினமும் தனது வீட்டிற்கு அருகே உள்ள இனிப்புக் கடைக்கு 1 பவுண்ட் வெண்ணையை விற்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இனிப்புக் கடைக்காரர் அந்த வெண்ணையில் அளவை சோதித்து பார்க்க அதில் சற்று குறைவாக இருந்தது , உடனே அந்த கடைக்காரர் விவசயியின்மேல் குற்றம் சுமத்தி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.
நீதிபதி அந்த விவசாயியைப் பார்த்து நீங்கள் எந்த அளவுகோலில் தினமும் வெண்ணையை எடை போடுவீர்கள் என்று என்னிடம் காண்பியுங்கள் என்றார்.
உடனே விவசாயி அய்யா என்னிடம் எடைக் கற்கள் கிடையாது , தராசு மட்டுமே உள்ளது ,நான் நீண்ட நாட்களாக இவரின் கடையில் ஒரு பவுண்ட் இனிப்பு வாங்கும் பழக்கம் கொண்டுள்ளேன் , நான் தினமும் அவரின் கடையிலிருந்து வாங்கிவரும் இனிப்பை வைத்து தான் வெண்ணையை அளப்பேன் என்றார்.
விவசாயில் பதிலைக் கேட்ட நீதிபதி அவரின்மேல் தவறு இல்லை என்று கூறி கடைக்காரருக்கு அறிவுரைக் கூறி விடுவித்தார்.
கதையின் மூலம் கற்க வேண்டியவை...
நாம் எதை மற்றவர்க்கு தருகிறோமே அதனையே திரும்பப் பெறுவோம்..
நாம் நன்மை செய்தால் நிச்சயம் நமக்கு நன்மையே வந்து சேரும்..
நம்முடைய முழு உழைப்பையும், திறமையையும் தொழிலில் செலுத்தினால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை விரைவில் பெறுவோம்..
மாறாக நமக்கு தொழிற்சாலையில் சம்பளம் குறைவு என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தாள் நம்மை வேலையை விட்டு நீக்கும் நிலமை கூட ஏற்படலாம்..
கொடுப்பதையே திரும்பப் பெறுவோம் என்பதனால் நல்லதையே கொடுப்போம் , நல்லதே பெறுவோம் நண்பர்களே...
ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்...
உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்.
ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள். அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள்.
ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும்.
ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா?
மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள்.
ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.
ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை.
எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும்.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும்.
இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும்.
இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும்.
நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.
‘ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்’ இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள்.
ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது.
ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும்.
ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும்.
ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.
உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது.
ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம்.
அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும்.
உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும்.
இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்...
புகையிலை வியாபாரி தெலுங்கர் வைகோ நாயூடுவே...
ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்கள்...
1.ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரணடைகிறான்.
2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம். (மக்கா ஜாக்கிரதை).
3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.
4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.
5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டு பிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல).
6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.
8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)..
சிபில் கார்த்திகேசு...
சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி..
இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர்..
ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர்..
மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்..
இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்..
மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது..
ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது...
அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?
எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக் கொடுங்கள்.. அப்படியே நெஞ்சில் ஒட்டும்...
ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.
மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.
நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.
ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.
ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு- சுவைகள் ஆறு.
ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.
எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.
ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.
இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள்.. தமிழாசிரியப் பெருமக்களே...
கருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும்...
கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகள் மிகவும் உறுதியானது. இப்பலகை கருப்பு நிறம் கொண்டது. நூற்றாண்டுகள் கடந்தாலும் சேதம் அடையாதது. இதன் ஆங்கில பெயர் "EBONY" ஆகும்.
இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய இந்த மரத்தின் பலகைகள் மூலம் செய்யப்படும் பொம்மைகள், அலங்கார பொருட்கள், கதவு, ஜன்னல், மர அலமாரிகள், கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை தங்கத்துக்கு இணையான பெறுமதி மிக்கவை.
மருத்துவ குணம்...
கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.. இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அதேவேளை கிருமி நாசினியாகவும் செயல்படும்.
கருங்காலி மரப்பட்டை...
கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.
பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.
இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.
கருங்காலி மரப்பிசின்...
கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
கரப்பான் நோயினை போக்கவல்லது. பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்...
அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி...
கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்...
கொடுக்கா புளி இலைகள், பூக்கள், நாட்டு சர்க்கரை, சீரகம், மிளகுப் பொடி. ஒருபிடி இலை மற்றும் பூ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அல்சர் உள்ளவர்கள் குடித்துவர நல்ல பலன் தரும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வயிற்று கடுப்பு குணமாகும். செரிமானத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வாயு கலைந்து வயிற்று வலி போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கொடுக்கா புளியின் சதை பகுதியை பயன்படுத்தி பற்கள், மூட்டுகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி, உப்பு, மிளகுப் பொடி. கொடுக்கா புளியின் மேல் தோலை நீக்கி சதை பகுதியை 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர பல் வலி குணமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும்.
எலும்புகளை பலப்படுத்தும். மூட்டு வலி சரியாகும். ரத்த சோகையை போக்க கூடியது. ஊக்கம் தரக்கூடிய சத்துக்களை உடையது. கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கா நீர் விடாமல் அரைத்த புளி இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மேல்பூச்சாக போடும்போது மூட்டு வலி குணமாகும். வீக்கம் கரைந்து, வலி குறையும். கொடுக்கா புளியின் இலைகள் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. கோண புளியங்காய் என்ற பெயரை கொண்ட இதன் சதை பகுதி எலும்பு, பற்களுக்கு பலம் தரக்கூடியது...