13/11/2017

எண்ணமின் அலைகளின் பயணம்...


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

ஜாதிக்காயின் மருத்துவ மகிமைகள்...


1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்.

2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos.

3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.

விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.

4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.

5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”

அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.

எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.

ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.

ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது...

இலுமினாட்டி களும் உலகமும்...


உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் வரும் காலங்களில் அனைவரும்
ஒரு ஆட்சிக்குள் நுழைவார்கள்...

உதாரணமாக இந்தியாவில் ஆதார் கார்டு.. வங்கியில் உள்ள டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு.. இதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் படுகின்றார்கள்..

இதனை இன்னும் மிக எளிதாக கொண்டு வரப்படும்..

அது மிக முக்கியமாக.. மருத்துவர்கள் துணை கொண்டு.. தடுப்பூசி போட்டால் தான் நோய்களை தடுக்க முடியும்.. நோய் இல்லாமல் வாழ முடியும்  என்பதை போல..

மக்கள் மனதில் பயத்தை சாதகமாக்கி அதே போன்று வரும் காலங்களில் bio chip போன்ற ஒரு சிறு ஊசி குழுந்தைகளுக்கு போடப்படும்..

ஏன் என்றால் அந்த குழந்தைகள் தான் இவர்களது ஆட்சியில் வாழும் சந்ததினர்கள்,

அதன் மூலம் வரும் கால சந்ததினர்கள் அனைவரும் இவர்களது ஆளுகைக்குள்
கொண்டு வரப்படுவார்கள்..

அப்படியானல் உதாரணமாக ஒவ்வொரு மனிதனுடைய அனைத்து பணிகளும் ஒருவருடைய வரவு ,செலவு , எந்த ஒரு சிறு பொருட்களை வாங்கினாலும், விற்றாலும்.. எங்கு போனாலும், வந்தாலும்..

இப்படி காலை முதல் இரவு தூங்கும் வரை.. நம் செயல்கள் அனைத்தும் கண்காணிக்கும் ஒருவன் ஆட்சிக்குள் நுழையப்படுவார்கள்.

அந்த ஒருவனின் ஆட்சி காலம் வந்தே தீரும்..

இந்த ஆட்சியில் இருந்து தப்பிப்பவர்களும் இருப்பார்கள்..

அவர்கள் தான் நம்பிக்கையுடையவர்கள், அந்த நம்பிக்கையாளர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்துவது என்னவென்றால் தடுப்பூசியை நம்பாதீர்கள் மற்றும் அதே தடுப்பூசி போல தான் வரும் காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு ஊசி போடப்படும்..

அதை உங்கள் குழந்தைகளுக்கு போட வேண்டாம்.. அவர்கள் தான் நாளை பெரியவர்களாக இந்த ஆட்சியில் கீழ்
வாழ கூடியவர்கள்..

உங்களை நீங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்...

திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது...


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின் என்பது திருவாசகம்.

அண்டமாகிய இந்தப் பிரபஞ்சத்தின் காட்சியை விளக்குவதென்றால், இங்கே உள்ள பொருட்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து அழகுற திகழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையோ நூறு கோடிகளுக்கும் மேற்பட்டது. இந்த எண்ணிக்கையும் நிலையாக இருப்பதில்லை அவை விரிந்து கொண்டே செல்கின்றன. இது எப்படி இருக்கிறதென்றால், வீட்டுக் கூரையில் உள்ள சிறிய ஓட்டை வழியாக வெயில் நுழையும்போது, அந்த நீண்ட குழல் வடிவமான ஒளியில் பல கோடி தூசுத் துகள்கள் சுழலுமல்லவா.. அதைப் போல அண்டம் முழுவதும் அணுத் துகள்களும் அவற்றாலான பெரும் பொருட்களும் எல்லை வகுக்கவே இயலாத வகையில் சுழல்கின்றன. இந்த அண்டத்தின் அணுக்களில் சிறியதாகத் தெரிபவன் யாரென்றால் யாவற்றுக்கும் பெரிதான இறைவன் – என்பது இப்பாடலின் கருத்து.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய இதே கருத்தைத்தான் நவீன அறிவியல் இப்போது செயற்கைக்கோள் உதவியுடனும் தொலைநோக்கிகள் துணையுடனும் முன்வைக்கிறது.

நவீன இயற்பியலின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று, பகுதிக் கோட்பாடு (quantum theory). மற்றொன்று, தொடர்புக் கோட்பாடு (relativity theory).

பகுதிக் கோட்பாட்டின் சாரம், ‘பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில் ஒளி பயணித்துக் கொண்டுள்ளது. இந்த ஒளி இடைவிடாத அலைபோலப் பயணிப்பதில்லை..

