24/10/2017

அரியலூர் வாலாஜாநகரம் கிராமத்தில் பள்ளி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து . ஒரு குழந்தை காயம்...


விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்...

அடப்பாவிகளா பிரச்சினையை அமுக்க பாக்குறீங்களேடா...


சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் முன்பு இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி...


ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி...


மலபார் புளி என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.

கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்து வந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொடம்புளியை  ஒரு கப் தண்ணீர்  சேர்த்து,  மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக  அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 40...


திபெத்திய தியானம்...

இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.

புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.

ஒரு ஜென் ஞானி சொல்வார். “நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்”. மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?

மேலும் பயணிப்போம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


வறட்டு இருமல் குணமாக...


வறட்டு இருமல் என்றால் என்ன?

வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் வரக்காரணம்..

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.

வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம்..

வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி, மிளகு, சுக்கு, பூண்டு கசாயம் மருந்து..

கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக எலுமிச்சை, தேன் மருத்துவம்..

பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விட்டமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் c சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் c அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் மருந்து..

அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக உலர் திராட்சை மருந்து..

உலர் திராட்சை குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.

வறட்டு இருமலுக்கு புதினா மருந்து..

வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

வறட்டு இருமல் குணமாக மாதுளம், தேன், இஞ்சி மருந்து..

மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழசாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தின் முத்துக்களை மிக எளிமையாக எடுக்க, மாதுளம் பழத்தை சரி பாதியாக வெட்டி, பாதி மாதுளம் பழத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு ஒரு கரண்டியை வைத்து வேகமாக தட்டினால் முத்துக்கள் தானாய் உதிர்ந்து விடும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக திப்பிலி, தேன் மருந்து..

திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக வெங்காயம், சர்க்கரை மருந்து..

சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக பால், மஞ்சள், மிளகு மருந்து..

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.

வறட்டு இருமல் குணமாக பால், பனங்கற்கண்டு, மிளகு மருந்து..

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அருந்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக சீரகம், பனங்கற்கண்டு மருந்து..

10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.

வறட்டு இருமல் சரியாக மிளகு மருந்து..

மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.

வறட்டு இருமல் சரியாக தேன், பட்டை மருத்துவம்..

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக தேன், தூதுவளை மருந்து..

சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. தூதுவளை கொடியை நன்கு காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக்கடைகளில் தூதுவளை பொடியாகவே கிடைக்கும். ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்...

நடிகை ராதிகா கலாட்டா...


நியூ கினியாவில் உள்ள காட்டுவாசிகள் தங்கள் வீடுகளில் கோராவார் என்று அழைக்கப்படும் ஒரு பொம்மையை வைத்திருக்கிறார்கள்...


இந்த மந்திர பொம்மை இறந்தவர்களுடன் பேச மீடியமாக பயன்படுகிறது...

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சம்பாதிப்பதற்காக ஏழை மீனவர்கள் மீது தடியடி...


ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் பாஜக வின் கறுப்பு சட்டம்...


அரசு அதிகாரிகள், முன்னாள், இந்நாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஓர் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்தது.

குற்றச் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் - 2017 என்ற அந்த சட்டத்தில் உள்ள பிரிவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்துள்ளது. எனினும், விமர்சனங்களைப் புறம்தள்ளிவிட்டு இதனை நிரந்தர சட்டமாக்கும் முயற்சியை மாநில பாஜக அரசு மேற்கொண்டுள்ளது பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

மாநில அரசின் உரிய முன் அனுமதி பெறாமல் எந்த நடுவர்மன்ற நீதிபதியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது விசாரணை மேற்கொள்ளவோ, விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவோ முடியாது. அரசு ஊழியர்கள் மட்டுமன்றி முன்னாள், இன்னாள் நீதிபதிகள் மீதும் அரசின் முன் அனுமதியின்றி எவ்வித விசாரணையும் நடத்த முடியாது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு...

அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலும், அவரது தவறு உறுதி செய்யப்படும் வரை அவர் சார்ந்த தனிப்பட்ட விவரங்களை, அதாவது அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விவரம் உள்ளிட்டவற்றை பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அரசை விமர்சிக்கக் கூடாது..

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி தனிநபர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளையும், தேவையற்ற கருத்துகளையோ ஊடகங்களிடம் அல்லது சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கக் கூடாது. முக்கியமாக மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை எந்த இடத்திலும் அரசுப் பணியாளர்கள் விமர்சிக்கக் கூடாது. இதனை மீறி எவரேனும் நடத்தால் அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தது. கழுத்து வரை ஊழலில் மூழ்கிவிட்ட பாஜக அரசு, தங்களையும், தவறு செய்யும் அரசு ஊழியர்களையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. அரசு அதிகாரிகள் மத்தியில் லஞ்ச, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

quot : நடுவர் நீதிமன்றத்துக்கு உள்ள விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயற்சிக்கிறது. மேலும், ஊடகங்களின் குரலை ஒடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை எதிர்த்து விரைவில் வழக்குத் தொடரப்படும் #39; என்று சமூக விடுதலைக்கான மக்கள் அமைப்பின் மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்த மாநில உள்துறைச் செயலாளர் தேவேந்திர தீக்ஷித், quot;அரசு அதிகாரிகள், ஊழியர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையிலும், அவர்கள் நம்பிக்கையுடன் பணியாற்றும் வகையிலும் மாநில அரசு இந்த அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது #39; என்றார். quot;ஊழல் செய்த அரசு அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கில் இந்த அவசர சட்டத்தை கொண்டுவரவில்லை #39; என்று ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் பேச்சுரிமைக்கு எதிரானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மாநில முதல்வர் அவர்களே, நாம் இப்போது 2017-ஆம் ஆண்டில் 21-ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். உங்கள் இஷ்டப்படி சட்டம்போட இது 1817-ஆம் ஆண்டு அல்ல. ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் பேச்சுரிமைக்கு எதிரானது என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். வசுந்தரா ராஜே சிந்தியா மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் மன்னராட்சி நடந்த ஆண்டைக் குறிப்பிட்டு ராகுல் விமர்சித்துள்ளார்...

செய்தி - தினமணி

சிந்தித்துப் பார் தமிழினமே..


சித்தர் ஆவது எப்படி - 21...


அதுவாய் இருப்பதும், அதைப் பற்றி இருப்பதும்...

ஆன்மீகம் இரண்டாய் பிளந்து போய் இருக்கிறது..

ஒன்று அதுவாய் இருக்கும் மிக உன்னத நிலை..

மற்றொன்று அது என்ற ஒன்றை மறந்து விட்டு அதனால் காரியப் பட்ட விசயங்களையும், அதைப் பற்றிய விசயங்களில் மூழ்கி போய் அது என்ற அந்த ஒன்றின் தொடர்பை முற்றிலும் இழந்து விட்ட நிலை..

அதுவாய் இருக்கும் அந்த நிலையில் பல கோடி மக்களில் ஒருவர் தான் இருக்கிறார்..

மற்றவர்கள் எல்லாம் அது என்ற ஒன்றை பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு இருக்கும் நிலை....

சத்திய நிலையில் அதுவாக இருக்கும் சத்திய மகான்கள் உலக மக்கள் தொகையில் சிலர் மட்டுமே..

ஆனால் பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு அசத்திய நிலையில் உண்மை அற்ற நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்களே மற்ற அனைவரும்..

கடவுளை யாரும் நினைப்பதில்லை..
கடவுளை பற்றிய விசயங்களில் பற்றி பற்றி அதனால் தோன்றியவற்றில் மூழ்கி கடவுள் நினைப்பே இழந்து போய் விட்டனர்..

காதலை யாரும் நினைப்பதில்லை. காதலைப் பற்றிய விசயங்களிலேயே இருக்கின்றனர்..

வயது கடந்த நிலையில் வைரமுத்து என்ற கவிஞர் காதலை சொல்லுகின்ற போது காதலை மட்டுமே சொல்லுகின்றார்.. காதலை பற்றி சொல்லுவதில்லை.. அந்த கவிதைகள் பல பேருக்கு வியப்பை தருகிறது..

கடவுளை சொல்லுகின்ற போது அது பல பேருக்கு வியப்பை தரும்.. ஆனால் புரிவதில்லை.. கடவுளை பற்றி சொல்லுகின்ற போது புரிவது போல தோன்றும்.. ஆனால் சத்தியம் விளங்குவது இல்லை..

அது சத்தியமாக இருக்கிறது.. அது என்பதை விளக்க வந்தவைகள் சித்தாக உள்ளது..

அப்படி விளக்க, விவரிக்க வந்தவைகளில் சிக்கி கொள்ளாமல் விளக்க வந்தவைகள் சுட்டி காட்டும் அந்த சத்தியத்தை பிடிப்பதே புத்தி அறிவு..

ஆனால் இன்றைய நிலையில் அந்த சத்தியத்தை பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.. காரணம் விளக்க வந்தவைகளின் பிடிப்பு மிக வலுவாக உள்ளது.. அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் மனிதன் தவிக்கின்றான்..

அந்த தவிப்பின் வெளிப்பாடே மதவெறியாக மாறி விட்டது..

சித்து சுட்டிக் காட்டும் சத்தை பிடிப்பவர்கள் தான் சித்தர்கள்..

சித்து சுட்டி காட்டுபவைகளில் சிக்கி கொண்டவர்கள் பித்தர்கள், மன நோயாளிகள், மத வெறியாளர்கள்..

சத்தை பிடிப்பவர்களிடம் மட்டுமே அன்பு என்ற புனிதம் இருக்கும்..

விளக்க வந்தவைகளில் சிக்கி கொண்டவர்கள் விடுதலை பெற வேண்டுமானால் சத்து நிலையை மட்டுமே அனுபவப்படும் தோன்றா நிலையை அனுபவப் படும் போது மட்டுமே விடுதலைக் கிடைக்கும்..

கடவுளை பற்றிய விசயங்கள் அங்கே தொலைந்து போய் கடவுளையே அறியும் உன்னதம், புனிதம் கிடைக்கும்..

அந்த தோன்றா நிலையையும் அங்கே கிடைக்கும் சத்தியமான பிரபஞ்ச பேராற்றலை பெறுகின்ற புனித நிலையையும் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு நம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்வோம் என்றால் சித்தர் ஆவது திண்ணம், உறுதி....

எதிர்கால சந்ததியினருக்கு நிகழ்காலத்தில் விருந்து வைத்த விஞ்ஞானி...


அறிவியல் உலகில் பல்லாண்டு
காலமாக நீங்காத மர்மங்களில் Time
Travel (காலப்பயணம்) முக்கியமான
இடத்தினை பிடிக்கிறது.

தற்போது இருக்கும் காலத்தில் இருந்து
இறந்த காலத்திற்கோ அல்லது
எதிர்காலத்திற்கோ பொருள்களை
அனுப்புவதோ, தகவல்கள்/
சமிக்ஞைகளை அனுப்புவதோ, அல்லது
மனிதர்கள் பயணம் செய்வதையோ
காலப்பயணம் என குறிப்பிடுகின்றனர்.

ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட சிறப்பு
சார்பியல் மற்றும் பொது சார்பியல்
கொள்கைகளே காலப்பயணம் என்ற
கருத்தை முதலில் முன் வைத்தது.

மேலும், இவ்வாறான காலப் பயணத்தை அடைய பயன்படும் தொழிநுட்ப சாதனத்தினை கால இயந்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, ஒளியின் வேகத்திற்கு இணையாக பயணித்தால் காலப்பயணம் சாத்தியம் என்று கூறப்படுகிறது.

கடந்த 19ம் நூற்றாண்டில் இருந்து
காலப் பயணம் மற்றும் கால இயந்திரம்
பற்றி எண்ணற்ற புனைவு கதைகள்
வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த காலப்பயணத்தை
உண்மை என நிரூபிக்கும் முயற்சியில்
ஈடுபட்டார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அனு இயலின் தந்தை ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனுக்கு பிறகு, உலகின் அதிமுக்கிய அறிவு ஜீவியாக அறியப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த பேரண்டத்தின்
புரியாத பல ரகசியங்களை மனித குலத்துக்கு புரியவைத்தவர்.

2009ம் ஆண்டு யூன் மாதம் 28ஆம்
திகதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக
மண்டபத்தில். காலப்பயணிகளை
வரவேற்கிறோம் (Welcome Time
Travellers) என்ற பெயரில் ஒரு
விருந்தை ஏற்பாடு செய்து
அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க
வைத்தார்.

அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த
மண்டபத்தில் உயர்தர விருந்துக்குத்
தேவையான அனைத்து உணவு
வகைகள், ஷாம்பெய்ன் பாட்டில்கள்
என அனைத்தும் தயார் நிலையில்
இருந்தன.

விருந்துக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், விருந்தினர்
ஒருவர்கூட வரவில்லை.

இதில் சுவாரசியமான விடயம்
என்னவென்றால் இந்த விழாவுக்கு
அழைப்பிதழே வழங்கப்படவில்லை
என்பது தான்.

அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு
யார் வருவார்?

காரணம் அந்த விருந்து நிகழ்கால மனிதர்களுக்கானது அல்ல,
எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக
ஏற்பாடு செய்யப்பட்டது.

அதாவது, பல நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் பூமியில் வாழப்போகும் நம்
எதிர்காலச் சந்ததியினர், ‘காலப்
பயணம்’ (Time Travel) மூலமாக
இறந்த காலத்துக்கு வந்து, இந்த
விருந்தில் கலந்து கொள்வதற்காக
ஏற்பாடு செய்திருந்தார்.

இது படிப்பதற்கும், கேட்பதற்கும் சற்று
சாத்தியமற்றதாக இருந்தாலும்,
இவையெல்லாம் வருங்கால
அறிவியல் உலகில் சாத்தியம் என்று
வலியுறுத்தி வருகிறார் ஸ்டீபன்
ஹாக்கிங்...

அடேய் பாஜக எச்சை ராஜா சர்மா....


அப்படியே உன் உண்மையான பெயரை நிரூபிக்க உன் சான்றிதழை போட்டு நீ தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த வந்தேறி பய என்று நிருபிடா...

இந்தியா விற்கும் ஆரியனுக்கும் சம்பந்தமே இல்லை...


டி என் ஏ பரிசோதனை செய்தீர்களா என்று அடிக்கடி கேள்வி கேப்பீங்களே...?

இதோ டி என் ஏ பரிசோதனை செய்தே நிரூபிச்சுட்டானுங்க ஆரியர்கள் வந்தேறிகள் என்று...

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece

போலீசார் அடி வேற வாங்க ஆரம்பிச்சுட்டாங்களா...


சிறப்புப் பஞ்ச கற்பம்...



பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோல், விதை நீக்கிய நெல்லி வத்தல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு..

ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர்.

அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊற வைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார்.

இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும்.

நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும்.

உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.

நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும்.

சிறு வயதில் இருந்தே 15 நாட்களுக்கொரு முறை பயன்படுத்தி வந்தால் அவர்களக்கு 4448 வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்...

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் - கம்யூனிசம்...


இந்த நான்கும் 'மண்ணின் மைந்தர்கள்' என்ற கருத்தியலுக்கு எதிரானது சிந்தியுங்கள் புரியும்.

'தமிழர்' என்ற கருத்தியலுக்கு எதிரானவை என்று புரியும்.


அந்த அடிப்படையில் இந்த நான்கையும் நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், புறம்தள்ள வேண்டும் என்றும் புரியும்...

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது தமிழனே...


கேள்வி: தமிழ் மொழியை விடுத்து எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். ஆங்கில அறிவே நமக்கு உதவும். வீட்டில் உள்ள வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள். ஆங்கிலமே அறிவு மொழி என்று பெரியார் முன்மொழிந்தார். இதில் தவறென்ன...?

பதில்: பெரியாருக்கு ஆங்கில மோகத்தை விட, தமிழை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருந்ததை பல வழிகளில் நிறுவலாம்.

மேலும், ஆங்கில மோகத்தால் ஏற்ப்பட்ட இன ரீதியான சீரழிவை கீழே உள்ள பதிவு விளக்குகிறது.

வெள்ளைக்காரன் தான் எல்லாத்துலையும் கில்லாடி என்றும், அவனுக்கு தான் அறிவு இருக்கு தமிழன் வெள்ளைக்காரனை பாத்து கத்துக்கணும் என்று கன்னட ராமசாமி நாயக்கர் போன்ற திராவிட வாதிகள் முன்மொழிந்த, குப்பைக்கு கூட புரோஜனம் இல்லாத மெக்காலே கல்வித் திட்டத்தால் நம்மில் பெரும்பாலோர் மேற்கத்திய மாயையில் இருந்திருப்போம்.

