04/01/2018
இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது...
அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை.
ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு...
எனவே,
ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று. இது தான் நிலையான தீர்வாக இருக்கும்..
இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான்.
வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை.
அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான்.
அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள்.
இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்..
தாய்மொழியை வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்..
அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சத் தேவையில்லை...
ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்...
திமுக ஸ்டாலினும் தமிழின அழிப்பும்...
கடந்த 2009ல் துணை முதல்வராக இருக்கும் போது தான் ஒன்றறை லட்சம் தமிழர்களை ஈழத்தில் ராஜபக்சேக்கு ஆதரவாக காங்கிரசுடன் சேர்ந்து கொலை செய்தவர்..
அதன்பிறகு அவரது தங்கை கனிமொழியை ராஜபக்சேவிடம் அனுப்பி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தவர்..
தமிழகத்தையும் தமிழனையும் அழிக்க மீத்தேன், கெயில், திட்டத்தை கொண்டு வந்தவர்...
தமிழினத்தின் பண்பாட்டை அழிக்க காங்கிரசுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டை தடை செய்தவர்...
இவருக்கு என்ன தகுதியிருக்கிறது தமிழகதின் முதல்வராக?
திமுக வின் துரோகங்களை மறக்கவும் மாட்டோம்... மண்ணிக்கவும் மாட்டோம்...
திமுக வை இனி தமிழகத்தை ஆளவும் விட மாட்டோம்...
தமிழனுக்கு என்ன செய்தாய் என்று கேட்பவர்களுக்கு ரஜினியின் நெத்தியடி பதில்...
இதற்கு மேல என்ன செய்ய முடியும்?
தமிழனுக்கு என்ன செய்தாய் என்று கேட்கும் மூட்டாள்களுக்கு ரஜினியின் நெத்தியடி பதில்.. வாயடைத்துப்போன தலைவர்கள்...
சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா, கர்நாடகக்காரன், தமிழின விரோதி’ தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே..
ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்…
1) தன் சொத்து முழுவதும் தமிழர்களுக்கே என்று 25 வருடதற்கு முன்பு சொன்னது போல.. முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்து விட்டார். மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.
2) சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு..
3) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடியை தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு..
4) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு..
5) பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணியாற்றியாச்சு..
6) லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு..
இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க…?
தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா?
இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?
அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா?
போதாதுன்னா சொல்லுங்கள்.. அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறறோம்.
அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீங்களா நீங்க?
மூட்டு வலிக்கு நாட்டு மருந்து...
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால் தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.
மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டழற்சியின் அறிகுறிகள்: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்...
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்...
ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)...
மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்...
இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்..
தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும்.. நெல்லூரில் ஒரு துண்டையும்..
தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன...
இயற்கை மீட்சி பெற காடுகள் உருவாக முறையான வழி...
நம்மை சுற்றி இருக்கும் அனைத்தையும் நம் கண்களில் வழியே கல், மரம், மண், விலங்கு, பொருள் என ஒவ்வொரு பரிமாணத்தில் பார்க்கிறோம்.
இதை உயிருள்ளவை, உயிரற்றவை என பிரித்து வைத்து உள்ளோம்.
அனால் இங்கு அனைத்தும் ஒரே பரிமாணத்தில் தான் உள்ளன. அவை அதிர்வலை என்னும் பரிமாணத்தில், நாமும் அதிர்வலைகளாகவே உள்ளோம், ஆனால் நொடிக்கு நொடி நம் வெவ்வேறு அலைகளை உண்டாக்குகிறோம் நம் புலன்கள் உணர்வதற்கு தகுந்தாற்போல்.
ஒரு கோணத்தில் சொல்ல வேண்டுமெனில் இங்கு அதிர்வலைகளை மட்டுமே உள்ளது.
இதையெல்லாம் எதற்க்காக சொல்கிறேன் எனில் நம் நிலை என்னவென்றே தெரியாமல் சிலர் ஊதும் புல்லாங்குழல் அதிர்வலை பின்பு செல்லும் எலிகளாகவே உள்ளோம்.
இந்த அடிமை ஓட்டத்தில் இருந்து விடுபட இயற்கையை மீட்சி செய்யவேண்டும், காடுகளை உருவாக்க வேண்டும்.
அதற்கு முதலில் அதிர்வலைகளான நம்மை நம் அலைவரிசையை ஒழுங்குப்படுத்தும் நுட்பம் அறிய வேண்டும்...
