23/06/2018

இலுமினாட்டி கமலின் பிக்பாஸ் எனும் விபச்சார நிகழ்ச்சியை தடை செய்...


குறிப்பாக பெண் குழந்தைகளை பார்க்க அனுமதிக்காதீர்கள்...

பிஞ்சு மனதை வெம்ப வைத்து பருவம் வரும் முன்னரே பாலாய் போக செய்யும்...

வரவாற்றை திருப்பும் வணிகம்...






நாசகார திட்டங்கள்.. 
வளங்கள் அழிப்பு...
வணிகம்..

உலகத்தை ஒரே குடைக்குள் கொண்டுவர இயற்கை வளத்தையும், வணிகமயமாக்குவான் வணிகன்...

பசுமைவழிச் சாலை: பாதிக்கப்படும் பகுதிகளில் அன்புமணி மக்கள் சந்திப்பு: கருத்துக் கேட்பு - பாமக அறிக்கை...


தமிழ்நாட்டில் யார் குடி எங்கு கெட்டாலும் பரவாயில்லை... எஜமானர்களின் ஆணைப்படி எட்டு வழி சென்னை- சேலம் பசுமைவழி சாலையை நிறைவேற்றியே தீருவது என வெறி கொண்டிருக்கும் பினாமி அரசு, அதற்காக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறைகளும், அதிகார அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தை சாகடிக்கும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என  இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திண்டிவனம் -கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா ஆகும். இந்த வினாவுக்கு இன்று வரை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பதிலளிக்காத பினாமி அரசு, பசுமைவழி சாலைக்கான நிலம் அளவீடு  உள்ளிட்ட பணிகளை மக்கள் எதிர்ப்பை மதிக்காமல் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

ஜனநாயகம் என்பதே மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பது தான். ஆனால், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஜனநாயகத்தின் எந்த இலக்கணத்திற்கும் பொருந்துவதாகத் தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் 43 ஆண்டுகளுக்கு முன் கட்டவிழ்த்து விடப்பட்ட நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுவதாகவே உள்ளன. பசுமை சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற தேவை உண்மையாகவே இருந்தால், அது குறித்து மக்களுக்கு விளக்கி, அவர்களின் ஒப்புதல் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும். இத்திட்டத்தின் சிறப்புகள் பற்றி வீர வசனங்கள் பேசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்  பொன்.இராதாகிருஷ்ணனும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படாது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி அவர்களை சமாதானப்படுத்தலாமே... அதை செய்வார்களா?

அதை செய்வதற்கு பதிலாக, தேவையே இல்லாத இத்திட்டத்தை, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மக்கள் தலையில் திணிப்பதை எவ்வாறு ஏற்க முடியும்? பசுமை சாலைத் திட்டத்தின் முழு விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை; மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்படவில்லை; ஆனால், மக்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த, அவற்றில் அளவீடு செய்யப்படுகிறது. இதை அம்மக்களால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இந்த அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகளையும், பொதுமக்களையும் கைது செய்வது அராஜகத்தின் உச்சம்.

சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள இரும்புத்தாது உள்ளிட்ட இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனம் சுரண்டி எடுத்துச் செல்வதற்கு வசதியாகவே மக்களின் வரிப்பணத்தில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையை அமைத்து விட வேண்டும் என்பதற்காக பினாமி அரசு எந்த அளவுக்கு கீழிறங்கி நடந்து கொள்கிறது? அரசின் இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதில் ஏழை விவசாயிகள் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளனர் என்பதற்கு இரு நாட்களுக்கு முன்  சேலம் மாவட்டம் அடிமலைப்புதூரில் மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டதும், அதன்பின் நடந்த நிகழ்வுகளும்  தான் உதாரணம். தனது நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று தரையில் விழுந்த கதறிய மூதாட்டியை காவலர்கள் கைது செய்தனர். கைதுக்கு அஞ்சாமல் நிலத்தை இழப்பதை விட, போராடி சிறை செல்வது மேல் என்று முழக்கமிட்டு சென்ற அந்த மூதாட்டி ஜான்சி ராணியாகவே மக்களால் பார்க்கப்படுகிறார்.

ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கிறது; அதற்கும் மேலாக சர்வ வல்லமை பொருந்திய மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கிறது என்பதற்காக ஆடக்கூடாத ஆட்டங்களையெல்லாம் ஆடினால், அனுபவிக்கக்கூடாத தண்டனைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற நியதியை பினாமி ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. மண்ணுக்கான உரிமைப் போரில் சர்வ வல்லமை படைத்த பல சக்கரவர்த்திகள், சாதாரண மக்களிடம் மகுடத்தை இழந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து, பசுமைவழி சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து மாநில அரசு நடந்து கொள்ள வேண்டும்.

