23/06/2018

கலிபோர்னியாவில் பேய் சுறா….


எங்களுக்கெல்லாம் சுறா தெரியும், அது என்ன பேய்சுறா அப்படின்னு கேட்கிறீங்களா?

அதாங்க எனக்கும் புரியல. சரி வாங்க என்னன்னு பார்ப்போம்..

அதாவது சமீபத்தில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நடந்த ஒரு ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் ஒரு அரிய வகை சுறா மீன் கண்டுபிடிக்கப் பட்டது.

இந்த வகை மீன்கள் 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அது என்ன பேய் சுறான்னு ஒரு பேரு?

பேய் மாதிரி வெள்ளையா, ஆவியா இருக்குமா இந்த மீனு அப்படின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்லனும்.

ஆமாங்க இந்த மீனுக்கு ஆங்கிலத்தில் “கோஸ்ட் ஷார்க்”(Ghost shark) என்பது பெயர். அதை அப்படியே தமிழாக்கம் செய்தால் அது பேய் சுறா ஆகி விடுகிறதே தவிர நாம் நினைப்பது போல பேய் போல இருக்காது இந்த மீன்.

ஹைட்ரோலாகஸ் மெலனோஃப்பாஸ்மா (Hydrolagus melanophasma)எனும் அறிவியல் பெயர் கொண்டது இந்த மீன்.

“கைமெரா” (chimaera) எனப்படும் இந்த வகை அரிய/புதிய மீன்கள் பொதுவாக மக்கள் இல்லாத, மிகவும் வித்தியாசமான பகுதிகளிலேயே கண்டிபிடிக்கப்படுவது வழக்கம்.

கைமெரா என்றால் இரு உருவங்கள் அல்லது உயிரினங்களில் கலவை என்பது பொருள்.

இந்த வகை கைமெரா மீன்கள், எலிமீன், முயல்மீன் என பலவகை பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இவை இக்காலங்களில் வாழும் மீன்களிலேயே மிகவும் பழமையானதும், புதிரானதும்கூட என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் இந்த வகை மீன்கள் எந்தவித பரிணாம மாற்றங்களேதுமின்றி டைனோசார் காலங்களிலும் வாழ்ந்து, இன்றுவரை அதேபோன்று உடலமைப்பு, வாழ்வு முறை போன்றவற்றோடு வாழ்கின்றன.

இவை, ஆழ்கடல்களிலேயே வாழ்கின்றன. இதனால் மனித ஆராய்ச்சிக்கு இதுவரை தென்படவில்லை என்கின்றனர்.

இதைக் கண்டுபிடித்தது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்..

கீழே இருக்கிற புகைப்படத்தைப் பாருங்க உண்மையாகவே பேய் மாதிரி இருக்கிறதா இந்த பேய் சுறா என்று?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.