31/08/2017

சீனப் பெருஞ்சுவரும் கட்டுக்கதையும்...


மனிதர்கள் இன்று வரை மாபெரும் அதிசயப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். அதில் சீனப் பெருஞ்சுவரும் கண்டிப்பாக ஒன்றானது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் பலரால் நம்பப் படும் ஒரு தவறான தகவல் என்ன தெரியுமா?

மனிதர்கள் உருவாக்கியதில் அந்தச் சீனப் பெருஞ்சுவரை மட்டும் தான் விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும் என்கின்ற கட்டுக்கதை தான்.

உண்மை சொல்லப்போனால், மிக நுணுக்கமான காமெராவைக் கொண்டே, நாம் பார்ப்பது சீனப் பெருஞ்சுவர் தானா என்பதைத் தீர்மானிப்பதே கஷ்டம். அப்படி இருக்க, பரந்த பூமியில் ஒரு மிகவும் சிறிய பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரைக் காண முடியும் என்பது முற்றிலும் சாத்தியம் இல்லாததாகும்.

இந்தக் கட்டுக்கதை விண்வெளியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கும் காலத்திற்கு முன்பில் இருந்தே பரப்பப்பட்டு வருகின்றது. பல கிலோ மீட்டர்களுக்கு பரவி நின்று கொண்டு இருக்கும் சீனப் பெருஞ்சுவரின் பிரம்மாண்டமும், மக்கள் இந்தக் கட்டுக்கதையை ஏற்றுக் கொண்டதற்கான காரணமாக இருக்கலாம். அது சரி, சீனப்பெருஞ்சுவரை ஏன் விண்வெளியில் இருந்து பார்க்கமுடியாது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தச் சுவர் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்பாறைகள் கொண்டு கட்டப்பட்டதால், அது கட்டப்பட்ட கற்களின் வண்ணத்தில் தான் இருக்கிறது. அதாவது அந்தச் சுவரின் வண்ணமும், அதன் சூழலின் வண்ணமும் ஒரே மாதிரி இருப்பதால், அதனை விண்வெளியில் இருந்து அடையாளம் காண்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் ஆகும். எனவே, விண்வெளியில் இருந்து சீனச் சுவரைக் காண முடியும் என்பது வெறும் கட்டுக்கதையாக மட்டுமே மக்களின் இடையே வாழ்ந்து வரும்.

சரி, சீனப்பெருஞ்சுவரை விண்வெளியிலிருந்து பார்க்க முடியாது என்பது தெரிய வந்துவிட்டது. அப்படி என்றால் மனிதர்கள் படைத்த ஒன்றையும் விண்வெளியிலிருந்து காணமுடியாது என்றா அர்த்தம்? இல்லைவே இல்லை.

விண்வெளியிலிருந்து மனிதனால் காண முடிகின்ற, மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று படைப்புக்களைப் பார்க்கலாம். அவை தான் பெரிய நெடுஞ்சாலைகள், அணைகள் மற்றும் நகரங்கள் ஆகும். அதுவும் இவை அனைத்தும் வெளிச்சத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் மட்டும் தான் காண முடியும் என்பதே உண்மை.

செய்தி - Dr. Niroshan Thillainathan

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் கண்ணாடி...


இன்று நாம் காண்பது கண்ணாடி (GLASS) பற்றியும் அவற்றின் நிழல் பிடிப்பான் (SHADOW PICKER) கலை பற்றியும் மற்றும்  பழந்தமிழர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் அறிவோம்.

ஒவ்வொரு பொருளும் மனித வாழ்கையில் இன்றியமையாத ஒன்றாக அவர்கள் கூடவே பயணிக்கிறது. ஆனால் அதை மனிதன் ஒரு நாளும் அதன் தோற்றம் பற்றி சிந்திப்பதே இல்லை.

கண்ணாடி இதை சங்க காலத்தில் தமிழர்கள் இரண்டு விதமாக அதாவது செயற்கை கண்ணாடி இயற்கை கண்ணாடி என கண்டறிந்து பயன்படுத்தினர்.

இயற்கை கண்ணாடி என்பது எரிமலை பிரதேசத்தில் உள்ள பளிங்கு பாறைகளை வெட்டி எடுத்து அவற்றை கண்ணாடியாக பயன்படுத்தினர்.

மேலும் செயற்கையாக உவர்மண் அதாவது சலைவசோடா மண் மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை உருக்கி கண்ணாடி தயாரித்தனர்.

சங்க இலக்கியத்தில் கண்ணாடியின் பெயர் பலவகையில் உள்ளது அவை நிழல்காண் மண்டிலம், ஆடிபாவை, பாண்டில், வயங்குமணி, வயங்கல் மற்றும் கண்ணாடி என்றே சில இடங்களில் கூறியுள்ளனர்.

