26/06/2018

நாம் வளர்க்கும் பெரும்பாலான மரத்திற்கான விதை யார் போட்டது...



ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் share it app இருக்கு தங்களின் எண்ணங்களை பரிமாற்றிக்கொள்ளும் வரும் தகவலை வாங்கி பதிந்து வைக்கவும் செய்யும்..

எண்ணங்கள் தான் மூளையின் போக்கை தீர்மானிக்கிறது இந்த மூளை தான் உன் உடல் அசைவகளை தீர்மானம் செய்கிறது..

உன்னால தான் அடுத்தவங்கள எண்ணங்களை recive செய்ய முடியுமே ஒரு வேல நான் கேட்கும் பாடலை உன்னோட mobile la பாடினால் பாடலை recive பண்ணி.. simple உன் மூளையில என் எண்ணங்களை விதைக்க முடிந்தால் உன் மூளை உன் உடல்கள் மூலம் அந்த விதையை மரமாக மாற்றும்..

மூளை ஏற்கனவே வேற மரத்தை வளர்த்தால் கஷ்டம் அதை அழித்து எனது விதையை வளர்க்க ஆனால் மரம் வளர்க்காத ஆள்ட விதை கொடுத்து வளர்க்க வச்சா..

இங்க எத்தன பேரு அப்பவோட ஆசையையோ இல்ல அம்மாவோட ஆசையையோ நிஜமாக்க துடிக்குறாங்க சிலர் அதை உணர்ந்து சிலர் உணராமல்..

இது போக backups எடுத்துவைக்க hard disk வேற இருக்கு அதற்கான காலம் வரட்டும் சொல்லுறேன்...

உலக அரசியல் பாவையில் பிக்பாஸ்.. கற்பனை...




வேற்று கிரகவாசிகள் கடத்தல் சம்பவம்...


கார்லா டர்னர் (Dr. Karla Turner, PhD)...

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வாழ்ந்து வந்த இந்தப் பெண், ஒரு பல்கலைக்கழக பேராசிரியை. 1998ம் ஆண்டு இவர், தனது கணவன், மற்றும் மகன் சகிதம் குடும்பத்தோடு பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகளால் (ஜின்களால்) கடத்தப் பட்டார்.

அந்த நிகழ்வையொட்டி அவரும் அவரது குடும்பமும் உள ரீதியாக அனுபவித்த சித்திரவதைகள் ஏராளம். ஆனால், பிரச்சினையை எதிர்த்து நிற்கும் தனது தைரியத்தை கார்லா கைவிடவில்லை.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து ஓரளவுக்கு மீண்ட பின், தனது கணவனின் முழு ஆதரவோடு கார்லா புதியதொரு பாதயில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தன்னைப் போல் பறக்கும் தட்டுக்குரியோரால் கடத்தப்பட்ட மேலும் பலரை நேரில் சந்தித்து அவர்களது அனுபவங்களையும் தகவல்களாகத் திரட்ட ஆரம்பித்தார்.. அடுத்த கட்டமாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டு, பாலியல் சித்திரவதை உட்பட பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளான, தன்னைப் போன்ற எட்டு பெண்களைத் தேர்ந்தெடுத்து, முறையாக அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

அதே போல் கடத்தப்பட்ட ஆண்களிலும் சிலரை வேறாக எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினார்.

நீண்ட கால ஆய்வுகளுக்குப் பிறகு, தான் திரட்டிய உண்மைகளையும், அவற்றின் மூலம் தான் கண்டறிந்த அதிர்ச்சியூட்டும் பல இரகசிய உண்மைகளையும் தொகுத்து, இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அடிக்கடி உருமாறக் கூடிய ஆற்றல் கொண்ட இந்த வேற்றுக் கிரகவாசி (ஜின்) இனத்தவர்கள், தாம் கடத்திச் செல்லும் மனிதர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள், எப்படியெல்லாம் தகாத உடலுறவுகளை மேற்கொள்கிறார்கள். அதன் பிறகு எப்படி தொழிநுட்பம் சார்ந்த சத்திர சிகிச்சைகள் மூலம் மனித பெண்களில் கருப்பையில் அவர்களது உயிரணுவால் உருவாக்கப்படும் “கலப்பின” (Hybrid) சந்ததிகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பன போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் இந்த நூல்களில் விபரிக்கப் பட்டுள்ளன.

Taken (கடத்தப்பட்டோர்) ,
Masquerade of Angels (வானவர்கள் எனும் முகமூடி நடனம்) எனும் பெயர்களில் வெளியிடப்பட்ட அவரது இந்த இரண்டு நூல்களும் இன்றளவும் பல ஆய்வாளர்கள் மத்தியில் மதிக்கப் படுபவை.

இது மட்டுமல்லாமல் கருத்தரங்குகள், உரைகள் போன்ற பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்களை இது குறித்து விழிப்புணர்வூட்டும் விதமாக தீவிரமாக செயல்பட்டார்.

பலரது விழிப்புணர்வுக்கு இவரது அயராத முயற்சிகள் ஒரு மூல காரணமாக அமைந்தன.

இதனால் ஆத்திரமடைந்த “எதிர்த் தரப்பு” இவரை அச்சுறுத்த ஆரம்பித்தது. பல மிரட்டல்கள் இவருக்கு விடுக்கப் பட்டன. இவரது ஆய்வுகளைக் கைவிட வேண்டும் என்று பல மர்ம மிரட்டல்கள் இவருக்கு வந்து கொண்டே இருந்தன. இவ்வாறு வந்த மிரட்டல்களில் சில மிரட்டல்கள் மனிதர்கள் வாயிலாக வந்தவை அல்ல; மர்ம இனத்தவர்கள் மூலம் விடுக்கப்பட்டவை என்று அவரே பிற்காலத்தில் குறிப்பிட்டும் இருந்தார். ஆனால், இது போன்ற மிரட்டல்களுக்கெ
ல்லாம் அவர் அஞ்சவில்லை. தொடர்ந்தும் பிரச்சாரங்களை அதிகப் படுத்தினார்.


விளைவு.... திடீரென்று இனம் புரியாத ஒரு விசித்திர நோயால் இவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாமல், தனது 48வது வயதிலேயே அந்த நோய் மூலம் மரணித்து விட்டார். அவரது கணவர் பிற்காலத்தில் குறிப்பிடும் போது, கார்லாவுக்கு ஏற்பட்டது இயற்கையான நோய் அல்ல; அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்றே குற்றம் சாட்டினார்.

ஆனால், அமெரிக்க அரசாங்கமோ அவருக்கு ஏற்பட்டது வெறும் புற்று நோய் தான் என்று கூறி, கதையை நாசுக்காக நிறைவு செய்து விட்டது. அந்தக் கதையே இன்று பரவலாக நம்பப் பட்டும் வருகிறது.

ஆனால், கார்லா டர்னரின் ஆய்வுகளை முழுமையாகப் பார்த்த எவருமே அரசாங்கம் சொல்லிய விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

உண்மைக்கும், ஜோடிக்கப்பட்ட கதைக்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆய்வு செய்வோர் இலகுவில் கண்டு கொள்வதுண்டு. அந்த அடிப்படையில் பல ஆய்வாளர்கள் இன்று வரை கார்லாவின் ஆய்வுகளுக்கென்று தனி மரியாதை கொடுப்பதுண்டு. இவரது ஆய்வுகள் பலவற்றுக்கு உறுதுணையாக இருந்த இன்னோரு ஆய்வாளர் தான், Barbara Bartholic எனும் பெண். இவரும் மர்மமான முறையில் ஒரு விபத்தின் வாயிலாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது...

வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆய்வு துறை...


உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.. ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை.. அதை ஒரு வரலாறாக மாற்ற முயற்ச்சி செய்வதிலும் தவறில்லை...

இந்த பந்தயத்தில், சூப்பர் பவர் மற்றும் பணத்தை தள்ளி இறைக்க தயாராக இருக்கும் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைத்துள்ளது..

2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளது..

1961இல் டிரேக் (drake) எனும் விஞ்ஞானி, பிரபஞ்சத்தில் எத்தனை கிரகங்களில் ரேடியோ ஒலிக் கற்றைகளைப் பயன்படுத்தும் அளவு முன்னேறிய உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கண்டறியும் டிரேக் சமன்பாட்டை (drake equation) முன்மொழிந்தார். அதன்படி பிரபஞ்சத்தில் 20 முன்னேறிய நாகரிகங்கள் இருக்கலாம் என அன்று டிரேக் கூறினார்.

1995இல் மைக்கேல் மேயர் எனும் விஞ்ஞானி, யதேச்சையாக 51 பெகாஸி (51 pegasi) எனும் நட்சத்திரத்தை ஆராய்ந்தார். அதைச் சுற்றி 51 பெகாஸி பி (51 pegasi B) எனும் கிரகம் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த கிரகம், ஜூபிடருக்கு ஒப்பான எடையைக் கொண்டது. 2000 டிகிரி வெப்பம் கொண்டது. தன் சூரியனை அது நாலே நாளில் சுற்றி வருகிறது. இத்தகைய நரகச் சூழலில் ஒரு உயிரும் அந்தக் கிரகத்தில் மனிதனை போன்ற உயிரினங்கள் வசிக்க முடியாது. ஆனால் அந்த கோளின் தன்மைக்கேற்ப்ப வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம். சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு கிரகம் இருப்பதே விஞ்ஞானிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.