இன்றும் அதே தி.க நபர்கள் இந்த 'Chariots of Gods ' என்ற புத்தகத்தை ஒருவேளை வாசித்தால், அதில் சுவிஸ் ஆய்வாளர் சொல்லியதை அப்படியே நம்மிடம் வந்து வாந்தி எடுப்பார்கள்.

அப்படி என்ன தான் கூறுகிறார் எரிக் வான் டனிகென்?

மனிதன் காட்டுமிராண்டியாக உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில்..

விவசாயத்தை கற்றுக் கொடுத்தது.

அதனை ஒட்டி குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது.

தொழில் நுட்ப அறிவை கொடுத்தது.

இதையே திராவிட தலித்தியவாதிகள் இப்படி நம்மிடம் வந்து சொல்வார்கள்.

குடும்பம் என்ற அமைப்பின் உருவாக்கத்துக்கும் தமிழனுக்கும் சம்பந்தமே கிடையாது.

விவசாயத்தை கண்டு பிடிச்சி நாகரிகம் சொல்லித் தந்தது ஆரியன் கூட இல்லை.... ஏலியன்....

கோவில், அணைக்கட்டு என எல்லாத்தையும் கட்டுனது ஏலியன் தான்.... பாரு வெள்ளைக்காரனே ஆராய்ஞ்சு சொல்லிட்டான்...

உண்மையிலேயே இந்த வெள்ளைக்கார ஆராய்ச்சி வெங்காயங்கள் ஆராய்ச்சி தான் பண்ணுதா..... இல்ல, மோசடியான ஆரிய கொள்கை மாதிரி, இதுங்களா ஒன்னு சேர்ந்து மறுபடியும் வேற ஒரு மோசடியான இருட்டடிப்பு வேளையில் இறங்குதா....?

இவனுங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா குறைஞ்ச பட்சம் தமிழ் நாட்டை தமிழர் ஆளனும்..

வெள்ளைக்காரனுக்கு சொம்படிக்கிற எந்த திராவிட ஈர வெங்காயமும் இதை செய்யும் என்று எதிர் பார்க்க முடியாது.

Book name: Chariots of the Gods
Author: Erich von Daniken...

தமிழர் யார் என்பதற்கான வரையறை...


கேள்வி: செம்மண், உவர் மண், களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...?

இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...?

அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை.

மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது.

காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி.

இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது.

இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை நான் இப்படி வரையறை செய்கிறேன்.

தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்...

இப்படி துல்லியமாக வரையறுக்கா விட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை..

குறிப்பு : இல்லாத இந்தியத்தை போலியாக உருவாக்க முடிந்தது என்றால்...

பல்லாயிரம் ஆண்டுகளாக வரலாறாக வாழும் தமிழினம் மீண்டும் தனக்கான தேசத்தை ஏன் உருவாக்க முடியாது.?

திமுக கட்சிகாரர்களே பதில் சொல்லுங்கள்...


தமிழ் மக்கள் 5 முறை தெலுங்கு கருணாநிதி சின்னமேளத்தை தேர்தலில் வெற்றி பெற செய்து பதவி கொடுத்துள்ளனர்...

ஆனால் தெலுங்கு கருணாநிதி சின்னமேளம்...

ஈழம், கச்சதீவு, காவேரி, முல்லை, கிருஸ்ணா, கூடன்குளம், மது அனைத்து பிரச்சனைகளும் இன்றும் அதே நிலையில் தான் வைத்து அரசியல் செய்க்கின்றார்..

தமிழர்களுக்கு அநீதி...


2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் 39 நாடாளூமன்ற உறுப்பினர்கள், 163 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு 2 லட்ச்சம் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை..

5 முறை தமிழர்கள் கொடுத்த முதலமைச்சர் பதவியில் புடுங்க முடியாததை....

இனி பதவி கொடுத்தால் எப்படி புடுங்குவார் ?

வழக்கம் போல மத்திய அரசுக்கு கடிதப் பொய்மை வைத்தா ?

அல்லது மிச்சம் இருக்கும் அழிவு திட்டங்களை எல்லாம் கொண்டு வந்து மொத்தமாக தமிழினத்தை அழித்தா..?

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் என்றால் என்ன?


கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது.

இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை.

அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம்.

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள்.

மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது.

மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட்.

இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம்.

வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி நான் கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.

மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்..

இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.

3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.

4. இன்னொரு ஆச்சரியமான தகவல் - மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.

5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.

7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள்...

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம்...


காவிரிப்பூம்பட்டினம் - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம்....

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.

ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள்.

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".

பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்.

காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான், இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.

ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".

இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தோட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது.

இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது, அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராமாக இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி"..

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர்.

பட்டினப்பாக்கம்:

இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள், பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், சோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர்.

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன..
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்..
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது. அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அரிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது.

தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை...

ஆங்கிலம் தமிழில் இருந்து வந்ததா.? ஆதாரம் இதோ....


W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி..

எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலி
ருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலி
ருந்துவந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை, பின்
ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.

ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் -  ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு..

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி.

உலக கலாச்சாரங்களின் தொட்டில்.

உலக நாகரீகங்களின் ஊற்று.

உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ்.

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations.

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம்..

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )

600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும்..

உருளை = roll (கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை).

கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் ).

பொத்தல் ல இருந்து பொத்தான் = Button.

உலகில் உள்ள, இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது.

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது.

ஆங்கிலத்தின் தாய் மொழியான.. லத்தீன், கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது.

லத்தீன், கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி..

2015 ஆய்வுகளின் படி...

( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ) - சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி.

- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி ).

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி..

சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி ..

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி, இயற்கையான மொழி ).

இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது.

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .

அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது.

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து  1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் ..

