ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால்...
ஆண்களுக்கு ஆண்மை அவுட்...
பெண்களுக்கு கர்ப பை பாதிப்பு...
அட ஊருக்கு பொறந்த சப்ப மூக்கனுங்களா 😳
ஆய்வகத்திலிருந்து லீக்.. சீனாவில் தீயாக பரவும் புதுவகை பாக்டீரியா.. தொற்று வந்தால்...
ஆண்களுக்கு ஆண்மை அவுட்...
பெண்களுக்கு கர்ப பை பாதிப்பு...
அட ஊருக்கு பொறந்த சப்ப மூக்கனுங்களா 😳
குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும்...
அதன் முக்கிய அடையாளங்கள்..
1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.
2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.
3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.
4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.
குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?
இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று.
நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது.
போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.
இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்து விடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன..
மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?
சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் குறுகியகால
விளைவுகள் மக்களை வெகுவாக ஈர்த்து விடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.
1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.
3. பசி உண்டாகிறது.
4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.
இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்..
குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் தவறான கருத்துக்கள் எவை?
1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.
2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.
3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.
4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.
5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்...
இன்டர்நெட் (internet) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது..
ஒன்றோடொன்று இணைந்த, இணைக்கப்பட்ட செயல்பாடுகள்..
என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது..
பின், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல், உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது...
POST TRAUMATIC STRESS DISORDER...
அமெரிக்க மனோவைத்தியர்களின் கூட்டமைப்பின் கருத்துப்படி, அதீத பய உணர்வையும் கொடூரத்தையும் , ஒன்றுமே செய்யமுடியவில்லையே என்கிற பரிதவிப்பையும் ஏற்படுத்தி, ஆழமான மனக்காயத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு சம்பவத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் ஒருவரில் உளக்காயத்துக்கு பின்னான உளநெருக்கீட்டுச்சிக்கல் எனப்படும்.
post traumatic stress disorder- PTSD,
ஒரு மனநிலை/நோய் நிலை ஏற்படுகிறது.
இப்படி மனக்காயத்தை உண்டு பண்ணும் சம்பவங்கள்..
1. யுத்தம்.
2. சித்திரவதை.
3. பாலியல் வன்முறை,வன்புணர்வு.
4. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான வன்முறை.
5. கடத்தப்படுதல்.
6. பயங்கரவாதம்.
7. இயற்கை அனர்த்தங்கள் (தீ, சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி)..
8. பெரும் வாகன விபத்துக்களில் அகப்படுதல்..
9. உயிர்க்கொல்லி நோய் (கான்சர் போன்ற நோய்) தனக்கு ஏற்பட்டிருப்பதை அறிதல்..
10. கொலை,தற்கொலை உயிரிழப்பு சம்பவங்களை நேரில் பார்த்தல்..
இந்தச்சம்பவங்கள் பின்வருவோரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி PTSD ஆக மாற்றமடையும் வாய்ப்பு அதிகம்:
1.ஏற்கனவே இளம் வயதில் இப்படியான சம்பவங்களால் பாதிப்புற்றவர்கள்.
2. ஏற்கனவே மனநிலை/மனநோய்ச்சிக்கல் உடையவர்கள்.
3. கல்வியறிவு குறைந்தவர்கள்.
4. இளம்பராயத்தினர்.
5. பெண்கள்.
6. சமுக உறவு /ஆதரவு இல்லாதவர்.
7. அண்மைய மனதை நெருக்கும் வாழ்க்கை மாற்றங்கள்..
இவர்களில் பின்வரும் இயல்புகள் தென்படும்:
1. மனத்தை வாட்டமடையச் செய்யும் எண்ணங்களும், மனக்காட்சிகளும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
2. சம்பவம்போல பயங்கர கனவுகள் தூக்கத்தை குழப்புதல்.
3. அந்தச்சம்பவம் மீண்டும் நடைபெறுவது போல உணர்தல், அல்லது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நடந்து கொள்ளல்.