காலையில் தூங்கி எழுந்திருக்கும் போதும் இரவில் உறங்க போகும் போதும் உங்கள் இரு உள்ளங்கைகளை ஒன்று சேர்த்தால் பிறை போன்று ரேகை தெரியும் (heart line) இந்த ரேகைதான் நம் இதய அதிர்வை ஒருங்கிணைக்கும் இடம் இதை பார்த்து மனதார இயற்கை மீட்சி பெற வேண்டும் காடுகள் உருவாக வேண்டும் என நினையுங்கள்.
இதன் மூலம் இதய அதிர்வை ஏற்படுத்தும் போது உங்கள் சிந்தைனையும் அப்படியே அதிர்வலைகளை ஏற்படுத்தும் சுருக்கமாக சொல்ல போனால் நீங்கள் அதுவாகவே அதிர்விர்கள். இதை ஒவ்வொருவரும் செய்யும்போது ஒரே மாதிரியான மிகவலிமையான அதிர்வலை சுழற்சி ஏற்ப்படும்.
நீங்கள் தினமும் காலையிலும், இரவிலும் இதை செய்யும் பொழுது அது சுழற்சி முறையில் உயிர்பித்து கொண்டே இருக்கும்.
இதை மட்டுமே செய்யுங்கள் நிச்சயம் காடுகள் உருவாகும் மிக விரைவில் வணிகம் முற்றிலும் ஒழியும்.
இன்று முழுநிலவுநாள் இதை அனைவரும் இன்று இரவு சரியாக 8 மணி அளவில் செய்வோம்..
நிச்சயமாக இதை மட்டுமே நினைக்க வேண்டும் உள்ளங்கைகளை சேர்த்து இதய ரேகையை பார்த்து இயற்கை மீட்சி பெற வேண்டும் காடுகள் உருவாக வேண்டும்.
காடுகளையும் இயற்கையும் மீட்டேடுப்போம்..
முடிந்த வரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்......
இது பாஜக விதைத்த வினை...
சாதிக் கலவரங்களால் மராட்டியம் எரிந்து கொண்டிருக்கிறது.
ஏன் எரிகிறது?
இது பாஜக கற்றுக் கொடுத்த இனவாத, சாதிவாத அரசியலின் விளைவு.
வரலாற்றில் எப்போதோ நடந்த வெற்றி- தோல்வி நிகழ்வுகளை எல்லாம் இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வது பாஜகவின் வழிமுறை. தந்திரம்.
இந்திய வரலாற்றில்
ஏதோ ஒரு கால கட்டத்தில்
ஏதோ ஒரு ராஜபுத்திர மன்னன்
ஏதேனும் ஒரு முஸ்லிம் அரசனை
ஏதோ ஒரு போர்க் களத்தில்
வென்றிருப்பான் அல்லது கொன்றிருப்பான். அது நடந்து பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.
ஆனால் அந்த ராஜபுத்திர மன்னனின் வெற்றியை ஏதோ இந்துக்களின் வெற்றி என்பதுபோல் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து, அதற்கு விழா எடுத்துக் கொண்டாடுவது எல்லாம் பாஜகவின் ஸ்டைல்.
மராட்டிய மாநிலத்திலுள்ள தலித்துகள் பாஜகவின் இந்த வழியை அப்படியே தாங்களும் பின்பற்றப் போக வெடித்தது கலவரம்..
கலவரத்துக்குப் பின்னணி என்ன?
200 ஆண்டுகளுக்கு முன்பு புனே மாவட்டத்தில் பேஷ்வாக்கள் எனும் உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்திருக்கிறது. அப்போது நடைபெற்ற ஒரு போரில், பிரிட்டிஷ் படையில் இருந்த மஹார் எனும் தலித்துகள் வீரத்துடன் போராடி பேஷ்வாக்களின் கொட்டத்தை அடக்கி, வெற்றி பெற்றார்களாம்..
அதனுடைய 200ஆவது வெற்றி தினத்தை இன்று கொண்டாடுகிறார்களாம்..
பாஜகவின் அரசியல் உத்திதான் இது என்றாலும்..
தலித்துகளின் வெற்றி தினக் கொண்டாட்டத்தைக் கடுமையாக எதிர்த்துக் களத்தில் இறங்கிய இந்துத்துவ சக்திகள் தலித்துகளின் மீது தாக்குதல் தொடுக்க...
வெடித்தது கலவரம்...
இது பாஜக விதைத்த வினை...
பாஜக, ஆர்.எஸ்.எஸ்யின் கைக்கூலி ரஜினி ரகசிய கூட்டணி அம்பலம்...
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் அசாதரான சூழ்நிலை உருவாகியிருந்தது அதை பயன்படுத்தி தமிழகத்தை வடமாநிலம் போல் கலவரத்தை உண்டாக்கி பாஜகவை வளர்த்து எடுத்திரலாம் என்ற நோக்கத்தில், தமிழகத்தில் பாஜக தனது கள்ள வேலைகளை செய்ய ஆரம்பித்தது அதன் தொடர்ச்சியாக சிபிஐ , வருமானவரித்துறை, போன்ற துறைகளை கையில் வைத்துக்கொண்டு பூச்சாண்டி வேலைகளை காட்டிவந்தது..
