௮ப்ப ஜப்பான் நாட்டு துணை முதல்வர் இல்லையா? 🙄
ஏமாத்திடாங்க... ஏமாத்திடாங்க...
௮ப்ப ஜப்பான் நாட்டு துணை முதல்வர் இல்லையா? 🙄
ஏமாத்திடாங்க... ஏமாத்திடாங்க...
1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26 தமிழர்கள் இருந்தனர்.
கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்று திரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்பட வேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.
ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளிய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.
கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கை விட்டனர், கலந்து கொண்டர்.
எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.
ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.
கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டு சென்றது.
இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.
இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.
தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.
அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.
பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.
திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.
தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.
ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப் போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.
அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.
வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை.
அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.
இங்கே தமிழகத்தில் என்ன நிலை?
அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,
வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...
இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்த போது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பது போல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது.
இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப் போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை.
புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.
கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியை தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…
ஹார்ட் அட்டாக் கேள்விப்படும் போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி.... இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம்.
சிகிச்சை, உடற்பயிற்சி... இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் "டிரான்ஸ்ஃபேட்"னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.
சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.
இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
"ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்... வேற எதுவும் வேணாம்"னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
சாப்பிடக்கூடிய உணவுகள்: கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்...
இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது.
(பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது).
அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது.
மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலை பாய்ந்திருக்கிறது.
ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு...
இந்தப்படம் ஆஸ்திரேலியாவின் கொராபோரீ என்ற இடத்தில் 1959ம் ஆண்டு ஆர்.எஸ். ப்ளேன்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டு இன்றளவும் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது...