உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.
உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.
உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.
உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.
உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.
உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.
உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.
உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.
உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.
உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்ற வல்லது.
உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.
உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.
உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...