4. புண்படுத்திய சம்பவம் நினைவூட்டப்படும் சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படல்.
5. நினைவூட்டப்படும்போது, வியர்த்தல், பதட்டம், நெஞ்சுப்படபடப்பு, உடல் விறைப்படைதல்
இவர்கள் மேலும்..
நடந்த சம்பவத்தை நினத்துப் பார்ப்பதையோ, அதைப்பற்றிப் பேசுவதையோ தவிர்ப்பார்கள்.
சம்பவத்தை நினைவு படுத்துகிற மனிதர்களை, இடங்களை, செயல்களைத் தவிர்ப்பார்கள்.
சம்பவத்தின் முக்கியமான பகுதிகளை மறந்து விட்டிருப்பார்கள்.
கொண்டாட்டங்கள், சந்தோஷங்களை , தொழில் ஆர்வத்தை, கல்வியில் உள்ள ஈடுபாட்டை இழந்துவிட்டிருப்பார்கள்.
மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுபவர்களாக இருப்பார்கள்.
சந்தோஷப்படுகிற அன்புகாட்டுகிற, னெகிழ்ந்து போகிற தன்மை அற்று மரத்துபோனவர்களாக இருப்பார்கள்.
தமக்கு எதிர்காலம் ஒன்று இல்லை என்பதாக நாளைபற்றிய கனவுகள் எதுவுமற்றுப் போனவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எப்போது அரண்ட நிலயில் இருப்பதால்..
ஒழுங்கற்ற தூக்கம்.
இலகுவில் எரிச்சலடையும், கோபப்படும் தன்மை.
மனதை ஒருமுகப்படுத்த முடியாத இயல்பு.
எப்போதும் விழிப்பாக ஆபத்து நிகழலாம் என்ற எச்சரிக்கை மனநிலை.
சிறு ஒலிகள், அசைவுகளுக்கு கூட மருளும் இயல்பு.
சிகிச்சை முறைகள்...
1. இந்த மனநிலை பற்றிய தெளிவும் அறிவும் தகவல்களும் கற்றுக் கொள்ளுதல் முதற்படி; தன் மனக்காயத்தை புரிந்து கொள்ள முடியும்.
2. பய உணர்வு ,கோபம், துக்கம் போன்ற உணர்வுகளை கையாளப்பழகுதல்.
3. துன்பப்படுத்தும் நினைவுகளை, செயல்களை எதிர்கொண்டு அவற்றிற்கூடாக உணர்வுகளை வடியச்செய்தல் - நாடகங்கள். காட்சிப்படுதல், சம்பவங்களைப் பற்றி பேசுதல் போன்றன.
4. எண்ணவழி சிகிச்சை –COGNITIVE THERAPY..
கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும்.
இச்செய்கை சுமார் 400 மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது.
இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும்..
கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம்..
சராசரியாக ஒரு நாளைக்கு நாம் 15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை..
ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள்..
விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை...
17 வயது ஆண் மகன் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம்.
அதை செல்லாது என்று சொன்ன உலக நாடுகள்..
முதலாம் உலக போரில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் 17 வயதிற்குட்பட்ட சிறுவர்களையே போரில் கலந்து கொள்ள வைத்தது..
இது என்ன நியாயம் ?
பிரிட்டன் அரசு 25 இலட்சம்.. 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களை தமது நாட்டிற்க்காக பயன்படுத்தி கொண்டது...
அது மட்டுமின்றி இன்றைய உருகுவே, சீனா, ஜெர்மன், ரஷ்யா, மற்றும் அமேரிக்கா முதற்கொண்டு சிறுவர்களை [அவர்கள் பார்வையில்] போரில் பங்கு பெற வைத்தது...
இதில் இந்த 17 வயதிற்கும் குறைவான ஆண்கள் [சிறுவர்கள்] பல எதிரி நாட்டு பெண்களின் கற்பை சூறையாடியும் உள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு..
