19/08/2017

பாஜக மோடி, திமுக கலைஞர் மற்றும் விபச்சாரிக்கு என்ன தொடர்பு?


மோடி தனது அரசு ஊழலற்ற அரசு என்று சொல்வதை நீங்கள் நம்பினால்  ஒரு விபச்சாரி தான் கன்னி கழியாதவள் என்று சொன்னால் அதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்...

திமுக ஊழலுக்காக மதுவிலக்கிற்காக போராடுவதும், ஒரு ஒரு விபச்சாரி தான் கன்னித்தன்மையை காக்க போராடுகிறேன் என்று சொல்வதும் ஒன்றுதான்...

இந்திய மக்களின் வருமையை போக்க வருடத்திற்கு ரூபாய் 80 கோடிக்கு உடை அணிந்து உழைத்து வருகிறார் பாஜக மோடி - வாழ்த்துக்கள்...


பாஜக மோடிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்...


சுதந்திர தின உரையில் இந்தியாவை ‘ஹிந்துஸ்தான்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி மும்பை அந்தேரி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே என்பவர் அளித்துள்ள புகாரில், ‘அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரதம் என்ற இரண்டு வார்த்தைகளே நாட்டைக் குறிப்பிடும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘ஹிந்துஸ்தான்’ என்ற பதம் எந்த ஓர் இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயர் ஒரு மதத்தைக் குறிப்பிடுவது. சுதந்திர தின உரையில் ‘ஹிந்துஸ்தான்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு-1 கூறியுள்ள விதிமுறைகளை மீறும் செயல் இதுவாகும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த புகார் மனுவை மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் வழக்கறிஞர் காலே அனுப்பியுள்ளார்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9...


நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.

1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.

அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.

சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது.... என்னால் நம்ப முடியவில்லை" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.

அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.

நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.


அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.

யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).

ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.

பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் "ட்ராவல்ஸ்" என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். "என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்".

"எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்".

"இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்".

"இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது"

எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்.....

யப்பா கூட்டம் கூட்டிடாதிங்க சாமிகளா...


பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


இது ஊழல் ஆட்சி அம்மா ஆட்சி இல்லை என கூறிய பன்னீர் குரூப் எடப்பாடியுடன் சேர்கிறது...


அதிமுக இரு அணிகள் இணைப்பும் இளைஞர்கள் எழுப்பும் கேள்வியும்...


மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் - மண்ணை கவ்வியது பாஜக...


மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா பெரும் தோல்வி அடைந்துள்ளது.

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்கு ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் 7 நகராட்சிகளில் உள்ள 148 வார்டுகளில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை வென்றுள்ளது.

மீதியுள்ள 8 இடங்களில் 6 இடங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கைப்பற்றி மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

மீதி உள்ள இரணடு இடங்களில், ஒன்றில் இடது சாரியும், கடைசி ஒன்றில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மூன்று நகராட்சிகளில், எதிர்க்கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியவில்லை.

குறிப்பாக ஹால்தியா நகராட்சியில் உள்ள 29 வார்டுகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

துர்காபூர் மற்றும் கூப்பர் கேம்ப் நகராட்சிகளிலும் அனைத்து இடங்களையும் திரிணாமூல் கைப்பற்றியுள்ளது...

எல்லோரும் நினைப்பது போல் சுங்கச்சாவடி என்பது ஏதோ பணத்திற்காக மட்டும் அமைக்கப்படவில்லை...


ஒரு நாள் கிராம மக்களை முழுக்க நகரத்தில் அடைத்துவிட்டு 90% நிலங்களை தன்னுடைய கூலிப்படை அரசுகள் மூலம் கைப்பற்றி அதில் விவசாயம் செய்யபோகிறது தனிபெரும் நிறுவனங்கள். நகரத்தில் இடம் பற்றுமா என கேள்வி எழும்பலாம்?

சென்னையில் தனிவீடுகளில் யாரும் குடியிருக்க கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் வசிக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒரு உத்தரவு போட்டாலே போதும்.சென்னை இடபற்றாக்குறை இல்லாமல் நிம்மதியாக மூச்சுவிடும். ஆனால் மனிதர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும்...

எல்லோரையும் கொண்டு வந்து அடைக்கும் ஒரு ஆட்டுபட்டியை போல தான் நகரங்கள் இருக்கும். அதை விட்டு ஒருவன் வெளியே போனால் கண்காணிக்க தான் சுங்கசாவடிகள். உள்ளே வசதிகள் என்ற பெயரில் பொழுதுபோக்குகள் சில ஏற்படுத்தப்படும். அதற்காக தான் இப்போது மக்கள் தயார்ப்படுத்தப் படுகிறார்கள்.

இப்படி உலகமக்களை முழுவதும் நகரத்தில் அலன் கட்டுபாட்டில் அடைத்து வைத்துவிட்டாலே 90% வெற்றி தான் அவனுக்கு.

6,000 வருடங்களுக்கு முன்பே மன்னர் குடும்பத்தால் சங்கம் என்ற அவையில் வைத்து உருவாக்கப்பட்டு இப்போது வரை மறைமுகமாக செயல்படுத்தி கொண்டு இருக்கும்.

உலகாயதம் என்ற தத்துவத்தின் வெற்றியே நகரத்தை நோக்கி நம்மை நகர்த்துவதில் தான் இருக்கிறது...

இதற்கு தீர்வு பல செயல்கள்இருக்கிறது அதில் ஒன்று..

ஒவ்வொருவரும் தனக்கு 10 ஏக்கர் இடம் என முடிவுசெய்து கொண்டு உழைக்க வேண்டும். இதே போல 10 பேர் இணைந்து ஒரே சுற்றில் 10*10 100 ஏக்கர் இடத்தை வாங்கி அங்கே அந்த 10 குடும்பங்களும் குடியேற வேண்டும். தங்களுக்கு தேவையானதை அந்த 100 ஏக்கருக்குள்ளேயே நிறைவேற்றி கொள்ள வேண்டும். தற்சார்பு என்பது இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும். உள்ளே இணைய விரும்பும் புது புது குடும்பங்களை மகிழ்ச்சியாக வரவேற்று உள்ளே ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்... அந்த 100 ஏக்கரும் காடாக வளர்ந்து நிற்கும்...

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் தம்முடைய நிலத்தில் நமக்கு தான் பலம் அதிகம்... நீங்கள் ஒரு கூட்டு சமூகமாக வாழ விரும்பினாலே இயற்கை அதற்கான ஆற்றலை மேலே இருந்து இறக்கும்... எதிரியை கண்டு நாம் அஞ்சி நடுங்கி இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என மனதை நம்பவைத்து நம்மை உளவியலாக முடக்கி போடும் வேலையை தான் இந்த இலுமினாட்டி பேச்சாளர் செய்து கொண்டிருக்கிறார்கள் இதை புரிந்து கொள்ளுங்கள்...

எதிர்த்து நில்லுங்கள்... ஒரு நாள் நாம் ஒரே சமூகமாக இணைவோம்...

இனிமையான வாழ்க்கையை இயற்கை உங்களுக்கு அருள வாழ்த்துகள்...

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்ற பாஜக.. 4 ஆண்டுகளில் ரூ.706 கோடி வசூல்...


இந்த மானங்கெட்ட கார்ப்பரேட் கூலிகள் தான் இந்தியாவை புதுசா நட்ட போகிறார்களாம்...

நம்ப முடியாத வருமான வரி உண்மைகள்...


பாஜக மோடியின் ஜனவரி புதிய இந்தியா விற்காக தயாராகிறது என்று நினைக்கிறேன்... உஷார்...


பாஜக வும் காங்கிரஸ் சும் ஒண்ணு.. இதை அறியாதவன் வாயிலே மண்ணு...


மோடியின் கொடியேற்றத்தை கார்ட்டூனாக்கிய அஸ்ஸாம் ஓவியர் நிட்டுபர்னா விற்கு கொலை மிரட்டல்...


உண்மை எப்பவும் கசக்க தான் செய்யும்...

இந்த பேரூந்து ஒன்றுக்கும் உதவாது என 18 வருடங்களுக்கு முன்பு அரசால் ஏலம் விடப்பட்ட அரசு பேரூந்து (பதிவு என் காண்க TN 72 N 0273)...


அந்த பேரூந்தை ஏலம் எடுத்த நெல்லை தனியார் போக்குவரத்து கம்பனியான DSR பேரூந்தை மறு கட்டமைத்து இரண்டு டிவிகளுடன் ஒலி ஒளி அமைத்து புதிய பேரூந்தாக மாற்றியமைத்தனர்.

இப்போதும் இந்த பேரூந்து நெல்லையில் இருந்து வீரவநல்லூருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது அதுவும் நல்ல லாபத்துடன் இந்த பேரூந்தில் பயணம் செய்த அந்த காலத்து கல்லூரி மாணவர்களின் வாரிசுகள் இன்று அதே பேரூந்தில் கல்லூரி சென்று வருகின்றனர் வீரவநல்லூர் மக்களுக்கு தங்களின் குடும்ப உருப்பினராக இன்றுவரை கம்பீரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காரணம் சிறந்த நிர்வாகம் பயணிகள் எந்த இடத்தில் கை காட்டினாலும் நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்றாலும் இன்முகத்துடன் இறக்கி விடுவார்கள்...

ஆனால் எங்கள் ஊருக்கு வரும் அரசு பேரூந்துகளும் சரி ஊருக்கு உள்ளே வர அனுமதி இருந்தும் வராமல் புறவழிச்சாலை வழிகாக செல்லும் அரசு பேரூந்துகளும்   இங்கே நிற்காது அங்கே நிற்காது என சட்டம் பேசி போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இயக்கும் அதிகாரிகளும் , ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் அரசு போக்கவரத்து கழகத்தை எப்படி லாபத்தில் இயக்குவது என DSR கம்பனியில் ஒரு மாதம் சிறப்பு வகுப்புக்கு செல்லலாம்...

அதிலும் சில அரசு பேரூந்துகள் புறவழிச்சாலை வழியாக வேகமாக சென்று வீரவநல்லூர் மக்களை புறக்கனித்துவிட்டு வேறு யாருடய லாபத்திற்காக செயல்படுகிறர்கள் என இன்று வரை புதிராகவே உள்ளது.

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது அரசு பேரூந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் விரைவில் அரசு போக்குவரத்துகழகத்தை நஷ்டத்தை கணக்கு காட்டி தனியாருக்கு தாரைவார்க்க தீவிரமாக செயல்படுகிறீர்கள் என்று.

தீதும் நன்றும் பிறர் தர வார...

மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் போலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது, சசிகலா ஆட்கள் வெளியேற்றம்...


பசு தீவிரவாதிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பாஜக கூட்டாளி விஷ்வ ஹிந்து பரிஷத்...


மகாராஷ்டிர மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவெடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வாகனங்களை சட்ட விரோதமாக நிறுத்தி சோதனையிட்டவர்களை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விஹச்பி யின் அஜெய் நில்தவார் கூறுகையில்...

பசு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் இவர்களின் பட்டியல் மாநில அரசிற்கும் வழங்கப்படும். என்று அவர் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நடக்கும் வன்முறை குறித்து பத்திரிகாயளர்கள் கேள்வி எழுப்பியதற்கு இவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு விஹச்பி தலைவர்கள் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பங்கெடுத்த மூன்று சந்திப்புகளுக்கு பின்னர் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்த முடிவு சமூக விரோத கும்பலிடம் இருந்து பசு பாதுகாவலர்களை பிரித்தறிய உதவும் என்று விஹச்பி தரப்பில் கூறப்பட்டாலும் சமீபத்தில் மகாராஷ்டிராவில் பசு பாதுகாவல் குண்டர்களை பொதுமக்கள் தாக்கியதால் இனி இது போன்று நடைபெறுவதை விட்டு அவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவு என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதாவது சுதந்திரமாக வேட்டையாட அராஜகம் செய்ய போலிஸ் கேஸ் போடாமல் தப்பிக்க இந்த அடையாள அட்டையை காட்டி யாரை வேண்டுமானாலும் தாக்க இது பயன்படும்...

பிகாரில் பாஜக வின் டிஜிட்டல் இந்தியா ஆட்சி...



பீகார் மழை வெள்ளத்தில் இறந்த குழந்தைகளை எடுத்துப்போக ஆம்புலன்ஸ் வசதி கூட செய்து தர வக்கில்லாத நிதிஷ்குமார் அரசு ஆட்சி மாற்ற அதிகார போதையில் கண்கள் இன்னும் தெளிவடையவில்லை...