1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும்.

" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .

700 வருடங்களுக்கு முன்பு மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை.

தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம்..

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது..

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை.

இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000..

தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள்..

கி. முன் 3000
கி.முன் 5000
கி. முன் 7000
நூலான தொல்காப்பியமும் உள்ளது..

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும்..

கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான்..

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்.

இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம் " தான்..

ஆங்கிலம் பேசுவது பெருமை என நினைக்கும் தமிழர்களுக்கு உரக்கச் சொல்லுங்கள்...

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு...


பிஸ்தாவின் மருத்துவ பலன்கள்...

நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள், நல்ல கொழுப்பு போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.

ஏனெனில் இதில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள், கொழுப்புக்கள், நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் நியாசின் போன்றவை உள்ளதால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருவது உடலுக்கு நன்மையை தரக்கூடியது.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளை ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

இதிலுள்ள வைட்டமின் பி6 இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.

அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண்களில் உள்ள திசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கண்களை பாதுகாக்கிறது...

எண்ணையும் அதன் பயன்களும்...


விளக்கு எண்ணெய் – துன்பங்கள் விலகும்.

பசுநெய் – சகல செல்வமும் பெருகும்.

நல்லெண்ணெய் – பீடை விலகும். எம பயம் அணுகாது.

ஆமணக்கு எண்ணெய் – தாம்பத்யம் சிறக்கும்.

இலுப்பை எண்ணெய் – பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.

கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது..

தீபம் ஏற்றும் திசைகள்..

கிழக்கு நோக்கி தீபமேற்ற – துன்பங்கள் நீங்கி பீடை விலகும்.

மேற்கு நோக்கி தீபமேற்ற – கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.

தெற்கு நோக்கி தீபமேற்ற – பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.

வடக்கு நோக்கி தீபமேற்ற – திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்..

ஞாயிறு – கண் சம்பந்தமான நோய் தீரும்.

திங்கள் – அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.

வியாழன் – குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.

சனி – வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை.

இதற்கு ஒரு காரணமும் உண்டு.

திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள்.

எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறி விடுவாள். என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.

திரிகளும், பயன்களும்...

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.

வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.

தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.

வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.

புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.

சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்..

வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது...

தேக்கு இலையின் மகத்துவங்கள்...


வாழை இலையைப்போலவே தேக்கு இலைகளில் நாம் உணவருந்தலாம்.

ஏனெனில் அந்த இலையானது, 30 முதல் 60 CM நீளம் மற்றும் 15 முதல் 30 CM அகலம் கொண்டது.

தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும்.

மருத்துவ பயன்கள்...

தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது.

இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது.

மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் -  தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்து கொள்ள வேண்டும்.

அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.

பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.

விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது.

இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது.

நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.

சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.

ரத்த போக்கை கட்டுப்படுத்த மருந்து..

தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.

தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.

சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.

இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது...

ஏறக்குறைய பாதி இந்தியாவையே ஆண்ட இராஜராஜன் கூட தான் எழுப்பிய பெரிய கோயிலில் வீற்றிருக்கும் பெரு உடையாருக்கு எலுமிச்சை பழம் கொடுத்ததற்கு கூட கணக்கு கொடுத்து விட்டு சென்றிருக்கிறான்...


பங்காளி, அங்காளி என்றால் என்ன?


பங்காளிகள் - தந்தைவழி உறவினர்கள் ‘பங்காளி’ களாவும், தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளி.

அது போல நமது தகப்பன் வழி சகோதர்களின் வாரிசுகளான பெரியப்பா மகன், சித்தப்பா மகன், ஒன்றுவிட்ட , இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள் பங்காளிகள் ஆகும்...

அங்காளி - தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

நமது தாய்வழி உறவினர்கள் சகோதிகளின் வாரிசுகளான அதாவது சின்னம்மா மகன் பெரியம்மா மகன்களே அங்காளிகள் ஆகும்...

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்...


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன.

அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே.

இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை..

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து சீர நஞ்சு (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது.

ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த சீர நஞ்சு நல்ல குணமளிக்கும் மருந்து தான். ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து..

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும்.

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும், வாய் திறக்கும், வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து..

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது...

பொறையாறு அரசு போக்குவரத்து கட்டிடம் 8 பேர் பலியான சம்பவம், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு...


4 வாரத்தில் பதில் அளிக்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு...

பாஜக பொன். ராதாகிருஷ்ணன் பெயர் மாற்றம்...


பாஜக செய்த இந்த ஆண்டின் மிகப்பெரிய முற்றுகை போராட்டம்...


பாஜக  வெடித்த‌  'மெர்சல்' போராட்ட  புஸ்வானம். கோவில்பட்டியில் 'மெர்சல்' படம் ஓடுகின்ற தியேட்டரை முற்றுகையிடுவதாக பா .ஜ. க. அறைகூவல் விடுத்தது.

ஆனால் இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்தார்.

வெகு நேரம் காத்திருந்துவிட்டு வேறு போராட்டக்காரர்கள் யாரும் வராததால் படம் துவங்கிய பின்னர் அவரும் "கலைந்து" சென்றுவிட்டார்.

 - விகடன் செய்திகள்...

பாஜக எச்ச. ராஜா சர்மா விற்கும் எவனோ வீக்கிபீடியாவில் போய் சூனியம் வச்சிருக்கான்...


விஷால் வீட்டில் நாங்கள் ரைடு நடத்தவில்லை. சிலர் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர் - சென்னை GST வரித்துறை விளக்கம்...


எனினும் இன்று மாலை விஷாலின் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் ரைடு நடைபெற்றது. இவர்கள் ரைடு நடத்தவில்லை எனில் சோதனை நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது...