ஏனெனில் ஒளி என்பது ஒரே கற்றையான பொருள் அல்ல. அது எண்ணற்ற துகள்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஒளித்துகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளது.

இவ்வாறு பகுதி பகுதியாக பயணிக்கும் ஒளிக் கற்றைகள் பொதுப் பார்வைக்கு ஒரே அலைபோலத் தெரிந்தாலும் உண்மையில் அவை தனித் தனித் துகள்கள்தான். எல்லாத் துகள்களுக்கும் இடையில் வெளி (space) உள்ளது. இந்த வெளி நிலையானது அல்ல, விரிந்துகொண்டே இருக்கிறது’

’இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ எனும் இரு வரிகள் மிக அழகாக இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன.

‘வீட்டினுள் நுழையும் ஒளிக் கற்றையைப் பாருங்கள். அது பொதுத் தோற்றத்தில் ஒரே ஒளிக் கற்றைபோல் இருக்கும். ஆனால், அக்கற்றையின் உள்ளே எண்ணற்ற நுண் அணுத்திரள்கள் இருக்கின்றன..

இதேபோல் அண்டம் முழுவதும் ஒளிக் கற்றையின் பயணம் நிகழ்கிறது. வீட்டில் விழும் ஒளிக் குழலில் நுண் துகள்கள் இருப்பதைப் போல அண்டத்தில் பெரிய கோள்களும் பிற பொருட்களும் உள்ளன. இறைவன் பெரியவன். ஆனாலும் அவனைச் சிறியோனாகவும் காண இயலும்..

எப்படி என்றால், வீட்டுக் கூரையிலிருந்து கசியும் ஒளியில் துகள்கள் மிதப்பதும், அண்டத்தில் பெரும் பொருட்கள் மிதப்பதும் ஒரே விதமாக இருக்கிறதல்லவா. அதைப் போல இறைவன் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கிறான்’

தொடர்புக் கோட்பாடு என்பது, ’அண்டத்தில் உள்ள பொருட்களைத் தனித்தனியே புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும் சாத்தியமற்றது. அதாவது, பூமி எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை, பூமியை மட்டுமே ஆய்வு செய்து கூறிவிட இயலாது. அவ்வாறு கூறினால் அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கும். ஏனெனில் பூமியின் வேகம் சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இயக்கம் பால்வெளியின் இயக்கத்தைச் சார்ந்துள்ளது. பால்வெளியின் இயக்கமோ அண்டத்தின் கோடிக் கணக்கான பகுதிகளைச் சார்ந்துள்ளது. இவ்வாறு ஒன்றோடு ஒன்று சார்ந்தும் தனித்தும் உள்ளன. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுள்ள வெளி (space) எப்போதும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அதாவது, எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமாக இருக்கும் வெளி, நிலையாக இல்லாமல் விரிந்துகொண்டே உள்ளது. ஆகவே, பிரபஞ்சத்தை மதிப்பிடுவது துல்லியமான (absolute) செயலாக ஒருபோதும் இருக்காது. மாறாக, ஒன்றுக்கு ஒன்று ஒப்பிட்டுக் கூறுவதே சாத்தியம். இவ்வாறு ஒன்றோடு மற்றொன்று கொண்டுள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதால், இதன் பெயர் தொடர்புக் கோட்பாடு’

” அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்ற வாசகங்களுக்கு வேறு எந்தப் பொருளும் இல்லை.

நேரடியாகவே பின்வரும் செய்திகளைத் தாங்கியுள்ளன இவ்வாசகங்கள்:

1. அண்டம் என்பது ஒன்றல்ல, பல்வேறு பகுதிகளை அடக்கியது. ஆகவே ’அண்டப் பகுதி’ எனப்பட்டது.

2. ’உண்டை’ எனும் சொல்லுக்கு ‘உருண்டை, கூட்டம்’ உள்ளிட்ட பொருட்கள் உண்டு. உருண்டை வடிவமான கூட்டம் என்பதை உண்டை எனலாம்.

3. ‘பிறக்கம்’ எனும் சொல்லுக்கு, ‘ஒளி, உயர்ச்சி, குவியல்’ ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

4. ஆக, ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்றால், ”எண்ணற்ற அளவில் உள்ள அண்டத்தின் ஒரு பகுதி, உருண்டை வடிவத்தில் கூட்டம் கூட்டமாக, ஒளிக் குவியலாக உள்ளது” என்று அர்த்தம்.

5. இந்தக் காட்சியைக் காணும்போது, அது அளவிடுவதற்கே இயலாததாகவும் மேன்மை பொருந்திய காட்சியாகவும் (வளப்பரும் காட்சி) உள்ளது.

6. ’ ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்றால்,

பின்வரும் பொருள் கொண்ட வாசகம்,

’இந்த அண்டப் பகுதியின் பொருட்கள் யாவும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்று பொருந்துமாறு நின்றுகொண்டுள்ளன. இதன் அழகை விவரிப்பதானால்...அவை நிலையாக நில்லாமல் நூற்றுக் கணக்கான கோடிகள் எனும் எண்ணிக்கையில் விரிந்து கொண்டுள்ளன’.

மேற்கண்ட விளக்கங்களில் ஒரே ஒரு சொல்லைக் கூட மிகைப்படுத்தி நான் எழுதவில்லை. திருவாசகத்தில் உள்ள பொருள் மாறாமல் நேரடியாக விளக்கியுள்ளேன்.

திருவாசகம் இயற்றப்பட்டு ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பாடல் உள்ள பதிகத்திற்கு ‘திருவண்டப் பகுதி’ எனப் பெயரிட்டுள்ளார் மாணிக்கவாசகர். அதாவது, பெருமைமிகுந்த அண்டத்தைப் பற்றிய பகுதி என்று பொருள். பிரபஞ்சத்தை ‘திரு’ எனும் அடைமொழியால் அழைக்கும் பணிவு திருவாசகத்தின் சிறப்புகளில் ஒன்று.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் திருவண்டப் பகுதி எனும் சொல்லை, ‘Nature and Development of the Universe’ என்று மொழி பெயர்த்துள்ளார். ‘பிரபஞ்சத்தின் இயல்பும் வளர்ச்சியும்’ என்று இதற்குப் பொருள். ஏனெனில், திருவண்டப்பகுதி இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய நுட்பமான விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது.

தமிழர்களின் அறிவியல் மரபிற்கும் இறையியல் மரபிற்குமான சிறந்த உறவை ஏற்படுத்திய பெருமை திருவாசகத்திற்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, இறையாற்றலை ஓர் உருவத்திற்குள் அடக்காமல் உணர்ந்த பெருஞ்சிறப்பும் மாணிக்கவாசகருக்கு உண்டு.

இறையை நோக்கி ‘ஆக்கம் அளவு இறுதி இல்லாய்’ என்றவர் அவர். ’உனக்கென ஒரு வடிவமும் அளவும் முடிவும் இல்லை’ என்பது இதன் கருத்து. ‘ஆணாகி பெண்ணாகி அலியாகி’ நின்றாய் என்றும் இறையைப் பாடியவர் மாணிக்கவாசகர்..

சமயங்களுக்கு அப்பாற்பட்ட பேருண்மைகளைத் தாங்கியுள்ள மந்திரத் தொகுப்பாக திருவாசகத்தைக் காண்கிறேன் நான்...

அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்...


450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட அமெரிக்க முடிவு – அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்?

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சி விடயம் ஒன்றும் தற்போது பயங்கரமாக பரவத் தொடங்கியுள்ளது.

அதாவது உலகம் அதி பயங்கரமான அழிவைச் சந்தித்திடுமா என்ற கேள்வியே அது.

இதற்கு முக்கிய காரணம் உண்டு 2016 நடக்கப் போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சுமார் 450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு கூறியமையால் தான்.

உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கின்றது.

நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.

காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை.

கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

அதே போன்று மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை.

தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிராடமஸின் கணித்து கூறியுள்ளார்.

இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளதாகும்.

அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அது அப்படியே நடந்து விட்டது.

அதன் பின்னர் அமரிக்காவின் கடைசி அதிபர் தொடர்பில் ஒபாமா எனவும் கூறியுள்ளார்.

அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா?

அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் அவரின் கணிப்பு கூறவில்லை.

ஆனாலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என 450 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

அவ்வகையில் 2016 பற்றி அவர் கணித்துள்ள பயங்கரமான விடயங்கள்,

2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும்.

இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே பல நாடுகளில் பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

மேலும் 2016 இன் பின்னர் கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம்.

இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம்.

ஆனால் அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் அவை உலகை அழிக்க திட்டமிடும். ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

ஈராக் போர் தான் உலக அழிவுக்கான முதல் படி எனவும் 450 வருடங்களின் முன்பே நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப்போன்றே தற்போது அடுத்த உலக யுத்தம் பற்றியும் பேசப்பட்டு கொண்டு வருவதோடு பயங்கரவாதமும் உலகில் தலை தூக்கியுள்ளமை அவதானிக்க கூடிய ஒன்றே.

தற்போது அமெரிக்கா தேர்தலும் அவர் ஏற்கனவே கூறிய பல்வேறு விடயங்களும் பலித்துள்ளமையால் தற்போது உலக அழிவு கொள்கையும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளிவருகின்றது.

தொடர்ச்சியாக அவர் கூறியவை நடந்து வருகின்ற காரணத்தினால் உலகம் பயங்கர அழிவை சந்தித்திடும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்...

இலுமினாட்டி இரகசியம்...


இமயமலை ஆழ்கடலுக்குள் இருந்ததா ?


சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.

உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை..

நமது உலகம் தோன்றும் போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.

ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.

பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்' பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு' நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.

நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல் கொண்டு சென்றுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன..

இதே போல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.

இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்?

பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்திய போது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.

இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன..

மறைக்கப்படும் உண்மைகள்...


இலுமினாட்டி களின் டைட்டானிக்கும் உலக அரசியலும்...


இந்த உலக அரசியல் பற்றிய விழிப்புணர்வு நம்மை இலுமினாட்டிகளின் மாய வலையிலிருந்து தப்பிக்க வைக்கும்.

அவர்கள் நம் வாழ்வை சீரழித்து வருகிறார்கள் எல்லா வழிகளிலும். இப்பொழுதைய பதிவில் அட்லண்டிக் பெருங்கடல் பேரழகாய் ஒய்யாரமாக பயணம் செய்த டைட்டனிக் பற்றி பார்ப்போம்...

இவளின் ஒய்யாரப் பயணம் 15 ஏப்ரல் 1912, அதிகாலை 2:20 ல் நிறைவு ஏய்தியது..

இந்நிகழ்விற்கு காரணமாகவும் இலுமிணாட்டிகளே இருந்துள்ளனர்..

இவர்கள் எப்பொழுதுமே ஒரு கல்லில் பல மாங்கா அடிப்பவர்கள். விழுந்த ஒரு மாங்காவை பற்றி மட்டும் இதில் பார்ப்போம்...

US Federal Reserve bank...

இந்த மாங்காவை பற்றி தான் பார்க்க போகிறோம்..

இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தார் அடுத்து அமேரிக்காவுக்கு குறிவைக்கின்றனர்.

நம்ம இலுமிணாட்டிகள் அவங்க இருப்பது அனைவருக்கும் தெரிய கூடாதுனு முடித்தவரை சட்டப்படி தான் செய்வார்கள்.

சில நேரம் சட்டங்களை உருவாக்கியும் செய்வார்கள்.

அதன்படி யூனிடட் சிடேட் பெடரல் ரிசர்வ் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தாங்க. அப்போ அதற்கு எதிராக நின்றவர்கள் முக்கியமாக மூன்று பேர்.

Benjamin Guggenheim,  Isa strauss, Jecob Astor...

இவர்களால் 1912 ஏப்ரல் மாத தொடக்கத்தில்  அந்த வங்கி திட்டம் ஊத்தி மூடப்பட்டது..

TITANIC SECRET...

டைட்டானிக் பயணம்.. அதே ஏப்ரலில் இம்மூவரும் டைட்டானிகில் பயணம் செய்தனர். மூன்று பேரும் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் 15 தேதி கப்பலோடு மூழ்கினர்..

மீண்டும் ரிசர்வ் வங்கி டிசம்பர் 1913 ல் US Federal Reserve Bank செயல்பட ஆரம்பித்தது. இதுவே விழுந்த மாங்காய்களில் ஒன்று..

எப்போதுமே சொல்லிட்டு செய்வது இலுமிணாட்டிகள் இதையும் அப்படி தான் செய்தார்கள்..

Morgan Robertson, 1898ல Futility என்று ஒரு நாவல் வெளியிடுகிறார்..

அதில் டைட்டன் என்ற மூழ்கடிக்க முடியாத கப்பல் ஏப்ரல் மாதத்தில் ஒரு பனிபாறையில மோதி மூழ்குது,  உயிர் காக்கும் படகுகள் குறைவா இருந்ததால நிறைய பேர் இறந்து போறாங்க. இது கதை..

இது பதினான்கு ஆண்டுகள் கழித்து உண்மையானது டைட்டானிக்...

நான் ஜெகப் அஸ்டர் என சொல்லியதை கவனித்தீர்களா..

அஸ்டர் குடும்பமும் இலுமிணாட்டி குடும்பங்களில் ஒன்று..

அப்போ ஏன் இவரும் அந்த வங்கி வரவிடாமல் தடுக்க முயர்ச்சித்தார்..

இதை அடுத்த  பதிவில் பார்க்கலாம்...

உலகில் முதலில் தோன்றியது நம் தமிழே...


10 ஆண்டுகள் மன்றாடியும் சாலையை சீரமைக்காததால், தாங்களே நிதி திரட்டி களத்தில் இறங்கிய பெரம்பலூர் கிராம மக்கள்...


