உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.. ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை.. அதை ஒரு வரலாறாக மாற்ற முயற்ச்சி செய்வதிலும் தவறில்லை...
இந்த பந்தயத்தில், சூப்பர் பவர் மற்றும் பணத்தை தள்ளி இறைக்க தயாராக இருக்கும் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைத்துள்ளது..
2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளது..
1961இல் டிரேக் (drake) எனும் விஞ்ஞானி, பிரபஞ்சத்தில் எத்தனை கிரகங்களில் ரேடியோ ஒலிக் கற்றைகளைப் பயன்படுத்தும் அளவு முன்னேறிய உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கண்டறியும் டிரேக் சமன்பாட்டை (drake equation) முன்மொழிந்தார். அதன்படி பிரபஞ்சத்தில் 20 முன்னேறிய நாகரிகங்கள் இருக்கலாம் என அன்று டிரேக் கூறினார்.
1995இல் மைக்கேல் மேயர் எனும் விஞ்ஞானி, யதேச்சையாக 51 பெகாஸி (51 pegasi) எனும் நட்சத்திரத்தை ஆராய்ந்தார். அதைச் சுற்றி 51 பெகாஸி பி (51 pegasi B) எனும் கிரகம் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த கிரகம், ஜூபிடருக்கு ஒப்பான எடையைக் கொண்டது. 2000 டிகிரி வெப்பம் கொண்டது. தன் சூரியனை அது நாலே நாளில் சுற்றி வருகிறது. இத்தகைய நரகச் சூழலில் ஒரு உயிரும் அந்தக் கிரகத்தில் மனிதனை போன்ற உயிரினங்கள் வசிக்க முடியாது. ஆனால் அந்த கோளின் தன்மைக்கேற்ப்ப வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம். சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு கிரகம் இருப்பதே விஞ்ஞானிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.
#ஜூபிடர் மாதிரி ஒரு கிரகம் இருந்தால் ஏன் பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்க முடியாது? அதில் ஏன் உயிர்கள் இருக்க முடியாது? என்ற கேள்விகளும் எழுந்தது. இந்த கேள்விகள் விஞ்ஞானிகளை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய தூண்டியது.மேலும் பல நட்சத்திரங்களில் கிரகங்கள் இருக்கும் செய்தி வெளிவர வர, டிரேக் சமன்பாட்டில் உள்ள பல புதிர்கள் விடுவிக்கப்பட்டன. இதன்படி 28 கோடி கிரகங்களில் ரேடியோ மூலம் தொடர்புகொள்ளும் அளவு முன்னேறிய சமூகங்கள் இருக்கலாம் என இன்று கூறுகிறார்கள்.
எனினும் 20 இல் இருந்து 28 கோடிக்கு டிரேக் சமன்பாடு முன்னேறியதை அடுத்து, பலர் வேற்றுகிரகவாசிகள் உயிரினங்களில் ஆர்வம் காட்டினார்கள். பல கோடி டாலர்களை ஆராய்ச்சிக்குக் குவிந்தன. இந்தச் சூழலில் ஆஸ்ட்ரோபயாலஜி எனப்படும் வேற்றுகிரகவாசிகள் உயிரினங்களை ஆராயும் துறை உருவானது. ஆஸ்ட்ரோபயாலஜி துறை இப்படி அங்கீகாரம் பெற்றதும் அது வேற்றுகிரகவாசிகள் உயிரினங்களை ஆராய்வதில் புதிய அணுகுமுறையை மேற்கொண்டது..
பூமியைப் போன்ற கிரகங்களைத் தேடுவதை விடுத்து, பூமிக்குள்ளேயே மிகச் சவாலான சூழல்களில் உயிர்கள் வாழ்வதை ஆராயத் தொடங்கினார்கள்.
#அண்டார்டிகாவில் பல லட்சம் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்ட வில்லன்ஸ் ஏரியில் (Wilhens lake) ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய ஒளியே பல லட்சம் ஆண்டுகளாகப் படாத அந்த ஏரியிலும் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள். அதன்பின் உயிர்கள் பூமியின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டன. கடலுக்கடியில் சூரிய ஒளியே படாத இடத்திலும் ஹைட்ரஜன் சல்பைடு மூலம் ஆற்றலை அடைந்து, உயிர்கள் வாழ்வது கண்டறியபட்டது. இதே போல் மீத்தேனை ஆற்றலாக பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
மெக்ஸிகோவில் ஒரு மைல் ஆழத்தில் 3 பில்லியன் ஆண்டுகளாக வசிக்கும் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உருவான காலக்கட்டத்தில் பூமியில் நீரே கிடையாது. நிலவே உருவாகவில்லை. பூமி அன்று வசிக்கத் தகுதியற்ற இடம். அந்தச் சூழலிலேயே உயிர் தழைத்தது எனில் அதே போல் அவற்றால் ஏன்?
செவ்வாயில் ஒரு மைல் ஆழத்தில் வசிக்க முடியாது?
என்ற கேள்விகள் எழுந்தது..
இதேபோல் அலாஸ்கா சுகோக்
(Lake sukok) ஏரியில், மீத்தேனை ஆகாரமாகக் கொண்டு உயிர்கள் வசிப்பது கண்டறியப்பட்டது.
சனி கிரகத்தின் நிலவான டைட்டனில் உயிர்கள் வசிக்கத் துளி வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்பட்டது. காரணம், பூமியில் நீர் எப்படி மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியதோ, அதேபோல் திரவ மீதேன், டைட்டனின் மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியது. சுகோக் ஏரியில் மீத்தேனை ஆகாரமாகக் கொண்டு நுண்ணுயிர்கள் வசிக்க முடியுமெனில், டைட்டனில் ஏன் நுண்ணுயிர்கள் வசிக்க முடியாது? என்று யோசிக்க தொடங்கினர்.
இதுவரை நாசா நடத்திய ஆராய்ச்சியில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய வேற்றுகிரகவாசிகள் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது..
வேற்றுகிரகவாசிகள் சார்ந்த தேடுதல் பணியில் நாசாவின் கேப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Kepler space telescope) முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
2015-ஆம் ஆண்டு 'Break through initiatives' என்ற ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள்.இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே இன்னும் பத்து ஆண்டுகளில் வேற்றுக் கிரகவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றிய முழுவிவரத்தையும் தெரிந்து கொள்வதுதான். இந்த அமைப்புக்குக் 'மறைந்து இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்' ஆதரவு அளித்ததுடன் பெரும் தொகையையும் கொடுத்து உதவியிருக்கிறார்.
2018-ஆம் ஆண்டு, 8.8 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட்ட, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் (James webb space) தொலைநோக்கியானதும், இந்த ஏலியன் தேடலில் உட்படுத்தப்பட இருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளது.. 2020-ஆம் ஆண்டில் அகச்சிவப்புகதிர் (Infrared) தொலைநோக்கி ஒன்றையும் நிறுவ நாசா திட்டமிட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டு வாக்கில், செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்கள் நேரடியாக சென்று வேற்றுகிரகவாசிகள் சார்ந்த ஆய்வை மேற்க்கொள்ளும் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகளால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது..
வேற்றுகிரகவாசிகளை பூமிக்கு அழைத்தால் அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.
ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
குறிப்பு; வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஹாலிவுட் கதாபாத்திரங்கள் அனைத்து இது போன்ற வேற்றுகிரக உயிரின ஆராய்ச்சியில் தெரிந்து கொண்டதை தான் படமாக எடுத்திருக்காங்க. அதானாலே ஹாலிவுட் படங்களையும்
பதிவில் இணைத்துவிடுகிறேன்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.