பசுமைவழி சாலையை எதிர்ப்பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் அலறுவது கேலிக்கூத்தானது. தமிழகத்தின் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சேதுசமுத்திரத் திட்டத்தை கற்பனைக் காரணத்தைக் காட்டி தடுத்தவர்களும், கையூட்டு கிடைக்காததால் தொழில் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் பாலம் திட்டத்தை 8 ஆண்டுகளாக முடக்கி வைத்திருப்பவர்களும் வளர்ச்சியைப் பற்றி பேசுவதை விட சிறந்த நகைச்சுவை எதுவும் இருக்கமுடியாது. பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எதிராக கட்சி அல்ல. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தவுள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக் கேட்பு  கூட்டங்களில் உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

நீங்கள் தயாரா இல்லையா என தெரியவில்லை.. ஆனால் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் அருகில் உள்ள பாண்டூர் கிராமம் அமைந்துள்ளது...


இந்த  கிராமத்தை சுற்றிலும் மத்திய அரசால் இயக்கப்படும் ONGC ஓயன்ஜீசி  [ 3 மூன்று ] அமைந்துள்ளது .

அதில் இருந்து எரிபொருள்  [ Gas ] விவசாய நிலத்தின் கீழ் வழியாக [ pipe ] குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன ..

திடீர் என இன்று காலையில் ஒரு குழாய் வெடித்து அதில் இருந்து எரிபொருட்கள் வெளியேறியதால் அந்த விவசாய நிலங்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது... புகைப்படம் கீழே உள்ளது.

விவசாயத்தை நம்பியே பாண்டூர் கிராம மக்களும், அதனை சுற்றியுள்ள மக்களும் இருக்கு இந்த நிலையில் இவ்வாறு நடப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மிக விரைவில் இதற்க்கு  ஒரு நல்ல தீர்வை அளிக்க வேண்டும் மத்திய மாநில அரசாங்கம்..

பணத்தை கொடுத்து சரி செய்வதை நிறுத்தி விட்டு இது போன்று நடக்காமல் இருக்க உடனடியாக அந்த வழியே போகும் எரிபொருள் குழாய்களை முற்றிலுமாக  அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கான தீர்ப்பை  எதிர்பார்த்து பாண்டூர் பொதுமக்கள் . விவசாயிகள்...

பணத்தை கோடிக்கணக்கில் வேஸ்ட் பண்ணிட்டு, அதன் சுமையை மக்கள் தலை மேல வைக்கிறீங்க....


என்னய்யா ஆட்சி நடத்துறீங்க? இது தான் உங்க லட்சணமா?

உங்கள் வீட்டு செங்கல் ஒன்றை இடித்து எடுத்தால் ஏன் கோபம் கொள்கின்றீர்?


இந்த சாலையில் உள்ள ஒவ்வொரு சிறு கற்களும் உங்களுடையது. யாரை கேட்டு துளைப் போட்டார்கள்? இதை மீண்டும் சரி செய்ய யாருடைய பணம் செலவிடப்படும். பதாகை வைக்கும் தலைவரின் சொந்த பணத்திலா?

பெண்கள் மெட்டி அணிவது ஏன்.?


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது...

கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது..

மேலும் , பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்போது , இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது..

ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது..

ஆக , கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

கோவை - சூலூர் இராணுவ தளம்...


வைரம் பற்றிய நாம் அறியா சில தகவல்.....


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது. வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்.

அதாவது 5 காரட் 1 கிராம் எடை. சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ? ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட். நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை. வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது. இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது. பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங். வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம். வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ? வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பழுப்பு நிற (brown), சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை, செம்மஞ்சள் நிறமான (orange), இளஞ்சிவப்பு (pink), நீலம், வெளிர்பச்சை, ஊதா வர்ணம் (violet) வர்ணங்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது...

திருடர் கூட்டம்...


படைப்பாளியின் படைபிள் நல்லதும் கெட்டதும் இரு கைகள் இந்த இரண்டையும் தருபவன் கடவுளாக இருக்க முடியாது...


கடவுள் என்பது நம்மை கப்பவன் கெட்டதுல இருந்து...

எனவே படைப்பாளியை  வணங்காம கடவுளை வணங்கு ஆனால் மொய் முறையில் இல்ல (ஒப்பந்தம் போட்டு நல்லத வாங்க கூடாது அதுவா தரனும்). அன்பு தான் அதை செய்யும்..

அன்பு காட்டுவதில் சமநிலை தவறும் (தாயிடம் காட்டும் அன்பிற்கும் தாரத்திற்கும் அன்பு வேறுபடும்) ஆனால் உரிமையை தராமல் இருக்க கூடாது. (தாயுக்கு தாரத்திற்கும் உரிய அன்பை தந்துவிடனும்).

அன்பை போற்றுவோம் நானும் முயற்க்குறேன்...

ஒரு தகவல் சொல்லட்டுமா.?


அண்ட, பிண்ட விசாரம்...


அண்டத்திற்குள் பிண்டம்...
பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே...

உலக அரசியலை யார் நடத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்... உள்ளூர் அரசியலை விட்டு விடுங்கள்...


கலிபோர்னியாவில் பேய் சுறா….


எங்களுக்கெல்லாம் சுறா தெரியும், அது என்ன பேய்சுறா அப்படின்னு கேட்கிறீங்களா?

அதாங்க எனக்கும் புரியல. சரி வாங்க என்னன்னு பார்ப்போம்..

அதாவது சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நடந்த ஒரு ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் ஒரு அரிய வகை சுறா மீன் கண்டுபிடிக்கப் பட்டது.

இந்த வகை மீன்கள் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அது என்ன பேய் சுறான்னு ஒரு பேரு?

பேய் மாதிரி வெள்ளையா, ஆவியா இருக்குமா இந்த மீனு அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்லனும்.

ஆமாங்க இந்த மீனுக்கு ஆங்கிலத்தில் “கோஸ்ட் ஷார்க்”(Ghost shark) என்பது பெயர். அதை அப்படியே தமிழாக்கம் செய்தால் அது பேய் சுறா ஆகி விடுகிறதே தவிர நாம் நினைப்பது போல பேய் போல இருக்காது இந்த மீன்.

ஹைட்ரோலாகஸ் மெலனோஃப்பாஸ்மா (Hydrolagus melanophasma)எனும் அறிவியல் பெயர் கொண்டது இந்த மீன்.

“கைமெரா” (chimaera) எனப்படும் இந்த வகை அரிய/புதிய மீன்கள் பொதுவாக மக்கள் இல்லாத, மிகவும் வித்தியாசமான பகுதிகளிலேயே கண்டிபிடிக்கப்படுவது வழக்கம்.

கைமெரா என்றால் இரு உருவங்கள் அல்லது உயிரினங்களில் கலவை என்பது பொருள்.

இந்த வகை கைமெரா மீன்கள், எலிமீன், முயல்மீன் என பலவகை பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இவை இக்காலங்களில் வாழும் மீன்களிலேயே மிகவும் பழமையானதும், புதிரானதும்கூட என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் இந்த வகை மீன்கள் எந்தவித பரிணாம மாற்றங்களேதுமின்றி டைனோசார் காலங்களிலும் வாழ்ந்து, இன்றுவரை அதேபோன்று உடலமைப்பு, வாழ்வு முறை போன்றவற்றோடு வாழ்கின்றன.

இவை, ஆழ்கடல்களிலேயே வாழ்கின்றன. இதனால் மனித ஆராய்ச்சிக்கு இதுவரை தென்படவில்லை என்கின்றனர்.

இதைக் கண்டுபிடித்தது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்..

கீழே இருக்கிற புகைப்படத்தைப் பாருங்க உண்மையாகவே பேய் மாதிரி இருக்கிறதா இந்த பேய் சுறா என்று?

சேலம் 8 வழிச் சாலை இராணுவ சாலை...


விஞ்ஞான தமிழ் மெஞ்ஞானம்...


21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்...

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

- திருமந்திரம்-2008

விஞ்ஞான நோக்கம் - ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி என்ற சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான்=> குவார்க்=> க்ளுவான்=>!!!???) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள்(Higgs boson)” எது என்ற சோதனை நடந்துவருகின்றது.

செயல்படும் முறை - லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில்(வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று பிறகு வெளிப்படும் துகள்களில் அணுவின் அடிப்படத் துகள்களையே (ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்=>) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள்துகள்(Higgs boson) ஏதுனும் வெளிப்படுகின்றாதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்...

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

-திருமந்திரம்-2008

விளக்கம் -

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான்=>குவார்க்=>க்ளுவான்)
ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒருதுண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதுலும் கைகூடும்.

மேற்கண்ட இருநிகழ்வுகளிலும் நோக்கமும், செய்முறியும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர. ஏனெனில் நாம் இதை தற்பொழுது மதிப்பெண்களுக்காக படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்..

