15/12/2017

ஆய்வு செய்கின்றேன் என்ற பெயரில் நான் குளிப்பதை ஆளுனர் அப்படியே பார்த்து விட்டார் - கடலூரில் பெண் பரபரப்பு புகார்...


ஆளுனர் இன்று கடலூர் வண்டிப்பாளையத்தில் அம்பேத்கார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கழிவறையை ஆய்வு செய்கின்றேன் எனக் கூறி  வீட்டிற்குள் திடீர் என நுழைந்ததாகவும், அப்பொழுது கீற்று மறைப்பில் பெண் குளித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் பெண் தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குளித்துக் கொண்டிருந்த நிலையில் உள்ள நுழைந்த ஆளுனரை பார்த்ததும் பெண் அலறி அடித்தததில் அக்கம் பக்கத்தினர் வந்து அந்த பெண்ணிற்கு ஆடைகளை வழங்கி அழைத்த சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை...

தமிழக ஆளுநர் பாக்குற வேலையாடா இது...




ராஜஸ்தான் போலீசே அந்த ஊருக்குள் போக பயந்த இடம் தமிழ்நாடு போலீஸ் தைரியமாக உள்ளே சென்றதாக தகவல்...


வீரத்தோட தான் தமிழன் சாவான்.. நல்ல காவல் அதிகாரியை எங்கள் தேசம் இழந்து விட்டது...

திருவொற்றியூரில் கீழே கண்டெடுத்த ரூ.21 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த 9ம் வகுப்பு மாணவனை போலீசார், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்...


இலுமினாட்டி வீழ்ச்சியை கண்டறிய?


இசைப்பாடும் தும்பி...


கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்யாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப் பூம்பந்தர்..

இப்பாடலடிகள் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை எனும் நூலில் உள்ளன. வண்டினுள் உயர்ந்த சாதியாகிய தும்பி என்னும் வண்டு குழலூத, வண்டினம் யாழ் இசைக்க, குயில் பாடலைப் பாட, மயில் ஆடுகின்ற சோலை என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வடிகள் சோலைக் காட்சியைச் சித்தரிப்பனவாகும். ஆனால், குறிப்பாக இசை தோன்றிய வகையையும், இசைக்கருவி தோன்றிய முறையினையும் உணர்த்துகின்றன. குயிலின் இனிய குரலைக்கேட்டு மனிதன் இசை இசைக்கத் தொடங்கினான் என்ற கருத்தை, “குயில் பாட” என்பது தெளிய வைக்கின்றது. ஆதியில் குயில் பாடியதைக் கேட்டு மனிதன் பாடினான். அதனையே மரபாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஈண்டு இவ்வாறு கூறியுள்ளார் என்பது விளங்கும்.

மலையிடை நின்ற மூங்கிலில் வண்டுகள் துளைத்தத் துளைகளினின்று வெளிப்பட்ட இனிய ஓசையைக் கேட்டே, மனிதன் துளைக்கருவியாகிய குழல் தயாரித்தான் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் சாத்தனார் இவ்வாறு கூறினார் என்பது தெளிவாகும்...

அரசுகள் அம்பலம் - 3...


வங்கி - FRDI யோட இன்னொரு முகம் - 3...


இதுவும் Demonetization மாதிரி தோல்வி ஆனால் சாமானியனோட பணத்துக்கு பாதுகாப்பு என்ன?

http://zeenews.india.com/economy/financial-resolution-and-deposit-insurance-bill-2017-all-you-need-to-know-2063799.html/amp

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு...


மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று தகவல்..

இடிபாடுகளை அகற்றும் பணியில்  மீட்புக்குழுவினர் தீவிரம்...

அரசுகள் அம்பலம் - 2...


அடுத்த அரசுகள் அம்பலத்தில் இந்தியா...

இந்த மசோதா வை அடுத்த கூட்ட தொடரில் (Dec-15) எப்போது வேனாலும் அமல் படுத்தலாம் - 2...


திருநீறு அணிவது ஏன் ?


நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது.

இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது.

பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு.

விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்...

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.

ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது...

அடுத்தடுத்த தொடரில் இதைப் பற்றி விரிவாக சொல்றோம் -1...


அரசுகள் அம்பலம் - 1...


இது உலக அரசியலின் சிறு அங்கமே.. மேலும் காண்போம்...

இசை அறிவியல்...


மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா?

உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் எமது உடலுக்குள் நடைபெறும்போது எமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது.

உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் எமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம்.

ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் எமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

இதே போன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும்.

அத்துடன் எமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…?

நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விடவில்லை.

போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது எமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக எமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது.

பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர்.

ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான்.

72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம்.

உதாரணத்திற்கு அம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன...

அதிமுக இபிஎஸ்&ஓபிஎஸ் க்கு ஆப்பு..


நமக்கான அரசியல் வெற்றி எங்கு தடைபடுகிறது..?


பிரணாயாமம்...



பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்...

அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்.

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்.

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன.

சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.

புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.

தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.

நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம்.

இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்.

மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.

கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும். 

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது...

வானுயர்ந்த கட்டிடம் என்றால் அதில் அனைத்தும் அடங்கும்...


இந்தியாவிற்கு அரசியலமைப்பு சட்ட படி தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று தகவல் சட்டம் மூலம் தகவல்...


தியானத்தின் நன்மைகள்...


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள்.

உடலளவில் ஏற்படும் நன்மைகள்...

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன...

உளவியல் உண்மைகள்...



உங்கள் மூளையை திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறுவதன் மூலம் ஒற்றுக் கொள்ள வைக்க முடியுமாம்...

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்...


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

அதன் பலன்களை இங்கே பார்ப்போம்...

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்...

தவம்...



விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டால்...

மற்றவைகளுடைய எண்ண அலைகள் நமக்கு தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்..

உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பனவாக இருந்தாலும்..

அவை நம்மை பாதிக்காது..

உதாரணமாக ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள் உண்டு என்றாலும் எதை நாம் தேர்ந்து எடுக்கின்றோமோ அவை மட்டுமே நமக்கு கேட்கும்.

மற்ற அலைவரிசைகள் வந்து மோதும் , ஆனால் நமக்கு கேட்காது அது போல நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நினைப்போம்.

நாம் எங்கு போனாலும் நமக்காக மற்றவர் தானாக அந்த அலைவரிசையில் கட்டுப் பட்டு நம் மதிப்பை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள்.

எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது தடை ஏற்பட்டாலும் அது நமக்கு கெடுதல் இல்லை நம்மை திருப்பி விடுவதனால் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது.

எந்த நேரத்தில், எந்த காலத்தில், எந்த சூழ்நிலையில் நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.

உலகில் எந்த இடத்திலாவது நம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் நேரமும் வரும் அது தானாக நடந்து விடும்.

எனவே நல்ல சிந்தனைகளையே மனதில் வளர்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும். நாம் நினைப்பது தான் நடக்கும்...

இன்றைய கால சாமியார்கள் போலிகளே.. எல்லாம் சுய லாபத்திற்காகவே...


அகோரிகள் என்பவர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் எளிதாக...

உளவியலில் இருந்து.. மனநோய் அறிகுறிகள்..


பொதுவாக பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்துதான் மனநோய்யை உன்டாக்குகிறது..

மனநோயின் அறிகுறிகள்...

மனச்சோர்வு,
அர்த்தமற்ற புரியாத பயங்கள்,
தாழ்வு மனப்பான்மை,
குற்ற உணர்ச்சிகள்,
தற்கொலை எண்ணங்கள்,
தன்னம்பிக்கையின்மை,
வாழ்க்கையில் பிடிப்பின்மை,
பதட்டமான மனநிலை,
பிரம்மைகள்,
காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள்,
இல்லாத உருவங்கள்,
அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல்,
வேலை, கல்வியில் ஈடுபாடின்மை.

மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள். தோன்றும் மனநோய் அறிகுறிகள்.

அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex, Lesbian-sex, இதெல்லாம் இருக்கும்.

கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல்.

பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன.

உதாரணமாக..

திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம்..

அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும் போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது...

முதல் இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவர்..


ஈ.வெ.ரா.பெரியாரா?
சோமசுந்தர பாரதியாரா?

10.8.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவிப்பு.

27.8.1937இல் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் உமா மகேசுவரனார் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

29.8.1937இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்பு சங்கம் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

5.9.1937இல் சென்னை செளந்தர்ய மண்டபத்தில்  முதல் இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் தலைமையேற்று சோம சுந்தர பாரதியார் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்.

4.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாபெரும் கண்டனக் கூட்டம். சோமசுந்தர பாரதியார் இதில் பங்கேற்பு.

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு. இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் தான் ஈ.வெ.ராமசாமி பெரியார் முதன் முறையாக பங்கேற்பு.

21.4.1938இல் மீண்டும் முதல்வர் இராசாசி கட்டாய இந்திப் பாடம் நடைமுறைக்கு வரும் என்று ஆணை பிறப்பிப்பு.

28.5.1938இல் திருச்சியில் மந்திராலோசனைக் கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார் சட்டமறுப்பு இயக்கம் தொடங்க வேண்டுகோள். உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதமும், உறுப்பினர்களாக உமா மகேசுவரனார், செளந்தர பாண்டியனார், ஈ.வெ.ரா. பெரியார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு.

இந்தி எதிர்ப்பு வாரியம் சோமசுந்தர பாரதியாரின் வழி காட்டுதலில் இராசாசி வீடு முற்றுகை, சட்ட மன்ற முற்றுகை என்று பல்வேறு தளங்களில் போராட்டம் வீறு கொண்டது.

இந்தி எதிர்ப்புப் போரில் மறியல் செய்து சிறை சென்ற சர்வாதிகாரிகள் பதிமூன்று பேர். இந்தப் பட்டியலில் பெரியார் பெயர் இல்லை.

13.11.38இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, 14.11.38இல் பெத்து நாயக்கன் பேட்டை கூட்டம் ஆகிய இடங்களில் பெரியார் அரசுக்கு எதிராக பேசியதாக போடப்பட்ட அவதூறு வழக்கில் தான் பெரியார் 5.12.1938 அன்று கைது செய்யப்பட்டார்.

தமிழறிஞர் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போரில் இடையில் புகுந்து  பெரியார் தலைவரான கதை இது தான் என்பதை எத்தனை தமிழர் அறிவாரோ?

தமிழினமே விழித்துக் கொள்.. இல்லை என்றால் கண்டிப்பாக இது எல்லாம் நடக்கும்...


மீத்தேன் எடுக்கிறேன் என்ற பெயரில் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதி மக்கள் பலலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை விட்டு துரத்தப்பட்டால் நடைபெற போவது என்ன?

தஞ்சையை சுற்றி உள்ள மாவட்டங்களின் நில மதிப்பு தானகவே உயரும்...

அரசு தரும் வழிகாட்டி மதிப்பு தொகையை வைத்துக் கொண்டு. நிலத்தை இழந்த விவசாயியால் ஒரு வீட்டுமனைக்கூட வாங்க முடியாமல் போகும்.

இருக்கும் வீடுகளின் வாடகைகளும் தாறுமாறாய் ஏறும்.

அதிகப்படியான மக்கள் நகரத்தை நோக்கி நகர்வதால்.. குறைந்த பட்ச கூலியானது அதளபாதாளத்திற்கு செல்லும்.

தன் சொந்த ஊரில், நூறுவீட்டார நம்பி மளிகைக்கடை வைத்திருந்தவர்.. அகதியாய் வந்த இடத்தில் வாய்பில்லாமல் கூலியாவார்.

பத்து ஆட்டை மேய்த்து வாழ்ந்து வந்தவர் வாய்பின்றி முடக்கப்படுவார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி  காலம் கடத்தியவர்.. நகரத்தில் நாட்களை நகர்த்த முடியுமா.

வேலி பிரண்டையில் செலவில்லாமல் சோறு திண்றவன் கேரட்டுக்கும், பீன்சுக்கும் எவ்வளவு செலவளிப்பான்.

களை பறித்து கஞ்சிக் குடித்த எம்மக்கள்
நகரத்தில் எதை பறித்து பிழைப்பு நடத்துவார்கள்.

பள்ளி சென்ற குழந்தைகளோ, பணத்தட்டுப்பாட்டாலும்.. நகரங்களின் கல்வி கொள்ளையாலும் படிப்பை கைவிட வேண்டி வரும்.

இருக்கும் பணம் தீர்ந்தவுடன்.. குடும்பம் வேலைத்தேடி திசைக்கு ஒன்றாக உடையும்.

தட்டிக்கேட்ட ஆளில்லாமல் தலைவனும் தலைவியும் தடம் மாறும் சீர்குழையும் நடக்கலாம்.

வேலையற்ற இளைஞர்களால் கொள்ளையும் கொலையும் பெருகலாம்.

அப்பன் அருகில் இல்லா காரணத்தால்
மகன் குடிக்கும், கூத்துக்கும் ஆட்படும் ஆபத்து இருக்கிறது...

வாழ்நிலம் அதுவே வாழ்ந்த, வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம்..

நிலத்தை இழந்தால் சுகத்தை இழப்போம்....

ஹைட்ரோ கார்பனை தமிழ் நிலத்தில் இருந்து விரட்டுவோம்....

பற்கள் கூச்சம்...


புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்..

அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்...