#ஜூபிடர் மாதிரி ஒரு கிரகம் இருந்தால் ஏன் பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்க முடியாது? அதில் ஏன் உயிர்கள் இருக்க முடியாது? என்ற கேள்விகளும் எழுந்தது. இந்த கேள்விகள் விஞ்ஞானிகளை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய தூண்டியது.மேலும் பல நட்சத்திரங்களில் கிரகங்கள் இருக்கும் செய்தி வெளிவர வர, டிரேக் சமன்பாட்டில் உள்ள பல புதிர்கள் விடுவிக்கப்பட்டன. இதன்படி 28 கோடி கிரகங்களில் ரேடியோ மூலம் தொடர்புகொள்ளும் அளவு முன்னேறிய சமூகங்கள் இருக்கலாம் என இன்று கூறுகிறார்கள்.

எனினும் 20 இல் இருந்து 28 கோடிக்கு டிரேக் சமன்பாடு முன்னேறியதை அடுத்து, பலர் வேற்றுகிரகவாசிகள் உயிரினங்களில் ஆர்வம் காட்டினார்கள். பல கோடி டாலர்களை ஆராய்ச்சிக்குக் குவிந்தன. இந்தச் சூழலில் ஆஸ்ட்ரோபயாலஜி எனப்படும் வேற்றுகிரகவாசிகள் உயிரினங்களை ஆராயும் துறை உருவானது. ஆஸ்ட்ரோபயாலஜி துறை இப்படி அங்கீகாரம் பெற்றதும் அது வேற்றுகிரகவாசிகள் உயிரினங்களை ஆராய்வதில் புதிய அணுகுமுறையை மேற்கொண்டது..

பூமியைப் போன்ற கிரகங்களைத் தேடுவதை விடுத்து, பூமிக்குள்ளேயே மிகச் சவாலான சூழல்களில் உயிர்கள் வாழ்வதை ஆராயத் தொடங்கினார்கள்.

#அண்டார்டிகாவில் பல லட்சம் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்ட வில்லன்ஸ் ஏரியில் (Wilhens lake) ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய ஒளியே பல லட்சம் ஆண்டுகளாகப் படாத அந்த ஏரியிலும் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள். அதன்பின் உயிர்கள் பூமியின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டன. கடலுக்கடியில் சூரிய ஒளியே படாத இடத்திலும் ஹைட்ரஜன் சல்பைடு மூலம் ஆற்றலை அடைந்து, உயிர்கள் வாழ்வது கண்டறியபட்டது. இதே போல் மீத்தேனை ஆற்றலாக பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்கள் கண்டு பிடிக்கப்பட்டன.


மெக்ஸிகோவில் ஒரு மைல் ஆழத்தில் 3 பில்லியன் ஆண்டுகளாக வசிக்கும் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உருவான காலக்கட்டத்தில் பூமியில் நீரே கிடையாது. நிலவே உருவாகவில்லை. பூமி அன்று வசிக்கத் தகுதியற்ற இடம். அந்தச் சூழலிலேயே உயிர் தழைத்தது எனில் அதே போல் அவற்றால் ஏன்?

செவ்வாயில் ஒரு மைல் ஆழத்தில் வசிக்க முடியாது?

என்ற கேள்விகள் எழுந்தது..
இதேபோல் அலாஸ்கா சுகோக்
(Lake sukok) ஏரியில், மீத்தேனை ஆகாரமாகக் கொண்டு உயிர்கள் வசிப்பது கண்டறியப்பட்டது.

சனி கிரகத்தின் நிலவான டைட்டனில் உயிர்கள் வசிக்கத் துளி வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்பட்டது. காரணம், பூமியில் நீர் எப்படி மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியதோ, அதேபோல் திரவ மீதேன், டைட்டனின் மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியது. சுகோக் ஏரியில் மீத்தேனை ஆகாரமாகக் கொண்டு நுண்ணுயிர்கள் வசிக்க முடியுமெனில், டைட்டனில் ஏன் நுண்ணுயிர்கள் வசிக்க முடியாது?  என்று யோசிக்க தொடங்கினர்.

இதுவரை நாசா நடத்திய ஆராய்ச்சியில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய வேற்றுகிரகவாசிகள் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது..

வேற்றுகிரகவாசிகள் சார்ந்த தேடுதல் பணியில் நாசாவின் கேப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Kepler space telescope) முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

2015-ஆம் ஆண்டு 'Break through initiatives' என்ற ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள்.இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே இன்னும் பத்து ஆண்டுகளில் வேற்றுக் கிரகவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் தெரிந்து கொள்வதுதான். இந்த அமைப்புக்குக் 'மறைந்து இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்' ஆதரவு அளித்ததுடன் பெரும் தொகையையும் கொடுத்து உதவியிருக்கிறார்.