பெரம்பலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மன்றாடிப் பார்த்த கிராம மக்கள், அவர்கள் அலட்சியம் செய்ததால் தாங்களே நிதி திரட்டி சாலையை சீரமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்துக்குச் செல்லும் சாலை, பழுதடைந்தே பத்து ஆண்டுகளுக்கு மேலாவதாகச் சொல்லப்படுகிறது.

போக்குவரத்துக்கு தகுதியற்றதாகிப் போனதால் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் அண்மைக் காலமாக வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் அவசரகால 108 ஊர்தி, வாடகை வாகனங்கள் என எதுவுமே கிராமத்துக்குள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பலனின்றிப் போனதால், தங்களுக்குள்ளேயே நிதி திரட்டி சாலையை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் என எல்லோரும் ஒன்றிணைந்து உணவு சமைத்து பரிமாறி உண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாங்கள் போடும் இந்த சாலை வழியே அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்க வரவுள்ள வேட்பாளர்களுக்காக காத்திருக்கின்றனர் அரசலூர் மக்கள்...

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்கள் உத்தரவு...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 59...


பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு...

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

மேலும் பயணிப்போம்...

ஈரான் - ஈராக் எல்லையில் நேற்று இரவில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு. 129 பேர் உயிரிழப்பு...


குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி, ஆட்டோக்கள் மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி, 20 பேர் காயம், குடிகார இளைஞரை பாதுகாத்த போலீஸ்...


சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில், ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களை சொகுசு கார் இடித்து நொறுக்கியது.

இந்த விபத்தில் ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும், பல ஆட்டோக்கள் நொறுங்கிய நிலையில், படுகாயமடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞரின் புகைப்படம் சிக்கியுள்ளது. காரை தாறுமாறாக ஓட்டிய இந்த இளைஞர் குடி போதையில் இருந்துள்ளார்.


சனிக்கிழமை இரவு பார்ட்டியை முடித்து விட்டு தனது நான்கு நண்பர்களுடன் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளார் இவர். விபத்து நடந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இந்த இளைஞரையும், உடன் வந்த நண்பர்களையும் பாதுகாப்பாக அழைத்து சென்றிருக்கின்றனர்.

காவல்துறை காசுள்ளவனுக்கு நண்பன்...

கனமழையால் நாகை மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளம் சூழ்ந்த தலைஞாயிறு பேரூராட்சியில் படகில் சென்று ஒவ்வொரு வீடுகளுக்கும் உணவு வழங்கும் தன்னார்வலர்கள்...


கடலூரில் கடல் சீற்றம்; 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...

         
கடலூரில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்தன.

கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர், பணிக்கு செல்வோர் அதிக பாதிப்படைந்தனர். இதேபோன்று கடல் சீற்றத்தினால் நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், கடலூரில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. புதுச்சேரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் 100க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன...

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்...


ஆந்திராவின் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்...


மேலும் 4 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது...

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்கார் அரசியல்...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 10...


இன்று உண்மைகள் உறங்குவதில்லை என்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறுவது 10-ம் தீர்க்க தரிசனம் ஆகும். இதில் இடம் பெறும் குறிப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த வருங்கால நிகழ்வுகளின் தொகுப்பே இதுவாகும்.

10-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண உள்ள தீர்க்க தரிசனம் என்னவெனில் வானில் ஆளில்லாத ஒரு விமானம் நமது இந்திய வான் எல்லையில் திடீரென்று வட்டமிடும் என்றும், அதனை நமது ராணுவம் கண்டறிய முற்படும் சமயத்தில் அது திடீரென்று மறைந்துவிடும் என்றும், இது சமீபகால நிகழ்வாக நடக்க இருப்பதாகவும், இச்சம்பவம் பலமுறை இந்திய தேசத்தின் எல்லைப் பகுதியில் நடக்கும் என்றும், இது இந்திய மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாக அமைய உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் இங்கு நமக்கு முக்கிய குறிப்பை தருகின்றது.


காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று நாயகன் முதலாம் இராஜராஜசோழனின் இரகசியம் ஒன்று மக்கள் அறியக்கூடிய வரலாற்று இரகசியம் ஒன்று பூமி திரட்டாக தமிழக மண்ணில் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகவும், அது மக்களால் தெரிந்து கொள்ளும் சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம் பெற்றுள்ள 17-ம் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டுள்ள சில குறிப்புகள் நடக்க துவங்கும் காலமாக இருக்கும் என்று 10-ம் தீர்க்க தரிசனத்தில் மற்றொரு குறிப்பு நமக்கு இதனை தெரிவிக்கின்றது.


