28/09/2020

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 9 போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ...

 


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசார் 9 பேருக்கு எதிராக கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கடந்த ஜூன் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.