இடிந்து விழுந்து பல நோயாளிகளை மேலோகம் அனுப்பும் நிலையில் உள்ள திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனை...


தன் சார்ந்த கட்சியின் கேவலத்தை கூறியதற்காக கதறிய பாஜக தமிழிசை மற்றும் ஹரிஹர ராஜா ஷர்மா...


ஒரு பிஞ்சு கருகியதற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று பேசாமல் பொத்திக்கொண்டு இருப்பதை நினைக்கிற பொழுது.

இவன் தான் மக்களின் பிரதிநிதி துடித்து கொண்டு வந்து விட்டானே என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.

இல்லையேல் நீங்க ஆண்டி இந்தியன் தான்.

அப்படியே பேசினாலும் நேரடியாக அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதாகவோ அல்லது நேரில் சென்று பார்பதாகவோ இருக்கவே இருக்காது.

பேசுகையில் கூட திராவிடம் அல்லது இத்தாலி அல்லது மத அடிப்படை வாதிகள் இப்படி தான் பேசுவான்.

தான் சார்ந்த பெண் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில்  படுகொலை செய்யப்பட்ட பொழுது மூக்கை நுழைத்த எந்த சேகரையோ எந்த பரதேசிகளையும் இவ்விடயத்தில் காணலை...

இவனுங்க தாங்க நீதியான ஆட்சியை கொடுக்க கூடிய பரதேசிகள் என நம்புவோமாக..

இதே தற்கொலை ஒரு அயல்நாட்டில் நடந்தால் அந்த அயல்நாடு இந்த சம்பவத்திற்காக இந்தியாவிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்

ஆனால் இந்தியாகுள்ள நடந்தால் ஒருத்தனும் மதிக்கமாட்டான்.

இந்தியனுக்கு அயல்நாட்டில் தான் மரியாதையே தவிர சொந்த நாட்டில் இல்லை...

முகநூலில் இப்படி கருத்து பதிவதால் என்ன நன்மை பயக்கும் என்று நினைப்பவர்கள் அதை மாற்றிக்கொள்ளவும்.

காரணம் இங்கு கருத்துப்பதிவிடுவது எல்லாமும் கத்திக்கு சானை தீட்டுவது போன்றே..

ஒரு நாள் கருத்தை ஏற்றி ஏற்றி கருத்தால் குத்தப்படும் குருதிக்கு பதில் சிந்தனை உதிரப்படும் அப்போது அறிந்து கொள்வீர் எம்மவர்கள்

தமிழர்கள் யார் என்று ..

சிந்தியுங்களேன் எ(இ)ப்போது கழுதை போன்று கதறும் ஹரிஹர ஷர்மாவிடம் கேளுங்கள் இந்த உங்கள் ஆட்சியில் ஊழல் உண்டா என்று?

கதறுவான் இல்லையென..

பின்னர் கேளுங்கள் வியாபம் பற்றி என்னவென்று?

உங்களில் ஒருத்தன் 15 இலட்சம் தருகிறேன் என்றானே இப்போது என்ன ஆயிற்று என்று கேளுங்கள் தெளிவாக தெரிகிறது இதெல்லாம் ஊழல் என.

ஒரு சாலையில் நின்று (பிச்சை) வசூலிக்கும் போக்குவரத்து காவலாலியிடம் எதை முன்னிலை வைத்து புகார் கொடுப்பீர்

ஆள்பவன் அடிக்கிறான் அரசு அதிகாரியும் அடிக்கிறான் இதெல்லாம் இத்தாலி நாட்டிலா நடக்கிறது இல்லை ஆள்பவன் இத்தாலியனா?

எவனை யோக்கியன் என கூறிவிட முடியும்?

எடப்பாடி இவனையெல்லாம் அந்த ஜெயலலிதா இருக்கும் போது கூட எவனுக்கும் தெரியாது இப்போது முதலமைச்சர் என்றால் பேரம் பேசாமலா ?

அட போங்கடா...

ஜெயலலிதா இருக்கும் வரை ஆட்சி சரியில்லை என்று கதறியவன் இப்போது நாய்களுக்கு பொரை போட்டதும் அமைதியாவது போன்று எப்படி அமைதியானது இந்த கும்பல் எல்லாமும் திட்டமிடல், பேரம் தான் வந்தது கொஞ்சம் வராதது

எவ்வளவோ ?

சரியான ஆண்மை உள்ளவனாக இருந்தால் எம் மக்கள் அங்கே மூத்திரத்தை குடித்து போராடுகிறானே என யோசித்து இருக்க வேண்டும் அல்லவா? ?

இப்பெல்லாம் புது டிரெண்ட் வச்சிருக்கானுவ செத்துப்போன குடும்பத்தினருக்கு முதல்வர் 2 லட்சம் குடுத்துவுட்டார் என்று அடேயப்பா என்னமோ சொந்த காசை கொடுப்பது போன்று.

 தோழர்களே , அல்லது சகாக்களே..

நம்மை தூங்கவிடாமல், நிம்மதியாகவும் இருக்க விடாமல் ஒரே நாளில் பணம் செல்லாது என்பான் அடிச்சி புடிச்சி சாகடித்த தேசம் இது?

எப்படி தேசப்பற்றை மனதில் சுமக்க முடியும்.

சிலைக்கு 3,0000 கோடி கொடுக்க தெரிந்த முட்டாளுக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வக்கு இல்லையே அதுவும் தமிழகத்தில் மட்டும். .

லட்சத்தில் கோட்டு போட்டவனுக்கு இந்தியா முழுவதும் உள்ள சாலையை சீரமைக்க துப்பு இல்லையே?

