31/08/2017

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் கண்ணாடி...


இன்று நாம் காண்பது கண்ணாடி (GLASS) பற்றியும் அவற்றின் நிழல் பிடிப்பான் (SHADOW PICKER) கலை பற்றியும் மற்றும்  பழந்தமிழர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் அறிவோம்.

ஒவ்வொரு பொருளும் மனித வாழ்கையில் இன்றியமையாத ஒன்றாக அவர்கள் கூடவே பயணிக்கிறது. ஆனால் அதை மனிதன் ஒரு நாளும் அதன் தோற்றம் பற்றி சிந்திப்பதே இல்லை.

கண்ணாடி இதை சங்க காலத்தில் தமிழர்கள் இரண்டு விதமாக அதாவது செயற்கை கண்ணாடி இயற்கை கண்ணாடி என கண்டறிந்து பயன்படுத்தினர்.

இயற்கை கண்ணாடி என்பது எரிமலை பிரதேசத்தில் உள்ள பளிங்கு பாறைகளை வெட்டி எடுத்து அவற்றை கண்ணாடியாக பயன்படுத்தினர்.

மேலும் செயற்கையாக உவர்மண் அதாவது சலைவசோடா மண் மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை உருக்கி கண்ணாடி தயாரித்தனர்.

சங்க இலக்கியத்தில் கண்ணாடியின் பெயர் பலவகையில் உள்ளது அவை நிழல்காண் மண்டிலம், ஆடிபாவை, பாண்டில், வயங்குமணி, வயங்கல் மற்றும் கண்ணாடி என்றே சில இடங்களில் கூறியுள்ளனர்.

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யும் புதல்வன் தாய்க்கே
- (குறுந்தொகை 8ல் எண் 4-6)

நாம் கண்ணாடி முன் என்ன செய்கிறோமோ அதையே செய்யும் கண்ணாடி தான் ஆடிப்பாவை என்கிறார்கள்.

நீர்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
தோலெறி பாண்டிலின் வாலிய மலர
- (அகநானூறு217 ல் 7,8 வரி)

அழகு கூட்டுவதற்கு கேடயத்தில் கண்ணாடி பயன்பட்டது

வயங்குமணி பொருத வகையமை வனப்பு
-  (அகநானூறு 167ல் 1)

ஒளி செய்யும் மணிகள் பலவற்றை வைத்துச் செய்யப்பட்ட கண்ணாடி அகத்தில் உள்ளதை அப்படியே காட்டும். என பாடல்கள் மூலம் அறியலாம்.

இங்குள்ள எல்லா பாடலும் கண்ணாடி பயன்படுத்தி சான்று தருகிறது. அதோடு இது சூட்சம விசயங்களை அப்படியே மறைத்தும் கூறுகிறது.

கண்ணாடியின் சூட்சமும் நிழல் பிடிப்பான் கலையும்...

மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடியின் பெயரை புலவர்கள் மாற்றி இருப்பதை கவனிக்கவும்.

ஒவ்வொரு இடத்திலும் கண்ணாடி பயன்பட்ட வேறொரு காரணத்தையும் சொல்லாமல் சொல்கிறார்கள். இதற்கு சித்தர்களின் துணையும் அவசியமாகிறது.

அதற்கு முன் ஒளியை எதிர் ஒலிக்கும் கண்ணாடி எப்படி செய்யபடுகிறது என கண்டு விட்டால் கண்ணாடி செய்யும் வேலையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஈயத்தகட்டின் மீது பாதரசத்தைத் தடவி அத்தகட்டைக் கண்ணாடி மீது ஒட்ட, அப்பாதரசம் கண்ணாடி மேல் பரவி அதன் ஒளி, ஒளி எதிரொளிக்கும் கண்ணாடியாக் நமது கைகளுக்கு கிடைகிறது.

இங்கு பாதரசத்தை வைத்து செய்யபடும் கண்ணாடிகள் மிகவும் முக்கியமானவை. அதாவது பாதரசத்தில் எது சேர்க்கிறோமோ அது அதன் தன்மையை அதிகபடுத்தி கொடுக்கும் ஆற்றல் உண்டு.

நீங்கள் அக்கண்ணாடி முன்பு நின்றால் உங்களுடைய பிராண சக்தி கூடும். உங்களுக்கு வயது ஆகுதல் என்பது உங்களை இந்த பூமியானது வானமண்டலத்தோடு சேர்த்து சுத்துவதால் உங்கள் அணுக்கள் சிதறடிக்கபடுகிறது. உங்கள் பிராண அடுக்கு குலைகிறது அதை தடுக்க கண்ணாடி தடுத்து உங்கள் பிராண வலிமையை கூட்டுகிறது.

நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியே கண்ணாடியில் பார்ப்பதால் உடனே உங்கள் செயலின் தன்மையை பாதரசம் அதிகபடுத்தி தருகிறது.

ரசமணி அணிவதன் தத்துவமும் இதுதான் குறிபிட்ட மூலிகையில் ரசத்தை ஊற்றி சுத்தி செய்து அதை அணிந்தோ வாயிலிட்டோ பலனை பெறுவர் அதெல்லாம் பெரிய செய்முறை.

நம் பதிவுக்கு வருவோம்..

ஆண்டாள் எப்போதும் கண்ணாடி முன் தன்னை அழகுபடுத்துவது பற்றியும், வள்ளலார் கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வது பற்றியும் கூறும் கதையை நினைவில் கொள்க தெரியவில்லை என்றால் தெரிந்து படித்து பார்க்கவும்.

சங்க காலத்தில் ஒரு கலை இருந்தது நிழல்பிடிப்பான் இது கண்ணாடி மற்றும் பிராண சக்தி மூலம் கற்க வேண்டிய அணுவிஞ்ஞான கலை உங்கள் எதிரியின் நிழல் உங்களிடம் சிக்கினால் நீங்கள் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் இக்கலைக்கு வேறு பெயர்கள் இருப்பதாக கேள்வியுற்றேன்.

இதன் மாதிரி விடயம் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் உள்ளது..

சங்ககால புலவர்கள் கண்ணாடியை இடத்துக்கு தகுந்தவாறு பெயர் சூட்டுவதை கண்டோம் அல்லவா அதில் ஒரு பெயரை மட்டும் காண்போம்.

ஆடிப்பாவை அதாவது ஆடி முன் உள்ள பாவை அல்லது ஆடியில் உள்ள பாவை இது முன் பின் வரும் சொற்களை கொண்டு அறியபட வேண்டியது.

பாவை என்றால் ஆட்கள். ஆடிமுன் உள்ள பாவை என்ன செய்ய வேண்டும் என ஆடியில் காட்டுவது அது எவ்வாறு பலிக்கும் எனில் அந்த கண்ணாடி சுற்றி பதிக்கும் பொருட்களை குறிக்கும். வாசலில் ஏன் கண்ணாடி வைப்பதும் சூட்சமம்.

உங்களிடம் உள்ள கண்ணாடியின் வண்ணம் குறிபிட்ட மாறுதல்கள் செய்யும்.

எம்ஜியார் மற்றும் கருணாநிதி தற்போது ஸ்டாலின் ஏன் கறுப்பு கண்ணாடி அணிகின்றனர்.

கண் தெரியவில்லை என்றால் சாதாரண கண்ணாடி அணியலாமே.

கவனிக்க கறுப்பு கண்ணாடி திருஷ்டி கோளாறுகளை வடிகட்டும், மேலும் பார்க்கும் கண்ணாடி ஊடுறுவும் தன்மை கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.

அதேசமயத்தில் ஒரு சாயலில் எதிர்தாக்குதல் செய்யும் தன்மையுடையது.

இப்போது மேலே உள்ள பாடல்களை படித்தால் கண்ணாடி எப்படி எல்லாம் இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளனர் என யூகிக்க முடியும்.

காலத்தின் நன்மை கருதி நிழல் பிடிப்பான் கலையை சித்தர்களின் வாயிலாக விட்டு விடுகிறோம்.

நேரம் சரியில்லை என்றால் உன் நிழலே உனக்கு எதிரியாகும் கவனமா இரு என்ற பழமொழி ஒன்று உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.