அதே போன்று வயது மிகுந்த தம் சக இராணுவ அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு [ஓரின சேர்க்கைக்கு] ஆளாக்கப்பட்டுள்ளார்கள் இந்த சிறுவர்கள் என்றும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது...
அது மட்டுமில்லாமல் இன்றைய ரஷ்யா குடும்பங்கள் இல்லாமல் அனாதையாக வீதியில் திரியும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தமது இராணுவ பயிற்சி பள்ளியில் சேர்த்து இராணுவ தளவாடங்களை பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறது....
இப்பொழுதும் கூட இந்த சட்டத்தை அமல்படுத்தி வருகிறது ரஷ்யா..
இந்த பதிவு பல கேள்விகளுக்கு பதில்சொல்லும் சிந்தித்தால்...
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம்..
மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது..
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்..
பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்..
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.
எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்..
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும்..
இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்..
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்..
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்...
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது..
தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது.
ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.
பன்னெடுங் காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது..
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.
இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?
எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா?
தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
பூசம் நட்சத்திரம் நாளில் ஆலமரத்த்தின் இரண்டு மலராத மொட்டுக்களை பறித்து பசும்பாலில் அரைத்து , கர்ப்பிணி பெண்ணுக்கு சாப்பிடகொடுக்கவும்...
இது பும்சவனம் எனப்படும்...
இது நான்காம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு...
இதை பெரும்பாலும் நாம் செய்வதில்லை..
ஏழாம் மாத்த்தில் வளைகாப்பு செய்வதோடு சரி.
ஆனால் அக்காலத்தில் இதை கடைபிடித்து இருக்கிறார்கள்..இத்துடன் இரண்டு உளுந்து ,கொஞ்சம் எள்ளு சேர்த்து இடித்து தயிருடன் கலந்தும் கொடுப்பர்..
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நான்காம் மாதத்தில் அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை கணவன் வாங்கி கொடுக்க வேண்டும்..
இந்த காலத்தில் கர்ப்பிணி விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்பட்டு அங்கம் குறைவாகிவிடும்..
ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடமும் பெண் ஜாதகத்தில் 9ஆம் இடமும் குழந்தை பிறப்பை சொல்கின்றன..
குரு, சுக்கிரன் கெடாமல் இருந்து 5ஆம் அதிபதியும் கெடாமல் இருந்தால் குழந்தை பாக்யம் உண்டு.
5ஆம் அதிபதி ஆண் ராசியில் இருக்கிறாரா பெண் ராசியில் இருக்கிறாரா..
அவர் நின்ற அதிபதி அதன் சாரம் நவாம்சத்தில் அவர் நிலை அறிந்தும் பலம் அறிந்தும் அறிய வேண்டும்...
பார்த்த கிரக பார்வைக்கும் கணக்கு இருக்கிறது சனி பார்த்தால் எத்தனை பிறந்தாலும் பெண் என்றும் சொல்வர்.
ஜாதகத்தையும் கணித்து ,குறைகளை போக்கி கொள்வது நல்லது..
முன்னோர் வழி சாபம் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வேண்டும்...
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ... அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே..
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்..
ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள்.
பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.
அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்..
சித்தர்கள் :
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் , மக்களை நல்வழி படுத்தும் சான்றோர்கள்.
நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.
அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.
தீராத நோய்களுககெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.
இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்..
இதையும் இன்று சித்தா என்று ஆங்கில தழுவலில் கூறும் மூடர்களை என்ன வென்று சொல்வது ..
வானியல் அறிஞர்கள் :
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பயின்றவர்களே.
சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.
தமிழர்கள் என்றோ கண்டு பிடித்ததை , ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்...
ஜோ பைடனுக்கு 66% டிரம்பிற்கு 28 % அளவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவளித்துள்ளனர்...
சமூக அமைப்பான இந்தியாஸ்போரா மற்றும் AAPI டேட்டா செவ்வாயன்று வெளியிட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது...