அன்னை உமையவள் குடிகொண்டுள்ள ஒரு ஆலயத்தில் மகா அதிசயம் ஒன்று தற்போது நடைபெறும் காலம் இதுவென்று மக்கள் அறியும்படி ஒரு நல்ல சம்பவம் திடீரென்று நடக்கும் என்றும், அந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு ஆறு நீண்டு ஓடும் என்றும் அந்த ஆற்றின் கரை ஓரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு விஷ்ணு ஆலயம் தற்போது அமைந்துள்ளது என்று 10-ம் தீர்க்க தரிசனத்தில் மற்றொரு குறிப்பு நமக்கு இச்செய்தியை சுட்டிக் காட்டுகின்றது.



 ரஷ்ய நாட்டில் ஏற்படும் ஒரு கோர விபத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணத்தை சந்திக்க இருப்பதாகவும், இது திட்டமிட்ட சதிச் செயலாக இருக்கும் என்றும் 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.



சீன தேசத்தின் அத்துமீறலை பல நாடுகள் தற்போது கண்டிக்கும் என்றும், இந்திய சீன தேசத்தின் பேச்சு வார்த்தையில் பல முட்டுகட்டைகள் உருவாகும் என்றும், இதில் பாகிஸ்தான் நாட்டின் சதி அம்பலமாகும் என்றும்,  இந்தியா, சீனாவிற்கு ஒரு தக்க பதிலடி கொடுக்கும் என்றும், இச்சமயத்தில் 61-ம் தீர்க்க தரிசனமான ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய நிகழ்வு அப்போது நிகழக்கூடும் என்று 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



இந்திய தேசத்தின் வட பகுதியில் திடீரென்று ஒரு மிகப்பெரிய பூமி அதிர்வு நடக்க உள்ளதாகவும், இது இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நடந்து முடியும் என்றும், அப்பொழுது பல மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



சுனாமி என்ற ஒரு நிகழ்வு தற்போது நிகழக்கூடியது என்றும், இது இந்து மகா சமுத்திரத்தில் உருவாக கூடியதாக உள்ளது என்றும், இது நிகழ்வதற்கு முன் சுமித்ரா தீவில் ஒரு பயங்கர நிலநடுக்கம் உருவாகும் என்றும், அது நிகழ்ந்த 8 மணி நேரத்தில் இந்து மகா சமுத்திரத்தில் சுனாமி உருவாக உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



மகா தவசியான ஸ்ரீஅகத்திய மகாமுனிவரின் அவதாரப் பெருவிழாவை கொண்டாடும் சமயத்தில் தென் தமிழகத்தின் சிவாலயம் ஒன்றில் வானிலிருந்து ஒரு ஒளிபிழம்பு புறப்பட்டு அதன் கருவறையின் மீது விழும் அதிசய நிகழ்வை ஒரு பௌர்ணமி அன்று தமிழக மக்கள் காணும் அதிசய நிகழ்வு தற்போது நடக்க உள்ளதாகவும், இது பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக மக்கள் பேசிக் கொள்வார்கள் என்றும், அதே சமயத்தில் திருச்சி சமயபுரத்தில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடக்கும் என்றும், அன்றைய தினத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள 58-ம் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வு நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



எல்லையில்லாத ஆனந்தத்தில் மக்கள் திளைத்திருக்கும் படியான ஒரு தெய்வீக நிகழ்வு ஒன்று சென்னையில் புறப்பகுதியில் உள்ள ஒரு  மலைக்குன்றில் நடக்க உள்ளதாகவும், அந்த மலைக்குன்று விமானம் ஓடும் பகுதியில் இடம் பெற்றுள்ள மலைக்குன்று என்று 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சினிமா நடிகர்களுக்கு இது போதாத காலமாக மீண்டும் அமைய உள்ளதாகவும், அதுவும் இரு மூத்த நடிகர்களுக்கு இது போதாத காலமாக அமைய உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. நகைச்சுவை நடிகர் ஒருவரின் மரணம் தற்போது இயற்கையாக நடக்க இருப்பதாகவும், அது நடந்து முடியும் 7-ம் தினத்தில் அரசியல்வாதியின் மரணம் ஒன்று நிகழ உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு சமிக்கை இந்திய விஞ்ஞானிகளுக்கு வரும் என்றும், இது உலக வரலாற்றில் இந்திய விஞ்ஞானிகளுக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய வான் சம்பந்தப்பட்ட ஆய்வில் ஒரு மைல்கல்லாக அமையப் போகிறது என்றும், இதனை தொடர்ந்து வான் மண்டலத்தில் நமது இந்திய விஞ்ஞானிகளின் தேடுதல் ஒரு புதிய பரிணமாத்திற்கு கூட்டிச் செல்ல உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஒருவரின் மரணத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் மர்மங்களாக இடம் பெற்று இருப்பதை உளவு நிறுவனம் கண்டறிந்து வியப்படையும் என்றும், அவரின் இரகசிய அறையில் விஞ்ஞானமே வியக்ககூடிய அளவிற்கு ஒரு பொருள் இடம் பெற்றிருக்கும் என்றும், இதன் வழியாக உலக மக்கள் இதுவரை தேடும் புதிரான ஒரு புதிர் விஷயத்திற்கு இது விடைதேடும் ஒரு தூண்டிலாக அமையப் போகிறது என்று 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தெரிவிக்கிறது.