2018-ஆம் ஆண்டு, 8.8 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட்ட, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் (James webb space) தொலைநோக்கியானதும், இந்த ஏலியன் தேடலில் உட்படுத்தப்பட இருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளது.. 2020-ஆம் ஆண்டில் அகச்சிவப்புகதிர் (Infrared) தொலைநோக்கி ஒன்றையும் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டு வாக்கில், செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்கள் நேரடியாக சென்று வேற்றுகிரகவாசிகள் சார்ந்த ஆய்வை மேற்க்கொள்ளும் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகளால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது..

வேற்றுகிரகவாசிகளை பூமிக்கு அழைத்தால் அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.

ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.

குறிப்பு; வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஹாலிவுட் கதாபாத்திரங்கள் அனைத்து இது போன்ற வேற்றுகிரக உயிரின ஆராய்ச்சியில்  தெரிந்து கொண்டதை தான் படமாக எடுத்திருக்காங்க. அதானாலே ஹாலிவுட் படங்களையும்
பதிவில் இணைத்துவிடுகிறேன்.....

பாஜக - பாமக தொண்டர்கள் இடையே மோதல்...


பாமக நிறுவனர் ராமதாஸை அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை மன்னிப்பு கோர வலியுறுத்தி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை; பாஜக - பாமக தொண்டர்கள் இடையே மோதல்...

பாஜக கைகூலி சேலம் கலெக்டர் ரோகினி யின் உளவியல் தாக்குதல்...


கோழி வறுவலில் விஷம் வைத்து 4 பேரை கொன்ற விவகாரத்தில், உயிரிழந்த இளைஞரின் சகோதரி உட்பட 2 பேர் கைது...


விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் 7 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் கௌதம்,  கணேசன், முகமது இப்ராகிம், முருகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முருகனின் சகோதரி வள்ளி மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வள்ளிக்கும், அவர் பணிபுரிந்து வந்த அச்சகத்தின் உரிமையாளர் செல்வத்திற்கும் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்ததால் முருகன் மீது வள்ளி கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் குற்றாலம் செல்ல திட்டமிட்டிருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை கொல்ல வள்ளி முடிவு செய்துள்ளார். அதன்படி முருகன் வாங்கி வைத்திருந்த கோழி கறியில் விஷத்தை கலந்துள்ளார். இந்நிலையில் குற்றாலம் செல்வதற்கு முன் முருகன் தனது தம்பி மற்றும் நண்பர்களுன் மது அருந்தும்போது, விஷம் கலந்த சிக்கனை சாப்பிட்டதில் 4 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வள்ளியை கைது செய்த போலீசார், கொலையில் வள்ளிக்கு உதவியதாக இருந்த அச்சக உரிமையாளர் செல்வத்தையும் கைது செய்தனர்...

நீரின்றி அமையாது உலகு...


முத்து எப்படி உருவாகிறது....?


விலை உயர்ந்த முத்து கடலுக்கடியில் எப்படி உருவாகிறது தெரியுமா?

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விசயம்.

கடல் நீரில் உள்ள சுண்ணாம்பு (Calcium carbonate)என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

அதைத் தெரிந்து கொண்ட சீனர்கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள்.

சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

யப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.

அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப் பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.

அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும்.

அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.

இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது.

ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் உண்மைகள்...


சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...


ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத் தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்ட போது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக் குண்டுகளுடன் பிணைத்து
மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப் போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகரமுடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே
மறக்கக்கூடாது...

சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.. சென்னை சிறுவன் பிரகானந்தா.. வாழ்த்துக்கள் தம்பி...


பிஜித் தீவு தமிழர்கள்...


பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள்...

பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள்.

1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது.

பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை.

தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள்.

தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை.

அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள்.

பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை.

பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது.

பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது.

பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்...

உண்மையிலேயே சாலையை அகலப்படுத்த நினைத்தால் 4 வழி சாலையை 8 வழி சாலையாக மாற்றினால் என்ன ? எதற்கு புதிய 8 வழி சாலை ? சிந்திக்க வேண்டிய தருணம்...


வழுக்கை தலையில் முடிவளர....


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக வருகின்ற சனிக்கிழமை ( 30-06-2018 ) சென்னையில் போராட்டம் நடத்த அனைவரும் ஒன்றிணைவோம் வாரீர்...