க(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்த்தியர். ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீககருத்துக்களை (உண்மையில் ஆன்மீகம் என்பது வேறு, கடவுள் என்பது வேறு, மதம் என்பது வேறு, மதபோதகர் என்பது வேறு,) பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிருப்பித்து எழுதினார என்றால் கோட்ப்பாட்டு இயற்பியலில்(Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதிஉயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. எ.கா அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொளகை(Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை(General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார்.

திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமள்ளாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை.

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று உளுந்தங்கஞ்சி...


சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடுங்க..

இதன் பலன்கள்...

முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.

ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.

மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.

பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி.. தேவையான பொருட்கள்..

உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி அரை டம்ளர்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பூண்டு 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் ஒரு மூடி

செய்முறை...

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.

(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து தான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்)

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும்.

தேங்காய் துருவியும் போடலாம்...

பாஜக வின் வளர்ச்சி...


திராவிடலு பகுதி - 8...


1900களில் பிராமண ஆதிக்கத்தையும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஆதிக்கசாதியர் பிராமணருடன் போட்டியிட்டதையும்,  திராவிடப் பரப்புரை முடுக்கிவிடப்பட்டதையும் பார்த்தோம்.

முதலாம் உலகப்போர் 1914 தொடங்கி 1918 ல் முடிந்த பிறகு ஆங்கிலேய அரசின் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் வீறிட்டெழுந்தது.

அப்போது நாடுமுழுவதும் காங்கிரசை விட செல்வாக்காக இருந்தது 'அன்னிபெசண்ட்' அம்மையாரின் 'அகில இந்திய ஹோம்ரூல் லீக்'.

இதன் சென்னைக்கிளை தமிழ் பிராமணர் கட்டுப்பாட்டில் இருந்தது
(உண்மையாகவே விடுதலையை நோக்கமாகக் கொண்ட தமிழ் பிராமணர்).

இந்நேரத்தில் இந்திய சட்டசபை உறுப்பினர் 19 பேர் கையொப்பமிட்ட கூட்டறிக்கை ' பூரண சுயாட்சி'  கோரியது.

ஏதேது ஆங்கிலேயர் சுயாட்சி வழங்கினால் அது ஹோம்ரூல் மூலமாக தமிழ்ப்பிராமணருக்குப் போய்விடுமோ என்று வேற்றுமொழி ஆதிக்க சாதியினர் பதற்றமடைந்தனர்.

இந்நிலையில்தான் அவர்கள் தமக்கென்று ஒரு கட்சியை தொடங்குவது என்று தீர்மானித்தனர்.

இவ்வாறு அவர்கள் தோற்றுவித்த முதல் திராவிடக் கட்சியான 'நீதிக்கட்சியின்' முகத்திரையை சற்று  விலக்கிப் பார்ப்போம்.

இக்கட்சியை தொடங்கிய இருவரில் முதலில் டாக்டர்.டி.எம்.நாயர் பற்றி அறிவோமாக.

மலையாளியான இவர் முதலில் காங்கிரசில் இருந்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிராமண வாக்காளர் நிறைந்த திருவல்லிக்கேணித் தொகுதியில் நான்குமுறை வெற்றிபெற்றவர்.

பிறகு ஒருமுறை தொல்வியைத் தழுவினார்.

தமிழ்ப்பிராமணர் மீது வந்ததே கோபம், உடனே தமிழரல்லாத இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தார். அப்போது சென்னை மாநில கவர்னராக இருந்த 'வெல்லிங்டன் பிரபுவை' சந்தித்தார்;

தமிழரல்லாத இயக்கத்தை  பிராமணரல்லாத இயக்கம் என்கிற பெயருடன் தொடங்குவாயாக என்று கவர்னர் ஆசி வழங்கினார்.

இவரை சகமலையாள ஆதிக்க வர்க்கத்தினர் தூண்டினர்.

இரண்டாமவர் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராயர். இவர் தனிப்பட்ட முறையில் பண்பான மனிதராகவே பலருக்கும் தோன்றியவர்.

இவர் நீதிக்கட்சியான 'ஜஸ்டிஸ் கட்சி'யைத் தோற்றுவித்து அதன் தலைவராக தனது கட்சியின் கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த முதல் அறிக்கையே தமது கட்சிக்கு வித்தூன்றிய சர்.அலெக்சாண்டர் கார்ட்யூவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு,
இந்தியர்கள் ஒரேடியாக ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் கோரக்கூடாதென்று கூறியது.

அதேபோல 19 டெல்லி சட்டசபை உறுப்பினர் ஒப்பமிட்டு சுயாட்சி கோரியதையும் வன்மையாகக் கண்டித்தது.