இதில் தமிழக மங்குனி அமைச்சர்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தில் அனைத்து உழல்வாதி அமைச்சர்களும் டெல்லிக்கு போய் சரணடைந்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல் தமிழகத்தின் மானத்தை டெல்லில் போய் அடகு வைத்து விட்டார்கள். இதை தொடர்ந்து மத்திய மதவெறி அரசு, தமிழகத்தில் இவர்களை வைத்து தனது ஆட்டத்தை தொடங்கியது.
அந்த நாளிலிருந்து தமிழகத்தில் பாஜகவின் முகமூடி ஆட்சிதான் நடந்து வருகிறது , என்னதான் மறைமுக ஆட்சி நடத்தி வந்தாலும் , மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை..
பாஜகவின் முகமூடி ஆட்சி தமிழகத்தில் நடப்பது அனைத்து பாமர மக்களும் அறிந்ததை.. இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் சமீபத்தில் நடந்து முடிந்த RK நகர் தேர்தலை பயன்படுத்தினார்கள் அதன் முடிவுதான் தேர்தலிலும் பிரதிபலித்தது, அதிமுக மண்ணை கவ்வியது மாற்று பாஜக நோட்டவை விட குறைந்த வாக்குகள் எடுத்து படுதோல்வி அடைந்தது.
இதில் அதிர்ந்து போன பாஜக, தற்போது தனது மற்றும் ஒரு கைக்கூலியான ரஜினியை வைத்து தற்போது தமிழகத்தில் காலுண்ட பார்க்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தற்போது ரஜினியின் அரசியல் வருகை.
இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ரஜினியின் அரசியல் வருகைக்கு இவர்கள் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் "ஊடகம்" , இந்த நக்கி பிழைக்கும் விபச்சார ஊடங்கங்கள் தான் தற்போது ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது..
எப்படி மோடி என்ற முட்டாளை பெரிதாக காட்டினார்களோ அதேபோன்று... அதாவது ரஜினி வந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் போன்ற ஒரு மாயயை உருவாக்கி வைத்துள்ளது இந்த ஊடகங்கள். இதற்கு பல்லாயிரம் கோடிகள் ஊடகங்களுக்கு கைமாறியுள்ளது..
குறிப்பாக : தந்தி டிவி, புதிய தலைமுறை , times now , cnn , நியூஸ் 7 தமிழ் போன்ற பிரதான டிவி சேனல்கள் தல ஐம்பது கோடிகளுக்கு மேல் வாங்கி உள்ளது..
இதுயெல்லாம் ரஜினியின் பணமா என்று கேட்டால் அதுவும் இல்லை. இது எல்லாம் மத்திய பாஜக அரசின் நன்கொடைகள் தான், இது தற்போது மட்டும் நடந்தது அல்ல, இதைப்போல் நடந்து முடிந்த குஜராத் தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும், மாற்று வடமாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் பாஜக இதே யுக்தியை தான் ஊடகங்களை வைத்து பயன்படுத்திதுள்ளது.
இப்படி நக்கி பிழைக்கும் விபச்சார ஊடகங்களை த்த்த்த்துது.. இதைப்போல் தொடர்ந்து நடக்குமேயானால்.. ஊடகங்களின் முகத்திரையை கிழித்தெறிவதை எங்கள் முதல் பணி.
நன்றி - TN-74 gilts...
மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை லஞ்சம்..... வாழ்க தமிழகம்...
சுடுகாட்டில் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்த சடலம்...
மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்பவர். புத்தாண்டு தினத்தன்று மாலை 7 மணி அளவில் ஒத்தக்கடை அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்துக்குள்ளான அன்னலட்சுமியை அவர் வேலை செய்யும் வீடுகளின் உரிமையாளர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரவில் 11 மணியளவில் அன்னலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இறந்த உடலை பார்க்கச் சென்றவர்களிடம் தேவையற்ற காரணங்களைக் கூறி ரூபாய் 1,200 லஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார் பிணவறையில் வேலை செய்யும் மருத்துவமனை ஊழியர்.
மேலும் அன்னலட்சுமியின் உடலைப் பார்க்க வந்த அவரது மருமகனை பார்க்கவிடாமல் செய்துள்ளார் ஊழியர்.
இறுதியாக உடலை வாங்கச் சென்றவர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால், பொறுக்க முடியாத உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஊழியர், அன்னலட்சுமியின் உடலுக்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணின் உடலை வெளியே தள்ளிவிட்டுள்ளார்.
அதை எடுத்துக்கொண்ட உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக சென்றுள்ளனர்.
மயானத்தில் உடலில் கட்டப்பட்டிருந்த துணிகளை எடுத்து பார்த்தபோது அது அன்னலட்சுமியின் உடல் அல்ல என்பது தெரியவந்துள்ளது. பிறகு மீண்டும் அந்த உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர்.
இதேபோல் சென்ற வாரம் ஆணின் உடலுக்குப் பதிலாக பெண் ஒருவரின் உடலை கவனக்குறைவாக அளித்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் இதுபோன்ற கவனக்குறைவான செயல்களில் ஈடுபடுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
புத்தாண்டு தினத்தன்று போரூரில் தங்களது இறுதி சடங்கிற்கு 4 லட்சம் பணத்தை வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதிகள்...
போரூரை அருகே அய்யப்பன்தாங்கலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள். ஒரு மகன் மகள் இருந்துள்ளனர். மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனது. தங்களது இறுதி சடங்கிற்கு 2 லட்சத்திற்காக செக்கை எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...
தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம்... புதிய சாதனைகள் படைப்போம்...
காலத்தை கடந்து நிற்கும் அதிசயங்கள் . இன்றும் இது போன்ற அதிசயங்களை நாம் கட்ட இயலாது.
இவற்றை கட்டியவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு கட்டவில்லை. அவர்கள் தாய் மொழியில் கணிதம், அறிவியல் பயின்று தான் இந்த அழியாத அற்புதங்களை கட்டினர்.
ஆங்கிலம் படித்தால் தான் சாதிக்க முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர் சிலர். மாயையில் விழுந்த மக்களும் அதை நம்பினர்.
உண்மையான சாதனைகள் அவரவர் தாய் மொழியில் படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் ..
அதற்கான சான்றுகள் ஏராளம்.
இன்று தாய் மொழிக் கல்வியை பயிலும் அமெரிக்கர்கள் , பிரித்தானியர்கள் , சீனர்கள் , ஜப்பானியர்கள் உலகத்தை ஆட்டுவிக்கும் அளவிற்கு அறிவியல் சாதனைகள் புரிகின்றனர்..
தமிழர்களோ அறிவுக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்கின்றோம். நாமும் நம் தாய் மொழியில் அனைத்தும் கற்போம் , கற்பிப்போம்...
தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம். புதிய சாதனைகள் படைப்போம்... வாழ்க தமிழ்...
ஓம் எனும் மந்திரத்தின் மகிமை...
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்.
இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.
இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடு தான்.
உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப் புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புத் தான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.
ஓம் தரும் நலன்கள்...
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.
ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.
அகார உகார மகாரங்கள்..
ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை இந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.
வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம்’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.
ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அனில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம்.
1999 மே மாதம் 29ம் தேதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது.
மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.
அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
இப்போதோ அவருக்கு 90 சதவிகிதம் பழைய ஆற்றல் வந்து விட்டது.
அவருக்கு ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர்டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.
மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.
ஓம் பற்றிய முந்தைய ஆராய்ச்சிகள்...
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே மனித உடல் அமைப்பில் இசையின் தாக்கம் பற்றி ஆராய்ந்தார்.
ஆனால் இப்போது தான் மனித உடல் மீது மந்திரத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்படுகிறது.
1993ல் டெல்லஸ் எட் அல் 14 ஆண்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஓம் மந்திரத்தை உச்சரிக்க வைத்து அதன் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இதே ஆய்வுகளை 1996 வரை வெவ்வேறு குழுக்களை வைத்து மேற்கொண்டு ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க அளவில் சுவாசம் மெதுவாக ஆவதோடு இதயத் துடிப்பு மிக மெதுவாக இருப்பதையும் கண்டறிந்தார்.
தகாஷி எடல் என்பவர் 1999ல் மேற்கொண்டஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்.
இதை அடுத்து 2003ல் ஹெய்ஸ்னம் ஜினா தேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இரு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ என்று ஆரம்பித்து ம் என்று முடிக்கும் போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.
இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது..
குர்ஜரின் ஆராய்ச்சி...
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாகக் கொண்ட அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில்..
1) ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2) எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸம் மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸம் அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸம் விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸம் ஆஞ்ஜாவில் (மூன்றாம் கண்) 426.7 ஹெர்ட்ஸம் சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.
நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.
இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.
அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.
அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.
இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய இன்னொருவர் அஜய் பி.தாக்கரே ஆவார்.
இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.
மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன...
Subscribe to:
Posts (Atom)