கேரளாவில் சன்னிலியோனுக்கு கூடுன கூட்டம் பாஜக அமீத்ஷா கூட்டத்துக்கு கூடல....


உண்மையான்னு உறுதியா தெரியல ஆனா உசாரா இருந்துக்கோங்க...


அப்பல்லோ காரன் தப்பிக்க பார்க்கிறான்...


ஜெயலலிதா மரணத்தில் உண்மையிலேயே உண்மை வெளி வர வேண்டும் என முதலமைச்சர் நினைத்தால் , சகாயம் அவர்களை விசாரனையின் தலைவராக நியமிப்பாரா - தீபா கணவர் கேள்வி...



இது தொடர்பாக தீபா கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விசாரனை ஆணையத்தின் தலைவராக சகாயம் அவர்களை முதலமைச்சர் நியமித்தால் நிச்சயம் உண்மை மட்டுமே வெளிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரனை நடத்த விசாரனை ஆணையம் அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது...

இந்தியமும் தமிழின அழிப்பும்...



தமிழீழ எதிர்ப்பு..
மீனவர் அழிப்பு..
மீத்தேன் பேரழிப்பு..
அனுஉலை தினிப்பு..
கெயில் கூழாய் புதைப்பு..
தண்ணீர் மறுப்பு..
இந்தி தினிப்பு..

ஏய் இந்தியாவே..

சிங்களன் ஒரேடியாய் அழித்தான் தமிழனை போர் என்ற பேயரில்..

ஆனால் நீ..

சிறுக சிறுக அழிக்கிறாய்..
இந்தியன் என்ற பெயரில் தமிழனை...

திமுக கலாட்டா...


திமுக நண்பர் : பாமக நிறுவனர் தன் குடும்பத்தில் உள்ள யாரையும் பதவியில் அமர்த்த மாட்டேன் என்று சொன்னார். அப்படி அமர்த்தினால் சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார்..

மேலும் திமுக போட்ட பிச்சையில் தான் அன்புமணி மத்திய மந்திரியே ஆனார்...

பதில் : பாமக வை வழி நடத்த அன்புமணியை பதவிக்கு கொண்டு வந்தது பாமக தொண்டர்கள்..

திமுக வில் கருணாநிதி குடும்பத்தையே கொண்டு வந்தது யார்?  தொண்டர்களா?

திமுக போட்ட பிச்சையில் அன்புமணி மத்திய அமைச்சர் ஆகவில்லை..


பாமக ஆதரவினால் (பிச்சையில்)  தான் திமுக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது அதற்க்கு அவர்கள் மாநிலத்தில் பங்கு தராமல் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்து விட்டு... மத்தியில் கோர்த்து விட்டார்கள் இது ஒப்பந்ததின் பேரில் நடந்தவை...

முழு புசணிக்காயை சோற்றில் வைத்து எத்தனை நாள் ஏமாற்ற முடியும் நண்பரே...

சாதி ஒழிப்பை விட முதலில் திராவிட ஒழிப்புத் தான் மிக முக்கியம்...


60 ஆண்டு திராவிட ஆட்சியில் சாதியை ஒழித்தார்களா இல்லையே ஏன்?

தமிழர்களுக்குள் சாதி பகையை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து ஆண்டுக் கொண்டிருப்பதே இந்த திருட்டு திராவிடம் தான்...

என்று திராவிடத்தை வீழ்த்தி ஒரு தமிழர் தமிழகத்தை ஆளும் நிலை வருகிறதோ அன்றிலிருந்து தான் தமிழர்களுக்குள் இருக்கும் சாதி பிரிவினை அகலும்...

முதலில் அதைப் புரிந்துக்கொள் தமிழினமே...

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோணத்தில் எங்களைச் சிந்திக்கத் தூண்டியது இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு ஆகும்...


இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பை, தாய்த் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.

காரணம் தமிழ் இனத்திற்காக உருகுவதாக நடித்த அந்நியர்களின் தலைமையில் ஒன்றிணைந்த தமிழக அரசியல் கட்சிகள் ஆகும்.

பதவி விலகுவதாக அறிவித்தபடி யாரும் பதவி விலகவில்லை.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் நடிப்பு என்பதை உலகம் அறிந்தது...