22/03/2019

திமுக - காங்கிரஸ் தொடர்பில்லாத பாலியல் குற்றம் நடக்குமா..?


பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன், வரும் 25-ம் தேதிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு...

ஏற்கனவே திமுக ஸ்டாலின் மருமகன் சபரீசன் சம்பந்தம் என்று சொல்லப்பட்டு விட்டது...

திமுக தொடர்பு வெளியில் வர தொடங்கியதும் ஸ்டாலின் இதை பற்றி வாயே திறப்பதில்லை கவணியுங்கள்...

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்...


மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...


வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை.

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.

வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ  மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது.

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன..

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது..

(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.

military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...

தமிழர் வரலாறு - பகுதி 5 / ஐயா ஒரிசா பாலு...


https://youtu.be/wtFOswkXcfo

Subscribe The Channel For More News...

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல்...


ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத் தான் இருக்க முடியும்.

நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது.

நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியது தான் நோபல் பரிசு.

அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.

ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப் போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக் கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதான போது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர்.

ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.

ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல்.

ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.

டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது.

அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது.

ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.

1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார்.

ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப் போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார்.

உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.

1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.

இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.

ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.

இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவு சக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல்.

அவரது எண்ணம் வீண்போகவில்லை ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.

உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை. ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது.

இருப்பினும் டைனமைட்டை கண்டு பிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால் தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது....

விழித்துக்கொள் எம் தமிழினமே...


வானில் திடீரென உருவான பிரம்மாண்ட துளை...


ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அல் ஐன் (Al ain) நகர் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கி விட்டனர்.

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழும் எனக் கூறியுள்ளனர்...

தவாக வேல்முருகன் கலாட்டா...


சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்...


அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்...

திமுகவுக்கு செருப்படி கொடுப்பதே இந்த நாதக வேலையா போச்சு...


தமிழிய மொழிக் குடும்பம்...


1856 இல் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிடம் என்று பெயர்வைத்து நூல் வெளியிட்டார்.

ஆனால் அதற்கு இரண்டாண்டுகள் முன்பே 1854 இல் ஜெர்மானிய மொழியியல் ஆய்வாளர் பிரடெரிக் மாக்சு முல்லர் (Friedrich Max Müller ) என்பவர் தமது "The classification of the Turanian languages" எனும் நூலில்  தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு இட்டப் பெயர் தமுலிக (Tamulic) மொழிக் குடும்பம் என்பதாகும்.

இவருக்கும் முன்பு 1847 -லேயே ஆங்கிலேயே இனவியல் ஆய்வாளர் பிரையன் ஓட்குசன் (Brian Houghton Hodgson) இந்தியாவின் பூர்வீக இனமாக தென்னிந்தியரை தமுலியர் (Tamulian) என்றும்..

அவர்களின் மொழிக்குடும்பத்தைத் தமுலிய (Tamulian) மொழிக் குடும்பம் என்றும் தம் "Essay the first on the Kocch, Bodo and Dhimal Tribes" எனும் நூலில் பெயரிட்டு குறித்துள்ளார்.

தமிழும் அதன் வழி வந்த மொழிகளும் தமிழிக, தமிழிய என்னும் பெயரால் அழைக்கப்படுவதே சரியாகும்.

கால்டுவெல்லோ தமிழும், அதன் பிற  உறவுமொழிகளும் மூலத் திரவிடம் (Proto- dravidian) என்றொரு பொது மொழியினின்று வந்ததாக பிறழ உரைத்துள்ளார்.

இது தமிழின் பழமையைக் குறைத்து பிற தென்னிந்திய மொழிகளுக்கு ஈடாகத் தமிழையும் ஒரு சேய்மொழியாக வைக்கும் முயற்சியாகும்.

தமிழுக்கு மூலமாக எம்மொழியும் இல்லை.

அப்படி இருந்ததாக கால்டுவெல் நிறுவவும் இல்லை.

கால்டுவெல்லின் தடுமாற்றம் அவரது நூலில் தலைப்பிலேயே தெரிகிறது.

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" எனுமாறு (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) குழப்பமான ஒரு பெயரையே வைத்துள்ளார்.

தமிழர் வரண (Race- மரபின) அடிப்படையிலும் தமிழர்தான்.
தேசிய இன(Ethnicity) அடிப்படையிலும் தமிழர்தான்.

திராவிடர் என்ற இல்லாத இனமாகத் தமிழர் உட்பட எவரையும் திரித்தல் கூடாது.

தமிழ் மொழியைத் தமிழென்றும்,
தமிழினத்தாரைத் தமிழரென்றும்,
தமிழ் வழிவந்த மொழிகளை தமிழிக(Tamilic) மொழிகள் என்று வழங்குவதே சரியானதாகும்...

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?


பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்...

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது. சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது...

அமைச்சர் விஜய பாஸ்கர் உதவியாளர் விக்கி கைது...


ஞானம் என்றால் என்ன..?


தன்னைப் புரிந்து கொள்வதும் உணர்வதும் மிகப்பெரிய ஞானம். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உட்பட பல பேரறிவாளர்களும் இதைக் கூறி இருக்கின்றனர் புத்தரும் மகாவீரரும் இவ்வாறே முழு ஞானத்தைப் பெற்றவர்கள்.

அறியாமையைப் போக்கி அறிவும், அனுபவமும் சேர்ந்து கிடைப்பதே ஞானம் என்றும் சாத்திர நூல்கள் விளக்குகின்றன. அறிவு என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவது மட்டும் அல்ல. சொல்லிக் கொடுத்தோ, கேள்வி மூலமாகவோ, அறிவுககூர்மையினாலோ அடையக் கூடியதும் அல்ல.

முழுமையாக ஞானம் பெற்றுவிட்டதாக யாரும் பெருமைப்படக்கூடாது.ஞானம் என்பது படிப்படியாக அனுபவத்தால் உண்டாவது. மனித வாழ்வின் பட்டறிவு என்பதே  ஞானம்.அனுபவத்தால் ஞானம் பெற்றவன் செய்யும் செயல்கள் யாவும் உயர்வடைகின்றன.

ஒருவன் பெற்ற ஞானம், உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவனுள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவான்...

திமுக எம்.பி தயாநிதி மாறன் காணவில்லை...


SUN TV மட்டும் ஓடுது ஆனால்...
ஒனரை காணவில்லை....

- மத்திய சென்னை தொகுதி மக்கள் கலக்கம்...

திராவிட அரசர் காலத்தில் பிராமணருக்கு தேவதாசிகள் இலவசம்...


விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் முதன்முறையாக, நால்வருணக் கோட்பாட்டின்படி ஆட்சி செய்தது.

விஜயநகரப் பேரரசின் சமூக அமைப்பைப் பற்றி வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது, ‘சமுதாயத்தில் உயர்குடி மக்களாகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்களாவர். இரண்டாவதாகச் சத்ரியர். மூன்றாவதாக வைசியர்கள், இறுதியாகச் சூத்திரர்கள்’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி / பக் – 98/முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007).

தமிழ் அரசர் ஆண்ட காலத்து வரலாற்றில் பிராமணருக்கான முக்கியத்துவம் குறித்து பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் ’முற்போக்கு’க் கோட்பாட்டாளர்கள், வெகு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.

மரபு வழியாகவே எச்சாதியினரும் பூசை செய்யலாம் என்ற நிலையிலிருந்த பழனிக் கோயிலில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்யக்கூடாது எனத் தடுத்தவர் ’திராவிடர்’ திருமலை நாயக்கர்.

இதற்கான செப்பேட்டுச் சான்று,

`பிராமணர் அல்லாத பண்டாரங்கள் பழனி கோயிலில் பூசை செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாகப் பிராமணர்களை நியமித்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிட்டு இராமப்பய்யன் செப்பேடு வழங்கியுள்ளார். புலிப்பாணி பாத்திர மரபில் வந்த பண்டாரங்களுக்கும் சிவப்பிராமணர்களுக்கும் எந்த எந்த வேலை என்பதை இராமப்பய்யன் வரையறுத்துள்ளார். திருமலை நாயக்கர் செப்பேடு என்பதில் ஐயமில்லை. செப்பேட்டில் திருமலையின் பெயரும் உள்ளது. தற்போது பழனிக் கோயிலில் இச்செப்பேடு உள்ளது.’ (தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2/ ச.கிருக்ஷ்ணமூர்த்தி/மெய்யப்பன் தமிழாய்வகம் 2002/ பக் – 81)

தமிழர்கள் மரபுவழியாகவே, தம் கோயில்களில் தமிழர்களைத்தான் பூசாரிகளாகக் கொண்டிருந்தனர், தமிழில்தான் வழிபாடு செய்துவந்தனர். இந்த முறையை மாற்றியது திராவிடர் ஆட்சிதான். விஜயநகர, நாயக்கர் அரசுகளின் ஆட்சி மொழி, தெலுங்கு, வழிபாட்டு மொழி, சமஸ்கிருதம். தமிழ் புறந்தள்ளப்பட்டது. இதற்கான மிக முக்கியச் சான்றுதான், பழனி கோயிலில் பிராமணர்தான் பூசை செய்ய வேண்டும் என்ற திருமலை நாயக்கரின் ஆணை.

’திராவிட’ அரசர்கள் பிராமணருக்கு இந்தளவு முக்கியத்துவம் அளித்தமைக்கு அடிப்படைக் காரணம், ‘திராவிடர்’ என்பது தென்னிந்திய பிராமணரின் தொகுப்புப் பெயர் என்பதே ஆகும். விஜயநகரப் பேரரசு, நாயக்கர் அரசு ஆகியவற்றின் அரசர்கள் பிறப்பால், முழு சத்ரியர்கள் அல்லர். பிராமணக் கலப்பாளர்கள். இதற்கான பல சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம்.

’திராவிடர் என்போர் தென்னாட்டு பிராமணரே’ என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

’திராவிடர்’ என்றால்தான் ’பிராமணர் வரமாட்டார்’ என்று கூறுவது, வரலாற்றை அறியாமல் முன் வைக்கும் கருத்து அல்லது அறிந்தே ஏதோ உள் நோக்கில் வெளிப்படுத்தும் கருத்து.

தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசரும் நாயக்கரும் சீரழித்ததில், தமிழரின் மதிப்பீடுகள் பெருமிதங்கள் வாழ்வியல் நெறிகள் அனைத்தும் நிலைகுலைந்தன. தமிழரின் சமூக அமைப்பு முறையே தலைகீழ் மாற்றத்தைக் கண்டது. தமிழ்க் குலங்கள், சாதிகளாக மாறி தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கின. இவ்வாறான ஏற்றத் தாழ்வை சாதிய அடுக்கை பிராமணர்கள்/ திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கினர்.

ஆங்கிலேயர் வருகையின்போது தமிழகம் இருந்த நிலையைப் பார்க்கலாம்.

புக்கானன் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் ஆய்வு செய்த ஊர்களில் எந்தச் சாதியினர் நிலவுடைமையாளராக இருந்தனர் என்பதைப் பட்டியலிடுகிறார். கொங்குப் பகுதித் தரவுகளில் சில கீழே தரப்படுகின்றன.

1. ’கடம்பூர் – விளைநிலங்களை வைதிகப் பிராமணரே பயிரிடுகின்றனர். அவர்களுக்கு வரி குறைவு. ஊரில் உள்ள மற்ற வீடுகளையும் தமதாக்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு வீடு இலவசம். உணவு இலவசம். தேவதாசிகள் இலவசம்.

2. கரூர் – பெரும்பகுதி நிலம் பிராமணருக்கு சொந்தம்.

3. நல்லராயன்பாளையம் – பிராமணரே இங்கு நஞ்சை பூமிக்குச் சொந்தக்காரர்.அது அவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்.

4. கிராமத்துக் கால்வாய் 200 காணி நிலத்திற்குப் பாய்கிறது (265 ஏக்கர்). இங்குள்ள நஞ்சை யாவும் பிராமணருக்கே சொந்தம். மீதி நிலம் யாவும் பொட்டல்.இதுவும் நான்கு பிராமணருக்கே சொந்தம்

5. பெருந்துறை – இவ்வூரில் பிராமணருக்கும் முகமதியருக்கும் இனாம் நிலங்கள் உள்ளன. முகமதியர் சில கடமைகளைச் செய்ய வேண்டும். பிராமணருக்கு அது இல்லை.’

(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும் 1792-1858/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் – 9)

இது ஒரு சிறிய சான்று அவ்வளவே. தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிராமணர் நிலவுடைமையாளராக இருந்தனர். அவர்கள் தமிழ்க் குலங்களை அடிமைகள் போல் நடத்தினர். இந்தக் காலத்தில்தான், திராவிட/ தென்னிந்திய பிராமணர் ஆட்சிக்காலத்தில்தான் தீண்டாமை உருவெடுத்தது.

நிலம், சாதி ஆதிக்கத் தனியாருக்கு முழு உடைமை ஆகிய பிறகு, பிற குலத்தவருக்குப் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றான பிறகு, சாதியக் கொடுமைகள் உருவாகத்தான் செய்யும். இத்தகைய நிலவுடைமை, தமிழர் அரசாண்ட எந்தக் காலத்திலும் நிலவவில்லை.

ஆங்கிலேயர் வந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கு இது.

கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியின் ஜமீன்கள்/ பாளையங்கள் எந்தெந்த சாதியினரிடம் இருந்தன என்பதைப் பட்டியலிடுகிறது.

பாளையங்கள் – 17
ஜமீன்கள் – 6
பட்டக்காரர் – 6
மற்றவர் – 9
மொத்தம் – 38
இவற்றில்,
நாயக்கர் உரிமை – 20
கவுண்டர் காணி -12
மற்றவர் – 6
(மேலது நூல்)

பாளையங்கள், ஜமீன்கள்தான் சுரண்டலின்கொடூர வடிவங்கள். இம்முறையை முதலில் அறிமுகம் செய்தவர் விசுவநாத நாயக்கர் எனக் கடந்த பதிவில் கண்டோம். பிராமணரை மட்டுமே தனது உயர் அதிகாரிகளாக வைத்திருந்து, அதை நியாயப்படுத்தி – அர்த்த சாத்திர நெறிப்படி அரசாண்ட கிருக்ஷ்ணதேவராயரின் அதிகாரி இவர் எனது குறிப்பிடத்தக்கது.

இந்த விசுவநாத நாயக்கர் வகுத்துகொடுத்த பாளையக்காரப் பாதையில், அவருக்குப் பின்னர் வந்த நாயக்க மான்னர்கள் பீடு நடைபோட்டனர்.

தொல் தமிழ்க் குலங்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை, பிராமணர் - வைசியர் – சத்ரியர் - சில தமிழ் வேளாளக் குலத்தவர் -ஆகிய பிரிவினருக்கு வழங்கினர் நாயக்க மன்னர்கள். இதன் விளைவுகளே மேற்கண்ட பாளையப்பட்டுப் பட்டியல்.

இவற்றில் பெரும்பான்மையை நாயக்கர் எடுத்துகொள்ள, தமிழ்க் குலங்களில் ஒன்றான கவுண்டர்களும் பிற தமிழ்க் குலத்தவர் சிலரும் இப்பாளைய முறையில் ஈடுபட்டுச் சொந்த மக்களையே சுரண்டினர். இதுதான், சாதி வடிவத்தின் ஊற்றுக் கண் ஆகும்.

திராவிட / பிராமணருக்கு சேவகம் செய்த, பாதுகாப்பளித்த பல தமிழ்க் குலங்களை அப் பிராமணர், ஆதிக்கச் சாதிகளாக்கினர். அதாவது, அச் சாதிகள் தம்மோடு மோதாமல் அவற்றுக்குள்ளேயே மோதிக் கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டனர். இதற்காகவே, அவர்கள் தமிழ்க் குலத்தினர் சிலரையும் நிலவுடைமைச் சுரண்டல்காரர்களாக வளர்த்துவிட்டனர் எனலாம்.

மேலும் தென்னிந்திய பிராமணரான திராவிட ஆட்சியாளருக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் தமக்கெதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாட்டில் சுரண்டும் எந்தப் பிரிவுக்கும் உள்ள அச்சமே இது. இந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், இவ்வாறு செய்தனர் எனலாம்.

இந்தத் திராவிடக் கொள்ளை நடத்தப்பட்டபோது, தமிழர்களின் பெரும்பகுதி மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில் விளக்க இயலாதவை. அதுவரை, அறிவார்ந்த குலமாக இருந்த பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர், கணியர், அம்பட்டர், சானார் உள்ளிட்டவை கடுமையாக ஒடுக்கப்பட்டன.

உண்மையில், இந்தக் குலங்கள் அனைத்துமே சாதிகளாக மாற்றப்பட்டது, ’திராவிட’ ஆட்சியில் தான்...

திமுக விற்கு வாக்களித்தால்.?


கொலை, கொள்ளை, கற்பழிப்பு ன்னு சுத்தின்னு இருக்கிறவன் நல்லா இருப்பான்.

நேர்மையா வாழனும்ன்னு நினைக்கிறவன், நடுத்தெருவில் நிப்பான்...

எமக்கு பிடித்த வரிகள்...


வல்லாரை...


தமிழ் தந்த சித்தர்கள் வல்லாரை / சரசுவதிக் கீரை / Centella asiatica மனநோய்க்கு மா மருந்து! செயலில் வல்லாரை; அறிவில் வல்லாரை; ஆற்றலில் வல்லாரை; அதுவே மூலிகையில் . ஒரு வல்லாரை . "வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே 'என்பது பழமொழி.

வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மைகொண்ட மூலிகையாம் - நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம் தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

மனநோய்க்கு மா மருந்து.. இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது .

மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும்.

வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து ' சி 'மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்...

இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.

உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.

தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.

மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.

இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

சளி குறைய உதவுகிறது. உண்ணும் முறை.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.

இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம் , சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்...

ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும்...


http://www.thehindu.com/sci-tech/health/record-417-million-award-in-lawsuit-linking-johnson-johnson-baby-powder-to-cancer/article19544646.ece

பூப்போல் பெண்ணா? பெண்போல் பூவா?


படத்தில் இருப்ப‍து ஒரு பெண் அந்தரத்தில் மிதப்பது போல உங்களுக்கு தெரிகிறதா?

சொல்ல‍ப்போனால் இது பெண்ண‍ல்ல‍, பெண்ணுருவில் இருக்கும் ஒரு மலர் தான்.

ஆம். இமயமலை அடிவாரத்தில் காணப்படுகிறது. மேலே மரத்தில் தொங்கிக் கொண்டிருககும் இந்த அதிசய மலரை மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

நீங்களும் இங்கு உள்ள‍ படத்தை பார்த்து அந்த பெண்ணுருவில் இருக்கும் மலரைப் பாருங்கள்...

தமிழ் தேசியவாதம் ஒரு இனவெறி - திருட்டு திராவிடர்கள்...


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ...

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ...

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ...

அது போலவே...

தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே...

மற்ற எல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம்..

தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

சரியா திருட்டு திராவிடர்களே...

கூட்டணி தலைவியான காங்கிரஸ் சோனியா காந்தியின் அருமை பெருமைகளை விளக்கும் வைகோ...


https://youtu.be/oL21mjm4EqE

Subscribe The Channel For More News...

உலக குருவிகள் தினம்...


வெயில் காலங்களில் நாம் அதிகப் படியான பழச்சாறுகளையும், இளநீர் போன்றவற்றையும் அதிகப்படியாக சேர்த்துக் கொள்கிறோம் இருந்தும் பல நேரங்களில் வெயிலின் தாக்கத்தை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...

மனிதர்களாலேயே வெயிலை சமாளிக்க முடியாத சூழ்நிலையில், பாவம் பறவைகள் என்ன செய்யும்?

நாமும் வீட்டில் சிறு குடில் அமைத்து பறவைகளுக்கு உணவளிப்போம் என்ற முயற்சியில் ஈடுபடுவோம்...

முதல் படம் கொத்தமல்லி, 2 வது பார்த்தீனியம் எனும் விஷச்செடி, நாம் வாங்கும் கொத்தமல்லி கொத்தில் கலந்து வருது. இதை நீக்கி பயன்படுத்துக...


அதிகமாக ( நாட்கள்) உபயோகபடுத்தினால். இனம் புரியாத தோல் வியாதி, ஆஸதுமா, மூட்டி வலி, கிட்னி பிரச்சனைகள் வரும்...

சூரியனும் உணவும்...


பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது நாசா.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு நாசாவே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.

Sun Gazing அல்லது Sun Eating என்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.

காலணி ஏதும் அணியாமல் நேராக நின்று கொண்டு சூரியனை பார்க்க வேண்டும்.

சூரிய உதயத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோ தான் இதனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு வசதியான ஏதேனும் ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ.

முதல் நாள் பயிற்சியில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்.

இப்படி பத்து பத்து வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது.

இவ்வாறு தொடர மூன்று மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்.

இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்.

இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படாது.

இந்த பயிற்சியை செய்யத் தொடங்கிய நாள்முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத சக்திகளை பெற்றுத் தரும்.

இனி நீங்கள் எதையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.

If your mind accepts, Your body adapts...

பல லட்சத்திலுள்ள ஒரு இரகசியம் வெளியிட்டு விட்டேன் உங்களுக்காக.. தேவைப்படுவோர் பயிற்சி செய்துக் கொள்ளுங்கள்...

பாஜக மோடி நண்பர் அம்பாணியும் ஏமாற்று வேலையும்...


உலக காடுகள் தினம்...


உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.

பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.

காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.

நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்...

கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருக்க வீடியோ பாருங்க...


https://youtu.be/SodsJb5YDOQ

Subscribe The Channel For More News...

அமைச்சர் மனிகன்டனால் சிதைந்து போன ராமநாதபுரம் அதிமுக-பர..பர ரிப்போர்ட்...


ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, டாக்டர் சுந்தர்ராஜ் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் மூலம் ஒரே கல்லில் 3 தலைகளை வீழ்த்தியுள்ளார் அமைச்சர் மணிகண்டன்  என்ற கருத்து அ.தி.மு.க-வினரிடையே அதிரடியாகப் பரவி வருகிறது.

ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா மீண்டும் களமிறங்காதது ஏன்?

ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, டாக்டர் சுந்தர்ராஜ் ஆகியோருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் மூலம் ஒரே கல்லில் மூன்று தலைகளை வீழ்த்தியுள்ளார் அமைச்சர் மணிகண்டன் என்ற கருத்து அ.தி.மு.க-வினரிடையே அதிரடியாகப் பரவி வருகிறது.

ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி-யாக இருந்து வருபவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலம்முதல் இன்றுவரை அக்கட்சியிலேயே நீடித்து வருபவர். ஒன்றியச் செயலாளர், ஒன்றியப் பெருந்தலைவர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், அமைச்சர், எம்.பி., சிறுபான்மை பிரிவுச் செயலாளர் எனக் கட்சியிலும் ஆட்சியிலும் பல பதவிகளை வகித்தவர். மாவட்டத்தில் அரசியல் பேசத் தெரிந்த ஒரு சிலரில் முதன்மையானவர். இத்தனை தகுதிகள் இருந்தும் இடையில் வந்த அமைச்சர் மணிகண்டனால் ஓரங்கட்டப்பட்டு முக்கிய நிகழ்வுகளில் புறக்கணிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பொது மேடையிலேயே தாக்கிப் பேசுவதும் தொடர்ந்தது. இந்நிலையில் எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டியிட அன்வர்ராஜா விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காகக் கட்சியின் மிகவும் ஜூனியரும் தனது எதிரியுமான அமைச்சர் மணிகண்டன் வீட்டுக்கே சென்று பொன்னாடை அணிவித்து ஆதரவு கோரினார். ஆனால், கூட்டணியில் ராமநாதபுரம் பி.ஜே.பி-க்குப் போனதால் எம்.பி சீட் கனவுடன் காத்திருந்த அன்வர்ராஜாவின் கனவு கலைந்துபோனது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் தொகுதி
 அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ராஜகண்ணப்பன். ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜகண்ணப்பன் அ.தி.மு.க-வில் மாணவர் காலம்தொட்டு இருந்து வருபவர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா காலத்தில் கட்சிப் பொருளாளர், பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலை என மூன்று முக்கியத் துறைகளின் அமைச்சர், சிவகங்கை மாவட்டச் செயலாளர் எனப் பலவகையிலும் கோலோச்சி வந்தவர். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் ஓ.பி.எஸ் தொடங்கிய தர்ம யுத்தத்திலும் பங்கெடுத்தவர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓ.பி.எஸ் அணியை முன்னெடுத்துச் சென்றவர். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்புக்குப் பின் கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியினைக் குறிவைத்து காத்திருந்தார். பி.ஜே.பி கூட்டணி உருவாகும் நிலையில் சிவகங்கை பி.ஜே.பி-க்குப் போகும் என்பதால், அடுத்த இலக்கான ராமநாதபுரத்தைக் குறி வைத்துப் பணியாற்றினார். இதற்குத் தொகுதியில் உள்ள தனது சமுதாய வாக்குகளையும் காரணமாகக் காட்டி வந்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் தொகுதியில் தனது சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி பி.ஜே.பி-க்கு ஒதுக்கப்பட்டதால் அவரது கனவும் கலைந்துபோனது.

இதையடுத்து, மதுரை தொகுதியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் கைவிட்டுப் போனதால் இப்போது கட்சியைவிட்டே போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இவர்கள் இருவருக்கும் ராமநாதபுரம் தொகுதி கிடைக்கக் கூடாது என்பதில் அமைச்சர் மணிகண்டனின் சித்து விளையாட்டுகள் இருந்துள்ளதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே கருத்து உலவுகிறது. சிவகங்கை தொகுதி பி.ஜே.பி-க்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடும் சூழலில் அன்வர்ராஜாவோ, ராஜகண்ணப்பனுக்கோ போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி வாய்ப்பளிக்கப்பட்டால் இருவரில் ஒருவர் மீண்டும் தனக்குப் போட்டியாக வரக் கூடும் என அமைச்சர் மணிகண்டன் நினைத்ததாகவும், இதைத் தடுக்க பி.ஜே.பி. துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனை உசுப்பேற்றி ராமநாதபுரம் தொகுதியை பி.ஜே.பி-க்கு வாங்க வைத்ததாகவும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி  நிறைகுளத்தானின் மகனும், மணிகண்டனின் ஆதரவாளருமான சதன் பிரபாகருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 1989 தேர்தலில் ஜெ.அணி சார்பில் போட்டியிட்டு வென்றவர்களில் சுந்தர்ராஜும் ஒருவர். 3 முறை எம்.எல்.ஏ-வான சுந்தர்ராஜுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காத போதும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து இயங்கினார். டாக்டர் முத்தையா, அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அணிக்குச் சென்றதால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதியிருந்தார். அமைச்சர் மணிகண்டன் தரப்பு, மாவட்டச் செயலாளர் முனியசாமி தரப்பு என எந்தப் பக்கமும் கோஷ்டி சேராமல் எல்லாத் தரப்பினரிடமும் இணக்கமாக இருந்து வந்தார். இதனால் எப்படியும் தனக்கு சீட் கிடைத்து விடும் என்ற கனவில் இருந்தார் டாக்டர் சுந்தர்ராஜ்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன்...

கட்சியின் சீனியரான சுந்தர்ராஜ் வெற்றி பெற்றால் தன்னிடம் இருக்கும் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதாலும், மாவட்டத்தில் தன்னை மீறி அரசியல் செய்யத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சத்திலும் சீனியரான சுந்தர்ராஜுக்கு பதில் ஜூனியரான சதன் பிரபாகருக்கு சீட் கொடுக்க அமைச்சர் மணிகண்டன் பரிந்துரைத்ததாகவும் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு எதிராக யாரும் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் மணிகண்டன் கட்சியின் சீனியர்களான அன்வர்ராஜா, ராஜகண்ணப்பன், டாக்டர் சுந்தர்ராஜ் ஆகிய மூன்று பேரையும் ஒரே கல்லில் வீழ்த்தியது மட்டுமல்ல, தனக்கு வாழ்வு கொடுத்த கட்சியின் அழிவுக்கும் துணை போய் உள்ளார் அமைச்சர் மணிகண்டன் என அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்...

பணம் உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து சீட் கொடுத்துள்ள மநீம கமல்...


https://youtu.be/GfLmfxFJ4YE

Subscribe The Change For More News...

தமிழ் நாட்டில் திராவிட ஆடையில் மறைந்து இருக்கும் கன்னடர் தெலுங்கர் மலையாளிகளே...


தமிழன் திராவிடன் என்று பிரிதல் தமிழனின் பலம் குறைந்து விடும் என்று போலி பிரசாரம் செய்யும் திராவிடனே..

திரவிடனுடன் தமிழன் ஒற்றுமையை இருந்து எண்ணத்தினை பெற்றான் ?

தமிழனை திராவிடன் மாயையில் வைத்து... தமிழ் நாட்டினையும் தமிழ் இனத்தினையும்... திராவிடன் சூறையாடினது தான்... தமிழ் நாட்டில் வலராறு பதிப்புகள்..

தமிழ் நாட்டில் தமிழனை திராவிடம் என்று சொல்லி அவன் மீது அதிகாரம் செய்யும்..

திராவிடம் என்று சொல்லும்...
கன்னடன் தெலுங்கர் மலையாளி கருத்துப்படி பார்த்தால்..

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொலையுண்டது திராவிடன் தான்..

இந்த திராவிடனுக்காகத் தமிழகத்திற்கூட. தமிழன் மட்டும் தானே அழுதான்? எரிந்தான். குமுறினான்..

ஒரு திராவிடன் அழுதானா? எரிந்தானா?

தமிழகத்தைச் திராவிட ஆடையில்...
சுரண்டிப் பிழைத்துக் கொண்டு இருக்கும்.. கன்னடன் தெலுங்கர் மலையாளிகள்...

தமிழனுக்காகக் குறைந்தபடசமாக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமுடியவில்லை...

அந்தத் திராவிட மாநிலங்களெல்லாம் அசைவற்றுக்கிடந்தனவே..

தமிழ் நாட்டில் உள்ள திராவிடர்களும் கேரளா கன்னடம் ஆந்திரா மாநிலங்கள் இன்னும் ‘ ஓணம ‘ஹோலி என்று கொண்டாடி மகிழ்ந்தனவே..

தானாடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே.. ஏன் இந்தச் சதைகள் அசையவேயில்லை?.

ஈழத்தில் நடந்த தமிழ் இன படுகொலையில் இந்தியா சார்பா இருந்தவர்கள் கேரள மலையாளிகள்...

கர்நாடகத்தில் தமிழனை விரட்டி அடித்தவர்கள் கன்னடர்கள்..

ஆந்திராவில் தமிழனுக்கு தண்ணி கொடுக்க மாட்டோம் என்று சொல்லி பாலாறு மறித்து ஆணை கட்டியவர்கள் தெலுங்கர்கள்..