தமிழகத்தில் 4 அரசு பிஎட் கல்லூரிகளில், 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிடிஇ) தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அந்த குழுமம் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சர்ப்பிக்கவில்லை.
புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரியில் 16க்கு பதில் 12 ஆசிரியர்கள் தான் உள்ளனர்.
குமாரபாளையம் அரசு கல்லூரியில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 பேர் தான் உள்ளனர்.
திருமயம் அரசு பி.எட்., கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் என்சிடிஇ விதிகள் படி நியமனம் செய்யப்படவில்லை.
இதனால், இக்கல்லூரிகளில் தற்காலிகமாக, 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. குறைபாடுகளை சரி செய்து 3 மாதத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதுவரை மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...
ஆனால் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்ற கருத்தை ஒரு முறை கூட சிந்திக்காதவர் தான் வைகோ...
ஏனென்றால் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னால் வைகோ போன்ற தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்ற பயம்...
எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது. எனவே அதற்கான வழிமுறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
ஒரு எதிர்மறை சிந்தனையாளர், எப்போதும் பிறரிடம் குறைகளையேக் காண்பார். ஒரு ஆரோக்கிய மனிதரைக் கண்டால், அவர் நோயுற்றிருந்தால் என்ன ஆகும் என்ற வகையில் யோசனை செய்வார். அவர்கள் தங்களின் முழு வாழ்வையும், பிற விஷயங்களில் குறை கண்டுபிடித்தே வீணாக்குவார்கள்.
அதே சமயத்தில் நேர்மறை சிந்தனையாளர் என்பவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களிலுமே அதே எண்ணத்துடன் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களில் அவர் எதிர்மறையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். அந்த விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
ஒருவருக்கு வாழ்வில் எதாவது ஒரு சூழலில் அல்லது சூழல்களில் எதிர்மறை எண்ணங்களை வந்தே சேரும். உதாரணமாக, தேர்வை சரியாக எழுதாததால் அதில் தோல்வியடைந்து விடுவோமா? என்று நினைப்பது அதில் ஒருவகை. ஆனால் இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன.
கவலைப்படுவதை நிறுத்துங்கள். கவலைகள் உங்களை சூழ்ந்திருக்கும்போது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி நினையுங்கள்.
கவலைத் தரும் கலந்துரையாடலில் கலந்துகொள்வதைத் தவிருங்கள். இது எப்போதும் உங்களைப் பாதிக்கும். ஒருவேளை அதுபோன்ற சூழலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால், நேர்மறையான விஷயங்களை நீங்களே முதலில் பேச ஆரம்பிக்கவும். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு, தங்களின் தோல்விக்கு மற்றவற்றை குறைகூறும் நபர்கள் நிறைய உள்ளனர். அந்தமாதிரி மனிதர்கள் இந்த நாட்டின் பல அமைப்பு முறைகளை(கல்வித் திட்டம், ஊழல், நிர்வாக அமைப்பு போன்றவை) குறைகூறுபவர்களாக இருப்பார்கள். அத்தகைய நபர்கள், ஒரு செய்தித்தாளை படித்தாலும்கூட, அதில் எதிர்மறை விஷயங்களையே தேடி எடுத்துப் படிப்பார்கள். அதுபோன்ற நபர்களை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.
இந்த உலகைப் பற்றி நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.
மற்றவர்கள் கவலையிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன்மூலம் உங்களின் தன்னம்பிக்கை மேம்படும்.
இந்த உலகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டும். அதேசமயம் தூய்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அந்த நம்பிக்கையும் துணைபுரியும்.
நேர்மறையாக சிந்தித்தல்...
உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களின் சக்தி மீது நம்பிக்கையின்றி உங்களால் எதிலும் வெற்றியடைய இயலாது.