வெளிநாடுகளில் தமிழர்கள் உயர்பதவிகளில், தமிழகத்தில் வேற்றினத்தார் பதவியில் கூடாதா?


வெளிநாடுகளில் தமிழர் உயர்பதவிகளை வகிப்பதைப் பெருமையாகப் பதிவிடுகிறீர்கள்.

இங்கே தமிழரல்லாதார் பதவியிலிருப்பதை ஏன் ஏற்க முடியவில்லை?

இதற்கான பதில்...

வெளிநாடுகளில் தமிழர்கள் எத்தனை சதவீத எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ.. அதைவிடக் குறைவாகவே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில். ஒன்றிரண்டு அரசு பதவிகளிலோ,அத்திபூத்தாற்போல அமைச்சராகவோ நீதிபதியாகவோ தமிழர்கள் உயர்கின்றனர்.

அதுவும் கடின உழைப்பாலும் திறமையாலும்.

தமிழரல்லாதார் இங்கே எத்தனை சதவீதம் வாழ்கின்றனரோ அதற்கேற்றாற்போல பதவிகள் அதிகாரங்கள் பெறுவது தவறில்லை.

ஆனால், இங்கே தலைமை முதற்கொண்டு அத்தனை அதிகாரங்களும் வந்தேறிகள் கையில்.

3% பார்ப்பனன் நம்மை ஆளலாமா என்று கூறிவிட்டு.. மொத்தமே 300 குடும்பங்கள் கூட தேறாத வந்தேறி சமூகங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றன.

இதில் கடல்கடந்து அகதியாய்ப் போய் திறமையால் உயரும் ஓரிரு தமிழரைப் பார்த்து பொறாமை வேறு?

நம் பாரம்பரிய சர்க்கரை கரும்பு வெல்லம், பனை வெல்லம்.....


ESP மூளையில் எப்படி செயற்படுகிறது?


மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP (Extra sensory perception) என இனங்காணப்படுகிறது.

இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன…

இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)…

முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)… டைம் ஸ்லிப் எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்… அது சம்பந்தமாக பின்னர் பார்க்கலாம்….

இப்போது… அடிப்படையில் நாம்… மூளையை தூண்ட எம்மை அறியாமல்… என்ன என்ன செய்கின்றோம் என்பதை பார்ப்போம்…

உதாரணமாக…

நாம் கணக்கு அல்லது ஏதாவது பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது… செய்யும் முறை நினைவு வராது போனால்… பேனாவால்… நெற்றிப்பக்கத்தில் இலேசாகத் தட்டுவதுண்டு (அல்லது விரலால் ஏதோ செய்வோம்.)… அதன் பின்னர், பல வேளைகளில் செய்முறை நினைவுக்கு வந்துவிடும்…

இன்னொரு உதாரணத்துக்கு…

பாடசாலைகளில்… மாணவர் ஒருவர் விடை சொல்லத்தடுமாறும் போது, ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவார் (இதில் சிலர் கொலை வெறித்தனத்தையும் காட்டி விடுவார்கள்)… பின்னர் ஏதோ அரை குறையாக மாணவன் விடையை கிட்டத்தட்ட சொல்லுவான்…

இந்த இரண்டு உதாரணங்களிலுமே… நடப்பது மூளையைத்தூண்டும் செய்கைதான்…

மூளைக்குப்போகும்… இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தும் முறைதான் இது…

அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன… இதை அறியாமலே நாம் இந்த முறைகளைப் பின்பற்றி வந்திருக்கின்றோம்…

இப்போது… நான் குறிப்பிட்டது போன்று… மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துகையில் புத்துணர்வு பெறும், என்ற கருத்தை நிரூபிப்பதற்கு ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளது…

சில எலிகளின்… மூளையின் குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறிய ஒரு மின் தகட்டை பொருத்தி… மறுமுனையை தயார்ப்படுத்தப்பட்ட மின்கல மிதியுடன் பொருத்தினார்கள்…

எலிகள், அந்த மிதியை மிதிக்கும் போது… மூளையில் மெதுவாக மின் பாய்ச்சப்பட வேண்டும் என்பதே நோக்கம்…
பரிசோதனை எலிகள் அந்த கூண்டினுள்… பல இடங்கள் இருக்கும் போது; மறுபடியும் மறுபடியும் அந்த மிதியிலேயே அவை ஏறிக்கொண்டிருந்தன…

இதிலிருந்து, மின் பாய்ச்சப்படும் போது… உணவைக்கூட கவணிக்காது… 24 மணி நேரமும்… எலிகள் வித்தியாசமான ஒரு உணர்வை பெற்றிருக்கின்றன…

அதுதான், மீண்டும் மீண்டும் ஏறின என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஆகவே, மூளையில்… பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணர்ப்பட்டது.