இவர்கள் தமிழ் நாடடில் திராவிட மூக முடி போட்டு கொண்டு தமிழ் நாட்டின் உரிமைக்கு எதிரியாகவும்... ஈழ போரட்டத்துக்கு எதிராய் இன்று திராவிட  கட்சி பெயருடன் செயற் படுகின்றார்கள்..

தமிழா விழித்து கொள்...

திராவிட கட்சி இன்று தமிழர்கள் புறகணிக்க பட்டு அந்த கட்சி தெலுங்கர் கன்னடர் கட்சியாய் இன்று மாறி உள்ளது.. தமிழர்கள் திராவிட கட்சில் இருந்து வெளி ஏற முன் வர வேண்டும்..

தமிழ் நாடடில் திராவிட ஆதிக்கம் இருக்கும் வரை தமிழ் நாடடில் தமிழன் அடிமையே...

தமிழர் தலைமையில்
தமிழன் இணையும் நாள்..

திராவிடம் தமிழ் நாடடில் ஒழியும் நாள் என்றோ அந்நாளே தமிழகத்தின் விடுதலை நாள்...

அமமுக டிடிவி தினகரன் மனைவி vs அதிமுக ஓபிஎஸ் மகன் களைகட்டும் தேனி...


https://youtu.be/Mf7ssuSb_AE

Subscribe The Channel For More News...

50 ஆண்டுகளாக திருட்டு திராவிட திமுக செய்யும் ஏமாற்று வேலை...


திமுக சார்பாக போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 14 பேர் தமிழர்கள் அல்ல  வேற்றினத்தார்களே...

எப்படி தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் 50% தெலுங்கர்கள் ஆக்கரமித்து.. தமிழர்களுக்கு வேலை இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்ல வைக்கிறார்கள் என்பது புரிகிறதா..?

கோடி கோடியாய் ஊழல் செய்த ரெட்டி, ராவ், நாயுடு எல்லாம் தன் மாநிலத்திற்கு கொண்டு சென்று சுக போக வாழ்க்கை வாழ்கிறான்...

சிந்தியுங்கள் தமிழினமே...

அதற்கு காரணம் திராவிடம் எனும் இந்த திருட்டு தெலுங்கள் ஏமாற்று வேலைகள் தான்...

குறிப்பு : கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள்...

விசிக 2 தமிழர்கள்,
ஐஜேகே 1தமிழர்,
கொமதேக 1 தமிழர்,
கம்யூனிஸ்ட் 2 தெலுங்கர்கள்,
கம்யூனிஸ்ட் 2 தெரியவில்லை,
காங்கிரஸ் 10 பாதி தான் தமிழர்கள்...

ஆக மொத்தம் திமுக கூட்டணியில் 40 தொகுதியில் 30 பேர் வேற்றினத்தார்கள் தான்...

டிடிவி தினகரன் அதிரடி.. அதிமுக வுடன் அமமுக இணைப்பா.?


https://youtu.be/Vsd5t0qOVLw

Subscribe The Channel For More News...

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

பாஜக மோடியும் மக்கள் வரிப்பணம் சுருட்டலும்...


தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா.. தமிழகத்திற்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக...


தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கா, பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

இந்த பட்டியலில் 182 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த லோக்சபா தேர்தலை போலவே, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்திற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி  தமிழிசை சவுந்தரராஜன்
சிவகங்கை  எச்.ராஜா
கன்னியாகுமரி  பொன். ராதாகிருஷ்ணன்
கோயம்புத்தூர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன்

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதேநேரம், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பில் இழுபறி நீடித்து வருகிறது...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் சிக்கிய சபரீசன், நக்கீரன், முக்கியப் புள்ளிகள் விழிபிதுங்கும் ஸ்டாலின்...


https://youtu.be/t0qy101IXxA

Subscribe The Channel For More News...

ஸ்டெர்லைட் வேதாந்தா & பாஜக மோடி இணைந்து மொத்த இந்திய மக்களையும் கொலை செய்கிறது...


ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி முதன்மை வாயிலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஓ.ஐ.எஸ்.எப்  எனும் காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் ஆலைக்குள் நுழைந்தனர்.

அவர்களை காவல்துறை  தடுத்தப் போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறை  தடியடி நடத்தினர். இதில் தானி பத்ரா (45) என்பவர் உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் லான்ஜிகர், விஸ்வானந்தபூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் லான்ஜிகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒடிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா குழுமம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து அந்தப் பகுதி பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்...