மனஅமைதி என்பது ஒரு மனிதனின் வெற்றிக்கும், நிம்மதியான வாழ்வுக்கும் தேவையான அடிப்படைத் தகுதியாகும். பிரச்சினைகளை நம்முடன் தேக்கி வைத்திருப்பது அல்லது அதை நினைத்துக்கொண்டே இருப்பதானது எதையும் செய்யவிடாது. எதிர்மறை எண்ணங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடாது. நாம் நினைத்த காரியத்தில் வெற்றியடைய தேவையான சக்தியை நாம்தான் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்.
எதிர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் கோபம். எனவே கோபமும், கவலையும் எப்போதும் இருக்கக்கூடாது. ஏனெனில், பலகீனமான மனிதர்களிடமிருந்து வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்க இந்த உலகில் பலர் காத்துக் கொண்டுள்ளனர். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பலகீனமானவர்களாக காட்டும். கோபம் மற்றும் கவலை போன்றவை எதிர்மறை எண்ணங்களின் தொடக்கப் புள்ளிகளாக உள்ளன. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும். இதன்மூலமே, நேர்மறை எண்ணத்தின் முதல் படியை நீங்கள் அடைகிறீர்கள்.
வாழ்வின் மோசமானப் பகுதியை கடந்துவிட்டோம், இனிமேல் நமக்கு வசந்தம்தான் என்று நினைக்க ஆரம்பித்தால், எதிர்மறை எண்ணங்களையும் களைய முடியும்.
நம் வாழ்வை உற்சாகமாக்கும் மாற்றம் நமக்கு வேண்டும். புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் நமது எண்ணங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை. எனவே, எப்போதுமே புதிய எண்ணங்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்.
மருத்துவ அறிவியலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை என்னவெனில், ஒரு நோயாளி என்னதான் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், தனது உடல்நலம் விரைவில் தேறிவிடும், தான் பூரண குணமடைந்து விடுவோம், நமக்கு எந்த சிக்கலும் இல்லை என்று நினைத்தால், அவரின் அந்த எண்ணமும், அவர் குணமடைவதில் குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது. அதேசமயம், ஒரு நோயாளி, தான் எளிதாக குணமடையப் போவதில்லை, எல்லாம் முடிந்தது, இனி ஒன்றுமில்லை என்று நினைத்தால் அவரின் முடிவுக்கு அந்த எதிர்மறை எண்ணமும் ஒரு முக்கிய காரணமாகிறது.
மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர், தங்களது அபார நம்பிக்கையால் மீண்டு வந்த வரலாறுகள் ஏராளம். சாதாரண விஷயங்களுக்கே, புல்தடுக்கி இறந்தவர்களும் ஏராளம்.
நமது பலம்...
இந்த உலகில் ஒவ்வொருவருமே, ஒரு தனித்திறமையுடன் பிறக்கின்றனர். ஒருவருக்கு நல்ல நினைவுத்திறன் இருக்கலாம், ஒருவருக்கு விளையாட்டுத் திறன் இருக்கலாம், ஒருவருக்கு குரல் வளம் இருக்கலாம், ஒருவருக்கு சிறந்த ஆராய்ச்சித் திறன் இருக்கலாம், ஒருவருக்கு நல்ல தோற்றப் பொலிவு இருக்கலாம். தனது தனித்திறமையை இளமையிலேயே கண்டுகொண்ட ஒருவர், வாழ்வில் நல்ல உயரத்தை எட்டுகிறார். ஆனால், இதுபோன்றவர்கள் குறைவாகவே உள்ளனர்.
தோல்வியடைந்தவர்கள், தங்களின் குறைகளையும், தங்களின் சுற்றத்தையும் குறைகூறிக் கொண்டே இருந்து விடுவார்கள்.
சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர் சராசரியைவிட குறைவான உயரம் கொண்டவர், ஆனாலும் தனது பேட்டிங் திறமையை சரியான நேரத்தில் அவர் அடையாளம் கண்டதால், அவர் இன்று இந்தளவிற்கு பிரபலமாகியுள்ளார்.
நாம் கண்ட மற்றும் காணும் பல பிரபலங்கள் தன்னகத்தே பல குறைகளை உடையவர்கள். ஆனாலும் குறைகளை ஒதுக்கித்தள்ளி, நிறைகளைக் கண்டு, அவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் இன்று பெரிய மனிதர்களாக வந்துள்ளனர்.
எனவே குறைகளை மறப்போம்! நிறைகளை மட்டுமே நினைப்போம்! வாழ்வில் வெற்றியடைவோம்...
ஓர் வரலாற்று நிகழ்வு...
கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் தென் பாண்டி நாடு என்று சொல்லக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் நடந்த சம்பவம் தான் நீங்கள் படிக்க இருக்கும் நிகழ்வு.
மேலே குறிப்பிட்ட இடத்தில் பிறந்தது ஒரு குழந்தை.
அதன் சிறு வயதில் இலக்கிய ஆர்வமும் அறிவாற்றலையும் உணர்ந்த அந்த சிறுவனின் தந்தை, கடிகைமுத்து புலவர் என்று சொல்லக்கூடிய ஒரு தமிழ் புலவரிடம் பாடம் கற்க தமது பிள்ளையை அழைத்து சென்று படிக்கவிடுகிறார்.
கடிகைமுத்து புலவரும் அந்த சிறுவன் 16 வயது இளைஞன் ஆகும் வரை தமிழ் இலக்கியம் தமிழ் வரலாறு போன்றவைகளை படித்து மிகவும் திறமையானவ மாணவன் என்ற பெயரையும் வாங்குகிறார்.
இந்நிலையில் வட நாட்டில் இருந்து வந்த இன்னொரு புலவர் வாலை வாருதி என்ற பெயருடைய அறிஞர்.
இவர் வட மொழி பண்டிதர் என்று அழைக்கப்பட்டாலும் தமிழை கற்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் புலமை போட்டி பெற்று வென்று வந்தார்.
அதாவது அரசன் மந்திரிகள் பொது மக்கள் மத்தியில் இரண்டு புலவர்களுக்கும் போட்டி நடக்கும் கருத்துப்போர் என அக்காலத்தில் கூறுவார்கள்.
அப்படிப்பட்ட கருத்துப் போட்டியில் மிகவும் திறமையானவரான வாலை வாருதி என்ற புலவர் தமது ஊருக்கு வந்து தமது அரசன் முன் சொல்லுகிறார்..
இந்நாட்டில் எம்முடன் கருத்து வாதம் புரிய கடிகைமுத்து புலவரோ அல்லது அவரது மாணவர்களோ தயாரா என்று சவால் விட்டார்.
இதை கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர்.
அதை எதிர்கொள்ள தயார் என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறுகிறார்.
அவ்வளவுதான் கூட்டம் கூடியது தண்டோரா முழங்கியது.
அரசவையில் மாமன்னன் தலைமையிலான கருத்து யுத்தம் தயாரானது..
ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் வட மாநில பண்டிதரான வாலை வாருதி, மந்திர தந்திரங்கள் செய்வினைகளை கற்றவர் என்றும் இந்த கலையில் பெரிதும் அனுபவம் உள்ளவர் என்றும்..
அதனால் தாம் போட்டி போடும் எதிர் புலவனை மந்திரத்தால் துவம்சம் செய்து விடுவார் என்று ஏற்கனேவே கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர் போட்டிக்கு செல்ல சிறிது தயக்கம் காட்டுகிறார்.
இதே கவலையில் இருந்ததால் உடல் நலிவும் ஏற்படுகிறது.
இந்நிலையில் போட்டி ஏற்படும் நாள் வந்தது எழுந்து நிற்கவே முடியாத கடிகைமுத்து புலவரின் நிலையை உணர்ந்த அவரது மாணவர் (மேலே பார்த்தோம் அல்லவா அவர் தான்).
