16/08/2017

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர் முன்னோர்கள் ஆங்கிலேய காலனிய ஆதிக்கித்திற்கு எதிராக போரிட்டு மாண்டனர்...


இம்மண்ணில் புதைந்த அவர்களின் விதை விடுதலை உணர்வை வளத்தெடுத்ததன் விளைவாக ஆங்கிலேயர்கள் விரட்டியடிக்கப்படனர்.

அதே விதை தமிழர் இறையாண்மையை நிறுவும் உண்மையான விடுதலையை பெற்றுத்தரட்டும்...

தமிழகத்தை காவல்துறை அமைதி பூங்காவாக மாற்றிய போது...


அர்த்தமே தெரியாமல் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் முட்டாள் தமிழர்களின் கவனத்திற்கு...


அப்படியே சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கணும்னு நினைத்தால் கூட அர்த்தம் தெரிந்து வையுங்கடா...

அரக்கர்...


அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.

அசுரன் என்பது வேறு.

சுராபானம் அருந்துவோர் சுரராம்.

அதை அருந்தாததவன் அசுரனாம் அவனே அரக்கன் என்றும் குறிக்கப்படுகிறானாம்.

பொதுமையான அறிவைப் பயன்படுத்தவும்.

ஒரு குறிப்பிட்ட மக்களை வேற்றினத்து மக்கள் அவர்கள் உடல்நிறத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?

இல்லை அவர்கள் குடிக்கும் பானத்தை குறிப்பிட்டு பெயர் வைத்து அழைப்பார்களா?

சுர், சுள், சுல், சுறீர், சுரம் அனைத்தும் நெருப்பைக் குறிப்பது.

சூரன் என்பது கதிரவனைக் குறிக்கும்.
- பாவாணர்.

அதாவது குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் வாழ்ந்த போது, வடக்குத் தமிழர் காலநிலையின் காரணமாக தெற்குத் தமிழரை விட வெளுத்த நிறமாக இருந்திருப்பர்.

அவர்கள் தெற்குத் தமிழரது தோல் சிறிது சிவப்பு கலந்த கரியநிறமாக இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை அரக்கர் என்று அழைத்திருப்பர்.

இலக்கியங்களில் இராவணன் அரக்கன் என்று அழைக்கப்பட்டுள்ளான்.

ஆக அரக்கன் இழிவான சொல் இல்லை...

மணல் கொள்ளை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதால் வாட்சப்பில் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக வாலிபர் விக்னேஷ் கைது...


விக்னேஷ் எம்எஸ்சி படித்தவர், இவர் விவசாயம் செய்து வருகின்றார், வேலூர் வாலாஜாபேட்டை அருகே வசித்து வரும் இவர் மணல் கொள்ளை குறித்து கலெக்டர் மற்றும் முதலமைச்சருக்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இதற்கு நடவடிக்கை எடுக்காததால் வாட்சப்பில் முதலமைச்சருக்கு மிரட்டல் விட்டு வீடியோ வெளியிட்டதாக போலிசார் இவரை கைது செய்துள்ளனர்...

பாஜக மோடி கலாட்டா...


மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் செங்கோட்டையில் சுதந்திர தின உரையை முடித்துக் கொண்டு காரில் அவரது இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

போகும் வழியில் சிறுவன் ஒருவன் அவருடைய புகைப்படத்தை மட்டும் விற்றுக் கொண்டிருந்ததை கவனித்த மோடி காரில் இருந்து இறங்கி வந்து..

மோடி : தம்பி நான் மிகப் பெரிய தியாகி தான்... நீ என்னுடைய மிகப் பெரிய பக்தனாக இருந்தாலும், மற்ற சுதந்திர போராட்ட தியாகிகளான , வா ஊ சிதம்பரம் பிள்ளை, பகத்சிங், நேதாஜி, காந்தி, போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படத்தையும் நீ விற்க வேண்டும் என்று சொன்னார்...

உடனே மோடியைப் பார்த்து அந்தச் சிறுவன் சொன்னான் மோடி ஜீ நீங்கள் சொன்ன அனைத்துத் தலைவர்களின் புகைப்படமும் விற்றுத் தீர்ந்து விட்டது...

தரித்திரம் புடிச்ச உங்கள் புகைப்படத்தை தான் வாங்க ஆள் இல்லை...