அம்மா என்ற அடைமொழிக்கு உரிய ஒருவரின் இரகசியங்கள் தற்போது இணையதளத்தில் உலாவ வரும் என்றும், இதனை மக்கள் கண்டு அதிர்ச்சி அடைவார்கள் என்றும், அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத அளவில் ஒரு செய்தி ஊடகம் அவரின் இரகசியத்தை அம்பலபடுத்தும் ஒரு நிகழ்வு உடனே நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கல்பாக்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு அருகே வசிக்ககூடிய கிராம மக்களிடையே ஒரு விசித்திரமான உலோகத்தின் பயன்பாடு கண்டறியப்படும் என்றும், இதனை உலகமே கண்டு ஆச்சரியப்படும் நிகழ்வு ஒன்று தற்போது நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

முற்றம் கடல்பகுதி, காவேரிப்பட்டணம், சாத்தனூர், பூலாம்பட்டி, நெருப்பூர், அந்தியூர், பரிசல்பாடி, கண்ணம்பாடி இந்த கிராமங்களில் பல வினோத சம்பவங்கள் இனி நடக்க உள்ளதாகவும், மக்கள் பீதியில் ஆழ்ந்து போகும் பல சம்பவங்கள் இனி நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஆதாம், ஏவாள் வாழ்ந்த நிலப்பரப்பை வரும் 2018-ம் ஆண்டில் உலகம் அறிந்து கொள்ளும் என்றும், அதன் நிலப்பரப்பில் பல அதிசய கல்வெட்டுகள், கருவிகள் கண்டெடுக்கப்படும் நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இச்செய்திக்கும் இலங்கைக்கும் மிக, மிக நெருக்கம் உள்ளதாக 10-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சத்தியயுகத்தின் காலப் பயணம் தற்போது துவங்கி 60 நாட்கள் ஆயிற்று என்றும், இந்த சத்திய யுகத்தின் யுகப்புரட்சி ஒன்று இந்திய மண்ணில் தற்போது நடக்க உள்ளதாகவும், இதனை உலக மக்கள் வட நாட்டில் நடக்கும் மகா கும்பமேளா எனும் விழாவில் நடக்கவிருக்கக் கூடிய மர்மம் நிறைந்த ஒரு சம்பவத்தின் வாயிலாக அறிய முடியும் என்று 10-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு அரிய குறிப்பை வெளிப்படுத்துகின்றது.

பிரபஞ்சம் வியக்கும் அதிசயங்களை இனி மக்கள் காண்பார்கள் என்றும், அது உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்திற்கு மணி மகுடமாக விளங்கிடும் என்றும், அதுவரை நாம் காத்திருப்போம் என்று இப்பகுதி நமக்கு நிகழ உள்ள நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

விஜய் டிவியை தடைச் செய்ய வேண்டும்...


திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக, திருநங்கை ஒருவருக்கு தற்காலிக ஜீப் ஓட்டுநர் பணியை வழங்கிய மாவட்ட நிர்வாகம்...


திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம், பாத்திமாநகரை சேர்ந்தவர், திருநங்கை சினேகா, இவருக்கு மாவட்ட வழங்கல் மற்றும் மற்றும் விற்பனை சங்கத்தில் தற்காலிக, ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சினேகாவுக்கு ஓட்டுநருக்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் கு.ராஜாமணி வழங்கினார்.

இதுகுறித்து திருநங்கை சினேகா கூறியதாவது, அலுவலகத்தில் பணிபுரியும், சக உழியர்கள் தன்னிடம் மிகுந்த அன்பு காட்டுவதாகவும், தனக்கு கிடைத்ததுப்போல அனைத்து திருநங்கைகளுக்கும் வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்...

வேற்றுகிரக வாசிகள் பற்றிய தகவல்கள்...


ஆட்டோ ஓட்டுநர்கள் அபார சேவை, பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து அசத்தினர்...