எம் ஆசிரியர் உடல் நலம் சரியில்லை ஆகவே இந்த வட நாட்டு பண்டிதரை எதிர்க எம் ஆசிரியர் எம்மை போட்டியில் கலந்து கொள்ள கட்டளையிட்டுள்ளார்.
அரசன் அனுமதித்தால் இந்த வாலை வாருதி புலவருடன் நான் கருத்துயுத்தம் நடத்த தயார் என்று சபையினர் முன்பு கூறினார் கூச்சலும் குழப்பமும் மேலோங்க..
ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி உடனே ஆனையிட்டார் (இவர் தான் எட்டையபுர மன்னர்)..
கடிகைமுத்து புலவர் செய்தால் அதில் அர்த்தம் இருக்கும் இந்த சிறுவனை வாலைவாருதி புலவரிடம் போட்டி இட ஆனையிடுகிறேன் என்றார்.
ஆம் கடிகைமுத்துவின் மானவரான இவருக்கு அப்போது வயது 16 இல் இருந்து 17 க்குள்.
சபை அமைதியானது போட்டி ஆரம்பம் ஆனது..
வாலைவாருதி அகத்தையோடு அவையோரை கேளிப்பார்வை பார்த்து விட்டு, மளமளவென ஆரம்பித்தார் தன் பாடலை..
வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய் என முடித்தார்.
அதாவது தமது குருவான கடிகைமுத்துவை தாழ்த்தி பாடி இறுதியில் நான் யார் தெரியுமா சின்னப்பயளே என்று கேளிக்கையாக பாடினார்.
இதை கேட்டு கொண்டு இருந்த அந்த
16 வயது வாலிபர் ரத்தம் கொதிப்பேற கண்கள் சிவக்க ஆரம்பிக்கிறார்.
ஆரம்பிக்கும் முன்..
(நீங்க வாசிக்க போகும் கருத்து கவிதைக்கு அர்த்தம் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படியுங்கள் உங்களுக்கே புரியும்.
மிகவும் பண்டைய தமிழ் வார்த்தை அல்லவே இது.
கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அர்த்தம் விளங்கும்).
( எழுத்தின் அழகை உணர கொஞ்சம் கோபமாக படியுங்கள் காரணம் அவ்வளவு பெரும் சபையில் கோபம் கொப்பளிக்க வீர வசனம் போன்று பேசப்பட்டது இந்த கவிதை ஆகவே கொஞ்சம் கோபமாக படியுங்கள் ).
எழுத்தானியே பேசு
ஏ எழுத்தானியே பேசு
சமரதுரக துங்க மனருஞ் சபா சென்று சரிசமா சன மீதிலே
அமரவொரு நரகொம்பு தின முஞ்சு மாசொல்லும்.
அமுதகவி ராஜ னானே
திமிலபகை வரைவென்ற பருதி யெனும் யெமதெட்ட
தீரனணி வாயில் வித் வான்
உமறு குழ றீடிலண்ட முகடும்ப டீரென்றும்
உள்ளச்சம் வையும்
பிள்ளாய் யாமே.
புலவா உள்ளச்சம்
வையும் பிள்ளாய் யாமே.
என்று கோபம் கொப்பளிக்க பாடி முடித்தார் அவையோர்கள் அனைவரும் ஆச்சரியம் பொங்க அமைதியாய் இருந்தனர்..
வாலைவாருதி எழுந்தார் மன்னிப்பு கேட்டார்.
கடிகைமுத்து புலவரை இகழ்ந்து பேசியதற்கும் மன்னிப்பு கேட்டார், சபையோர் ஆரவாரத்துடன் அந்த சிறுவனை பாராட்டினர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி என்ற குறுநில அரசன் அந்த சிறுவனை பாராட்டி பரிசுகளை கொடுத்து கவுரவித்தார்..
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
தமது ஆசானான கடிகைமுத்து புலவரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
பின்னாளில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி அரசவையில் அரசவை புலவராகவும் ஆக்கினார் அச்சிறுவனை.
யார் தெரியுமா இந்த சிறுவன் ?
சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர்...
சமஸ்கிருதமும், போலி ஆரிய கோட்பாடும்...
கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்குசும் மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்து வந்து சிந்துவெளி பகுதிகளின் மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான். இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
மேலும், சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று என்றும் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பதும் பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்படாத மொழி.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக் கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் கரோத்தி (Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.
அலெக்சாண்டருக்குப் பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப் பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் டெமெட்ரியசு (Demetrius) எனும் கிரேக்கப் பாக்டீரிய (Greeco-Bacteria) அரசன் சிந்துப் பகுதியின் மேல் படையெடுத்து இந்தியக் கிரேக்கப் பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான். அவனது ஆட்சிப் பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது.
இந்தியக் கிரேக்க ஆட்சியின்கீழ்ச் சிந்து வெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது. சிந்து வெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்பு மொழிகள் உருவாயின. அதே போழ்து, கீழைக் கங்ககைக் கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது. ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின.
புத்தர்களும் அருகர் (சைனர்) களுமே அதற்குக் காரணமாயினர். புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.
சிந்து வெளிப் பகுதியிலும் கீழைக் கங்கைக் கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும்.
ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக் கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.
கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (செவ்வனே செய்யப்பட்டது எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது.
மகாயான புத்தர்களாலும் அருகர் (சைனர்) களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.
சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்று விக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.)
வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில் தான் சமற்கிருதம் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.
- ஆய்வறிஞர் குணா...
பா.ஜ.,வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், 'நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி' எனத் தெரிவித்துள்ளார்...
பிரசாந்த் கிஷோர் அவர்களே...
உங்க சொந்தக்காரங்களை இந்தி ஆசிரியர்களாக நியமிக்கலாமே...
போராட்டம் வெளியே வேலைக்கு ஆள் உள்ளே...
ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்ததற்கு வெறும் கற்களை கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்...
அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் சேவைகள் மூலம் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றார்போல், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடிகளை வாரி இறைத்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.
இருப்பினும், இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் சேவைகளில் பல்வேறு குளறுபடிகள், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் சம்மந்தமில்லாத பொருட்களை டெலிவரி செய்வது, பண மோசடி என பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அவ்வகையில், தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான சாம்.சி.எஸ் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளார். தனது சகோதரருக்கு பரிசு வழங்குவதற்காக ஃப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து ஆப்பிள் வாட்ச் ஒன்றினை சர்ப்ரைசாக சகோதரரின் முகவரிக்கு டெலிவரியாகும்படி ஆர்டர் செய்திருக்கிறார்.
டெலிவரி செய்யப்பட்ட ஆர்டரை பிரித்து பார்த்தபோது அதில், ஆப்பிள் வாட்ச்சுக்கு பதில் 3 கற்கள் நன்றாக பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனையறிந்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த அதன் மீது அந்நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் இருந்துள்ளது.
இதனால் கடுமையான அதிருப்திக்கு ஆளான சாம்.சி.எஸ்., தனது ட்விட்டர் பக்கத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு மோசடி பேர்வழி என்றும், அந்த தளத்தில் இருந்து யாரும் எதையும் வாங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தீயாகப் பரவியதோடு, மக்களும் ஃப்ளிப்கார்ட்டில் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் எதுவும் சரியானதாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டு புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்...
பாதுகாப்பு என்ற பெயரில்...
தடுப்புச் சுவர் வேண்டுமானால் மலர்ச் செடிகளுக்கு போடலமே தவிர...
அதன் நறுமணம் என்னும் தன்மைக்கு தடுப்பு சுவரால் தடை போட முடியுமா.?
இது மலர்ச் செடிகளுக்கு மட்டுமல்ல...
மலர் போன்ற மென்மை தன்மை கொண்ட மனித மனதிற்கும் பொருந்தும்...