உங்கள் புகைப்படத்தை நீங்களே வாங்கிடீங்கனா போதும் நான் உடனே ஊட்டுக்கு போயிறுவேன் என்றான்...

மோடி ஜீ :😮😮

நன்றி : ஆறுகொலை ஆறுமுகம்...

பாஜக மோடியும் நாட்டின் பாதுகாப்பும்...


இந்திய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு விவரம்...

மோடிக்கு முன்... மோடிக்கு பின்...

முப்படைகளிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது - பாஜக மோடி.. ஆதாரம் கீழே...


பாஜக வும் கொலைகளும்...


போன மாசம் முன்னபு வரைக்கும் 65 ரூபாய் இருந்தது. ஆனா இன்று தினம் தோறும் பெட்ரோல் விலை என நிர்ணயம் செய்து 70 ரூபாய் வந்தாச்சு...


எவனும் இதைப்பற்றி மூச்சுகூட விடலை...

இப்போது போது போல் எப்போதும் ஏமாறுவோம்...

பாஜக மோடி மீண்டும் மக்களுக்கு ஆப்பு வைக்க பெரிசா எதையோ பிளான் பண்ணிட்டார் போல...


கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் வரை பலியான சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வியே காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது...


இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அளிவித்துள்ள அறிக்கையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனம் பல முறை எச்சரித்தும் சுகாதார துறை அதற்கான நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தன் மீதான தவறை மறைக்க மருத்துவர்களை பலிகடாவாக்க கூடாது என்றும் மருத்துவமனை முதல்வர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் அறிக்கையில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது...

இந்தியாவில் இன்னும் நூறாண்டுகள் கழித்து பிள்ளை பெற்றுக் கொள்ள அரசாங்க அனுமதி பெற வேண்டும் என்ற கடுமையான சட்டம் வரும்.. ஆனால் அதற்கு விண்ணப்பித்த தைரியத்தில் ஒரு தம்பதியர் குழந்தை பெற்றுவிடுவார்கள்...


ஆனால் நம் அரசாங்கத்தின் மெத்தன போக்கினால் குழந்தை பிறந்தபின்பே உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள இயலாது நம் நாட்டு அதிபர் தேசத்தின் நலன் கருதி உங்கள் விண்ணப்பத்தை ரத்து செய்துவிட்டார்..

உடனடியாக உங்கள் குழந்தையுடன் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு வரவும் என செய்தி வரும்.. அப்படியே செல்வார்கள்.. குழந்தையை அங்கு விட்டு விட்டு செல்லும் படி சொல்வார்கள் அவர்களும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாதிட்டு பார்த்து..

குழந்தையை கொடுத்துவிட்டு தோல்வியுடன் திரும்பிவிடுவார்கள்.. ஒரு வாரம் கழித்து குழந்தையைக் காண ஆசைப்பட்டு மருத்துவமனைக்கு செல்வார்கள்.. ஆனால் குழந்தையைக் காட்ட அதிகாரிகள் மறுப்பார்கள்

ரொம்பவும் கெஞ்சியதை பார்த்து மனமிரங்கி ஒரு அதிகாரி சொல்வார் மன்னிக்கவும் உங்கள் குழந்தையை நீங்கள் இனி எப்போதும் பார்க்க முடியாது அக் குழந்தை நேற்று நள்ளிரவே அழிக்கப்பட்டுவிட்டது என்பார்..

குழந்தையின் தாயார் அலறி மயங்குவார்.. அந்த ஆண் மட்டும் அதிகாரியிடம் கேட்பார் ஏன் என் குழந்தையைக் கொன்றீர்கள்.. இது நம் அதிபரின் உத்தரவு.. அரசால் விண்ணப்பம் மறுக்கப்பட்ட குழந்தைகளை வளர்க்க அரசிடம் நிதி இல்லை.

ஆகவே அவற்றை அழித்திடுங்கள் என நேற்றிரவே அரசாணை வெளியிட்டுவிட்டார் அதுதான் காரணம் என்பார்.

இது ஆசான் சுஜாதா அவர்கள் எழுதிய விஞ்ஞான சிறுகதை.. நிஜமாகிடும் போல வாத்தியாரே...

பாஜக மோடி கலாட்டா...


நெடுவாசல் போராட்ட களத்தில் சுதந்திர தினம் இனிதே உண்ணாவிரத்துடன் கொண்டாடப் படுகிறது...


மேலூரில் நடைபெற்ற தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டத்தில் 14 எம்.எல்.ஏக்களும், 5 எம்.பி.க்களும் பங்கேற்பு...


அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், தஞ்சாவூர் ரங்கசாமி, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, சாத்தூர் சுப்ரமணியன், மானாமதுரை கென்னடி மாரியப்பன், கரூர் தங்கதுரை, கம்பம் ஜக்கையன், பெரியகுளம் கதிர்காமு, பெரம்பலூர் வெற்றிவேல், பரமக்குடி முத்தையா உட்பட 14 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

எம்.பி.க்களில் சிவகங்கை செந்தில்நாதன், கோவை ஏ.பி.நாகராஜன், நவநீதகிருஷ்ணன், விஜிலா, விருதுநகர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்...

எப்போ அந்த நல்ல காயரியம் பண்ண போறீங்க...


உபி மருத்துவர் கபில் கான் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது...


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துமனையில் அடுத்தடுத்து 70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக காபில் கான் என்ற மருத்துவரை பணிநீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.

ஆனால் இவர் தான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது அண்மையில் தெரிய வந்தது.

மருத்துவமனையில் ஆக்ஜிஸன் சப்ளை தீர்ந்தவுடன் மருத்துவர் காபீல்கான், காரில் சென்று தனது நண்பர் மருத்துவமனையில் இருந்து 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கடனாகப் பெற்று வந்து சிகிச்சை அளித்துள்ளார்.

மேலும், தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து ஊழியர்களிடம் சிலிண்டர்களை வாங்கி வரச் செய்துள்ளார்.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது பாரபட்சமானது எனக் கூறி அலிகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவரை பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கி அதில் வயிற்றை வளர்க்கும் மலையாளி...


இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட விஜய் ஆண்டனி மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன் ஆவார்...


யார் மயூரம் வேத நாயகம் பிள்ளை என கேட்பீர்கள்.

1878இல் இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எனற புதினம்மே தமிழில் முதன் புதினம்மாகும்.

செயுள் வடிவில் எழுதுவதையே நடை முறையாக  கொண்டிருந்த தமிழ் இலக்கணம் உரைநடை கதை புனைவு என்று மாறியது.

இவர் மொத்தம் 16 நூல்கள் எழுதியுள்ளார்...

வீணை இசைப்பதில் வல்லவர். விஜய் ஆண்டனி இசை பயணம் அங்த ஆரம்பித்ததா என்று தெரியவில்லை.

கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த அன்றைய  சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து " சித்தாந்த சங்கிரகம் "  என்ற நூலாக 1862ல் வெளிட்டார்.

மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் இவரது சமகாலத்து நண்பர்கள் ஆவார்கள்.


1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும்
பாதிக்கப் பட்ட மக்களுக்கு மயூரம் வேதநாயகம் பிள்ளை கொடையளித்தார்...

சுதந்திர தினம் கொண்டாடும் இந்திய அடிமைகளே பதில் சொல்லுங்கள்...


தினம் தினம் தற்கொலை செய்துக் கொள்ளும் ஏழை விவசாயிகள் சார்பாக...

குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள் சார்பாக...

சிங்கள ராணுவத்தால் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள் சார்பாக...

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட மூன்று லட்சம் தமிழர்கள் சார்பாக...

கேள்விகளின்றி கொள்ளப்படும் தலித் மக்கள் சார்பாக...

மாவோஸ்டுகள் என்று கொள்ளப்படும் பழங்குடிகள் சார்பாக...

ஆந்திராவில் போலீசால் சுட்டுக் கொள்ளப்பட்ட தமிழக தொழிலாளர்கள் சார்பாக...

உங்கள் அனைவருக்கு என் கேள்விகள்..

இதற்க்காகத் தான் நீங்கள் இந்திய சுதந்திர தினம் கொண்டாடுகிறீர்களா?

திமுக வும் மது விலக்கின் மலரும் நினைவுகளும்...


டாஸ்மாக் கடைகளுக்கு வருடத்திற்கு 1300 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கும் கார்ல்ஸ் மதுபான கம்பெனி முதலாளி, கனிமொழியுடன் சேர்ந்துக்கொண்டு ‘மதுவிலக்கு’ முழங்கிய அருமையான காட்சியைக் கண்டு ரசியுங்கள்...


பிறகு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்வதையும் நம்புங்கள்...

தமிழக தெற்கெல்லை மீட்புக்கு ஆதரவு...


திருவாங்கூர்-கொச்சி அரசில் இருந்த தமிழர் பகுதிகளான தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைக்க திருவாங்கூர் தமிழ்நாட்டில் பல தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

ஆனால் கன்னியாக்குமரி மாவட்டப் பகுதிகளும் செங்கோட்டை நகர் பகுதியும் மட்டுமே தமிழகத்துடன் இணைந்தன.

தமிழர்களின் முக்கியப் பகுதியான தேவிக்குளம், பீர்மேடு திருவாங்கூர்-கொச்சி அரசிலேயே இருந்தது.

இதற்குக் காரணமாக, சிங்களவனை விட கொடூரமான தமிழின பகைவர்களான மலையாளி பணிக்கர் இருந்தார் என தமிழருக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.

மாநில புணரமைப்புக் கமிசனின் தலைவர் வந்தேறி சர். பசல் அலி பீகாரைச் சார்ந்தவர்.

அவருடைய சொந்த மாநிலமான பீகார் பற்றிய விவாதம் நடைபெற்ற போது அவர் அதில் கலந்து கொள்ளாமல் வெளியேறி விட்டார்.

அவருடைய இந்த நேர்மையான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் கமிசனின் மற்றொரு உறுப்பினரான கே. எம். பணிக்கரிடம் இத்தகைய நேர்மையில்லை.

தமிழ்நாடு, கேரளம் ஆகியவை பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படும் போது மலையாளியான அவர் இந்த கமிசன் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடாது.

குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்க்களை பற்றிய பிரச்சினைகளில் அவர் அளவு கடந்து அக்கரை காட்டி இந்த தாலுக்கா கேரளத்துடனேயே இணைக்க வேண்டும் என்று கமிசனுக்குள்ளேயும், வெளியேயும் வாதாடி வருகிறார்...

—கே. விநாயகம், சட்டமன்றம் 23-11-1955...

அட முட்டாள் தமிழினமே...


எதற்காக நீ கொண்டாட வேண்டும்.. சுதந்திரத் தினத்தை.. சிந்தியடா...

நடிகர் கமல் தமிழினத்தின் எதிரியே...


தெனாலியில் ஈழத் தமிழனை பயந்தாங்கொள்ளியாக காட்டி சந்தோஷப்பட்ட கமல்,

மன்மதன் அம்புவில் அவனை செருப்பால் அடித்திருக்கிறார். அதுவும் ஒரு நடிகையின் கையால்.

ஏர்போர்ட்டில் வந்திறங்கும் த்ரிஷாவை ஈழத் தமிழரான டாக்சி டிரைவர் ஒருவர் சந்திக்கிறார்.

மேடம்! உங்க கால் செருப்பாகக்கூட நடிக்கத் தயாராக இருக்கேன் என்று வாலண்ட்ரியாக முன் வந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் இதே ஈழத் தமிழர், த்ரிஷாவிடம் செருப்படியும் வாங்குகிறார்.

அப்போது, மேடம் உங்க செருப்பாகூட நடிக்கத் தயார்னுதான் சொன்னேன். செருப்படி வாங்கறேன்னு சொல்லலை என்று மீண்டும் தன்னை அசிங்கப்படுத்திக்கொள்கிறார்.

இதற்கு முன்பாக, இதே நபர் டோப்பா(விக்) தலையுடன் வந்து அதுவும் கழற்றப்பட்டு அவமானப்படுகிறார்.

ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா?

தமிழா சிந்தி...

நம் இனத்தை எப்படி எல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அதை சரியாக செய்கிறது இந்த நடிப்புத் துறை... அதையும் காத்திருந்து பணம் செலவழித்து பார்த்து கை தட்டி சிரிக்கிறாய் நீ...

வருங்காலத் தமிழினத்தின் தலைவிதி இளைஞர்களிடம் தான் உள்ளது...

ஆனால் நம் தமிழினமோ திரை கூத்தாடி பின்னால் சூடு சூரனை இன்றி அலைகிறது...

திருட்டு திராவிடர்ஸ்...


கடவுள் இருக்கான் என்று சொல்பவனை கூட நம்பலாம்..


கடவுளே இல்லை என்று சொல்பவனை கூட நம்பலாம்..


நான் தான் கடவுள் என்று சொல்பவனை கூட ஓரளவு நம்பலாம்...

ஆனால்..


இந்த குறுப்பிட்ட கடவுள்கள் மட்டும் இல்லை என்று சொல்லும் பகுத்தரிவாளன்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க...

அவ்வையார் யார்? அற்புதத் தகவல்கள்...

                         
ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா?

அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார்.

அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள  சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.

திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.

ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

“ஒள’’ என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. “அவ்வை’’ என்று எழுதுவதே சரி.

பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன.

அவர்கள் பின் வருமாறு :

1) சங்க கால அவ்வை.
2) அங்கவை - சங்கவை அவ்வை.
3) சோழர் கால அவ்வை.
4) பிற்கால அவ்வை.

1. சங்ககால அவ்வை 59 செய்யுள்கள் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.

“களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.’’
                                                                               (புறநானூறு: 87)

இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’’
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியதும் இவர்தான். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் இவரின் துணைக் கொண்டு அரங்கேற்றியதாகவும் ஒரு செய்தி பேசப்படுகிறது. இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’’ என்று பாடி இருக்கிறார்கள்.

இவர்களின் பெயர்கள் தான் ''சிவாஜி'' எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை. கருப்பு நிறம் இல்லையேல் மற்ற நிறங்களுக்கு மதிப்பேதும் இல்லை.

3. சோழர் கால அவ்வை: இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றை பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் அவ்வையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம் பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண் எனக் கூறி நகைத்தான். குறும்பு தனமான மதி நுட்பத்தை கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திப் பின்வரும் செய்யுளை பாடினார்.

“கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்’’

இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தான் என்பர்.

சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் முறையே கரியிலும் பரியிலுமெறி கயிலைக்கு செல்வதை அறிந்த இவர் தாமும் அவர்களுடன் அங்கு செல்ல விரும்பி தாம் பிள்ளையாருக்கு வழக்கமாக செய்யும் பூசையை அவசரமாக செய்ய, இவர் எண்ணம் அறிந்த பிள்ளையார், அவசரம் வேண்டாம் நான் உன்னை கயிலைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். இதனால் மகிழ்ந்த இவர், பிள்ளையார் மீது விநாயகர் அகவல் பாடினார். பிள்ளையாரும் கூறியவாறு இவரை தும்பிக்கையால் தூக்கி கயிலையில் வைத்தார் என்பர். அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ, பின்வரும் செய்யுளில் பிள்ளையாரின் அருளால் இங்கு வந்தேன் என்று விடையளித்தார்.

“மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!’’

முருகனுக்கு அறிவுரை கூறியவர். அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்’’

இந்தச் செய்யுள் தோன்றக் காரணமாக அமைந்த ஒரு சம்பவம் வருமாறு:
சோழ நாட்டு மன்னரின் அரச சபையிலே, புலவர்கள் எல்லோரும் சோழ மன்னரைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வையாரின் முறை வந்தது அவர் “வரப்புயர’’ என்று மட்டும் கூறி விட்டு அமர்ந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தங்களது அறியாமையை மற்றவரின் முன் காட்டிக் கொள்ளவும் தயக்கம். ஆகவே எல்லோரும் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மன்னன் கேட்டார் “அவ்வையே! அனைவரும் என்னையே புகழ்ந்து பாடினார்கள் தாங்கள் மட்டும் வரப்புயர என்று சம்பந்தமில்லாமல் வாழ்த்தினீர்கள். இதன் அர்த்தம் என்ன’’ என்று கூற வேண்டும்.

அதற்குத் தான் அவ்வை மேற்கண்ட செய்யுளைப் பாடினார்.

வரப்பு எவ்வளவு உயரமாகக் கட்டுகிறார்களோ, அவ்வளவு உயரத்திற்கேற்றவாறு நெற்கதிர்கள் உயர்ந்து வளரும். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்தால் விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தில் உயரும். மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாட்டைத் தான் செங்கோல் ஆட்சி நடக்கும் நாடு என்று கூறுவார்கள். ஆட்சி நன்றாக நடந்தால், அந்நாட்டு மன்னனும் நன்றாக வாழ்வான் என்பது தான் இப்பாடலுக்கான பொருள்.

4. பிற்கால அவ்வை: பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன. அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்துக் கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடுவாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன. அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள்.

ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்...