தவிர நாட்டில் வாழும் பல்வேறு மக்களுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடியவர் ஆங்கிலேயரே என்று கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமான தமது ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியது.

ஆங்கிலேய ஆளுகையில் ஒட்டுமொத்த நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும்போதே தமது நலனில் மட்டும் அக்கறை கொண்ட புண்ணியவான்களின் பாசறைதான் திராவிடக் கூடாரம் என்பதை இதைவிடத் தெளிவாக கூற வேண்டியதில்லை.

திராவிடவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்ததே கிடையாது.

எப்படி எதிர்ப்பர்? ஆங்கில வல்லாதிக்கத்தின் நீட்சி தானே திராவிட ஆதிக்கம்.

அப்படி இருந்தும் இந்தக் கட்சி 1936வரை ஆட்சியும் செலுத்தி தமிழர் எவரையும் ஆளவிடாமல் தாழ்த்தப்பட்டவரையும் மேலே வரவிடாமல் சாதனை மேல் சாதனை புரிந்ததை பார்க்கத்தானே போகிறோம்.

- தொடரும்...

பாஜக - அதிமுக, காங்கிரஸ் - திமுக வின்... தமிழகம் விற்பனைக்கு...


அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் அச்சம் : ஏலியன்ஸ்களால் கடத்தப்படலாம்...


ஏலியன்ஸ் குறித்த தகவலை விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்ட நிலையில் ஏலியன்களால் கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அமெரிக்கர்கள் அதிக அளவில் காப்பீடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் நாசா விஞ்ஞானி மரியோ பெரஸ், நாசா மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 219 கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கிரகங்களுடன் சேர்த்து, இப்படி கண்டு பிடிக்கப்பட்டுள்ள மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேற்று கிரகவாசிகளால் தாங்கள் ஒரு வேளை கடத்தப்பட்டு விடக்கூடும் என கருதி அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை ஏலியன்ஸ்கள் தாக்குவது போலவும், வேற்று கிரகவாசிகள் அடிமைப்படுத்துவதை போலவும் ஹாலிவுட் படங்கள் வெளியாகி வருகின்றன.

அதே பாதிப்பில் அமெரிக்கவாசிகள், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என்ற கற்பனையில் கனவு கண்டு காப்பீடு செய்கிறார்களோ என்னவோ?

நம் ஊரில் எலிக்கு பயப்படுவது போல அமெரிக்காவில் ஏலியன்ஸ்க்கு பயப்படுறாங்க போல...

சேலத்தை காக்க இனி மாணவர்களால் மட்டுமே முடியும்....


ஓசைகளிற்கு அளவு உண்டா...?


ஓசைகளைக் குறில், நெடில் என்று குறிப்பிடுகின்றீர்களே, அதற்கு ஏதாவது அளவு உண்டா?

ஓசைகள் ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு அளவு கணிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு 'மாத்திரை’ என்று பெயர்.

கண்களை ஒருமுறை இமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கை விரல்களை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை என்பர்.

குறில் ஓசைக்கு (அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை; நெடில் ஓசைக்கு (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ) 2 மாத்திரை; மெய் ஓசைக்கு 1/2 மாத்திரை.

இங்கே ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். 'க' என்னும் உயிர்மெய் எழுத்தில் 'க்'+'அ' என்னும் எழுத்துக்கள் உள்ளன. மேற்கண்ட கணக்கின்படி 'க்' கிற்கு 1/2 , 'அ' விற்கு 1 என்று கொண்டு, 'க' வுக்கு 1 1/2 மத்திரை என்று சொல்லலாமா? கூடாது.

மூன்று துணை ஓசைகள் என்று குறிப்பிட்டீர்களே, அவை யாவை?

துணை ஓசைகளைச் 'சார்பு எழுத்து' என்று இலக்கண நூலார் அழைப்பர். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன.

இவற்றுள் ஆய்தம் புரிகிறது; குற்றியலுகரம், குற்றியலிகரம் புரியவில்லையே.

குற்றியலுகரம் என்பதற்கு பொருள் குறுகிய உகரம் என்பதாகும். அதாவது உகரத்துக்கு (உ) ஒரு மாத்திரை; அது 1/2 மாத்திரையாகக் குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம்.

இதை எப்படி கண்டுபிடிப்பது?

கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் இல்லை. அணுவையே பிளக்கலாம் என்று கண்டுபிடித்த நமக்கு இது ஒன்றும் கடினமில்லை.

வல்லெழுத்தின் மீது (க், ச், ட், த், ப், ற்) உகரம் ஏறி ( குசுடுதுபுறு), அந்த எழுத்தை இறுதியாகக்கொண்டு ஒரு சொல் முடியுமானால், அதில் வரும் உகரம் ( நாகு, மாசு, நாடு, காது, மார்பு, ஆறு) குற்றியலுகரம் ஆகும்.

ஆனால், தனிக் குறிலை அடுத்து கு சு டு து பு று என்றும் ஆறு எழுத்துக்கள் வருமானால் ( நகு, பசு, மடு,புது, தபு, வறு) அவை குற்றியலுகரம் ஆகா.

மேலும் இந்த உகரம் மெல்லெழுத்து ( ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ) இடையெழுத்து (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஆகியவற்றின் மீதி ஏறி வந்தாலும் குற்றியலுகரம் ஆகாது ( அணு - (ண்+உ), ஈமு (ம்+உ), திரு(ர்+உ), குரு(ர்+உ), கதவு(வ்+உ), கனவு(வ்+உ), நிலவு(வ்+உ), முழு( ழ்+உ), ஏழு( ழ்+உ), தள்ளு(ள்+உ) ).

இனி, குற்றியலிகரம் பற்றி பார்ப்போம்.

இரண்டு சொற்களில் ஒரு சொல்லின் கடைசி எழுத்து குற்றியலுகரமாகவும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து யகரமாகவும் ( ய, யா )இருந்தால், அவை இரண்டும் சேர்ந்து ஒலிக்கும்போது அந்த குற்றியலுகரம் 'இ'கரமாக மாறிவிடும். அந்த எழுத்து 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் 'இ'கரம் குற்றியலிகரம் ஆகும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

நாடு + யாது = நாடியாது. 'நாடு'என்னும் சொல்லில் வரும் 'டு' என்பது குற்றியலுகரம். இதனை அடுத்து வரும் 'யாது' என்னும் சொல் 'ய'கரத்தில் தொடங்குவதால், 'டு' என்ற குற்றியலுகரம், 'டி' என மாறிவிடுகிறது. ( 'டி' = ட்+ இ ) என 1/2 மாத்திரையில் ஒலிக்கும் இந்த 'டி' குற்றியலிகரம் ஆகும்.

மேலும் சில உதாரணங்கள் : பாடு + யாது = பாடியாது, கொக்கு + யாது = கொக்கியாது.

தற்போது குற்றியலிகரச் சொற்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.

நீங்கள் குற்றியலிகரச் சொற்களுக்கு உதாரணம் முயற்சி செய்து பாருங்கள்.

சார்பு எழுத்தில் 'ஆய்த'திற்கான உதாரணங்கள் : எஃகு, அஃது, இஃது.

'எஃகு' என்னும் சொல்லில் 'கு' 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும்...

நாசக்கார திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில்...



இயற்கை வாழ்வியல்முறை.. எளிய இய‌ற்கை மருத்துவக் குறிப்புகள்...


பொன்மேனி தரும் குப்பைமேனி...

குப்பைமேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவரகுண மாகும்.

தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு..

பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

வயிற்றுவலி போக்கும் நறுவலி...

நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும்.

காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை...

சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

தலைபாரம் நீக்கும் கிராம்பு..

கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

காயத்துக்கு காட்டாமணக்கு..

காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

உப்பலுக்கு உப்பிலாங்கொடி...

மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக்காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

குழந்தையை காப்பான் கரிப்பான்...

கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

கடலையும் அடிதடியும்...

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

மயக்கத்துக்கு ஏலம்...

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

புளியிருக்க புண்ணேது?

புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

பால்கட்டுக்கு பாசிப்பயிறு...

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

மயிர்கறுக்க மருதோன்றி...

மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

வாந்தி நீக்கும் நெல்லி...

நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

படர்தாமரைக்கு...

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

பல் ஈறு, வீக்கம், வலிக்கு...

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல்ஈறு, வீக்கம் தீரும்.

மலச்சிக்கலுக்கு...

பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

மூலம் அகல...

ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

முகப்பொலிவிற்கு...

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு...

மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக் காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

கல்லடைப்புக்கு – தாம்பூலம்...

எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

தாய்ப்பால் சுரக்க கீரை...

கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலை யில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

அரையாப்பு தீர...

எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை...

புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

கர்ப்பிணிகளுக்கு குடிநீர்...

கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லி வற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

பசி உண்டாக...

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

இருமலுக்கு தேனூறல்...

5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

வெள்ளை தீர்க்கும் புங்கன்...

புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

அரையாப்புக்கு அரிசிக் களிம்பு...

முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

துத்தி டீ...

துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி...

மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

நீர்த்துவார எரிவு தீர...

வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

அஜீரண பேதிக்கு...

மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

உடல் இளைத்தவருக்கு...

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

இரத்த கடுப்புக்கு...

மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்த கடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

வெளுத்த மயிர் கறுக்க...

கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

தொண்டை கம்மல் தீர...

கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

வண்டு கடிக்கு...

வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

சூட்டுக்குத் தைலம்...

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைல பதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

கிருமிகள் விழ...

வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மை போலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடு க்க கிருமிகள் வந்துவிடும்.

மூலம் தீர்க்கும் ஆவாரை...

ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

மூலத்திற்கு வேது...

இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

ஈளை தீர்க்கும் இம்பூரல்...

இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

கைநடுக்கம் தீர...

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

இருமல் தீர...

இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால் மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

காதில் சீழ் வருதல் தீர...

இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

தொண்டை புண்ணிற்கு....

நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண் டைக்குழியில் தடவ தீரும்.

தலைவலிக்கு...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலை வலி தீரும்.

சீதபேதிக்கு...

நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

யானைக்கால் வீக்கம் வடிய...

முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

விக்கல் தீர்க்கும் இந்துப்பு...

இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

புண்கள் ஆற...

தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

முடி உதிர்வதை தவிர்க்க...

நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

கட்டிகள் உடைய...

சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

அண்ட வாத கட்டு...

பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

கண் பூ குணமாக...

சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

இரத்த மூத்திரத்திற்கு...

மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

இரத்த மூலம் குணமாக...

வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

அசீரணம் குணமாக...

கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

வேர்க்குரு நீங்க...

சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

தேக ஊறலுக்கு...

கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

சூட்டிருமலுக்கு...

சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

நெருப்பு சுட்ட புண்ணிற்கு...

வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

நீர்க்கடுப்பு எரிவு தீர...

எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

சகல விஷத்திற்கும் நசியம்...

குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்...

கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வர வும்.

பால் உண்டாக...

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு...

ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காய வைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

உடல் வலுவுண்டாக...

சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி...

மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

தேமல் மறைய...

கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

வாயு கலைய...

வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

பாலுண்ணி மறைய...

சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணிமீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

தொண்டை நோய்க்கு...

கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

பெளத்திரம் நீங்க...

குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

தீச்சுட்ட புண்களுக்கு...

வேப்பங்கொழுந்தைச் சிதைத்து ஆமணக் கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண் மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

தேக பலமுண்டாக...

நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

படைகளுக்கு...

பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

கண்ணோய் தீர...

வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

கற்றாழை நாற்றத்திற்கு...

கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட் கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

சேற்று புண்ணிற்கு...

மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

நகச்சுற்று குணமாக...

வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

முகப்பரு குணமாக...

சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

புழுவெட்டு குணமாக...

அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

பொடுகு குணமாக...

வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்கு த்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

தழும்பு மறைய...

வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

பால் சுரக்க...

பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக் கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

தண்ணீர் தெளிய...

தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

கண் நீர் கோர்த்தல் தணிய...

மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத் துண்டை நனைத்து நிழலி லுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண் வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

புகையிலை நஞ்சுக்கு...

வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

குடிவெறியின் பற்று நீங்க...

மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

நீரிழிவு நீங்க...

தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடி த்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க...

அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

வீக்கத்திற்கு ஒற்றடம்...

நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

மூட்டுப் பூச்சிகள் அகல...

ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்...

பணம் தருகிறேன் என்று கூறியும் விவசாயம் செய்யும் நிலத்தை கொடுக்க முன்வராதவன் தான் விவசாயி அது அவனுக்கு இடம் மட்டும் இல்லை அவனது சாமி அந்த நிலம்...


குரளிகளால் கொங்கும் அழியுமா?


எட்டுவழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழக அமைச்சர் ஒருவர் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை எந்த எதிர்புமின்றி போடப்பட்டால், இத்திட்டம் கோவை வரை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது எதிர்பார்த்த நிகழ்வு தான்.

சேலம் - அரியானூர் வரை வரும் எட்டுவழிச்சாலை முழு கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் பின் தொடர்ந்து கோவையில் முடிப்பதே  ஆட்சியாளர்களின் முழு திட்டம்.

மக்கள் எதிர்பை மட்டுப்படுத்தவும்,
வட தமிழக மக்களும், கொங்கு பகுதி மக்களும் ஒருசேர இணைந்து போராட்டத்தை பெரியஅளவில் நடத்தி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் பாதித்திட்டத்தை மட்டும் வெளிபடுத்தி உள்ளதாக தெரிகிறது.

மக்களை பிரித்தாண்டு  எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்தை நிறையேற்றிக் கொள்வதில்
ஆட்சியாளர்கள் வெகுமுனைப்பாக உள்ளனர்.

சென்னை, -சேலம் சாலைப்பணிகள்  முடிவடைந்தால் அடுத்து இச்சாலை  நாமக்கல், ஈரோடு, திருப்பூர், வழியாக கோவையின் மேட்டுப்பாளையத்தை வந்தடையலாம்.

கிழக்கு தொடர்ச்சி மலையின் கனிம வளங்கள் மொத்தத்தையும் கொள்ளையிட இச்சாலை மொத்த கிழக்குத் தொடர்ச்சி மலையையும் ஒட்டியே போடப்பட இருக்கிறது,

கொங்கு மக்கள் இனியும் விழித்துக் கொள்ளவில்லையானால் மஞ்சள் வயல்களிலும், கரும்பு தோட்டங்களிலும் எட்டுவழிச்சாலை நீளமாக சொல்வதை ஓரமாக நின்று பார்க்கத்தான் முடியும்.

முதல்வர் கொங்குப்பகுதியை சேர்ந்தவர் என்ற நம்பிக்கையில் இருப்பீர்களேயானால் நடுவீதியில் நிற்பது உறுதி.

விழித்துக்கொள் கொங்கு மண்டலமே...

ஹிட்லர் பொன்மொழிகள்...



இந்த சட்டம் உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதனுடன் சண்டைப் போடாதே...

அந்த சட்டத்தை பயன்படுத்தி அதிகாரத்தில் ஏறி அமர்ந்து அந்த சட்டத்தை கிழித்தெறிந்துவிட்டு உன் சட்டத்தை எழுது...

மக்கள் தங்கள் ஒருமித்த சிந்தனைகளில் ஒன்றிணைய கூடாது என்பதற்காக, உருவாக்கப்பட்ட பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சிகளே.. கட்சிகளும், இயக்கங்களும், தலைவர்களும்...



அசுத்தமான நீரை பருகுவதால் கிட்னி பழுதடையும் அதனால் WATER PURIFIER வாங்கி சுத்திகரிச்சு குடிங்க.. னு ஒரு விளம்பரம்...


நாசமா போறவைங்களா கிட்னியோட வேலையே அதை சுத்தம் பண்றது தானடா...

தமிழகத்தின் பல கிராமங்களில் தேத்தான் கொட்டையையும் சவரக்கல்லையும் வச்சு தான் சுத்தம் செஞ்சு குடிக்கிறாங்க... அந்த அளவுக்கு தண்ணி பஞ்சம் சேற்றுத்தண்ணிய விட மோசமான தண்ணி...

தந்தி டிவி நீரும் நிலமும் னு பத்து நிமிட காணொளி மதியம் போல போடுவான் பாருங்க... நாய்ங்களா.. இங்க சிலதுகள்...

கிணத்துத்தண்ணிய நம்பாம போலிஸ் காரன் இலவசமா தா்ற குப்பை தண்ணிக்கு காவல் கிடக்குதுக..

எவன் எதை சொன்னாலும் அப்படியே நம்பி தொலையிறது...

எதோ 50 வருசமா தான் தண்ணி இருக்குற மாதிரி...

சொல்புத்தியும் இல்ல சுயபுத்தியும் இல்ல ...

இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை...


தூத்துக்குடி வழக்கறிஞர்களை குறி வைக்கும் காவல்துறை - எச்சரிக்கை...


அமெரிக்கா அழிவு ஆரம்பம்...


LEFT: June 1942. Girl in the Red Coat and Shoes. Separated from her mother who was detained in the liquidation of the Kraków ghetto. As the law of the land required. (From “Schindler’s List”) This girl was traumatized and eventually murdered. As the law required. With millions like her.

RIGHT: June 2018. Girl in the Red Jacket and Shoes. Separated from her mother who was detained trying to escape violence and poverty in Honduras. As the law of the land requires. (Photographed in McAllen, Texas)...

போராடுனாலும் சாவு போராடலனாலும் சாவு...


கண் முன்னே நம் நிலம் தோண்டப்படுவது சாலைக்காக அல்ல... சவக்குழிக்காக...

வேண்டாம் 8 வழிச்சாலை... ஒன்றுசேருங்கள்...

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...