அரசாங்க அதிகாரிகள் என்னவோ வேற்றுகிரக மனிதர்கள் போன்று நம்மை மதிக்காமல் இருப்பதற்கு காரணம் இந்த மோ(டுமுட்)டி வகையறாக்கள் தானே..

ஒரே ஒரு வார்த்தை மான்கிபாத் என  (அட இதுக்கு கூட எத்துனையோ லட்சமாம் மக்களோட பணம்)  பேசுரானுகளே அதாவது எந்த அரசு அதிகாரி மீதாவது மக்களிடம் இருந்து தொடர்ந்து 3 முறை புகார் வந்தால் அவரை அப்பதவியை விட்டு நீக்கிவிடுவோம் என்று கூற கோடிக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்க வேண்டுமா இல்லையே ஒரு வார்த்தை தானே.

கடைசி வரை இப்படி கூறமாட்டான் காரணம் அது உள்ளுக்குள் இருக்கும் சாதிய வெறி.

மலம் அள்ளும் மனிதனெல்லாம் எங்களை பார்த்து கேள்வி கேட்கலாமா?

 இதுவல்லவா தேச துரோகம்.

 ஆனால் மலம் அள்ளும் மனிதனின் வரி காசு மட்டும் இனிக்கிறது கையில் வாங்கி கண்களில் ஒத்திக்கொள்கிறான் இறுதியாக.

இவனுங்கட்ட உள்ள தேச பக்திக்கு உள்ள எடுத்துக்காட்டு..

ஒரு இராணுவ அதிகாரி தமக்கு இந்திய அரசால் கொடுக்கப்பட்ட உணவை காணொளியாக காட்டினார் அல்லவா அவரது நிலை என்ன தெரியுமா? 

உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதிநீக்கம் செய்தது தான் சாதனை ஆகையினால் இவர்கள் கூற வருவது என்ன நான் என்ன கொடுப்பனோ அதை தான் நீ உண்ண வேண்டும் எதிர்த்து கேள்வி கேட்டால் இதான் நிலை இது அவருக்கு மட்டும் அல்ல அங்கே உள்ள ஒவ்வொரு இராணுவ வீரர்களுக்கும் இதான். ..

இது மோடி மட்டுமல்ல அதே இடத்தில் அப்துல் கலாமோ பெரியாரோ அண்ணாவோ காமராஜரோ யாராக இருந்தாலும் கேள்விக் கேட்கத்தான் செய்வோம்...

தமிழர்களை சிந்திக்கவும் விடாமல் போராட்டம் ஆர்ப்பாட்டம் மறியல் அரசுக்கு எதிராக முற்றுகை தூக்கு மாட்டல் இப்படி எவ்வளவைதான் தாங்குவது? ?

இவனுகளை ஆட்டத்தை அடக்க தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதில் என்ன தவறு.

ஆமாம் அப்படிதான் கூறுவோம்.. 

தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்..

இப்படிக்கு
ஆண்டி இந்தியன்
ஆண்டி மோடி
ஆண்டி தேச துரோகி..

தமிழக அதிமுக அரசும்.. தமிழன அழிப்பும்...


மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு...


1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது.

இந்து இசுலாமிய  மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை .

தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது.

ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர்.

குறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் வட திசையின் மீது மனச்சாய்வு கொண்டவர்களாக இருப்பதால் இந்திய விடுதலை வரலாற்றை தென் திசையிலிருந்து தொடங்குவதில்லை.

இந்திய விடுதலை வரலாற்றை கால வரிசைப்படியும் எழுத மறுக்கின்றனர் .

ஆங்கிலேயர்கள் தென்பகுதியில் தான் காலடி வைத்து தங்கள் ஆதிக்கத்தை முதன்முதலாக நிறுவினர். அதன் பிறகே வடபுலம் நோக்கி நகர்ந்து , விரிந்த வணிகச் சந்தையை உருவாக்கினர்,

ஆங்கிலேயர்கள் தென் மண்ணில் நிலை பெற்று ஆதிக்கம் செலுத்திய போது பல்வேறு சிற்றரசுகள் (பாளையப்பட்டுகள்) வரி வசூலிக்கும் முகவாண்மையாக  செயல் பட்டன. பின்பு வரி வசூலிக்கும் உரிமையை தானே எடுத்துக் கொண்டு சிற்றரசுகளின் அதிகாரத்தை ஆங்கிலேயர் பறித்துக் கொண்டனர்.

அப்போதுதான் சிற்றரசுகள் சில விழித்துக் கொண்டு பொது எதிரி எனும் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்று படுகின்றன . இந்த ஒன்று படுத்துதல்  முயற்சிக்கு முதலில் அடித்தளமிட்டவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.

 தூந்தாஜி வாக் (வட கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக்கர்  (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), மயிலப்பன், முத்துக்கருப்பர்  (இராமநாதபுரம்). ஞானமுத்து (தஞ்சை ) ஆகியோரோடு இணைந்து "தென்பகுதி கூட்டமைப்பை" முதன் முதலில்  உருவாக்கி ஆங்கிலேயப் படையினரை நிலைகுலையச் செய்த பெருமை மருது பாண்டியர்களையேச் சாரும்.

சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம்.

அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

 "ஜம்புத்தீவு ( நாவலந்தீவு என்பது தமிழ்ப் பெயர்) புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது.

இதைப் படித்து ஆத்திரமுற்ற ஆங்கிலேய  அரசு மருது பாண்டியர்களின் உற்றார், உறவினர் ,மகன்கள், பேரன்கள் ஆகியோரை சிறை பிடித்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தது.அதன் பிறகு மருது பாண்டியர்  உள்ளிட்ட  500 பேர்  திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

மருது பாண்டியர்களும், ஏனையோரும் தூக்கிலிடப் படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கோர்லே (Gourley )எனும் ஸ்காட்லாந்துகாரர் ஒரு இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்:

"மருதுவின் அறிக்கை கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பி விட்டது. இதன் காரணமாக அவரது சீமைக்குத் தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் இருந்த ஆண், பெண் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பிடி பட்ட அனைவரையும் இராணுவ விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணைகள் சிறிது கூட மாற்றமின்றி கால தாமதமின்றி நிறைவேற்றப்பட்டன. மருது இராணுவ மன்றத்திடம், 'தனக்கு தயை எதுவும் காட்ட வேண்டாம்' என்று சொன்னார். நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டுள்ளேன்.

என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்ப வில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறு செய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள்! இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?"

(கோர்லே எழுதிய நூலின் பெயர் : "Mahradu- An indian story of the begining of the ninteeth century- 1813, London)

மேற்கண்ட  மருதுவின் இறுதி உரையினைப் படிப்பவருக்கு அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் போர் தான் நினைவுக்கு வரும்.

அதில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என்று வேறுபாடின்றி கொடுங்கோலன் இராசபக்சே அரசால் கொன்று குவிக்கப் பட்டதையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனது குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டதையும் நெஞ்சில் ஈரங்கொண்டோரால் எப்படி மறக்க முடியும்?

ஆயுதமென்றால் என்னவென்று தெரியாத பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை கொல்ல உங்களுக்கு மனம் எப்படி வந்தது? என்று நாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பதைப் போலத்தான் அன்றைக்கு இராணுவத்திடம் பிடிபட்ட மருதுவும் கேட்டுள்ளார்.

 24.10.1801இல் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட்ட பிறகும் ஆங்கிலேய அரசின் பழிவாங்கும் இரத்தவெறி அடங்கவீல்லை.

மருதுவின் எஞ்சிய வாரிசாகிய 15 வயதுடைய துரைச்சாமி உள்பட 73 பேரை மலேசியாவின் பினாங்கு தீவிற்கு (prince of wales island) 11.02.1802இல் நாடு கடத்த உத்தரவிட்டது.

1818இல் பினாங்கு சென்ற இராணுவத் தளபதி வேல்ஷ் என்பவர் துரைச்சாமியை பார்த்துள்ளார். அது குறித்து 'எனது நினைவுகள்' நூலில் பின் வருமாறு கூறுகிறார்: "உடல் நலம் குன்றிய தோற்றத்தோடு துரைச்சாமியை காண நேரிட்டது. இதைப் பார்த்த பொழுதில் என் இதயத்தில் கத்தி சொருகியதைப் போல உணர்ந்தேன்."

சிவகங்கையை  ஆண்ட மருது பாண்டியர்கள் அரசப்பரம்பரையினர் அல்ல. சிவகங்கையை சேதுபதி மன்னர் வழியாக ஆட்சி செய்தவர்கள் முத்து வடுக நாதரும், அவரது மனைவி வேலு நாச்சியாருமே. ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் வேலு நாச்சியார் விருப்பத்தின் பேரில் படைத் தளபதிகளாக பொறுப்பு வகித்த மருது பாண்டியர்கள் வசம் ஆட்சி நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.

1800ஆம் ஆண்டுகளில் விவசாயிகளை கொடுமைப் படுத்திய மன்னர்கள் நிறையவே உண்டு. இதற்கு விதி விலக்காக மருது பாண்டிய மன்னர்கள் விளங்கினர். மருது பாண்டியர்களின் அரசு மக்கள் அரசாக குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகையாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர். அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருது பாண்டியர்கள் விளங்கியதை பேரா.கதிர்வேலின் "history of Maravas" நூலில் நரிக்குடி சத்திரச் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார்.

விவசாயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால் தான்  அவர்கள் விடுதலைப் போரை நடத்திய போது சிவகங்கை சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது . மருதிருவர் படை தஞ்சை நோக்கிச் சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என மார்க்சிய அறிஞர் கோ.கேசவன் அர்கள் "சமூகமூம் கதைப்பாடலும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருது பாண்டியர்களின்  மாண்பினை உயர்த்தும் வரலாற்றுச் சான்றுகள் எண்ணிலடங்கா. பல சான்றாவணங்களை எடுத்துக் கூறியும் கூட, தில்லி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கங்கூடிய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவானது  (ICHR) மருது பாண்டியர்களின்  வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முதல் சுதந்திரப் போராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது தமிழினத்தின் மீதான பகையுணர்ச்சியை வெளிப்படுத்தும் செயலாகும்.

தென்னாட்டுக் கிளர்ச்சிகள்
(South indian rebellion- The first independance 1800-1801) எனும் நூலின் மூலமாக அதன் ஆசிரியர் இராஜய்யன் என்பவர் முதல் சுதந்திரப் போராக இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழு (ICHR) மருது பாண்டியர் நடத்திய போரை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி  வருவதும் குறிப்பிடத்தக்கது.

"வட இந்தியத் தலைவர்கள் வான்புகழ் பெறுகின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஏற்ற அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தும் அவ்வாறு உயர்ந்து விளங்குதல் அரிதாக உள்ளது. காரணம் தமிழர் தம்மவர்களின் சிறப்புகளை உணராமையும், உணர்ந்தாலும் போற்றாமையும் ஆகும்" என்று பேரா.ந.சஞ்சீவி எழுதிய "மானம் காத்த   மருதிருவர்" நூலின் அணிந்துரையில் மு.வரதராசனார் குறிப்பிடுவார்.
மு.வ.வின் கூற்று முற்றிலும் உண்மை தானே? தமிழர்களே! நம் வரலாற்றை உணரப் போவது எப்போது?

இன்று மருது பாண்டியர் தூக்கிலிட்ட நாள் - 24.10.1801...