விஞ்ஞான மருத்துவப்படியும்…
4 பில்லியன்ஸ் செல்கள் மூளையில் இருக்கின்றன… ஆனால், நாம் அதில் 10% ம் கூட பயண்படுத்துவதில்லை…

ஐன்ஸ்டைன் மேலதுகமாக 500 தொடக்கம் 1000 செல்களை பயண்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. ( ஐன்ஸ்டைனின் மூளையில், சாதாரண் மூளையை விட மடிப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.. )

ஓ.கே… இனி நாம், ESP மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் பார்க்கப் போகின்றோம்…

வரும் பதிவுகளில்… நம்மவே, முடியாத… பல பெளதீக மீறல்களையும், அதிசயங்களையும் பார்ப்போம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


எதிர்பார்த்ததை விட அளவில் பெரியது புளூட்டோ: நாசா...


புளூட்டோவின் அளவை கணக்கிடுவது
என்பது பல்வேறு காரணங்களினால்
பெரிய சவாலாக அமைந்துள்ளது.

ஆனால் தற்போது நாசா விண்வெளிக்
கழகத்தின் நியூ ஹரைசன் விண்கலம்
புளூட்டோ கிரகம் சுற்றளவில்
2,370கிமீ இருப்பதாக
கண்டறிந்துள்ளது.

நியூ ஹரைசன்ஸ் விண்களத்தில்
உள்ள தொலைதூர ரிகனைசான்ஸ்
இமேஜர் மூலம் புளூட்டோவின் அளவு
தற்போது அறுதியிடப்பட்டுள்ளது.

முன்னதாக புளூட்டோ சிறிய கிரகம்
என்று கருதப்பட்டது. இப்போது நாசா
விண்கலத்தின் இந்தக் கண்டுபிடிப்பு
அந்தக் கணிப்பை முறியடித்துள்ளது.

1930-ல் புளூட்டோவை கண்டு பிடித்ததிலிருந்து அதன் அளவு குறித்து விவாதங்கள் இருந்து வந்துள்ளன.

இப்போது அந்த சவால் நிறைந்த கேள்விக்கு பதில் கண்டுபிடித்து முற்றுப் புள்ளி வைத்துள்ளோம் என்று வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி பில் மெக்கினன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அளவு தெரிய வந்துள்ளதையடுத்து புளூட்டோவின் அடர்த்தி முந்தைய கணிப்பை விட சற்றே குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதில் உள்ள பனியின் அளவு இன்னும் அதிகம் என்றும் கணிக்க முடிகிறது.

புளூட்டோவின் ட்ரோபோஸ்பியர் என்று
அழைக்கப்படும் கீழடுக்கு எதிர்பார்த்ததைவிட திட்பக்குறைவாக
இருப்பதும் தெரியவந்துள்ளது.

நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் உள்ள பொருட்களில் தற்போது புளூட்டோ தான் பெரியது என்பது தெரிய வந்துள்ளது.

9 ஆண்டுகள், 3 பில்லியன் மைல்கள் பயணத்துக்குப் பிறகு நியூஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு 12,500 கிமீ தொலைவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பாஜக அடிமை அதிமுக அரசே பதில் சொல்...


எகிப்திய மாந்திரீகம்...


எகிப்தியர்களின் பிரமிடுகள் கலாச்சாரத்தையும், மாந்திரீகத்தையும், மந்திரம், தந்திரம், மருத்துவம், வாழ்க்கை நெறி ஆகியவற்றை எல்லாம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகள் பண்டைய எகிப்தியர் தங்களுடைய வாழ்க்கைக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு கடவுளை உருவாக்கி இருந்தனர். போருக்கு ஒரு கடவுள், காமத்திற்கு ஒரு கடவுள், மாந்திரீகத்திர்க்கு ஒரு கடவுள் என்று அவர்களின் கடவுள்களின் எண்ணிக்கை அதிகம்.

கீக என்பது எகிப்தியர்களின் மாந்திரீகம், மற்றும் மருத்துவ கடவுளாகும். மருத்துவத்தையும், மாந்திரீகத்தையும் ஒன்றாகவே எண்ணினர். கீக கடவுள் மூலமாக எல்லா கடவுளின் அனுகிரகத்தையும் பெற முடியும் என்று எண்ணினர். வியாதியில் இருந்து பாதுகாப்பு, வாழ்க்கையில் பாதுகாப்பு கொடுக்கும் ஒரு உயர்ந்த கடவுள் என்று எண்ணினர். கீக கடவுளை மாந்திரீகத்தின் நன்மையையும், தீமையும் கொடுக்கும் ஒரு நடுநிலை கடவுளாக எண்ணியுள்ளனர். கீக கடவுளை மாந்திரீகத்தின் தாய் என்று எண்ணினார்கள். அவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் கீக கடவுளை மாந்திரீக வேண்டுதல் செய்யும்பொழுது அதற்கென்று சிலைகள், மந்திரங்கள், அபூர்வ கற்கள், பத்தி, வாசனைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், மது வகைகளைப் படைத்து இந்தியர்களைப் போல் வழிபாடு செய்துள்ளனர்.