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆட்டோ ஓடடுநர்கள் ஒன்றிணைந்து பேருந்து நிலைய பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா எடுத்து வரும் பல அதிரடிகள் மூலம் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஊட்டி மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் சண்முகம் மற்றும் செயலாளர் ஜாபீர் தலைமையில் சுமார் நூறு ஆட்டோ ஓட்டுனர்கள் இணைந்து பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி மண் மூடி கிடந்த கால்வாய்களை எந்த வித முக சுளிப்பும் இன்றி கால்வாயில் இறங்கி முழுவதுமாக மண்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

ஆட்டோ ஓட்டுநர் அடாவடிகாரன் என்ற தவறான கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிக்காட்டிய ஊட்டி ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்கள்...

பாஸ்ட் டிராக் முதலாளி அம்பிகாபதியும் நாயுடு சமூகத்துக்காரர் என்பது விடுபட்டுள்ள தகவல்...


ரெய்டு நடத்த தேவையான மொத்த வண்டியும் பாஸ்ட் ட்ராக் நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் ஓனர் அம்பிகாபதி என்னும் நபர்.

இவர் பிரபல அரசாங்க புரோக்கர், டொபாக்கோ புகழ் வை.கோபால்சாமி நாயுடு கட்சியின் "முக்கிய" பிரமுகர்..

மோடிக்கு தேர் பாகனாக இருந்து தமிழ்நாட்டில் இழுத்து வந்து விட்ட கோபால் பல தரகு வேளைகளில் ஈடுபட்டிருப்பது நமக்கு தெரியும், அப்படியே கோபால் ரெய்டை எதிர்த்து அறிக்கை விட்டதையும் கவனித்திருப்பீர்கள்..

கணக்கு சரியாக வருகிறதா ?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்...


1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது...

மனிதர்கள் வேற்று கிரகவாசிகளா? உண்மையை மறைக்கும் நாசா...


வேற்று கிரகவாசிகள் மனிதனுக்கு இன்றைய நவீன யுகத்தில் சவாலாக காணப்படும் ஓர் சுவாரசியமான புதிர் என்று கூட சொல்லலாம்.

பூமி எவ்வாறு தோன்றியது? அதில் மனிதர்கள் எவ்வாறு கால்பதித்தனர்?

இதற்கான பதில் விஞ்ஞானம் மற்றும் ஆன்மிக ரீதியாக நிறைய காணப்பட்டாலும், ஆரம்பத்தில் பூமியில் செல் உயிர் ஒன்றின் தோற்றத்தாலேயே உயிர்கள் தோற்றம் பெற்றதாக நம்பப்பட்டு வருகின்றது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் பூமியில் காணப்படும் மனிதர்கள் வேற்றுக் கிரகவாசிகள் தான் என்ற ஓர் அறிவியல் செய்தி தற்போது கசிந்து கொண்டிருக்கின்றது.

அது எவ்வாறேனில் ஆரம்பத்தில் தோன்றியதாக கூறப்படும் அந்த செல் உயிரி இந்தப் பூமியை சேர்ந்தது அல்லவாம்.

சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோற்றம் பெற முன்பு செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன.

சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.

அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.

இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது.

இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தனவாம்.

ஆனால் இந்த விண்கற்கள் பூமியை வந்தசேர எடுத்துக் கொண்ட காலம் மிகப்பெரிதாகும்.

இச்செயற்பாட்டை Seeds Everywhere என்ற வார்த்தையினால் வரையறுக்கலாம்.

விண்வெளியில் ஒழுங்கின்றி சுற்றித்திரியும் விண்கற்களில் நுண்ணுயிரிக்கள் புதைந்திருக்கின்றன, அந்த விண்கற்கள் நுண்ணுயிரிகளை சுமந்து செல்லும் கேப்சூல் போல் செயற்படுகின்றது.

பறந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு உயிரினங்களை அனுப்ப இது ஒரு சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அண்மையில் உலகமும் இவ்வாறான ஓர் பரீட்சையை நடத்தியிருக்க கூடும் என்றால் நம்பமுடிகின்றதா?

நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று பத்துவருட பயணத்தின் பின் விண்கல் ஒன்றில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

மனிதகுலத்தின் பெரும் வரலாற்று சாதனையாக பேசப்பட்ட நிகழ்வு இது.

அந்த விண்கலம் அங்கு சில ஆய்வுகள் நடத்தப் போவதாக நாசா தெரிவித்திருந்தது.

ஆனால் பூமியில் வாழும் சில நுண்ணுயிரிகளை அதனுள் செலுத்தும் முயற்ச்சி தான் இது என்ற கருத்தும் தற்போது நிலவிவருகின்றது.

மேலும் அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள்.

இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர்.

1996இல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் நானோபாக்டிரியாவின் எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இந்நிகழ்வின் பின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிண்டன் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.

மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கதனமாக நம்புகின்றார்கள்.

இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக் கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப் பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்..

அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா...