மத்திய அமைச்சரவையில் பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
ஏன்? எதற்கு என்ற விளக்கம் அளிக்கவேயில்லை.
நான்கு எம்.பி.க்கள் பெற்றிருந்தும், ம.தி.மு.க.வுக்கு பல அழைப்புகள் வந்தும் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்றார் வைகோ.
அமைச்சரவையில் பங்கேற்க, வெளியிலிருந்து ஆதரவு…
நாங்கள் கூட்டணியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூச்சல் கேட்ட நேரத்தில்…
வைகோ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரே?
அரசியலில் இப்படி ஒரு பண்பாளரா…
இத்தனை துணிச்சல் ஒரு அரசியல் தலைவருக்கு வருமா? என்று தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவே தன்னை பாராட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அதில் இருந்தது.
ஆனால், கட்சி?
இவரை நம்பி நாயாய் பேயாய் செருப்பு கூட இல்லாமல் கட்சிக்கு உழைத்தவன் கதியை எண்ணிப்பார்த்தாரா?
அதற்காக, அமைச்சரவையில் சேர்ந்து ஊழல் செய்ய வேண்டி சொல்லவில்லை. மத்தியில் ஒரு அமைச்சர் இருந்தால், தன்னால் கட்சி வளருமே! கட்சிக்காரனுக்கு நாலு காண்ட்ராக்ட் கிடைக்குமே?
சரி. போகட்டும். வைகோவையே இந்த வையகமே பாராட்டடும். நாமும் பாராட்டுவோம்.
தி.மு.க.வில் இருந்துக் கொண்டே இருந்தார். கலைஞரை மேடை தோறும் பாராட்டினார்.
என்ன நடந்தது 2006ம் ஆண்டு.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு!
வைகோவை சிறையிலிருந்து மீட்டு வந்த தி.மு.க.வில் அவர் இருந்தாரா? அங்கிருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்.
தி.மு.க.வில் அவருக்கு 21 தொகுதிகள் தர, இவர் 23 கேட்க, அங்கே இருந்தால்தானே தருவதற்கு?
வெளியேறினார்.
அ.தி.மு.க.வில் 35 தொதிகளை வாங்கிக்கொண்டு, சிறையில் போட்ட ஜெயலலிதாவை சிரித்துக் கொண்டே கும்பிட்டார்.
“என்னை கட்சியில் வைத்துக் கொண்டே, ம.தி.மு.க.வை அழிக்க முற்பட்டார் கருணாநிதி” என்று குற்றஞ்சாட்டினார்.
ஆனால் கட்சியினரும் நெருங்கிய பத்திரிகையாளர்களும் வைகோவிடம் கடுமையாக விவாதம் செய்தனர்.
அவர்களுக்கு வைகோ தந்த பதில்:
”ஸ்டாலினுக்கு என்னை கார் கதவை திறக்கச் சொல்கிறீர்களா” என்றார பத்திரிகையாளர்களிடம்.
“கட்சியை எப்படியாவது அழித்துவிட்டு, என்னையும் நிர்கதியாக்கப் பார்க்கிறார்” என்றார் கட்சியினரிடம்.
சரி?
தேர்தலில் ம.தி.மு.க. ஜெயித்தது ஆறு தொகுதிகள்.
அ.தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம்தேதி வரை அமைதியாகவே இருந்தார்.
இங்கேதான் தலைப்புக்காக நாம் சிலவற்றை சொல்ல வேண்டியிருக்கிறது.
2009ம் ஆண்டு ஈழத்தில் இறுதிக்கட்ட போரை ராஜபக்ஷே நடத்திக் கொண்டிருந்தார். அந்த போருக்கு உறுதுணையாக இருந்தார் சோனியா காந்தி. அதாவது அந்த போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.
மத்திய அரசை ஈழத்தமிழர்களுக்காக, எதிர்க்க வேண்டிய கருணாநிதி, பாதுகாத்தார். பாதுகாத்தார் என்று சொல்வதைவிட, மத்திய அரசை எதிர்த்துப் பேசியவர்களையும் சிறையில் தள்ளும் அளவுக்கு கருணாநிதி துணிந்துவிட்டார்.
கருணாநிதிக்கு எப்படி இப்படி துணிச்சல். அதுவும் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை எதிர்த்து போராடுவதற்கு கூட அனுமதி கொடுக்க முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு என்ன மன அழுத்தம்.
காங்கிரஸின் காலில் விழுந்து கருணாநிதி, “நீங்கள் கவலையேபடாதீர்கள். தமிழர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சோனியாவுக்கு கருணாநிதி தைரியம் சொல்லும் அளவுக்கு கருணாநிதி மாறியது ஏன்?
ஒரே ஒரு காரணம்.
தி.மு.க. மைனாரிட்டி அரசாக தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டிருப்பதுதான்.
ஒருவேளை, தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்தால், ஆளும் மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறி இருப்பார். இல்லையென்றால், கூட்டணியில் இருந்து கொண்டே மிரட்டிக்கூட இருப்பார்.
இதெல்லாம் நடக்குமா? என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம். அதற்கு தி.மு.க. மெஜாரிட்டியாக இருந்திருக்க வேண்டும். அதற்கு தி.மு.க. கூட்டணியில் 2006ம் ஆண்டு ம.தி.மு.க.வும் இருந்திருக்க வேண்டும். அப்படி ம.தி.மு.க. அக்கூட்டணியில் நீடித்திருந்தால், தி.மு.க. நிச்சயம் அத்தேர்தலில் 118 தொதிகளில் வென்றிருக்கும். ம.தி.மு.க.வும் 21 தொகுதிகளில் குறைந்தது 15 தொகுதிகளில் வென்றிருக்கும்.
தி.மு.க. மெஜாரிட்டியாக ஆட்சியில் அமர்ந்திருக்குமானால், அதே கூட்டணியில் ம.தி.மு.க. இருந்திருந்தால், காங்கிரஸை நெருக்கடி கொடுத்திருக்க முடியுமா… முடியாதா?
ஈழத்தமிழர்களுக்கு இத்தனை நெருக்கடி சூழ்ந்திருந்த வேளையில் கூட்டணியில் இருந்து கொண்டே, கருணாநிதிக்கு வைகோ நெருக்கடி கொடுத்திருக்க முடியும். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், வைகோயின் தொடர் நெருக்கடிக்கு வளைந்து கொடுத்திருக்க மாட்டாரா கருணாநிதி?
அப்படியும் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தும் போரை நிறுத்தச் சொல்லி நிச்சயம் கருணாநிதி முழக்கமிட்டிருப்பார். அவருடன் வைகோ இருந்திருந்தால். வைகோ மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணிக்கு ஈழத்தமிழர்களுக்காக திருமாவளவனும் நெருக்கடி கொடுத்திருப்பார்.
இவர்கள் இருவரும் நெருக்கடி கொடுக்கும் போது, எந்தக் கூட்டணியில் அவர் இருந்திருந்தாலும் டாக்டர் ராமதாஸூம் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்திருப்பார்கள்.
அல்லது வைகோ, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை தன்வசமாக்கிக் கொள்ள கருணாநிதியே, அவர்களுக்கு ஏதாவது வரலாற்றில் பெயர் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி, களத்தில் குதித்திருக்கலாம்.
இச்சூழ்நிலையில், இலங்கைக்கு தானாகவே நெருக்கடி ஏற்பட்டிருக்குமா இல்லையா என்று சொல்லுங்கள்.
வைகோ நெருக்கடி கொடுத்தும், மெஜாரிட்டி இருந்தும் கருணாநிதி செவிமடுக்காமல் போயிருந்தால்… என்று சிலர் சொல்வது எப்படி அனுமானமாக இருக்குமோ அதைத்தான், வைகோ தி.மு.க. கூட்டணியில் நீடித்திருந்தால்…
இலங்கையில் இறுதிப் போர் நடந்திருக்காது.
மூன்று லட்சம் மக்கள் செத்திருக்கமாட்டார்கள் என்று தமிழ் லீடர் இணைய தளமும் அடித்து சொல்கிறது.
வைகோவால், ஈழத் தமிழர்களின் நலன் அழிக்கப்பட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு, எதிர் வாதம் இருந்தால் தமிழ் லீடருக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பதிவு செய்யப்படும்.
முடிவரைக்கு முன்பாக,
வைகோவின் தாரக மந்திரங்கள்
பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை, லட்சியத்தில் உறுதி.
இதுவரை வைகோவின் செயல்பாடுகளை பார்த்தால் அரசியலில் நேர்மையும் இல்லை. லட்சியத்தில் உறுதியும் இல்லை. பொதுவாழ்வில் தூய்மை அவரிடத்தில் உண்டு என்றாலும், நாட்டில் 60 முதல் 70 சதவிகித மக்களிடம் தூய்மை இருக்கிறது. அந்த மக்கள் தொகையில் அவரும் ஒருவராக இருப்பதில் தவறில்லை.
ஆனால், கட்சித் தலைவர் என்னும் போது...
அதுவும், அரசியல்... தேர்தலை சந்திக்கும் அரசியல் என்றால் அக்கட்சித்தலைவர் எடுக்கும் முடிவுகள் குறைந்தப்பட்சம் கட்சியை காப்பாற்ற வேண்டமா?
அரசியல் என்றால் போராட்டங்கள், தழும்புகள், தோல்விகள், வருத்தங்கள், வேதனைகள், அழுகை, தனிமை இவற்றுடன் சில மகிழ்ச்சியும் இருத்தல் அவசியமாகிறது.
அந்த மகிழ்ச்சி வைகோவுக்கு கிடைத்திருக்கிறதா? அவரே அவரது நெஞ்சில் கை வைத்து சொல்லட்டம்!
ஒரு மனிதன் வாழ்க்கையில் போராடலாம். ஆனால், போரட்டமே வாழ்க்கை என்றால், அது சாதனையா வேதனையா?
அர்சியலில் எப்போதுமே, தவறான முடிவு எடுப்பவர் வைகோ, சொந்தக் கட்சிக்கே சூனியம் வைத்துக் கொண்டவர் வைகோ என்று அக்கட்சியினரால் பேசுவது அவரது காதுக்கும் கேட்டிருக்கும்.
நல்ல பேச்சாளர்...
நல்ல பண்பாளர்...
நல்ல மனிதர்....
ஆனால், நாட்டில் நல்ல தலைவராக அவரால் வரமுடியவில்லையே...