கீக கடவுள் உருவத்தில் இரண்டு பாம்புகள் இருக்கும். அதைவைத்து தான் உலக மருத்துவ கழகங்களில் இரண்டு பாம்புகள் பின்னிக்கிடக்கும் வடிவத்தை அமைத்துள்ளனர். இறந்தவர்களுக்கு கீக கடவுள் மூலம் உணவு படைக்கும் பழக்கம் இருந்துள்ளது. எகிப்தியர்கள் தங்கள் வாழ்க்கைக்கும், மதநெறிகளுக்கும் உட்பட்டு மாந்திரீகங்களைச் செய்து வந்தனர் என்று தெரிய வருகிறது. அவர்கள் மாந்திரீகத்தை மனிதனுக்கு என்று படைக்கப்பட்ட ஒரு புனித செயலாக எண்ணினர். அவர்களும் இந்தியர்களைப் போல பொம்மை செய்து எதிரிகளைத் தாக்கும் வழி  முறைகளை உருவாக்கி வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

அவர்கள் இந்திய மாந்திரீகவாதிகளைப் போல பொம்மைகள் செய்துள்ளனர். பொதுவாக அந்த பொம்மையை சிவப்பு மெழுகால் செய்வர். பின்னர் எதிரியின் பெயரை பச்சை முடியாலாகிய மையால் எழுதி நூலால் சுற்றுவர். பின்பு பாதிக்கபடவேண்டிய பகுதியில் ஊசி குத்தி பின்பு அதற்கென்று உள்ள மந்திரங்களை உபயோகிப்பர். பின்னர் அந்த பொம்மையை எதிரியாக நினைத்து வாளால் இரண்டாக வெட்டுவர். பின்னர் அந்த பொம்மையை தீயில் இட்டு எரித்து சாம்பலாக்கி சிறுநீர் கழிக்கும் இடத்தில் சாம்பலை புதைப்பர். அவர்கள்நோய்களுக்கு மருந்தும், மாந்திரீகத்தையும், ஒன்றாக இணைத்துச் செய்வர். ஏன்? இன்று கூட இந்தியாவில் கிராமங்களில் தீரமுடியாத வியாதிகள் இருந்தால் நோய்க்கும் பார், பேய்க்கும் பார். என்று கூறுவர். அவர்களிடம் பாம்புக்கடி, குழந்தைப் பிறப்பு, குழந்தை உண்டாக, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு மந்திரங்கள் வைத்து இருந்தனர். இத்தகைய மந்திரங்கள் அரர்களைப் புதைத்த பிரமிடுகளின் சுவர்களில் காணப்படுகிறது. சுமார் 800 வகையான மந்திரங்கள் அந்த பிரமிடில் காணப்படுகிறது.

இன்று கூட அவர்கள் வழித் தோன்றல்கள் உலகின் பல இடங்களில் தங்களை மந்திரவாத மருத்துவர் என்று கூறிக் கொண்டு மாந்திரீக தொழில் நடத்துகின்றனர். அமெரிக்கா நாட்டில் இத்தகைய மந்திரவாதிகள் அதிகம் உள்ளனர்...

மரங்கள்...



நகரவாசிகளுக்கு ஒரு நியாயம்... கிராமவாசிகளுக்கு வேறு ஒரு நியாயமா...?


கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் இரண்டாவது அடுக்கு மேம்பாலம் அதாவது, 100 அடி சாலை- கிருஷான்ணசாமி சாலை(அய்யப்பன் கோயில் சாலை) -ஆனது 2011 ஆரம்பத்தில் சுரங்கபாதையாக வடிவமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையாக அமைக்கப்படும்போது சுரங்கப்பாதையை ஒட்டி இருபக்கமும் அணுகுசாலை(சர்வீஸ் ராேடு) அமைக்கப்படவேண்டும். அதற்காக சாலையின் இருபுறமுள்ள கட்டிட ஓனர்களுக்கு நிலஆர்ஜிதம் செய்வதற்காக அறிவிப்பு அரசால் வழங்கப்பட்டது.

 ஆர்ஜித அறிவிப்பு கிடைக்கப்பெற்றவுடன் கட்டிட ஓனர்களெல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காந்திபரம் மேம்பால திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடையாணை பெறுகிறார்கள். அப்போதைய எம்பி நடராஜனும் எம்எல்ஏ சேலஜ்சர் துரையும் கட்டிட. ஒனர்களுடன் சேர்ந்துகொண்டு பாலத்தின் வடிவமைப்பை மாற்ற அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

2001-ல் வடிவமைக்கப்பட்ட மேம்பால திட்டம் மூன்று முறை மாற்றப்படுகிறது. சுரங்கப்பாதை 75 அடி உயர மேம்பாலமாக மாற்றப்படுகிறது. 100 அடி சாலையில் வழியாக சென்ற உயரழுத்த மின்காேபுரங்கள் எடுக்கப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டன. அதற்கான செலவு 25 கோடிகள். காந்திபுர மேம்பாலத்திற்காக ஒரு அடி நிலம்கூட தனியாரால் வழங்கப்படவில்லை.  திட்டத்தில் நில ஆர்ஜிதத்திற்காக 20 கோடி ஒதுக்கப்பட்டிருந்தும்  கூட தனியார்கள் யாரும் நிலத்தை முன்வராதததினால் தனியார்களின் நிலம் கையகப்படுத்தப்படமுடியவில்லை 

நகரவாசிகள் தங்களுடைய நிலத்தையும் வீட்டையும் நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கு வழங்கமாட்டார்களாம்... ஆனால் கிராமவாசிகள் வளர்ச்சி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள்.  நகரின் வளர்ச்சித்திட்டத்திற்கு ஓரடி நிலத்தைக்கூட கொடுக்க மனமில்லாத நகரவாசிகள் கிராம மக்களையும் விவசாயிகளையும் ஏளனம் செய்து விமர்சனம் செய்கிறார்கள். இதுவா நாட்டுப்பற்று... ஏசி வண்டியில் 160 கிமீ வேகத்தில் நான்கு வழிச்சாலை பயணிக்கின்றீர்களே.. அந்த நான்கு வழிச்சாலை முழுவதும் விவசாயிகள் நாட்டுக்காக விட்டுக்கொடுத்த  பூமி என்பதை மறந்துவிடாதீர்...

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு..

பழுத்த மட்டையை பார்த்து குருத்து மட்டை ஏளனமா சிரித்ததாம்...

ஜனநாயகம் எனும் மாயை..?


துப்பாக்கி சூடு நடந்து ஒரு மாத காலத்திற்கு பிறகு CBCID விசாரானை...


22.5.2018 தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்..

CBCID அறுபது பேர் கொண்ட குழு  சம்பங்கள் நடந்த இடத்திற்கு சென்று தடயங்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்...

சென்னை மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..


துருக்கி என்பது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு, ஆட்டோமான் சாம்ராஜ்யம் என உலகை மிரட்டிய பெரும் வல்லரசின் இன்றைய சுருக்கம் அது...


ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடு அதுதான். அதனால் அதனை ஒட்டோமானின் வீழ்ச்சிக்கு பின் நோயாளி என்றெல்லாம் ஐரோப்பா பழித்தது.

ஆனால் கமால் பாட்சா தன் தியாகத்தாலும் உழைப்பாலும் துருக்கியினை சீர்படுத்தினார், இன்று இஸ்லாமிய நாடுகளில் மிக முன்னேறிய நாகரீகமான நாடு என துருக்கித்தான் முதல் இடத்தில் இருக்கின்றது..

சிரிய அகதிகள் கட்டுபாடு மிகுந்த சவுதிக்கு வராமல் துருக்க்கிக்கு செல்ல காரணம் அதுவே..

அரபுலகின் அமைதிக்கு துருக்கியின் பங்களிப்பும் மகா முக்கியம்..

இந்த எர்டோகன் என்பவர் துருக்கியின் இரண்டாம் கமால் பாஷா என சொல்லிகொண்டு துருக்கியினை பெரும் இடத்திற்கு கொண்டு செல்வேன் என உறுமிகொண்டிருப்பவர்.

இதனால்தான் சர்வ சக்திவாய்ந்த அதிபர் பதவியினை உருவாக்கி அதில் அமர துடிக்கின்றார்.

அந்த முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி இப்பொழுது தன் முதல் அதிபரை தேர்ந்தெடுப்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றது...

முதலில் இதை சரி பண்ணுங்க... அப்புறம் புதுசா ரோடு போடுறதை பற்றி யோசிப்போம்...


சிலம்புச் செல்வர் மயிலை பொன்னுசாமி சிவஞானம் (மபொசி) அவர்களின் பிறந்தநாள் இன்று...


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை முதல் பல பகுதிகள் தமிழ்நாட்டுக்கு கிடைக்க செய்த பெருமகனார்.....