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யும் புதல்வன் தாய்க்கே
- (குறுந்தொகை 8ல் எண் 4-6)

நாம் கண்ணாடி முன் என்ன செய்கிறோமோ அதையே செய்யும் கண்ணாடி தான் ஆடிப்பாவை என்கிறார்கள்.

நீர்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
தோலெறி பாண்டிலின் வாலிய மலர
- (அகநானூறு217 ல் 7,8 வரி)

அழகு கூட்டுவதற்கு கேடயத்தில் கண்ணாடி பயன்பட்டது

வயங்குமணி பொருத வகையமை வனப்பு
-  (அகநானூறு 167ல் 1)

ஒளி செய்யும் மணிகள் பலவற்றை வைத்துச் செய்யப்பட்ட கண்ணாடி அகத்தில் உள்ளதை அப்படியே காட்டும். என பாடல்கள் மூலம் அறியலாம்.

இங்குள்ள எல்லா பாடலும் கண்ணாடி பயன்படுத்தி சான்று தருகிறது. அதோடு இது சூட்சம விசயங்களை அப்படியே மறைத்தும் கூறுகிறது.

கண்ணாடியின் சூட்சமும் நிழல் பிடிப்பான் கலையும்...

மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடியின் பெயரை புலவர்கள் மாற்றி இருப்பதை கவனிக்கவும்.

ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடி பயன்பட்ட வேறொரு காரணத்தையும் சொல்லாமல் சொல்கிறார்கள். இதற்கு சித்தர்களின் துணையும் அவசியமாகிறது.

அதற்கு முன் ஒளியை எதிர் ஒலிக்கும் கண்ணாடி எப்படி செய்யபடுகிறது என கண்டு விட்டால் கண்ணாடி செய்யும் வேலையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஈயத்தகட்டின் மீது பாதரசத்தைத் தடவி அத்தகட்டைக் கண்ணாடி மீது ஒட்ட, அப்பாதரசம் கண்ணாடி மேல் பரவி அதன் ஒளி, ஒளி எதிரொளிக்கும் கண்ணாடியாக் நமது கைகளுக்கு கிடைகிறது.

இங்கு பாதரசத்தை வைத்து செய்யபடும் கண்ணாடிகள் மிகவும் முக்கியமானவை. அதாவது பாதரசத்தில் எது சேர்க்கிறோமோ அது அதன் தன்மையை அதிகபடுத்தி கொடுக்கும் ஆற்றல் உண்டு.

நீங்கள் அக்கண்ணாடி முன்பு நின்றால் உங்களுடைய பிராண சக்தி கூடும். உங்களுக்கு வயது ஆகுதல் என்பது உங்களை இந்த பூமியானது வானமண்டலத்தோடு சேர்த்து சுத்துவதால் உங்கள் அணுக்கள் சிதறடிக்கபடுகிறது. உங்கள் பிராண அடுக்கு குலைகிறது அதை தடுக்க கண்ணாடி தடுத்து உங்கள் பிராண வலிமையை கூட்டுகிறது.

நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியே கண்ணாடியில் பார்ப்பதால் உடனே உங்கள் செயலின் தன்மையை பாதரசம் அதிகபடுத்தி தருகிறது.

ரசமணி அணிவதன் தத்துவமும் இதுதான் குறிபிட்ட மூலிகையில் ரசத்தை ஊற்றி சுத்தி செய்து அதை அணிந்தோ வாயிலிட்டோ பலனை பெறுவர் அதெல்லாம் பெரிய செய்முறை.

நம் பதிவுக்கு வருவோம்..

ஆண்டாள் எப்போதும் கண்ணாடி முன் தன்னை அழகுபடுத்துவது பற்றியும், வள்ளலார் கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வது பற்றியும் கூறும் கதையை நினைவில் கொள்க தெரியவில்லை என்றால் தெரிந்து படித்து பார்க்கவும்.

சங்க காலத்தில் ஒரு கலை இருந்தது நிழல்பிடிப்பான் இது கண்ணாடி மற்றும் பிராண சக்தி மூலம் கற்க வேண்டிய அணுவிஞ்ஞான கலை உங்கள் எதிரியின் நிழல் உங்களிடம் சிக்கினால் நீங்கள் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் இக்கலைக்கு வேறு பெயர்கள் இருப்பதாக கேள்வியுற்றேன்.

இதன் மாதிரி விடயம் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் உள்ளது..

சங்ககால புலவர்கள் கண்ணாடியை இடத்துக்கு தகுந்தவாறு பெயர் சூட்டுவதை கண்டோம் அல்லவா அதில் ஒரு பெயரை மட்டும் காண்போம்.

ஆடிப்பாவை அதாவது ஆடி முன் உள்ள பாவை அல்லது ஆடியில் உள்ள பாவை இது முன் பின் வரும் சொற்களை கொண்டு அறியபட வேண்டியது.

பாவை என்றால் ஆட்கள். ஆடிமுன் உள்ள பாவை என்ன செய்ய வேண்டும் என ஆடியில் காட்டுவது அது எவ்வாறு பலிக்கும் எனில் அந்த கண்ணாடி சுற்றி பதிக்கும் பொருட்களை குறிக்கும். வாசலில் ஏன் கண்ணாடி வைப்பதும் சூட்சமம்.

உங்களிடம் உள்ள கண்ணாடியின் வண்ணம் குறிபிட்ட மாறுதல்கள் செய்யும்.

எம்ஜியார் மற்றும் கருணாநிதி தற்போது ஸ்டாலின் ஏன் கறுப்பு கண்ணாடி அணிகின்றனர்.

கண் தெரியவில்லை என்றால் சாதாரண கண்ணாடி அணியலாமே.

கவனிக்க கறுப்பு கண்ணாடி திருஷ்டி கோளாறுகளை வடிகட்டும், மேலும் பார்க்கும் கண்ணாடி ஊடுறுவும் தன்மை கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.

அதேசமயத்தில் ஒரு சாயலில் எதிர்தாக்குதல் செய்யும் தன்மையுடையது.

இப்போது மேலே உள்ள பாடல்களை படித்தால் கண்ணாடி எப்படி எல்லாம் இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளனர் என யூகிக்க முடியும்.

காலத்தின் நன்மை கருதி நிழல் பிடிப்பான் கலையை சித்தர்களின் வாயிலாக விட்டு விடுகிறோம்.

நேரம் சரியில்லை என்றால் உன் நிழலே உனக்கு எதிரியாகும் கவனமா இரு என்ற பழமொழி ஒன்று உள்ளது...

பர்மாவை உருவாக்கியவன் தானே அங்கே பெளத்ததை பரப்பியிருக்க முடியும்...


நகரத்தார் - மியான்மர் - இனப்படுகொலை...

எங்க போனாலும் உங்க மண்டைமேல இருக்க கொண்டையை மறைக்க மாட்டீரிங்களேடா... சிங்ககொடி...

மியான்மாரில் நடப்பது இன கலவரம். மத கலவரம் அல்ல....


மத கலவரம் என்றால் எல்லா இஸ்லாமியர்களும் பாதிக்கப்படனும் ஆனால் அங்கே நடப்பது அதுவல்ல...

தமிழகத்தில் நுழைந்த தெலுங்கர்கள் அஸ்திவாரம் நங்கூரம்மிட்டு அமர்ந்து ஆட்சி அதிகாரம் அத்தனையயும் ருசித்தாலும் மவுனமாக கடந்து போக மியான்மர் கும்பல் தமிழன் அல்ல....

ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்களை மட்டுமே அவர்கள் டார்கெட் செய்து வெட்டுகிறார்கள்..

இந்தியாவின் வரலாற்றை வங்காளி மற்றும் தமிழன் இந்த இரண்டையும் கடந்து தேடிவிட முடியாது..

ஈழத்தில் நடந்தது பவுத்தம் இந்து கிருத்துவ மத படுகொலை அல்ல அது இன படுகொலை..

அதேபோல மியான்மாரில் நடப்பது மத படுகொலை அல்ல இன படுகொலை....

ஈழத்தில் தமிழன். பர்மாவில் வங்காளி..

ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் எந்த இஸ்லாமிய நாடுகளுக்கும் கண்டு கொள்வதில்லை ஈழத்தில் இந்துக்கள் பாதிக்கப்பட்ட போது எந்த இந்து நாடும் அவர்களுக்கு ஆதரவாக நின்றதில்லை...

ஆக மதம் சாதிய கடந்து அவன் தமிழனா என்ற இனபகையும் அவன் வங்காளியா என்ற இனபகையுமே உலகநாட்டு மக்களுக்கு ஆழமாக பதிந்துள்ளது....

மத சண்டை என்று சுருக்கி விடாதீர்கள்... மண்ணின் மைந்தன் உழைக்கும் வர்க்கம் வங்காளி அங்கே வெட்டுப்பட்டு சாகுறான்..

ரொகிங்கியா இஸ்லாமியனை ஒதுக்கிய இஸ்லாமிய மதம்...

ஆம் ஆம் இது பச்சை தீண்டாமை...

தலை வலியை குறைக்கும் தேங்காய் எண்ணெய்...


மூளையை சுற்றி பின்னி பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தமே தலைவலி ஏற்பட முக்கிய காரணம். தலை, கழுத்தை சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி. மனப்பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும். தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

காரணங்கள் :

1. மன அழுத்தம்.

2. ஒற்றைத் தலைவலி, விழி களைப்பு, உடல் வறட்சி, குருதியில் சர்க்கரை குறைதல்.

3. நெற்றி எலும்பு புழை அழற்சி (sinusitis) என்பவற்றை குறிப்பிடலாம்.

4. உயிர் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் ரத்த அழுத்தம், மூளைக்கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலிகள் மிகக் குறைவே ஆகும்.

5. பெண்களிடையே காணப்படும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, மாதவிலக்கு  ஆண்டுகளில் எப்பொழுதும் இருக்கும் பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின்  ஏற்ற, இறக்கமே காரணமாகும்.

6. தலை / கழுத்தில் காயம் ஏற்படுதல் (Trauma).

7. தலை / கழுத்து ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு.

8. ரத்தக்குழாய்கள் தவிர, தலைக்குள் ஏற்படும் மற்றப் பாதிப்புகள் (அ) நோய்கள்.

9. போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் (அ) திடீரென்று நிறுத்திவிடுதல்.

10. நோய்த் தொற்று.

11. ரத்த ஓட்டப் பாதிப்பு.

12. கபாலம், கழுத்து, கண்கள், காது, மூக்கு, சைனஸ், பல், வாய் போன்றவற்றால் ஏற்படும் தலை, முக வலிகள்

13. மனநோயால் ஏற்படும் தலைவலிகள்.

14. ரத்தக் கொதிப்பு.

உணவுப் பழக்கம் :

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடு கிளப்பும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடலின்  நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை :

• கல் உப்பு சிறிது கிராம்பை எடுத்து சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொண்டால் தலைவலியின் கடுமை குறையும்.

•  ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

• யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் செய்தல் ஆகும்.

•  சூடான பசும்பால் குடிக்க தலைவலி குறையும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.

• மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பசை போலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவலாம்.

• சந்தனக்கட்டையை சிறிது தண்ணீர் விட்டு பசை போல் அரைத்து அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

• நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

• சிறிது பூண்டு பற்களை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு குடித்தாலும் நிவாரணம் கிடைக்கும். பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாக குறைக்கும்.

• ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருந்தால் தலைவலி குறையும். இதனை இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்கள் செய்ய வேண்டும்.

•  காலையில் படுக்கையைவிட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி 10 நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

• தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

• வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும்.

நன்றாக தூங்குதல் :

தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாததுதான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தலைவலி குறையும்.

வலி நிவாரண மாத்திரைகள் :

வலி நிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியை  தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

உணவு முறைகள் :

சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.

சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சீஸ், சாக்லெட், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியில் இருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

எம்.எஸ்.ஜி. இருக்கிற  அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாக செயல்படுத்தினால் தலைவலி ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-14...


டி.டி.ஹோமைப் போலவே லியொனாரா பைப்பர் (1859-1950) என்பவருக்கும் எட்டு வயதில் ஆழ்மன சக்தியின் முதல் அனுபவம் ஒரு மரணச்செய்தி மூலமாகவே ஏற்பட்டது. 'அத்தை சாரா இறக்கவில்லை. இன்னும் உங்களுடன் தான் இருக்கிறாள்' என்ற செய்தி செவிப்பறையை அறைந்து தெரிவிப்பது போலிருக்க லியொனாரா பைப்பர் ஓடிச்சென்று தாயிடம் அதைத் தெரிவித்தார்.

மகளின் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கருதிய அந்தத் தாய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் அந்த அத்தை சாரா இறந்து போன செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இறந்த நேரம் லியொனாரா பைப்பர் காதில் அறைந்த செய்தியின் அதே நேரம் தான். அதன் பிறகு பதினான்கு வருடங்கள் அது போன்ற அனுபவங்கள் லியொனாரா பைப்பருக்கு ஏற்படவில்லை. மீண்டும் ஏற்பட்ட ஒரு அனுபவம் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.

கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற லியொனாரா பைப்பர் அதைக் குணப்படுத்த டாக்டர் ஜே ஆர் காக் என்பவரிடம் சென்றார். அந்த டாக்டர் குருடர். தன் கையை நோயாளியின் தலையில் வைத்து நோயைக் குணமாக்கக் கூடியவர். அவரிடம் இரண்டாவது முறை சென்ற போது அவர் லியொனாராவின் தலையில் கையை வைத்தவுடன் திடீரென்று தன் முன் ஒரு ஒளிவெள்ளத்தையும் அந்த ஒளிவெள்ளத்தில் பல்வேறு முகங்களையும் லியொனாரா கண்டார்.

அதன் பின் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையை அடைந்த அவர் சுயநினைவில்லாமல் எழுந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதி அதை அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவரிடம் சென்று தந்து மறுபடி தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்தமர்ந்தார்.

அவர் அந்தக் கடிதத்தைத் தந்தது கேம்ப்ரிட்ஜைச் சேர்ந்த நீதிபதி ·ப்ராஸ்ட் என்பவரிடம். அந்தக் கடிதம் அவரது இறந்து போன மகன் எழுதுவது போல எழுதப்பட்டது. லியொனாராவுக்கு அந்த நீதிபதியைப் பற்றியோ, அவரது இறந்து போன மகனைப் பற்றியோ தகவல்கள் ஏதும் தெரியாததாலும், கடிதத்தின் தன்மையாலும் அந்தக் கடிதம் தன் மகனுடைய ஆவியாலேயே எழுதப்பட்டது என்று அந்த நீதிபதி நம்பினார். மயக்க நிலையிலிருந்து மீண்ட லியொனாராவுக்கு தான் செய்தது எதுவும் நினைவிருக்கவில்லை.

இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. பலரும் தங்களுக்கு நெருங்கிய அன்பான இறந்து போனவர்களிடம் இருந்து செய்திகளைப் பெற லியொனாரா பைப்பரை மொய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி லியொனாராவைத் தேடி வந்தவர்களில் ஒருவர் அமெரிக்க மனோதத்துவ மேதை வில்லியம் ஜேம்ஸின் மாமியார். அவருக்கு லியொனோராவின் மூலமாகக் கிடைத்த தகவல்கள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கவே அவர் தன் மருமகன் வில்லியம் ஜேம்ஸிற்குக் கடிதம் எழுதினார். மாமியாரிடம் பணம் பறிக்க யாரோ ஒரு பெண் ஏமாற்றுவதாக எண்ணிய வில்லியம் ஜேம்ஸ் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி தானும் நேரில் வந்தார். மிகக் கவனமாகக் கண்காணித்தும் ஏமாற்று வேலைகள் எதையும் வில்லியம் ஜேம்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லியொனாரா பைப்பர் ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு ஆவியின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் கூறினார். அந்த ஆவி சம்பந்தப்பட்ட மற்ற ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் சொல்வதாகச் சொன்னார். அவர் சொல்வதற்கேற்றாற் போல் அந்தந்தக் கட்டங்களில் அவர் ஆவியின் ஆதிக்கத்தில் இருக்கையில் பேசும் பேச்சுகளின் குரல்கள் வித்தியாசப்பட்டன.

வில்லியம் ஜேம்ஸ் இதைப் பற்றி ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். அந்த ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் ரிச்சர்டு ஹோட்சன் என்ற ஆராய்ச்சியாளர் பல போலிகளை போலிகள் என்று நிரூபித்த பெருமையுடையவர். எதையும் உடனடியாக நம்ப மறுத்த அவர் லியொனாரா பைப்பரை ஆராய்ச்சி செய்ய வந்தார்.

ரிச்சர்டு ஹோட்சன் துப்பறியும் நிபுணர்களை எல்லா சமயங்களிலும் லியொனாரா பைப்பரைப் பின் தொடரச் செய்தார். யாரிடமாவது பேசித் தகவல்கள் தெரிந்து கொள்கிறாரா என்று கண்காணித்தார். அவராகவே லியொனாராவிற்கு அறிமுகமே இல்லாத நபர்களை வரவழைத்து லியொனாரா பைப்பர் முன் அமர வைத்து அவர்களுக்கு வேண்டிய இறந்த மனிதர்கள் சம்பந்தமாகக் கேட்க வைத்தார். எல்லா விவரங்களும் திருப்தி தருபவையாக இருந்தன. 1888 இறுதியில் ஹோட்சனுடன் டாக்டர் ஜேம்ஸ் ஹிஸ்லாப் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் லியொனாரா பைப்பர் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரா'ல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும் லியொனாராவிற்கு முன்பின் தெரியாத இறந்தவர்களின் தகவல்கள் எல்லாம் எப்படித் தெரிகின்றன என்பதை அவரால் அறிவியல் பூர்வமாகச் சொல்ல முடியவில்லை.

ரிச்சர்டு ஹோட்சனும், ஹிஸ்லாப்பும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய லியொனாராவை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள். லியொனாரா சம்மதித்தார். இங்கிலாந்தில் அவர் ஆழ்மன ஆராய்ச்சிக் கழகத் தலைவர் எ·ப்.டபுல்யூ.எச்.மயர்ஸ் வீட்டில் தங்கினார். மயர்ஸ் லியொனாரா வருவதற்கு முன் வீட்டில் அனைத்து வேலைக்காரர்கலையும் நீக்கி புதிய வேலைக்காரர்களை நியமித்தார். எனவே லியொனாரா வேலைக்காரர்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ளுதல் சாத்தியமிருக்கவில்லை. மயர்ஸ் லியொனாராவுக்கு உதவ ஏற்பாடு செய்த வேலைக்காரி ஒரு கிராமத்திலிருந்து தருவிக்கப்பட்டார். அவர் வீட்டை விட்டு செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆராய்ச்சிக் கழகத்தின் நபர் ஒருவரும் கண்காணிக்க கூடவே சென்றார்.

மயர்ஸ் மற்றும் சர் ஆலிவர் லாட்ஜ் கண்காணிப்பில் நவம்பர் 1889 முதல் பிப்ரவரி 1890 வரை லியொனாரா 88 முறை முன்பின் தெரியாத நபர்களின் குடும்பத்தில் இறந்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுத் தந்தார். லியொனாராவிற்கு வந்தவர்களை சில சமயங்களில் தவறான பெயரில் அறிமுகப்படுத்தியதும் உண்டு. சில சமயங்களில் லியொனாரா அரை மயக்க நிலைக்குச் சென்ற பிறகு சிலரை திடீரென்று அழைத்து வந்ததும் உண்டு. ஆனால் லியொனாரா பைப்பர் தருவித்துத் தந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான தகவல்களாகவே இருந்தன. மயர்ஸ¤ம், ஆலிவர் ஸ்காட்டும் 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எந்த விதத்திலும் லியொனாரா பைப்பர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்க சாத்தியமே இல்லை என்றும் அவர் நாணயமும், நம்பகத் தன்மையும் சந்தேகத்திற்கப்பால் பட்டது என்பதையும் தெரிவித்தார்.

மீண்டும் அமெரிக்கா திரும்பிய லியொனாரா பைப்பர் 1909ல் மீண்டும் ஆராய்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். 1915ல் சர் ஆலிவர் ஸ்காட் இறந்து விடப்போவதாகத் தனக்கு ஆவியுலகில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லியொனாரா தெரிவித்தார். அதன் படியே ஸ்காட் இறந்து போனார். பின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த லியொனாரா இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

பல ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் எந்த வித தயக்கமும் இன்றி இது போன்ற பல அதிசயங்களை செய்து காட்டிய லியொனாரா பைப்பர் இன்றும் ஒரு அற்புதப் பெண்மணியாகவே ஆழ்மன ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார். ஆவியுலகைப் பற்றி நம்பிக்கை இல்லாத ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அவர் சொன்ன தகவல்களின் உண்மை தன்மையை உணர்ந்த போது பிரமித்துப் போனார்கள்.

மேலும் பயணிப்போம்......

சென்னை முழுவதும் அரசியல்வாதிகளின் விளம்பரத்திற்காக ஆயிரக்கணக்கான பேனர்கள் சாலையை மறித்து வைக்கப்பட்டுள்ளது...


இதை கண்டு சினம் கொண்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஒருவர் நடைபாதையும் சாலைகளும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக பொது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது.

இதில் நீங்கள் விளம்பரம் செய்ய உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று நாக்கை பிடுங்குவது போல மூக்கின் மேலே ஸ்டிக்கர் ஒட்டி விட்டு வந்துள்ளார்.

இதே போல சென்னை முழுவதும் சினம் கொண்ட இளைஞர்கள் களம் இறங்கினால் இந்த ஊழல் பெருச்சாளிகளை தெறித்து ஓட விடலாம்...

உடனே பற்றி கொள்வது பெட்ரோலா அல்லது டீசலா ?


காமராசரை அடித்துப்போட்ட ஜஸ்டிஸ் கட்சி, அதிஸ்டவசமாக உயிர்தப்பிய நிகழ்வு...


ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிற போது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள்,  ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.

மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.

வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.

‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.

மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

இலுமினாட்டி நடிகர் கமலின்.. அரசியல் நடிப்பு...


செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்...


எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது.

எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது.

இத்தகைய செம்பு தினமும் 2-3 டம்ளர் நீரை செம்பு பாத்திரத்தில் குடிப்பதன் மூலம் எளிதில் கிடைக்கும்.

செம்பு உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் செயலில் முக்கிய பங்கை வகிக்கிறது.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செம்பு பாத்திரத்தில் நீரைக் குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

மேலும் செம்பு கொழுப்புக்களை உடைப்பதில் இடையூறை உண்டாக்கும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும்.

கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால், கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்து, பிறப்பு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்கலாம்.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

செம்புவில் ஆற்றல்மிக்க உயிர்க் கொல்லி பண்புகள் உள்ளதால், இது உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்களை அழித்து, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

செம்பு இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுவதால், உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதோடு இரும்புச்சத்து குறைபாடும் ஏற்படும்.

மேலும் செம்பு புதிய இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிக்கும்.

உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.

செம்பு இயற்கையாகவே ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் புரோஸ்டாகிளான்டின்ஸ் உற்பத்தியை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்...

இபிஎஸ் தனது தவறை ஒத்துக் கொண்டு சசிகலாவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை நடத்த வேண்டும், இல்லை எனில் திமுக - டிடிவி கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது - சமஸ்கிருத பொறுக்கி சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்...


பாஜக மோடியின் முதலாளி ஆம்பானி மனைவிக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி...


ரிலைன்ஸ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானிக்கு ஜனாதிபதி இன்று ராஷ்டிரிய கேல் புரோட்சகான் புரஷ்கர் விருது வழங்கினார்.

விளையாட்டு துறையல் சிறந்த ஊக்குவிப்பாளாருக்காக இந்த விருது வழங்கப்படுகின்றது...

மக்காத பிளாஸ்டிக்குகளில் தின்னர் தயாரிக்கலாம் : தமிழர்களின் அபார சாதனை.....


கோவை ஜே.சி.டி பொறியியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்களான ஹரிபிரசாத் மற்றும் கடையநல்லூர் பைக் மெக்கானிக் அப்துல் ஜப்பார் மகன் பருக்தீன் அலி அஹமது ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்த, ஐ.ஆர்.இ.டி. எனும், பொறியியல் மருத்துவத்துறைக்கான ஆய்வு நிறுவனம் பாங்காங்க்கில் நடத்திய கருத்தரங்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர்கள்,

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து, உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து விளக்கினர். இதற்கு சிறந்த ஆய்வுக்கான சான்றிதழ் கிடைத்திருப்பதோடு, வங்கதேசத்தில் உயர் கல்வி தொடரும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.

இது தொடர்பாக ஹரிபிரசாத் மற்றும் பருக்தீன் அலி அஹமது ஆகியோர் கூறியதாவது...

பெட்ரோல் கெமிக்கல் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு இருந்தது.

நம் நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதை கடலில் வீசுவதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

மட்காத குப்பை என்பதால் சுற்று சூழலுக்கும் கேடுவிளைவிக்கிறது. மறுசுழற்சி செய்தாலும், முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது.


எனவே இக்குப்பையில் இருந்து மூலப்பொருட்கள் உருவாக்க திட்டமிட்டோம். பலகட்ட சோதனைகளுக்கு பின் ஆக்சிஜன் இல்லாத குடுவையில், 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிளாஸ்டிக் எரிப்பதன் மூலம் அதிலிருந்து ஒருவகை எண்ணெய் பெறலாம்.

இதோடு பயோ-டீசல் எனப்படும் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய், பெட்ரோல் கழிவு ஆகியவற்றை சேர்த்து வேதிவினைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த கலவையை 150 டிகிரி வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் பெயிண்ட் தின்னர் கிடைக்கிறது.

இந்த பெயிண்ட் தின்னர், கழிவுகளில் இருந்து கிடைப்பதால் சந்தை விலையை விட குறைவாக விற்கலாம். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் முற்றிலுமாக அகற்ற முடியும்.

இந்த சோதனையை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்,  கோவை காருண்யா பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் நேரடியாக விளக்கினோம்.

கோவையை குப்பையில்லா நகரமாக்க இம்முயற்சி பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்...

உலக நீதிமன்றம் (ஐ.நா) என்பது மக்களை காக்க அல்ல.. மக்களை அழிக்கவே உருவாக்கப்பட்டது...


தமிழனின் வயிற்றிலிருந்து தெலுங்கனின் ஏசிக்கு மின்சாரப் பாதை...


தமிழனின் விவசாய மண்ணில் நிலம், காற்று, நீர் ஆகியவற்றை மாசாக்கி மின்சாரம் தயாரித்து தெலுங்கன் சுகமாக அனுவிக்கப் போகிறான்.

இதற்காக தமிழகத்தில் நாகைப்பட்டிணம் தொடங்கி இருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள மகேந்திரபுரி வரை விவசாய நிலங்கள் வழியாக மின்பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த பாதையை அமைக்க ஒரு லட்சம் பனைமரங்களும் அரை லட்சம் தென்னை மரங்களும் வெட்டி அழிக்கப் போகிறார்கள்..

செய்தி தலைப்பு: உயர் அழுத்த மின்பாதை பணிக்காக 1.50 லட்சம் மரங்களை வெட்ட அரசு முடிவு...

பதில் சொல்லுங்கடா...


8 போலிஸ் புகாரை தொடர்ந்து இன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நாஞ்சில் சம்பத்...


நேற்று 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது...

மாட்டு சாணியும் பாக்கெட் ஆக்கி கொச்சி லூலூ மாலில் விற்பனை.. விலை 70 ரூவா...


ஜிஎஸ்டி வரி மூலம் அரசிற்கு ஒரே மாதத்தில் கிட்ட தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது - மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி...


ஜுலை மாதத்தில் மட்டும் பொதுமக்களிடமிருந்து ஜிஎஸ்டி வரியாக 92,283 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இது எதிர் பார்த்ததை விட அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்போனுக்கு ரிஜார்ஜ் செய்வதிலிருந்து மருந்து மாத்திரை வாங்குவதை வரை  ஒரே மாதத்தில் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அரசிற்கு வரியாக வழங்கிய தொகை கிட்ட தட்ட ஒரு லட்சம் கோடி..

குடிநீர் பிரச்சனை , சாலை பிரச்சனை , போதிய மருத்துவ வசதிகள் , மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாமல் இருக்கும் ஊர்கள் ஏராளம்.

மக்களிடம் வாங்கு வரியில் மோடி ஊர் சுற்றாமல்.. நீங்கள் கொள்ளை அடிக்காமல்.. பாதியையாவது மக்களுக்கு சென்றடையும் வண்ணம் செலவு செய்தால் நாடு நன்றாக இருக்கும் என்பதே வரி கட்டும் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

இதுவரை பாஜக எந்த ஒரு லஞ்ச ஒழிப்பு சட்டத்தையுப் அமல்படுத்தவில்லை - அண்ணா ஹசாரே...


3 வருசமா தூங்கிட்டு இப்போ தான் கண் விழிச்சு எழுந்திருக்காரு.. பலே பலே…

சோபன்பாபு ஜெயலலிதாவுக்கு பிறந்தவள் நான்...


கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.

கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார். சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர்.

இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார்.

1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார். நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார். ..

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


10 எம்எல்ஏ வைத்திருந்த பன்னீர் செல்வம் கூறிய போது உடனே சட்டமன்றதில் பெரும்பான்மையை நீரூபிக்க சொன்ன ஆளுனர் இத்தனை எம்எல்ஏக்கள் சொல்லியும் இப்பொழுது ஏன் கூட்ட மறுக்கின்றார் ? ஆளுனர் அரசியல் செய்வது பட்டவர்த்தனமாக தெரிகின்றது - திமுக ஸ்டாலின் பேட்டி...


மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவர்கள்...


புத்த தீவிரவாதிகள்...


விடுதலை புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரிய வேண்டுமா ?


விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....

“விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.

சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.

அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து "தவபாலன்" என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார்.

அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும்,மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…

உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே!

அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்?

அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).
* 1௯ தங்ககம் (ளொட்கெ)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும்தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார்.

அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?

மக்களுக்கான கட்டமைப்புக்கள்ஒருபுறமிருக்க….

இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…

தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.

* மாவீரர் பணிமனை
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை!

ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள்.

ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”!

உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது!

தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல….

ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது !

இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது.

உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது!

இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள் ?

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது!

எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!

விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது!

அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்..

யார் சொன்னது அவர்கள் அழிந்து விட்டார்கள் என்று ?

நாம சொன்னா எவன் கேட்கிறான்...


திராவிடம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...


தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.

தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.

தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.

நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ் கார்டன் திராவிடம்.

சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.

இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.

எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில்..

தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?

திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு...

இந்தியாவில் நடப்பது இந்தி ஆட்சி...


தமிழர்கள் தான் இந்தியாவில் முதன் முதலில் நாணயம் வெளியிட்டவர்கள் என்று சொல்ல இன்னும் ஏன் தயக்கம்?




இதை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவிக்கலாம் அல்லவா?

இந்தியாவிக்கு நாணயம் கொடுத்த தமிழனின் மொழி இன்று இந்திய நாணயத்தில் இல்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை...

பாஜக மோடியும் அரசியல் வியாபாரமும்...


நாம் பயன்படுத்தியதை காட்டு மிராண்டி செயல் என்று நிறுத்தி விட்டு... தற்போது நாகரிகம் என்ற பேரில் அதே வரட்டி...


தர்ம யுத்தத்தின் உத்தமர் ஓபிஎஸ் சும் குடும்ப அரசியலும்...


தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?


தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா?

ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.

இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது.

இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும்.

இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட.

மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா?

பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

பசியைத் தூண்டும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்...

தமிழினம் என்று ஒன்றுள்ள வரை தமிழினத் தேசிய தலைவர் இருப்பார் டா...